Loading

அத்தியாயம் 4

 

 

 

மறுநாள் காலை இராஜேந்திரனுடன் ஸ்கூட்டியில் அகெடமிக்கு வந்து சேர்ந்து விட்டாள் ஜெனனி..

 

அத்தோடு , வகுப்புக்கும் வந்து அமர்ந்து விட்டாள் சன்ஜீவ மட்டும் காணவில்லை.. அவளுக்கு முன்னர் வகுப்பில் இருப்பவன் இன்று ஏனோ ஆள் வந்து சேரவில்லை..‘ அவங்க அப்பா அடிச்சதுனால ஃபீவர் வந்து இருக்குமோ இல்ல சஜித் அண்ணா ஏசுனனால க்ளாஸ் போக வேணாம் எண்டு வீட்டுல நிப்பாட்டிடாங்களோ ’ அவன் சிந்தனையே அவளுக்கு செல்ல..

 

அவன் வகுப்பிற்கு வந்து நாற்காலியில் அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டு இருப்பதையும் அவள் அறிவில்லை..‘ சன்ஜீவ பாவம் நல்லா படிக்கிற பொடியன் ஆச்சே.. அவனுக்கு பேராதனை பல்கலைக்கழகம் வேற கிடைச்சு இருக்கு ப்ச்..ஏன் தான் அவங்க அப்பா அடுத்தவன் சொல்ற பேச்செல்லாம் கேட்பாரே, அவங்க அப்பா கன்னத்துல அடிச்சது கூட வலிச்சு இருக்கும்..’ அவள் மனதில் அவனுக்கு நேற்று இரவு நடந்தவைகளே ஓடிக் கொண்டு இருந்தது..

 

வெளிப்படையாக அவனைப் பற்றி யாரிடமும் பேசிவிட முடியாது..இப்படி மனதிற்குள் பேசி வருத்திக் கொள்ளத்தான் முடியும்..

 

கன்னத்தில் கை வைத்து ஆழ்ந்த சிந்தனையில் அவள் என்றால் சன்ஜீவனை அவன் தோழன் ஒருவன் பிடித்துக் கொண்டான்..“ சன்ஜீவ ” திகைத்து போய் அழைத்தான் அவன் தோழன் மலித் “ அய் கியபன் பங்? ( என்ன சொல்லுடா?) ” தலையை திருப்பிக் கேட்க..

 

“ உம்பகே முஹுனட்ட மொனவா வெலாத பங்? (   உன்ட மூஞ்சிக்கு என்னடா ஆச்சு?) ” மலித் கேட்டுக் கொண்டே அவன் கன்னத்தில் கை வைக்க வர..அவன் கையை தடுத்து பிடித்தவன் “ இய்யே படிபெலென் மம பிம வெடுனா பங்.. ஏக தமய்  முஹுன படிபெல அதர வெதிலா தியன்னே எச்சரைய் பங் லொகு தெயக் நேமெய்..( நேத்து  படிகட்டுல இருந்து நான் கீழ விழுந்தட்டன் டா அதான் முஞ்சி படிக்கட்டு ஓரத்துல அடிபட்டு இருக்கு அவ்ளோதான் டா பெருசா ஒன்னும் இல்ல..) ” அவனிடம் சொல்ல..

 

அவன் அவனை நம்பாத பார்வை பார்த்தான்..“ மட்ட ஏம பேனேன்ன நே சன்ஜீவ கவுத ஹரி உம்பட கஹல தியனவா உம்ப மட்ட பொரு கியன நேத்துவ யன்ன பங்..( எனக்கு அப்படி தெரியல சன்ஜீவ.. யாராவது உனக்கு அடிச்சி இருக்காங்க நீ என்னட்ட பொய் சொல்லாம போ டா..) என்று அவனைத் திட்டினான்..

 

அவனோ சிரிப்புடன் கடந்துவிட்டான்.. வகுப்பில் இருப்பவர்களின் பேச்சு சத்தமாக இருந்தாலும் மலித், சன்ஜீவ இருவரும் பேச்சும் அவளுக்கு கேட்க தான் செய்தது..

 

அவள் இடையில் ஆசிரியர் நடக்கும் இடத்தில் முன் நாற்காலியில் அமர்ந்து இருக்க..அதற்கு நேரே இருந்த முன் இரண்டு இருக்கையில் முதலாவதாக மலித்தும் அவன் பக்கத்தில் சன்ஜீவவும் அமர்ந்து இருந்தான்..

 

மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தாள்..அவன் பார்வை வெள்ளை கரும்பலகையில் நிலைத்து இருக்க..‘ கதைச்சி பார்ப்போமா? ’ என்று கூட அவள் நினைத்த வேளையில்..

