அதன் பிறகும் எத்தனையோ மனக்கசப்புகளை நான் சந்திக்க வேண்டி இருந்தது….அத்தனையும் என்னையும் என் மனதையும் காயப்படுத்தாமல் இருந்ததே இல்லை…அதிலிருந்து மீள நினைத்தாலும் அது என்னை என் போக்கில் விட்டதே இல்லை….
கல்லூரி காலம் முழுவதுமே கேலியும் கிண்டலுமாகத்தான் இருந்தது…அவ்வளவு ஏன்….ஆதிய பார்த்து இவளைத்தான் நீ கட்டிக்க வேண்டுமென்று அத்தை சொன்ன போதும் கூட….”ச்ச்சீ….இந்த குண்டம்மாவையா?…இவ பக்கத்துல நான் நின்னா…நான் தெரியவே மாட்டேன்….என்னால முடியாது…” என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் என் உடலை காரணமாக வைத்து கல்யாணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி அத்தனை போராட்டாம்…நேரம் காலம் என்ன நினைத்ததோ தெரியவில்லை…இருவரையும் ஒன்று சேர்த்தது…அவனுக்கு துளி கூட விருப்பம் இல்லை…ஆனால் அதற்கு காரணம் என் உடல் பருமனில்லை…அது எனக்கு மட்டும் அல்ல…ஒட்டு மொத்த குடும்பத்திற்கே தெளிவாக தெரியும்….
தாலியைக் கையிலே வைத்துக் கொண்டு அத்தனை வாக்கு வாதம் செய்தான்…ஆனால் யாரும் அவனை விடுவதாக இல்லை…அவனுக்கு என் உடல் பருமனைத் தவிர வேறு எந்தக் காரணமும் சொல்லத் தெரியவில்லை…அதனாலோ என்னவோ பல வருடம் மனநலன் சரி இல்லாத ஆளைப் போல…அதவே மீண்டும் மீண்டும் பிதற்றிக் கொண்டிருந்தான்….
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அங்கிருந்த அனைவரும் பொறுமையிழக்க அவன் கையில் பிடித்திருந்த தாலியை என் கழுத்தில் கட்ட வைப்பதற்காக அவன் கையை இருக்கப் பற்றிக் கொண்டு…அவன் உடலையும் கால்களையும் மூன்று நான்கு பேர் சேர்ந்து பிடிக்க…என் அத்தை அவன் கை கொண்டு என் கழுத்தில் அந்த தாலியை ஏற்ற வைத்தாள்….
ஊர் கூடி அர்ச்சதை தூவி கெட்டி மேலம் ஓங்கி ஒலிக்க….இன்று பிடித்த உன் கை விரல்களை காலம் முழுவம் விடாமல் இதை விட இருக்கமாக பிடித்து வைத்துக் கொள்வேன் என்று வாய் வார்த்தைகளை உதிர்க்க….கண்களில் ஆனந்தம் பொங்கி வர….மேடையில் ஒரு பந்தம் புதிதாய் தோன்றும்….ஜோடிப் புறாக்கள் இரண்டும் காதல் வானில் சிறகடிக்க… மணமக்கள் இருவரும் மின்னும் மின்மினியாய் ஜொலி ஜொலிப்பார்கள்…..நான் பார்த்த கேட்ட படித்த விஷயங்களில் எல்லாம் கல்யாணம் இப்படித்தான் இருந்தது….அதை தெரிந்து கொண்டதுதான் நான் செய்த தவறு போல….
ஒருவனின் உடலை அடக்கி கைகளை பிடித்து வலுக்கட்டாயமாக தனக்குத் தாலி கட்ட வைத்தால்…அந்த நொடி மனம் எந்த நிலையில் இருக்கும்…..அந்த உணர்வை வெளிப்படுத்த வேறொரு பாஷைதான் உருவாக்க வேண்டும்….சொன்ன பிறகும் கூட பிறருக்குப் புரியுமோ என்னமோ….அந்த நிலை அனுபவிப்பரைத் தவிர வேறு யாருக்கும் புரிய வாய்ப்பே இல்லை….
எந்த விருப்பமுமே இல்லாத ஒருவரை நம் சுயநலனுக்காக திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு அவரைக் காயப்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வில் என் கண்களில் வெள்ளம் புரல…தன் விருப்பம் பற்றி யாருக்குமே எந்த கவலையும் இல்லை என்னை பலியாடாய் பயன்படுத்தி தாலி கட்ட வைக்கிறார்கள் என்று ஆதி கண்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது….இவ்வாறே எங்கள் திருமணம் என்ற நாடகம் வற்புறுத்தலிலும் கட்டாயத்திலும் அறங்கேறியது….
திருமணம் முடிந்ததும் பஞ்சாயத்தில் வீற்றிருந்த பெரியோர்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விட்டார்கள்…. சம்மந்தப்பட்ட நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏறெடுத்துக் கூட பார்க்க முடியாமல்…ஓரே வீட்டில் முகத்தை மூடிக்கொண்டு வாழ்ந்தோம்…..
