பாட்டி இவ்ளோ பெருமையா பேசுற அளவுக்கு நம்ம வாழ்க்கையில எதுவுமே நடக்கலனு நெறிக்கும் போதுதான் பதறுது அப்படினு அவ வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கைய நெனச்சு அவளோட இதயம் படபடனு அடிச்சுட்டு கெடந்தது…
திருவிழால சாமி சப்பரம் தூக்கிட்டு வந்துட்டு இருந்தாங்க….கையெடுத்து கும்பிடுறா ஆனா அவளுக்கு என்ன வேண்டுறதுனு தெரியல….வேண்டுனா மட்டும் கெடச்சிறவா போகுது அப்படின்ற அவ நம்பிக்கை அவளுக்கு…. காரணம் இதுவரைக்கும் அவ வாழ்க்கையில சந்திச்ச சில பிரச்சனைகள்தான்….
ரொம்ப நேரமா நின்னுட்டு கூட்டத்துல அங்கையும் இங்கையுமா நடந்து சோர்ந்து போய்ட்டா….இதுக்கு மேல ஒன்னும் முடியாது போதும் ஒரு நல்ல இடமா பாத்து ஊக்காந்தர்லாம்…..அப்படினு முடிவு பண்ணி உக்கார இடம் தேடி போனா….நெறையா ச்சேர் இருந்தது…ஆனா அதுல எல்லாத்துலயுமே ஆள் உக்காந்திருந்தாங்க….யாராவது எந்திரிச்சிற மாட்டாங்களா அந்த இடத்துல நம்ம போய் உக்காந்திர மாட்டோமான்ற ஒரு ஆசையில ஏக்கத்தோட பாத்துட்டு இருந்தா…..
அவ நெனச்ச மாதிரியே அவளுக்கு கிட்ட இருந்த ச்சேர்ல உக்காந்திருந்த ஒருத்தர்….ஃபோன்ல பேசிகிட்டே மெல்ல எழுந்தாரு….எந்திரிச்சு அவரு அந்த இடத்த விட்டு கொஞ்சம் நகந்து போற வரைக்கும் காத்துட்டு இருந்தா….ஏன்னா… அவசரப்பட்டு உக்காந்து…ஏம்மா யாரு நீ…நான்தான் உக்காந்திருந்தேன்ல….போமா அந்த பக்கம்…அப்படினு கூட்டத்துக்கு முன்னாடி கத்தி விட்டுட்டாருனா…ரொம்ப அசிங்கமா போயிரும்னு அவரு காலையும் ச்சேர் காலையுமே மாத்தி மாத்தி பாத்துட்டு இருந்தா…
அப்பாடி எப்படியோ ஒரு வழியா அவர் போய்ட்டாரு அப்படினு சொல்லி அந்த ச்சேர்ல உக்காந்து பெரு மூச்சு விட்டா….அப்போ காத கிழிக்குக்குற மாதிரி டம்முனு ஒரு சத்தம்….சத்தம் மட்டும்தான் கேக்குது…ஆனா அது எதுனாலனு அவளால கண் முழிச்சு பாக்க முடியல….அவளோட கால்கள் தரையில இல்ல அதுக்கு பதிலா தலை இருந்துச்சு இடுப்பு பகுதியில ஆயிரம் யானை ஒன்னா சேந்து மிதிச்சா எந்த அளவுக்கு வலி இருக்குமோ அந்த அளவுக்கு வலி…..
ஏய் ஏய்….. அச்சச்சோ என அங்கிருந்த அனைவரும் பதற்றம் அடைந்து இடம் பெயர்ந்து அவள் அருகில் வந்து தூக்க….அவள் அந்த ச்சேரோடு கவிழ்ந்து கீழே விழுந்து கிடந்தாள்….ஐயோ அம்மா…எந்திரிச்சு உக்காருமா நீ….இந்தா முதல்ல தண்ணி குடி…..ஏப்பா ஆஸ்பத்திரிக்கு போலாமாப்பா….அடி ரொம்பவா…வலிக்குதா….இல்ல இல்லப்பா ஆஸ்பத்திரி எல்லாம் வேணாம்….இங்க திருவிழா கூட்டத்துலயே முதலுதவி செய்ய ரெண்டு மூனு நர்ஸ் இருந்தாங்க அவங்கள மட்டும் யாராவது போய் இங்க கூட்டிட்டு வாங்க அப்படினு ஆளுக்கு ஒன்னா சொல்ல….அங்க இருந்த ரெண்டு சின்ன பசங்க நர்ஸ்ஸ கூப்பிட போனானுங்க…..
அவ உடம்பெல்லாம் கொதிக்குது வேர்த்து ஊத்துது….மூச்சு விட முடியாம சிரமப் பட்டு இடைவெளி விட்டு விட்டு பெரு மூச்சா விடுறா….அவளால சுத்தமா முடியல…..
அவ கட்டிருந்த சேலைக்குக்கும் அவ வலது கை முட்டிக்கும் வித்தியாசமே தெரியல….ரெண்டும் செக்கச்செவேலென இருந்தது…..அது மட்டும் இல்லாம விழும் போது கைய தரையில ஊனிருப்பா போல அவளோட ரெண்டு உள்ளங்கையிலயுமே ரத்தக் காயம் ஆகி இருந்தது…
நர்ஸ கூப்பிட போன ரெண்டு பசங்களுமே கையில முதலுதவிப் பெட்டியோட வந்துட்டானுங்க…பின்னாடியே நர்ஸ்ம் வந்தாங்க….வந்து அவங்க அவங்க வேலைய பாத்துட்டு இருந்தாங்க…..நர்ஸ் வந்ததுமே அவள சுத்தி இருந்த கூட்டம் அங்க இருந்து நகர்ந்து களைந்து போக ஆரமிச்சிருச்சு…..ஆனா ஒரே ஒருத்தர் மட்டும் மீரா பக்கத்துலயே நின்னிருந்தாரு…..சுத்தமா தொடச்சு எடும்மா….அந்த மருந்து இல்லையா இந்த மருந்து இல்லையானு லுங்கி கட்டுன டாக்கர் மாறி பேசிட்டு நின்னிருந்தாரு….
