இமை.. 10
நண்பகல் ஆதவன் தன் உஷ்ணத்தை முழுவீச்சில் பூமிக்கு அனுப்பி கொண்டிருக்க, ஆள் அரவமில்லாத இடத்தில் சற்று ஒதுக்குபுறமாக அமைந்திருந்த அந்த கட்டிடத்தின் முன் நன்றாக வெயில் படும்படி நான்கு தகர பெட்டிகள் வைக்க பட்டு இருந்தது..
கட்டிடத்தின் உள்ளே சில குரல்களின் அலறல் சத்தம் அந்த கட்டிடத்தையே அதிர வைத்து கொண்டிருக்க.. நால்வரை உள்ளாடையை மட்டும் அணிய வைத்து வெற்று மேனியுடன் அவர்களை தூண்களில் கட்டி வைத்து இருந்தனர்.. அவர்கள் எதிரே கால் மேல் கால் போட்டு கொண்டு அவர்களை பார்வையால் எரித்தபடி அமர்ந்திருந்த விஜய்,
“இவனுங்க அழகு மேனியை பார்க்கவா கட்டி வச்சு இருக்கிங்க?..” என்று கேலியாக கேட்டு முடிக்கும் முன் அவன் முன் ஒரு சாட்டை நீட்டப்பட்டது.. அதை வாங்கி ஒரு சுழற்று சுழற்றியவன், சாட்டையால் அவர்களை விளாசி தள்ளிவிட்டான், கை ஓயும் நேரம் எழில் வலியில் அலறும் சத்தம் காதில் கேட்பது போல் இருக்க மீண்டும் பலமடங்கு கோபத்தில் அவர்களை விளாசி தள்ளிவிட்டான்..
விஜய் தன் ஆட்களுக்கு கட்டளையிட்ட சில மணி நேரங்களில் எழிலை கடத்திய கயவர்களை கண்டுபிடித்து விட்டனர்.. அவர்களை விஜய் முன் நிறுத்த தன் கோபம் அனைத்தையும் அவர்கள் தோள் உரியும் வரை, அடி வெளுத்த விஜய் தன் ஆட்களிடம் கண்ணை காட்ட, அவர்கள் கையில் மிளகாய் பொடி..!
அதை பார்த்ததும் அந்த கையவர்களின் கண்களில் மரண பயம் தெரிய, “சார்..சார் வேணாம் சார் எங்களை விட்ருங்க நீங்க யாரு சார்?.. எதுக்காக எங்களை இப்படி கொடுமை படுத்தறிங்க?.. நாங்க யார் என்று தெரியாமல் எங்க அப்பா யார் என்று தெரியாமல் எங்க கிட்ட வம்பு பண்றிங்க..” அப்பறம் இதுக்காக நீங்க தான் வருத்தப்படுவிங்க.. என்று நால்வரில் ஒருவன் வலியில் முணங்கி கொண்டே மிரட்டிய நொடி அவன் காயத்தில் மிளகாய் பொடியை வைத்து ஒருவன் அழுத்த, அவன் வலியில் மரண ஓலமிட்டான்..
அவன் கதறலில் மற்ற மூவருக்கும் உள்ளுக்குள் கிலி பரவ, விஜய்யை திகிலோடு பார்த்திருந்தனர்.. “என்ன கேட்ட?.. உங்க அப்பாவை பத்தியா கேட்ட?. அட முட்டாள்..!! உங்க அப்பா யார் என்று தெரிஞ்சு நான் என்னடா செய்ய போறேன்?.. உனக்கு தெரிஞ்சா போதும்.. உன் அப்பா யார் என்று உனக்கு தெரியும் தானே?.. என்று படு நக்கலாக கேட்ட விஜய், “எனக்கு இப்படி எல்லாம் பேசி பழக்கமே இல்லைடா ஏன்டா என்னை இப்படி பேச வைக்கிறிங்க?..” என்று நக்கல் குரலில் சலித்தபடி கூறியவனை, அந்த நால்வரும் திகைப்பாக பார்த்து கொண்டிருக்க
“உங்களுக்கு பொண்ணுங்க என்று பேப்பர்ல எழுதி கொடுத்தா போதுமே அது கூட விட்டு வைக்காமல் சாப்பிட்டு முடிச்சு ஏப்பம் விட்ருவிங்க ஏன்டா??. நீங்க எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கல?.. உன்னை பெத்தது ஒரு அம்மா தானே?.. இந்த கேள்வியை கூட இப்போ எல்லாம் கேட்க முடியாமல் பொண்ணுங்க என்றாலே அவங்களை நாசம் பண்றிங்களேடா?. சின்ன குழந்தை என்றும் பார்க்க மாட்டிகிறிங்க.. உங்களை எல்லாம் நான் எப்படி விட்டு வைப்பேன்?..” என்றவன், அவர்களை தன் கூர் பார்வையால் துளைத்து கூறு போட
