Loading

அத்தியாயம் 14

 

 

 

அப்படியே நாட்கள் நகர ஜெனனி பல்கலைக்கழக படிப்பை முடித்து கொழும்பில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்..

 

இருவரும் ஃபோனில் பேசாவிடினும் குறுஞ்செய்தியிலே பேசிக் கொள்வார்கள்…ஜெனனி காலையில் சன்ஜீவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் இரவில் தான் அவள் அனுப்பிய குறுஞ்செய்திக்கான பதிலே வரும்..இதுவே அவர்களுக்கு வாடிக்கையாகிப் போக..

 

புதன்கிழமை அன்று ஜெனனி சமயலறையில் சமைத்துக் கொண்டு இருந்தாள்.. பல்கலைக்கழக படிப்பு முடிந்தாயிற்று இனி அவள் வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டும்.. அவளின் படிப்புக்கு பொருத்தமான வேலையினை தேடி கொண்டு இருக்கிறாள் பெண்ணவள் ஆனால் அவளின் படிப்புக்கு ஏற்றது போல் வேலை தான் அமையவில்லை..

 

வசந்தா , ஜெனனி இருவரும் சமயலறையில் வேலையை செய்து கொண்டு இருக்க..“ வசந்தா ” ருவணி அவரை அழைத்தார்..ருவணி அழைத்தது ஜெனனியின் செவியில் கேட்கவும் “ ம்மா ருவணி ஆன்டி கூப்பிடுறாங்க..” என்றவள் கையால் துருவி எடுத்த தேங்காய் பூவில் சற்று தண்ணீரை ஊற்றி பிழிந்து கொண்டு இருந்தாள்…

 

“ மீன் கறிய வச்சிரு , நான் என்ன எண்டு போய் கேட்டுட்டு வாறன்..” என்றார்..“ ம்ம்..சரி ம்மா ” அவர் வெளியே சென்றுவிட..

 

இவள் குழம்பிற்கு தேவையான தேங்காய் பாலை எடுத்துக் கொண்டு இருந்தாள்..

 

அதே சமயம் அவள் வீட்டின் தண்ணீர் மோட்டார் பூட்டி இருக்கும் காம்பவுண்ட் சுவர் வழியாக யாரோ கீழே குதித்து, ஓடுவது போல் கேட்க.. அவளுக்கு கேட்க , தேங்காய் பால் பிழிந்த கைகள் இடையில் நிற்க..அவளின் உள்ளமோ பயத்தில் பதற ஆரம்பித்தது..

 

அதுவும் பகல் நேரத்தில் திருடன் வந்து விட்டானோ என்ற பயம் அவளுள் எழ..

 

அவளின் வீட்டை சுற்றி ஷூ காலடி சத்தமே கேட்க..அவசரமாக வெளியே வந்து ஓடி வந்து பார்த்தவளுக்கு கை நடுங்க ஆரம்பித்ததோடு , நெற்றியில் இருந்து வழிந்தது வியர்வை துளிகள்..

 

அதனை துடைத்து விட எண்ணமும் இல்லாது..சிலையாக சமைந்து நின்று விட்டாள் பெண்ணவள்.. ஏனென்றால் நான்கடி தூரத்தில் ஒருவன் காக்கி உடையில், கருப்பு நிற கூலர் கண்ணாடி அணிந்து துப்பாக்கியை வைத்து கொண்டு அல்லவா நின்றிருந்தான்..

 

அதனை கண்ட ஜெனனியின் மூளையோ வேலை செய்வது நிறுத்தி இருக்க..அவ் இடத்தை விட்டு அவள் அகன்றால் இல்லை அவள்.. அவளின் கைகள் மாத்திரம் நடுங்கி கொண்டே இருந்தது..

 

அங்கு நின்றிருந்தவனின் தோரணை துப்பாக்கியால் அவளை குறி பார்த்து சுட்டு விடுவது போல்  கையில் பிடித்திருந்தான் அந்த காக்கி உடைகாரன்..

 

அவனின் கையில் இருந்த துப்பாக்கியை கண்டு பெண்ணவள் பயந்து விட்டாள் என்று நினைத்து ஷர்ட் பின்னால் சொறிகி விட்டு..

 

அவளிடம் வந்து நின்றவன் சுற்றி பார்வை ஸ்கேன் போல் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவன்..

