Loading

“பயப்பட இதுல என்னம்மா இருக்கு….நான் ஆதிக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன் வேற ஒன்னும் இல்ல”

“சரிங்க சார்…ஆனா ஆதி இப்போ வீட்ல இல்ல…எங்க போனான்னு வேற தெரியல சார்…அவன எதிர் பார்த்துதான் நாங்க ரெண்டு பேரும் இங்க வாசல்லையே நின்னிட்டு இருக்கோம் ஆனா அவன் இன்னும் வரவே இல்ல…”

“அப்படியா…நீங்க பதராதீங்க….இங்க பக்கத்துலதான் எங்கையாவது இருப்பான்…வந்துருவான்…..”

“சரிங்க சார்”

“சரி எனக்கு ஒரு தவிர்க்க முடியாத முக்கியமான வேலை ஒன்னு இருக்கு….நான் உடனடியா கெளம்பனும்…நான் வந்த விஷயத்தை மறக்காம உங்க பையன் கிட்ட சொல்லிருங்க”

ஆதிய பாக்க வீட்டுக்கு வந்த அந்த போலீஸ் ஆஃபிசர சரி பாத்து போய்ட்டு வாங்க சார்…நீங்க போற வழியில ஆதிய பாத்தா….நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கோம்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுங்க சார் அப்படினு ஆதியோட அம்மா மீனாட்சி சொன்னாங்க….அதுக்கு அந்த ஆஃபிசரும் சரிங்கம்மா கண்டிப்பா சொல்றேன் அப்படினு சொல்லி வீட்ட விட்டு புறப்பட்டாரு….

ஒரு அரை மணி நேரம் கழிச்சு அவரு வண்டி போன திசைக்கு எதிர் திசையில….தான் ஆசை ஆசையா பாலும் தேனும் ஊட்டி வளத்த பையன் கண்ட கருமத்த குடிச்ச மாதிரி ஒரு ஒழுங்கே இல்லாம வர்றத பாத்த மீனாட்சிக்கு தூக்கி வாரி போட்டது…..

நான் பாக்குற இந்த காட்சி மாயையா இருந்திரக் கூடதானு மனசு கெடந்து அடிச்சுகிச்சு…..அவன் கிட்ட வர வர….அவன கண் கொண்டு பாக்க முடியல….ஏன்னா இதுக்கு முன்னாடி இந்த மாதிரியான ஒரு கோலத்துல அவன அவங்க பாத்ததே இல்ல…..

போதையில பாதை தெரியாம தள்ளாடி தள்ளாடி கால் போன போக்குல நடந்து வந்தான்…..அவனோட மேல் சட்டை அவனோட வயிற்று பகுதி வரைக்கும் ஈரமாகி இருந்தது…ஆனா எதனாலனு தெரியல….சட்டை பட்டன் ஒழுங்கா போடல….ஏற்ற இறக்கமா சீரில்லாம இருந்தது…. .தலையும் பாதி ஈரமா இருந்தது….அவனோட கண்ணு ரத்த சிவப்பா சிவந்து இருந்தது…..

வந்ததும் வாசல்ல நிக்குற ரெண்டு பேரையும் கடந்து வீட்டுக்குள்ள போய் அவன் எப்பவும் படுக்குற இடத்துலயே படுத்து தூங்கிட்டான்….

அவன எழுப்ப துளி கூட மனமில்லாத மீராவும் மீனாட்சியும் செஞ்சு வச்ச சாப்பாட ஒரு பொருட்டா கூட மதிக்காம வெறும் வயித்தோடயே போய் படுத்துட்டாங்க…. ஆனா தூக்கம் ஒரு நொடி கூட ரெண்டு பேர் கண்ணுலயும் வரல….

“ஆதி வீம்பு பண்றதும் கோவப்படுறதும் புதுசு இல்ல…..அத ரெண்டு பேருமே ஈசியா சமாளிச்சிருவாங்க….ஆனா இந்த மாதிரி போதை எல்லாம் பயன்படுத்துவான்னு எதிர்பாக்கவே இல்ல”

“ஆமா அத்த…..இது என்னமோ புதுசா இருக்கு…ஏன் இந்த மாதிரி பண்றான்னு தெரியல…அவன உங்கள தவிர யாரும் கேக்க முடியாது….நீங்க கேட்டாதான் பதில் ஒழுங்கா சொல்லுவான்”

“பதில் சொல்லுவான் ஆனா அந்த பதில வச்சிட்டு நான் என்ன பண்றது….அதான் என் புள்ளைய கைக்குள்ள வைக்காம இப்படி மீற விட்டுட்டேனே….. என்னப் போல புள்ள வளக்க முடியுமானு கர்வத்தோட இருந்தேன்….இப்போ அதெல்லாம் அடியோட அழிஞ்சு போன மாதிரி இருக்கு எனக்கு…. .”

