Loading

மீரா இத்தனை எதிர்பார்க்க…ஆதி மீராவின் சமாதானத்தை மட்டுமே எதிர்பார்த்தான்….அதுவரை அமைதியா இருந்த அந்த பேருந்தில்….”யப்பா கன்டெக்டரே….பாட்டப் போடுப்பா…ரொம்ப அமைதியாவே போற மாதிரி தெரியுது….தூங்கிற கீங்கிற போறேன்”….என்று டிரைவர் சொல்ல….பேருந்தின் கடைசி சீட்டீல் ஒய்யாரமாக படுத்து இருந்த கன்டெக்டர் எழுந்து வந்து அந்தப் பாட்டுப் பெட்டியை மேலும் கீழுமாய் தட்டிக்கொண்டிருந்தார்….காலியான தொட்டியிலிருந்து குழாய் வழி வெளியே வரும் தண்ணீர் போல…திக்கி திக்கிக் வெளி வந்து கொண்டிருந்தது பாட்டு சத்தம்….

 

“யோவ் என்னயா ஆச்சு…கொர கொரங்குது”

 

“தெரியலயேண்ணே….காலைல எல்லாம் நல்லாதான இருந்தது…இப்போ என்ன கேடு வந்துச்சோ இதுக்கு….ஒன்னும் புரியல “

 

“எப்படிடா புரியும்….நல்லா சொகுசா கடைசி சீட்ல படுத்துட்டு வந்தீனா எப்படி புரியும்….அங்க படுத்து இருந்த நேரத்துக்கு ஒழுங்கா இத சரி பண்ணிருக்கலாமா “

 

“ஒரு அஞ்சு நிமிஷம் டைம் குடுங்க போதும்….உடனே சரி பண்ணிருவேன்…..”

 

“ம்ம்ம் கிழிச்ச நீ…..”

 

டிரைவர் எரிச்சலுடன் சிடுசிடுவென கன்டெக்டரைக் கத்த….அவர் அந்த பெட்டியைத் தூக்கிக்கொண்டு…. ம்ம்ம் ஆமா இன்னைக்குதா அந்த ஆண்டவன் புன்னியத்துல இந்த பஸ் கூட்டம் இல்லாம இருக்கு….அதுனால செத்த நேரம் படுத்துட்டேன்…அது அவருக்கு பொறுக்கல….இத்தனநாள் மூச்சு கூட விடமுடியாம சிக்கி செதஞ்சு…கடைசி படில தொங்கி…வேர்த்து விருவிருத்து பழைய அழுக்கு சட்ட மாதிரி கெடபேன்….அப்போ எல்லாம் இந்த ஆளுக்கு கண்ணு தெரிஞ்சதோ இல்லையோ….இன்னைக்கு பத்து நிமிஷம் படுத்தது உறுத்தி….என்னமோ அவர் மட்டும்தா வேல செய்ற மாதிரியும்…மத்தவங்க எல்லாம் சும்மாவே இருக்க மாதிரியும்ல பேசுறாரு….அப்படி இப்படி என்னு புழம்பிக்கொண்டே பின்னாடி சீட்டீல் உக்காந்து….அந்த பெட்டியில் பாட்டு கேக்க வைக்க என்ன செய்வது என்று தெரியாமல் நோண்டிக் கொண்டிருந்தார்…பாவம்….இந்த உலகில் உள்ள அத்தனை பஸ்களிலும் ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் ஆகவே ஆகாது எலியும் பூனையுமாகத்தான் அடித்துக் கொள்வார்கள் என்பார்கள் அல்லவா அந்த காட்சிதான் அப்போது நடந்து கொண்டிருந்தது….பார்ப்பதற்கே வேடிக்கையாக சிரிப்பூட்டும் விதமாக இருந்ததால்…இருவரும் கையை வைத்து வாயை மறைத்துக் கொண்டு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்…

 

இதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு மீராவிடம் பேச ஆரம்பித்தான் ஆதி….ஆனால் அவள் கேட்பதெல்லாம் கேட்டுக்கொண்டு பதில் மட்டும் பேசவே இல்லை….அவள் வாயிலிருந்து வார்த்தையை வர வைக்க இவனும் ஏதேதோ சம்பத்தம் இல்லாத கதையெல்லாம் கதைக்கிறான் ஆனால் அவள் மசிவதாகத் தெரியவில்லை….இருந்தாலும் முயற்சியைக் கைவிடாமல் பேச…..”ஆதி தொனந்தொனனு பேசாத ஆதி…எனக்கு காது வலிக்குது….கொஞ்சம் அமைதியா வா…”

 

இந்த மாதிரியான வார்தையை ஆதியைப் பார்த்து மீரா பேசுவாளா என்பதே அவனுக்கு அன்றுதான் தெரியும்….இந்த மாதிரி சடைப்பூட்டும் அளவிற்கு நான் என்னதான் பேசினேன் என்று அவன் பேசிய வார்த்தைகள் அத்தனையையும் நினைவு கூர்ந்து பார்த்தான்….அவனுக்கு எதுவும் தவறாகத் தென்படவில்லை….

