Loading

சம்பாதிக்கத் தொடங்குன உடனே வீட்டுக்கு குடுத்த காசு போக மீதம் இருந்த காச எல்லாம் ஒரு ஆஸ்பத்திரில வேல பாக்குற கம்பவுடர் கிட்ட குடுத்து ஏமாந்துட்டு இருந்தான்…

 

நல்லாதன இப்போ சம்பாதிக்குறான் ஆனா பழையபடியேதா இருக்க மாதிரி தெரியுது இவன் கிட்ட எந்த ஒரு முன்னேற்றமு இல்லையேனு சந்தேகம் வந்ததும்… தினமு இவன் வீட்டுக்கு லேட்டா வர்றதும்… லீவு நாள்லையும் கூட எங்கையோ போய்ட்டு வர்றதையும் கவனிச்ச அவரு… ஒரு நாள் அவன் பின்னாடியே போய் அப்புவோட நடவெடிக்கைய நோட்டமிட்டாரு…

 

அப்போதான் அவருக்குப் புரிஞ்சது அவரு நெனச்சதவிட பைத்தியமா அந்த பொண்ணு நெனப்புலயே இருக்கான்னு…

 

ஒருத்தன் ஏமாளியா இருந்தா ஏமாத்துறதுதான் இந்த உலகத்துக்கு கை வந்த கலையாச்சே… ஆறு மாசமா அவன அதுல இருந்து மீள விடாம அதே நெனப்புலயே அலையவிட்டு… காசு பணத்த சுடுட்டிகிட்டு சந்தோஷமா சுத்திட்டு இருந்திருந்திருக்கான் அந்த கம்பவுன்டர்…

 

இது வேணாம் நீ புத்தி இல்லாம தப்பான வழியில போறனு எவ்ளோவோ சொல்லியும் அது அப்புவுக்கு புரியவே இல்ல… அவனோட முழு கவனமு அந்த பொண்ண கண்டுபுடிக்குறதுலதான் இருந்துச்சு…

 

அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அவனா ஏதேதோ சம்பந்தம் இல்லாம பேசிட்டே இருந்தான்… அந்த பொண்ண இந்த ஹாஸ்பிடல்லதான் கொண்டு வந்து வச்சிருந்தாங்க… எனக்கு நல்லா தெரியும் அந்த அம்புலென்ஸ் வண்டில கூட இதே பேர்தா போட்டு இருந்தது… இங்க கேட்டிருக்கேன்… இன்னும் ரெண்டு நாள்ல அவளோட அட்ரஸ் தரேனு சொல்லிருக்காங்க… அவள போய் பாத்து பேசி என்கூடவே கூட்டிட்டு வந்துருவேன்… இதுக்கு மேல என்னால நீ இல்லாம இருக்கவே முடியாது… ஒரு குண்டூசி கூட உன்ன குத்திராம பத்திரமா பாத்துப்பேன்… உன்ன கண்டுபுடிக்க நான் எவ்ளோ கஷ்டபட்டேன் தெரியுமானு… இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையுமே அவ கிட்ட சொல்லி… நான் அவள எந்த அளவுக்கு லவ் பண்றேனு புரிய வைப்பேன் அப்படினு சுத்த அடிமுட்டாள் மாதிரி சொன்னதவே திரும்ப திரும்ப சொல்லி ஏதோ போதையில இருக்குற ஆள் மாதிரி தகாத செயல் எல்லாம் செஞ்சிட்டு இருந்தான்…

 

தேக்கத்துல நீர் முழுசா நிரம்புற வரைக்கும்தான் பொறுமையா இருக்கனும் நிரம்பி வழிய போகுனு தெரிஞ்சா தடுப்ப எடுத்த விட்டர்னும்… இல்லைனா அது அந்த இடத்த சுத்தி இருக்குற எல்லாத்தையும் ஒன்னு விடாம சீரழிச்சிரும்…

 

அதத்தான் இங்க அவரும் செஞ்சாரு… ( இந்த காட்சி திரையில ஓடும்போது ஆதியோட கைகள் நடுங்குறத உணர்ந்த மீரா எதிர்பாராத விதமா அவனோட கைகள இருக்கி பிடிச்சுகிட்டு மீண்டும் அந்த கதையிலேயே மூழ்க ஆரமிச்சா… )

 

இதுக்கு மேலையும் இவன அவன் போக்குலயே இருந்த சரியாகிருவானு நம்புறது முட்டாள்தனம்னு முடிவுக்கு வந்தவரு வேகமா உள்ள போய் கையில ஒரு செய்திதாளோட வெளிய வந்தாரு… “யேய் முட்டாள் படிச்சவன்தானடா நீ இந்த இதுல இருக்குறத படி அப்படியாவது நான் சொல்றத நம்புறியானு பாக்குறேன் ” அப்படினு சொல்லி அத குடுக்க…

 