இப்போது இவர்கள் யார் என்று அந்த கயவர்களுக்கு புரிந்தது.. தாங்கள் கடத்திய பெண்களுக்கு சொந்தக்காரன் யாரோ ஒருவன் தான் தங்களை கடத்தியது என்று பரிந்து கொண்டனர்.. ஆனாலும், தங்கள் கடத்தும் பெண்களுக்காக எதிர்த்து நிற்க ஆள் ஆதரவு இல்லாமல் பின்புலம் சரியாக இல்லாத பெண்களை தான் கடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்க,
இப்போது அந்த பெண்களுக்காக எதிர்த்து தங்கள் முன் கம்பீரமாக நின்றிருந்த புதியவனை அவர்கள் குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு, இன்று எழிலை கடத்தியது நினைவுக்கு வந்தது.. எழிலை மட்டும் தான் பார்த்ததும் பிடித்து அவளை பற்றி விசாரிக்காமல் தூக்கியது.. அவர்களிடமிருந்து சேதாரம் இல்லாமல் தப்பியதும் அவள் மட்டும் தான் என்று நினைவிற்கு வர, தங்கள் முன் நின்றிருந்தவன் அவர்கள் கண்களுக்கு எமனாக தெரிந்தான்..
“மிளகாய் பொடியை வைத்து ஏதும் குழம்பு செய்யப் போறீங்களா?..* தன் ஆட்களை பார்த்து மீண்டும் கேலியாக கேட்க, அடுத்த நொடி விஜயின் ஆட்கள் வந்த நால்வரின் உடம்பிலும் மிளகாய் பொடியை வைத்து அழுத்தி தேய்க்க, அவர்கள் கதறல் அந்த இடத்தையே அதிரசெய்ய ஷ்..!! சத்தம்.. சத்தம் வராமல் இருக்கணும்..அவனுங்க வாய் மூடுங்க என்று உத்தரவிட, அடுத்த நிமிடம் அவர்கள் வலியில் கடத்துவதற்கு வழியில்லாமல், மூச்சடைக்க துடித்துக் கொண்டிருந்தனர்..
சில நிமிடங்கள் அவர்களை அலற விட்டு, நால்வரை வெளியே இழுத்து வந்து, அந்த தகர பெட்டிக்குள் தள்ளி அடைத்து வைக்க, எற்கனவே சாட்டையடியிலும் மிளகாய் தூள் தடவியதில் வலியிலும் எரிச்சலும் உயிர் போகும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது எரியும் அடுப்பில் தூக்கி வைப்பது போல் அவர்கள் உடம்பு சூடு தாங்க முடியாமல் துடித்தனர்..
ஒரு ஆள் மட்டும் இருக்க கூடிய அந்த பெட்டியில் இம்மியளவும் நகர முடியாமல், தகர பெட்டிக்குள் வரும் சூட்டை தாங்க முடியாமல் “அய்யோ அம்மாஆஆ..ஆ..!! எரியுதே.. காப்பாத்துங்க.. இனி நாங்க எந்த தப்பும் செய்ய மாட்டோம்..” என்று அலற,
“ஓ இப்ப வலியில் மட்டும் அம்மா நியாபகம் வருதோ?.. மத்த பெண்களை தொடும் போது அவங்களை துன்புறுத்தும் போதும் அவங்களும் இப்படி தானே துடிச்சிருப்பாங்க.. காலையில் சிட்டு குருவி மாதிரி துறுதுறுன்னு இருந்த பெண்ணை இப்ப வலியில் துடிக்க வச்சிட்டிங்கள்லடா..
இப்ப நீங்க அனுபவிங்க..!!.” என்று “இனி நீங்க ஒரு பெண்ணையும் தப்பாக பார்க்க கூடாது தப்பா தொட கூடாது.. நீங்க சாக மாட்டிங்க.. ஆனா ஏன் டா உயிரோடு இருக்கோம் நினச்சு தினமும் அழுவிங்கடா.. மிருகங்களா..!!” என்று எரிச்சலிலும், வலியிலும் துடித்துக் கொண்டிருந்த கயவர்களை பார்த்து கர்ஜித்தவன், தன் ஆட்களிடம் திரும்பி
இன்னும் பத்து நாளைக்கு இதே பனிஷ்மெண்ட் கொடுங்க.. இவனுங்க அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கணும்.. மயங்க கூடாது..” என்று உத்தரவிட்டு வெளியே வந்தவனின் மனம் எழிலை பார்க்க உந்தி தள்ள, ஏனோ தன் மனதை அடக்கி கொண்டு தன் ஊரை நோக்கி காரை செலுத்தினான்..