 

ச்ச்ச்சே என்ன இது நம்ம வாய்ல இருந்தா இப்படி எல்லாம் வார்த்த வருது…பாவம் ஆதி….எந்த காரணத்துக்காக இப்படி பேசுனேனே தெரியாம கஷ்டப்படுவான்….என்னதான் இருந்தாலும் இப்படி வெடுக்குனு பேசி இருக்கக் கூடாது…ஐயோ…ஐயோ இப்படி பண்ணிட்டனே என்று அவளை அவளை கடிந்து கொண்டிருந்தாள்…..அவளுடைய குணம் ரொம்ப மென்மையான உணர்வுபூர்வமான ஒரு பூ போன்றது…அவள் நடிப்பெல்லாம் ஒரு அரை மணி நேரம் கூட தாங்காது என்று அவளுக்கே தெரியும்….ஆனாலும் வீராப்பாக முகத்தை வைத்துக்கொண்டு ஜன்னல் வழி தலையை திருப்பி வைத்திருந்தாள்…..

 

தான் பேசிய வார்த்தை அவனை சங்கடப்படுத்தி முகத்தை மாற்றி இருக்குமே என்று தலையை அவன் பக்கம் திருப்பி பார்க்க….அவன் ஏக்கத்தோட அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள்…. அவன் பார்வையின் தாக்கம் அவளை ஏதோ செய்ய….சட்டென தலை குனிந்து கொண்டாள்….

 

வானத்தில் இருந்து வீசிய நிலவொளி அவளின் கைகளில் அணிந்திருந்த வளையலில் பதித்திருந்த வெள்ளை நிறக் கற்களில் பட்டு அந்த ஒளி அவளின் வலது கண்ணத்தின் நடுப்பகுதியில் ஒளி வீசிக் கொண்டிருந்தது…..அவள் முகத்தில் பட்ட ஒளியோ அந்த நிலவொளியை தோற்கடித்துப் பிரகாசிக்க சொக்கியபடியே அவளின் கண்ணத்தில் அப்பகுதியை உருவாக்க காரணமாக இருந்த உயிர் செல்களுடன் செல்லமாக உரையாடிக் கொண்டிருந்தான்…..அவ்விடத்தில் நான் இருக்கவேண்டியது பதிலாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று தன் பொறாமையை பிதற்றியபடியே ரசித்து ரசித்து பூரித்துக்கொண்டிருந்தான்….

 

அவன் கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் காதுகள் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்….பேச வாய் எடுத்தான் கடைசியில் என்ன நினைத்தானோ தெரியவில்லை பேச்சை விட செய்கையில் அர்த்தம் சற்று அதிகமாக இருக்கும் அல்லவா அதனால்….அவள் வளையலைத் தாண்டி பேசத் துடிக்கும் வாயைப் போல தவித்து அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்த அந்த விரல் களை எட்டிப்பிடிக்க நினைத்து நெருங்கினான்….அவன் மனதில் நினைத்தது எப்படி அவளின் செவியைச் சேர்ந்ததோ தெரியல… சொல்லி வைத்தது போல அவன் நெருங்கும் போது அவள் திரும்ப இருவரின் நுனி மூக்கும் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டது…..அந்த ஸ்பரிசத்தில் மாட்டிக் கொண்ட இருவரும் அந்த நொடியின் சுவையை ருசித்துக் கொண்டிருந்தார்கள்….இருள் சூழ்ந்து அந்த பேருந்து இருக்க…. இருவரின் மூக்கு நுனியும் இதுவரை அவர்கள் பேசாத பேச நினைத்து பேசத் தயங்கிய காதலையெல்லாம் பரிமாறிக் கொண்டன….

 

மூக்கிற்கு கீழ் இருந்த காந்தவிசைக் கருவியோ ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டது…நேரம் அதிகமாக அதிகமாக இடைவெளி குறையத் தொடங்கியது….இருவரின் மூச்சுக்காற்றும் இதயத்தின் படபடப்பை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது….

 

ஓட்டுனர் போட்ட சடன் ப்ரேக்கில் தெளிந்தது மீராவின் மயக்கம்…சிரித்தபடியே நகர்ந்து சீட்டில் சாய்ந்து ஜன்னல் வழியே நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்…. ச்ச்ச்சே நமக்குனே எல்லாம் நடக்கும் போல….இவ்ளோ வந்துட்டு இல்லாம போச்சே….ச்சே ச்சே என்று சடைப்புற்ற ஆதி…..லைட்ட போட்டுட்டு….வண்டி அரை மணி நேரம் நிக்கும்ப்பா…சாப்பிடுறதுனா சாப்பிடுங்கனு கன்டெக்டர் சொன்னத கேட்டதும்…..எழுந்து கீழ போய்….கீழ நின்னு கிட்டு ஜன்னல் வழியாக மீரா நீ இரு…நான் இங்க எதாவது சாப்பிடுற மாதிரி இருக்கானு பாத்துட்டு வரேன் என்று சொல்லி கடைக்குள் நுழைந்தான்….

 

அவன் போனதற்கிடையில் அவன் இருக்கையில் விட்டுச்சென்ற ஃபோனை எடுத்து முகம் பார்த்து…கலைந்த முடியை சரி செய்துவிட்டு பவுடரைக் கையில் கொட்டி தோய்துவிட்டு பின் தன் முகத்தில் பட்டும் படாமல் தேய்த்துக்கொண்டாள்…..அது மட்டுமா…இன்னொரு முறை ஃபோனில் முகத்தை சரிபார்த்துக் கொண்டாள்… காரணம் என்ன சற்று முன்பு இருட்டில் கட்டிய கற்கண்டு கோட்டைதான்….அவன் பார்வையில் தான் எப்போதும் மங்கிவிடக் கூடாது என்ற பேராசை அத்தனை பெண்களுக்கும் இருக்கும்….

 

 

…கதை தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்