அத்தியாயம் 18
அவனது பைக்கில் முதன் முறையாக அவளை ஏற்றிச் செல்கிறான் அவன்..
அவளோ அவன் முதுகில் சாய்ந்தவாறு அவனோடு பைக்கில் பயணித்தாள்..
அவள் தலையில் அணிந்திருக்கும் தலைகவசம் அவனுக்கு அசெளகரியத்தை கொடுத்தாலும் அவள் இருக்கும் மனநிலையை உடைத்திட விரும்பவில்லை அவன்..
கொழும்பு நாவலயில் இருந்து கலகெடிஹேனவிற்கு செல்லவே 2 மணித்தியாலம் பிடித்தது அவனுடனான அவளுக்கு முதல் நீண்ட பயணம் அது..
போகும் வழியில் எங்கேயாவது நிறுத்தி ஆறுதல்படுத்த நினைத்தான் அதற்கு அவசியம் இல்லை என்பது பைக் பயணித்திலே அவன் விளங்கி கொண்டான்..
நீண்ட தூர பயணித்திற்கு பின் ஹெல ஆடை தொழிற்சாலையை ஜெனனி கண்டுவுடன்..
அவன் முதுகில் ‘பட் ‘ அடி விழுந்ததும் சட்டென்று பிரேக் போட்டு அவன் பைக்கை நிறுத்தியதன் தாமதம், அவசரமாக பைக்கில் இருந்து அவன் தோளை பிடித்து இறங்கிக் கொண்டாள்..
அவனோ நடு முதுகை தேய்த்துக் கொண்டு தன் முன்னே நிற்பவளை “ எதுக்குடி அடிச்ச! ” முதுகை தேய்த்துக் கொண்டு அவன் கேட்டான்..
“ பைக் சத்தத்துல உன்ன கூப்ட்டா காதுல தான் விழுமா ? அதான் நடு முதுகுலயே அடிச்சி பைக்கை நிறுத்த வைச்சேன் இல்ல எண்டா இன்டைக்கு நீயே எனக்கு பூசை வாங்கி குடுத்துருப்ப..”
“ பூசையா ? ”
“ பூசை அதான் அடி வாங்கி குடுத்துருப்ப டா..இங்க வச்சி நிறுத்துனால நல்லா போச்சி இல்ல வீடு வரைக்கும் சார் கூட்டிட்டு போய் இருப்பீங்க..”
“ ஓ..சொறி ஜெனி நான் இத யோசிக்கவே இல்ல..சரி வீட்டுக்கு போக ஆட்டோ புடிச்சி தரட்டுமா? ” அவன் கேட்க..
“ நீ போ சன்ஜு நானே ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போய்க்குறேன் ” என்றாள்..
“ சரி அப்ப நான் போறேன் பாய்..எத பத்தியும் யோசிக்காத முடிஞ்சா மெசேஜ்ல கதைப்போம் இல்ல வேலைக்கு போனா கோல்ல கதைப்போம் சரியா..? ” அவன் சொன்னதும்,
“ சரி சன்ஜு பாய் அன்ட் தேங்க்ஸ் ” என்றாள்..அவனும் மெலிதாக புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்றான் சன்ஜீவ…
சன்ஜீவ சென்ற நேரத்தில் ஆட்டோவிற்காக நின்றுக் கொண்டிருந்த ஜெனனியை இராஜேந்திரன் கண்டுவிட்டார்..
சர்விஸில் போட்டிருந்த பைக்கை நிட்டம்புவில் இருந்து எடுத்துக் கொண்டு வரும் சமயம் அது அப்படியே வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வரும் வழியில் கடையில் இருந்து வாங்கி கொண்டே வந்தவர் ஜெனனி நிற்கும் இடத்தில் ஸ்கூட்டியை விட்டார்..
சாலையை பார்த்திருந்தவள் தந்தையை கண்டுவிட்டாள்..ஸ்கூட்டி அவள் அருகில் வந்து நின்றது..“ என்ன மா ஆட்டோ வரல்லையா ? ” அவர் வினவ..
