வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் …………
அப்டிலாம் யாரும் இங்க இருந்து போக முடியாது ………….இந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாங்க ……………அங்க தீரன் நின்னுட்டு இருந்தான் ………….
இனியன் ; நீங்க எப்படி இங்க
தீரன் : ஷாக்கா இருக்கா
அஞ்சலி : 😨😨😨😨
தீரன் : இன்னொன்னு சொல்லட்டுமா
இன்பா ; என்ன
தீரன் : உங்களை வேணும்னே தான் இந்த காட்டுக்குள்ள அனுப்புனேன்
முகில் : அப்டின்னா உங்களுக்கு
தீரன் : என்னோட முன்ஜென்மம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு
இன்பா : 😨😨😨😨
இனியன் ;அப்போ தெரிஞ்சே தான் எங்களை இங்க அனுப்பிருக்கீங்க
தீரன் : ஆமா
ரகு : எதுக்கு இப்படி பண்ணீங்க
தீரன் : இன்பா எனக்கு வேணும்
இனியன் : ஆனா நீங்க அவளை பேசி சரி பன்னிருக்கலாமே எதுக்காக இங்க அனுப்பி வெச்சீங்க
தீரன் : அவளோட முன்ஜென்மம் அவளுக்கு தெரியணும் அதுக்கு தான்
இனியன் : அது தெரிஞ்ச அவ உங்களை ஏத்துக்க மாட்டா
தீரன் ; ஆனா அது தான் விதி அவளுக்கு அவளோட முன்ஜென்மம் தெரியணும் அதுக்கு அப்பரும் தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்க முடியும் அதுக்கு தான்
இன்பா ; நான் உங்களை கல்யாணம் பண்ணிக்குவன்னு நீங்க எப்படி நினைச்சேங்க
தீரன் ; அது நான் தான் முடிவு பண்ணனும் நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்
இன்பா : கண்டிப்பா முடியாது
தீரன் ; அதையும் தான் பார்க்கலாம்
தீரன் அவன்கூட ஆளுங்களை கூப்பிட்டு வந்துருந்தான் ………..
தீரன் : என்ன டா பாக்குறீங்க போய் புடிங்க டா
இனியன் : இன்பா வா
இன்பா தீரனையே பார்த்துட்டு இருந்தா………….இன்பாவ இழுத்துட்டு வேகமா போன ………
தீரன் : போய் பிடிங்க டா
அவனோட ஆளுங்க இவங்கள பிடிக்க போனாங்க ………..
முகில் : அம்மு
அஞ்சலி : என்ன ஆச்சு பயமா இருக்கு
முகில் : எனக்கு எதுமே இங்க சரியாய் படல
அஞ்சலி ; என்ன சொல்றேங்க
முகில் : ஆமா இனியேனும் இன்பாவும் உண்மையாலுமே விரும்புனாங்களா
அஞ்சலி : ஏன் இப்படி கேக்குறீங்க
முகில் ; ஆமா இனியன் தான் ருத்திரன் அப்டினா இன்னும் இன்பாகு ஏன் அவளோட முன்ஜென்மம் ஞாபகம் வரலை அதும் இல்லாம இன்னும் இன்பாகு ‘இனியன் மேல காதல் வரலை
அஞ்சலி :🙄🙄🙄🙄
முகில் ; நான் என்ன சொல்றான்னு புரிதா
அஞ்சலி : புரிது
முகில் ; தீரன் தான் இப்படி பண்ணானு தெரியவும் அவ அவனை பார்த்த பார்வை பாத்தியா
அஞ்சலி : இல்லையே
முகில் ; ஏன் இப்படி பண்ணீங்கன்ற மாறி பார்த்தா
அஞ்சலி ; அப்டினா ருத்திரன் இனியன் கிடையாதா ………
முகில் : எனக்கும் புரில அது
அஞ்சலி : இப்போ என்ன செய்றது
முகில் ; நடக்குறது நடக்கட்டும்
தீரனோட ஆளுங்க இவங்களை இழுத்துட்டு வந்தாங்க ……………
இனியன் : விடுங்க
தீரன் ; இன்பவ இங்க கூப்டு வாங்க
இன்பாவ அவன் கிட்ட கொண்டு வந்தாங்க …………..இன்பா எதுமே பேசல கண்ணு கலங்கி தீரனை பார்த்துட்டு இருந்தா …………
தீரன் ; என்ன இன்பா நீ இதை நெனைச்சுருக்கலா போல
இன்பா : 😞😞😞😞
இனியன் : ஹே அவளை விடு டா
தீரன் ; ரொம்ப துள்ளாத டா
ரகு : நீ இங்க வா இன்பா
இன்பா : 😰😰😰😰
அவ போகல …………
இனியன் : இங்க வா
தீரன் : ஹே வாய் மூடு டா ………என்ன டா பார்த்துட்டு இருக்கீங்க அடிங்கடா
அவனோட ஆளுங்க இனியனை அடுச்சாங்க …………..
