காதல் வெப்சைட் - ஆன்டி ஹீரோ/ஹீரோயின் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/காதல்-வெப்சைட்-ஆன்டி-ஹீர/ Wed, 01 May 2024 18:57:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.2 https://thoorigaitamilnovels.com/wp-content/uploads/2021/08/favicon-32x32-1.jpg காதல் வெப்சைட் - ஆன்டி ஹீரோ/ஹீரோயின் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/காதல்-வெப்சைட்-ஆன்டி-ஹீர/ 32 32 197060226 அன்றொரு நாள் இதே வானிலே -38 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-38/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-38/#comments Wed, 01 May 2024 18:57:19 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-38/ மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க ஷாத்விக்கோ சமுத்ரா பின்னேயே அலைந்துக்கொண்டிருந்தான்.  முதலில் அனைவருக்கும் இது சாதாரணமாக தெரிந்தபோதிலும் மஹதி தான் இது வழமைக்கு மாறானதென்று கண்டுகொண்டாள். காலை உணவை வேண்டாமென்று மறுத்துவிட்டு நேற்றே வாங்கி வந்திருந்த இரண்டு பை நொறுக்குத்தீனிகளை தன் வாய்க்குள் அடைத்தபடியே மஹதி வினயாஸ்ரீயிடம் பேசிக்கொண்டிருந்தாள். “ஏன் பாட்னர் இன்னைக்கு இந்த மாமா ஏதோ வித்தியாசமாக நடந்துக்கிறமாதிரி இல்ல?” என்று மஹதி கேட்க

The post அன்றொரு நாள் இதே வானிலே -38 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

]]>

Loading

மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க ஷாத்விக்கோ சமுத்ரா பின்னேயே அலைந்துக்கொண்டிருந்தான். 

முதலில் அனைவருக்கும் இது சாதாரணமாக தெரிந்தபோதிலும் மஹதி தான் இது வழமைக்கு மாறானதென்று கண்டுகொண்டாள்.

காலை உணவை வேண்டாமென்று மறுத்துவிட்டு நேற்றே வாங்கி வந்திருந்த இரண்டு பை நொறுக்குத்தீனிகளை தன் வாய்க்குள் அடைத்தபடியே மஹதி வினயாஸ்ரீயிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“ஏன் பாட்னர் இன்னைக்கு இந்த மாமா ஏதோ வித்தியாசமாக நடந்துக்கிறமாதிரி இல்ல?” என்று மஹதி கேட்க

“இல்லையே. எப்பவும் போல தானே மதினி பின்னாடி சுத்திட்டு இருக்காரு.”என்று வினயாஸ்ரீ கூற

“இல்ல வினு. நல்லா நோட் பண்ணு. எப்பவும் வீட்டுக்கு வந்தா மொத்த எடுபிடி வேலையும் செய்றவரு இன்னைக்கு கொஞ்சம் கம்மியா செய்றமாதிரியில்ல?” என்று தான் கவனித்ததை சொல்ல அப்போது தான் வழமைக்கு மாறாக சமுத்ரா நெடுநேரமாக வெளியில் இருப்பதை கவனித்தாள் வினயாஸ்ரீ.

“அட ஆமா மஹி. மதினி எப்பவும் ரூம்ல தான் இருப்பாங்க. ஏதும் தேவைனா மட்டும் தான் ஹாலுக்கு வருவாங்க. இன்னைக்கு இங்கவே ரொம்ப நேரமா இருக்காங்க.” என்று வினயாஸ்ரீ கூற

“அது தான் விஷயமே. மாம்ஸ் ஏதோ சொல்லி நம்ம எம்டன் பேத்தியை வெறுப்பேத்திட்டாரு போல. அதான் என் கூட பிறந்தவ ரிவென்ஜ் எடுக்குறா. இரு அவரையே கூப்பிட்டு விசாரிச்சிருவோம்.” என்று கூறிய மஹதி ஷாத்விக்கை அழைத்தாள்.

என்னவென்று கேட்டவனை வம்படியாக இழுத்து அமரவைத்தவள்

“என்ன மேட்டர் ஓடுது உங்க இரண்டு பேருக்கிடையிலயும்?” என்று மஹதி கேட்க

“ஒன்னுமில்லையே” என்று சாதாரணமாக சொன்ன ஷாத்விக்கை பார்த்தவள்

“ஒன்னுமில்லாமல் தான் காலையில இருந்து அவளை நீங்க துரத்துறதும் அவ உங்களை முறைக்கிறதுமாக ஒரு படம் ஓடுதா?”என்று மஹதி கேட்க

“அப்படியா தெரியிது?” என்று ஷாத்விக் அப்பாவி போல் கேட்க

“இந்த ஓவர் ஆக்டிங் தானே வேணாங்கிறது. சொல்லுங்க என்ன பஞ்சாயத்து உங்க இரண்டு பேருக்கிடையிலயும்?” என்று மஹதி பெரிய மனிதன் தோரணையில் கேட்க

“சில்வண்டெல்லாம் என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுச்சு.” என்று ஷாத்விக் சலித்துக்கொள்ள

“கடுகு சிறுசுனாலும் காரம் பெருசு மாம்ஸூ. சொல்லுங்க உங்க பஞ்சாயத்தை.” என்று மஹதி கேட்க 

“பெருசா எதுவும் இல்லை. உங்க அக்கா ஒரு விஷயம் சொன்னா. நிஜமாகவானு கேட்டுட்டேன். அதுக்கு இப்படி அலைக்கழிக்கிறா.” என்று ஷாத்விக் கூற

“அப்போ உங்களுக்கு இந்த பனிஷ்மண்ட் தேவை தான்.” என்று இப்போது வினயாஸ்ரீ சொல்ல

“என்னம்மா நீயே இப்படி சொல்லிட்ட?” என்று ஷாத்விக் அப்பாவியாக சொல்ல

“பின்ன மதினி எது சொன்னாலும் கரெக்டா தானே இருக்கும். அப்படி இருக்கும் போது ஆமானு கேட்டுக்கிறாமா அப்படியானு கேட்டா மதினிக்கு கோவம் வரத்தானே செய்யும்.” என்று வினயாஸ்ரீ சொல்ல ஷாத்விக்கோ மஹதியை பார்த்து

“என்ன இவ இப்படி சொல்லுறா?” என்று கேட்க

“அவ சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கு மாம்ஸூ. அக்கா ஒரு விஷயம் சொன்னதும் யாராவது அப்படியானு சந்தேகமாக கேட்டா அவளுக்கு கோவம் வரும். இதுவரைக்கும் வீட்டுல யாருமே அவகிட்ட அப்படியானு கேட்டதில்லைனா பார்த்துக்கோங்களேன்.” என்று மஹதி சொல்ல

“என்ன இரண்டு பேரும் புதுசு புதுசா ஒவ்வொன்னா சொல்லுறீங்க? என்கிட்ட எங்கம்மா நான் எப்ப எதை சொன்னாலும் இப்படி தானே கேட்பாங்க.” என்று ஷாத்விக் புலம்ப

“அது உங்க அம்மா உங்ககிட்ட கேட்டது. என்னைக்காவது அத்தையும் மாமாவும் அக்கா ஏதாவது சொல்லி அப்படி கேட்டுருக்காங்களானு யோசிச்சிப்பாருங்க.” என்று மஹதி சொல்ல 

“அது எப்படி கேட்பாங்க? அவங்களுக்கு அவங்க மருமக சொல்லு தானே வேதவாக்கு. ஆனாலும் இதுக்குள்ள இப்படியொரு விஷயம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல.” என்று ஷாத்விக் சொல்ல

“இதெல்லாம் நீங்க எதிர்பார்த்திருக்கனும் மாம்ஸூ. நீங்க தாலி கட்டி தாரை வார்த்து கூட்டிட்டு வந்திருக்கிறது எங்க அக்காவை. இதெல்லாம் நீங்க தெரிஞ்சிருக்க வேண்டிய சமாச்சாரம்”என்று மஹதியோ சந்தர்ப்பம் பார்த்து ஷாத்விக்கை கிண்டல் செய்ய

“இப்போ என்ன செய்றது?” என்று ஷாத்விக் அவர்களிடமே உதவி கேட்க

“இந்நேரம் நிச்சயம் அவ கால்ல விழுந்திருப்பீங்க. ஆனா அவ வீம்பு பண்ணிட்டு சுத்துறா. நான் சொல்லுறது சரியா?” என்று மஹதி கேட்க ஆமென்று சோகமாக தலையாட்டினான் ஷாத்விக்.

“சரி இப்போ என்ன செய்றீங்கனா அவளை இம்ப்ரெஸ் பண்ணுறமாதிரி ஏதாவது செய்ங்க” என்று மஹதி கூற

“அதுக்கு என்ன செய்றது?” என்று ஷாத்விக் சிறு பிள்ளை போல் கேட்க

“இங்க பாருங்க மாம்ஸூ கோடு போட்டு மட்டும் தான் கொடுக்க முடியும். இந்த ரோடு, யெலோ லைன் எல்லாம் எங்க போடனுமோ நீங்க தான் பார்த்து போட்டுக்கிறனும். போங்க போய் யோசிங்க போங்க.” என்று கூறியவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஷாத்விக்.

யோசித்தபடியே அறை கதவை திறந்தவனுக்கு ஏதோ யோசனை பளிச்சிட திறந்த கதவை மூடிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினான்.

அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு தலை நிமிர்ந்த சமுத்ரா உள்ளே வராது வெளியே செல்லும் ஷாத்விக்கை யோசனையோடு பார்த்தவள் தான் செய்துக்கொண்டிருந்த வேலையை மீண்டும் கவனிக்கத் தொடங்கினாள்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பியவன் மதியமும் வீட்டிற்கு வராமலிருக்க அமராவதி சமுத்ராவை தேடி வந்தார்.

“ஷாத்விக் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துருமா?” என்று கேட்க சமுத்ராவும் அப்போது தான் நேரத்தை பார்த்தாள்.

“இன்னும் மாமா வரலையா?” என்று கேட்டவள் தன் அலைபேசியை எடுத்து ஷாத்விக்கிற்கு அழைக்க அவனது அலைபேசி மொத்தமாக அணைக்கப்பட்டிருந்தது.

“எங்க போறேன்னு ஏதாவது சொல்லிட்டு போனாறா?” என்று சமுத்ரா அமராவதியிடம் கேட்க அவரோ மனதினுள்

“இவ புருஷன் எங்க போறான் வாரான்னு இவ கேட்டு தெரிஞ்சிக்காமல் என்கிட்ட விசாரிச்சிட்டிருக்க”என்று முணங்கியபடியே

“தெரியல சமுத்ரா.” என்ற பதிலை மட்டும் சொல்ல

“வெளியில முக்கியமான வேலை ஏதும் இருக்கிறதா சொல்லலை. எப்படியும் வந்திடுவாரு. நீங்க போய் சாப்பிடுங்க.” என்று சமுத்ரா கூற

“சரி நீயும் வந்து சாப்பிடு.” என்று அமராவதி கூற

“இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும். கொஞ்ச நேரத்துக்கு முதல்ல குடிச்சதே நிரம்ப இருக்கு.” என்றவள் தான் செய்து கொண்டிருந்த வேலை தொடர்ந்தாள்.

சற்று நேரத்தில் அவளுக்கு உறக்கம் கண்களை சுழற்ற அப்படியே உறங்கிப்போனாள். 

அவள் உறங்கியபின்பு தான் ஷாத்விக் வீடு திரும்பினான்.

வீட்டிற்கு வந்தவன் கையில் நிறைய பொதிகள் இருக்க அவனின் முகத்திலோ அளவுக்கதிகமான களைப்பு தெரிந்தது.

அவன் கையிலிருந்த பொதிகளை மஹதி மற்றும் வினயாஸ்ரீயிடம் நீட்ட அவர்களோ ஏதும் புரியாது அதனை வாங்கிக்கொள்ள

“அத்த ரொம்ப பசிக்கிது.” என்றவனிடம் கைகால் அலம்பிவிட்டு வரச்சொன்னவர், அவனுக்கு தேவையான உணவினை பார்த்து பரிமாறினார்.

பசி மயக்கத்தில் துரிதக்கதியில் ஷாத்விக் உணவினை காலி செய்ய மஹதியும் வினயாஸ்ரீயும் அவன் வாங்கிவந்த பொருட்களை ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதில் உணவு உடையென்று அனைத்து பொருட்களும் இருக்க ஒவ்வொரு பொருட்களாய் எடுத்து கடைபரப்பினர் இருவரும்.

உணவை முடித்துவிட்டு எழுந்தவனிடம்

“என்ன அண்ணா இதெல்லாம் மதினிக்கா?” என்று கேட்க

“ஆமா எல்லாம் அவளுக்கு தான். அவளை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி ஏதாவது செய்யச்சொன்னீங்களே இரண்டு பேரும் அதான் கடை கடையா ஏறி தேடி அலைஞ்சு வாங்கிட்டு வந்தேன்.” என்று ஷாத்விக் சொல்ல மஹதியோ அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே யாரும் அறியாமல் தன் மொபைல் கேமராவை ஆன் செய்து அனைத்தையும் ரெகார்ட் செய்யத்தொடங்கியிருந்தாள்.