“ ஆட்டோ வரல்ல ப்பா.. அதான் இவ்ளோ நேரமா ஆட்டோக்கு பார்த்துட்டு இருந்தேன் நீங்க வந்துடீங்க ப்பா.. ” என்றாள்..
“ பைக் சர்விஸ் பண்ணி எடுத்துட்டு வர வழில வீட்டுக்கு சமானும் வாங்கிட்டு வாற நேரம் உன்ன கண்ட நான்.. பக்கத்து வீட்டு சன்ஜீவ பொடியன் கூட கதைச்சிட்டு இருந்ததை பார்த்தேன்..” அவர் சொன்னதும்..
இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..‘ அய்யோ கடவுளே! ’ சிரமப்பட்டு பதட்டத்தை மறைத்து தந்தையிடம் பொய் உரைக்க வேண்டிய நிலை..“ ஆட்டோக்கு நின்னுட்டு இருந்தேனா? அதான் ஆட்டோ புடிச்சி தரவா எண்டு கேட்டார் நான் தான் வேணாம் எண்டு சொல்லி சன்ஜீவ போக சொல்லிட்டேன்..” அவள் மீது இருக்கும் தந்தையின் நம்பிக்கையும் உடைத்து அவரிடம் பொய்யையும் கூறி இருக்கிறாள்..
மனதில் சன்ஜீவ காதலிப்பதை குடும்பத்தினரிடம் மறைப்பது குற்ற உணர்வாக இருந்தது அவளுக்கு..உண்மை அவள் வீட்டில் உடைத்தால் என்றால் நிச்சயமாக பெரிய பிரளயமே வெடிக்கும் என்பதை அவள் அறிவாள்..
“ நல்ல பொடியன் அவன்..சரி பைக்ல வந்து ஏறு ” என்றதும் ஏறிக் கொண்டாள் ஜெனனி..
இருவரும் அறியவில்லை தங்களின் காதல் ஒரே ஒருவனால் இரு வீட்டினருக்கும் தெரிந்து பிரளயம் வெடிக்க போவதை..
தினேஷ் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக தன் மனைவி ஜெனுஷாவிடம் “ ஜெனு ” பிள்ளைகளுக்கு பள்ளி பாடத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த போது தினேஷ் அழைப்பது கேட்டதும் பிள்ளைகளிடம் “ ஹோம் வர்க் செய்ங்க ம்மா வாறன் ” அறையில் இருந்து வெளியே வந்த போது இரவு சாப்பிடுவதற்காக பானும் பிள்ளைகளுக்கு சிற்றூண்டி வகை அடங்கிய பையை மனைவியிடம் நீட்டினான் தினேஷ்..
“ ஜெனு வேலை விட்டு வாற வழில புள்ளைங்களுக்கு கேக் , சோட்டீஸ் வாங்க காஃபி ஷாப் போய் இருந்தேன்..அங்க டேபிள்ல ஒரு பொடியன் கூட பெட்ட ஒண்டு கதைச்சிட்டு இருந்ததை கண்டன் ஆனா அது ஜெனனியா எண்டு சந்தேகமா இருக்கு..” அவனின் சந்தேகத்தை மனைவியிடம் கூறினான்..
“ அது எப்படி நீங்க ஜெனனிய பார்த்ததா சொல்லுவீங்க.. அவளுக்கு நாலு மணிக்கு தான் லெக்சரே முடியுது அப்பவே வீட்டுக்கு பஸ் புடிச்சி போய் இருப்பாளே சும்மா யாரையும் பார்த்துட்டு வந்து என்ட தங்கச்சிய சந்தேகப்படாதீங்க தினேஷ்..” சற்று கோபமாக சொல்லிவிட்டு அவள் உள்ளே செல்ல..“ அக்காளும் ஆச்சும் தங்கச்சி ஆச்சும் ” தோளை குலுக்கி விட்டு “ ஜெனு என்ட டவல் எங்க வச்ச நீ ” துவாளையும் தேடி எடுத்து வந்து கணவனின் கையில் திணித்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள் அவள்…
சன்ஜீவ , ஜெனனி இருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை நினைத்து அன்றிரவு தூங்கா இரவாகிப் போனது..