 

அவளிடம் நெருங்கி முகத்தின் அருகில் வந்து கூலர் கண்ணாடியால் மறைத்திருந்த அவன் விழிகள் அவள் நின்றிருந்த வித்ததில் பார்த்து சிரித்தது..

 

அது அவளுக்கு தெரியாது..“ மெனிகேட்ட மொனவத வுனே..( மாணிக்கத்துக்கு என்ன ஆச்சி ) ” குறும்பு புன்னகையுடன் அவன் அவள் முகத்தின் அருகே கையசைத்து கேட்க..அவளோ பேந்த பேந்த அவனை கண்டு விழித்தாள்…

 

அவனின் குரல் சன்ஜீவ என்பதை உறுதிப்டுத்தும் விதமாக அவளின் மூளையை தாக்கி இருக்க.. அக்கணம் அவளுக்கு விழிப்பு தட்டி இருந்தது..பிறகு அவனை உறுத்து விழித்த பெண்ணவளோ சற்று நேரத்திற்கு முன்னர் அவன் மீது இருந்த பயம் எங்கோ போய்விட தன்னவன் என்ற உரிமை அங்கு நிலைநாட்டி இருந்தது..

 

விழிகளை சுழல விட்டு கீழே ஏதேனும் அவனை போட்டு அடிப்பதற்கு தேட..அவள் கண்களில் விறகுகள் அடுக்கி வைத்திருக்கும் இடத்தில் உருளையான கட்டை இருப்பதை கண்டவள் “ இன்டைக்கு என்ன பண்ண போறேன் எண்டு பாருங்க ” என்று முனு முனுத்தவள் அவளின் நோக்கம் புரிந்த அவனோ இவளிடம் வந்து மாடிக்கொண்டோமே நினைத்தவன்.. அங்கிருந்து அகன்று ஓட நினைக்கும் போதே புற முதுகில் சுளீர் என்று அவனுக்கு வலித்தது..

 

அடித்திருந்தாள் ஜெனனி..அவள் அடிப்பாள் என்று அவன் நினைக்கவும் இல்லை..அடுத்த கணம் பின்னால் திரும்பி அவள் இடை வளைத்து பிடித்து தன்னோடு அணைத்து கொண்டவன்..அவள் கையில் இருந்த கட்டை அவள் கழுத்தில் கத்தியை அழுத்துவது போல் அழுத்தி பிடித்து இருந்தான்..“ கோழி என்கிட்ட சிக்கிருச்சி… ஆனாலும் உன் தைரியத்தை பாராட்டியே ஆகணும் ஜெனி போலீஸ் காரனையே அடிச்சிட்டல்ல..நீ இவ்ளோ தைரியசாலியா இல்லாம இருந்துக்கலாம் ஜெனி மா..நானே என் கடமைய செய்ய வந்தா சும்மா இருந்தவனை சுரண்டி விட்டுடீயே மெனிக்கே..” அவள் செவிகளில் அவன் உதடுகள் உரச கூறிட..

 

“ அதென்ன மெனிக்கே ” என்று அவள் கேட்க..“ இவ்ளோ பேசுனேன் இதுல முக்கியமான பாயிண்ட் மட்டும் தேடி விளக்கம் கேக்குற பார்த்தீயா நீ அங்க இருக்குற ஜெனி..இப்ப நீ கேட்டதுக்கு விளக்கம் என்னால சொல்ல முடியாது இங்க வந்ததுக்கான வேலைய முடிக்க வேண்டி இருக்கு..” என்றவன் அவள் கன்னத்தில் சற்று குனிந்து முத்தமிட்டவன் ” பாய் ஜெனி..” அவளை விட்டு விட்டு அவன் சென்று மறைந்தான்..

 

“ ஐஞ்சி வருஷம் எண்டு சொல்லி எவ்ளோ பெரிய பொய்ய என்னட்ட சொல்லி இருக்கார் இதுல போலீஸ் எண்டு உண்மை சொல்லாம அன்டைக்கு கண்ண கட்டி வித்தை காமிச்சு இருக்கானே இவனை சும்மா விட கூடாது பிறகு பிடிச்சுக்குறேன்..” கொலைவெறியில் அவள் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் ஜெனனி…

 

அதே சமயம் அவன் வீட்டின் தெருவில் சற்று தூரத்தில் இருந்த மூங்கில் காடு அப் பக்கமாக அவன் தேடி வந்தவன் ஓடி கொண்டு இருக்க அவனை கண்டவன் மற்றொரு வழியாக அவனை பிடிப்பதற்காக ஓடினான் சன்ஜீவ…

 

சன்ஜீவ மற்றும் அவனை பிடிக்க வரவில்லையே அவனுடன் வந்த மற்ற இரு காவல் காரர்களும் துரத்தி வந்தவனை பிடிப்பதற்காக மற்றைய வழியால் செல்ல..

