அவளுக்கு அந்த எண்ணம் இருந்ததில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை…
கடைக்குள் போனவன் கையில் ஒரு சிவப்பு நிற பையுடன் வெளியே வந்தான்….
மீரா இந்தா…இத பேக்ல வை…இத அப்புறமா பஸ்ல போகும் போது சாப்பிட்டுக்கலாம்….இப்போ வா…கீழ இறங்கு…தோசை இருக்கு இங்க…சாப்பிட்டுக்கலாம் அப்படினு ஆதி சொல்ல….இவளும் இறங்கி போனா…
கடை ரொம்ப பெருசு இல்ல… சாதாரண சின்ன கடைதான்…ஆனா அங்க கூட்டம் படுபயங்கரமா இருந்துச்சு…என்ன இது…இவ்ளோ பேர் இருக்காங்க…இங்க எப்படி நான் உக்காந்து சாப்பிடுவேன்…எனக்கு வேணாம் நீ வேணா உக்காந்து சாப்பிடு….நான் வீட்ல போயே எதாவது செஞ்சுக்குறேன்….அப்படினு சொல்லி மீரா கடைக்கு உள்ள வர மறுத்தா….
மீரா வா…. அதெல்லாம் ஒன்னும் இல்ல கடைனா நாலு பேர் இருக்கத்தான் செய்வாங்க…அது ரொம்ப சாதாரண விஷயம்….அப்படினு ஆதி சொல்ல….தன் காதுல எதுவும் கேக்காதது போல நின்னிருந்தா….
கடைக்குள்ள போய் மக்களோட மக்களா உக்காந்து சாப்பிட தயங்குற மீராவ எப்படி கையாலுறதுனு ஆதிக்கு எந்த ஐடியாவும் இல்ல….அவ பொறந்த அதே ஊர்லதான இவனும் பொறந்து வளந்தான் அதுனால அவளோட மனநிலைய அவனால ஈசியா புரிஞ்சுக்க முடிஞ்சது….ஆனா என்ன காலேஜ் வரைக்கும் படிச்சிருக்கா அப்படி இருந்த போதுமே சில விஷங்கள் எல்லாம் அவங்க ஊர் சைடு இருக்க பொண்ணுங்க மாத்திக்க கூட முயற்சி பண்ணல….
“ஆதி வா போலாம்…எல்லாரும் நம்மளவே பாக்குற மாதிரி எனக்கு தோனுது”
“சரி நட”
மீராவ விட்டுட்டு அவன் வயிற மட்டும் நெறைக்க அவன் ஒன்னும் பழைய ஆதி கெடையாதில்லையா…அதுனால அவ பின்னாடியே இவனும் போய்ட்டான்….
உள்ள போய் உக்காந்த அடுத்த நிமிஷமே சிவப்பு நிற பைய வெளிய எடுத்த மீரா அதுல இருந்த ஸ்நாக்ஸ சாப்பிட ஆரமிச்சா….
ம்ம்ம் இவள சொல்லி எந்த ப்ரயோஜனமு இல்லனு கம்முனு உக்காந்துட்டான் ஆதி….
ரொம்ப நேரமா இவன் நம்மளையே பாக்குறானே என்னவா இருக்கும்னு குழப்பத்தோட நொறுக்கு தீனிய கறுக்கு முறுக்குனு கடிச்சிட்டு இருந்த மீரா சட்டுனு திரும்பி பாத்தா….
பாத்த பிறகுதான் தெரிஞ்சது அவன் பாக்க மட்டும் இல்ல….பதமா சிரிக்கவும் செஞ்சான்னு…
“யேய் என்ன சிரிக்குற?”
“ஒன்னு இல்ல”
“சொல்லு என்னனு…ஏதோ இருக்கு”
“மீரா கம்முனு இரு மீரா…நானே பசில இருக்கேன்”
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே…உங்க சென்னைல பசில இருந்தா சிரிப்பு வருமா என்ன “
“என்ன ஓவரா நக்கல் பண்ற… இப்போ என்ன சொல்லியே ஆகனுமா?”
“ம்ம்ம் ஆமா… சொல்லு “
ஜன்னல் கண்ணாடியின் மீது தன் தலையை சாய்த்து வைத்துக்கொண்டு சிறுபிள்ளையைப் போல திண்பண்டம் நின்றுகொண்டே அவள் பேசும் பேச்சை ரசிக்க பல மணி நேரமாக ஆகாத போகாத கதை எல்லாம் பேசி…செல்லாத பொல்லாத கேள்வி எல்லாம் கேட்டு…. அவள் மிடுக்கிடும் பேச்சையும் முகச் சுழிப்பையும் பொய்யையும் பேச்சால் கறந்து எடுத்தான்….
இவன் ஏதோ பசியில் பிதற்றுகிறான் என்று ஆரம்பத்தில் அவள் நினைத்தாலும்…போக போக அவன் போக்கில் மாற்றம் கண்டாள்….
