அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் அப்புவின் மனதை நெருடச் செய்ததும், அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை கையிலெடுத்து முகத்தை கழுவி விட்டு…
“டேய்… சொல்லுடா… நான் புரிஞ்சுக்குறேன்”
“யாரு…? நீதான?… நீயே பித்துப் புடிச்ச மாதிரி செத்து போன பொண்ணுதா என் காதலி அவ வருவா அப்படி இப்படினு அலையிற… உனக்கு இதெல்லாம் புரியாதுடா”
“இவ்ளோ தூரம் கெஞ்சுறேன்ல… சொல்லலாம்ல…”
“ம்ம்ம் சொல்றேன்… ஆனா இத உனக்காக சொல்லல… இதெல்லாம் சொன்னாவாச்சும் அந்த பொண்ணோட வாழ்க்க மாறுதானு பாக்குறேன்…”
நீ சென்னையில அந்த பொண்ண தேடி அலையும்போது… ஒரு பொண்ணுக்கு எந்த அளவுக்கு கஷ்டம் வந்தா தாங்கிக்கவே முடியாதோ அந்த அளவுக்கு கஷடத்த மனச கல்லாக்கிட்டு தாங்கிட்டு நின்னுட்டு இருந்தா அம்மு…
நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே முகம் குடுத்து பேசிக்காம இருந்தாலும் கூட அவ மனசுல உன்னைய நெனச்சு ஆசைய வளத்துட்டு இருந்தா… இது நான் ஒன்னும் சும்மா சொல்லல… அதுக்கு இதுதான் சாட்சி அப்படினு சொல்லி அவன் ஃபோன எடுத்து காமிச்சான்… அதுல இருந்தது அம்முவோட கைப்பட எழுதுன டைரியோட ஃபோட்டோஸ்… (அத பாத்த அப்புவுக்கு வழக்கம் போல எதுவுமே புரியல… தெகச்சுப் போய் உக்காந்திருந்தான்).
உன்ன பாக்காத போதும் பேசாத போதும் கூட உன்ன நெனச்சு நெனச்சு உருகிட்டு இருந்தா… பாவம்…
மனசார உண்மையா காதலிச்சாலே இப்படித்தான்… சம்பத்தப்பட்டவங்களுக்கு புரியிறதே இல்ல… ஆனாலும் என்னைக்கா இருந்தாலும் அவளோட காதல் உனக்குப் புரியவரும்… உன்ன நெனச்சு அவ கண்ட கனவெல்லாம் ஒரு நாள் பலிக்கும் அப்படினு நம்பிக்கையோட காத்துட்டு இருந்தா…அதுனாலயோ என்னவோ அவளுக்கு பாக்குற மாப்பிள்ளைய எல்லாம் வேணாம் வேணாம்னு சொல்லி ஒதுக்கி வச்சிட்டு இருந்தா… ஏன் எவ்ளோ நல்ல நல்ல மாப்பிள்ளை எல்லாம் பாத்தாலும் கூட கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்றனு அவ பெத்தவங்க கேட்டாலும் கூட அதுக்கு சரியான காரணம் சொல்லத் தெரியாம தவிச்சிட்டு இருந்தா… அப்படி இருக்கும்போதுதா அவளுக்கு அவ எதிர்பாக்காத ஒரு அதிர்ச்சி காத்துட்டு இருந்தது…
நம்ம ஊரு விஏஓ இருக்காருல…
“ம்ம்ம் ஆமா எனக்குத் தெரியும்… மகி”
ஆமா அவருதான்… அவருக்கு அம்மு மேல அளவுக்கு அதிகமான காதல்… அவ பின்னாடியே சுத்திட்டு இருந்தாரு… இது அம்முவோட காலேஜ்ல முக்கால்வாசி பேருக்குத் தெரியும்…
அவருக்கு ஆசை இருந்தாலும்… அம்மு ஆசப்பட்டது என்னமோ உன் மேலதா… அதுனால அவரோட காதலுக்கு அவ ஒத்துக்கவே இல்ல… நாளுக்கு நாள் அவரோட தீவிரம் அதிகமாக ஒரு நாள் அவர எல்லார் முன்னாடியும் முகம் சுழிக்கும்படி பேசிட்டா… ஆனாலும் அவருக்கு அவள விட மனசே இல்ல அந்த அளவுக்கு காதல் அவ மேல…
ப்ளீஸ் ப்ளீஸ்னு கெஞ்சிகிட்டே அவ பின்னாடியே அவ வீடு வரைக்கும் போய்ட்டாரு… இத கண்ணால பாத்த அம்முவோட அப்பா… அவள தப்பா புரிஞ்சுகிட்டு… ஓஓஓ நீ இதுனாலதான் கல்யாணம் வேணானு சொல்றியா அப்படி இப்படினு வாய்க்கு வந்தத பேசி அடிச்சு ஒரு வழி பண்ணிட்டாரு… அந்த பொண்ணுக்கு விதிய பாத்தியா அவ நம்புற யாருமே அவள புரிஞ்சுக்குறதே இல்ல… சரி அத விடு…
அம்முவ அடிச்சது மட்டும் இல்லாம மகியவும் ஆள் வச்சு அடிக்க… அவருக்கு கோவம் கரைய கடக்க ஆரமிச்சது… காதலிக்குற பொண்ணுக்காக சுயமரியாத தன்மானம் எல்லாம் பாக்காம இருக்குறதுதான்… ஆனா மத்தவங்க கிட்ட அப்படி இருக்கனுனு அவசியம் இல்லைல… அவரோட கோவம் ஒரு தப்பான முடிவுக்கு அவர கொண்டு போச்சு…
அம்முவோட வீட்டுல பாத்ரூம் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி வெளியதா இருக்கும்… உனக்கே நல்லாத் தெரியும்.