இன்பா ; அவனை விடுங்க
தீரன் ; ஒஹ்ஹஹ் அப்டியா
இன்பா : 😰😰😰
தீரன் ; சரி விடுறேன் ஆனா ஒரு கண்டிஷன்
இன்பா ; என்ன ………
தீரன் : என்கூட நீ ஊருக்கு வரணும் என்ன கல்யாணம் பண்ணிக்கணும்
இன்பா : 😨😨😨😨
தீரன் ; சொல்லு சம்மதமா
இன்பா ; சரி ………..
தீரன் ; அவனை விடுங்க டா
அவனோட ஆளுங்க அவனை விட்டாங்க …….
யாழினி : என்ன தீரன் என்னை இனியன் கூட சேர்த்து வெக்குறானு சொல்லிட்டு இப்போ என்ன என்னவோ செய்யுறீங்க
தீரன் : என்னை யாராலும் புரிஞ்சுக்க முடியாது
இவன் பேசிட்டு இருக்க டைம் பயன்படுத்தி இன்பாவ இழுத்துட்டு இனியன் ஓடிட்டான் ………….
தீரன் ; டேய் புடிங்க டா
அந்த ஆளுங்க அவனை துரத்திட்டு போனாங்க …………முகில் சந்தேகமா தீரனை பார்த்துட்டு இருந்தான் ………….ரகு இவங்க யாரும் பார்க்காத நேரத்துல இனியன் போன திசைல போனான் ………….
அஞ்சலி : முகில்
முகில் : என்ன மா
அஞ்சலி ; ரகு காணோம்
முகில் : நீ நடக்குறது அமைதியா வேடிக்கை பாரு
அஞ்சலி ; என்ன சொல்றேங்க
முகில் ; ஆமா மா
அஞ்சலி : எனக்கு இங்க என்ன நடக்குதுனே புரில
முகில் ; எனக்கு இப்போ தான் புரிய ஆரமிக்குது
இனியன் இன்பாவ இழுத்துட்டு போனான் …………..அது ஒரு குகை அதுக்குள்ள போனாங்க ………….
இன்பா ; இது எந்த இடம்
இனியன் ; ஏன் இன்பா
இன்பா : எனக்கு ஏற்கனவே பார்த்தபோல இருக்கு
இனியன் ; அப்டியா ………..
இன்பா ; ம்ம்ம் ………….
இன்பாக்கு நிறைய காட்சி வருது …………
இனியன் : இன்பா என்ன ஆச்சு வா போலாம்
இன்பா தலையை பிடுச்சுட்டு நின்னா ………….
ரகு ; இனியன்
இனியன் : சொல்லு வந்துட்டியா
ரகு ; வந்துட்டேன் போலாமா நேரம் ஆச்சு
இனியன் ; ஆமா சூரியன் போறதுக்குள்ள நம்ப வேலையை முடுச்சு ஆகணும்
ரகு : ம்ம்ம் ……….
இன்பா தலையை பிடுச்ச வாக்குலயே நின்னுட்டு இருந்தா ………
இனியன் ; இவ இன்னும் இப்படியே நின்னுட்டு இருக்கா
ரகு : இழுத்துட்டு போலாம் டா
இனியன் ; சரி
இன்பாவ இழுத்துட்டு ரெண்டு பேரும் போனாங்க …………..
