❣️ 1 ❣️
Delhi airport 8pm,
வெயிட்டிங் ஏரியாவில் பிரைவேட் ஜெட்டில் வர போகும் அவங்க ஜெர்மன் பாஸ்காக இந்தியாவை சேர்ந்த அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ஸ்டேட் பிரான்சஸ் பிசினஸ் எம்டி அனைவரும் இதுவரைக்கும் வீடியோ காலில் கூட பார்க்காத அவர்களுடைய பாஸ் எப்படி இருப்பார்னு யோசிச்சு பார்த்துட்டு தங்களுக்குள் அவரை பத்தி பேசிட்டு இருந்தார்கள்.
பிரைவேட் ஜெட்டில் வந்து இறங்கினான் jonas smith. பார்க்க ஸ்டைலாக நீல கண்களோடு செம ஹேன்சமாக இருந்தான்.
அவன் guards and assistants கூட சேர்ந்து வெயிட்ங் ஏரியா வந்த jonas பார்த்த எல்லோரும் மத்திய வயது உள்ள எம்டியாக இருப்பாருன்னு நினைக்க ஒரு இளைஞன் வரவும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்.
Jonas, Hello gentleman’s
Hello sir, Welcome to India அவரை அனைவரும் வரவேற்க. அதை ஏற்று புன்னகைத்தவன் அவர்களிடம் சிறிது நேரம் பேசிட்டு கிருஷ் யாருன்னு ஆங்கிலத்தில் கேட்க கூட்டத்திலிருந்த ஒருவன் நான் தான் கிருஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்
(கிருஷ் தமிழ் நாட்டில் இருந்து போன பிரான்ச் MD)
நீங்க தமிழ்நாட்டில் எங்கிருந்து வர்றீங்க.
சார் நீங்க தமிழா பேசினேங்க?
ஆமாம்
உங்களுக்கு தமிழ் தெரியுமா?
நல்லவே தெரியும்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கு.
அவன் சொல்லியதைக் கேட்டு சிரித்தவன் நீங்க எங்கே
இருந்து வர்றீங்க என்று சொல்ல முடியுமான்னு திரும்பி தன்னுடைய கேள்வியை ஞாபகப்படுத்த
சாரி சார் சென்னை.
பைன், நாம எல்லோரும் அப்புறம் மீட் பண்ணலாம்னு சொல்லிட்டு புயல் வேகத்தில் வெளிவந்த ஜோனஸ் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த லக்ஸரி காரில் ஏறி போனான்
கார் அரை மணி நேரத்தில் பெரிய மார்டன் 5 அடுக்கு மாடி வீட்டின் முன் நின்றது.அவனுக்காக அவனோட டேட் (Robert smith) இந்திய வந்து தங்க நிறைய பிராபர்டிஸ் வாங்கி இருக்கிறார் அதில் இந்த வீடு ஒன்று.
Guards கதவை திறக்க வெளியே வந்த ஜோனஸ் வேகமாக உள்ளே சென்றான் (அவனோட பழக்கம் எப்போதும் டாப் ப்ளோர் இருப்பது ) லிஃப்டில் டாப் ப்ளோரில் அவனுக்கான அறைக்குள் நுழைந்தான்.
அறை ரொம்ப பிரம்மாண்டமாக ஆனால் தமிழ் கலாச்சார படி இருந்தது
ஜோனஸ் க்கு தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி எல்லாம் ரொம்ப பிடிக்கும்
ஜோனஸ் வித்தியாசமான ஒரு பையன் ஆமாம் அவனுக்கு 26 வயசு தான் ஆகுது.
அவன் பிறந்து வளர்ந்து எல்லாம் ஜெர்மனியில் உள்ள பேர்லின் ல தான் அவன் master’s degree (Arden University) படித்துட்டு அவங்க ஃபேமிலி க்கு சொந்தமான companies எம்டி ஆக இருக்கான்.