Loading

எந்த வகையிலயாவது ஆறுதல் கெடச்சிராதானு ஏங்கிட்டு இருந்த அம்முவுக்கு உங்க அம்மா ரொம்ப பெரிய ஆறுதலா தெரிஞ்சாங்க…

 

உங்க அம்மாவும் சும்மா ஏதோ ஒரு யோசனையில எல்லாம் கூட்டிட்டு வரல… அம்முவுக்கு உன் மேல அளவுக்கு அதிகமா காதல் இருக்குனு தெரிஞ்சுதா கூட்டிட்டு வந்தாங்க…

 

டேய்… உன்ன சுத்தி எல்லாமே நூறு சதவிகிதம் நல்லாதான் இருக்கு… உன்ன தவிர…

 

யாருனே தெரியாத , உயிரோடையே இல்லாத‌ , ஒரே ஒரு நாள் மட்டுமே பாத்து காதலிச்ச பொண்ண நெனச்சிட்டு நான் இந்த அளவுக்கு மோசமா நடந்துகிட்டேன்… எனக்கு என்ன பிரச்சினைனு எல்லார் கிட்டையும் சொல்லிட்டேன்…

 

ஆனா அம்மு ரொம்ப பாவம்டா… அவளால எதையும் வெளிய சொல்லவும் முடியாம… ச்ச்ச்சே நெனச்சால ரொம்ப வேதனையா இருக்கு… எனக்கே என் மேல கோவமா வருது… 

 

எனக்கு இல்லாதத ஒன்ன நெனச்சு வேதனப் படுறத விட… எனக்காக இருக்குற ஒன்ன நல்லபடியா வச்சுக்குறதுதான் புத்திசாலித்தனம்னு நான் நெனைக்குறேன்…

 

“நீ சொல்லுவ ஆனா செய்யமாட்ட….”

 

“இனிமே பாக்கதான போற”

 

பேசிகிட்டே பாட்டில்ல கைய வைக்க… டேய் கைய எடு… இப்போதா ஏதோ நல்லவன் மாதிரி பேசுன… உடனே உன் வேலைய காட்ற… அப்படினு அவன் நண்பன் கேள்வி எழுப்புனதும்… இதுவரைக்கும் நடத்த எல்லாத்தையும் மறக்க கடைசியா ஒரே ஒரு தடவ குடிச்சுக்குறேன்டா அப்படினு சொல்லி… கண்ணு முன்னு தெரியாம குடிச்சு வீடு வந்து சேர்ந்தான் அப்பு…

 

திடீர்ன நார்மல் ஆகிட்டா ஒத்துக்கமாட்ங்க… நம்ம மேல சந்தேகம் வந்துரும் அப்படினு சொல்லி தன்ன கொஞ்ச கொஞ்சமா மாத்திகிட்டு… அம்மு கூட நல்லவிதமா அட்டாச் ஆகிட்டான்… 

 

முன்னாடி இவன் இருந்தத எதையும் பொருட்படுத்தாம… அப்போதைக்கு அவன் அவகிட்ட இந்த அளவுக்கு உயிரா இருக்கானேனு நெனச்சுதா பூரிச்சு போனா அம்மு…. 

 

கபடமில்லாத மனசு அவளுக்கு… அதான் காதல் மேலயும் காதலன் மேலயும் அவ்ளோ ஆச…

 

பின் குரலில் மேற்கண்ட வார்த்தைகள் ஒலித்துக்கொண்டிருக்க… சிரிப்பு, சண்டை, வெறுப்பு, நக்கல், அழுகை, முத்தம், கோவம், அணைப்பு என அத்தனை ஊடல் கூடல் காட்சிகளும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது…

 

சுமுகமான நல்லுறவில் அவர்கள் மனம்போல நலமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் போது… முதலாம் ஆண்டு திருமண நாள் வர இன்னும் ஒரே மாதம்தான் இருக்கே என்று புலம்பியபடியே நடந்து செல்லும் போது… வயதான தம்பதிகள் இருவரும் அவர்களது கைக்கு அடக்கமான செல் ஃபோனில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகைப்படம் எடுப்பதைக் கண்டான்…