தீரன் : சீக்கிரமா தேடுங்க டா
அடியாளுங்க ஆளுக்கு ஒரு பக்கமா போய் தேடுனாங்க …………முகில் அஞ்சலியும் ஒரு பக்கம் தேடுனாங்க …………
இன்பா : என்ன எங்க கூட்டிட்டு போறீங்க
இனியன் : ஹான் ………அது………இங்க இருந்து தப்பிக்க போறோம்
இன்பா ; நம்ப மட்டுமா அவங்க
ரகு : யாரு
இன்பா : முகில் அஞ்சலி
ரகு ; அது அவங்க தலை எழுத்து
இன்பா ; என்ன இப்படி சொல்றிங்க
இனியன் ; ஆமா நம்ப போலாம் வா
இன்பாவ பேச விடாம கூட்டிட்டு போனாங்க ………….இன்பாக்கு கொஞ்சம் கொஞ்சமா அவளோட முன்ஜென்மம் ஞாபகத்துக்கு வருது ……………
இன்பா ; நம்ப இப்போ எங்க தான் போறோம்
இனியன் ; வா வா இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே தெருஞ்சுடும்
இன்பா இவன் பேசுறது வித்தியாசமா இருக்கேனு யோசிச்சுட்டே அவன் கூட போனா …….
ரகு : இங்க தான் டா
இன்பா : இங்க என்ன
இனியன் ; அதோ அங்க பாரு
இன்பா என்னன்னு பார்த்தா …………அத பயன்படுத்தி இன்பாவ அங்க வெட்டி வெச்சிருந்த குழிக்குள்ள தள்ளிவிட்டுட்டாங்க …………
இன்பா : ஆஆ ……….
ரகு : டேய் சீக்கிரமா மண்ணை அள்ளி போடு டா
இன்பா : என்ன பண்றிங்க இனியன்
இனியன் : பார்த்தா தெரில உன்னை உயிரோட புதைக்க போறோம்
இன்பா ; என்ன …….😰😰😰😰
இனியன் : ஆமா
இன்பா : ஏன் இப்படி பண்றிங்க நான் உங்களை என்ன பண்ணேன்
இனியன் : உன்னை உயிரோட புதைச்சா தான் எங்களுக்கு நிறைய ஆதாயம் இருக்கு
இன்பா : 😨😨😨😨
அப்போ கன் சத்தம் கேட்டுச்சு …….. ரகு காலுல ரத்தம் வந்துச்சு ……
ரகு : ஆஆ ………
இனியன் : என்ன டா ஆச்சு
ரகு : யாரோ சுட்டுட்டாங்க டா
இனியன் : யாரு டா பண்ணது
தீரன் : நான் தான் டா
இனியன் : 😡😡😡😡
ரகு : உன்னை ……
தீரன் மறுபடியும் அவனை சுட்டான் ………..
ரகு : ஆஆ ………..
இனியன் : உன்னை
தீரன் கூட சண்டை போட்டான் …………..தீரனோட ஆளுங்க இனியனை பிடுச்சு இழுத்தங்க ………….
தீரன் : என்ன டா நீ பண்ண வேலை தெரிஞ்சா அவ உன்னை சீண்ட கூட மாட்டா ………
இன்பா : 😳😳😳😳
இனியன் : என்ன டா சொல்லுவ
தீரன் : சொல்லட்டா
அப்போ அங்க அந்த கருப்பு உருவம் வந்துச்சு ………….
இனியன் : பா……..
