ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எழிலுக்கு லேசாக உறக்கம் கலைய, சோம்பலாக சற்று புரண்டு படுத்தவள், படுக்கையில் தெரிந்த வித்தியாசம் உணர்ந்து உறக்கம் முற்றிலும் கலைய படுக்கையில் இருந்து சற்று எழுந்தவள் முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் சுற்றம் முற்றும் திகைத்து பார்க்க
அங்கு சுவற்றில் மாட்டி இருந்த விஜய்யின் புகைப்படத்தை பார்த்த பிறகு தான் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வரிசையாக மனதில் வலம் வந்தது.. நேற்று நடந்த உயிர்களின் சதிராடல் நினைவில் வர முகம் சிவக்க தலை குனிந்தவள், ஓர விழியில் பக்கத்தில் படுக்கையை பார்க்க அது வெறுமையாக இருக்கவும்
“இந்த ஹோட்டல் கார் எங்கே போனாங்க?..” என்று தேடி கொண்டிருந்த எழில் பார்வை ஓரிடத்தில் நிலைத்து நின்றது.. சில நொடிகள் இதழில் புன்னகை மின்ன பால்கனியில் ஒரு காலை தொடையில் ஊன்றி இரு கரங்களை தலைக்கு மேல் உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டு இருந்தவனை பார்த்ததும் அவள் பார்வை ரசனையாக மாறியது.. ஹோட்டல்காருக்கு இந்த பழக்கம் எல்லாம் இருக்கா என மனதில் வியப்பாக நினைத்தவள், தன்னவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
சிந்திக்கும் வேளையில்
தித்திக்கிறது உன் இதழ் முத்தம்!
நித்தமும் உன் தீண்டலில்
நித்திரை துறந்தேன் நானடா !
தள்ளி இருக்கும் வேளையில்
தவிப்புகள் யுத்தம் செய்ய!
இதழ் ஈரம் மிச்சம் இங்கு
இதயமும் கேட்டு தவிக்கிறது!
மின்னல் என வரும் உன்
நினைவுகளில்! மீனாய்
துடிக்கிறேன் ! தூரங்கள்
ஏனோ பகல் வேளையிலே !
சந்திரன் வரும் வேளையில்
உதட்டோரம் ஒரு புன்னகை!
இருவரி கவிதைகள் ஒரு
இசையை மீட்டும் நினைவிலே!
ஐந்து விரல்கள் இசை மீட்ட!
புது ராகங்கள் பிறக்கிறதே !
நாணங்கள் இங்கு ஒய்வு கொள்ள
உன்னுள்ளே என் சங்கமம்!
(எழுத்தாளர் சாரா ஜகன் அவர்களின் கவிதை)
மங்கையவளின் பார்வையின் வீச்சின் கதிர் மன்னவனை சென்றடைய, அவன் பார்வையை எழில் இருக்கும் திசை பக்கம் திருப்பி பார்க்கவும், எழில் பட்டென்று கண்களை மூடி தூங்குவது போல பாவனை செய்தாள்.. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் லேசாக கண் திறந்த பார்த்தவள் விஜய் மீண்டும் கரம் கூப்பி நின்றிருப்பதை பார்த்து மீண்டும் ரசிக்க தொடங்கினாள்..
கருப்பு நிற ஆர்ம் கட் பனியன் அணிந்து கழுத்தில் தோளிலும் லேசாக வியர்வை வடிய ஒற்றை காலில் தவம் புரிவது போல் கிரேக்க சிற்பமாக நின்றிருந்த தன் கணவனின் கம்பீரத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்ல எழிலிற்கு, விஜய் மீண்டும் இங்கு திரும்பி பார்க்க எழில் மறுபடியும் உறங்குவது போல் பாவனை செய்தவள் ஒற்றை கண் திறந்து பார்க்க
விஜய் நின்றிருந்த இடம் வெறுமையாக இருந்தது.. இங்க தானே இருந்தாங்க..” என்று முணுமுணுத்தவளின் கன்னத்தில்
ஏதோ குறுகுறுக்க தன் கன்னத்தை தடவியபடி இந்த ஹோட்டல் கார் இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்தால் தான் என்னவாம்..?”என்று வாய்க்குள் முணங்கியவள்,
தீரன் எவ்வளவு மேன்லி..! எவ்வளவு கம்பீரம் அழகன்டா நீ..!!” என்று சிலாகித்து சற்று சத்தமாக கூற இப்போது அவள் கன்னத்தில் குறுகுறுப்போடு, ஈரமும் சேர்ந்து கொள்ள, என்ன இது?” என்று சலித்தபடி தன் கன்னத்தை துடைக்க போக “வாவ் பொண்டாட்டி இப்படி மனதார பாராட்றதை கேட்க அப்படியே ஜிவ்வுன்னு இருக்கே..” என்ற உல்லாசமான குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்த எழில் அடுத்த நொடி விஜய்யின் கை வளைவில் இருந்தாள்..
