Loading

காதல் – 59

 

அஸ்வதி அவள் கடந்து வந்த கடினமான பாதையை தன் காதலனிடம் சொல்ல தைரியம் இல்லாமல் போதை தலைக்கு ஏறும் அளவிற்கு குடித்து விட்டு அவள் மனதில் அழுத்தி கொண்டிருந்த பாரத்தை அவனிடம் இறக்கி வைத்தாள்……

 

அவளை அவள் இஷ்டம் போல இருக்க சொல்லுபவனுக்கு இந்த சிறிய விஷயமெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அவன் காதலால் அவளுக்கு நிரூபித்து காட்டினான்…..

 

இருவரும் காதலாக இணைந்து கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் அவள் ஒரு ஆசிரியை என்றும் மாணவர்கள் காத்திருப்பார்கள் என்று அவளுக்கு நியாபகம் வர……

 

அய்யோ விஹான்…..

 

என்னடி ஏன் இப்படி பதறுற?இவ்வளோ நேரம் நல்லாத்தானே இருந்த?

 

அட போங்க ஸ்டூடண்ட்ஸ  நா ஶ்ரீநகர் சைன்ஸ் சென்ட்டர் அண்ட் பிளான்டரியம் கூட்டிட்டு போனும் , அய்யயோ மனி பத்து ஆக போகுதே என்று அவள் பதறி எழுந்தாள் அவளை பிடித்து இழுத்து தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டான்……

 

விஹான் என்ன விடுங்க நா கிளம்பனும், நீங்களும் கிளம்பனும் வாங்க என்று அவள் அவசரத்தில் உளறி கொண்டு இருந்தாள்……

 

அடியே இன்னைக்கு மதியத்துக்கு மேலேதான் நம்ம ஸ்டூடன்ஸ  சைன்ஸ் சென்ட்டர் கூட்டிட்டு போனும் என்று அவன் அவளை பார்த்து சிரித்தான்…..

 

அட ஆமால்ல என்று அவள் தலையில் அடித்து கொண்டாள்…….

 

கண்ணம்மா ……

 

சொல்லுங்க செல்லமே…..

 

நீ ஏன் நேத்து என்கிட்ட சொன்ன விஷயத்தை முன்னாலேயே சொல்லல?

 

விஹான் எனக்கு ரொம்ப பயம் ,எங்க நா இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லி நீங்க என்ன விட்டுட்டு போயிட்டீங்கன்னா என்ன பன்னன்னு என்னோட நெகடிவ் மூளை இப்படி தப்பு தப்பா யோசிக்க வச்சி என்ன இப்படி உங்ககிட்ட சொல்ல விடாம பண்ணிட்டு என்று அவள் அவனை பார்த்து பாவமாக கூற அவன் அவளை அப்படியே இறுக்கமாக  அனைத்து கொண்டான்…..

 

விஹான் என்ன மன்னிச்சிடுங்க என்று அவள் அவனை கட்டி அணைத்து கொண்டு அழுக ஆரம்பித்தாள்…..

 

அட இதுக்கெல்லாம் நீ என்கிட்ட மன்னிப்பு கேக்க கூடாது என்று அவன் அவளின் தலையை அவன் தலையை வைத்து மெல்லமாகவும் செல்லமாகவும் முட்டினான்…….

 

விஹான் நீங்க அன்னைக்கு சொன்னீங்கல்ல?

 

என்ன சொன்னேன்?

 

நா தப்பு பன்னா முத்தம் கொடுப்பேன்னு…..

 

ஆமா சொன்னேன் …..

 

இப்போ நா தப்பு பன்னிருக்கேன்ல, அதனால எனக்கு முத்தம் குடுங்க என்று அவள் கேட்க அவன் சிரித்து விட்டான்…..

 

நா நேத்தே உனக்கு பனிஷ்மென்ட் குடுத்துட்டேன் என்று அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்……

 

நேத்தா எப்ப?

