Loading

கார்த்திக் மாயா காதலில் எந்த மாற்றமும் இல்லை… இருவரும் அவரவர் போக்கில் இருந்தனர்…மாயா தான் கார்த்திக் தினம் ஒருமுறை எப்படியாவது பார்த்து விட்டு தான் வருவாள்

 

கார்த்திக் அப்பாவும் அம்மாவும் கார்த்திக்கிடம் திருமணப் பேச்சை எடுத்தனர்..

அதற்கு அவனோ கீதுவிற்கு திருமணம் முடியும் வரை தான் முடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டான்..

அவர்களும் விட்டு விட்டனர்‌‌..

 

அன்று   கீதா பள்ளி முடிய போகும் நிலையில்  farewell day என்பதால் சாரி கட்டி அழகாக கிளம்பினாள்‌..‌கார்த்திக் அவளை கலாய்த்து தள்ளினான்.

 

கார்த்திக்: ஆன்ட்டி மாறி இருக்க..

 

கீதா;போடா லூசு.. கார்த்திக்கே அவளை பள்ளியில் கொண்டு போய் விட்டான்..

ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பினான்..

 

அவளும் சந்தோஷமாக சென்றாள்..மாயாவின் அப்பா அந்த பள்ளியின் பார்ட்னர் என்பதால் அவர் மூலமாக ஆஷிஷ்ஷை விருந்தினராக அழைத்தனர்..

 

கீதா தோழிகள் அனைவரும் அவனை சைட் அடித்துக் கொண்டு இருந்தனர்.. கீதூவுக்கு கடுப்பாகி விட்டது..ஏய் அவன் என்ன உங்களுக்கு ஹீரோ வா? இப்படி சைட் அடிக்கறீங்க.. என்றாள்

 

காவியா;ஏஏஏ…. உனக்கு என்ன போடி அவர் என்னோட க்கிரஷ் டி 

 

ஏனோ தெரியலை கீதாவிற்கு கஷ்டமாகி விட்டது‌‌.. அவளுக்கும் ஆஷிஷ்ஷை  பிடித்து தான் இருந்தது‌‌.. 

 

இதற்கு காரணமானவனோ  அங்கு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிக் கொண்டு இருந்தான்..

 

  விழாவும் முடிந்து விட…கீதாவும் கழிவறைக்கு போக போனாள்..

அங்கு யாரோ ஒருவன் நின்று கொண்டு இருந்தான் இவள் வருகைக்காக 

கீதாவுக்கு இருட்டில் ஒன்றும் தெரியாமல் போகவே‌‌ அவளின் கையை அவன் பிடிக்க போகவே அவள் கத்த வாயெடுக்கும்முன் 

 

பளார்…… 

 

 

ஆஷிஷ் தான் அடித்திருந்தான்

இவளுக்கு மயக்கம் வரவே கீழே விழப்போகும் முன் ஆஷிஷ் கைத்தாங்கலாக அவளை பிடித்து தூக்கி விட்டான்.. அவளை எழுப்புவதற்குள் அங்கு இருந்தவன் ஓடி விட்டான். பிளடி இடியட் என்று கத்தி விட்டு அவளை தண்ணீர் ‌தெளித்து எழுப்பி விட்டு 

 

  ஆஷிஷ் மேனேஜ்மென்ட்க்கு சென்று கண்டவன்லா கேம்ப்ஸ்குள்ள வரான் ஒரு பாதுகாப்பே இல்லயா?  இதான் first and last warning இனிமே இப்பிடி நடந்தா நான் சும்மா இருங்க மாட்டேன் என்று கீதாவின் கையை பிடித்து தரதரவென்று காருக்குள் ஏத்தினான்..

 

என்ன பண்றிங்க என்று கேட்டாள் கீதா

ஆஷிஷ்:ரெஸ்ட் ரூம் போறியே கூட உன் frnd யாரயாச்சும் கூட்டிட்டு போமாட்டியா 

 

கீதா :இவருக்கு என்ன லூசா ரெஸ்ட் ரூம் தானனு நம்ம போனோம் என்று நினைத்தாள் என்ன செய்றீங்க நான் வீட்டுக்கு போகனும் என்று  இறங்க போக 

 

ஆஷிஷ்: இறங்காத நான் உன்னை டிராப் பண்றேன் தனியா போறது சேஃப் இல்ல 

 

கீதா:அப்போ என் frnd?

 

ஆஷிஷ்:அவங்கள நான் அப்போவே கிளம்ப சொல்லிட்டேன் என்றான் 

 

கீதா Watchல் டைம் பார்க்க ஒன்பது எனக்காட்டியது..அச்சோ வீட்ல தேடுவாங்களே என்று புலம்பி வேறு வழி இல்லாமல் அவனுடன் கிளம்பினாள்.

 

ஆஷிஷ்: வீட்ல இறக்கவா?

 

கீதா:அய்யோ வேணாம் சார் இந்த பக்கம்  stop பண்ணிறங்க நான் போய்ருவன் 

 

அவள் போகும்வரை நின்று பார்த்துவிட்டு சென்று விட்டான்..

 

கீதா வீட்டிலோ அப்பாவும் அம்மாவும் பரபரப்பாக இருக்க அவள் வந்ததும் தான் இவர்களுக்கு உயிரே வந்தது..

கார்த்திக் இவளை தேட சென்றிருந்தான் அவனுக்கு கால் பண்ணி கூறி விட்டு அவனும் வந்து விட  நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் 

 

கார்த்திக் கோபம் வந்து அவனுக்கு என் கையில தான் சாவு கீதுக்கு  மட்டும் ஏதாவது ஆகி இருந்தா  

 

வாணி : விடு கார்த்திக் அதான் கடவுளா பார்த்து அந்த பையன அனுப்பிட்டாரு என்றார் அனைவரும் உணவு உண்டு விட்டு தூங்க சென்றனர்..

 

இங்கு மாயா விடம் விகாஷ் சம்மதம் வாங்க முயற்சி செய்து கொண்டு இருந்தார் ஆனால் பலன் பூஜ்ஜியம் 

 

மாயா: டாடி ஆஷிஷ் எனக்கு வேணாம் மேரேஜ் வேணாம் பிளிஸ் 

  

விகாஷ்: so கார்த்திக்க தான இன்னும் லவ் பண்ற?

 

மாயா: அதிர்ச்சியுடன் எப்படி தெரியும் 

 

விகாஸ்: நான் உன்னோட அப்பா..இப்போ சொல்லுறேன் இன்னும் இரண்டு நாள்ள உனக்கும் ஆஷிஷ்க்கும் கல்யாணம் 

இதுல எதாச்சும் தடங்கல் பண்ண simple  இந்த அப்பா மூஞ்சில முழிக்க முடியாது 

 

மாயாவுக்கு  கண்ணீர் தாரை தாரையாக வந்தது..

 

நீ எனக்கு வேண்டும் என்பதை விட நீ மட்டும் தான்டா வேண்டும் என்று சொன்னால் தகுமா?

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்