கணவனை வெகு அருகில் பார்த்ததும் நேற்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் எழில் மனதில் தோன்றி அவன் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கம் சூழ தன் முகத்தை மூடிக் கொள்ள
பெண்ணவளின் வெட்கத்தை ரசித்தபடி “ஓ.. மேடம் நான் தூரமாக இருந்தால் தான் ரசிப்பீங்களோ?!” என்று கேலியாக கேட்டவன், “உன் பாராட்டை கேட்க எவ்வளவு ஆசையாக பக்கத்தில் வந்தேன் நீ என்னடான்னா என் முகத்தை கூட பார்க்க மாட்டிங்கிறியே மை கேர்ள்..” என்று எழில் கன்னத்தில் தன் உதடுகள் அழுத்தமாக புதைத்தபடி கூற
அவளுக்கு எங்கே அவன் பேசுவது கேட்டது.. அவன் உதடுகள் செய்த மாயத்தில் இந்த உலகை அல்லவா மறந்திருந்தாள்.. விஜய்யின் அலைபேசி சத்தமிட்டு தன் இருப்பை உணர்த்தி அவர்களை நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது.. நேத்ரா தான் அழைத்திருந்தாள்..
அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு ஷக்தி பலரிடமும், அடுத்து இருவரின் பெற்றோர்களிடம் பேசிவிட்டு வைத்த நொடி விஜய் எழிலிடம் காதலுடன் நெருங்கியவன், அவள் கண்களில் தெரிந்த சோர்வில், தன் மோக நிலை அறுபட
“குளிச்சிட்டு வா லிட்டில் கேர்ள்..” அவளை குளியலறை அனுப்பி வைத்துவிட்டு விஜய் சமையலறை சென்றான்.. குளியலறை சென்ற எழில் மாற்று உடை எடுக்க மறந்து அதற்கு தன்னேயே நொந்து கொண்டு, குளியலறை கதவை திறந்து தலையை நீட்டி மெதுவாக எட்டி பார்த்தாள்.. அங்கு விஜய் இல்லாதை உணர்ந்து நிம்மதியான பெருமூச்சுடன் வெளியே வந்தவள்
தாங்கள் கொண்டு வந்த பெட்டியில் இருந்து உடை தேடி கொண்டு இருக்க, தன் அலைபேசியை எடுக்க வந்த விஜய் எழில் இருந்த கோலத்தை கண்டு மூச்சு விட மறந்து நின்றான்.. உடை தேடி கொண்டிருந்த எழில் தன் முதுகை துளைத்த குறுகுறு பார்வையில் திரும்பி பார்த்தாள்
பார்வையால் தன்னை விழுங்கி கொண்டிருந்த கணவனை பார்த்ததும் திகைத்து எழுந்தவள், தான் இருக்கும் நிலை உணர்ந்து வேகமாக குளியலறை செல்ல போனவளை ஒரு எட்டில் தாவி பிடித்தவன், அவளை கண்களால் களவாட, நாணம் தாளாத பெண்மை தன் கை கொண்டு அவன் கண்களை மூட
“இப்போ நீ கை எடுக்கலேன்னா..” என்ற விஜய் அவள் காதில் ஏதோ கூற, சட்டென்று தன் கையை எடுத்தவள், கட்டில் தலைபக்கம் வந்து தன்னை மறைத்து கொண்டாள்.. “ஓய் ராங்கி.. ஒழுங்கா இங்க வந்திடு..” ஆட்காட்டி விரல் அசைத்து எழிலை அழைக்க..