 

உனக்கு எப்படி தங்கம் அதெல்லாம் நியாபகம் இருக்கும் ?நீதான் நேத்து ஃபுல் பாட்டில காலி பண்ணிட்டு ஃபுல் போதையில இருந்தியே……

 

ஆமா விஹான் நம்ம அந்த மலை பக்கத்துல இருக்குற ஸ்டோன் பெஞ்ச்ல தான உக்காந்து பேசிட்டு இருந்தோம் ?எப்படி நம்ம பங்களாவுக்கு வந்தோம்?

 

நீ எங்க வந்த நா உன்ன தூக்கிட்டு வந்தேன் ……

 

விஹான் நா நேத்து எதும் கலாட்டா பண்ணினேனா?

 

ஒன்றா இரண்டா

காரணம் நூறு கேட்டால்

சொல்வேனே நீ கேட்டால்

சொல்வேனே”..….

 

என்று அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே பாடினான்……

 

அட சொல்லுங்க நா என்ன பண்ணேன்?

 

நீ நேத்து ஃபுல்லா குடிச்சிட்டு உன்மை எல்லாம் சொல்லிட்டு ,அப்படியே அந்த மலைக்கு போகனும்ன்னு ஓடிட்ட நாந்தான் உன் பின்னாலயே ஓடி வந்து உன்ன புடிச்சி தூக்கிட்டு வந்தேன்,அப்புறம் உனக்கு நிலா வேனும்ன்னு ஒரே அடம் , உன்ன எப்படியோ சமாளிச்சி கூட்டிட்டு வந்தேன் எப்படி தெரியுமா?

 

எப்படி?

 

சையாரா படத்துல வர மாதிரி என்னோட டிஷர்ட் வச்சி உன்ன என்னோட சேத்து கட்டி கூட்டிட்டு வந்தேன் என்று அவன் நேற்று அவள் செய்த குறும்புகளை அவன் அவளிடம் சிரித்து கொண்டே கூறினான்…….

 

விஹான் ரொம்ப ரொம்ப சாரி நா உங்களை ரொம்ப தொல்லை பண்ணிருக்கேன்……

 

தொல்லை எல்லாம் ஒன்னும் இல்ல, இன்பேக்ட் எனக்கு அந்த குடிகார அஸ்வதியதான் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு …….

 

ஏதே குடிகார அஸ்வதியா?

 

ஆமாடி நேத்து என்ன நீ வாடா போடான்னு அழகா சொன்ன, அப்புறம் டேய் விஹான்னு எனக்கு இப்போ ஐஸ் கிரீம் பஜ்ஜி வேனும்ன்னு என்கிட்ட ஒரே சண்டை என்று அவன் அவளை பார்த்து மீண்டும் சிரித்தான்…….

 

அய்யோ உங்கள நா இப்படியா கூப்பிட்டேன் என்று அவள் தலைகானிக்கு அடியில் முகத்தை மூடி கொண்டாள்……..

 

விஹான் இனி நா என்னோட வாழ்க்கையில குடிக்கவே மாட்டேன் என்று அவள் அழுக ஆரம்பித்தாள்…..

 

அட என்னோட ரவுடி அஸ்வி குடிச்சாதானே வருவா என்று அவன் அவளை பார்த்து கண் அடித்தான்……

 

நா உங்கள இப்போ கூட வாடா போடான்னு சொல்லுவேன் , அதுக்கு நா குடிக்கனும்ன்னு அவசியம் இல்ல…..

 

ஓஹோ அப்படி , சரி எங்க என்ன வாடா போடான்னு கூப்பிடு பாப்போம்…..

 

அது , இப்போ நீங்கதான் என் பக்கத்துலதான இருக்கீங்க சோ, அப்படி கூப்பிட வேண்டிய அவசியம் இல்ல…..

 

அவள் அவ்வாறு கூறவும் அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்…….

 

கேடி கேடி என்று அவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்…..

 

சரி விஹான் எனக்கு தலை ரொம்ப வலிக்குது, என்ன செய்ய?

 

நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா நா உனக்கு லெமன் டீ போட்டு வைக்குறேன் …..