தீரன் : வாங்க ராஜகுரு
கருப்பு உருவம் : இன்ஜென்மத்திலும் என் மகனுடன் நீ சண்டை இடுகிறாய்
தீரன் ; ராஜகுருவே போன ஜென்மத்துல நீங்க பண்ணதுல ஒரு நியாயம் இருந்துச்சு தப்பு பண்ணாத முகிலை நான் கொன்னுட்டேன் அதுக்காக நீங்க என்னை கொன்னது நான் ஏத்துக்கிட்டேன் ஆனா இப்போ நீங்க என்னை எதுவும் கேக்க கூடாது ஏன்னா இப்போ நான் கொல்றது தப்பு பண்ணவங்களை இவங்க இரண்டு பேத்தையும் ……………
கருப்பு உருவம் : …………
இனியன் : பா……….அவன் ஏதோ பேசுறான் ஆனா நீங்க அமைதியா இருக்கீங்க
கருப்பு உருவம் : உன்னை பற்றி எமக்கு எதுவுமே தெரியாதென்று நினைத்து கொண்டுள்ளாயா
ரகு : பா………
கருப்பு உருவம் : அப்படி கூப்பிடாதே
ரகு : 😳😳😳😳
முகில் : இங்க என்ன நடக்குது
தீரன் : அத இவனே சொல்லுவான் ……..டேய் சொல்லு டா
இனியனை அடுச்சான் ……………
இனியன் ; சொல்றேன் சொல்றேன்
தீரன் : சொல்லு ……………
இனியன் : நான் இன்பாவ கொல்றதுக்கு தான் இவங்க கூடவே வந்தேன் ……….
இன்பா : என்ன சொல்ற
இனியன் : ஆமா அதுக்கு தான் ரகுவை வெச்சு உங்க கூட வந்தேன் இது ரகுக்கும் தெரியும்
ரகு : ஆமா இவளை கொன்னா இவன் எனக்கு பணம் தரேன்னு சொன்னான் அதுனால நானும் ஒத்துக்கிட்டேன் ………..
அஞ்சலி : ரகு நீயா இப்படி பண்ண
ரகு : ஆமா
தீரன் : 😡😡😡😡 மேல சொல்லு
இனியன் : இவளை கொன்னா எனக்கு ஒரு கோடி தரேன்னு சொன்னாங்க அதான்
தீரன் : யாரு சொன்னா
இனியன் : மினிஸ்டர் வீரபாண்டி
இன்பா : அவரா
இனியன் : ஆமா உன்னால அவர் ஏதோ பிரச்சனைல மாட்டி ரொம்ப கஷ்டப்பட்டுருக்கார் அதுக்கு பழிவாங்க தான் உன்னை கொல்ல சொன்னார் ………….
இன்பா : என்ன ………😨😨😨😨
தீரன் ; நல்லா கேட்டுக்கோ
அஞ்சலி : ரகு நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சு பார்க்கல
ரகு : 😓😓😓😓
தீரன் : மேல சொல்லு டா
இனியன் : நானும் ரகுவும் இவளை கொல்றதுக்காக தான் இங்க வந்தோம் ஆனா ட்ரைன்ல அந்த பிச்சைக்காரர் அந்த புக் குடுக்கிறப்போ தான் எங்களுக்கு ஒரு யோசனை தோணுச்சு
முகில் ; என்ன
இனியன் : அந்த புக்கை நான் படுச்சேன்
இன்பா : ஆனா எப்படி என்கிட்ட தான் இருந்துச்சு
இனியன் ; நீ ட்ரைன்ல தூங்குன அப்பரும் நானும் ரகுவும் படுச்சோம் அதை படிக்கிறப்போவே எங்களுக்கு ஏதோ புரிஞ்சுது எங்களோட முன்ஜென்மம்னு
தீரன் : என்ன பண்ண
இனியன் : அதுல எங்களை பத்தி இருந்த பக்கத்தை நாங்க கிழுச்சுட்டோம் அதுனால எங்களை பத்தி இன்பாக்கு தெரில
முகில் : ஆனா அப்பா உங்களுக்கு இது பத்தி எதுமே தெரிலயா
கருப்பு உருவம் : எனக்கும் இது புதுசு தான் முகிலா எனக்கு ஒன்னும் புரில இந்த ஜென்மத்துல இவங்க தப்பு பண்ணிருக்காங்க நான் ஒத்துக்குறேன் ஆனா முந்தின ஜென்மத்துல என்ன தப்பு பண்ணினாங்க
தீரன் ;இவங்க முழுசா சொல்லட்டும் நான் அதுக்கு அப்பரும் என்ன ஆச்சுன்னு சொல்றேன் ………..சொல்லு டா ………..
