Loading

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே கேட்ட அழுகைக் குரலும் அதை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்த குரலும் அவன் மனதை நெருடச் செய்தது… 

 

மனதைக் கல்லாக்கிக் கொண்டு உள்ளே சென்ற அப்புவின் எதிரில் ஒரு மூலையின் ஓரத்தில் அப்புவின் அம்மாவின் கைகள் இரண்டும் எதிர் வீட்டு அம்முவின் கண்ணத்தைத் தாங்கிக் கொண்டிருந்தது அவள் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரின் ஈரம் அவ்வீடு முழுவதும் பரவியதுபோல அந்த காட்சி அவனை நடுநடுங்கச் செய்தது… 

 

இவள் இங்கு என்ன செய்கிறாள்?… ஏன் இழவு வீடு மாதிரி கண்ணீரும் கூச்சலுமாய் இருக்கு? என்று முனங்கிக் கொண்டே வர… அப்புவின் கைகளை பிடித்து இழுத்து வீட்டிற்கு பின் புறம் அழைத்து வந்தாள் அப்புவின் அம்மா… காரணம் அவனோ கொஞ்சம் வாய் சவடால் காரன் நேரம் காலம் தெரியாமல் வார்த்தை விட்டால் அம்முவின் மனம் மேலும் புன்படும் அல்லவா அதுதான் காரணம்…

 

“என்னமா நடக்குது இங்க… இவள எதுக்கு நம்ம வீட்டுல கூப்பிட்டு வச்சிருக்க… எனக்கு எதுவுமே புரியல?”

 

“அம்முவுக்கும் உனக்கும் நாளைக்கு கல்யாணம்… புரிஞ்சதா…. “

 

(அம்மா பேசிய வார்த்தை காதிலே சரியாக விழாதது போல்)

 

“புரியல… என்ன சொல்ற நீ”

 

“மாமா கிட்ட சொல்லி உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கேன் சும்மா ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்காம நாளைக்கு காலைல அம்மு கழுத்துல தாலிய கட்டு அவ்வுளவுதா சொல்லுவே”

 

“இப்போ நீ எதுக்குமா இவ்ளோ கோவமா பேசுற? ( தான் நெனச்ச விஷயத்த நடத்தியே ஆக வேண்டும்ற கட்டாயத்துல இருந்த அம்மா காரியத்த சாதிக்க கோவத்தில் கையில எடுத்தாங்க)… இங்க நடக்குறதுக்கு எல்லாம் நான்தான் கோவப்படனும்”

 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது… நான் சொல்ற மாதிரி மட்டும் நீ நடந்துக்காம இருந்தா… நாளைல இருந்து நீ அம்மானு ஒருத்தி இல்லாம அனாதையாதா நிக்கனும் தெரிஞ்சுக்கோ”

 

மீண்டும் ஒரு இழப்பை எண்ணிக்கூட பார்க்க தெம்பு இல்லாத அப்பு நடப்பதை எதிர்கொள்ள தன்னை தைரியப்படுத்த முயற்சித்தான்… வழக்கம் போல தோற்றும் போனான்….

 

வீட்டில் இருந்த பொருளை எல்லாம் சில்லு சில்லாய் உடைத்து… கூர்மையான கத்தியாலும் கண்ணாடியாலும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு புத்தி கெட்ட பித்தனைப் போல தவிதவித்து போராடிக் கொண்டிருந்தான்…

 

அவனுக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் அர்த்தம் புரியாமல் துயரத்தின் எல்லையில் சிக்கிக்கொண்டு உயிர் போக வேண்டும் என்று சில செயல்களை செய்தான்… விதி அவனை சாகவிடவில்லை…

 

மீரா என்கிற மாயத்தோற்றம் அவன் கண்ணை விட்டு மறையும் முன்பே மணப்பெண் கோலத்தில் ஒருத்தியை எதிர் பார்த்தும் எப்படி சும்மா இருப்பான்… மூளையின் நரம்புகள் வெட்டப்பட்ட பைத்தியம் போல அவன் செயல்கள் பார்ப்பவர்களை அதிர்ச்சியுறச் செய்தது…

 

பெண்ணை காப்பாற்றுவதாக நினைத்து தன் பைத்தியக்கார பையனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விட்டு… ஏதோ பெரிய தியாகம் செய்தது போல் நிற்கிறாள் பார் கிராதகி… என்றெல்லாம் சிலர் அப்புவின் அம்மாவைப் பற்றி பேசினார்கள்…

 

(இக்காட்சி திரையை நிரப்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில் மீராவின் கண்ணில் இருந்து வடிந்த கண்ணீரோ ஆதியின் சட்டைப் பையை நிரப்பிக் கொண்டிருந்தது…. மாரோடு அவளை அணைத்தபடி அமர்ந்திருந்த ஆதியோ அதற்கு மேல் படத்தை பார்க்கலாமா வேணாமா என்கிற குழம்பிய மனநிலையோடு பார்த்துக் கொண்டிருந்தான்…)

 

