Loading

நிமல் சரண் இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்தனர். அவர்களை கண்ட நேத்ரா ஏதும் அறியாது போல தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். விடுமுறை அல்லாது மற்ற நாட்களில் உணவு இடைவேளைக்கு பின் வரும் நேத்ரா காலையிலேயே வந்திருப்பதை கண்ட நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமாய் சிரித்துக் கொண்டனர்.

 

ஆனால் இதை ஏதும் கண்டு கொள்ளாமல் தன் காரியமே கண்ணாக வேலையில் கவனமாக இருந்தாள் நேத்ரா. ஆனால் ஒரு முடிவோடு தான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாள். 

 

நேத்ரா வந்து காதல் சொல்வாள் என்று எதிர்பார்த்து கொண்டிருக்க அவளோ இவர்களின் அறை பக்கம் கூட எட்டி பார்க்கவில்லை. நேரம் ஆக ஆக நிமலின் முகம் காற்று போன பலூன் போல ஆகிட, சரண் இவர்களின் காதல் கூத்தை கண்டு அதிகமாகவே சிரித்துக் கொண்டிருந்தான்.

 

அலுவலக நேரமும் முடிந்தாயிற்று அவளை எதிர்பார்த்து நொந்து போய் விட்டான் நிமல். இனி அவள் வரமாட்டாள் என்றே எண்ணியும் விட்டான். எல்லோரும் சென்று விட காலையில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து சோகமே உருவாய் சரணுடன் வெளியே வந்தான் நிமல். 

 

அச்சமயம் சரணிற்க்கு ஃபோன் வர அதில் சொன்ன செய்தியில் சிரித்துக் கொண்டே மீண்டும் அவன் அறைக்கு சென்று விட்டான். ஆனால் அதன் காரணம் என்னவென்று புரியாமல் நிமல் முழித்துக் கொண்டிருக்க……அவனை பின்னிருந்து அணைத்தவள்……………

 

என் விழிகளை  

கண்டு காதல் 

கொண்ட 

உன் விழிகளில் நித்தம் 

நான் தொலைந்திட

உன் காதல் விழிகளை

எனக்கு தருவாயா…..

 

உன் கை விரல் 

கோர்த்து காலமும்

நான் வர 

உந்தன் உள்ளங்கைகளை 

எனக்கு தருவாயா……

 

என்னை குழந்தையாய் 

நித்தம் மடி சாய்த்து

தாலாட்டி உறங்க வைக்க

உன் மடி தருவாயா…..

 

என்றும் எனக்கே எனக்காய்

உன் உள்ளம் முழுதும் 

நான் நிறைந்திட உன் உள்ளமதை

எனக்கு தருவாயா…

 

என அவள் கூறி முடித்த மறு நொடி அவளை முன் நிறுத்தி அணைத்துக் கொண்டவன், 

 

எப்போதோ 

அதை உனக்கென 

நான் தந்துவிட்டேனடி…. 

மையிட்ட உன் 

விழிகளில்…. 

 

என இருவரும் கவிதைகளில் காதலை கூற….

 

உள்ளிருந்தே கைதட்டிய படி அவர்களை வாழ்த்தினான் சரண். எல்லோரும் சென்றதும் தன் காதலை கூறலாம் என்று தான் நேத்ரா நினைத்திருந்தாள். அதன் படியே செய்து விட எல்லாவற்றையும் நியாபாகமாக செய்த நேத்ரா அங்கிருந்த கண்காணிக்கும் கேமராவை மறந்து விட்டாள். இவர்களின் காதல் கவிதை அனைத்தும் சரணின் அறையில் ஓடிக் கொண்டிருக்க அவனே இதை எதிர் பார்க்கவில்லை. இதற்கு மேலும் இந்த முரட்டு சிங்கிளால் காதல் காட்சிகளை பார்க்க முடியாது என்று கை தட்டி அவர்களை தன்னிலை படுத்தினான்.

 

இருவருக்கும் வெட்கம் சூடிக் கொள்ள புன்னகை முகமாய் சரண் முன் நிற்க…..ரொம்ப சந்தோசம் டா எப்போவும் ஹேப்பியா இருங்க…..என்று அவன் வாழ்த்து தெரிவித்தான்.

 

அன்று மாலை முழுதும் காதல் பறவைகள் காதல் செய்ய இரவு அவளின் ஆசிரமம் முன் வண்டியை நிறுத்தி, காரில் தன்னுடன் இருக்கும் தன்னவளிடம் நிமல் தன் கேள்வியை கேட்டான். 

 

அம்மு…… 

 

அம்மு என்ற அழைப்பிலேயே ஆனந்தம் அடைந்தவள் அவனை பார்க்க….

 

நான் காதலை சொன்னதுக்காக மட்டுமா அம்மு நீ என் காதலை ஏத்துக்கிட்ட என்று நிமல் கேட்க…..

 

அவனை பார்த்து சிரித்தவள்,,, இல்லை…என்ற தலையை மட்டும் ஆட்ட….. நிமல் தான் குழம்பி போனான். மீண்டும் அவன் எதற்காக என்று கேள்வி கேட்க……

 

உங்களோட குணம் தான் உங்களுக்கு முன்னாடியே எனக்கு பிடிச்சது. சரண் எப்போவும் உங்கள பத்தி தான் பேசிட்டே இருப்பான். நீங்க செஞ்ச எல்லா நல்ல விஷயமும் எனக்கு தெரியும். உங்களோட குணம் உங்கள பார்க்கிறதுக்கு முன்னாடியே புடிச்சு போச்சு, ஆனா…என் கூட எப்போவும் உங்கள பத்தி பேசிட்டே இருந்தனால ஒரு சின்ன பொறாமை…உங்களை பத்தி வேற எதையும் யோசிக்க விடலை.