 

சரியென்று அவளும் ஃப்ரெஷ் ஆகி விட்டு வந்தாள் ……

 

விஹான்னும் ஃப்ரெஷ் ஆகி விட்டு காலை உணவுக்கு கந்தூர் பிரெட் மற்றும் நூன் சாய் செய்து வைத்திருந்தான்……

 

அஸ்வதி அவனை பின்னில் இருந்து கட்டி அணைத்து கொண்டாள்…..

 

விஹான் எனக்கு பசிக்குது……

 

என்னோட செல்ல இளவரசிக்கு காலை சாப்பாடு ரெடி என்று அவன் செய்து வைத்த உணவுகளை தன் காதலிக்கு ஊட்டி விட்டான்…….

 

பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து கிளம்பி மாணவர்கள் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்சிற்கு சென்றனர்…….

 

அஸ்வதி , விஹான் அவளுக்கு வாங்கி வைத்திருந்த புடவையை அணிந்து கொண்டு அவனை கட்டி அணைத்தபடி ஒன்றாக பைக்கில் வந்தனர் அதை அவளது மாணவர்கள் பார்த்து விட்டார்கள்……

 

அஸ்வதியை கை பிடித்து விஹான் அழைத்து வந்தான்……..

 

மேடம் , சார் நீங்க ரெண்டு பேரும் இப்படி மேட்ச்சிங் மேட்ச்சிங்கா அழகா டார்க் ப்ளூ கலர்ல டிரஸ் போட்டுட்டு வாரீங்க?         எங்க போயிருந்தீங்க மேடம்?                  நைட்டு ஃபுல்லா நீங்க ரூம்ல இல்லையா?

 

டேய் என்னடா இவ்வளவு கேள்வி கேக்குற? என்று அஸ்வதி அதட்டி கேட்கவும்……

 

சாரி சாரி மேடம் என்று விக்னேஷ் பயந்து போய் கூறினான்……..

 

சரிடி அஸ்வதி முறச்சது போதும் வா, எல்லாரும் ரெடியா?

 

எல்லாரும் ரெடி சார்……

 

குட் விக்னேஷ் , எல்லாரும் நம்ம வீட்டுல சாப்பிட்டுட்டு சயின்ஸ் சென்டர் கிளம்பலாம் சரியா?

 

சரி சார் என்று அந்த மாணவர்கள் அனைவரும் விஹான் பின்னால் சென்றனர்……

 

விஹான் நீங்க பசங்கள சாப்பிட கூட்டிட்டு போங்க நா என்னோட பேக் எடுத்துட்டு வரேன் என்று அவள் ரூமிற்கு சென்றாள்……

 

அஸ்வதி சென்ற கேப்பில் மாணவர்கள் அனைவரும் விஹானிடம் அவர்களின் காதல் கதை பற்றி கேட்டு கொண்டே வந்தனர்…….

 

சார் சார் …..எங்களுக்கு தெரியும் நீங்க அஸ்வதி மேடம லவ் பண்றீங்கன்னு, தயவு செஞ்சு உங்களுடைய காதல் கதைய சொல்லுங்க சார் ப்ளீஸ் , மேடம் கிட்ட கேட்டா முறப்பாங்க ,  திட்டுவாங்க அதனால நீங்களே சொல்லுங்க சார் ப்ளீஸ் என்று அனைத்து மாணவர்களும் கேட்க விஹான் தன்னுடைய காதல் கதையை அந்த மாணவர்களிடம் கூறினான்……..

