Loading

பெரிய பை ஒன்றினை தோளில் தாங்கிக்கொண்டு….முகத்திலும் மனதிலும் சோகத்தையும் பல கேள்விகளையும் சுமந்துகொண்டு…தான் உடுத்தி இருந்த ஆடையின் நிறம் மூலமாகவும் மறுப்பைத் தெரிவித்து சிவப்பு நிற சட்டையுடன் வந்து நின்றான்….அதே சட்டையை அவன் அலமாரியில் கண்டவுடன் சில நேரம் மனம் கசந்தாலும்…அச்சட்டை அள்ளிப் பூசி இருந்த அவனது வாசனை…அவளை ஆரத் தழுவிக் கொண்டு சமாதானம் செய்தது…

 

மூச்சடைக்கும் அளவிற்கு அந்த வசத்தின் அணைப்பு அவளை பற்றிக்கொண்டு இருந்தது….தனிமைதான் உணர்வுகள் எதுவாயினும் எந்த விமர்சனமும் எழுப்பாமல் நம்மளை நாமாக இருக்க அனுமதிக்கும்…அப்பொன்னான வேளையில்…ரசித்தாள், சிரித்தாள், கொஞ்சினாள், அவனிடம் சொல்லாத அத்தனை ஆசைகளையும் அச்சட்டையின் மீது அடுக்கிக் கொண்டே போனாள்….அவள் காட்ட மறந்த கோபத்தை எல்லாம் கொஞ்சம் பொறுமையாக எடுத்துச் சொன்னாள்…..

 

பதிலுக்கு அந்த சட்டை அவளிடம் பேசியது என்றால்‌….அது இயற்கைக்கே அடுக்காது…ஆனால் இந்த காதலில் மட்டும் வித விதமாக ஏதோ ஒரு சக்தி வந்து சம்மந்தப்பட்ட இருவரையும் இணைத்து வைத்திருக்க போராடும்….அதே செயல்தான் அங்கேயும் அரங்கேறியது….

 

ஆசையாக கையில் எடுத்த அந்த சட்டையை…தொட்டுத் தடவி ரசித்தபடி இருந்த போது…அவள் கையில் புடைப்பாக ஏதோ தட்டுப்பட என்னவென்று உதறிப் பார்த்தாள்….அச்சட்டைப் பையில் இருந்து ஒரு லெட்டர் கீழே விழுந்தது…

 

ஆர்வத்தில் பிரித்தாள்…படித்தாள்…படிக்க படிக்க அவள் கண்ணில் கண்ணீர் கோர்த்தது….

 

மீராவிற்கு….உன்னை உதாசீனம் செய்ததற்காக என்னை மன்னித்து விடு என்று கேட்பதற்கு நான் ஒன்றும் கீழ்த்தரமான ஆள் இல்லை….நான் செய்த பாவத்தை எல்லாம் புன்னியமாக மாற்ற எனக்காக ஒரு வாய்ப்பு கொடு…உன்னை என் ஆசை தீர காதலிக்க விடு….முன்பு நடந்த விஷயங்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விருப்பமே இல்லை….உன்னைப் புரிந்து கொள்ளத் தொடங்கிய நாள் முதல்… எனக்குள்ளும் என் வாழ்க்கைக்குள்ளும் நீயும் உன் உணர்வுகளும் எவ்வளவு தூரம் புதைந்திருக்கிறீர்கள் என்று என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது….

 

உன்னுடன் பேசி சிரிக்கும் ஒவ்வொரு நொடியுமே இந்த அழகிய நொடிகளை எல்லாம் இழந்து விட்டு பித்தனைப் போல இத்தனை நாள் தனிமையில் நான் எப்படி இருந்தேன் என்று என் மனதிற்குள் நினைக்காத பொழுதே இல்லை…

 

முதல்முறை உன் கை பிடித்த போது…அந்த குருவிக் கூட்டத்திற்கு என் ஆன்மா சென்று முத்தமிட்டுத் திரும்பியது…அந்த இடைப்பட்ட நேரங்களில் உன் விரல் நுனி என் உடலையும் உயிரையும் ஏந்திக் கொண்டு காத்து நின்றது….உனக்கு எப்படி இருந்ததோ அது எனக்குத் தெரியாது…ஆனால் எனக்கு இப்படித்தான் இருந்தது….

 

கோபம் இருக்கத்தான் செய்யும் தவறில்லை…என் கோபத்தை மறக்க நீ எவ்வுளவோ தியாகம் செய்தாய்….ஆனால் உன் கோபத்தை மறக்க வைக்க என்னால் என்ன செய்யமுடியும் என்று யோசித்துப் பார்த்தேன்….அப்போது தோன்றிய ஒரே பதில்…. உயிர் பிரிந்து உடல் மக்கிப் போனாலும் ஏதோ ஒரு வடிவில் நான் உன்னைக் காதலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான்….அதைத்தான் நான் இப்போது செய்யத் தொடங்கி செய்து கொண்டு இருக்கிறேன்…

 

என்னுடைய மாற்றத்திற்கு என்ன காரணம் என்று குழப்பத்தில் இருக்கிறாய்…. அதற்கான சரியான பதில் உன்னிடம் வந்து சேரும்… அதுவரைக் காத்திரு….உன்னைக் காதலிக்க ஒரு வாய்ப்பு கொடு….இதை ஆசையாய் கேட்கவில்லை அனுமதியாய் கேட்கிறேன்….