 

ஆனா உங்களை பார்த்ததும் பொறாமை மறந்து உங்க அழகுல மயங்கிட்டேன் தெரியுமா…..எனக்கு உங்களை பிடிச்சது சரணால தான். நீங்க அவனுக்கு தான் தாங்க்ஸ் சொல்லணும். அப்புறம் முதல் நாள் நீங்க என்ன பார்த்த பார்வைக்காக தான் இன்னும் இந்த பர்தாவ போட்டுட்டு சுத்திட்டு இருக்கேன். ஆனா நீங்க தான் கிரேட்….என்னோட கண்ண மட்டும் பார்த்து லவ் பன்றதெல்லம் ரொம்ப பெருசு……

 

நிஜமா நான் ரொம்ப குடுத்து வச்சவ…என்று நீளமாக பேச….அவன் தான் வாயடைத்து போனான்.

 

அவனை பார்த்து சிரித்தவள்……உங்களுக்கு நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு….அதுக்காக காத்திருங்க…… பை….. என்று கூறி பறந்து விட்டாள். நிமல் என்னவாக இருக்கும் என்று யோசித்து அவளை அழைத்துக் கொண்டே இருக்க….அவள் ஓடியே விட்டாள்.

 

இவர்கள் இங்கு காதல் மொழி பேசிட அங்கு ஒருத்தியின் நிலை தான் என்ன என்று சொல்ல முடியா நிலையில் இருந்தது. ஆத்திரம் தீர அனைத்தையும் உடைத்து முடித்தவள் ஒரு முடிவுடன் அவ்விடம் நோக்கி புறப்பட்டாள்……….

 

 

நேத்ராவின் சிறுபிள்ளை தனத்தை நினைத்து சிரித்துக் கொண்ட நிமல் தன் காரை எடுத்துக் கொண்டு இல்லம் சென்றான். ஆனால் அதை தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தவனோ ஒரு பெரிய திட்டத்தோடு அவ்விடம் விட்டு காண வேண்டிய ஆளை காணச் சென்றான்.

 

ஒரு நாள் முழுதும் ஆத்திரத்தோடும் கோபத்தோடும் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தையும் உடைத்து பித்து பிடித்தவள் போல கத்திக் கொண்டிருந்தாள் சித்து. பெற்றோர் அறிவுரை ஏதும் அவள் காதில் விழவே இல்லை. அவன் எனக்கு மட்டும் தான் என்று கத்திக் கொண்டிருந்தவளுக்கு ஃபோன் வர அதை அவள் பொருட்படுத்தவே இல்லை. மீண்டும் மீண்டும் வர எரிச்சலில் தூக்கி எறிந்திட அது சுக்கு நூறாய் சிதறியது. அவ்வளவு நேரம் அவளின் கை பேசி வழியே வந்தவன் இப்போது வீட்டின் அலைபேசி வழியே வர, அவளின் அப்பா உன் நலம் விரும்பி என்று சொல்வதாகவும் முக்கியமான விஷயம் என்றும் கூறுவதாக கூறி அவளிடம் அலைபேசியை நீட்ட…

 

அதில் என்ன செய்தி சொல்ல பட்டதோ தெரியவில்லை அவ்வளவு நேரம் இருந்த கோபம் அனைத்தும் வடிந்திட சிரித்த முகமாக உடனே வெளியே கிளம்பினாள்.

 

யாரும் இல்லாத அந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு காத்திருக்க சிறிது நேரத்திலேயே அவனும் வந்தான். அரைமணி நேரம் பேசிக் கொண்டவர்கள் இறுதியாய் கைகளை குலுக்கி விடை பெற……..அவ்விருவரின் முகத்திலும் அப்படியொரு பழியுணர்வும் அகங்காரச் சிரிப்பும். தனக்கு கிடைக்காத ஒன்று ஒரு போதும் யாருக்கும் கிடைக்க கூடாது….கிடைக்கவும் விடக் கூடாது என்ற எண்ணம் இருவரிடத்திலும் ஓங்கி இருந்தது. ஆனால் இருவர் எண்ணத்தின் பிரதிபலிப்பால் அன்பாய் இருக்கும் இரு மனங்கள் காரணமின்றி பிரியபோகின்றது.

 

தங்கள் எண்ணம் ஈடேரும் என்று ஆனந்தத்தில் இருவர் இருக்க இதை எதையும் அறியாமல் நாளை தன்னவனிடம் தான் முகமதை காட்ட வேண்டும், நாளை முழுதும் அவனுடன் பேசி கொஞ்ச வேண்டும் என்றெல்லாம் காதல் கொண்ட மனம் காத்திருந்தது. ஆனால் எல்லாம் நன்றாக நடந்தால் கடவுளுக்கு பிடிப்பதில்லையே…..அவரும் காத்திருந்தார் போல நேத்ரா நிமல் பிரிவிற்கான நேரத்திற்கு.

 

 

 

 

 

 

 

தொடரும்……..prabhaas 💝💝💝

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்