 

அவள் வயதிலே இருக்கும் ஒருவன் “ அமரகே ஜோடுவ தமய் ஜெனனி கோஹமத? ( அமரோட ஜோடி தான் ஜெனனி எப்படி இருக்கு? ) ” கலகலவென நகைத்து கொண்டே மற்றவர்களிடம் கேட்டிருக்க, அவளை விட மூன்று வருட இளையவனை இவளுடன் கோர்த்து அவன் சொல்லி இருக்க.. மற்றவர்கள் கொல்லென சிரித்தனர்..

 

இவளுக்கோ கோபத்தை கிளப்பி விட பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்..அவனிடம் போய் கேட்டு இருக்கலாம்.. எதற்கு வீண் வம்புக்கு செல்ல வேண்டும்..ஆறு மாத கோர்ஸ் முடிந்து சான்றிதழ் எடுத்துவிட்டால் அவள் யாரோ அவன் யாரோ தான் திரும்பவும் அவர்களை சந்திக்க போவதில்லை அந்த எண்ணம் அவளுக்கு இருக்க பேசாமல் இருந்தாள்..

 

இங்கே ஒருவனின் கை முஷ்டிகள் இறுக்கமாக பற்றி இருக்க..முகம் சிவந்து போய் இருந்தது..அவனின் காதலியை இன்னோருவனை வைத்து எப்படி ஜோடி சேர்த்து விடுகிறான் அவன்.. பொறுமையாக இருக்க முடியவில்லை முகத்திலே இரண்டு குத்து விட வேண்டும் போல் இருக்க , நாற்காலியை விட்டு எழ முயற்சித்த போது இவனின் கையை பிடித்து இருந்தது கைக்கடிகாரம் அணிந்த கரம்..

 

கரத்தின் சொந்தக்காரி யார் என்று பார்த்து தான் அவன் அறிந்து கொள்ள வேண்டுமா? பார்க்காமலே உணர்வின் மூலம் மயிலிறகவள் என்று உணர்ந்தானே!

 

அவளுக்கு தெரியும் அவளுக்காக எழுந்து அடித்திருந்தாலும் ஒன்றும் சொல்வதற்கு இயலாதே..தேவையில்லாத வீண் பிரச்சினை எதற்கு படிக்க வந்த இடத்தில் படித்துவிட்டு செல்ல வேண்டும் சண்டைக்கு அல்லவே அகெடமிக்கு வருவது அவளின் எண்ணம் சரியாக இருக்க இவனுக்கு கோபம் கிளப்பி இருந்தது..

 

அவளின் கரத்தின் பற்றுதல் மயிலிறகு போல் சிலிர்ப்பை அவனுள் உருவாக்கி இருந்தது.. அவனைப் போல அவளும் உணரவில்லையோ இல்லை நடிக்கிறாளோ அவளே தான் அறிவாள்..

 

ஆசிரியர் வரவும் அவன் கையை பற்றி இருந்த கரத்தை எடுத்துவிட்டாள்..அதன் பிறகு வரிசையாக பாடங்கள், ஆங்கில பேசுவதற்கு பயிற்சியும் நடந்து மாலை நேரமும் நெருங்கிவிட்டு இருந்தது..

 

வகுப்பு முடிந்து எப்போதும் போல் அவர்கள் பயணம் பஸ்ஸில் பயணமானது..

 

பஸ் அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் நின்றதும் இருவரும் இறங்கிக் கொண்டனர்..சன்ஜீவ ஜெனனியிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்..அவள் தெரு ஓரத்தில் நடந்துக் கொண்டு செல்ல இவனும் அவளுடன் சேர்ந்து கொண்டான்..“ க்ளாஸ் எகே ஒயா அய் எஹம கலே? (க்ளாஸ்ல நீ ஏன் அப்படி செய்த?)” அவளிடம் கேட்டபோது ‘ கைய பிடிச்சது விருப்பம் இல்லையோ? அதுக்காக தான் கேட்குறான் போல..’ மனதில் நினைத்து..

 

“ தெரியாம உங்க கைய பிடிச்சிட்டன் பா..சொறி அஷோக கிட்ட நானே போய் கேட்டு இருக்கலாம் ஆனா அவனுங்க என் லைஃப் ஓட தொடர்ந்து வரப் போறது இல்லையே..க்ளாஸ் ஓட முடிஞ்சிது இன்னும் ஐஞ்சி மாசம் இருக்கு கோர்ஸ் முடிய என்னதுக்கு எண்டு தான் அத பெருசுபடுத்தாம விட்டுட்டன் ” நடந்தபடி அவள் பேசிக் கொண்டு செல்ல..“ ஒயா மகே அத அல்லகத்த எக எஹுவ்வே நே அஷோக ஒயாட கிவ்வ எக தமய் மம எஹுவ்வே..ஒயா தென் கியபுவெக ஹரி தமய் ( நீ என் கைய பிடிச்சத கேட்கல்ல…அஷோக உனக்கு சொன்னத தான் நான் கேட்டேன்.. நீ இப்ப சொன்னதும் சரிதான்) ”  ஷு காலால் கல்லை தட்டி சொன்னான் சன்ஜீவ..

