அவ அம்மா சொன்ன வார்த்தைகள் எல்லாம் நெருப்பு மாதிரி அவ மனசுல எரிஞ்சிட்டு இருந்தது… அதுனால படிப்புல இருந்த கவனம் மட்டும் அவளுக்கு ஒரு துளி கூட குறையவே இல்ல…. ரொம்ப புத்திசாலித்தனமா பிளான் பண்ணி படிச்சா….
பத்தாம் வகுப்பு தேர்வு நாள் நெருங்க நெருங்க பயமு பதற்றமு அவள நிலை குழைய வைத்தது…அவள் தடுமாறும் ஒவ்வொரு முறையுமே அவளின் தாய் சொல்தான் அவளுக்கு மருந்தாக இருந்தது….
பணத்தின் தேவை அந்த பள்ளியில் மிகவும் குறைவாக இருந்ததால்….கடன் வட்டியில் பாதியை மிகவும் சுலபமாக அவள் பெற்றோர்களால் கட்ட முடிந்தது….
எப்படியோ ஒரு வழியாக தேர்வு முடிந்து ரிசல்ட்டும் வந்தது…அந்த நாள் அம்மு வீட்டில் திருநாள்….அட இது என்ன புதுசா அம்மு எப்படி படிப்பானுதா இந்த ஜில்லாவுல இருக்க எல்லாருக்குமே நல்லா தெரியுமே அப்படினு அவளோட அப்பா பெரும பேச….அவ படிச்ச அந்த அரசு பள்ளியிலயே முதல் மார்க்க வாங்கி அசத்திட்டா…..
எத்தனையோ பேர் பாராட்டுனாங்க…வாழ்த்து சொன்னாங்க ஆனா அவ முகத்துல உண்மையான ஆழமான சிரிப்பே இல்ல மத்தவங்க முன்னாடி சும்மா கடமைக்கேனு போலியா சிரிச்சிட்டு இருந்தா…..அவ இப்படி இருக்குறதுக்கான அர்த்தம் யாருக்குத் தெரியுதோ இல்லையோ அவ அம்மாவுக்கு நல்லாவே தெரியும்ல….அவங்களும் எந்த ஆர்ப்பாட்டமுமே இல்லாம ரொம்ப அமைதியா அந்த ஸ்கூல் ரிசல்ட்டுக்காக காத்துட்டு இருந்தாங்க….
இருமா இனிப்பு வாங்க வெளிய போய்ட்டு வர்றேனு சொல்லிட்டு போன அப்பா திரும்பி வீட்டுக்கு வந்ததுமே அம்முவ பாத்து நம்மதா அப்படினு சைகை காமிக்கும்போது ஐய்யய்யோ அம்முவுக்கு இருந்த சந்தோஷமு மன நிம்மதியும் விலை மதிப்பு இல்லாதது….அத எந்த அளவைய வச்சுமே அளவிட முடியாது….உற்சாகத்தோட உச்சத்துல இருந்தா….அவ மட்டும் இல்ல…ஒட்டு மொத்த குடும்பமுமே கலகலனு இருந்தாங்க….
எந்த ஸ்கூல் நீ இத விட்டு போனீனா முதல் மார்க் என்ன சுத்தமா மார்க்கே வாங்க மாட்டனு சொன்னாங்களோ….அந்த ஸ்கூல் ஃபஸ்ட் மார்க்க விட பத்து மார்க் அதிகமா வாங்கிட்டா…அவ படிச்ச ஸ்கூல்லயும் முதல் மார்க் வாங்குனா…அது மட்டும் இல்லாம அவங்க மாவட்டத்துலயே முதல் மார்க் வாங்குனா….. அவங்க குடும்பம் அக்கம் பக்கம்னு மட்டும் இல்லாம டிவி காரங்களும் அவள கொண்டாட அரமிச்சாங்க….
இந்த சீன் ஓடிட்டு இருக்கும்போது மீரா ஆதிய பாத்து….இங்க பாரு இந்த மாதிரிதா நானும்…எனக்கு கூட இப்படித்தான் நடந்துச்சு அப்படினு சொன்னா….அதுக்கு அவன் யாரு நீ…நீ இந்த மாதிரி வைராக்கியமா படிச்சு முதல் மார்க் வாங்குன…இத நான் நம்பனுமா அப்படினு சிரிச்சுகிட்டே பேசிட்டு இருந்தான்….
நம்பலைனா போ… டேய் என்னடா இப்படி சிரிக்குற… வீட்டுக்கு வா நான் நியூஸ் பேப்பர் எடுத்து காமிக்குறேன் பாரு…. அத நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்…. அப்படினு மீரா சொல்ல சரி சரி அடுத்த சீன பாரு…படத்துக்கு வந்துட்டு ஆகாத பேச்ச எல்லாம் பேசிகிட்டுனு ஆதி சொல்ல…. ம்ம்ம் ரொம்பத்தா அப்படினு மூக்க சுழிச்சுகிட்டு முகத்த திருப்பிட்டு படத்த பாக்க ஆரமிச்சா…
ரிசல்ட் வந்து கொண்டாடி முடிச்ச களைப்புல அசந்து தூங்கி கெடந்தா அம்மு… மறுநாள் பத்து மணிக்கு மேல ஆகியுமே அவளால எந்திரிக்க முடியல….அம்மாவோட கூச்சல காதால கேக்க முடியாமதா கண்ண நல்லா கூட முழிக்காம எழுந்து போய் பல்ல வெலக்க ஆரமிச்சா….