மறுநாள் ஜெனனி அவர்கள் வீட்டுத் தெரு வழியாக வரும் போதே அனைத்து வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,
தெரு முழுவதும் இருளில் மூழ்கிவிட..ஜெனனி ஸ்கூட்டியின் மின்விளக்கின் வெளிச்சத்தில் வீடு வந்து சேர்ந்தாள் அவள்…
ஜெனனி வீட்டிற்கு வரவும், வசந்தா கேட்டை திறந்தார்.. ஸ்கூட்டி உள்ளே நுழைந்தது..
ஸ்கூட்டியை விட்டு இறங்கியவள் “ இந்தாங்க ம்மா..” அவர் கையில் பொலித்தீன் பையை கொடுத்தாள்..
அந்த பைக்குள் அவர் வீட்டிற்கு வாங்க சொல்லிய சில மசாலா பொருட்கள் இருந்தது..அவள் கொடுத்ததை அவர் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்..
ஹாலில் விளக்கு வெளிச்சத்தில் குஷனில் அமர்ந்திருந்தார் இராஜேந்திரன் , ஜெனனி உள்ளே நுழைந்ததும் “ இன்டைக்கு வேலை அதிகமா ஜெனனி நேரம் செல்ல வந்துருக்க ” என்று அவர் கேட்க..
“ ஆமா ப்பா, இன்னைக்கு யுனிவர்சிட்டில நிறைய வேலை..இல்ல எண்டா ஆறு மணிக்கே வீட்டுல நின்டு இருப்பன்..” பேசிக் கொண்டு பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்து கொண்டாள்..
அவள் கதிரையில் அமர்ந்து கொண்டதும் அவளை சுற்றி நுளம்பு கடிக்க ஆரம்பித்தது..“ இந்த நுளம்பு ” அவள் கையால் அடி வாங்கி நசுங்கி போனது அந்த அப்பாவி பறக்கும் ஜீவன்கள்..
“ நுளம்பு பெட்டால அடியேன் டி..” சமயலறையில் இருந்து வசந்தா குரல் கொடுக்க..
“ நானே வேலை போய்ட்டு வந்து டயர்ட்ல இருக்கேன் நீங்க வேற ம்மா..” சிணுங்களாக சொன்னவள்..“ நான் போய் குளிச்சிட்டு வாறன் ப்பா… கரண்ட் வந்தா ஃபோனை சார்ஜ்ல போட்டுருங்க..” என்று அவர் கையில் ஃபோனை கொடுக்க, வாங்கி கொண்டார்..
“ அம்மாடி ஜெனனி இன்டைக்கு கரண்ட் வராதாம்..நடு சாமத்துல தான் கரண்ட் வரும் எண்டு சொல்றாங்க..” கூடுதல் தகவலாக..
“ அப்ப விடுங்க ப்பா.. கரண்ட் வந்தா பார்ப்பம் ” என்றவள் அறைக்கு சென்று இரவு உடையை மற்றும், துவாளை எடுத்துக் கொண்டு சமயலறைக்கு சென்ற வேளையில் “ காஃபி ஊத்தி இருக்கேன் டி அத குடிச்சிட்டு குளிக்க போ..” அவள் கையில் கப்பை திணித்து விட்டு ஹாலிற்கு சென்றார்…
உடையை குளியலறையில் வைத்து வீட்டு சமயலறை வாசலில் அமர்ந்து காஃபி குடிக்க துவங்கினாள்..