 

அந்த காட்சியை கண்டதிலிருந்து காதலின் மீது மதிப்பு இன்னும் சற்று தூக்கலாக மாறியது…

 

தான் ஒரு பைத்தியம் என்று எல்லோரும் சொன்ன போதும்… அவர்கள் அப்படி சொல்லும்படி நான் நடந்துகொண்ட போதும்… என்னைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த போதிலும்… காதல் கடுகளவும் குறையவில்லை அவளுக்கு… ஊர் பார்வையில் நான் ஒரு விதமாகத் தெரிந்தாலும்… அவள் பார்வையில் நான் எப்படி என்று… ஒவ்வொரு முறையும் காரணம் இல்லாமல் அவளைத் திட்டும்போதும் கூட கைகளை பிசைந்தபடியே தலைகுனிந்து ஊமை போல நிற்பாளே அப்போதே எனக்குப் புரிந்திருக்க வேண்டும்… ஆனால் பைத்தியக் காரனிடம் அது எப்படி சாத்தியம்…

 

நான் செய்த முட்டாள்த் தனங்களுக்கு எல்லாம் அவளிடம் மன்னிப்பு கேட்பதே இந்த முதல் வருட திருமண நாளில் நான் அவளுக்கு அளிக்கும் சிறந்த பரிசாக இருக்க வேண்டும் என்று அப்பு முடிவு செய்தான்…

 

ஒரு சில விஷயங்களை சொல்வதைக் காட்டிலும் செய்து காட்டினால்தான் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்…. ம்ம்ம் சரிதானே என்று திரையில் பேசிக்கொண்டு இருந்த அப்பு கதா பாத்திரம் கீழே குனிந்து ஒரு காகித்தை கையிலெடுத்து நேராக பார்த்து தூக்கி வீச திரையில் இருள் சூழ்ந்து காட்சி அத்துடன் மறைந்தது…

 

என்ன இது பேசிட்டு இருக்கும் போதே ஆஃப் ஆகிருச்சுனு…. புருவத்த சுழித்தபடியே ஆதியின் மார்பைவிட்டு எழுந்த மீரா மீண்டும் வியப்புற திரையில் அப்பு தூக்கி எறிந்த அதே தோற்றத்தில் ஒரு காகிதம் ஆதியின் கையில் இருந்ததைப் பார்த்ததும் அவளுக்கு கை கால் ஓடவே இல்லை…

 

ஆதி அந்த காகிதத்த மீராவோட கையில குடுத்ததும்… சிறுபிள்ளை நொறுக்குத்தீனி கண்டது போல வேக வேகமாக பிரித்துப் பார்த்தாள்… ஐ அம் சோ சாரி… அன்டு ஐ லவ் யூ அம்மு அப்படின்ற வார்த்தைய பாத்ததுமே மீரா உதட்டுல பூத்த சிரிப்ப பாக்கனுமே… அடடா அத கண்ணால பாக்க ஆதி புன்னியம் பண்ணிருக்கனும்…

 

“சாரி அட்செப்டடா? இல்ல நாட் அட்செப்டடா? அம்மு”

 

“ஐ லவ் யூ டூ”

 

“ஹேய் பார்ற…. பட்டிக்காடுக்கு இதெல்லாம் சொல்லத்தெரியுமா….”

 

வழக்கம் போல அவள கிண்டல் அடிச்சுகிட்டே அவ கண்ண தொடச்சு விட்டு….

 

“அழுது அழுது முகம் பாரு எப்படி ஆகிருச்சுனு?”

