Loading

அத்தியாயம் 15

 

 

 

போதைப்பொருள் விற்பவர்களும் , அதனை கை மாற்று செய்வபர்களும், போதைப்பொருளை பணம் கொடுத்து வாங்கி அதில் அடிமையானவர்களையும் ஒவ்வொரு வாரமும் அவர்களை பிடித்து ஜெயிலில் போடுவதுமாக அவனின் டியூட்டி நடந்து கொண்டு இருந்தது..

 

இவையெல்லாம் ஜெனனியின் காதில் தகவலாக வந்து சேரும், அவன் அவனின் காக்கி உடைக்கு மரியாதை செய்கிறானோ இல்லையே டியூட்டியில் இறங்கிய நாளில் இருந்து அவளை கண்டு கொண்டதாக தெரியவில்லை, வேலையில் மூழ்கியவன் அவளை பற்றி எண்ணாது விட்டிருந்தான் சன்ஜீவ…

 

அதே சமயம் ஊரில் அவனை பற்றி பேச்சுக்களே அதிகமாய் இருக்கும்..இதில் அவளின் தந்தை இராஜேந்திரன் வாயில் சன்ஜீவ பற்றி புகழை பாடிக் கொண்டே இருப்பார்..இவை எல்லாம் அவள் காதில் வந்து விழுந்து எரிச்சலை கிளப்புவது உண்டு..

 

செவிடன் காதில் சங்கு ஊதுவது போலத்தான் இருக்கும் அவள் காதில் விழுந்ததை கண்டு கொள்ளவே மாட்டாள் ஆனால் அவனை சந்தித்து நான்கைந்து கேள்விகளை கேட்க வேண்டும் என்ற ஆத்திரம் உள்ளத்தில் கொதிக்க வைத்திருந்தது..

 

அதனைத் தொடர்ந்து அவளின் திருமணம், வரன் பற்றி பேச்சு பெற்றவர்களிடம் இருந்து வெளியே வர..

 

சற்று சிந்திக்க ஆரம்பித்தாள் அவள் “ அம்மா , அப்பா கிட்ட கல்யாணம் பேச சொல்லலாம்..இது எப்படியும் சன்ஜு காதுக்கு போய் தானே ஆகணும் அப்ப பார்ப்போமே! ” மனதில் குதூகலித்துக் கொண்டாள் ஜெனனி..

 

இரவு எல்லோரும் வீட்டில் இருந்த சமயம் இராஜதந்திரன் குரலை செருமி கதைக்க ஆரம்பமானார்..

 

“ ஜெனனி ” அவளை அழைக்கவும்..

 

மடிக்கணினியில் அவளுக்கு ஏற்ற வேலையை தேடிக் கொண்டு இருந்ததில் இராஜேந்திரன் அழைத்ததும் நிமிர்ந்து பார்த்து “ என்ன ப்பா? ” அவளும் கேட்க..

 

“ இப்ப உனக்கு 25 வயசு ஆகுது அதுனால நானும் அம்மாவும் உனக்கு வரன் பார்க்கலாம் எண்டு முடிவு எடுத்து இருக்கம் நீ என்னமா சொல்லுற? சம்மதமா? ” அவர் கேட்டதும் ,

 

வசந்தா “ எவ்ளோ நாளைக்கு டி நாங்க இந்த உலகத்துல இருப்பம் எண்டு தெரியாது உனக்கு எண்டு ஒருத்தர் வந்துட்டா எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..உன்னை ஒருத்தர் கைல பிடிச்ச குடுத்த எண்டு..பிறகு உன் பிள்ளைகளை பார்க்கணும் எண்டு எங்களுக்கும் ஆசை இருக்கே டி..” அவரின் ஏக்கம் புரியத்தான் செய்தது..

 

எந்த பெற்றவர்களும் எதிர்பார்க்கும் தருணம் அவர்களுடைய பிள்ளையை ஒருவனின் கையில் பிடித்து கொடுத்து , சந்தோஷமாக வாழ்வதை பார்க்க தானே அதுவே ஜெனனியின் பெற்றோர்களுக்கும் மனதில் இருந்தது..