“ இன்டைக்கு பார்த்து நல்லா வேலை வாங்கிட்டாங்க..நித்திரை வேற வருது , கரண்ட் இல்லாம நித்திரையும் கொள்ள முடியாது ” என்று புலம்பிக் கொண்டே காஃபியை குடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் அவள் முன்பு ஓர் உருவம் குத்த வைத்து அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு இருக்க..
காஃபி கோப்பையில் இருந்து கண்ணை எடுத்து இமை உயர்த்தி பார்த்தபோது இதயம் துடிப்பதே நின்றுவிட்டு இருந்தது…“ ஆ..ஆ..ஆ..ஆ பேய் அய்யோ செத்த ஆவி ” பயத்தில் அவள் கையை காலை உதைத்து அலற..
அவளின் அலறல் சத்தம் தான் வெளியே கேட்கவில்லையே..கரடு முரடான கரம் அவள் வாயினை பொத்தி இருந்தது..அந்த கரத்திற்கு சொந்த காரனோ முகத்தில் ஜோக்கர் முகமூடியை அணிந்திருந்ததை கழட்டவுமே, அவளுக்கு அப்போ தான் மூச்சே வந்தது..
“ நீங்க எல்லாம் மனுஷனா ? இப்படி தான் பயமுறுத்துவீங்களா ?கொஞ்ச நேரத்துல என் மூச்சே நின்னுட்டு தெரியுமா ? ” அவள் கையில் இருந்து அடிகளை வாங்கிக் கொண்டான் சன்ஜீவ…
அவன் சிரித்தபடி அவள் வாயில் இருந்து கரத்தை எடுத்தான்..“ சொறி நல்லா பயந்துட்டீயா? யாராவது பாத்துருவாங்களோ எண்டு தான் ஃபேஸ் மாஸ்க் போட்டு தாப்பயால ( காம்பவுண்ட்) சுவர் ஏறி குதிச்சி இங்க வந்தேன் ஆனா நீ இப்படி பயப்புடுவ எண்டு நினைக்கல்ல..” என்றான் அவன்..
“ கரண்ட் இல்லாத நேரத்துல இங்க என்ன செய்றீங்க? ” அவள் வினவ..“ அதுவா, உன்னட்ட இருந்து ஒண்டு எடுக்கணும் ” என்றான்..“ என்கிட்ட இருந்து எடுக்க என்ன இருக்கு ..” சத்தமில்லாமல் ரகசிய குரலிலே இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்..
ஜெனனி சமையல் கட்டின் பக்கம் யாரேனும் வருகிறார்களா என்று திரும்பியும் பார்த்துக் கொண்டாள்..
“ வா நான் சொல்றன் ” அவள் கையை பிடித்து எழ செய்து சமயலறையோடு இருக்கும் வெளி பக்கத்தில் தண்ணீர் மோட்டார் பொருத்தி இருக்கும் காம்பாவுண்ட் சுவற்றோடு இருக்கும் இடுக்கு வழியே அவளை நிறுத்தி வைத்தான்..“ இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க..” இருளில் இருக்கும் அவ்விடம் நிலவின் வெளிச்சத்தில் இருவரின் முகமும் தெளிவாக தெரிந்தது..
“ உன்னட்ட இருக்குறதை எடுக்க தான் ” கண்ணை சிமிட்ட, இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..“ நீ இவ்ளோ டியூப் லைட்டா இருக்க வேணாம்டி ” என்றவன் சுவற்றில் சாய்த்து , அவளை சிந்திக்க விடாது தாடையை பற்றி இதழில் முத்தமிட்டு அவளை அவன் வசமாக்கி இருந்தான்..
சமயலறை பக்கம் வந்த வசந்தா கதவு வாசலில் காஃபி கோப்பை இருந்ததை கண்டவர் “ ஜெனனி ” அழைத்து பார்த்தவர் பதில் இல்லாமல் போக, காஃபி கோப்பையை கையில் எடுத்து குளியலறை பக்கம் பார்த்தார் குழாயில் வடியும் நீர் சத்தம் கேட்டது..