என்னவென்று விவரிப்பது என்றே தெரியாத ஒரு ஆழமான மனநிலையில் இருவரும் இருக்கும்போதே அவர்களுக்கு வலுக்கட்டாயத்தின் பேரில் திருமணம் முடிந்தது…

 

சிறுவயதில் இருந்து மனதிற்குள்ளே காதலித்த காதலனைக் கைபிடிக்கும் போதும் கூட நெருப்பு மேடையில் நின்று கொண்டிருப்பதைப் போலவே கடும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அம்மு…

 

பின் இருவரின் திருமண வாழ்வில் நகரும் ஒவ்வொரு நொடியிலும் கோடிக் கணக்கான சிக்கலும், முகச்சுழிப்பும், சண்டையும், சச்சரவாகவும்தான் இருந்தது…

 

இதுவரைக்கும் நம் வாழ்க்கையை ஒத்திருப்பது போலவே இந்த கதையின் நகர்வு இருப்பதாக மனதிற்குள் நினைத்துக் கொண்டு கருவிழி கூர்மையில் திரையை பார்த்த அம்மு இது திரைக்கதை என்பதையே மறந்து… இதுநாள் வரை யாரிடமும் வெளித்தள்ள முடியாத சோகங்களை எல்லாம் தனியறையில் அமர்ந்து கண்ணெதிரே காட்சிப்படுத்திக்கொண்டு கண்ணீரால் நடந்த கஷ்டங்களை கழுவிக் கொண்டிருந்தாள்…

 

திருமணம் என்ற பெயரில் ஏதோ தீட்டு நடந்தது போலவே அம்முவைக் கண்டாலே ஒதுங்கிப்போகும் அவளின் கனவனுக்கு ஒரு நாள் அவளைப் பற்றியும் அவள் அவன் மீது கொண்ட காதல் பற்றியும் தெரியவந்தது…

 

கடும் வெறுப்பில் சுற்றிக் கொண்டிருந்த அப்புவை சமாதானப்படுத்தி திருத்த சிறு வயதில் இருந்தே அவனுடன் இருந்த நண்பன்… “டேய் ஏன்டா இப்படி முகம் செத்துப் போய் கெடக்குற… எப்பயாவது இப்படி இருந்தா பரவாயில்ல… நீ எப்போதுமே இப்படித்தான்டா இருக்க… உன்ன பாக்கவே எனக்கு கஷ்டமா இருக்கு” அப்படினு பேசிகிட்டே மெல்ல மெல்ல நடந்து சாராயக்கடைக்குள் இருவரும் நுழைந்தார்கள்…

 

இருவரும் அவரவர் தரப்பில் ஏதேதோ பேசிக்கொண்டே போதைக்குள் மூழ்கினார்கள்…

 

அப்பு அருந்திய அளவோ கொஞ்சம்தான்… அதனால் அவனுக்கு நிதானம் இருந்தது… அவன் நண்பனோ மொடா குடிகாரன்… அவனைப் பார்த்தாலே பத்து அடி தள்ளித்தான் நிற்பார்கள்… மற்றவருக்குத்தான் அவன் அப்படி… கதாநாயகனுக்கு அவன் நண்பன் அல்லவா…

 

ஹைகோர்ட் ஜட்ஜ் கிட்ட கூட உண்மைய மறச்சர்லாம்… ஆனா கையில இருக்க பாட்டில வாய்க்குள்ள ஊத்திட்டா… அரை நிமிஷத்துல அரிச்சந்திரனா மாறிடுவாங்க.

 

ம்ம்ம் அன்னைக்கும் அதுதான் நடந்தது… போதையில் இருந்தவன்… புரியாமல் இருந்த அப்புவிற்கு புரிய வைத்த படலம் அது…

 

“யேய்…. சும்மா இருடா… என்ன ஏமாத்திட்டாங்க ஏமாத்திட்டாங்கனா என்னடா அர்த்தம்… நீ எங்கடா ஏமாந்த அந்த பொண்ணுதான்டா கடைசியில ஏமாந்து நிக்குது… ச்ச்ச்சே என்ன மனுசன்டா நீ… ஒரு புருஷன் பொண்டாட்டி கிட்ட எப்படி எல்லாம் நடந்துக்கக் கூடாதோ நீ அப்படி எல்லாம் அவ கிட்ட நடந்துக்குற… நீ பண்ற டார்ச்சருக்கு எல்லாம் அந்த பொண்ணு இடத்துல நான் இருந்திருந்தா எப்படியோ போடா மயிறுனு போயிருப்பேன்… ஆனா அதால அப்படி முடியல… உன்ன உசுருக்கு மேல வச்சு பாத்துருச்சு… எப்படி போக மனசு வரும் “

 

“டேய் என்னடா சொல்ற…”

 

“கூட இருக்குறவங்க நம்ம மேல எவ்ளோ பாசம் வச்சிருக்காங்கனு அவங்க நடவெடிக்கையிலயே தெரியும்… அதுவே உனக்குப் புரியல… நான் சொன்னா மட்டும் உனக்குப் புரிஞ்சு கிழிச்சிருமோ…?”

 

 

…கதை தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்