“என்ன மாமா சொல்லுறீங்க இம்ப்ரெஸ் பண்ணுறதுக்கா?” என்று மஹதி மீண்டும் கேட்க

“ஆமா. என் பொண்டாட்டியை லைட்டா கடுப்பேத்திட்டேன். அவளும் கடுப்பாகி என்கிட்ட கோவிச்சிக்கிட்டா. சாரி சொல்லியும் கண்டுக்க மாட்டேங்கிறா. அதான் இம்ப்ரெஸ் பண்ணி சாரி கேட்கலாம்னு அவளுக்கு புடிக்கும்னு எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் பதினஞ்சு தெரு சுத்தி வாங்கிட்டு வந்திருக்கேன்.” என்று ஷாத்விக் விவரமாக கூற

“அவளுக்கு புடிச்சதை வாங்கிட்டு வந்தீங்க சரி. இது என்ன இது பொம்மை கீ செயின், ஸ்டிக்கர், அப்புறம் இது என்ன ஏதோ ஹோல்டர் மாதிரி இருக்கு?” என்று மஹதி தூக்கி காட்ட

“என் பொண்டாட்டிக்கு ஏதாவது வித்தியாசமா இருந்தா அதை வாங்கி வச்சிக்கிற பழக்கம் இருக்கு. அவ கபோர்டை திறந்து பார்த்தப்போ தான் எனக்கே இது தெரிஞ்சிது. அவ பயன்படுத்துற எல்லா பொருளும் ஏதோ ஒரு விதத்துல மத்தவங்ககிட்ட இருந்து வித்தியாசமா இருக்கும்.” என்று ஷாத்விக் கூற

“ஆமா அண்ணா. மதினிக்கு அந்த பழக்கம் இருக்கு. அவங்க வாங்குற பொருள் மத்தவங்க பயன்படுத்துற மாதிரி இருக்கக்கூடாதுனு ரொம்ப தேடி வாங்குவாங்க.” என்று வினயாஸ்ரீயும் கூற

“அது சரி தான். ஆனா எதுக்கு இந்த கீ செயின் எல்லாம்? ” என்று மஹதி சற்று வித்தியாசமான பொம்மை உருவமைப்பை கொண்ட அந்த கீ செயினை எடுத்து ஆட்டியபடியே கேட்க

“இது அவளோட ஹேண்ட் பேக்கிற்கு. அவ இப்போ யூஸ் பண்ணுற கலருக்கு இது சரியா இருக்கும்னு தோனுச்சு. அதான் வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று ஷாத்விக் சொல்ல

“இந்த ஸ்டிக்கர்?”

“இது கஸ்டமைஸ்ட் லேப்டாப் ஸ்டிக்கர்ஸ். அதுல பாரு ஒவ்வொரு மோட்டிவேஷன் கோட்ஸ் எழுதியிருக்கும். உங்க அக்காவோட பர்சனல் லேப்டாப்பை பார்த்திருந்தா நீ இந்த கேள்வியை கேட்கமாட்ட.” என்று ஷாத்விக் சொல்ல

“அப்போ இதுவும் அவ வேலையா? நானும் கூட வேற யாரோ இவளை பத்தி தெரியாமல் ஒட்டிட்டாங்கனு நெனைச்சேன்.” என்று மஹதி சற்று ஆச்சர்யத்துடன் சொல்ல

“அதுக்கெல்லாம் வாய்ப்பில்லைனு நல்லா தெரிஞ்சபிறகும் இப்படி நடந்திருக்கும்னு சொல்லுற பாரு, அங்க நிற்கிறமா நீ.” என்று ஷாத்விக் சொல்ல

“சரி சரி அதை விடுங்க. ஆமா இதெல்லாம் எப்படி என் கூட பிறந்தவளுக்கு பிடிக்கும்னு நம்புறீங்க?” என்று மஹதி சந்தேகத்துடன் கேட்க

“பிடிக்குமானு தெரியல. ஆனா வாங்கிட்டு வந்தததுல ஏதாவது ஒன்னாவது அவளுக்கு புடிச்சிருந்தா போதும்.” என்று ஷாத்விக் கூற

“பிடிக்கலனு சொல்லிட்டானா என்ன செய்வீங்க?” என்று மஹதி கேட்க

“வேற என்ன செய்றது வாங்குன பொருளையெல்லாம் ரிட்டர்ன் செய்யவேண்டியது தான். இல்லைனா வீட்டு முன்னாடி கடையை போட்டு வாங்குனதையெல்லாம் பை வன் கெட் வன் ஆபர்ல வித்திடலாம்.” என்று ஷாத்விக் கூற

“அப்போ பேக் அப் ப்ளானோட தான் பர்சசிங்கே நடந்திருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்.” என்று மஹதி கிண்டல் செய்யவென்று கலகலவென்று இருந்தது அந்த இடம்.

நடந்த அனைத்தையும் பதிவு செய்திருந்த காணொளியை பேசிக்கொண்டே சமுத்ராவின் மொபைலைக்கு அனுப்பி வைத்தாள் மஹதி.

அப்போது அங்கு வந்த அமராவதி

“சமுத்ரா இன்னும் சாப்பிடலை ஷாத்விக்.” என்று அமராவதி கூற

“என்ன அத்த சொல்லுறீங்க? இவ்வளவு நேரம் சாப்பிடலையா? ஏன் அவளுக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா?” என்று ஷாத்விக் பதட்டத்துடன் கேட்க

“அதெல்லாம் இல்லப்பா. கொஞ்ச நேரங்கழிச்சு சாப்பிடுறேன்னு சொன்னா‌. சரின்னு கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடப்போகும் போது நல்லா தூங்கிட்டு இருந்தா அதான் எழுப்ப மனம் வரல.” என்று அமராவதி நடந்ததை சொல்ல

“சரி நீங்க தட்டுல சாப்பாட்டை போட்டு தாங்க. நான் எழுப்பி அவளை சாப்பிட வைக்கிறேன்‌.” என்று சொன்னவன் அமராவதியிடம் உணவை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான் ஷாத்விக்.

உள்ளே அமராவதி சொன்னது போல் சமுத்ரா அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க அவளை மெதுவாக எழுப்பி சாப்பிட வைத்தான்.

அவள் உணவை முடித்ததும்

“எங்க போயிருந்தீங்க?” என்று கேட்க என்று சமுத்ரா ஷாத்விக்கிடம் கேட்க

“ஒரு சின்ன வேலையா வெளியில போயிருந்தேன். ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன். அதான் லேட்டாச்சு.” என்று ஷாத்விக் பதில் கூற

“ம்‌… அடுத்த வாரம் உதய்யோட மேரேஜ். ஏதாவது கிஃப்ட் வாங்க போகனும். நீங்க ப்ரீயா?” என்று சமுத்ரா கேட்க

“ஆங் போகலாம். இன்னைக்கு சாயந்தரம் போவோமா?” என்று ஷாத்விக் கேட்க

“ம்ம்‌. போகலாம்.” என்று சமுத்ரா சொல்ல

“சரி அப்போ சாயந்திரம் 5 மணிக்கு ரெடியா இரு. உதய் மேரேஜிற்கு கிஃப்ட் வாங்கிட்டு அப்படியே வெளிய சாப்பிட்டு வரலாம்‌.” என்று ஷாத்விக் கூற சம்மதமாய் தலை அசைத்தாள் சமுத்ரா‌.

    The post அன்றொரு நாள் இதே வானிலே -38 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>
    https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-38/feed/ 2 17812
    அத்தியாயம் – 16 : தடுமாறும் தாரகையே! https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/#respond Wed, 24 Apr 2024 18:27:49 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/ மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்த அமரேந்தர், பிரம்மை பிடித்தது போல அப்படியே அமர்ந்திருந்தார். அவர் காதுகளுக்குள், “ருத்ரன்னா நெருப்பு! அவன் மேல யாரும் இரக்கப்படக் கூடாது..” என்று அவன் கூறியது எதிரொளித்துக் கொண்டே இருந்தது. அக்னி மீதான அவனது காதல், அவனது உள்ளத்தைக் கனிய வைத்துவிட்டது என்று தான் நினைத்திருந்தார் அவர். ஆனால் அவன் கனிவெல்லாம் அக்னியிடம் மட்டும் தான் என்று ஒற்றை வார்த்தையை.. ஒற்றைப் பார்வையில் புரியவைத்து விட்டானே

    The post அத்தியாயம் – 16 : தடுமாறும் தாரகையே! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>

    Loading

    மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்த அமரேந்தர், பிரம்மை பிடித்தது போல அப்படியே அமர்ந்திருந்தார்.

    அவர் காதுகளுக்குள், “ருத்ரன்னா நெருப்பு! அவன் மேல யாரும் இரக்கப்படக் கூடாது..” என்று அவன் கூறியது எதிரொளித்துக் கொண்டே இருந்தது.

    அக்னி மீதான அவனது காதல், அவனது உள்ளத்தைக் கனிய வைத்துவிட்டது என்று தான் நினைத்திருந்தார் அவர். ஆனால் அவன் கனிவெல்லாம் அக்னியிடம் மட்டும் தான் என்று ஒற்றை வார்த்தையை.. ஒற்றைப் பார்வையில் புரியவைத்து விட்டானே அவன்?!

    அதில் சற்று கர்வமும் பிறந்தது அவருக்கு!

    ‘என் பிரதாப், பெண் வாசம் பட்டதும் உருகிக் குழையற களிமண்ணு கிடையாது..

    அவன் கற்பூர ஜோதி!

    அவன் தீயின் வாசம்!

    அவன் எரிமலையின் தாகம்!

    அவனுக்குள்ளிருக்கற அந்த நெருப்பு.. அதோட சூடு என்னென்னைக்கும் அவனை விட்டுப் போகாது..’ என்று மிதப்பாக எண்ணிக் கொண்டார்.

    ஆனாலும் நிதர்சனம் மருட்டியது அவருக்கு. இதுநாள் வரை ருத்ரனின் மூலமாக, இந்தக் காளிக்ஷேத்திராவின் விடுதலையை மட்டுமே கணக்கிட்டிருந்தவர், இனி ருத்ரனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார்.

    அந்த நினைவலைகளிலேயே மிதந்து கொண்டிருந்தவருக்குக் காளிக்ஷேத்ரா கூடச் சற்று பின்னுக்குச் சென்றுவிட, இரண்டு நாட்கள் பூட்டிய வீட்டுக்குள் தனித்தே கிடந்தார் அவர்.

    ஊண், உறக்கம் பாராது விட்டத்தை வெறித்த பார்வையில் கவலை மேகங்களே அதிகம் தளும்பியிருந்தன!

    இரண்டாம் நாள் இரவு, அவரது வீட்டுக் கதவு படபடவெனத் தட்டப்பட்டது.

    சிரித்து நேரம் வரைக்கும் அதைக் கூட உணராமலேயே தனது படுக்கையறையில் தரையில் கால் நீட்டி அமர்ந்து விட்டத்தை வெறிந்திருந்தார் அவர்.

    மீண்டும் மீண்டும் அது அவசரமாய் தட்டப்பட்டதில் சற்று சுய உணர்வு தெளிந்து மேலே எழுந்தார்.

    இன்னமும் தட்டப்பட்டுக் கொண்டிருந்த கதவினைப் பார்த்தவர், ஒரு பெருமூச்சுடன் அங்கே செல்ல, வாசலில் நின்றிருந்தான் ருத்ரன்!

    முழு சிவப்பு நிற கோட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து, காலில் பளபளக்கும் ஷூவும், ஜெல் வைத்து வாரிவிடப்பட்ட தலைமுடியுமாகப் பார்ப்பதற்கு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி போன்று தோற்றமளித்தான்.

    அவன் எப்பொழுதுமே தோற்றத்தில் அதி கவனமாய் இருப்பவன் தான்!

    ‘மாமா.. ஆடம்பரத்துக்கு ஆசைப்படக் கூடாது.. இருக்கறதை வச்சு சிறப்போட வாழணும்.. சந்தோசம் பணத்துல இல்ல.. எளிமையா இருக்கறது நல்ல பண்பு.. இப்படி ஆயிரம் விஷயம் சொல்லுவாங்க.

    ஆனா இதையெல்லாம் சொல்லறவங்க.. கோடி கோடியா பணத்தை மூட்டைக் கட்டி வச்சிருக்கிற பெரிய பணக்காரங்க தான்!

    அவனுங்களுக்கு அவனுங்க மட்டுமே பணத்தைப் பெருக்கணும்!

    ஏழை.. இவனுங்க சொல்லற தத்துவத்தை எல்லாம் கேட்டுட்டு வெறும் ஏழையாவே சாகணும்.

    நாம எதுக்கு மாமா பணத்தையும், ஆடம்பரத்தையும் வெறுக்கணும்?

    பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல.. ஆனா, பணத்தால வாழ்க்கையே இல்லாம போனவங்க இருக்காங்க..

    நம்மளோட நடை, உடை, பாவனை தான ஒரு இடதத்துல நம்மள முன்னாடி கொண்டு போய் நிறுத்தும்.’ என்று பேசுபவன் தான்.

    அதன்படியே இடத்துக்குத் தகுந்தபடி நாகரிகமாக உடை அணிபவனும் கூட.

    அனால் இன்று அவன் வந்திருக்கும் கோலம் கண்டு அமரேந்தரே பிரம்மித்துப் போனார்!

    “ப்.. பிரதாப்.. என்னதிது?” என்ற அவரது கேள்வியில் அத்தனை திகைப்பு இருந்தது.

    அவரது பார்வையில் சட்டெனச் சிரித்த ருத்ரனோ..

    “என்ன மாமா அப்படிப் பார்க்கறீங்க? நல்லா இருக்கா இல்லையா?” என்று அவன் இரு கை விரித்துக் கேட்க, அந்தப் பிரம்மிப்பு விலகாமலே, அவரது தலை அசைந்தது.

    அதில் இன்னமுமாய் அவன் சிரிக்க, அந்தச் சிரிப்பொலியில் தன்னை மீட்டவர்..

    “என்ன பிரதாப் இது? எங்க கிளம்பிட்ட?” என்று கேட்க, அவனோ..

    “இன்டெர்வியூவுக்கு..” என்றான் குரலில் நக்கல் தொனிக்க.

    அதில் புருவம் சுருக்கிய அமரேந்தரோ.. “இன்டர்வியூவுக்கா? எந்த இன்டெர்வியூ?” என்றார் சற்றுக் குழப்பத்துடன்.

    அதில் ருத்ரனின் இதழில் ஒட்டியிருந்த நக்கலின் அளவு கூட..

    “நம்ம சர்க்கார்ல எனக்கு வேலை கொடுக்கப் போறாங்களாம் மாமா.. அதுக்காகப் பெரிய பெரிய பதவில இருக்கறவங்க எல்லாம் என்னைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க..” என்றான் கேலியான பாவனையுடன்.

    அவன் கூற்றை அப்பொழுது தான் புரிந்து கொண்ட அமரேந்தரோ..

    “யா.. யார் கூப்பிட்டிருக்காங்க? எப்போ கூப்பிட்டாங்க? ஏன் இதை நீ முன்னாடியே என்கிட்டே சொல்லல?” என்று அடுக்கடுக்காய் பதட்டத்துடன் கேள்விகளை அடுக்கினார்.

    அதில் மெல்லச் சிரித்துக் கொண்ட ருத்ரனோ, இருபுறமும் அவரது தோளைப் பிடித்துக் கொண்டு..