“ம்ம்ம்ம்….இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல…நீங்க அவன நல்லாதா வளத்திருக்கீங்க…அதுல எந்த ஒரு கொறையுமே இல்ல….அவனும் நல்லாதான் இருந்தான் நான் அவன் வாழ்க்கைல வர்றதுக்கு முன்னாடி”

“ஏம்மா மீரா நீ வேற….கண்டத யோசன பண்ணி நிம்மதி கெட்டு அலையாத….எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாம…இவதா பொண்ணு தாலிய கட்டுனு சொல்லி திடீர்னு கல்யாணம் பண்ணி வச்சா யாருக்கா இருந்தாலும் மனநிலை மோசமாதான் இருக்கும்….இதுல அவன் மட்டும் விதி விலக்கா. என்ன…… ஆனா அந்த மனநிலை அவனோட போதைக்கு அடிமையாக்குற அளவுக்கு ஆழமானதானா சத்தியமா இல்ல……இவனுக்கு வேற ஏதோ பிரச்சன இருக்கு…..அதுனாலதான் இந்த மாதிரி பண்றான் “

“வேற எந்த பிரச்சனையும் இருக்காது…..நான்தான் அவனுக்கு பிரச்சனையே…..நீங்க அவன எனக்கு தாலி கட்ட சொல்றதுக்கு முன்னாடி எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிக்கனும்….இதுல அவனோட விருப்பம் என்னனு யாருமே யோசிக்கல”

“அந்த இக்கட்டான சூழ்நிலையில…அவன் கிட்ட விருப்பம் கேக்கனும்னுல எனக்கு தோனவே இல்லமா…..நம்ம என்ன சொன்னாலும் ஆதி செய்வான்ற நம்பிக்கையில சொன்னேன்….அவனும் மாட்டேனு சொல்லாம செஞ்சான்….அன்னைக்கு மட்டும் உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் ஆகாம இருந்திருந்தா…. இந்நேரம். உன் வாழ்க்கை என்ன கதி ஆகிருக்கும்னே சொல்ல முடியலமா…..”

“நீங்க சொல்றது உண்மைதான்…. ஆனா அப்படி நடந்திருந்தா அது என் கஷ்டத்தோட முடிஞ்சிருக்கும்…ஆனா இப்போ நாங்க ரெண்டு பேருமே சந்தோஷமா இல்லையே…..சொல்லப் போனா….என்னாலதான் ஆதியோட வாழ்க கெட்டு போச்சு…..பெரியவங்க முடிவு எடுக்கும் போது நானாவது ஆதிய பத்தி யோசிச்சு கல்யாணம் வேணாம்னு நிறுத்தி இருக்கனும்…..ஆனா அப்போதைக்கு ஏன் நல்லதுக்காக சுயநலமா யோசிச்சு எதுவுமே பேசாம இருந்துட்டேன்….அது எவ்ளோ பெரிய தப்புனு இப்போதான் புரியுது…..”

“அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல மீரா….. கல்யாணம் ஆகி இன்னும் ஒரு மாசம் கூட ஆகலைல….. போக போக சரி ஆகிரும்…..”

“இல்ல அத்த எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு…”

“நீ ஒன்னு நெனைக்காம கண்ண மூடி தூங்கு….காலைல பேசிக்கலாம்……”

அவளின் அத்தைக்கு இருக்கும் தைரியம் மீராவிற்கு இல்லை என்றால் எந்த வித ஆச்சர்யமும் இல்லை….காரணம் ஆதி மீராவைக் கண்டாலே பிஞ்சு கை மீது நெருப்பைப் பற்றி சுட்டெரிக்கிறான்…..மீராவின் பெயரைக் கூட தன் வாயால் ஆதி சொன்னதே இல்லை….ஆனால் ஆதியை வெறுக்க மீராவிடம் எந்த ஒரு காரணமும் இல்லை. இல்லை….ஆதியை மீராவைவிட வேறு யாராலும் இந்த அளவிற்கு காதலிக்க முடியாது…

அத்தையின் ஆறுதல் வார்த்தைக்கு அடங்காத மனம்….அவளுக்கு நடந்த அவசரக் கல்யாணத்தை சிந்தித்து தவித்துக் கொண்டிருந்தது…..

விலகவும் முடியாமல் நெறுங்கவும் முடியாமல் அவள் தவிக்கும் தவிப்பில் ஒழிந்திருக்கிறது அத்தனை கோடி காதல்……

கண் மூடாமலே அவ்விரவு கழிந்து உருக…. மறுநாள் விடிந்ததும் மீரா ஆதிக்கு உறக்கம் தெளிந்து விட்டதா என்று கவனிக்க அவன் அறைக்குள் நுழைய…..மூச்சடைக்கும் விதமாக மோசமான நாற்றம் வீசியது…..அடி வயிற்றில் இருந்து மேலே ஏதோ பிறழ்வது போலவும் தலை சுற்றுவது போலவும் தோன்ற… .கதவை மூடி நாலடி தள்ளி நின்றாள் மீரா……

ச்சை….என்ன இப்படி வீசுது…. முடியலடா சாமி…

“கதை தொடரும்”

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்