“ஏன்டா லிட்டில் கேர்ளை பார்க்க போகலயா?..” மனதின் கேள்விக்கு “முதல்ல அங்க ஹாஸ்பிடல் அவ பக்கத்துல யாரும் இல்லை.. அதான் போனேன்.. இப்போ லிட்டில் அவ குடும்பத்தோடு பத்திரமாக இருக்கா.. எனக்கு அது போதும்.. அவளை அப்படியே ஏத்துக்கிற கணவன் கிடச்சிருக்கான்.. திருப்தியாக இருக்கு.. சீக்கிரம் லிட்டில் கியூர் ஆகணும் அது போதும்..” மனதோடு பதில் கூற,
“அப்போ நிஜமாகவே நீ அவளை காதல்..”
“அட மானங்கெட்ட மனசே நான் அவளை காதலிச்சு இருந்தால் இப்படி யாரோ ஒருவனுக்கு விட்டு கொடுத்துட்டு வர மாட்டேன்.. அதுவும் இன்னொருவனுக்கு நிச்சயம் ஆன பெண்ணை விரும்பற அளவுக்கு நான் பலவீனமானவன் இல்லை.. தெரிஞ்ச பொண்ணு கண் முன்னே கஷ்டப்படறா அதான் உதவி செஞ்சேன்.. அதோடு எனக்கு தெரிஞ்சு அநியாயம் நடந்தால் அதை அப்படியே பார்த்துட்டு போக என்னால முடியாது..
லிட்டில் கஷ்டப்பட காரணமானவர்களை தண்டிச்சாச்சு.. லிட்டில் அவ குடும்பதோடு பத்திரமாக இருக்கா.. இனி இந்த லிட்டில் என் வாழ்க்கையில் இல்லை.. நீயும் வந்து நியாபக படுத்தாத சரியா?..” என்று மனதை அடக்கியவன் காரை செலுத்த, அவன் அன்னை சுமித்ரா அழைத்து எழிலை பற்றி விசாரித்தார்.. அவள் நலமாக இருப்பதாக கூறியவன், மற்றதை நேரில் வந்து பேசுவதாக கூறி இணைப்பை துண்டித்தவன்
எழிலை ஏன் விட்டு விலகினோம் என்று வேதனை அடைய போகிறான்.. விஜய் தன் ஊருக்கு வந்த இரண்டு நாட்களில் தன் ஹோட்டலை விரிவு படுத்துவதற்காக வெளிநாடு சென்று விட்டான்.. எழிலை மனதின் அடியாழத்தில் புதைத்து விட்டு..
ஐந்து வருடங்களுக்கு பிறகு…
அது ஒரு தனியார் கல்லூரி.. பணம் படைத்த மாணவர்கள், மாணவிகள் மட்டுமே அங்கு படிக்க முடியும்.. அன்று வகுப்பில் ஆசிரியர் இல்லாமல் அவிழ்த்து விட்ட கன்றுகளை போல் மாணவர்கள் அங்கும் இங்கும் நடமாடி கொண்டு இருக்க, வகுப்பறையின் வெளியே கொலுசின் சத்தம் கேட்க, சலசலத்து கொண்டிருந்த மாணவர்கள் அமைதியாக அவரிடத்தில் போய் அமர்ந்து கொண்டனர்..
“டேய் அந்த சிடுமூஞ்சி வருதுடா..” என்று தங்களுக்குள் கிசுகிசுக்க “சிடுமூஞ்சி மட்டும் இல்லைடா.. சூனியக்காரி மூஞ்சியும் கூட தான்..” என்று ஒருவன் கேலி செய்ய மாணவர்கள் சற்று சத்தமாக சிரித்துக்கொண்டே வாசலை பார்க்க, அங்கு கைகள் மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு கொண்டு நேர் பார்வையாக மாணவர்களை அழுத்தமாக பார்த்து கொண்டு இருந்தாள் எழில்..
வேலை நிமித்தமாக முன்பு இருந்த குழந்தைத்தனம் மறைந்து நிமிர்வு தானாகவே வந்து ஒட்டிக் கொண்டது.. தான் மனதாலும் உடலாலும் பட்ட துன்பங்கள் அனைத்தையும் சிற்பியாக மாற்றி தன்னை சிலையாக உயிருள்ள மாற்றிக் கொண்டாள்.. சிலைக்கு சிரிக்க தெரியாது.. அழ தெரியாது.. இவளும் உணர்வுகள் அனைத்தும் தொலைத்து தன்னை இறுக்கமாக மாற்றி கொண்டாள்..