    “மாமா.. மாமா.. எதுக்கு இத்தனைப் பதட்டம்?

    ஒரு சாதாரண மீட்டிங் தானே? அதுக்கு எதுக்கு இவ்வளவு பயப்படறீங்க?” என்று இலகுவான குரலில் பேசிக் கொண்டிருந்தவன், சட்டென அந்த இலகுத் தன்மை மாற..

    “ருத்ரன் பேரைக் கேட்டா, மத்தவங்க தான் மாமா பயப்படணும்!

    ஹ்ம்ம்.. இத்தனை வருஷத்துல நம்ம சர்க்காருக்கே இப்போ தான் தைரியம் வந்து என்னை நேர்ல பார்க்க நினைச்சிருக்காங்க..” என்றவன் அடுத்து சிரித்த சிரிப்பில் கொடூரம் வழிந்தது.

    மீண்டும் சட்டெனத் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவன்..

    “போயிட்டு வந்துடறேன்..” என்று மிக அலட்சியமாகக் கூறி வெளியேற முனைய, அமரேந்தர்..

    “தனியாவா?” என்றார் குரலில் சற்று பதட்டத்துடன்.

    அவரை நிதானமாகத் திரும்பிப் பார்த்த ருத்ரனோ, கண்களில் கண்ணாடியை மாட்டிக் கொண்டே.. தலையை மட்டும் அசைத்துவிட்டுத் திரும்பினான்.

    அவனுடைய நடையின் வேகத்துக்கு இணையாகச் சற்று ஓட்டமாகப் பின் தொடர்ந்த அமரேந்தரோ, அவன் காரில் ஏறப்போகும் முன் சற்று தயங்கி..

    “அ.. அக்னி? அவளைத் தனியா விட்டுட்டு..” என்று பாதியில் நிறுத்த, அதைக் கேட்டுச் சந்தோஷமாக.. சத்தமாகச் சிரித்த ருத்ரனோ..

    “அக்னிக்கு ஆபரேஷன் முடிஞ்சுடுச்சு.. சீக்கிரம் கண்ணு முழுச்சுடுவா. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைனு சொல்லிட்டாங்க..” என்று கூற, இன்னமும் அமரேந்தரின் கண்களில் தயக்கம் தெரியவும், நன்றாக அவர் புறம் திரும்பி..

    “அவளை அவளே பார்த்துப்பா.. கவலைப்படாதீங்க..” என்று கூறிவிட்டு காரில் ஏறிக் கிளம்பினான்.

    அவன் கிளம்பி காளிக்ஷேத்ராவின் எல்லையைத் தாண்டுகையில், இங்கே மருத்துவமனையில் அக்னியின் கருமணிகளில் அசைவு பிறந்தது.

    அவளது அறையிலேயே அமர்ந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்த செவிலி எதேச்சையாக அதைப் பார்த்துவிட, உடனடியாக அந்தச் செய்தி மருத்துவமனையின் டீனான ஆண்டனிக்கு கடத்தப்பட்டது.

    தனது ஜூனியர்கள் சூழ வேகமாக அந்த அறையை அடைந்தார் ஆண்டனி.

    புருவச் சுலிப்புடன் கண்விழித்தவள், தானிருக்கும் இடம் உணர்ந்து, மரணமாய் வலிக்கும் தனது இடது மார்பை அழுத்தி விட்டபடி மேலே எழ முயன்றாள்.

    அதற்குள் அவளது அறைக்குள் வந்துவிட்ட ஆண்டனியோ..

    “நோ.. நோ.. டோன்ட் ஸ்ட்ரைன் யுவர்செல்ப்.. அப்படியே படுத்திருங்க..” என்று கூறிவிட்டு சில பரிசோதனைகள் செய்ய முற்பட்டார்.

    அதற்குள் அக்னி ஏதோ பேச வர, அவளை நிமிர்ந்து பார்த்து மென்மையாகச் சிரித்த ஆண்டனியோ..

    “பொறும்மா.. முதல்ல நான் என்னோட டெஸ்ட் எல்லாம் எடுத்து முடிச்சுக்கறேன்.. அப்பறம் உன்னோட சந்தேகங்களை எல்லாம் தீர்த்துக்கலாம்..” என்று அவர் கூற, அதில் சற்று அமைதியுற்று அவள் சம்மதமாய் தலையசைத்தாலும், அவளது கண்களோ அலைப்புறுதலாய் அந்த அறையையே சுற்றி வந்தது.

    யாரையோ பரிதவிப்பாய் தேடிய விழிகள், தன் தேடலுக்கு விடை கிடைக்காத காரணத்தால் சோர்ந்து போக, அந்த விழிகளில் இருந்து சிறுதுளி கண்ணீரும் வந்து விழுந்தது.

    அதை நிமிர்ந்து பார்த்த ஆண்டனியோ, அவளது கண்களின் பரிதவிப்பையும், பரிதவிப்போடு வந்த கண்ணீரையும் மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டார்.

    அதனது பரிசோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டவர், தனது மற்ற மருத்துவர்களிடம் அதைக் காண்பித்து ஏதேதோ கூறிவிட்டு, அவர்களை வெளியே அனுப்பினார்.

    பின்பு அந்த அறைக்கதவைச் சாற்றிவிட்டு வந்தவர், ஒரு மென்னகையுடன் அங்கிருந்து ஒரு நாற்காலியை எடுத்து அவளது படுக்கைக்கு அருகே போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு, அதே மென்னகையுடன்..

    “சொல்லும்மா.. உனக்கு என்ன சந்தேகம்? என்னமோ கேட்க வந்தியே?” என்றார் மிகச் சாதாரணமாக.

    கண்களில் கலவரத்தைத் தேக்கியவளோ..

    “ரு.. ருத்ரன் எங்க? அவ.. அவருக்கு ஒன்னும்.. ஒன்னும் ஆகலையே..” என்று தவிப்புடன் கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தார் ஆண்டனி.

    அவளது கண்களில் இதோ விழுந்து விடுவேன் என்பது போலக் கண்ணீர் தேங்கி நிற்க அதைக் கண்டவர், சட்டெனச் சத்தமாகச் சிரித்தார்.

    அவரது சிரிப்பில் இன்னமுமாய் குழம்பிப் போன அக்னியோ, முற்றிலுமாய் தடுமாறித் தான் போனாள்!

    ***

    மறுபுறத்தில் காளிக்ஷேத்ராவின் கடற்கரை நோக்கி ருத்ரனின் கார் பறந்து கொண்டிருந்தது.

    அந்த கார் எல்லையைத் தாண்டும் முன், ருத்ரனோ..

    “டேய்.. வண்டியை நிறுத்து..” என்று குரல் கொடுக்க, அடுத்த வினாடியே கார் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

    காரிலிருந்து வெளியே எழுந்து வந்தவன், இடுப்பில் கை வைத்து ஆகாயத்தைப் பார்த்தான்.

    அவனுடன் இருந்த சமீர்.. “என்ன ஜி.. என்னாச்சு?” என்று வினவ..

    ருத்ரனோ.. “நம்மளை எங்க வரச் சொல்லியிருக்காங்க?” என்றான் ஒரு மார்க்கமான குரலில்.

    அதற்கு சமீரா..

    “தாஜ்மஹால் பேலசுக்கு!..” என்று குழப்பமாகக் கூற, கேலியாக உதட்டைப் பிதுக்கியவன்..

    “ரொம்பப் பெரிய இடம் தான் இல்ல?” என்றான் குரலில் சற்று ஏளனம் பொங்க.

    அதில் மேலும் குழம்பியவன்.. “ஆமாம் ஜி.. ஆனா..” என்று அவன் ஏதோ கூற வரும் முன் ருத்ரனின் வார்த்தைகள் அவனைத் தடை செய்தன.

    “அப்போ அவ்வளவு பெரிய இடத்துக்கு நாம எப்படிப் போகணும்?” என்று அவன் கேட்க, சமீரின் கண்கள் விரிந்தன!

    மகிழ்ச்சியுடன்.. “எனக்குப் புரிஞ்சுடுச்சு ஜி..” என்று கூறிய சமீர், ருத்ரன் வாய்மொழியால் கூறாத கட்டளையைச் செயலாற்றக் கிளம்பினான்.

    இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல் தாஜ் மஹால் பேலஸ். “கேட் வே ஆஃப் இந்தியா” என்று கூறப்படும் மும்பையில் இந்தியாவின் நுழைவாயிலுக்கு அருகே அமைந்த ஹோட்டல் அது.

    கி.பி. 1903ல் திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் இந்தியாவிலேயே மிகவும் பிரசித்திப் பெற்றது.

    சாதாரணமானவர்கள் எல்லாம் தூரத்தில் நின்று புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் இடமது.

    இங்குத் தான் ருத்ரனை அழைத்திருந்தார்கள் “அவர்கள்!”

    அந்த அவர்கள்.. இதுவரை கபீருக்கு வேலை கொடுத்து வந்த இந்தியாவின் அரசியலுக்கு.. இல்லை இல்லை.. அரசியல்வாதிகளுக்கு முதலீடு செய்யும் பணக்கார முதலைகள், பல மாநில முதல்வர்கள், காபினெட் அமைச்சர்கள்.

    இத்தனை நாட்களாய் கபீருக்கு வேலை கொடுத்து வந்தவர்கள், இப்பொழுது கபீரை நசுக்கிவிட்டு, ருத்ரனுக்கு வேலை கொடுக்க முன் வந்திருந்தார்கள்.

    அதைத் தான் ருத்ரன், அமரேந்தரிடம்.. “இன்டெர்வியூவுக்கு கூப்பிட்டிருக்காங்க..” என்று கூறியிருந்தான்.

    அந்த காபினெட் அமைச்சர்களும், பணக்கார பிசினஸ்மேன்களும். முதல்வர்களும் ஹோட்டல் வாயிலுக்கே வந்து ருத்ரனுக்காகக் காத்துக் கொண்டிருக்க, அதில் ஒருவனான மிதுனம் அங்கேயே தான் இருந்தான்.

    தன் தந்தையையே கொன்றுவிட்டு, காளிக்ஷேத்ராவின் அரியணையை பறித்துக் கொண்ட ருத்ரன் மீது அவனுக்கு அடங்காத பழிவெறி இருந்தாலும், வீரியத்தை விடக் காரியமே பெரிது என்றெண்ணி இவர்களுடன் கூட்டு வித்திருக்கிறான்!

    அவர்கள் எல்லோரும் ஆவலாக வாசலே அபார்த்துக் கொண்டிருக்க, மிதுனின் பி.ஏ அவனை நோக்கி அவசரமாக ஓடி வந்தான்.

    வேகமாக வந்தவன், குனிந்து மிதுனின் காதுக்குள் ஏதோ கிசுகிசுக்க, மிதுனின் முகமோ சட்டென மாறியது.

    அவசரமாக மற்றவர்களிடம் திரும்பிய மிதுன், “வாசல்ல ஹெலிகாப்டர் நிக்குது..”என்று கூற அவர்களோ அதிர்வுடன் அவனைப் பார்த்தார்கள்.

    அவர்களில் பெரும் செல்வம் படைத்த, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான ஹர்ஷத் கான்..

    “நாம இங்க ரகசியமா மீட் பண்ணறதா தான அவனுக்குச் சொல்லியனுப்பினோம்?

    இப்படி எல்லாருக்கும் தெரியற மாதிரி பகிரங்கமா ஹெலிகாப்டர்ல வந்து, அதுவும் இவ்வளவு பெரிய ஹோட்டல் வாசல்ல வந்து இறங்கியிருக்கான் அவன்?” என்று சற்று நெஞ்சை பிடித்துக் கொண்டு கேட்க, மிதுனோ..

    “இப்போ அதைப் பத்தி எல்லாம் பேசறதுக்கு நமக்கு நேரமில்லை.. அவன் வந்துட்டான். அவனை நாம நேர்ல போய்க் கூட்டிட்டு வரணும்.

    ஆரம்பத்துல இந்த மாதிரி அடியாளுங்களை எல்லாம் கொஞ்சம் மதிப்பா நடத்துனோம்னா தான் பின்னாடி வாலாட்டற நாய் மாதிரி நாம சொல்லறதை அப்படியே கேட்பானுங்க..

    அதையும் விட, இங்க நாம சொல்லறது தான நியூஸ்.. இந்தப் பத்திரிக்கைக்காரனுங்க நேர்மையா அவங்க கண்ணுல பார்க்கறதயா மக்கள்கிட்ட கொண்டுட்டு போறாங்க?

    பயப்படாம வாங்க..” என்று அவன் கூற, அவன் கூறுவதும் வாஸ்தவம் தான் என்று கூறிவிட்டு அந்தப் படையே வாசலுக்கு ஓடியது.

    பிறந்ததிலிருந்து தரையில் கால் படாத பெரும் செல்வந்தர்கள் அவர்கள்!

    இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் திறன் கொண்டவர்கள்!

    இப்பொழுதோ.. இந்திய அரசாங்கத்தால் தீவிரவாதியெனக் கூறப்படும் ஒருவனுக்காக அந்த மொத்தப் படையும் கால்நடையாக முன் வாசலுக்கு விரைந்தது.

    எப்பொழுதும் ஏதோவொரு செய்திக்காக மும்பையின் பிரதான இடமான அந்தப் பகுதியில் இப்பொழுது ஒரு ஈ.. காக்கா கூட இருக்கவில்லை.

    ஏற்கனவே அந்த அரசியவாதிகளின் கட்டளைப்படி அங்கிருந்த போக்குவரத்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டு விட, அவ்வளவு பெரிய சாலையில் வந்து இறங்கியது அந்த ஹெலிகாப்டர்.

    சடுதியில் அந்த ஹெலிகாப்டரில் இருந்து இறங்கினான் ருத்ரன்.

    காற்றில் அவனது சிகையும், அவனது சிவப்பு கோட்டும் பறக்க, முடியை ஒற்றைக் கையால் கோதிவிட்டு, கோட்டின் பட்டன்களை போட்டபடி தன் முன் நின்றிருந்த படையை நோக்கி ஒற்றை ஆளாய் முன்னேறினான் அவன்.

    இதழ்கள் வெகு லேசாக விரிந்திருக்க, கண் மறைத்த கறுப்புக் கண்ணாடியோ அவனது உணர்வுகளை மற்றவர்களுக்குக் காட்டாது மறைத்திருந்தது.