“ம்கூம்..” எழில் மறுப்பாக தலையசைக்க பாய்ந்து சென்று அவளை பிடித்த விஜய், எழிலை கைகளில் அள்ளி கொண்டு உடைகள் வைத்திருந்த பெட்டி அருகில் வந்தவன், தானே ஒரு உடையை தேர்ந்தெடுத்து அவளுக்கு அணிவித்து விட்டான்.. அவள் கூச்சத்தில் தடுக்க
“ஷ் ராங்கி என் கண்ணை மட்டும் பார்.. என்று அதட்டியவன் ம் இது பெர்ஃபெக்டா இருக்கு..” சற்று முன் இருந்த கணவன் பார்வை மாறி, இப்போது பார்வையில் கனிவு இருந்தது..
“நேத்து ஃப்ளைட் ல சாப்பிட்டது.. இப்போ மணி பதினொன்று உனக்கு பசிக்கும் தானே?.. சாப்பிட போகலாமா?” விஜய் கேட்ட பிறகு தான் தன் பசியையே உணர்ந்தாள் எழில்.. “என் பசி எனக்கே தெரியல உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?. எழில் வியப்பாக கேட்க, “ஏன்னா எனக்கும் பசிக்குதே.. நானும் நேத்து ஃப்ளைட்ல சாப்பிட்டது..” என்று குறும்பாக கூறியவனை முறைத்து பார்த்த எழிலை அணைத்து தூக்கி கொண்ட விஜய் முதல்ல சாப்பாடு அப்பறம் கொஞ்சம் அவுட்டிங்..
“அப்பறம்ம்ம்..” என்று விஜய் ராகமிழுக்க “ரொம்ப இழுக்காதிங்க எனக்கு பசிக்குது சீக்கிரம் போங்க..” என்று எழில் கட்டளையிட, “தங்கள் சித்தம் என் பாக்யம் மகாராணி..” என்று பணிவாக கூறி விட்டு எழிலை உணவு மேசை இருக்கையில் அமர வைக்க போனவன், அதில் அமர வைக்காமல் எழிலை தன் மடியில் அமர வைத்து கொண்டு உணவை பரிமாறி அவளுக்கு ஊட்ட,
கணவனின் ஒவ்வொரு செயலிலும் மனம் நெகிழ்ந்து காதல் பெருக அந்த கரை காணா காதல் அவள் கண்களில் தெரிய, அந்த காந்த விழிகளில் அழுந்த முத்தமிட்ட விஜய் அவளுக்கு ஊட்டி விட ஆசையாக வாங்கி கொண்டவள், விஜய்க்கும் ஊட்டிவிட்டாள்..
ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த அழகான சாலை.. விஜய்யின் கை கோர்த்து அவன் தோள் சாய்ந்து மெதுவாக நடந்து கொண்டிருந்தாள் எழில்.. அந்த ஏகாந்த நிலையில் இருவருக்கும் பேச தோன்றவில்லை மற்றவரின் அருகாமையை தங்களுக்குள் கடத்தியபடி இனிமையாக ரசித்தபடி அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தனர்
பட்டு புடவைக்கு பார்டர் வைத்தது போல் சாலையின் இருபுறமும் மரங்கள் வரிசையாக அணிவகுத்து இருக்க
சற்று தள்ளி தன் அகத்தின் அழகை வெளியே காண்பித்தபடி தெளிந்த நீரோடை ஓடி கொண்டிருக்க.. நீரோடை தாண்டி தெரிந்த புல்வெளியில் ஆங்காங்கே சில பசுக்கள் அந்த புற்களை தின்று தங்கள் பசியாற்றி கொண்டிருக்க இயற்கை அன்னையின் பிறப்பிடமாக இருக்கும் இந்த இடம் பூலோக சொர்க்கம் என்பார்களே அது இது தான் என்று மனதில் உறுதியாக நினைத்த எழில
“இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு ஹொட்டல்கார்.. இங்க இருந்த நமக்கு பசி கூட தெரியாது போல.. எவ்வளவு அழகாக இருக்கு..” என்று எழில் ரசனையாக கூற, “நீ புதுசா பார்க்கிறதால உனக்கு பிரமிப்பாக இருக்கும்.. பழக பழக பாலும் புளிக்கும் என்று சொல்வாங்க தெரியுமா அப்படி தான் சில விசயங்களும் நமக்கு அலுத்து போகும் கேர்ள்..