 

‘ நான் தான் அவன் என்ன சொல்ல வர்றான் எண்டு கேட்காம கதைச்சிட்டேன் ’ மனதில் நினைத்து கொண்டு இருக்கும் வேளையில், அவன் உதட்டில் குறுநகை பூத்தது..அப்போது தான் யோசித்தால் “ சன்ஜீவ நான் தமிழ் தானே கதைச்சேன் உனக்கு எப்படி விளங்குது..” வியப்புடன் கேட்க.. அப்போதும் அவள் தமிழில் தான் பேசினால் என்பதை மறந்து கேட்க.. நெற்றியில் தட்டிக் கொண்டாள்..

 

“ மட தெமலென் கதா கரண்ட தன்னே நே ஜெனி..ஏத் ஒயா கதா கரன்ன தெமல மட தேரேனவா..( எனக்கு தமிழ்ல கதைக்க தெரியாது ஜெனி ஆனா நீ கதைக்கிற தமிழ் எனக்கு விளங்கும்) ” புன்னகையுடன் அவன் சொல்ல.. அவள் பார்க்கும் பார்வையில் இருந்து சிரமப்பட்டு தன்னை திசை திருப்பிக் கொண்டான்..

 

“ ஏகத ஹரிதமய் ( அதுதானா சரிதான்..) ” என்றாள்..“ கன்னம் எப்படி இருக்கு நோவுதா? ” அவள் விழிகளை சுருக்கி கன்னத்தை காட்டி கேட்க.. “ ஆஹ்..ஏக பிரஷ்னயக் நே ஜெனி ( ஆஹ்..அது பிரச்சினை இல்ல ஜெனி )” தலை குனிந்து பதிலை சொல்ல..

 

“ நான் நேத்து வெளிய நின்னுட்டு இருந்தேன்..நீங்க ஏன் அப்படி சைகைல செஞ்சீங்க? ” கண்களால் முறைத்து அவள் கேட்க..

 

என்ன பதிலை சொல்வது என்று யோசித்துவிட்டு “ ஏக செல்லமட கலே ஜெனி..( அது விளையாட்டுக்கு ஜெனி) ” பொய் ஒன்றை அவளிடம் சொன்னான் ஆனால் அவள் அவனை நம்பவில்லை..

 

“ ஏதோ ஒண்டு இருக்கு ” வாய்க்குள் சொல்லிக் கொண்டு அவன் எதிர்பாராமலயே அவனின் இடது பக்கம் வந்து ஆள்காட்டி விரலால் , அவன் கன்னத்தில் குத்தி இருந்தாள்..“ ஆ..ஆ..ஆ..” வலியில் சத்தமாக கத்தினான் அவன்..

 

கன்னத்தில் கை வைத்த அவன் “  கம்முல்ல அனுவே ரிதெனவா தன்னவத?குருலே ஒயா கெடுவா லேத் எனவா? அத தியாகென நிகன் இன்ன பேரித? (  சொக்கைல ( கன்னத்துல) குத்துற நோவுது தெரியுமா ? பருவ வேற நீ உடைச்சிட்ட ரத்தமும் வருது..கைய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டீயா ?) ” பரு உடைந்த வலியில் கோபத்துடன் புருவத்தை சுருக்கி கத்தினான் அவளிடம்..

 

அவளே நினைக்கவே இல்லை கன்னம் வலிக்கிறதா என்று தொட்டால் அதே சமயம் திட்டையும் வாங்கிக் கொண்டாள்..கன்னத்தை தொட்டு பார்த்தான் கையில் ரத்தம்..

 

“ சொறி சன்ஜீவ..நேத்து அடி வாங்குன கன்னம் நோவுதா எண்டு செக் பண்ணேன் ” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்தாள்..

 

அவள் கையில் இருந்த கைக்குட்டையை அவன் பறித்து கன்னத்தை ஒத்தி எடுத்தான்.. அவளைப் பார்த்து முறைப்பையும் வழங்க..அவள் தான் அவனின் திடீர் செய்கையில் “ ஆ..” என்று வாயை பிளந்து பார்க்க..