    நேராக அவர்கள் முன் வந்து நின்றவன், கண்ணாடியைக் கழட்டிக் கொண்டே.. “ஹெலோ..” என்று கை நீட்டியது மிதுனிடம் தான்!

    தேடலாய் அவளிருக்க..

    காதல் பாடலோ அவன்?

    காணாத விழியிரண்டும்

    பூத்துப் போகுமோ?..

    பெண்ணவளின் பெரு நேசம்

    ஆடவனின் உயிர் தாங்குமோ?..

    இன்றிருக்கும் பேரழகி

    ருத்தனின் மித்திரையா?

    அவன் உயிர் குடிக்கும் அக்கினியா?

    சிறு நரியின் சதி வலையோ?

    சிங்கத்தின் பெரும்பிழையோ?

    காலம் மாறும்..

    காட்சியும் மாறும்..

    பகை மாறுமா?

    பழியும் தீருமா?..

      The post அத்தியாயம் – 16 : தடுமாறும் தாரகையே! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/feed/ 0 17762
      19, 20 என் ராவண தேசமோ? https://thoorigaitamilnovels.com/19-20-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8b/ https://thoorigaitamilnovels.com/19-20-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8b/#respond Wed, 24 Apr 2024 15:11:48 +0000 https://thoorigaitamilnovels.com/19-20-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8b/ தேசம் 19   தன் வாழ்க்கையில் தீ சூழ்ந்து விட்டதை அறியாது அலுவலக தீயை அணைத்து விட்டு சோர்வாக வீடு வந்தவனை வரவேற்றார்கள் மாமனாரும் மாமியாரும். உடல் வலுவிழந்து நின்றவன் கன்னத்தில் ஒன்று வைத்த சாமிநாதன்,   “அடபாவி! உன்ன போய் நல்லவன்னு நம்பி என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டனே.” என்றிட, வள்ளி பாவம் பார்க்காமல் அவன் மார்பில் அடித்து தகாத வார்த்தையில் திட்டினார்.   எப்போது மனைவியின்

      The post 19, 20 என் ராவண தேசமோ? appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      தேசம் 19

       

      தன் வாழ்க்கையில் தீ சூழ்ந்து விட்டதை அறியாது அலுவலக தீயை அணைத்து விட்டு சோர்வாக வீடு வந்தவனை வரவேற்றார்கள் மாமனாரும் மாமியாரும். உடல் வலுவிழந்து நின்றவன் கன்னத்தில் ஒன்று வைத்த சாமிநாதன்,

       

      “அடபாவி! உன்ன போய் நல்லவன்னு நம்பி என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டனே.” என்றிட, வள்ளி பாவம் பார்க்காமல் அவன் மார்பில் அடித்து தகாத வார்த்தையில் திட்டினார்.

       

      எப்போது மனைவியின் பெற்றோர்களை இங்கு பார்த்தானோ அப்போதே தெரிந்து கொண்டான் சாயம் வெளுத்து விட்டதை. ஒரே இடத்தில் கல்லாக மாறியவன் பார்வை தன்னை அடித்துக் கொண்டிருக்கும் இருவரையும் தாண்டி பின்னால் சென்றது. அவனை நேருக்கு நேராக குத்தி துளையிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் பிரார்த்தனா.

       

      அப்பார்வை சொல்லியது அனைத்தையும். விழியால் அவளிடம் பேச முயன்றவன் எண்ணம் தவிடு பொடியானது அருகே கண்ணைக் காட்டியதும். அங்கு அவனால் உருவாக்கப்பட்ட அந்த கருப்பு உருவ ஆடை சிரித்துக் கொண்டிருந்தது. பெற்றோர்களைப் பார்த்த பின்பும் சிறு நம்பிக்கை கொண்டிருந்தவன் அந்த ஆடையை பார்த்து முற்றிலும் ஒடுங்கி விட்டான்.

       

       

      இனி என்ன செய்தாலும் தப்பிக்க முடியாது என்பதை நூறு சதவீதம் உணர்ந்தவன் தலை குனிய, “ஏன்டா இப்படி பண்ண? நானும் என் பொண்ணும் உனக்கு என்ன பாவம் செஞ்சோம். எதுக்கு எங்க குடும்பத்துக்குள்ள நுழைஞ்சு இவ்ளோ வேலை பார்த்திருக்க. வாய திறந்து சொல்லுடா” விடாது தாக்கினார் சாமிநாதன். 

       

      “இவன் கிட்ட என்னங்க கேட்டுட்டு இருக்கீங்க. கமிஷனருக்கு போன் பண்ணி கம்பிளைன்ட் கொடுங்க. அவர் உதைக்கிற உதையில எல்லாத்தையும் கக்கிடுவான்.” 

       

      “அவர் வரைக்கும் எதுக்கு போகணும் வள்ளி. நான் அடிக்கிற அடியில இப்பவே இவன் எல்லாத்தையும் சொல்லுவான் பாரு.” 

       

      சொன்னது போல் தன் மகளின் வாழ்க்கையை வீணாக்கியவனை அடித்து நொறுக்கினார். வாயில் ரத்தம் வர துவங்கியது. அனைத்தையும் வாங்கியவன் தலை குனிந்தே நிற்க, போதும் என்ற வரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவள் வாய் திறந்தாள்,

       

      “அடிக்கிறதை நிறுத்துங்க” என்று.

       

      மனைவியின் குரலில் தலை நிமிர்ந்தவன் கண்ணீரோடு மன்னிப்பு வேண்டினான். அதைக் கண்டும் காணாமலும், “அவர அடிக்கிறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? அவர் செஞ்சது அயோக்கியத்தனம்னா நீங்க செஞ்சது துரோகம். உங்களுக்கும் அவருக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. இது என் வாழ்க்கை நான் பார்த்துக்கிறேன் நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க.” என்றதும் மூவருக்கும் அதிர்ச்சி. 

       

      “என்னடி பேசுற? இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் இவனுக்கு சப்போர்ட் பண்ற. நாங்க என்ன துரோகம் செஞ்சிட்டோம்” கேள்வி எழுப்பும் அன்னையை பார்த்து சிரித்தவள்,

       

      “இருபத்தி ஆறு வருஷம் பெத்து வளர்த்த பொண்ணு சொன்ன வார்த்தையை நம்பாம எவனோ ஒருத்தன் சொன்ன வார்த்தையை நம்புனீங்க அது துரோகம் இல்லையா. எத்தனை தடவை கெஞ்சி இருப்பேன் எந்த தப்பும் செய்யலன்னு. மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு இவன் மேல வச்ச நம்பிக்கையை என் மேல வைக்கலையே. 

       

      சொத்தை எல்லாம் ஏன் எழுதி வச்சீங்க உங்க பொண்ணு எவன் கூடவோ ஓடிப் போனதால தான. சொத்தை கொடுத்து உங்க பொண்ண விலை பேசி இருக்கீங்க. நேத்து வந்தவன் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள்ள வராதன்னு சொன்னீங்க. இதுக்கெல்லாம் என்ன பேரும்மா?” விரக்கியாக கேட்டாள். 

       

      “அதுக்கெல்லாம் காரணமே இவன் தான். உன்னை அந்த அளவுக்கு கெட்டவளா காட்டி எங்க கிட்ட இருந்து பிரிச்சிருக்கான்.”

       

      “அப்போ யார் வந்து என்ன சொன்னாலும் நம்பிடுவீங்க அப்படி தானப்பா. அன்னைக்கு என்ன சொன்னீங்க சாப்பாட்டுல விஷம் வச்சு கொல்ல கூட துணிய மாட்டா. உன்னை கட்டிக்கிட்டு என் மாப்பிள்ளை எவ்ளோ கஷ்டப்பட போறாருன்னு தெரியல. இன்னும் எவ்ளோ வார்த்தைங்க சொல்லி இருக்கீங்கன்னு நியாபகம் இருக்காப்பா. உங்க பொண்ண புரிஞ்சு வச்சிருக்க லட்சணம் அவ்ளோ தான்ல.” 

       

      “எல்லாத்தையும் பண்ண இவன விட்டுட்டு எங்களை தப்பு சொல்ற.”

       

      “நான் உங்களையோ இல்ல அவரையோ தப்பு சொல்லல. தப்பு பண்ணதெல்லாம் நான் மட்டும் தான். என்னோட முட்டாள் தனம் தான் இங்க வந்து நிக்கிறதுக்கான முதல் காரணம். இதுக்கான தண்டனைய நான் மட்டும்தான் அனுபவிக்கனுமே தவிர நீங்களோ இல்ல அவரோ இல்ல. அதனாலதான் சொல்றேன் இது என் வாழ்க்கை நான் பார்த்துக்கிறேன். நீங்க எப்பவும் போல உங்க பொண்ணு சந்தோஷமா வாழுறான்னு நம்பி நிம்மதியா இருங்க.” 

       

      “என்னமா பேசுற… இவ்ளோ தெரிஞ்சதுக்கு அப்புறம் இவன் கூட உன்னை எப்படி விட்டுட்டு போவோம்.”

       

      “எனக்கு எதுவும் ஆகாது. உங்க பொண்ணு கண்ண முழிச்சு ரொம்ப நேரம் ஆகுது. எல்லா தப்பையும் செஞ்சது நானா இருந்தாலும் பெத்த பொண்ண நம்பாம போனதுக்கு உங்களுக்கு நான் கொடுக்குற தண்டனை இது. இனிமே என்னை பார்க்க இங்க வராதீங்க.” 

       

      “நீ பேசுறது உனக்கே நல்லா இருக்கா? இவன இன்னுமா நம்புற”

       

      “பெத்தவங்க பிள்ளைங்களை நம்பனும்னு சொல்றேன். தப்பே பண்ணினாலும் வீட்டுக்குள்ள அடிச்சுட்டு நாலு பேருக்கு முன்னாடி விட்டுக் கொடுக்காம இருக்கணும்னு சொல்றேன். நீங்க மட்டும் மாப்பிள்ளை பேச்சுக்கு தலையாட்டமா இருந்திருந்தா இந்த அளவுக்கு செய்ய தைரியம் வந்திருக்காதுப்பா. இதுக்கு மேல உங்க கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை. சொன்னது சொன்னதுதான் நானே தேடி வர வரைக்கும் என்னை தேடி வராதீங்க, கிளம்புங்க.”

       

      எவ்வளவு சண்டையிட்டும் இடம் கொடுக்காதவள் தன் பெற்றோர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பேச வர, “கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்” என்று விட்டாள்.

       

       

      தொந்தரவு செய்ய விரும்பாதவன் தனிமையை கொடுத்து விட்டு நகர, அழுது சோராமல் அவனது குடும்ப புகைப்படங்களை வீடு முழுவதும் மாட்டினாள். ஒரு மணி நேரத்தை கடக்கவே பெரும் பாடுபட்டான் சரவணப் பொய்கை. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மனைவியை தேடி வர, வீட்டைக் கண்டு குழம்பினான். 

       

      பேச நா எழாமல் வெகு நேரம் சங்கடப்பட்டவன், “தனா…” என மெல்லிய குரலில் அழைக்க, 

       

      “வந்துட்டீங்களா, உங்களுக்காக தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” புன்னகைத்தாள்.

       

       

      புரியாத மனநிலையில் அவன் நிற்க, ” அந்த டிரஸ மட்டும் கொஞ்சம் ஆணில மாட்டி விடுறீங்களா.” என அந்த கருப்பு உருவத்தின் ஆடையை கையில் கொடுக்க, வாங்க கைகள் நடுங்கியது.

       

      “எதுக்கு இப்படி உங்க கை நடுங்குது?” எதுவும் நடக்காது போல் கேட்க, “சாரி, நான் பண்ண…” ஆரம்பித்தான். 

       

      “மச மசன்னு நிக்காம ஆணில மாட்டி விடுங்க. எப்போ உங்களுக்கு என்ன நடக்கும்னு பயந்துட்டே இருந்தேன். இப்பதான் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இதை தினமும் பார்த்துட்டு இருந்தா தான் அந்த நிம்மதி நிலைச்சு இருக்கும்.” 

       

       

      “தனா”

       

      “சீக்கிரம் மாட்டிட்டு வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு.” என அதை கையில் கொடுத்து விட்டு அவனுக்காக வாங்கி வந்த கேக்கை மேஜையில் வைத்தாள். 

       

       

      எதுவும் செய்ய இயலாத சூழ்நிலையில் அவள் சொன்னதை செய்ய சென்றான். பலமுறை அணிந்த ஆடையைத் தொட இன்று கைகள் நடுங்கியது. எந்நிலையிலும் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக பல மெனக்கிடல் செய்து தயாரித்த ஆடை இது. அப்படிப்பட்ட ஆடையின் கணத்தை தாங்க முடியாமல் தடுமாறியவன் மாட்டிவிட்டு திரும்ப,

       

      “வந்து கேக் கட் பண்ணுங்க.” என்றாள். 

       

       

      இடத்தை விட்டு நகராமல் சரவணன் நிற்க, அவன் கைப்பிடித்து அழைத்து வந்தவள், “இந்த நாள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். உங்களுக்கும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்பெஷல் ஆகிடும். வந்து வெட்டுங்க…வாங்க.” அதன் முன்பு நிற்க வைத்து கத்தியை கையில் கொடுத்தாள். 

       

       

      அவன் கைகள் நடுக்கம் கொள்ள, “ஒரிஜினல் கத்திய பிடிக்கும்போது கூட உங்க கை இப்படி நடுங்கலையே இப்ப ஏன் இப்படி நடுங்குது” பேசிக்கொண்டே அவன் நெற்றி, கழுத்து, கன்னத்தில் கை வைத்து,

       

      “உடம்பு எதுவும் சரியில்லையா” எனக் கேட்டாள். 

       

       

      தன்னவள் குத்திய வார்த்தையில் துவண்டவன் எதுவும் பேசாமல் இனிப்பு கட்டிகையை வெட்ட, கை தட்டி ஆரவாரம் செய்தாள். 

       

      “ஊட்டி விடுங்க” என்றவளிடம் கை செல்ல மறுக்க, அவளே பிடித்து ஊட்டிக் கொண்டாள். சிறு துண்டை எடுத்து அவன் வாயில் திணித்தவள்,

       

      “அப்பா ஆக போறீங்க.” என்றிட, இனிப்பு கசப்பானது. 