அவ குளிச்சிட்டு வெளிய வரும்போது அவ கழுத்துல தாலிய எப்படியாவது கட்டிறலாம்னு… ஒரு கையில தாலி ஒரு கையில நல்ல பதமா தீட்டி வச்சிருந்த அருவானு பாக்கவே ரொம்ப அகோரமா கண்ணுல வெறியோட நின்னுட்டு இருந்தான் மகி… அத தெளிவா பாக்காத போதுமே அவளுக்கு மகிதானு தெரிஞ்ச பின்னாடி கதவ கால் வாசி தெளிந்தவ மீண்டும் இழுத்து பட்டுனு மூடிகிட்டா…
எவ்ளோதா படிச்சு வந்தாலும்… நமக்குள்ள இருக்க அந்த மிருகத்தனமான யோசனையும் செயலும் இன்னும் மாறவே இல்ல… பாத்ரூம் கதவ விடாம தட்டி கொஞ்சம் நேரம் போக போக அரிவாளால தகரக் கதவ கொத்திட்டு இருந்தான்… அந்த நேரம் அந்த பொண்ணு மனசு என்ன தவிப்பு தவிச்சிருக்கும்னு கொஞ்சம் யோசன பண்ணி பாரு…
(இந்த காட்சி ஓடிட்டு இருக்கும் போது மீராவோட கை ரெண்டும் ஆதியோட சட்ட காலர இழுத்து புடிச்சுக்கிட்டு நடுக்கத்துல இருகிப் போய் இருந்தது அவனும் அவள இருக்கமா புடிச்சுக்கிட்டு உக்காந்திருந்தான்… அவளோட தவிப்பும் பயமு அவனுக்கு தெளிவா தெரிஞ்சது).
இத தன் ரெண்டு கண்ணால பாத்துமே அவங்க அப்பா அம்மு மேலதா சந்தேகப்பட்டாரு… அம்முவோட அப்பா வந்து சத்தம் போடவும் மகி ஓடிட்டான்… ஆனா எந்த தப்புமே பண்ணாத, எதுவுமே தெரியாத அம்முவ எல்லார் முன்னாடியும் அவ அப்பா வச்சு அடிச்சாரு… கண்டபடி வாய்க்கு வந்த வார்த்தை எல்லாமே பேசுனாரு… பெத்த புள்ளைய ஏன் இப்படி ரோட்டுல வச்சு அடிக்குறனு யாராவது கேட்டா அவங்களையும் சேத்து திட்டுனாரு.
உன் வாழ்க்கையில எந்த இடத்துலயுமே கொற வைக்காத உங்க அம்மா… அம்முவோட நெலமைய புரிஞ்சுகிட்டு உன்னைய மாதிரியே அவளையும் நெனச்சு அன்னைக்கு அவளுக்காக அவங்க நின்னாங்க…
ஒரு கட்டத்துக்கு மேல நீ எனக்கு மகளே இல்லனு அம்முவோட அப்பா வார்த்தைய விட… ஆமா இவ இனிமே உனக்கு மக இல்ல…
இவள மகளா…. இல்ல… மருமகளா இந்த வீட்டுல இருந்து என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்… உன்னால முடிஞ்சத பாத்துக்கோ அப்படினு சொல்லிதான் அவள உங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்தாங்க…
ஏதோ சினிமா பாக்குற மாதிரி இருக்குல… இது எனக்குத் தெரியவரும்போதும் அப்படித்தான் இருந்தது.
இவ்ளோ விஷயம் அவள சுத்தி சுத்தி நடக்கும்போது எந்த உணர்ச்சியும் இல்லாத செல மாதிரிதா அவ நின்னுட்டு இருந்தா… பாவம் அதுக்கு மேல அவளால என்ன பண்ண முடியும்?…
…கதை தொடரும்…