 

அவன் சிவந்த நிறம் என்றால் தாடியும், மீசையும் முகத்தில் இருந்த பருக்களை மறைத்து இருந்தாலும் தெரியத்தான் செய்கிறது..அந்த பருக்களே அவனை கூடுதல் அழகாக காட்டிவிடும் ஆனால் அவள் கை வைத்த பரு காயமாகி ஆறிக்கொண்டு வரும் நிலையில் இருக்க அதனை அவளே பதம் பார்த்துவிட்டாள், மீண்டும் அவ்விடத்தில் காயமாகி போனது..

 

அவளின் கைக்குட்டையை பாக்கெட்டில் திணித்து விட்டு, அவளைப் பார்க்காது செல்ல..“ சன்ஜீவ மகே லேன்சுவ தென்ன..( சன்ஜீவ என்னோட லேஞ்சியை குடுங்க..) ” அவன் பின்னே ஓடினாள்..

 

“ லேன்சுவ நே மமம தியாகன்னம் ஏத் ஒயாட தென்னே நே ( லேஞ்சி தானே நானே வச்சுக்குறேன் ஆனா உனக்கு தர மாட்டேன்..) ” தர முடியாது என்றே மறுத்துவிட்டான்..“ போடா லூசு ” என்றதும் அவளை பின்னால் திரும்பிப் பார்க்க சிரிப்பு தான் வந்தது சிரித்தும் விட்டான்..கைகளை உதறி , உதட்டை பிதுக்கி சிணுங்கிக் கொண்டே அவன் பின்னே நடந்தாள்..

 

ஆனால் வீட்டுக்கு வரும் தெருவில் இருவரும் தொலைவில் இடைவெளி விட்டு நடந்து வருவார்கள் ஏனென்றால் ஊர்க்காரர்கள் எப்போதும் ஒரே போல் இருக்க மாட்டார்களே தப்பி தவறி இருவரும் ஒன்றாக வருவதை கண்டு இருந்தால் ஒன்றை பத்தாக திரித்து ஊர் முழுக்க பற்ற வைத்து இருப்பார்கள்…அதனால் இருவருக்கும் நன்கு தெரியும் அது போலவே நடந்து கொள்வார்கள்..

சனிக்கிழமை அன்று வகுப்பு இல்லாததால் வீட்டு முற்றத்தை கூட்டி , பெருக்கிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்..

ஹாலில் உணவு மேசையில் நேற்று இரவு அவளின் சமார்த்தியம் பெரிய பெண் ஆன போது எடுத்த ஆல்பம் அதில் அவளின் புகைப்படங்கள் இருக்கிறது அதனை பார்த்துவிட்டு மேசையில் வைத்து விட்டாள்..எடுத்து அலுமாரியில் வைக்க வேண்டும் என்பதை மறந்து இருக்க..

 

கேட் திறக்கும் சத்தம் கேட்கவும் யார் என்று எட்டிப் பார்த்தாள்..சன்ஜீவ தான் வந்திருந்தான் “ என்னவா இருக்கும் அதிசயமா வீட்டுக்கு வாறான்..ம்ம்..” அவனைப் நோக்க..

 

வீட்டிற்குள் வராது வாசலிலே நின்றுக் கொண்டு “ ஜெனி ஒயாகே இங்கிலிஷ் பொத தென்ட புலுவன்த ( ஜெனி உன்னோட இங்கிலிஷ் புத்தகம் தர முடியுமா ? ) ” அவன் கேட்க..“ தென்னம் ( தாரேன்) ” புத்தகத்தை எடுக்க அவள் அறைக்கு சென்றுவிட..

 

அவன் கண்களில் அவளின் புகைப்படங்கள் உள்ள ஆல்பம் சிக்கி விட அதனை கையில் எடுத்து பார்க்க மனம் உந்தியது.. யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு உள்ளே சென்று ஆல்பத்தை திறந்து பார்த்த வேளையில் ஒரே மாதிரி இரண்டு புகைப்படங்கள் இருக்கவும் அதில் ஒன்றை அவன் கையில் எடுத்த போது ஜெனனி வரும் அரவம் கேட்டதும் பட்டென்று ஆல்பத்தை மூடிவிட்டு ஷர்டில் அவளின் புகைப்படத்தை ஒளித்துக் கொண்டு வெளியே போய் நின்றான்..

 

“ மென்ன ஒயா இல்லபு பொத (  இந்தாங்க நீங்க கேட்ட புத்தகம்) ” அவனிடம் நீட்டவும் வாங்கிக் கொண்டவன் “ ஹவசட்ட கெனத் தென்னம் ஜெனி ( பின்னேரம் கொண்டு வந்து தாரேன்) ” என்றான்..“ ஹரி ( சரி) ” தலையசைக்கவும் புன்னகைத்து விட்டு சென்றான்..

 

அவளும் ஆல்பத்தை திறந்து பார்க்காது உள்ளே எடுத்துச் சென்றிருந்தாள்..

 

 

தொடரும்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்