“இந்த புள்ள இவ்ளோ நேரமாவா குளிக்குது ” வசந்தாவின் பேச்சு குரல் ஜெனனியின் செவியில் கேட்டதும்…அவனை தன்னிடமிருந்து பிரித்து “ சன்ஜீவ் அம்மா ” சத்தமில்லாமல் உதட்டை அசைக்க..
அவன் பார்வை அவள் இதழில் மையல் கொண்டு இருந்தது..“ யோவ் சன்ஜீவ ” அவன் அணிந்த இருந்த ஷர்ட்டை பிடித்து உலுக்க..“ யோவ் அப்படி எண்டா ” மையல் பார்வையை விளக்காது அவளிடம் கேட்க..“ இதுகூட தெரியாதா? தமிழ் படம் பாக்குறீங்க தானே ” அவன் மண்டையிலே ஒரு கொட்டு விழுந்தது..
“ ப்ச் , மாமா ரொமேன்ஸ் மூட்ல இருக்கேன் இடைல கேள்வி கேட்டு டிஸ்டர்ப் பண்ணாத ஜெனி ” என்றவன் அவள் இதழ் நோக்கி குனிந்தவனின் வாயிலே அடித்தாள்..“ ஜெனி ” அதட்டினான்..“ டேய் அறிவு கெட்டவனே அமைதியா இரு டா..ரொமேன்ஸ் மூட்டாம் ரொமேன்ஸ் மூட் அம்மா கூப்பிடுறாங்க நாங்க இந்த நிலைமைல நிக்கிறதை கண்ட அவ்ளோ தான் சன்ஜு விளங்கிக்கோ ” அவள் விழிகளில் அத்தனை பயம் தெரிந்தது..
அதனை கண்டு கொண்டவன் அமைதியாகிவிட்டான்..
“ ஜெனனி குளிக்க போனவ நீ உடுத்த சட்டை எல்லாம் எடுத்துட்டு போனீயா? ” குளியலறை வெளியே நின்று வசந்தா சத்தமாக கேட்டார்..
“ இப்ப நான் என்ன பண்ணுவேன்..” வெளிறி போன முகத்துடன் அவனிடமே கேட்டு வைக்க.. இடையில் கையை நுழைத்து அவளை நோக்கி இழுத்தவன் இதழிலே ஆழமாக முத்தமிட்டு விலகியவன் “ நீ போ ஜெனனி கொடில உன்ட டிரஸ் காய்துல அதுல ஏதாவது எடுத்துட்டு போ..பயப்புடாத நான் இருக்கேன்..” அவள் கன்னத்தை தட்டி சொன்னான்..
“ சரி சன்ஜு ” அவன் சொன்னது போல் அணிவதற்கு அங்கு ஏற்கனவே காயபோட்டிருந்த ஆடையை எடுத்து , ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு “ என்னதுக்கு ம்மா சும்மா கத்துறீங்க உடுத்தி குளிக்க பாவாடையும், உடுத்த சட்டையும் எடுக்க போனேன் ” என்றாள் அவள்..
“ அதுக்கு ஏன்டி டெப்பை திறந்து விட்டு போற பேசன்ல தண்ணி நிறைஞ்சி வடியுது.. நான் வேற நீ குளிக்கிற எண்டு நினைச்சி கத்திட்டு இருக்கேன்..போய் கெதியா குளிச்சிட்டு வா இரவு சாப்பாடு செய்யணும் ” என்று அவர் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்..
“ அப்பாடா ” அவள் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமடைந்தாள்..
வசந்தாவிடம் இன்று தப்பித்துக் கொண்டாள் இனி வரும் நாட்களில் எதற்கெல்லாம் முகம் கொடுக்க நேரடுமோ?
ஜெனனி குளிக்க சென்றதும்..சன்ஜீவ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி அவன் வீட்டுக்கு குதித்திறங்கி அவன் வீட்டிற்குள் சென்றான்…
தொடரும்….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1