 

மூங்கில் காட்டு வழியாக ஓடியவன் அவன் விழிகள் கனிவாக இருக்கவில்லை..வேலை என்ற வந்துவிட்டால் அவளிடத்தில் மட்டுமே  கனிவு , குறும்பு, காதல் மட்டுமே இருக்கும்..

 

காவல்துறையில் வேலை செய்வது என்றால் இறுக்கமாகவும் தீவிரமாகவும் இருக்கும் அவனின் முக பாவனை அப்படித்தான் தற்போது இருக்க..

 

அவனின் கையில் அகப்படாமல் ஓடுபவனை அங்கிருந்து காய்ந்து உக்கிப்போன மரக்கட்டை எடுத்து அவனை நோக்கி வீசி இருந்தான்..“ பிளடி இடியட்..” என்றவன் அவன் பொத்தென்று கீழே விழுந்ததும் விரைவாக அவனின் ஷர்ட் காலரை பற்றி கன்னத்திலே ‘ பளார் ’ என சத்தமாக அறைத்திருந்தான் அவன்..

 

“ எங்கடா கன்ஜா எல்லாம் ஒழிச்சி வச்சி இருக்க.. யாருக்கெல்லாம் டா கை மாத்து செய்த..சொல்லு ” கேட்டு கேட்டே கன்னத்தில் மாறி மாறி அறைய அவனோ வலியில் அலற ஆரம்பித்தான்…

 

மற்றைய இரு காவலாளிகளும் வந்து விட இன்ஸ்பெக்டர் சந்தூன் “ சார் இவனே ஸ்டேஷன்ல கொண்டு போய் விசாரிக்கலாமே ” அவன் கூற..“ என்னதுக்கு இவனோட குடும்பம் ஸ்டேஷன் தேடி வருவாங்க, பிறகு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி லஞ்சம் கொடுத்து கூட்டிட்டு போகவா ஹாங்..” சீறினான் அவன்..“ சார்..” என்றான்..“ ஷ்..நானே இவனை பாத்துக்குறேன் ” என்றவன் “ சொல்லுடா எங்க வைச்சி இருக்க இன்னும் எத்தனை பேருடா கூட்டு சேர்ந்து இருக்கீங்க..” அவன் முகத்தில் குத்துவிட வலியில் அலறியவன் “ சொல்லிடுறேன் சார் ”என்றவன் அனைத்தையும் அவனிடம் கூறி முடிக்க..

 

“ இவன் சொன்னது போல அவன் வீட்டுல போய் தேடிட்டு..பக்கத்து வீட்டுல இருக்குற வீட்டையும் விட்டு வைக்காதீங்க க்விக்கா..” அவர்களுக்கு கட்டளை இட..உடனே அவன் கூறியதை செய்தனர்..

 

அடிவாங்கியவனை கையில் விலங்கை மாட்டி ஜீப் இருக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றான் அவன்…

 

அவனின் வீட்டிற்கு சென்ற காவலர்கள் இருவரும் வீட்டில் இருப்பவர்களை துப்பாக்கியை காண்பித்து அவர்களை அமைதியடையச் செய்தவன் வீடு முழுவதும் தேடியதன் பலனாக அவர்கள் கையில் போதைப்பொருட்கள் கையில் அகப்பட்டு இருந்தது..

 

பக்கத்து வீட்டையும் அவர்கள் பரிசோதித்தலில் ஐஸ் வகை போதைப்பொருள் காவல் அதிகாரிகளுக்கு கிடைத்த போது இன்ஸ்பெக்டர் சந்தூன் இது புதிதெல்லாம் இல்லை..பழக்கப்பட்டது ஒன்று தான் பெரு மூச்சுடன் அவற்றை பொலித்தீன் பையில் கை உறை அணிந்த கைகளால் எடுத்து போட்டனர்..

 

அத்தோடு இரு ஆண்களையும் கைது செய்து அழைத்துச் சென்றவர்கள்.. ஜீப்பில் ஏறிக் கொள்ளவும் அங்கிருந்து புறப்பட்டு இருந்தது..

 

 

 

தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்