இன்னும் ரெண்டு மாசம் இங்க இருந்தால் எப்போ டா நம்ம ஊருக்கு போகலாம் என்று நினைக்க தோணும்..” என்று தத்துவம் பேசி
சொர்கமே என்றாலும்
அது நம்ம ஊர் போல் வருமா..?
என்று பாடி காட்டிய விஜய்யை ஏகத்துக்கும் முறைத்த எழில், “நான் எவ்வளவு ஆசையாக ரசனையோடு சொல்லிட்டு இருக்கேன் நீங்க தத்துவம் பேசிட்டு இருக்கிங்க.. இந்த நிமிடம் இந்த நொடி இவ்வளவு அழகான ஒரு இடம்.. கை கோர்த்து நடந்தபடி கதை பேச மனசுக்கு பிடிச்ச கணவன்.. இப்போ எனக்கு இது தான் பூலோக சொர்க்கம்..” என்று முறுக்கி கொள்ள,
“ஆமா எனக்கும் இது பூலோ சொர்க்கம் தான்..” எழிலை பார்த்து ரசனையுடன் கூறிய விஜய் சட்டென்று எழிலை தன் முதுகில் உப்பு மூட்டை போல் தூக்கி கொண்டான்.. விஜய் முன் சட்டையை இறுக பிடித்து கொண்டு லேசாக கல்களை ஆட்டியபடி அவன் முதுகில் இலகுவாக தொங்கி கொண்டிருந்த பெண்ணை லேசாக தலையோடு முட்டி மெதுவாக நடந்து சென்றான்
“நெஞ்சுக்குளளே இன்னாரென்று
சொன்னால் தெரியுமா
அதை கொஞ்சி கொஞ்சி
பேசறது கண்ணில் புரியுமா..?!”
என்ற பாடலை ஹம்மிங் செய்தவாறே விஜய் எழிலை தூக்கி கொண்டு நடந்தான்..
அங்கிருந்த நாட்கள் அனைத்தும் சுக நிமிடங்களே.. எழிலிற்கு விஜய் அனைத்துமாகினான்.. தன் தயக்கங்கள், துறந்து கணவனின் கண்களில் தெரியும் எதிர்பார்ப்பில் உருகி அவன் கரங்களில் உருகி வழிந்தாள்..
அந்த காலை வேளையில் விஜய் பரபரப்பா சமைத்து கொண்டிருக்க, இரு வளை கரங்கள் அவனை பின்னிருந்து அணைத்து அவன் முதுகில் முகம் பதித்து ரொம்ப பசிக்குது ஹோட்டல் கார்?” சலுகையாக அவன் முதுகில் சாய்ந்தபடி கேட்டவளை ஒரு கையால் தூக்கி தன் முன் பக்கம் கொண்டு வந்த விஜய்
“லிட்டில் கேர்ள்..” என்று காதலாக அழைத்த படி எழிலை சமையல் மேடையில் அமர வைதாதவன், “இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் டி ரெடியாகிடும்.. என்று சமாதானம் செய்தவன் ஒரு கேரட்டை எடுத்து அவளிடம் கொடுத்து இதை சாப்பிட்றதுக்குள்ள நான் ரெடி பண்ணிடுவேன் நீ சாப்பிடு..” என்றவன் பரபரவென சமையல் செய்தான்..