இனியன் ; இங்க வந்த அப்பரும் இவளும் நான் நினைச்ச மாறி அந்த புக் படுச்சா என்னை விரும்புனது தெரிஞ்சுது அவளும் என்னை விரும்ப ஆரமிச்சுட்டா எங்களோட வேலை சுலபம்னு நினைச்சேன் ஆனா அது தான் நடக்கலை ………….
தீரன் : ஓஹ் அப்படியா ………👊👊👊👊
இனியன் : ஆஹ்ஹ்ஹ் ………..
கருப்பு உருவம் : உங்களை நான் நல்லவன்னு நினைச்சேன் பாரு
அஞ்சலி ; ஆனா சார் நீங்க எப்படி …….அதாவது போன ஜென்மத்துல நீங்க ………..அது……முகிலை
தீரன் ; கொன்னுட்டேன் அது தான
அஞ்சலி : ம்ம்ம் …………..
தீரன் ; முகிலை கொன்னது நான் பண்ண தப்பு ஆனா இவங்களை கொன்னது தப்பு இல்லை
கருப்பு உருவம் : என்ன சொல்றிங்க அரசே
தீரன் : ஆமா ராஜகுரு
அஞ்சலி : அப்போ இவங்க அந்த பக்கத்தை கிழுச்சுட்டாங்களே நம்ப எப்படி தெரிஞ்சுகிறது
அடியாள் : பாஸ் அவங்க டென்ட்க்குல பார்த்தப்போ இந்த படம் அப்றம் இந்த ஓலைசுவடியும் கிடைச்சுது
கருப்பு உருவம் : அந்த ஓலைசுவடிய படிங்க அதுல என்ன இருக்குனு பாக்கலாம்
அஞ்சலி : ம்ம்ம்………..
🧡🧡🧡🧡🧡🧡🧡
ருத்திரன் : அகிலை பக்கத்து நாட்டு அரசன் ரணதீரன்க்கு விவாகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நாம் இப்போழுது என்ன செய்ய
முகிலன் : நமக்கு வேறு வழி இல்லை நீங்கள் இருவரும் இந்நாட்டை விட்டு செல்லுங்கள்
ரகுபதி ; ஆனால் இது வேறு யாருக்காவது தெரிந்தால் நாம் அவ்ளவு தான்
முகிலன் : நமக்கு வேறு வழி இல்லை அதுனால் இன்று அகில் உன்னை சந்திக்க வரும்பொழுது இதை நீ அவளிடம் கூறிவிடு
ருத்திரன் : சரி
முகிலன் : சரி நான்’கிளம்புகிறேன் நீங்கள் வாருங்கள்
ருத்திரன் : ம்ம்ம் ………..
முகில் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டான் …………..
ரகுபதி : என்ன ருத்திரா நாம் நினைத்தபடியே நடக்கிறது எல்லாம்
ருத்திரன் ; ஆம் ரகு
ரகுபதி : நாம் நினைத்த படி அகிலை பலியிட வேண்டும் அப்பொழுது தான் நமக்கு அந்த புதையல் கிடைக்கும்
ருத்திரன் : ஆம் தெரியும் ரகுபதி
இவங்க பேசுனது ரணதீரனோட ஒற்றன் கேட்டு கொண்டு இருந்தான் ………….
ஒற்றன் : இதை உடனடியாக அரசரிடம் கூறவேண்டும்
அவ்விடத்தை விட்டு சென்றான் …………….அவன் சென்ற பின் …………..
ரகுபதி : இவையெல்லாம் முகிலன்க்கு தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் தெரிந்தால் நம்மை அவனே கொன்றுவிடுவான்
ருத்திரன் : ஆம் அவனுக்கு தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் ………..
இதை கேக்காமல் பாதி மட்டும் கேட்டுவிட்டு சென்றுவிட்டான் …………..அதுனால் தான் வந்த வினை முகிலனை கொன்றது ……………
ஒற்றன் : அரசே
ரணதீரன் ; சொல்லும்
ஒற்றன் ; அங்கே …………
அவன் கண்ட கேட்ட அனைத்தையும் கூறி முடித்தான் …………
ரணதீரன் : அவர்களை நான் உயிருடன் விடமாட்டேன் நான் பார்த்து கொல்லுகிறேன் நீ சென்று அவர்களை கவனி
ஒற்றன் : ம்ம்ம் ………….