விரும்பமே இல்லாம அத கையில வாங்குன அப்பு… கொஞ்ச நேரத்துலயே அத கிழிச்சு தூக்கி வீசி எரிஞ்சிட்டு தன் எதிர்ல நின்னுட்டு இருந்த அவர புடிச்சு கீழ தள்ளி விட்டுட்டு… அவளத் தேடி எந்த எல்ல வரைக்கும் போக நான் தயாரா இருக்கேன் அப்படினு சொல்லி கத்திட்டு கதவ இழுத்து பட்டுனு மூடிட்டு வெறிபுடிச்ச மிருகம் மாதிரி வெளிய போனான்…

 

அவன் தள்ளி விட்ட வேகத்தோட தாக்கத்தால அவருக்கு பின் மண்டையில பலமா அடிபட்டு கொஞ்ச நேரம் சுயநினைவே இல்லாம கெடந்தாரு… கண் பார்வை தெளிந்ததும் அவன தேடிப் போக மனசு முன் வந்தாலும் உடம்பு ஒத்துழைக்கல…

 

முதலும் கடைசியுமா தன் காதலிய பாத்த அதே இடத்துலயே அவள மட்டுமே முழுசா நெனச்சு… என் காதல் உண்மையா இருந்தா அந்த பேப்பர்ல இருக்க வார்த்தைய பொய்யாக்கிட்டு நீ என் கிட்ட வா… இல்லைனா நானே உன்கிட்ட வந்தர்றேன் அப்படின்னு நட்ட நடு ரோட்டுல மண்டியிட்டு காத்திருந்தான்…

 

அச்சாலை வழி கடந்து போன நூத்துக் கணக்கான கால்கள் எல்லாம் அவன் கனவை காலால் மிதித்து நசுக்கிச் சென்றன… கடக்கும் ஒவ்வொரு காலின் முகமும் அவளுடையாதா என்ற எதிர்பார்ப்பு அவன் கண்களை மறைக்க… அதே சாலையில் அவனைப்போல கவனத்தைத் தொலைத்த ஒருவர் காரினை படுவேகத்தில் செலுத்தி வந்துகொண்டு இருந்தான்… பேரொளி செவியை அடைந்த போதிலும் பித்தன் எழுந்தபாடில்லை… வண்டிக்காரன் அடேய் என்று கத்தி ஹாரனின் ராச்சத ஒளியை எழுப்பி வண்டி விளக்கை கண்களுக்குள் பச்சிய போதும் கூட சிலைபோல கிடந்தான்…

 

பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்திய கணம் திக் திக்கென்ற நொடிகள் அவன் நலம் பார்க்க விரைந்தோடின வண்டிக்கும் அவன் நென்றிக்கும் நூலளவே தூரம் இருப்பினும் அந்த படபடப்பும் இல்லாமல் கைபேசியில் கதை பேசிக் கொண்டிருந்தான்…

 

“டேய் அப்பு”

 

“சொல்லுமா”

 

“நாளைக்கே ஊருக்கு கெளம்பி வா”

 

“ஏன் என்னாச்சு”

 

“என்னால சுத்தமா முடியல… ஏததோ பண்ணுது எனக்கு பயமா இருக்கு… உன்ன பாக்கனுமீ போல இருக்கு… மாட்டேனு சொல்லாம வந்துருடா செல்லம்”

 

“ம்ம்ம்”

 

ம்ம்ம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் ஏகப்பட்ட சந்தேகங்கள், கேள்விகள், தயக்கங்கள்… தாயினுடைய குரலில் தடுமாற்றம் கண்டதும் சிறிதளவும் தாமதிக்காமல் அடுத்த கணமே பஸ் ஏறினான்…

 

இதுவரைக்கும் இல்லாத ஆசைகளும் கேள்விகளும் பேருந்துப் பயணத்தின் போது தன்னால் ஏற்படும்… அது மட்டும் இன்றி இதுவரை மனது மறந்ததாக நம்பப்பட்ட சில நிகழ்வகளைக் கூட பயணங்கள் வெளிக்கொண்டு வந்துவிடும்…

 

சாமானியனுக்கே அப்படி எனும்போது தினம் தினம் திருப்பத்தை சந்திக்கும் அப்புவிற்கு பயணம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்?…. ம்ம்ம் சற்று கடினம்தான்… செய்தித்தாளில் புகைப்படத்துடன் சம்பவம் நடந்த இடத்தைக் குறிப்பிட்டு மீரா எனும் இருபத்தைந்து வயதுள்ள பெண் விபத்தில் பலி… அப்படி பதிஞ்சிருந்த அந்த வார்த்தைள் எல்லாம் அவன் கண்ணீரில் குளித்துக் கொண்டு இருந்தது….

 

தீராத துயரத்தில் தீயில் விழுந்த புழுவைப் போல வெந்து சுருண்டு கருகிப்போன இதயத்தின் சூட்டை ஆற்ற தாயின் மடி தேடி வந்தவனுக்குத் தெரியாது… இது வரை நடந்தது எல்லாம் அவன் கணக்கிலே இல்லை என்று…

 

…கதை தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்