       

       

      பலமுறை அவளை மிரட்டிய அந்த குரோத கண்ணில் ரத்தத்திற்கு பதிலாக கண்ணீர் சுரக்க, “உங்களை விட்டு பிரிந்த ரெண்டு உயிர்ல ஒரு உயிர் என்னால திரும்ப கிடைக்கப் போகுதுன்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.” என அவன் கையை வயிற்றில் வைத்து,

       

      “வர போறது உங்க அம்மா அன்னலஷ்மியா இல்ல தம்பி நித்ய வேலனான்னு தெரியல. யார இருந்தாலும் இன்னும் பத்து மாசம் தான் சரவணா காத்திருங்க.” தோளில் சாய்ந்து கொண்டாள். 

       

      வாயில் திணித்த இனிப்பு கசப்பானது போல் இவன் வாழ்வும் இனி மாறுமோ? 

      கசப்பான உண்மையில் தனக்கான இனிப்பை தேடிவானோ? இனிப்பானவள் கசப்பானால் கசப்பானவன் இனிப்பாவானோ? 

      எதுவென்று அறியாதவன் ஒன்றை மட்டும் இனி அறிவான் இனிப்பான காதல் கசந்து விட்டதென.  

       

      தேசம் 20

       

      வீட்டில் நிலவிய அமைதி அதிர்வை ஏற்படுத்தியது. நடந்தவை எல்லாம் கனவாக இருக்கக் கூடாதா என்ற எண்ணம் தான் அங்கிருந்தவனுக்கு. எந்த இடத்தில் தவறு செய்தோம் என்ற சிந்தனையில் தன்னை ஆழ்த்திக் கொண்டவன் செய்தது தவறு என்றும் உணரத்தான் செய்தான். இருந்தும் அவளுக்காக தான் அனைத்தையும் செய்தேன் என்று மீண்டும் தவறிழைத்தவன் எப்படி இந்த சிக்கலை தீர்ப்பது என்று யோசித்தான். 

       

      அவள் ஊட்டிய இனிப்பு கட்டி இன்னும் வாயில் அப்படியேதான் இருக்கிறது. கரைய வேண்டிய இனிப்பு கல்லாகி விட்டது போல் இவன் நிலைமையும் ஆகிவிட்டது. நான்கு அடி அடித்து இருந்தால் கூட இந்த அளவிற்கு பயந்து இருக்க மாட்டான். எதுவும் பேசாமல் இனிப்பை ஊட்டிய மனைவியின் செயல் பெரும் பயத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

       

      தன்னவளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என கணிக்க முடியாமல் திண்டாடியவன் அவளைத் தேடிச் சென்றான். உபயோகிக்கும் அறை வரை வந்தவன் உள்ளே நுழைய துணிவின்றி தடுமாறி நின்றான். ஆனால், மெத்தையில் படுத்திருந்தவள் இவனைக் கண்டதும் எழுந்தமர, தலை தானாக தரையை நோக்கிக் கொண்டது.

       

      “என்ன சரவணா அங்கயே நிக்கிறீங்க உள்ள வாங்க.” என்றவள் குரலுக்கு தலை நிமிராதவன் அந்நிலையிலேயே உள்ளே நுழைந்தான். 

       

      “என்னாச்சு? நான் கொடுத்த அதிர்ச்சியில பேச்சு வரலையா.” 

       

      ….

       

      “உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீங்க என்னென்னமோ சொல்லுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். இப்படி என்னை ஏமாத்திட்டீங்களே.” 

       

      எதுவும் நடக்காதது போல் பேசும் மனைவியின் பேச்சில் உள்ளம் தடுமாறியவன் அங்கிருந்து சென்று விட்டான். ஒரு துளி சலனம் கொள்ளாத பிரார்த்தனா மீண்டும் மெத்தையில் படுத்துக்கொண்டாள். வெளியில் வந்தவன் சுவற்றில் சாய்ந்து கொண்டு இருநொடி கண் மூடி தன்னை அமைதி படுத்தினான். 

       

      ‘இதுக்கு மேல உன்னால ஒன்னும் பண்ண முடியாது. தனா எதையோ முடிவு பண்ணிட்டு தான் இவ்ளோ சாதாரணமா இருக்கா. முதல்ல அது என்னன்னு தெரிஞ்சுக்க. அதுதான் உனக்கு இப்ப தேவை. என்னன்னு தெரிஞ்சா தான் எதையாது பண்ண முடியும். போடா… போய் தைரியமா பேசு.’ உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு தன்னை தைரியப்படுத்திக் கொண்டான். 

       

      கண் திறந்து மூச்சை நன்றாக இழுத்து விட்டவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே எழுந்தமர்ந்தாள். பிரார்த்தனா காலடியில் அமர்ந்தவன் பாதத்தை பிடித்துக் கொண்டு,

       

      “மன்னிப்பு கேட்க வரல. அதைக் கேட்கிற தகுதி எனக்கு இல்லைன்னு நல்லா தெரியும். ஒன்னு மட்டும் தான் சொல்லணும்னு ஆசைப்படுறேன். என்னை பத்தின உண்மை எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உன் மேல நான் வெச்சிருக்க காதலும் உண்மை. என்னைக்கு எனக்கு நடந்த துரோகத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிந்ததோ அதுக்கு அப்புறம் நான் பண்ண எல்லாத்துக்கும் காரணம் நீ என்னை விட்டு விலகிட கூடாதுன்னு மட்டும் தான்.” என்றவன் அவள் முகத்தை நேராக பார்த்து,

       

      “என் மேல ரொம்ப கோபமா இருக்கன்னு தெரியும். உன் கோபம் போக எவ்ளோ தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். எந்த சூழ்நிலைக்காகவும் என்னை விட்டுட்டு போய்டாத.” ஒரே மூச்சாக பேசி முடித்தான். 

       

      பதிலுக்காக அவள் முகத்தை பார்த்தவன் அதில் தெரிந்த புன்னகையை கண்டு தலை கவிழ்ந்து கொள்ள, தலைக்கோதி விட்டவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு நடு உச்சியில் முத்தமிட்டாள். இச்செயலை செய்த பின் முற்றிலும் உடைந்தவன் அவள் மடியில் படுத்துக்கொள்ள, புன்னகையோடு தலைக்கோதி விடும் வேலையை தொடங்கினாள்.

       

      “எந்த ஆம்பளைக்கும் தான் அப்பா ஆக போற அந்த நொடி வாழ்க்கைல மறக்க முடியாத பொக்கிஷமா இருக்கும். ஆனா எனக்கு…” சிறு நொடி இடைவெளி விட்டு,

       

      “உன் சிரிப்பு தான் எனக்கு நீ கொடுத்த தண்டனை.” என்றான்.

       

       

      “எந்திரிங்க” என்றது மறுத்து தலையசைத்து,

       

      “நீ ஏதாச்சும் சொல்லிடுவ. என்னால் அதைக் கேட்க முடியாது.” என்றதும் முடியை கொத்தாக பிடித்து தூக்கினாள். 

       

      “உங்க மேல எனக்கு என்ன கோபம் தெரியுமா? பழி வாங்க பாசமா இருக்கிற மாதிரி நடிச்சது தான்.” 

       

      உடனே பதறி எழுந்தவன் அவள் வாயை மூடி, “இந்த வார்த்தையை மட்டும் சொல்லாத தனா. நான் பழி வாங்க வந்தது உண்மைதான். ஆனா, உன் காதல் அது எல்லாத்தையும் மாத்திடுச்சு. ஒவ்வொரு தடவையும் உன் காதலுக்கும் என் பழிவாங்குற எண்ணத்துக்கும் நடுவுல சிக்கி தவிச்சிருக்கேன். கடைசில உன் காதல் தான் ஜெயிச்சது.” அணைத்துக் கொண்டான்.

       

      “அப்புறம் எதுக்காக இவ்ளோ பண்ணீங்க”

       

      “உனக்காக”

       

      “எனக்காக என்னையவே கஷ்டப்படுத்துவீங்களா”

       

      “நீ என்கூட சாகுற வரைக்கும் இருக்கனுன்னா கண்டிப்பா அதை செய்வேன்” என்றதும் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். 

       

      தன் பதற்றத்தை குறைக்க அவளை மருந்தாக்கி கொண்டவன் முடிந்தவரை இடைவெளி இல்லாமல் அணைத்தான். மனம் நிதானம் அடைந்ததும் விலகி முகம் முழுவதும் முத்தமிட்டு,

       

      “எங்கடா என்னை விட்டு போயிடுவியோன்னு பயந்துட்டேன். இப்பதான் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு.” என்று இட்டுக் கொண்டிருந்த முத்தத்தை தொடர்ந்தான்.

       

      அனைத்தையும் வாங்கிக் கொண்டவள் அவன் முகத்தைப் பற்றி, “உண்மை தெரிஞ்சதும் நம்ப முடியாம ரொம்ப அழுதேன். அப்பா அம்மா சொன்னதை கேட்டு வாழ்க்கையில பெரிய தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சேன். அதுக்கப்புறம் பொறுமையா உட்கார்ந்து யோசிக்கும் போது தான் எல்லாம் புரிஞ்சது. உங்க எண்ணம் என்னை பழி வாங்குறதா இருந்திருந்தா இந்நேரம் கொன்னு இருக்கணும். அப்படி நீங்க செய்யலையே.

       

      இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டிங்க. நான் ரொம்ப சந்தோஷமா தான் வாழ்ந்தேன். ஆனா, நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு இப்ப புரியுது. தெரியாம ஒன்ன செஞ்சிட்டு எங்கடா அது எனக்கு தெரிஞ்சா விட்டு போயிடுவேன்னு பயந்து எல்லாத்தையும் பண்ணி இருக்கீங்க. இந்த அளவுக்கு நீங்க என்னை காதலிப்பீங்கன்னு நினைக்கல.” அவனைப் போல் அவசரமாக இல்லாமல் நிதானமாக நெற்றியில் மட்டும் ஒரு முத்தம் வைத்தாள். 

       

       

      எரிமலை வெடிக்க போகிறது என்ற பயத்தில் நின்றிருந்தவனுக்கு பனிக்கட்டி மழை பொழிய மனம் குளிர்ந்தது. தனக்குள் ஏற்பட்ட பயத்தை எல்லாம் தூக்கி தூரம் எரிந்தவன் அவள் மடியில் படுத்துக்கொண்டு, 

       

      “உண்மையாவே என் மேல கோபம் இல்லையா” வினவிட,

       

      “இருக்கு” என்றாள். 

       

      குளிர்ந்த மனம் பற்றிக் கொண்டது பிரார்த்தனா பதிலில். பதற்றமாக எழுந்தவன் என்னவென்று கேட்க, “உண்மை தெரிஞ்சதும் எங்கிட்ட வந்து நான் பண்ணது தப்பு இனிமே பண்ண மாட்டேன்னு சொல்றத விட்டுட்டு… இவ்ளோ வேலை பண்ணி இருக்கீங்களே அதுக்கு.” என சொல்லி முடிக்கும் முன் அவளை அணைத்தான்.

       

      “உங்களை விட்டுப் போயிடுவன்னு எப்படி நினைச்சீங்க? அந்த அளவுக்கா என் காதல் இருக்கு. இப்ப வரைக்கும் உண்மை தெரியாம என்னை பழி வாங்கிட்டு இருந்திருந்தாலும் காலம் முழுக்க உங்க காலடியில இருந்திருப்பேனே தவிர வேணான்னு போயிருக்க மாட்டேன். ஏன்னா… என் சரவணா என்னோட உயிர்.” 

       

      “வாழ்க்கைல யாருமே இல்லையேன்னு ரொம்ப தவிச்சிருக்கேன் தனா. எதுக்குடா இந்த உயிர்னு பல நாள் சாக நினைச்சிருக்கேன். இன்னைக்கு தான் புரியுது கடவுள் உனக்காக இந்த உயிரை விட்டு வச்சிருக்கான்னு.” 

       

      “உங்களோட இந்த நிலைமைக்கு நான் காரணம் இல்லனாலும் என் வீட்டு ஆளுங்களால தான் இந்த நிலைமை. உங்க கஷ்டம் எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு. சும்மாவே உங்க அழுகைய சிரிப்பா மாத்தணும்னு லட்சியத்தோடு இருந்தேன். இப்போ வாழ்க்கை முழுக்க அழுகை’ன்னா என்னன்னே தெரியாத அளவுக்கு உங்களை பார்த்துக்கணும்னு ஆசைப்படுறேன்.”

       

      “லவ் யூ தனா”

       

      “லவ் யூ சோ மச்” 

       

      இருவரும் அணைத்துக் கொண்டனர். ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அந்நிலையில் இருந்தவள் கொஞ்சம் விலகி, “இப்பவாது குழந்தையை பத்தி பேசலாமா” என்றிட, சரவணன் முகத்தில் வெட்கம் சிரிப்பாக தென்பட்டது.

       

       

      “பாருடா! இப்பதான் அப்பா ஆன குஷி உங்க முகத்துல தெரியுது.” 

       

      “திரும்ப ஒரு தடவ சொல்லேன்.” 

       

      “எத்தனை தடவை சொன்னாலும் ஒன்னு தான்.”

       

      “அது இல்ல தனாமா… அந்த நேரத்துல அதை ஃபீல் பண்ண முடியல.” 

       

      சிறிதாக புன்னகைத்து, “கண்ண மூடுங்க” என்றாள். 

       

      ஏன் என்று கேட்காமல் உடனே கண் மூடியவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் என்ன சிந்தனையோ! அவன் கையை எடுத்து வாயிற்றில் வைக்க, உடல் சிலிர்த்தது. பூனை முடிகள் வான் அளவு எழுவதை கண்டு மகிழ்ந்தவள்,

       

      “அப்பா ஆக போறது மட்டும் இல்ல சரவணா… வாழ்க்கையில இனி கிடைக்காதான்னு ஏங்கி அழுத ஒரு உறவ பார்க்க போறீங்க. அனேகமா அது உங்க அம்மாவா தான் இருக்கும்.” எனும் போது அவன் கண்ணில் இருந்து நீர் வெளியேற, குறித்து வைத்துக் கொண்டாள். 