அண்ணா நீங்க போங்க…அவ்ளோதான் மருந்து போட்டாச்சுல…. நான் பாத்துக்குறேன் அப்படினு மீரா சொல்ல…இல்லமா பரவாயில்ல….நான் இருக்கேன் அப்படினு ரொம்ப பெருந்தன்மையோட பேசிட்டு இருந்தாரு….ச்சே ரொம்ப நல்லவரா இருக்காரே அப்படினு நம்மள மாதிரியே மீராவும் நம்பிட்டு…அவர பாத்து தன்மையா சிரிச்சு பேசிட்டு இருந்தா…..
பேசிட்டு இருக்கும் போதே தூரத்துல கேக்குற பைக் சத்தத்த வச்சே….என் வீட்டுக்காரர் என்னைய கூப்பிட வந்துட்டாருனு நெனைக்குறேன்….நான் இப்போ அவர் கூட வீட்டுக்கு கெளம்பி போயிருவேன்….சரி அண்ணா அவர்கிட்ட இங்க நடந்தத சொல்லாதீங்க….அவரு மனசு கஷ்டப்படும் அப்படினு சொல்லிட்டு….எழுந்து நின்னு பைக்கவே பாத்துட்டு இருந்தா…..
பைக் அவள நெருங்கி வந்து அப்புறம் நிக்கவும் செஞ்சது….பைக்க விட்டு மீராவோட வீட்டுக்காரன் அதாவது அருமை கனவன் இறங்கி மீரா கிட்ட வந்து நின்னு…… யேய் உனக்கு உண்மையாவே அறிவு இருக்கா….இல்ல அறிவு இல்லாத மாதிரி நடிக்கிறியா….லூசா நீ…..என் மானத்த வாங்குறதுக்குனே வந்திருக்கியா….. ச்ச்சே எல்லாம் என்ன பெத்து எடுத்தாளே அந்த புன்னியவதிய சொல்லனும்…..உங்கிட்ட எல்லாம் வந்து இப்படி இம்ச படனும்னு என் தலைல எழுதிருக்கு போல….அப்படினு ரொம்ப ஆக்கோரஷமா கோவத்தோட கத்தி பேச….அப்போ களஞ்சு போன கூட்டம் மட்டும் இல்லாம அங்க அங்க நின்னுட்டு இருந்த மொத்தக் கூட்டமு இப்போ இவங்கள பாக்க…..அந்த இடத்துல எந்த சத்தமு கேக்கல….மீராவோட புருஷன் சத்தத்த தவிர…… எல்லாரும் இப்படி நின்னு வேடிக்கை பாக்குற அளவுக்கு பண்ணீட்டீல அப்படினு சொல்லி கத்துறான்…அது மட்டும் இல்லாம….கடைசியா…. உடம்ப மட்டும் வளக்க தெரிஞ்சதுல…. அறிவோட இருக்கனும்னு தெரியலையா….வா முதல்ல வண்டில உக்காரு அப்படினு சொல்லி போய் வண்டில உக்காந்து ஸ்டார்ட் பண்ணிட்டான்……
கண்ணீர் தாரை தாரையா ஊத்த தல குனிஞ்சு எந்த பதிலுமே பேச முடியாம வாயடச்சுப் போய் இருந்த மீரா அமைதியா போய் பைக்ல அவன் பின்னாடி உக்காந்தா……. போய் பாத்து மெதுவா உக்காரு….என்னையும் பைக்கோட சேர்ந்து விழ வச்சிராத அப்படினு சொல்றான்….அப்போதான் அவளுக்கு விஷயமே புரிஞ்சுது…..அதுவரைக்கும் எதுக்கு திட்டு வாங்குறோம்னே தெரியாம வாங்கிட்டு இருந்தா…..இங்க நடந்தத அவனுக்குத் தெரிஞ்ச யாரோ கால் பண்ணி சொல்லிட்டாங்க போல அப்படினு அவன் பேசுன பேச்ச வச்சே தெரிஞ்சு கிட்டா…….
பாத்து கவனமா உக்காரு….அப்படினு சொல்றான்…உடனே தம்பி அப்மடினு யாரோ கூப்பிட என்னனு வண்டிய நிறுத்திட்டு திரும்பி பாத்தான்…..யாரு அது அப்படினு மீரா பாக்க….அவ அடிபட்டு இருந்தப்போ அவ கூடவே நின்னு பேசிட்டு இருந்த அந்த நபர்தான்….ஐயோ இவரு எதுக்கு இப்போ இவன கூப்பிடுறாரு…. இவரு பங்குக்கு எதையாவது சொல்லிற போறாரு அப்படினு பயத்தோடவே மீரா இருந்தா….
ஓடி பக்கத்துல வந்தவரு….
“தம்பி”
“என்ன….யார் நீங்க…..எதுக்கு என்ன கூப்பிட்டீங்க (கோபத்தோட கேட்டான்)”
“தம்பி தம்பி….கோவப்படாதீங்க….நான் சொல்றத ஒரு நிமிஷம்
கேளுங்க “
…கதை தொடரும்…
பாவம் antha pullaiye keela vilunthu kayaththoda irukku ivan vera இப்படி paduththuraane ❤️❤️super akka
❣️😂