 

“என்ன விட அதிர்ஷ்டமான பொண்ணு யாருமே இல்லைல”

 

“லூசு நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு சொல்லிட்டு இருக்க… பேசுறத காதுல வாங்கிட்டு பேசு “

 

“இத்தன நாளா நான்தா பெரிய தியாகி… உன்ன ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றே… ஆனா நீ என்ன துளி கூட புரிஞ்சுக்கவே இல்ல அப்படினு நான் நெனச்சிட்டு இருந்தேன்….ஆனா அதெல்லாம் இப்போ சுக்குநூறா ஒடஞ்சு போச்சு… இப்போ உன் மேல எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு காதல் வருது….”

 

“ம்ம்ம் சரி அந்த காதல் எல்லாத்தையும் பத்திரமா சேத்து வை தேவப்படும்… இந்த ஹாப்பி மொமன்ட்ட இன்னும் இனிமையா மாத்த… நம்மளோட புது ப்ராடக்ட்ட இறக்குறதுக்கு ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கலாம் வா “

 

“ச்ச்ச்சீ விளையாடாத “

 

“யாரு நானா?… நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகிருச்சுடி “

 

“அதுனால என்ன?”

 

“அதுனால என்னவா?”

 

“யேய் கிட்ட வராதா….”

 

ஆதி மீராகிட்ட வரும்போது அவனோட இடது பக்க மார்பு ஓரம் சட்ட ஒதுங்கி அதுல ஏதோ இருக்க மாதிரி தெரியவும்…. ஏய் இரு அப்படினு சொல்லி சட்டைய விலக்கி நல்லா பாத்தா… அவன் நெஞ்சுல மீரானு பச்ச குத்தி இருந்தான்…

 

“யேய் என்ன காதல் மழைய இப்படி பொழியிற… இதுவும் சர்ப்ரைசா?”

 

“இல்ல இது அந்த பொண்ணுக்காக போட்டது… நல்ல வேளையா உன் பேரும் அவ பேரும் ஒரே பேரா போச்சு….”

 

இத சொன்னதும் மீரா ஸ்விட்ச் ஆஃப் ஆகிட்டா…. பாவம்…

 

“உனக்கு புடிக்கலைனா சொல்லு இத அழிச்சிடலாம் “

 

“இல்ல பரவாயில்ல இருக்கட்டும் “

 

“உனக்கு ஓகே தான?… ஒன்னும் பிரச்சன இல்லையே?”

 

“ம்ம்ம் அது வெறும் பச்சதான… உன் மனசுல நான்தா முழுசா நெறஞ்சு இருக்கேனு எனக்கு தெரிஞ்சு போச்சு… அதுக்கு முன்னாடி இதெல்லாம் சும்மா… தெரிஞ்சோ தெரியாமலோ அந்த பச்சையிலயும் நான் இருக்கேன்… ம்ம்ம்… கடவுள் என் பக்கம் இருக்காரு…”

 

அவ பதிலக் கேட்டு தெகச்சுப் போன ஆதி… அடி ராசாத்தி வாடி என் தங்கமேனு சொல்லி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு செல்லம் கொஞ்ச தொடங்கினான்… இன்பமுற இழ்வாழ்க்கை இருவருக்கும் இனிதே துவங்கியது…

 

வாழ்க்கை பற்றிய பார்வையே இருவருக்கும் மாறி… ஆரோக்கியமான சீரான காதல் உறவோடு மகிழ்ச்சியில் மூழ்கிய வாழ்க்கையை வாழ இருவரும் தகுதியாகினர்… அதன்படியே செயல்பட்டது விதியும்.

 

காதல்… நாம் எப்படிப்பட்டவரைக் காதலிக்கிறோம் என்ற புள்ளியில் இன்னும் மேம்படுகிறது…

 

மீராவையும் ஆதியையும் பார்க்கும் போது தோன்றுவது ஒன்றே ஒன்றுதான்… புரிதலும் பகிர்தலும் இருக்கும் காதலுக்கு எக்காலத்திலும் அழிவே இல்லை…!!!

 

…சுபம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்