       

      “என் வீட்டு ஆளுங்களால இழந்ததை நான் திருப்பி தர போறேன். என் சரவணா அவன் அம்மாவ குழந்தையா வளர்க்க போறான். கொஞ்ச நாள் கழிச்சு தம்பியும் மகனா வர போறாரு. அப்புறம் என்ன…போன சொந்தமும் புதுசா வந்த நானும் ஒன்னா கூடவே இருக்க போறோம். என் புருஷன் மாதிரி சந்தோஷமா வாழ போற ஆள் இந்த உலகத்துலயே இல்ல.” 

       

      “நிஜமா அம்மா வருவாங்களா” 

       

      “இது என்ன கேள்வி! வருவாங்களா இல்ல வராங்க.” 

       

      “எனக்கு என் அம்மானா உசுரு” சொல்லும் பொழுது கண்ணீர் அளவு அதிகரித்தது. 

       

      அதை துடைத்து விட்டவள், “இது நீங்க அழுற நேரம் இல்ல சிரிக்க வேண்டிய நேரம். அம்மாவை குழந்தையா வாங்க போற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். இன்னும் பத்து மாசம் தான் இருக்கு அந்த பாக்கியத்தை நீங்க அனுபவிக்க. இன்னைல இருந்து அந்த நாளுக்காக காத்திருங்க சரவணா.” என்றதும் அவன் மனதில் நங்கூரமாக  பதிந்துவிட்டது.

       

      இழந்த தாயை மார்பில் சுமக்க போகிறோம் என்ற சுகம் பாடாய்படுத்தியது. இரவெல்லாம் சாப்பிடாமல் அன்னையின் புராணத்தை பாடினான். அவன் கொடுக்கும் முகபாவனைகளை வைத்தே அதன் ஆழத்தை உணர்ந்தவள் சிரித்துக் கொண்டாள். 

       

       

      வாய் ஓயும் வரை பேசியவன் சத்தம் கொடுக்காமல் இருக்கும் மனைவியை பார்க்க ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அதன் பின்னே மணி பார்த்தவன் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு அவளுக்கு போர்வையை போர்த்தி விட, அவன் மார்போடு ஒட்டிக் கொண்டாள். 

       

      தட்டி தூங்க வைத்தவனுக்கு தீடிரென ஒரு ஆசை முளைக்க கை வயிற்றை தொட்டது. அதன் சுமை நெஞ்சை தாக்க, 

       

      “அம்மா!” என்றான். 

       

       

      மனதுக்குள் என்னென்னவோ பேசினான். மனம் நிறைந்து கண் மூடியதும் பக்கத்தில் இருந்தவள் விழி திறந்தது. எத்தனை நாட்கள் தன்னை இப்படி பார்த்திருப்பானோ என்ற எண்ணம் எரிச்சலை கொடுத்தது‌‌. இது தான் அவன் வாழ்வில் நிம்மதியாக உறங்க போகும் கடைசி நாள் என்பதை இவள் மட்டுமே அறிவாள். 

       

      வயிற்றில் கை வைத்து, ‘மன்னிச்சிடு பாப்பா நாளைக்கு நீ இருக்க மாட்ட. எவ்ளோ ஆசையா உன்ன வரவேற்றனோ

      அதை விட ஆயிரம் மடங்கு கஷ்டத்தோடு அனுப்பி வைக்க போறேன். இவன மாதிரி ஒரு அப்பா உனக்கு வேணாம். என்னை மாதிரி ஒரு முட்டாள் அம்மாவும் வேணாம். நீ நல்ல அப்பா அம்மாக்கு பாப்பாவா போ.’ கண்ணீர் வடித்தாள்.

       

       

      அம்மு இளையாள். 

       

        The post 19, 20 என் ராவண தேசமோ? appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/19-20-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8b/feed/ 0 17759
        அத்தியாயம் – 15 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/#respond Sun, 21 Apr 2024 03:10:23 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/ தீயின் இரை தீயோ?! ஐசியூவிலிருந்து வெளியே வந்த டாக்டர் ஆண்டனி, நேரே ருத்ரனிடம் வந்தார். “குண்டு அவங்க நெஞ்சுல பாய்ஞ்சிருக்கு. நல்லவேளையா இதயத்துக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா, இதயத்துக்குக் கொஞ்சம் மேல குண்டு துளைச்சிருக்கு. அதனால உடனே ஆபரேஷன் பண்ணி குண்டை வெளிய எடுக்கணும். கூடவே இதயத்துக்குப் போற ரத்த நாளங்கள்ல எவ்வளவு பாதிப்பு உண்டாகியிருக்குன்னு தெரிஞ்ச பின்னாடி தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்.” என்று கூறிவிட்டு

        The post அத்தியாயம் – 15 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>

        Loading

        தீயின் இரை தீயோ?!

        ஐசியூவிலிருந்து வெளியே வந்த டாக்டர் ஆண்டனி, நேரே ருத்ரனிடம் வந்தார்.

        “குண்டு அவங்க நெஞ்சுல பாய்ஞ்சிருக்கு. நல்லவேளையா இதயத்துக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா, இதயத்துக்குக் கொஞ்சம் மேல குண்டு துளைச்சிருக்கு.

        அதனால உடனே ஆபரேஷன் பண்ணி குண்டை வெளிய எடுக்கணும். கூடவே இதயத்துக்குப் போற ரத்த நாளங்கள்ல எவ்வளவு பாதிப்பு உண்டாகியிருக்குன்னு தெரிஞ்ச பின்னாடி தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்.” என்று கூறிவிட்டு அவர் செல்ல, அக்னியை அவசரமாக அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

        அந்தச் சில மணிநேர அறுவைசிகிச்சையோ, ருத்ரனுக்குப் பல யுகங்களாகத் தோன்ற, உள்ளுக்குள் பெரும் அழுத்தம் அவனை அப்படியே புதைக்கத் துவங்கியது.

        கடற்கரையில் தங்களது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அவ்விடம் வந்தனர் அமரேந்தரும், அர்ஜுனும்.

        அங்கே ருத்ரன், நாற்காலியில் அப்படியே தோய்ந்து போய் அமர்ந்திருப்பதைக் கண்டவர்களுக்கு நெஞ்சுக்குள் நடுக்கம் பிறந்தது.

        வேகமாக அவனிடம் விரைந்த அமரேந்தரோ.. அவனுக்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து, மெல்ல அவனது தோளைத் தொட்டார்.

        மெல்ல அவரை நிமிர்ந்து பார்த்தவனோ, எதுவுமே பேசாது பார்த்தது பார்த்தபடி இருக்க, அமரேந்தருக்குத் தான் மனது கேட்கவில்லை.

        “சரியாகிடுவா பிரதாப்.. அக்னி சீக்கிரம் சரியாகிடுவா.. நீ கவலைப் படாத..” என்று அவர் கூற, ருத்ரனின் கண்களிலோ சிறு ஆச்சர்யம்!

        அதைக் கண்டுகொண்டவரோ, மெல்லத் தலைகுனிந்து.. “நான் இப்பவும் சொல்லறேன்.. எனக்கு அந்தப் பொண்ணு மேல நம்பிக்கை இல்ல..

        நம்பிக்கை இல்லைன்றதை விட.. அவ நேரடியாவே சொல்லறா, உன்னைக் கொல்லத் தான் இங்க வந்தேன்னு..

        ஆனா.. அவ மேல உனக்குக் காதல் வந்துடுச்சு..

        அவளோட கொள்கைகள், நம்பிக்கைகள் வேற.. நம்மளோடது வேற!

        எப்படி அவ நம்மளை புரிஞ்சுப்பானு எனக்குத் தெரியல..

        ஆனா.. உங்க ரெண்டு பேரோட கண்ணுலேயும் நான் பார்க்கறது அளவுக்கு அதிகமான காதலை.

        என்னால இதைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்கவே முடில பிரதாப்!

        இந்தப் பதினஞ்சு வருஷத்துல உன்னோட பார்வை இவ்வளவு கனிஞ்சு போய் நான் பார்த்ததே இல்ல..

        எனக்கு நீ சந்தோஷமா இருக்கணும்.. உன்ன.. உன்னோட வாழ்க்கையை அழிச்சுட்டேனேன்ற குற்ற உணர்வு எனக்கு ரொம்பவே அதிகமா இருக்கு. அது இந்தக் காலத்துல போகுமோ எனக்குத் தெரியல.

        ஏன்னா.. உன்ன இந்தப் பாதைல இழுத்துவிட்டது நான் தான். இது ஒருவழிப் பாதைன்னு தெரிஞ்சும்.. நீ இங்கிருந்து பின் வாங்க முடியாதுனு தெரிஞ்சும்.. இந்தப் பாதையோட முடிவு மரணமா தான் இருக்கும்னு தெரிஞ்சும் உன்ன உள்ள இழுத்துட்டு வந்தது நான் தான்..

        ஆனா.. வெறும் முள்ளுச் செடியும், கள்ளிச் செடியுமா இருக்கற இந்தப் பாலைவனப் பாதைல உனக்கே உனக்காகவேன்னு பூத்த ரோஜா அவ.

        அவ மேல அமிலத்த ஊத்திட்டு உன்னை என்னால வாழ வைக்க முடியாதுனு எனக்குப் புரிஞ்சுடுச்சு பிரதாப்.

        ஆனா.. நீ போற பாதைல மட்டுமில்ல.. அங்க பூத்திருக்கற ரோஜாலையும் முள்ளிருக்கு.” என்று கூறியவர், ஒரு கணம் தன் பேச்சை நிறுத்திப் பெருமூச்சொன்றை விடுவித்தார்.

        மீண்டும் தன் பேச்சை அமரேந்தர் தொடங்கிய போது, அவரது குரலில் நிராசை வழிந்தது!

        “முயற்சி செஞ்சு பாரு.. அவளுக்கு நம்மளை பத்தி எல்லாத்தையும் சொல்லிப் புரிய வை.

        நாம யாருன்னு தெரியாத வரைக்கும் நம்மளை எல்லாரும் தப்ப நினைக்க வாய்ப்புண்டு. ஆனா.. நம்மளை பத்தி தெரிஞ்சா..” என்று சொல்லிக் கொண்டே போனவர், மறுப்பாய் ஒரு தலையசைப்புடன் எழுந்து சென்று விட்டார்.

        அவர் ஏன் அப்படி எழுந்து சென்றார் என்று ருத்ரனுக்கும் புரியாமலில்லை.

        தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்ததைக் கூற முனைந்தாலே, ‘கொலைகாரனுக்கு கூட அவன் பக்கம் நியாயம்னு ஒன்னு இருக்கும்.. அதையெல்லாம் கேட்டு இரக்கப்பட முடியாது..’ என்று தானே கூறுவாள்.

        அவளுக்கு எல்லாவற்றையும் விட இந்த நாட்டின் மீதிருக்கும் பற்று அதிகம், ருத்ரனுக்கு காளிக்க்ஷேத்ராவின் மீதிருக்கும் பற்றினைப் போல!

        செல்லும் அவரையே அவன் வெறித்து நோக்கிக் கொண்டிருக்க, சற்று தொலைவில் நின்றிருந்த அர்ஜுன் அவர் தன்னருகே வருவதைக் காணவும்..

        “என்ன மாமா.. ஜி இப்படி இருக்காரு..” என்று கூற, தன்னையும் அறியாது அமரேந்தரின் கண்கள் கசிந்தன.

        அதைக் கண்ட அர்ஜுனுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் அதிர்ந்தது!

        ருத்ரனைப் பின்தொடர்ந்தே அமரேந்தரை, “மாமா” என்று அழைப்பவன் அவன். ருத்ரன் தான் அவனுக்கு எல்லாமே என்றாலும், ருத்ரனுக்கு எல்லாமுமாக இருக்கும் அமரேந்தரின் மீது ஒரு பிரமிப்பு, மரியாதை எல்லாமே அவனுக்கு அளவுக்கு அதிகமாவே உண்டு.

        அப்படிப்பட்டவர் இன்று கலங்குகிறார் என்கவும் அர்ஜுனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

        அந்த அதிர்வில், “மாமா..” என்று இவன் அழைக்க, மெல்ல கசிந்த விழிநீர், இப்பொழுது பொலபொலவெனக் கொட்டியது.

        சட்டென அவனுக்கு முகத்தை மறைக்க, வேறுபுறமாகச் சென்று சுவரோடு ஒண்டியவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி நின்றான் அர்ஜுன்.

        மெல்ல அவரது முதுகை அர்ஜுன் வருடிக் கொடுக்க, அப்படியே திரும்பி அவனைக் கட்டிக் கொண்டார் அமரேந்தர்.

        வான் தொட்டு நின்ற இமயம் ஒன்று அப்படியே தூள் தூளாய் காற்றில் கரைந்து பொடிப்பொடியாகப் போனது போன்றதொரு அதிர்வு அர்ஜுனிடத்தில்!

        “மாமா.. மாமா..” என்று அவன் அமரேந்தரை அழைத்திருக்க, சற்று நேரம் பொறுத்தே மேலே நிமிர்ந்தவர் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

        அர்ஜுன் பிரம்மை பிடித்ததை போல அவரை அப்படியே பார்த்திருக்க, அவரோ..

        “பிரதாப்.. என்னோட பிரதாப்போட இந்த நிலைமைக்கு நான் தான் முழுக்காரணம்!

        என் அக்கா இத்தனை வருஷமாகியும் என் கூடப் பேசாம இருக்காங்கன்னா.. நான் செஞ்ச பாவம் அவ்வளவு பெருசு!

        எப்படியோ போயிருக்க வேண்டிய பிரதப்போட வாழ்க்கையை இப்படி பாழாக்கினது நான் தான்.

        என் குழந்தை கண்ணுல இத்தனை நாள், நான் ரத்தவெறியைப் பார்த்திருக்கேன்.. திமிரைப் பார்த்திருக்கேன்.. அவனோட ஆளுமையைப் பார்த்துப் பிரம்மிச்சு போயிருக்கேன்..

        அப்போ எல்லாம் எனக்குள்ள ஒரு கர்வம் தான் வரும்!

        என்னோட வளர்ப்பு இவன்.. என்னோட பிரதாப் இவன்!

        இந்த உலகத்துக்கே சிம்ம சொப்பனமா இருக்கறது என்னோட ப்ரதாப்ன்னு ஒரு செருக்கு இருக்கும்.