 

பெரு மூச்சுடன் “ சரி ப்பா, ம்மா உங்க விருப்படி கல்யாணம் பேசுங்க, எப்படியும் ஜாதகம் பார்க்க போறதால வரன் பாக்குறது கொஞ்சம் பின்னால போகத்தான் செய்யும்..அது சரி கல்யாணம் யாருகிட்ட சொல்லி பேசுப்போறீங்க ம்மா? ” அவள் கேட்க..

 

” வேற யாரு இருக்கு உன் அத்தானும் அக்காவும் தான் உன்ன தூர கல்யாணம் கட்டி அனுப்புறதுல எனக்கு விருப்பம் இல்ல , கொழும்புலயே வரன் பார்க்க சொல்லிடலாம்..” அவர் கூறியதும் “ சரி ம்மா ” அதன் பின் எந்த வித பேச்சும் இல்லை.. இராஜேந்திரன் மகளின் திருமண விடயத்தில் தலையிட விரும்பவில்லை எல்லாவற்றையும் மனைவி வசந்தாவிடம் ஒப்படைத்து விட்டு அவர் ஒதுங்கி கொண்டார்…

 

சன்ஜீவனின் மீது காதலை வைத்துக் கொண்டு பெற்றோர்களை ஏமாத்துகிறோமோ என்ற கவலையும் அவள் மனதினை அரித்துக் கொண்டே இருந்தது..அவன் மேல் வைத்த காதலை பெற்றவர்களிடம் கூறவும் பயமாக இருந்தது.. இராஜேந்திரன் அமைதியாக பேசுபவராக இருந்தாலும் சட்டென்று கோபக்காரரும் கூட சில நேரத்தில் வசந்தாவிடம் கோபத்தில் கத்துவதை கண்டு கூட கண்டவள் தான் ஆனால் காதல் என்ற விடயத்தில் எந்த மாதிரியான குணத்தை காண்பிப்பாரோ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது அதனை சொல்லும் அளவிற்கு அவளிடம் தைரியமும் இல்லை..

 

பெரு மூச்சுடன் மடிக்கணினியை பார்க்க ஆரம்பித்து விட்டாள்…

 

இதே சமயம் சன்ஜீவ டியூட்டி முடிந்து வீட்டிற்கு வரவே பத்து மணி ஆகி இருக்க.. இரவில் நேரம் செல்ல வீடு வந்து சேர்பவனை அவனுக்காக காத்துக் கொண்டே இருப்பார் ருவணி..அவனோ அவரிடம் சொன்னது “ எனக்காக உங்க தூக்கத்தை கெடுத்து முழிச்சிட்டு இருக்க வேணாம் ம்மா, எனக்கான சாப்பாட்டை எடுத்து வச்சிருங்க நானே சாப்டுக்குறேன் ” கண்டிப்புடன் மகன் சொன்னதும் அதுவே அவருக்கு சரியாகப்பட்டது..

 

அதனால் அவனுக்கான உணவை உணவு மேசையில் எடுத்து வைத்துவிட்டு உறங்க சென்றுவிடுவார்..

 

கூடத்தில் மற்றும் மின்விளக்கு எரிந்து கொண்டு இருந்தது..அத்தனை களைப்பாக இருப்பதை உணர்ந்த அவன் , உணவு மேசையில் இருந்த உணவுத்தட்டை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்று , அழுப்பு தீர குளித்துவிட்டு, உணவை உண்டு ஆரம்பித்தான்..

 

அப்போது தான் ஜெனனியை நினைவு வந்ததும் ஃபோனை பார்த்தான் அவளிடத்தில் இருந்து எந்த குறுஞ் செய்தியும் வந்து இருக்கவில்லை..உணவை உண்டு கொண்டே வாட்சப் பக்கம் பார்த்தான்..அவன் வாட்சப்பை திறக்கும் முன் ஆன்லைன் வந்து விட்டு சென்றிருந்தாள்..

 

“ கால் பண்ணி பார்ப்பம் ” அவளுக்கு அழைப்பு விடுக்க..கட்டிலில் படுத்திருந்தவள் அவன் பெயர் ஃபோன் திரையில் ஒளிர்வதை கண்டுவிட்டாள் அவள்..“ இன்னைக்கு என்ன செய்ய போறேன் எண்டு பாருங்க ” சொன்னவள் ஃபோனை சைலண்ட் மோட்டில் போட்டு விட்டு கண்ணை மூடி படுத்துவிட்டாள் பெண்ணவள்..

