Loading

வணக்கம் மக்களே அடுத்த கதை எழுத போகிறேன் என்னோட முதல் கதைக்கு ஆதரவு குடுத்த போல இதுக்கும் குடுங்க …………….

 

இப்போ கதையோட ட்ரைலர் சொல்றேன் அப்புறம் கதையோட வருகிறேன் ………….

 

உந்தன் அன்பில் தொலைந்தேனடி  ………….

 

                    கிழ விழுந்து உருண்டு பிரண்டு சிரிச்சுட்டு இருந்தா நம்ப கதையோட நாயகி அபிநயா ……..” இப்போ என்ன நடந்துச்சுனு இப்படி சிரிச்சுட்டு இருக்க ” , அபியோட அம்மா லதா கேக்க அதுக்கு அவளோட தங்கச்சி திவ்வியா , ” இன்னிக்கு ரோட்ல ஒரு பையன் இவளை இம்ப்ரெஸ் பண்ணனும்னு பைக்ல சாகசம் பண்ணி கிழ விழுந்து வாருனான் “.

 

             திவ்வியா நடந்ததை அம்மாகிட்ட அழகா போட்டுகுடுத்துட்டா ,”பாவம் டி அந்த பையன் இதுக்கு இப்படி சிரிக்கிற “,அம்மா அந்த பையன்கு பாவப்பட அதுக்கு அபி ,” அம்மா அவன் திமிருக்கு பண்ணா நான் என்ன செய்வேன் ” , இதை கேட்ட அம்மா ,” பாத்து சிரி டி பாஞ்சாலி சிரிச்சா அதுனால தான் பதினாலு வருஷம் காட்டுக்கு போனாங்க எல்லாம் இழந்து ” இதை கேட்ட அபிக்கு கோவம் வந்துடுச்சு .

 

         ” அம்மா பாஞ்சாலி சிரிச்சனால அவங்க காட்டுக்கு போகல தர்மர் சூது ஆடுனதால தான் காட்டுக்கு போனாங்க எதுக்கு எடுத்தாலும் உடனே பொண்ணுகளையே குறை சொல்லுங்க ” , அவங்க அம்மாகிட்ட கோவப்பட்டா , ” ம்ம் எல்லாம் சரி தான் அபிமா நம்ப புரோக்கர் ஒரு நல்ல வரன் வந்துருக்குன்னு சொன்னார் பாக்கலாமா ” , அபி என்ன சொல்லுவாங்கனு ஆர்வமா பார்த்தாங்க ,” இப்போ எதுக்கு மா கல்யாணம் , ” அபியோட முகம் மாறிடுச்சு ,” இப்போ பண்ணாம எப்போ டி பண்ணுவாங்க வயசு என்ன ஆகுது ” , அம்மா  ஆதங்க பட ,” அம்மா ப்ளீஸ் மா இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணாம் ” , சொல்லிட்டு அந்த இடத்துலயே நிற்கலை அவ ரூம்க்கு போய்ட்டா ,” பார்க்கலாம் டி எத்தனை நாளைக்கு ஓடுறினு ” அம்மா சொன்னது காதுல விழுந்தாலும் விழாத போல போய்ட்டா ……………..

 

                                  பெரிய பங்களா குள்ள அந்த பெரிய கார் உள்ள வந்துச்சு ………டிரைவர் வண்டிய நிறுத்திட்டு பின்னாடி இருக்கிறவன்க்கு கதவை திறந்து விட்டான் ,” சார் வாங்க ” ,  ஒரு சின்ன தலை அசைபோட அவனுக்கு பதில் சொல்லிட்டு வீட்டுக்குள்ள இறங்கி போனான் நம்ப கதையோட நாயகன் பிரேம்.

                                    அவனோட அம்மா அவனை வரவேற்றாங்க ,” வா டா ஆபீஸ்ல வேலைலாம் எப்படி போகுது ” , அவனோட அம்மா அவன் தலையை நிவிட்டே கேட்டாங்க ,”நல்ல போகுது மா நம்ப கம்பனிக்கு ஆள் எடுக்கணும் மா அந்த வேலை தான் போயிடு இருக்கு ” , அவங்க அம்மா கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு ரூம்க்கு போக எழுந்தான் ,” சரி பா போயிடு பிரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம் ” , அம்மா கூப்பிட ,” சரி மா ” , சிரிச்சிட்டே சொல்லிட்டு ரூம்க்கு போனான் ……………

 

                          அபிக்கு கல்யாணம் பண்றதுல என்ன பிரச்னை ……….நம்ப ப்ரேமும் அபியும் எப்படி சேருவாங்க ……..வாங்க பாக்கலாம் நம்ப கதைல ………….டீஸர் போட்டுட்டேன் கதை மூணு நாளுல வரும் …………ஆதரவு குடுங்க ………….மக்களே …………….

                             இந்த கதை டெய்லி வராது நண்பர்களே ………..வாரத்தில் புதன்கிழமை அப்பரும் ஞாயிற்றுக்கிழமை தான் வரும் ஏன்னா எனக்கும் கிளாஸ் இருக்கு அதான் இன்பா வருவாள் கதைக்கு சப்போர்ட் பண்ண மாறியே இந்த கதைக்கும் சப்போர்ட் பண்ணுங்க கண்டிப்பா இந்த கதையும் உங்கள் மனதை கொள்ளைகொள்ளும் என்று நம்புகிறேன் ………💖💖💖💖💖

 

இப்படிக்கு ,

 

கிருத்திகா .

 

 

 

        

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்