அதன் பிறகு ரணதீரன் ராஜாவை காண சென்றான் ……….அனைத்தையும் கூறினான் ………..இதை கேட்ட ராஜா கோபமுற்று தான் இரவு ருத்திரனை கொன்றார் ………………
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
அஞ்சலி : இவ்ளோ நடந்துருக்கா
முகில் : 😱😱😱😱
தீரன் : இப்பொழுது கூறுங்கள் ராஜகுருவே நான் பண்ணதுல தப்பு இருக்கா
கருப்பு உருவம் : கண்டிப்பாக இல்லை ……………இவனை ………….
அந்த கருப்பு உருவம் அங்க பெருசா சூறாவளி மாறி உருவாக்குச்சு …………..அதுல ரகு அப்புறம் இனியனை இழுத்து விட்டுருச்சு ……………..அவங்க அந்த சூறாவளில சிக்கி எங்க போனாங்கனே தெரியாம காண போய்ட்டாங்க ………………….
அஞ்சலி : அவங்க எங்க
கருப்பு உருவம் ; இனிமே திரும்பி வரமாட்டாங்க ……..அரசே என்னை மன்னித்து விடுங்கள்
தீரன் : பரவலை விடுங்க இனியாது உங்களுக்கு முக்தி கிடைக்கட்டும்
தீரன் அப்டி சொன்னதுமே அவரோட ஆத்மாக்கு முக்தி கிடைச்சுருச்சு …………..இப்போ அங்க இன்பா , முகில் , அஞ்சலி , தீரன் , யாழினி தான் இருகாங்க ……….
யாழினி : இவனையா நான் காதலிச்சேன்
தீரன் : ஆமா பரவலா விடு
யாழினி : ம்ம்ம்
முகில் : இன்பா
இவ்ளோ நேரம் கேட்ட ஷாக் சேர்ந்து மயக்கம் போட்டு விழுந்துட்டா …………..
தீரன் : இன்பா …………
அவளை தூக்கிட்டு ஹாஸ்பிடல் வந்தாங்க …………..ஒரு நாள் முழுசா மயக்கத்துல தான் இருந்தா …………..அதுக்கு அப்புறம் தான் கண்ணு முழுச்சா …………..அவ கண்ணு முழுச்சு பார்த்த முதல் நபர் அவ அம்மா தான் ……………..
இன்பா : மா ……….😭😭😭
அம்மா : ஒன்னும் இல்லை மா அழாத ………..
இன்பா : மா என்னால தான் உங்களுக்கு இந்த நிலைமை
அம்மா ; அப்டிலாம் இல்லை மா அழாத
இன்பா : 😭😭😭
அம்மா ; தீரன் தம்பி தான் என்னை இங்க கூட்டிட்டு வந்துச்சு
இன்பா நிமிந்து தீரனை பார்த்தா …………..
அம்மா : ஒன்னும் இல்லை வா நம்ப வீட்டுக்கு போய் பேசிக்கலாம்
இன்பா : ம்ம்ம்………….
இன்பாவோட பிரின்ட் வீட்டுக்கு வந்துட்டாங்க …………..
அம்மா : நடந்த எல்லாமே தீரன் தம்பி சொன்னார் மா விடு
இன்பா : ம்ம்ம்………….
அம்மா : தம்பி ஏதோ உங்கிட்ட பேசணும்னு சொல்லுச்சு பேசு மா
இன்பா : ம்ம்ம்………..
அவங்க வெளிய போய்ட்டாங்க ………..தீரன் உள்ள வந்தான் …………..
தீரன் : இப்போ எப்படி இருக்கு
இன்பா : ம்ம்ம்……….
தீரன் : இங்க பாரு நான் நேராவே சொல்றேன் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் இப்போ இல்லை போன ஜென்மத்திலும் தான்
இன்பா : ……….