 

இது எதுவும் தெரியாத அவன் அவளுக்கு அழைத்து கெண்டே இருக்க..அவள் அழைப்பை ஏற்காது போனதும் சினம் துளிர்த்து விட்டது அவனுக்கு.. மேசையிலே ஓங்கி அடித்தவன் தட்டை எடுத்து கொண்டு கீழே சென்று விட்டான்..

 

அவன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியதாக இருந்ததால் அவளிடம் பேசுவதற்கு நேரமும் கிடைக்கவில்லை..

 

இரவில் அவன் அழைத்தால் அழைப்பை ஏற்பாள் என்று நினைத்தவனுக்கு முகம் விழுந்துவிட்டது…

 

கண்ணை திறந்து ஃபோனை எட்டிப் பார்த்தாள் சன்ஜீவனிடம் எத்தனையோ மிஸ்ட் கால்கள் வரிசையாக நின்றது..அவனை நினைத்து அவள் கோபத்தில் முறுக்கி கொண்டு இருக்க , அவள் அழைப்பை ஏற்காதது மனதில் ஏதோ அழுத்த ஆரம்பித்து இருந்தது..

 

கட்டிலில் சாய்ந்தவாறு உறங்கியும் போனான் அவன்.‌..

 

அடுத்த நாள் வேலைக்கு கிளம்புவதற்காக கூடத்தில் இருக்கையில் அமர்ந்து காக்கி உடை அணிந்து மிடுக்குடன் இருந்தவன் காலில் ஷூ அணிந்து அதற்கு லேஸ் கட்டிக் கொண்டு இருக்கும் போது ருவணி அவனுக்கா காலை உணவை உணவு மேசையில் எடுத்து வைத்து கொண்டு “ சன்ஜீவ உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? எங்க ஜெனனிக்கு வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்களாம் ” அவர் சந்தோஷத்துடன் மகனிடம் சொல்ல..

 

லேஸ் கட்டிக் கொண்டு இருந்த கைகள் அப்படியே அதன் வேலையை செய்யாது நின்றது..தலை உயர்த்தி தாயை நோக்கியவன் “ அவளோட விருப்பம் கேட்டு தான் கல்யாணம் பேசுறாங்களா? ” என்று அவன் கேட்டதும், அவரோ “ ஆமா , ஜெனனி தான் அவளுக்கு கல்யாணம் பேச சொல்லி அவங்க அம்மா , அப்பா கிட்ட சொல்லி இருக்கா, ஜெனனி அக்கா ஜெனுஷா கிட்ட வரன் பார்க்க சொல்லி இருக்காங்க.. எனக்கு என்னவோ அவளுக்கு இந்த வருஷமே கல்யாணம் நடந்துவரும் போல , எனக்கே சந்தோஷமா இருக்கு தமிழ் கல்யாணம் எப்படி இருக்கு எண்டு பார்க்க…” அவர் பாட்டிற்கே பேசிக் கொண்டே செல்ல..

 

இவனுக்கு ஜெனனியின் வரன் பார்க்க போவதை தாய் சொல்வதை கேட்டவனுக்கு காதில் ஈயத்தை காய்ச்சியது போல் இருந்தது.. அவனுக்கு அத்தனை உவப்பாக இருக்கவில்லை அவள் மீதே ஆத்திரம் அதிகரிக்க ஆரம்பித்தது…

 

ஷூ லேஸ் ஐ கட்டி முடித்தவன், உணவு மேசையில் இருக்கையில் அமர்ந்தவனுக்கு ருவணி உணவை பரிமாறினார் ஆனால் அவனால் உணவை வாயில் வைத்தவனுக்கு தொண்டையில் இறங்க மறத்தது.. கடினப்பட்டு வயிற்றை நிரப்பியவன் தாயிடம் கூறிவிட்டு வேலைக்கு புறப்பட்டு விட்டான் சன்ஜீவ..

 

அதே சமயத்தில் ஜெனனிக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் லெக்சர் வேலை அன்று அவளுக்கு கிடைத்ததும் அத்தனை சந்தேஷமாக இருந்தாள் அவள்..

 

அவள் வேலைக்கு செல்லும் நாளிலே சன்ஜீவனிடம் அதுவும் பிரதான சாலையில் மாட்டிக் கொள்வாள் என்று நினைத்தும் பார்த்து இருக்கமாட்டாள் அவள்..

 

 

 

 

தொடரும்…

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்