அந்த மாற்றம் அவளை அமைதிப்படுத்த….அவளின் வாயிலிருந்து வார்த்தைகளை சிந்த வைக்க அவன் செய்த லீலைகளோ பல….ஆனால் அவள் மசியவே இல்லை….இதற்கடுத்து அவன் ஏதாவது ஒரு வார்த்தை பேசி விட்டாலோ இல்லை செயலில் காட்டி விட்டாலோ…என் இதயத்தை அவனிடம் இழந்துவிட்டு பழையபடி தவிக்க வேண்டுமே என்று கட்டுப்பாட்டின் எல்லை வரை சென்று தன் இதயத்தை இருக்கமாக பிடித்து வைத்துக்கொண்டு அந்த இருக்கையில் அமர்ந்திருக்க….பேருந்தோ செல்ல வேண்டிய நிலையத்தில் சேர்ந்தது….
பேருந்திலுருந்து இறங்கியதும் ஆட்டோவின் உதவியுடன் ஆதி தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்ட்டை அடைந்தார்கள் இருவரும்….
அப்பெரிய கட்டிடத்தை அன்னாந்து பார்த்த மீராவின் புருவம் எட்டி வியப்பில் தொங்கிக் கொண்டு இருந்தது…..
லீஃப்ட் வழியா வீடு முன்னாடி நின்ன ரெண்டு பேருமே…. ஹ்ம்ம் எப்படியோ வீடு வந்து சேர்ந்துட்டோம்டா சாமி என்று பெரு மூச்சு விட்டார்கள்….
கதவைத் திறந்து உள்ளே போனதும் குளிக்கப் போன மீரா குளியல் முடிஞ்சதும் வெளிய வந்து உடனே கிச்சன் எங்க இருக்குனுதா தேடுனா….
“என்ன வேணும்”
“கிச்சன் எங்க”
அதோ என்று கிச்சனை நோக்கி கைய நீட்டி ஆதி வழி காட்ட….முகத்தில் சிரிப்புடன் அவ்வறைக்குள் நுழைந்தாள்….
புகுந்த வீட்டிற்கு போன உடனே பெண் பிடிக்க வேண்டிய முதல் சாம்ராஜ்யம் சமையலறைதான் என்று ஏதோ சில கூட்டம் சொல்வதை கேட்டு வளந்த இவளோ….உள்ளே சென்ற உடனே….அங்கிருந்த பொருள்கள் அத்தனையையும் அவள் கைப் போக்கில் எடுத்து மாற்றி அடுக்கி வைத்தாள்….
அனைத்தையும் வெளியே இருந்து பார்த்தவனோ…. மீரா இந்த நேரத்துக்கு என்னத்த உருட்டிட்டு இருக்க….சாப்பாடு வந்திருச்சு…வா சாப்பிட்டுட்டு தூங்கலாம்….நாளைக்கு நான் கம்பெனிக்கு வேற போகனும்….(வரவே மனம் இல்லாமல் செய்ததை பாதியோடு விட்டுவிட்டு திரும்பினாள்)
மேசையில் எதிர் எதிர் பக்கத்தில் உட்கார்ந்த இருவரும்….உணவு உண்ணும் போது மயான அமைதி கொண்டனர்…..அப்போது அவ்வமைதியை நிலையை மாற்ற ஆதியின் செல் ஃபோன் அழைப்பில் மீனாட்சி தோன்றினாள்….
ஆதி அவன் அம்மா மீது அளவுகடந்த பாசமும் மதிப்பும் வைத்திருந்தாலும் அவனுடன் வருவதற்கு ஆயிரத்தெட்டு விஷயங்களை காரணமாக அடுக்குவது அவனுக்கு பிடிக்கவே இல்லை….அவனது ஏக்கம் வெறுப்பாக மாறிப்போன நிலையிலும் அதை வெளிக்காட்டிக்காமல் பேசினான்…..
மீனாட்சிக்கும் அடி வயிற்றில் அலை புரண்டுதான் கொண்டிருந்தது அவனோடு பேசும் போது….அதான் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவள் எந்த வார்த்தையும் அவனிடம் பேசவில்லை….வெறும் தகவலை தெரிந்து கொள்ளும் வரை அவனிடம் பேசிவிட்டு….மீராவின் பக்கம் திரும்பினாள்…..
மீரா…..உங்க அத்த பேசுறாங்க என்று ஆதி அவளிடம் செல் ஃபேனை ஒப்படைக்க….இடது கையில் வாங்கி அப்படியே பேச வாய் எடுத்தாள்….வாயில் இருந்து வார்த்தை வருவதற்குள் கண்களில் இருந்து கண்ணீர் இறங்க ஆரம்பித்தது…..
“என்னடியம்மா இந்த அழு அழுதுட்டு இருக்க….அவன் எதாவது பேசுனானா உன்னைய….சொல்லு…நான் அவன் கிட்ட பேசிக்குறேன்…”
“அத்த அதெல்லாம் இல்ல….எனக்கு இப்பவே உங்கள பாக்கனும் போல இருக்கு…..”
“சரி விடு அழாத….நான் வேணா அடுத்த வாரம் அங்க வர்றேன் “
“நீங்க சும்மா எதாவது பேசாதீங்க…..நீங்க பொய்தா சொல்றீங்க எனக்கே தெரியும்…நீங்க வரவே மாட்டீங்க….மகன் தனியா
கெடக்கும் போதே வராத அம்மா மருமகளுக்காக எப்படி வருவாங்க “
…கதை தொடரும்…