தீரன் : நான் கெட்டவன் தான் ஆனா உன் விசயத்துல நான் ரொம்ப நல்லவன்
இன்பா : …………
தீரன் : என் முடிவு சொல்லிட்டேன் உன் முடிவு நீ சொல்லு
அப்போ அஞ்சலி முகில் உள்ள வந்தாங்க ………..
இன்பா : வாங்க
முகில் : இப்போ எப்படி டா இருக்கு
இன்பா : பரவலை அண்ணா
முகில் : சாரி உங்களை தப்பா நினைச்சுட்டேன்
தீரன் : பரவலா முகில்
அஞ்சலி : எனக்கும் அப்படி தான் கனவு வந்துச்சு அதுனால தான் உங்களை நானும் தப்பா நினைச்சுட்டேன்
தீரன் : பரவலை விடு மா
முகில் : நீங்க இரண்டு பேரும் பேசுங்க நல்லவேளை நீ இனியனை லவ் பண்ணல
இன்பா : எனக்கு இனியன் மேல அப்டிலாம் எந்த எண்ணமும் கிடையாது நல்ல நண்பன் தான் அவன் ஆனா அவன் அதுக்கே எனக்கு துரோகம் பண்ணிட்டான் ……….
அஞ்சலி : சரி நீங்க பேசுங்க நாங்க வெளிய இருக்கோம் …….
தீரன் : ம்ம்ம் ……..
அவங்க போய்ட்டாங்க …………
இன்பா : சாரி
தீரன் : என்ன நீயும் என்னை தப்பா நினைச்சியா
இன்பா : ம்ம்ம் ………..
தீரன் : நான் போன ஜென்மத்துல அப்படி இருந்தேன் ஆனா அப்போவும் உன்னை காப்பாத்த தான் வந்தேன் நீ தான் என்னை புருஞ்சுகளை ……..
இன்பா : ……….
தீரன் : என்னை புருஞ்சுகளை அதும் இல்லாம எத்தனை சாபம் அந்த ஊரு மக்களே இல்லமா போய்ட்டாங்க ………..
இன்பா : மன்னிச்சுடுங்க
தீரன் : இனி அதை பேசி பிரயோஜனம் இல்லை விடு ஆனா ஒன்னு சொல்லிக்கிறேன் நான் அப்போவும் சரி இப்போவும் சரி உனக்காக தான் இதை செஞ்சேன்
தீரன் எழுந்து போக போனான் …………இன்பா அவன் கைய பிடுச்சா …………..
தீரன் : என்ன
இன்பா : போன ஜென்மத்துல வேணா நான் ருத்திரனை லவ் பன்னிருக்கலாம் ஆனா இந்த ஜென்மத்துல நான் விரும்புறது உங்களை தான்
தீரன் : நிஜமாவா
இன்பா ; ம்ம்ம் ……..
தீரன் : அப்போ ஏன் அங்க நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னப்போ ஏன் முடியாதுனு சொன்ன
இன்பா : நீங்க இனியனை கொன்றுவீங்களோனு தான் அப்டி சொன்னேன்
தீரன் : ம்ம்ம்………
இன்பா : என் மேல கோவமா
தீரன் : உன்மேல என்னால கோவப்பட முடியாது
இன்பா : 😊😊😊😊
தீரன் : அத்தைகிட்ட நம்ப கல்யாணத்தை பத்தி பேசவா
இன்பா : ம்ம்ம் …………
தீரன் : சரி நான் கிளம்புறேன்
இன்பா : அவ்ளோ தான
தீரன் : வேற என்ன
இன்பா : இந்த ப்ரொபோஸ் கிடையாதா
தீரன் : ஓஹ் பண்ணனுமா
இன்பா : ஆமா
தீரன் ; சரி பண்ணிட்டா போச்சு ………..
இன்பா : ……….😍😍😍😍
தீரன் : என்னை விவாகம் செய்ய சம்மதமா நிலவுப்பெண்ணே 😍😍😍
இன்பா : சம்மதம் ரணதீரா ………🙈🙈🙈
தீரன் அவ நெற்றியில் முத்தம் குடுத்தான் …………இன்பாவும் கண் முடி அந்த முத்தத்தை ஏத்துக்கிட்டா ……………..
சுபம் …………