கேரட் உண்பதை நிறுத்தி அவன் சமையல் செய்யும் விததத்தை ரசிக்க தொடங்கினாள்.. “நீங்க சமையல் செய்றது கூட ஒரு அழகா இருக்கே தீரா..” என்று ரசனையுடன் சொல்ல அவளை முறைக்க முயன்று தோற்றவன், தலை கோதி தன் வெட்கத்தை மறைக்க முயல, அதை கண்டு கொண்ட எழில்,
“வாவ் என் தீராவுக்கு வெட்கம் எல்லாம் வருதே.. பார்க்கவே அழகாக இருக்கே..” என்று எழில் அதற்கும் வம்பு செய்ய, “ரொம்ப பேசறடி ராங்கி.. கிண்டல் செய்ற வாயை அடைக்கலேன்னா நான் ஹோட்டல் கார் இல்லடி என் ராக்கி..” என்று சூளுரைத்தவாறு எழிலை நெருங்க, அவன் கையில் சிக்காமல் எழில் அங்கிருந்து ஓட, எழிலை பிடிக்க விஜய் துரத்த, மீண்டும் அழகான கூடல் அங்கே அரங்கேற நம்ம கொஞ்ச நேரம் அவர்களுக்கு தனிமை கொடுத்து செல்வோம்..
ஒரு வருடம் கழித்து…
விஜய்யின் வீடு பூக்களால் அலங்கரித்து இருந்தது. வீட்டின் நடு ஹாலில் வெல்வெட் இருக்கை போட பட்டு இருந்தது.. ஷக்தி அன் கோ ஆளுக்கொரு வேலை செய்தபடி இருக்க நேத்ராவும் மற்ற குழந்தைகளும் அவர்களுக்கு உதவி செய்ய
“எல்லாரும் இங்க வேலை பார்த்துட்டு இருக்கோம்.. நம்ம கதாநாயகன் எங்க போனான்?..” விதுரன் விஜய்யை கேட்க, “அவன் எங்க போய்ருப்பான்.. நம்ம எழில் எங்க இருப்பாளோ அங்க தான் அவனும் இருப்பான்..” என்ற ஷக்தி சொன்னது போலவே விஜய் எழிலிடம் தான் இருந்தான் அவளுக்கு புடைவை கட்ட உதவி செய்து கொண்டிருந்தான்.. இல்லை இல்லை உபத்திரவம் செய்து கொண்டு இருந்தான்..
“தீரா இன்னும் எவ்வளவு நேரம் எனக்கு மூச்சு வாங்குது ரொம்ப நேரம் நிக்க முடியலைப்பா?..” எழில் மூச்சு வாங்க சொல்ல, இதோ அவ்வளவு தான்டாமா இன்னும் ஒரு டூ மினிட்ஸ்..” சமாதானம் செய்து புடவை மடிப்பை சரிசெய்து நிமிர்ந்தவனை தீயாக உறுத்து விழித்தவள்
“எல்லாம் உங்களால் தான்.. மலரும் வெண்பாவும் எவ்வளவு அழகாக சேலை கட்டி விட்டிருந்தாங்க.. உங்களை யார் இதை கலைக்..” என்று தன் போக்கில் கூறி கொண்டு இருந்த எழில் இதழ்களை அவசரமாக மூடியவன்,
“ஏண்டி கண்ணுக்கு அழகாக இருந்தா முத்தம் கொடுக்க தான் தோணும்.. முத்தம் கொடுத்தா சேலை கலையும்னு உனக்கு உதவி செஞ்சா ரொம்ப தான் திட்ற போடி நான் கீழே போறேன்..” என்று குழந்தை போல் கோபித்துக் கொண்டு கீழே செல்ல போன விஜய்யின் காலரை பிடித்து இழுத்த எழில் அவன் கன்னத்தில் இதழ் பதித்து,
“ஓஹோ நான் கோபமாக பேசினா நீங்க என்னை விட்டு போய்டுவிங்களோ?!..” எழில் இடுப்பில் கை வைத்தபடி புருவம் உயர்த்தி கேட்க, “நான் எங்கே போக போனேன் கதவு திறந்திருக்கே அதை மூட போனேன்..” என்று உதடு குவித்து விஷமமாக கூறிய மன்னன் அவன் மார்பில் சாய்ந்து,
“வளைகாப்பு முடிஞ்சதும் என்னை அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க..” என்று வருத்தமும் மகிழ்ச்சியுமாக கூறிய மனையாளின் முதுகை வருடியபடி, “அவங்களுக்கும் ஆசை இருக்கும் தான கேர்ள்.. சோ அவங்க கூப்பிட்டா போடா.. நான் அப்போ அப்போ வந்த பார்க்கிறேன்.. நேத்ரா பேபிக்கு இங்கேயும் அங்கேயும் இருக்கட்டும்..” என்றவனை உறுத்து விழித்த எழில்
“ஓ அப்போ நான் இங்கே இருக்கிறது உங்களுக்கு கஷ்டமா இருக்கு.. தினமும் நைட் உங்களை பாடா படுத்திறேன்ல அதான் என்னை அம்மா வீட்டுக்கு துரத்தி விட்றிங்க?..” என்று எழில் அழுவது போல் கூற, “அச்சோ அப்படி இல்லைடா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..”