 

நா  அஸ்வதிய முதன்முதலா  இங்க ஏர்போர்ட்ல தான் பார்த்தேன் புதுசா பெஞ்ச பனி மாதிரி அவ்ளோ அழகா இருந்தா ,கடவுள் வசமா நாங்க ரெண்டு பேரும் சந்திச்சோம்  காதலிச்சோம்…

 

அவள அவளோட வீட்டுல ரொம்ப கொடுமை படுத்துவாங்க அதனால அஸ்வதிக்கு அவ வாழ்க்கையில சந்தோஷமே இல்லாம இருந்தது , அஸ்வதி வாழ்க்கையில இழந்த சந்தோஷத்த நா கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன் அதனாலதான்   இப்ப கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று அவர்கள் இருவரும் முதலில் பார்த்தது,  ரசித்தது,  இருவரிடம் இருவரை தொலைத்தது , இருவரும் காதலில் ஒன்றாக இணைந்தது , ஒன்றாக ஊர் சுற்றியது , இருவரும் பிரிந்து இருந்த இந்த ஐந்து மாதங்கள் என அவர்கள் இருவரின் காதல் கதையை அந்த மாணவர்களிடம் விஹான் கூறினான்….

 

இதான்டா எங்க காதல் கதை …….

 

செம லவ் ஸ்டோரி சார்…..

 

நீங்க ரொம்ப கிரேட் சார்  எங்க அஸ்வதி மேடத்த ரொம்ப நல்லா பாத்துக்கிறீங்க நீங்க மேடம் வாழ்க்கையில வந்ததுக்கு மேடம் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்……..

 

அப்படி இல்லடா அஸ்வதி என்னோட வாழ்க்கையில வந்ததுக்கு நா தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் அஸ்வதி ஒரு தேவதைடா அவ என்னோட வாழ்க்கையில வந்த பிறகுதான் என்னோட வாழ்க்கையே புதுசா மாறுச்சு……..

 

சார் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் , சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கல்ல?

 

நீ என்ன சொல்ல போறன்னு எனக்கு தெரியும்……..

 

அப்படியா நா என்ன சொல்ல போறேன்னு சொல்லுங்க பாப்போம்…..

 

அந்த துருவ் பத்திதான பேச போற என்று அந்த மாணவர்கள் கூற வருவதற்குள் அவர்கள் கூற வந்த விஷயத்தை விஹான் சரியாக சொன்னான்…….

 

சார் எப்படி சார் ?நாங்க சொல்ல வந்த விஷயத்தை கரெக்டா சொல்றீங்க?

 

வேற என்னடா நீங்க சொல்ல போறீங்க என்னோட அஸ்விய பத்தி?

 

சார் அப்போ உங்களுக்கு எல்லாம் தெரியுமா?காலேஜ்ல எல்லாரும் அஸ்வதி மேடத்த துருவ் சார் ரேப் பண்ணிட்டாங்க அதனால அஸ்வதி மேடம் பிரக்னண்டா ஆகி அத அபார்ஷன் பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க எல்லாம் தெரிஞ்சும் நீங்க எப்படி மேடத்த இன்னும் லவ் பண்றீங்க?

 

ஓஹோ உங்க காலேஜ்ல இவ்ளோ கேவலமா ஒரு பொன்ன பத்தி வதந்தி பரவுமா?

 

சார் இது வதந்தியா உண்மையான்னு எங்களுக்கு தெரியாது சார் எல்லாரும் இப்படித்தான் சார் பேசிப்பாங்க……

 

இங்க இப்போ நாப்பத்தி ஒன்பது  பேர் இருக்கீங்கல்ல நீங்க எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க என்னோட அஸ்வதி எந்த கலங்கமும் இல்லாத புதுசா  பெய்யுற மழை மாதிரி ரொம்ப ரொம்ப சுத்த தங்கம் அவள பத்தி இனி நீங்க தப்பா பேச கூடாது சரியா?

 

சார் அப்போ அன்னைக்கு மேடம்க்கு ஒன்னும் நடக்கலல?

 

இல்லடா எனக்கு ஒன்னும் நடக்கல அதுக்குள்ள கரஸ்பாண்ட சார் வந்து என்ன காப்பாத்திட்டாங்க போதுமா உங்களுக்கு என்று அங்கு வந்த அஸ்வதி கோபமாக கேட்டாள்…….

 

அஸ்வதியை அங்கு எதிர்பாராத மாணவர்கள் அவளை பார்த்து பயந்து கொண்டு நின்றனர்

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்