 

அத்தனை நீளத்தில் கட்டில் இருக்கையில்….நீ உன்னைக் குறுக்கிக் கொண்டு தரையில் படுத்தபோது என் நிலை தடுமாறினேன்….என் தவறை திருத்திக் கொள்ள முடிவு செய்தேன்….இந்த கடிதம் எழுதும் தைரியம் எனக்கு அதிலிருந்துதான் வந்தது….இது உன் கண்ணில் எப்போது படும் என்று கூட எனக்குத் தெரியாது….ஆனால் இந்த கடிதம் உன் மனநிலையை மாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உண்டு….

 

உன்னைவிட எதுவும் எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை….உன்னை சமாதானம் செய்யும் வழியும் தெரியவில்லை…. காத்திருக்கிறேன் உன் கண்ணாடி வளையல் சினுங்கல் சத்தத்தில் மெய்மறந்து உறங்க…..என்று அந்த கடிதம் முடிந்தது…

 

சொல்லப் போனால் அவளுக்கு கோவம் என்பது துளி கூட இல்லை…. அவனிடம் புகுந்த இந்த மாற்றம் எதனால் தோன்றியது என்ற கேள்வியே அவளை அவ்வாறு பேச வைத்தது…. அதற்குப் பதில் விரைவில் தெரிவிப்பதாக எழுதியிருக்கிறான் அல்லவா…அது மட்டுமா… அருகில் அமர்ந்து கை கோர்த்து பேசியிருந்தாலே அவள் மடிந்திருப்பாள்…புதுப்புது வித்தை செய்து மயக்கும் அளவிற்கு இல்லை….சில செல்ல வார்த்தைகளே அவளுக்கு பொற்குவியலாகத் தெரியும்…அந்த ஜொலி ஜொலிப்பிலே அவள் கவலை மறையும்….அவ்வாறான வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வராவிட்டாலும் வண்ண மையால் வடித்துக் கொடுத்துவிட்டானே….

 

சிதைந்து கிடக்கும் மனநிலையை சிறு சாரல் பெய்தாலே சந்தோஷமாக மாற்றிக் கொள்ளும் மனநிலை படைத்த சாதாரண மங்கையவள்….. பேரின்ப பூவைத் தூவிக் காதலிக்க அனுமதி கேட்டபின் அவளால் எப்படி மறுக்க முடியும்…. சாய்ந்துவிட்டாள்….

 

அன்று இரவு சில செல்ல நாடகம் எல்லாம் அரங்கேறியது…அது சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்தது….

 

சமையலறையில் இரவு உணவு தயாரித்து எடுத்து வைத்துவிட்டு சுத்தம் செய்து கொண்டு இருந்த மீராவிடம்…

 

“என்ன டின்னர் ரெடியா”

 

“ரெடி ரெடி”

 

“டின்னர் மட்டும்தான் ரெடியா?”

 

“ஏன் சாருக்கு வேற என்ன ரெடியா இருக்கனும் (ஒற்றை புருவத்தை உசத்திக் கொண்டு கேட்டாள்)”

 

“சரி சரி விடு….ஆமா சாப்பிடுற மாதிரி இருக்குமா?”

 

“அது தெரியல….ஆனா நீங்க சமைக்குற அளவுக்கு டேஸ்டா இருக்குமானு தெரியல “

 

“ஓஓஓஓஓஓ…… பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்….இப்போதா புதுசா நான் சமச்சத சாப்பிடுற மாதிரி பேசுற…ஊர்ல ஒரு டைம் பண்ணி தந்தேன்ல…..உனக்கு என் சமையல் புடிச்சிருந்துச்சா?”

 

“ம்ம்ம் ரொம்ப….அப்போ சொல்லனும்னு தோனுச்சு ஆனா சொல்ல முடியல…இப்போ சொல்லக் கூடாதுனு நெனச்சேன்..ஆனா நீ என்ன சொல்ல வச்சிட்ட….ஏன்னா அன்னைக்கு விட இன்னைக்கு சூப்பர்….”

 

“நன்றி நன்றி “

 

“சரி வா கிச்சன்ல எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு….நாளைக்கு நீ கம்பெனிக்கு போட்டுட்டு போக டிரஸ் எடுத்து தனியா வச்சிட்டேன்…. நான் செய்யனும்னு நெனச்ச எல்லா வேலையுமே செஞ்சு முடிச்சிட்டேன்….”

 

“அப்போ என்ன வா சாப்பிடலாம் “

 

இருவரும் கதை பேசியபடியே இரவு உணவை உண்ணு முடிக்க….தூக்கம் சொக்கிப் பார்வை படுக்கையைத் தேட…

இருவரும் அவரவர் இடத்திற்கு சென்று படுத்தனர்….

 

மீரா என் கூடதா படுக்க மாட்ட…. அட்லீஸ்ட் என் பக்கம் திரும்பியாவது படுக்கலாம்ல என்று ஆதி கேக்க…. எனக்கு இதுதான் வசதியா இருக்குனு அவ முகத்த திருப்பாமையே பதில் பேச….அவள அவன் பக்கமா திரும்ப வைக்கனுமேனு திட்டம் தீட்டினான்….

 

 

 

…கதை தொடரும்…

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்