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் போங்க போங்க..” என்று திரும்பி நின்ற மனைவியை சமாதானம் செய்ய முடியாமல் அவனை கீழே யாரோ அழைக்க, அதற்குள் மலரும் வெண்பாவும் வர இருவரின் பொறுப்பில் எழிலை விட்டு சென்றான்..
ரொம்ப போர் அடிக்குது நம்ம கதாநாயகனை வர வைப்போமா..?” ஷக்தி விளையாட்டாக கேட்க “சே சே வேணாம்டா இன்னையோட ஸ்டோர் முடிய போகுது இதான் கடைசி பதிவு மச்சி சந்தோஷமாக இருந்துட்டு போகட்டும்..” என்று விதுரன் பெருந்தன்மையாக சொல்ல, “என்ன கதை முடிய போகுதா?.. அதுக்குள்ளேயா.. அப்ப இனி நம்ம ரீடர்ஸ் பார்க்க முடியாதா?!..” ஷக்தி அதிர்ச்சியாக கேட்க
“நமக்கு ஏதுடா எண்ட் கார்டு?.. நாம எங்கே போக போறோம்?.. நமக்கு தான் இருக்கே தனியாக ஒரு கதை நம்ம அங்கே தான் எப்பவும் இருப்போம்…” விதுரன் சொல்ல ஆமால்ல நம்ம அங்கே தானே இருப்போம் நம்ம நட்பூக்கள் கண்டிப்பாக அங்க வந்து பார்ப்பாங்க..
என்ன ஃப்ரெண்ட்ஸ் நான் “ஷக்தி யின் மலரவள்..” அங்க இருப்பேன்.. என் ஃப்ரெண்ட் விதுரன் “அணைத்து கொள்வேன் உயிரிலே..” இங்க இருப்பான்.. நீங்க வாங்க நம்ம சந்திப்போம்.. என்று கூறி கொண்டு இருந்த ஷக்தி விதுரனின் தோளில் கரம் விழ இருவரும் திரும்பி பார்க்க இருவரையும் முறைத்து பார்த்தபடி நின்றிருந்த விஜய் மீது இருவரும் அவன் தோள்மேல் தங்கள் கரம் வைத்து, “இவன் எங்க ரெண்டு பேர் கூடவும் இருப்பான்..” என்று சொல்ல
“அடே செல்ஃப் டப்பாக்களா.. நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம ரீடர்ஸ் படிப்பாங்க..” என்ற விஜய் இருவரையும் அழைத்து சென்றான்..
வளைகாப்பு இனிமையாக தொடங்கியது தாய்மையின் பூரிப்பில் பெயருக்கேற்றார் போல் எழில் ஓவியமாக மெதுவாக நடந்து வந்த தன் கண்ணாட்டியை பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை விஜய்க்கு..
எழில் மூச்சு வாங்க நடந்து வருவதை உணர்ந்து மனைவியிடம் வந்தவன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு நடந்து வந்தவன் இருக்கையில் அமர வைக்க இதை பார்த்திருந்த எழில் பெற்றோருக்கு மனம் நிறைந்து போனது.. திவ்யாவின் நினைப்பு அவ்வப்போது வந்து வாட்டினாலும் காலப்போக்கில் அந்த காயம் மாறும் என்று நம்புவோம்..