        அவன் கண்ணுல வழியற திமிரைப் பார்த்தும்.. அவனோட கட்டுக்கடங்காத காட்டாறு மாதிரியான வேகத்துலயும், கோபத்துலையும் என் நெஞ்செல்லாம் பூரிப்புல விம்மும்!

        ஆனா.. இன்னைக்கு அவன் கண்ணுல கண்ணீரைப் பார்க்கறேன் அர்ஜுன்!

        அந்தக் கண்ணீரோட.. அந்தக் கண்ணீரோட.. நான்.. நான் காதலைப் பார்க்கறேன்!..

        இத்தனை வருஷமா பிரதாப்போட வாழ்க்கையைப் பத்தி நான் எவ்வளவு தான் பெருமையா நினைச்சிருந்தாலும், உள்ளுக்குள்ள எங்கயோ ஒரு மூலைல எனக்குள்ள குற்றஉணர்ச்சியும் இருக்கத் தான் செஞ்சுது.

        அவன் வாழ்க்கைல காதல், கல்யாணம் இதெல்லாம் இல்லாமலேயே போய்டுமோன்னு நான் கவலைப்பட்டதுண்டு!

        ஆனா.. இன்னைக்கு என் பிரதாப் கண்ணுல நான் காதலைப் பார்த்தேன்..

        அர்ஜுன்.. என்னால சந்தோஷப்பட முடியலையே.. காதலால அவன் வாழ்க்கை சமநிலை ஆகிடும்னு கனா கண்டுட்டு இருந்தேனே..

        இத்தனைப் பெரிய காளிக்ஷேத்ராவை பிரதாப் தோள்ல இறக்கி வச்ச அன்னைக்கு நான் யோசிச்சது ஒண்ணே ஒன்னு தான்.. அது இந்த மக்களோட விடுதலை!

        ஆனா.. இன்னைக்கு நான் செஞ்சது தப்போன்னு தோணுது..

        அக்னிக்கான பரிதவிப்பு.. அவ கூட ஒரு சாதாரண வாழ்க்கை வாழணும்னு என் பிரதாப் ஏங்கறது அவனோட கண்கள்ல நான் பார்க்கறேன் அர்ஜுன்.

        ஆனா.. அது நிச்சயம் நடக்காது.

        அவன் ஒரு சாதாரண பொண்ணை காதலிச்சிருக்கலாம்.. ஆனா.. இந்தக் காதல் ஏன் அக்னி மேல பிரதாப்புக்கு வந்துச்சு?

        இனி இங்க என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு..” என்று அவர் முகத்தை மூடிக் கொண்டு அழ, அவரையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு இப்பொழுது தான் நிலைமையின் தீவிரமும், அதன் வீரியமும் ஆழப் புரிந்தது.

        அவன் திகைத்துப் போய் நின்றிருக்க, அப்பொழுது தான் கவனித்தான், அமரேந்தருக்குப் பின்னால் சற்று மறைவாக ருத்ரன் நின்றுகொண்டிருப்பதை!

        அவனைப் பார்த்ததும் அர்ஜுனுக்கு தொண்டை வறண்டுவிட்டது!

        சிரமத்துடன் மிடறு விழுங்கிக் கொண்டு, “ஜி..” என்று காற்றாகிவிட்ட குரலில் அவன் கூற, அமரேந்தரோ விலுக்கென்று பின்னே திரும்பினார்.

        வந்து நின்ற ருத்ரனைப் பார்த்து அவருக்கும் அதிர்ச்சி தான்.

        இதுநாள் வரை அமரேந்தர், ருத்ரனிடம் காட்டியதெல்லாம் வலிமை, மற்றும் ஆளுமையைத் தான்!

        அவர் உடைந்து போய், நிலைகுலைந்து நின்றதை பார்த்துக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.

        இப்பொழுது அவனுக்காக அவர் கண்ணீர் வடிப்பதை பார்த்து.. அதிலும் வயதில் சிறுவனான அர்ஜுனிடம் இப்படி அழுது புலம்பியதைப் பார்த்து அவன் என்ன நினைப்பனோ என்று அவர் திணறிக் கொண்டிருக்கையில், ஒற்றை விரலசைவில் அர்ஜுனை அங்கிருந்து அகற்றினான் ருத்ரன்!

        அவன் அங்கிருந்து அகன்றதும், தன்னையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த அமரேந்தரைப் பார்த்துக் கேலியாய் வளைந்தன ருத்ரனின் இதழ்கள்.

        “என்ன மாமா.. என்னைப் பார்த்துப் பரிதாபமா?” என்று கேட்டு இடிஇடியென அவன் நகைக்க.. வேர்வரை தீப்பிடித்தது அமரேந்தருக்கு!

        ருத்ரனுக்கு பிடிக்காத ஒரே ஒரு விஷயம்.. “கருணை!”

        அவன் யாருக்கும், எதற்கும் இரக்கம் கொண்டதே கிடையாது. கருணை என்ற ஒன்றே இல்லாது, கடும்பாறையாய் அவனது இதயத்தினை இறைவன் படைத்துவிட்டானோ என்று இத்தனை நாட்களாய் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார் அமரேந்தர்!

        அப்படிப்பட்ட ஒருவனைப் பார்த்துத் தான் இரக்கப்பட்டதை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று அவருக்கே உள்ளுக்குள் உதறல் எடுத்தது தான்.

        அவர் அவனையே வெறித்திருக்க, ருத்ரனோ தன் சிரிப்பைத் தானே நிறுத்திக்கொண்டு..

        “இந்த ஊருக்காக என்னைக் காவு கொடுத்துட்டீங்கனு இரக்கப்படறீங்களா மாமா?

        அதுவும்.. என்னை? இந்த ருத்ரனைப் பார்த்தது இரக்கப்படறீங்களா?

        மாமா.. நல்ல கேட்டுக்கோங்க.. என்னை யாரும் பலி கொடுக்க முடியாது.. அதே சமயம்.. இது தியாகமும் இல்ல!

        நான் ருத்ர பிரதாபன்!

        என் ஊரைக் காப்பாத்தறதுக்காகப் பதினஞ்சு வயசுலேயே ருத்ரதாண்டவமாடி, இந்த ஊரு அரக்கனுங்களை வதம் செய்தவன் நான் மாமா!

        என்னமோ சொல்லுவாங்களே.. ஒரு நாட்டைக் காப்பாத்தறதுக்காக ஒரு மாநிலத்தைப் பலி கொடுக்கலாம்.. ஒரு மாநிலத்தைக் காப்பாத்தறதுக்காக ஒரு ஊரைப் பலி கொடுக்கலாம்.. ஒரு ஊரைக் காப்பாத்த ஒரு குடும்பத்தைப் பலி கொடுக்கலாம்னு..

        அந்த மாதிரி இந்த நாட்டைக் காப்பாத்த என் ஊரைப் பலி கொடுக்கணும்னு நினைச்சா, அது இந்த ருத்ரன் இருக்கற வரைக்கும் நடக்காது மாமா..

        ஏன்னா.. இந்த ஊர்ல இருக்கற ஒவ்வொரு உயிரும் என்னோடது!

        மாமா.. நான் ரொம்ப சுயநலமான ஆள்! என்னோட சுயநலம் இந்த ஊரைப் பத்தி மட்டும் தான் நினைக்குது. என்னோட சுயநலத்துக்குக் காதல் கீதல் எல்லாம் தெரியாது.

        அதே சமயம் இந்தக் காதல் என்னை முழுசா அழிச்சுடும்னு எனக்கு இப்பவே ஆருடம் சொல்லுது மாமா.. அது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான்!

        ஆனா.. நான் ரொம்ப பிடிவாதக்காரன்! இந்த ஊர் மக்களுக்கு நல்லது நடக்காம நான் சாக மாட்டேன்!

        கவலைப்படாதீங்க மாமா.. என் காதலை நான் பார்த்துக்கறேன்..” என்று கூறிவிட்டு அப்புறம் திரும்பியவன், மீண்டும் சரக்கெனத் திரும்பி..

        “இனி ஒரு முறை எனக்காகப் பரிதப்படாதீங்க.. ருத்ரனோட பேருக்கு இருக்கற சூடே குறைஞ்சுட்டா மாதிரி இருக்கு!

        ருத்ரன்னா, அவன் நெருப்பு!

        அந்தத் தீயோட மகன் நான்!

        நெருப்புக்கு யார் மேலேயும் கருணை கிடையாது.. பரிதாபம் கிடையாது!

        தீ, தன் கண்ணுல அகப்படற எல்லாப் பொருளையும் தீயாவே மாத்திடும்! அதாவது இந்த நெருப்போட இரை, நெருப்பே தான்!

        அதே மாதிரி அந்த நெருப்பு மேல பரிதாபப்படறவங்களும் யாரும் கிடையாது.

        இந்த ருத்ரனுக்கு யாரோட பரிதாபமும் வேணாம் மாமா..

        அவன் நெருப்பு! அது அப்படியே இருக்கட்டும்!” என்று இறுகிய குரலில் அவன் கூறிவிட்டுச் செல்ல.. அவனையே உறைந்து போய்ப் பார்த்திருந்தார் அமரேந்தர்!

          The post அத்தியாயம் – 15 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>
          https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/feed/ 0 17700
          அத்தியாயம் – 14 : சினம்கொண்ட சிங்கம்! https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a/#respond Tue, 16 Apr 2024 19:11:42 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a/ கையில் வைத்திருந்த அந்த வெடிமருந்தின் எடையை விடக் கனத்தது அந்தத் துப்பாக்கியின் குண்டு. கபீர் தன்னை நோக்கித் தான் சுடுவான் என்று அவனையே நேருக்கு நேராய் ருத்ரன் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில் அவனது குறி இடம் மாறி அக்னியை நோக்கிச் செல்லவும் பதற்றம் தொற்றிக்கொள்ள.. ஒரே தாவலில் அவனது கப்பலில் குதித்திருந்தவன், அக்னியை நோக்கி ஓடுவதற்குள் கபீரின் ஸ்னைப்பர் அக்னியின் மார்பைத் துளைத்திருந்தது. “மித்ரா….” என்று அவன் அலறிய அலறல்,

          The post அத்தியாயம் – 14 : சினம்கொண்ட சிங்கம்! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>

          Loading

          கையில் வைத்திருந்த அந்த வெடிமருந்தின் எடையை விடக் கனத்தது அந்தத் துப்பாக்கியின் குண்டு.

          கபீர் தன்னை நோக்கித் தான் சுடுவான் என்று அவனையே நேருக்கு நேராய் ருத்ரன் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில் அவனது குறி இடம் மாறி அக்னியை நோக்கிச் செல்லவும் பதற்றம் தொற்றிக்கொள்ள.. ஒரே தாவலில் அவனது கப்பலில் குதித்திருந்தவன், அக்னியை நோக்கி ஓடுவதற்குள் கபீரின் ஸ்னைப்பர் அக்னியின் மார்பைத் துளைத்திருந்தது.

          “மித்ரா….” என்று அவன் அலறிய அலறல், அந்த வங்கக்கடலின் ஆர்ப்பரிப்பையும் மீறி எதிரொலித்தது.

          வேகமாகத் தன்னுடைய ஸ்னைப்பரை எடுத்து கபீரை சுட முற்பட்டான் ருத்ரன். அதற்குள் கடல் அலையின் கொந்தளிப்பாலும், அந்தச் சிறிய படகு, கபீர்.. அக்னியைச் சுட்ட மறுகணமே சீறிப் பாய்ந்து கிளம்பிவிட்டதாலும், அவனால் கபீரை சரியாகக் குறிபார்க்க முடியவில்லை.

          அந்த வெறியில் வானதிர கத்தியவனை சமீர் அருகே வந்து ஆசுவாசப்படுத்தினான்.

          “ஜி.. இப்போ அவனைக் கொல்ல நமக்கு டைம் இல்ல.. சீக்கிரம் இவங்கள நாம காப்பாத்தணும்..” என்று அவன் கூறிக் கொண்டிருக்க, அதே சமயத்தில் சமீரின் தம்பியும், மருத்த்துவனுமான முகம்மது முன் வந்து அக்னியை பரிசோதித்துக் கொண்டிருந்தான்.

          இருவரின் பார்வையும் அவனிடம் ஒரு சேரப் போக, அவனோ பதட்டமான முகத்துடன்.. “சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்..” என்றான் அக்னியின் ரத்தக்கசிவுக்கு முதலுதவி செய்துகொண்டே!

          அவன் கூறிய அடுத்த வினாடி, கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாது நீரைக் கிழித்துக் கொண்டு சீறிப் பாய்ந்தது அந்தக் கப்பல்!

          கப்பல் சென்று கொண்டிருக்கும் போதே சற்று தூரத்திற்கெல்லாம் போனில் சிக்னல் திரும்பக் கிடைத்துவிட, முகம்மது உடனே காளிக்ஷேத்ராவில் இருக்கும் அந்தப் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து விஷயத்தைக் கூற, அடுத்த கணமே ஊரே விழித்துக் கொண்டது.

          அக்னிக்குத் தேவையான சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்க, இங்கோ கரை சேர இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் போலிருந்தது.

          ருத்ரனோ, அக்னியை மடியில் கிடத்திக் கொண்டு அவளிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

          “அக்னி.. அக்னி.. இதோ பாரு.. சீக்கிரம் ஹாஸ்பிடல் போய்டலாம்.. உனக்காக பர்ஸ்ட் எயிட் எல்லாமே செஞ்சுட்டு இருக்கோம்.. ஒன்னும் பயமில்லை.. ஒன்னும் பயமில்லை..” என்று அவளுக்குக் கூறுவதை போல, தனக்குமே அவன் தைரியமூட்டிக் கொண்டிருக்க, அரை மயக்க நிலையில் இருந்த அக்னியோ, மெல்லச் சிரித்தபடி..

          “என்ன அப்படியே கடல்ல தூக்கிப் போட்டுட்டு போய்டுங்க.. அது தான் உங்களுக்கு நல்லது..” என்றாள் திணறலுடன்.

          அவளையே உறுத்துப் பார்த்தவன்.. “இன்னொரு முறை இந்த மாதிரி பேசினா, நானே உன்னைக் கொன்னுடுவேன்..” என்று அடிக்குரலில் உறுமினான்.

          அதற்கும் சிரித்தவள்..