மாணவர்களை பார்த்துக் கொண்டே, உள்ளே வந்த எழில், இங்கு மாணவர்களுக்கு மத்தியில் எப்போதும் சிடுமூஞ்சி, ஹிட்லர், என்று வேறு பெயரும் உண்டு.. அது எழிலுக்கு தெரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டாள்.. உள்ளே வந்த எழில் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன்னை சிடுமூஞ்சி என்று கேலி செய்த மாணவனை அருகில் அழைக்க, அவன் தயங்கி பயந்து அவள் அருகில் வர, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.. மாணவர்கள் அனைவரும் அதிர்ந்து பார்க்க, அத்தனைபேர் முன்னிலையில் தன்னை அடித்ததில் அவமானமாக நினைத்த மாணவன்,
“இப்போ எதுக்கு அடிச்சிங்க?.. நான் என்ன தப்பு செஞ்சேன்?.. என்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கேட்க, மீண்டும் அந்த மாணவன் மறு கன்னத்தில் அடித்த எழில் “நான் ஏன் அடிச்சேன்னு உனக்கே காரணம் தெரியும்..” அவனை கூர்ந்து பார்த்தபடி கூற, “நான் உங்களை சிடுமூஞ்சி என்று சொல்லல.. அப்படி சொன்னதுக்கு எதாவது ஆதாரம் இருந்தால் பிரின்ஸ்பல்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுங்க.. என்னை அடிக்கிற வேலையை வச்சுக்காதீங்க..” என்று விரல் நீட்டி எச்சரிக்க, அவன் தலையில் ஓங்கி கொட்டிய எழில்
“உன் ஃப்யூச்சர் பாதிக்க கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் இதோட மன்னிச்சு விடுறேன்.. இப்படியே சேட்டை செஞ்சேன்னா நிச்சயமா நீ எங்கேயும் படிக்க விடாமல் செஞ்சிடுவேன்.. ஒழுங்கா ஸ்கூல் வந்தோமா.. நல்ல பிள்ளையாக படிச்சோமா என்று இருக்கணும்.. கோ டு யுவர் ப்ளேஸ்.. “ என்று எச்சரித்து அனுப்ப அந்த மாணவன் எழிலை முறைத்து பார்த்து கொண்டே தன் இடத்திற்கு வந்து அமர
அங்கு எதுவுமே நடவாது போல் இயல்பாக பாடம் நடத்தி கொண்டிருக்க, எழில் குரலும், மாணவர்களின் மூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது..
ஏழில் மும்மரமாக பாடம் நடத்திக் கொண்டிருக்க, “எஸ்கியூஸ்மி மேம்!!” என அழைத்தபடி வாசலில் பியூன் நின்று இருக்க, அவரைப் பார்க்காமல் இரண்டு நிமிடம் மட்டும் பொறுங்க என்று தன் கை காட்டியவள், தான் பாடம் நடத்தி முடித்த பிறகே பியூன் பக்கம் திரும்பி என்னவென்று விசாரிக்க,
“உங்களை பிரின்ஸ்பால் கூப்பிட்டாங்க..” என்று அழைக்க, ஒரு மாணவியை அழைத்து வகுப்பை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு பிரின்ஸ்பல் அறையை நோக்கி சென்ற எழில் அவருக்கு வணக்கம் கூற, அதை சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட பிரின்சிபல் நீங்க அடுத்த வாரம் நம்ம இன்னொரு காலேஜுக்கு போக வேண்டி இருக்கும்.. அங்க எக்ஸாம் நடக்க போகுது.. நீங்க தான் அங்க சூப்பர்வைஸ் செய்யணும்..” என்று கூறவும், அது பற்றி மேலும் விசாரித்து விட்டு, தான் போவதாக கூறி விட்டு சென்றாள்..
ஒரு வாரம் கழித்து அந்த காலேஜ் சென்ற எழில் அங்கு ஒரு குழந்தையுடன் நின்றிருந்த விஜய்யை பார்த்து திகைத்து நின்றாள்.. அதுவும் அவன் குழந்தையை கொஞ்சிய விதம் கண்டு அவள் சில வருடங்களுக்கு பிறகு அறியாமல் முகத்தில் புன்னகை உதயமானது..
தன்னை பார்த்த நொடியில் எழில் முகத்தில் புன்னகை கொண்டு வந்த நம் நாயகன், இனி வரும் காலங்களில் இந்த புன்னகையை வாடாமல் பார்த்து கொள்வானா ?..
இமை சிமிட்டும்..