ஒவ்வொருவராக வந்து வளையல் போட்டு விட்டு எழிலுக்கு வாழ்த்து கூற, கடைசியாக விஜய் அவளுக்கு வைர வளையல் அணிவித்து அவள் நெற்றியில் இதழ் பதிக்க “அப்பா எனக்கு..?” என்று நேத்ராவும், “மாமா எனக்கு?.” என்று மலரின் குழந்தைகளும் எழில் போட்டிக்கு வர
“இன்னிக்கு நான் தான் நாயகி உங்களுக்கு முத்தா இல்லை..” என்று சிறுவர்களுடன் மல்லுக்கு நிற்க
இவர்களின் விளையாட்டை பெரியவர்கள் புன்னகையுடன் பார்த்திருந்தனர்
வளைகாப்பு நல்லபடியாக முடிந்து எழிலை அவள் பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல விஜய் அவளை விட மறுத்தான்..
“கேர்ள் இங்க இருக்கட்டும் அத்தை அவளுக்கு துணையாக நீங்க இங்க இருங்க.. அவளுக்கு நான் வேணும்..எனக்கு அவ இல்லாமல் இருக்க முடியாது..” என்று மறுக்க முடியாத குரலில் கூற, எழிலும் தன்னுடன் இருக்கும் படி சொல்லவும் அவர்களும் ஒப்பு கொண்டனர்…
பத்து நாட்கள் கழித்து நேத்ராவின் பிறந்த நாள் அன்று எழிலுக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டாள்.. எழில் படும் வேதனைகளை பார்த்து எழிலை விட விஜய் துடித்தான்.. சில மணி நேர போராட்டங்களுக்கு பிறகு எழிலுக்கு
அழகான பெண் குழந்தை பிறக்க தன் தங்கையே தனக்கு மகளாக பிறந்ததாக எண்ணி பூரித்திருந்தாள் எழில்.. அழகிய ரோஜா குவியல் போல் தன் கையில் துள்ளிய தன் மகவை உச்சி முகர்ந்தவன் குழந்தையை சுமித்ரா விடம் கொடுத்து விட்டு எழிலை காண சென்றான்..
உதடு காய்ந்து வாடிய கொடியாக படுக்கையில் இருந்த தன் லிட்டில் கேர்ளை பார்க்க உள்ளம் நெகிழ அவள் உதட்டில் அழுந்த முத்த மிட்டு “லவ் யூ லாட்ஸ் மை கேர்ள்..” கண்ணில் தேங்கிய நீருடன் விஜயக தன் காதலை சொல்ல, பதிலுக்கு அவன் நெற்றியில் முத்தமிட்ட எழில்.. “நான் தான் உங்களுக்கு முதல்ல..” என்று உரிமை சண்டை போட்ட மனையாளை கொள்கையாக பிடித்தது அவனுக்கு..
குழந்தைக்கு எழில் தங்கை திவ்யாவின் நினைவாக திவ்ய தர்ஷினி என்று பெயர் வைத்தனர்.. எழிலின் தங்கையாக தன் வாழ்க்கையை பாதியில் முடித்த திவ்யா, எழில், விஜய்யின் மகளாக சிறப்பாக வளர்க்க படுவாள்.. என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கு.. உங்களுக்கு?..
உள்ளத்தாலும், உடலாலும் காயம் பட்டு மனிதர்களை வெறுத்து இருந்த எழில் வாழ்வில் புயலாக வந்து அவள் காயங்களுக்கு மருந்தாக மாறி அந்த காயத்தின் வடுவே இல்லாமல் தன் உயிரில் பொதிந்து பாதுகாத்து கொண்டிருக்கும் மன்னவனை தன் உயிர் உள்ளவரை நேசித்து கொண்டு இருப்பாள் விஜய்யின் ராங்கி…
தன் உறக்கத்தை களவாடி, விழிகள் மூட முடியாதபடி அவன் இமைகளுக்கு இடையில் நின்று இனி
மையாக இம்சை செய்த தன் இம்சை அரசியை பெரும் காதலுடன், தன் கண்ணின் இமை போல் பாதுகாத்து வாழும் நாட்கள் வரை தன் லிட்டில் கேர்ளை நேசிப்பான்.. என்ற உறுதியோடு
நாமும் விடை பெறுவோம்..
இமை சிமிட்டியது..
***”* சுபம்****