தாலிக்கு இத்தனை சக்தியா….அந்த தாலி என் கழுத்தில் வந்த பிறகு என் வாழ்க்கை முன்பை விட மோசமாக மாறப் போகிறது என்று எனக்கு தெரிந்திருந்தால்….என்னையும் ஆதியையும் இந்த திருமண சட்ட திட்டங்களில் இருந்து காப்பாற்ற எப்போதோ கல்யாண சம்மதத்தை மறுத்திருப்பேன்…..
திருமணம் ஆனால் எல்லாம் சரி ஆகிரும் என்கிற போலியான வார்த்தையை நம்பி தலையாட்ட….கழுத்துக்கு நேரே கத்தி தொங்குவது போல ஒவ்வொரு நாளும் நகர ஆரமித்தது….
நான் ஒருத்தி இருப்பதே அவனுக்குத் தெரியவில்லை…. திருமணம் ஆனா அடுத்த நாளே சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடுவது போல….அத்தனை உறவுகளையும் வெறுத்து வீட்டை விட்டு வெளியேறினான்….பத்து நாளுக்கு மேல் எதன் மூலமாகவும் அவனைத் தொடர்பு கொள்ளாதவாறு மறைந்திருந்தான்…..
அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று செய்தியை ஒவ்வொருத்தர் காதிலா பரப்ப….நாளடைவில் அது அவன் காதையும் எட்டியது….
தாய் பாசம் அவனை அங்க தங்க விடவில்லை… புறப்பட்டு வந்தான்….ஊரே திருவிழா கோலமாய் புத்தொளி வீச…திரும்பி போக மனமில்லாமல் இப்போது இங்கே இருக்கிறான்…..
இரண்டு நாளுக்கு முன்பு கூட திருவிழா கூட்டத்தில் அத்தனை பேர் கண் முன்னாலும் கேட்டதும் கசக்கும் கடுமையான வார்த்தைகளால் பேசி அவமானம் செய்ததும் எனக்கு மறக்கவில்லை….இப்போது ஏதோ பழைய கதைகளில் வானத்து தேவர்கள் வந்து சொன்னதும் அரக்கன் திருந்தி நல்வழிப்படுவது போல… காதுக்கு இனிமையாக காதல் வசனம் பேசுகிறான்…. காரணம் தெரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல என் வாழ்கை வழி தெரியாமல் போய்க்கொண்டு இருக்கிறது….நானும் மனதில் ஆயிரம் இருந்தாலும் சிரிப்புடனே நகர்கிறேன்…இதோ இப்போது வசந்தியின் வார்த்தையைக் கடந்து வந்தேன் அல்லவா அது போலத்தான்…..
மீராவின் மனது தான் முனங்குவதை நிறுத்தவே இல்லை….அந்த முனங்கள் சத்தம்…அவளைச் சுற்றி இருக்கும் நபர்கள் வெளியில் பேசும் பேச்சுக்களை காதுக்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது….யோசனைத் தீயில் வெந்தாள்….வேதைனையுற்றாள்….
சாமியிடம் வேண்டுவதற்கு எல்லாம் அவளுக்கு மனமே இல்லை….எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற எண்ணம் அவள் கூப்பி வைத்திருக்கும் கையைக் கூட பாரமாய்த் தோன வைத்தது….சாமியின் அலங்காரமும் மக்களின் ஆராவாரமும்….அவளின் ஆர்வத்தை எட்டிப் பிடிப்பதில் தோற்றுதான் போனது….
பாசமாக பறிமாறிப்பட்ட பந்தியில் அமர்ந்து உண்ணும் போதெல்லாம்….ஆதி அருகில் இல்லாத நாள் எல்லாம் தன் கண்ணீர் தட்டில் உள்ள உணவில் உப்பின் அளவைக் குறைக்க தேம்பி தேம்பி ஏக்கமுற்ற நொடிகள்தான் கண்முன் வந்து போனது….இப்போது அவள் அருகில் அமர்ந்து….மீரா… ம்ம்ம் என்ன யோசன நல்லா சாப்பிடு…பஸ்ஸ புடிக்கனும்ல…இடையில எல்லாம் நம்ம எங்கையுமே சாப்பிட முடியாது…இப்பவே நல்லா சாப்பிட்டுக்க….இங்க பாரு எப்படி வேர்க்குதுன்னு என்றெல்லாம் ஆசை வார்த்தைகளால் காதலைக் கோர்த்து சூட்டினால் மட்டும் முன்பு அழுகிப்போன பூவைப் போல என்னை நினைத்து மிதித்துப் பிதுக்கி சிதைத்தது இல்லை என்று ஆகி விடுமா….
எல்லாருமே சொல்லுவாங்க முன்னாடி நடந்தத மறந்துட்டு…இப்போ நடக்குற சந்தோஷமான விஷயங்கள அனுபவிச்சு வாழனும்னு….ஆனா இப்போ நடக்குறது உண்மையோ பொய்யோ அது எனக்கு தெரியாது….இருந்தாலும்…என்னால பழச மறக்கவே முடியல….
“என்னது…மறக்கவே முடியலையா?”
…கதை தொடரும்…