எந்திரிச்சதும் உடனே போய்ருவா….படுத்த படுக்கைய மடிச்சு ஓரமா வைக்காம இந்த இடத்த விட்டு நகரக் கூடாதுனு உனக்கு எத்தன முறை நான் சொல்லிருக்கேன் அப்படினு அவள கரிச்சு கொட்டிகிட்டே அவ படுத்திருந்த பாய மடிச்சு வைக்க ஆரமிச்சாங்க அவளோட அம்மா….அப்போனு பாத்து அங்க இருந்த தலையணைக்கு கீழ ஒரு பேப்பர் இருக்குறத கவனிக்குறாங்க….
ஆனா அத பாத்தும் பாக்காதது மாதிரி எடுத்து மறச்சு வச்சிட்டு அடுத்த வேலைய பாக்க போய்ட்டாங்க….அம்முவுக்கு அந்த பேப்பர பத்தி ஒரு துளி நியாபகம் கூட இல்ல போல அதைப்பத்தி அவ கண்டுக்கவே இல்ல…
அன்னைக்கு நைட் எல்லாரும் தூங்குன பின்னாடி அந்த லெட்டர எடுத்து படிக்க ஆரமிச்ச அவளோட அம்மாவுக்கு அப்போதான் விஷயமே புரிய வந்தது…தன் மகள் அந்த கடிதத்தில் பெரிய மனிதத்தன்மையுடன் நடந்து கொண்ட செயல்களை குவித்து வைத்திருந்தது….
அவள் அந்த மாபெரும் தனியார் பள்ளியை விட்டு விலகிய நாளுக்கான தேதியைக் குறிப்பிட்டு நான் இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதனையும்…. ஏன் வெற்றி பெற வேண்டும்….அதற்கான அவசியம் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டிருந்தாள்…..
பகுத்து அறியும் அறிவு அவளுக்கு சற்று அதிகம் என்பதால் தினம் தினம் அவள் பெற்றோர் சந்திக்கும் பிரச்சனைகளை சற்று மௌனமாக கவனித்து…. தகவல்களை சேமித்த நுனுக்கத்தையும் அதற்கு முடிவாக அவள் எடுத்த சில நடவடிக்கைகளையும் வரிசையாக பட்டியலிட்டு இருந்தாள்…. சிறு மாற்றங்களின் முடிவே இந்த பெரிய மாற்றம்…. வாழ்க்கை மாற வேண்டும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும் என்பதால்தான் இந்த முடிவு என்று அவள் பள்ளி மாறியதைத் தெளிவாக குறித்திருந்தாள்…..
அவற்றை எல்லாம் ஒற்றை வரி விடாமல் படித்த அவளின் தாயின் கண்களில் பூரிப்பு கண்ணீராக மாறி வெளிப்பட்டது…
அந்த நேரம் பார்த்தான் தன்னுடைய ரகசியக் கடிதத்தைக் காணவில்லை என்று இருட்டில் அதைத் தேடி நோட்டமிட வந்தவள் தன் தாயின் கைகளில் இருப்பதைப் பார்ததும் அதிர்ச்சியுற்றாள்….அருகில் சென்று முகத்தைப் பார்த்ததும் ஏனென்று தெரியாமலே தேம்பி தேம்பி அழ ஆரமித்தாள்…..
ஆசையுடன் கட்டியணைத்துக் கொண்ட தாயின் தலையை தடவிக் கொடுத்தபடியே அழாதீங்கமா என்று அன்பாய் கட்டளையிட்டாள்….
வழக்கம் போல இல்லாமல் அன்று அவளின் தாயின் தொடுதல் சற்று வேறுபட்டு இருந்தது அந்த அன்பும் அரவணைப்பும் கலந்த தொடுதல் அவளுக்கு பிடித்திருந்தது…. ஆறுதலின் அடுத்த கட்டம் அது….
அம்மாவின் இந்த சந்தோஷமான முகம் தன் கண்களுக்கு விருந்தாய் அனுதினமும் வேண்டும் என்று ஆசைப்படாள் அம்மு….
இத்தனை மகிழ்ச்சிக்கு காரணமும் ஒரு கடிதம்தான்….
இதைப் பார்த்துவிட்டால் அம்மாவின் அன்பும் அப்பாவின் அரவணைப்பும் நமக்கு எட்டாக்கனியாக மாறிவிடுமே என்று நடுநடுங்கி பாதுகாத்து வைத்திருந்ததும் ஒரு கடிதம்தான்….
கடிதம்….இந்த வார்த்தையை சொன்னாலே இதழோரம் சிறு புன்னைகை பூத்துவிடும்…
…கதை தொடரும்…