          “அதையே தான் நானும் சொல்லறேன் ருத்ரன்!.. என்னை நீங்க காப்பாத்தக் கூடாது! ஏன்னா.. இங்க நீங்க.. இல்ல நான்.. நம்ம ரெண்டு பேர்ல யாரவது ஒருத்தர் மட்டும் தான் உயிரோட இருக்க முடியும்.

          நான் இன்னைக்கு உயிர்பிழைச்சா.. அதற்கான விலையா உங்க உயிர் தான் இருக்கும்.. சோ, என்னை இப்படியே கடல்ல தூக்கிப் போட்டுட்டு நிம்மதியா போய்டுங்க..” என்றாள் அக்னி அழுகையில் உதடு துடிக்க!

          அவளது கண்களையே ஆழ்ந்து பார்த்தவன்..

          இந்தக் கண்ணுல.. அதுல இருந்து வழியற கண்ணீர்ல எனக்கு உன்னோட காதல் முழுசா புரியுதுடி.. ஆனா.. ஆனா ஏன் நீ என்னையும், என் மக்களையும் புரிஞ்சுக்க மாட்டேங்கறேன்னு தெரியல..” என்று அவன் பரிதவிப்புடன் கூற, குண்டு துளைத்த வலியில் முகம் சுருக்கியவள், மெல்ல மெல்ல ஆழ்மயக்கத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் வேளையில்..

          “எ.. எனக்கு எல்லாத்தையும் விட, இ.. இந்த நாட்டு மேல.. இருக்கற பற்று.. தான்.. ரொம்ப முக்கியம் ருத்ரன்.. அ.. அதனால தான் சொல்லறேன்.. நா.. நான் உங்கள ஏதாவது செய்யறதுக்கு முன்னாடி.. என்னை.. இ.. இப்படியே விட்டுடுங்க..

          உ.. உங்க கையால… என்னைக் கொலை செய்யத் தான் உ.. உங்களுக்கு மனசு வரல.. இப்.. இப்போ.. கடவுளா பார்த்து, அந்தச் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்துட்டாரு..

          எ.. என்னைக் காப்பாத்திடாதீங்க.. நீ.. நீங்களும், இ.. இந்த ஊரும் ந.. நல்லா இருக்கணும்னு தான் சொல்லறேன்..” என்று அவள் கூற, ருத்ரனோ அவள் இதழ் மீது கை வைத்துப் பொத்தினான்.

          “நீ உயிரோட இருந்தா நான் சாகப்போறது உறுதி.. அது எனக்குத் தெரியும்!

          ஆனா.. இந்த ருத்ரனோட உடம்புல உயிர் இருக்கற கடைசி வினாடி வரைக்கும், உன் உடம்பை விட்டு உன்னோட உயிரைப் பிரிய விட மாட்டேன்!

          இது என் காளிக்ஷேத்ரா மீது ஆணை!” என்று அடிபட்ட சிங்கத்தின் உறுமலாய் அவன் உரைக்க, அக்னியின் மென்னிதழ்களோ, ருத்ரனின் விரல்களுக்கு அடியே மெல்ல நகைத்துக் கொள்ள.. அவளது கண்களோ முழுதாக மூடிக் கொண்டன!

          அவள் கண்கள் மூடியதும் உயிருக்குள் ஆழமாய் ஒரு விதிர்ப்பு ஓட, அவர்களுக்கு அருகேயே அமர்ந்து அக்னிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த முகம்மதுவை கலவரத்துடன் ருத்ரன் பார்க்க.. அவனோ..

          “இப்போதைக்கு மயக்கமாகிட்டாங்க.. ஆனா சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.. இல்லைன்னா ரொம்ப சீரியசாகிடும்..” என்றான் பதட்டமான குரலில்.

          அக்னியை முகமதுவிடம் விட்டுவிட்டு, தானே கப்பலை இயக்கக் கிளம்பினான் ருத்ரன். அவன் கையில் கப்பல் சீறிய வேகத்துக்குக் கடலன்னையின் சீற்றம் கூடக் கொஞ்சம் மட்டுப் பட்டுத் தான் போனது.

          அடுத்த இருபதாவது நிமிடத்தில் அவர்கள் கரையில் இருக்க, அனைத்து மருத்துவ வசதிகளுடனும் கூடிய ஒரு அதிநவீன ஆம்புலன்ஸ் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

          அக்னியைத் தூக்கிக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கியவன், ஆம்புலன்சில் ஏறுவதற்கு முன்பு அங்குக் குழப்பத்துடன் வந்து நின்ற அமரேந்தரிடமும், அர்ஜுனிடமும் பார்வையால் கப்பலைக் காட்ட.. அவர்களோ அவன் பார்வையைப் புரிந்து கொண்டு வேகமாகக் கப்பலை நோக்கி ஓடினர்.

          அக்னியுடன் ஆம்புலன்சில் ஏறும் பொழுது அக்னியின் கரமோ ருத்ரனின் கரத்தை அழுத்திப் பிடித்திருந்தது.

          தன்னைக் கொன்றுவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தவள், எந்த நம்பிக்கையில்.. எதன் காரணமாக அவனது கரத்தை, தன் உயிரின் ஆதாரம் போல அப்படி இறுக்கமாகப் பற்றி இருந்தாள் என்று தெரியவில்லை!

          சலைனை ஏற்ற அவளது கரத்தைப் பிரிக்கும் போது அவள் முகத்தை ஆத்மன் பார்க்க, அவளோ அந்த மயங்கிய நிலையிலும், அரைக் கண் கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.

          அதில் ருத்ரனின் விழிகள் மெல்ல கலங்கத் துவங்க.. அவனோ இரும்பு இதயத்தின் ஈரக் கடிவாளம் கொண்டு அந்தக் கண்ணீரை உள்ளடக்கியபடியே மெல்ல அக்னியின் தலையை வருடியபடி..

          “உனக்கு ஒன்னும் ஆகாது.. ஆக விடமாட்டேன்..” என்றால் சபதம் போல!

          அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவுக்குள் இருந்தாள் அக்னி.

          மருத்துவர்கள் தீயாய் அவளுக்கு வைத்தியம் பார்த்த்துக் கொண்டிருக்க, ருத்ரனும் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் மட்டுமே உடனிருந்தார்.

          அவர்கள் அனைவருக்குமே பெருங்குழப்பம்!

          இந்த அக்னி எதற்காக இந்த ஊருக்கு வந்தாள் என்று அனைவருக்குமே தெரியும்.. ஆனால் அப்படிப்பட்டவளிடம் எப்படி ருத்ரனுக்குக் காதல் தோன்றியது?

          ருத்ரனுக்கு இந்த காளிக்க்ஷேத்ரா முக்கியமா? இல்லை இந்த அக்னி முக்கியமா?

          அவளுக்கும் ருத்ரனிடம் வெறுப்பு இருப்பது போலத் தோன்றவில்லையே.. சொல்லப் போனால் துப்பாக்கிக் குண்டு பட்டதும் அவள் முகத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என்ற நிம்மதி தான் பரவியது.

          அதையே அவள் ருத்ரனிடமும்.. “என்னை இங்கயே கடல்ல போட்டுட்டுப் போய்டு.. அது தான் உன்னோட உயிருக்கு நல்லது..” என்று கூறினாள்.

          அவள் இந்திய அரசாங்கத்துக்கு உளவு பார்க்க வந்தவளென்றால்.. அவளுக்கு இந்திய அரசாங்கமும், நாட்டுப்பற்றும் தான் முக்கியமென்றால், அவள் இப்படியொரு வார்த்தையைக் கூறியிருக்க மாட்டாளே!

          அந்த வார்த்தைகளைக் கூறும் பொழுது தான் அவள் முகத்தில் எத்தனை இறைஞ்சுதல்.. ‘என்னால, ருத்ரனுக்கு ஒன்னும் ஆகிடக் கூடாதே..’ என்ற பரிதவிப்பு தான் அவள் முகத்தில் இருந்தது.

          இப்படி இத்தனையாய் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தால், இருவரும் ஒத்த கருத்துக்குத் தானே வந்தாக வேண்டும்?

          ஆனால் எதிரெதிர் துருவத்தில் இருந்து கொண்டு இணைவது எப்படி? என்ற குழப்பம் அங்கிருந்தோரின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

          ஆனால் இதைப் பற்றி எல்லாம் ருத்ரனிடம் கேட்பது யார்?

          மற்றவர்களின் யோசனை இப்படியெல்லாம் உழன்று கொண்டிருந்தாலும், ருத்ரனை நெருங்கி அவனுக்கு ஆறுதல் கூறக் கூட யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.

          ஏனென்றால் அவன் கண்கள் கனன்ற விதத்தில் அவன் இப்பொழுது கொலை வெறியில் இருக்கிறானென்று அத்தனைப் பேருக்கும் அப்பட்டமாகத் தோன்றியது.

          அக்னிக்கு மட்டும் ஏதாவது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என்றால், ருத்ரனின் அசுரத் தாண்டவத்தை இந்த காளிக்ஷேத்ராவினாலேயே தாங்கி முடியாது.

          அதற்காகவே மற்றவர்களும் கூட அக்னிக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது என்று வேண்டிக் கொண்டார்கள்.

          ஆனால் அவர்களுள் சமீர் மட்டும் தான் எதைப் பற்றியும் யோசிக்காது ருத்ரனின் மனநலனில் மட்டும் கவனமாய் இருந்தான்.

          அவன் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிட வில்லையே என்ற பரிதவிப்பில் அந்த மருத்துவமனை உணவகத்திலேயே அவனுக்குப் பிடித்தமான பழச்சாறை வாங்கி கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, ருத்ரனோ அவனை ஏறிட்டு முறைத்தான்.

          “இப்போ இது தான் முக்கியமா? அந்த கபிரை எப்படி கொல்லறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா இல்லையா? அவன் சாகணும்.. இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ள அவன் சாகணும்..” என்று மதம் பிடித்த யானையாய் அவன் பாய, இறுகிய முகத்தோடு நின்றிருந்த சமீரோ, மறுப்பாகத் தலையசைத்தான்.

          “இல்லைன்னு தலையசைச்சா என்ன அர்த்தம்? இங்க அக்னி இப்படி இருக்கறதுக்கு காரணம் அவன்.. அவன் இன்னமும் உயிரோட இருக்கான்.. இந்த ருத்ரன் அவனை உயிரோட விட்டு வச்சிருக்கேன்..” என்று இன்னமும் சீற, மெல்ல அவனது தோளைத் தொட்டு அடக்கிய சமீரோ..

          “ஆமாம் ஜி.. அந்த கபீர் இன்னமும் உயிரோட தான் இருக்கான்..

          ஆனா.. அவனோட உயிர் எங்க கையால போகக் கூடாது!

          அவனோட உயிர் எங்க ருத்ரன் கையால போகணும்! எந்த நிலையிலும் நிதானமிழக்காத எங்க கோஸ்ட்.. இந்த மொத்த இந்தியாவே பயந்து நடுங்கிட்டு இருக்கற எங்க கோஸ்ட்.. இப்படி பித்து பிடிச்ச மாதிரி இருக்கறதை எங்களால பார்க்க முடியல!

          எத்தனை வெறி இருந்தாலும், வேட்டைக்குப் போற சிங்கத்தோட கண்ணுல நிதானம் இருக்கும்!

          அதோட ஒவ்வொரு அசைவுலேயும் அதோட ஆளுமை தெரியும்!

          இரையை துரத்திட்டு ஓடறப்போ கூட அதோட நிதானம் தவறினது கிடையாது.

          இரையோட குரல்வளையைக் கவ்வி ரத்தத்தைக் குடிக்கறப்போ அதோட கண்ணுல ஒரு அலட்சியம் தெரியும் பாருங்க.. அது வேணும் எங்களுக்கு..

          எங்களோட சிங்கம் ஜி நீங்க! நீங்க இவ்வளவு தடுமாற்றத்தோட இருந்து நாங்க பார்த்ததே இல்ல..

          தயவு செஞ்சு நிதானத்துக்கு வாங்க..

          நிதானமா வந்து வேட்டையாடுங்க.. உங்களை எந்தக் கேள்வியும் கேட்காம உங்களுக்கு அடிமையா வேலை செய்ய இந்த சமீர் இருக்கான்!.

          நீங்க எந்த முடிவு எடுத்தாலும் இந்த சமீர் உங்க பின்னாடி நிப்பான்!” என்று அவன் உறுதியாகக் கூற அவனையே ஆழப் பார்த்திருந்த ருத்ரனோ, அவனிடம் எதுவும் பேசாது அவன் கையிலிருந்த பழச்சாறை மட்டும் வாங்கினான்.

          அந்த செய்கையிலிருந்தே ருத்ரன் தன்னிலை மீண்டுவிட்டான் என்று உணர்ந்த சமீருக்கோ உள்ளுக்குள் நிம்மதி பெறுகியது!

          இவன் மதம்கொண்டயானையல்ல.. சினம் கொண்ட சிங்கமென்று உணர்ந்தவன் மனதார பொங்கிய மகிழ்ச்சியுடன் திரும்பி நடந்தான்.

          அதே சமயம் அக்னிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த, அந்த மருத்துவமனையின் டீன் ஆண்டனி, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்தார்.

            The post அத்தியாயம் – 14 : சினம்கொண்ட சிங்கம்! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>
            https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a/feed/ 0 17689
            அத்தியாயம் – 13 : ருத்ர தாண்டவம்! https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/#comments Mon, 08 Apr 2024 21:37:13 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/ அத்தியாயம் – 13 : ருத்ர தாண்டவம்! அக்னி கீழே இருந்த ஆயுத அறையிலிருந்து மேலே ஏறி வந்ததும், அவளைப் பார்த்துக் கொண்டே கண்களில் அனல் வீச அவளை நோக்கி விரைந்து வந்த ருத்ரன், தடதடவெனப் படிகளில் இறங்கி அந்த ஆயுத அறையை நோக்கிச் சென்றான். அவன் தன்னை நோக்கிக் கோபமாக வரவும் முதலில் அக்னி சற்று மிரண்டு தான் போனாள். இத்தனை பேர் முன்னிலையில் ஏதேனும் செய்துவிடுவானோ என்று உள்ளுக்குள் கொஞ்சம்

            The post அத்தியாயம் – 13 : ருத்ர தாண்டவம்! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

            ]]>

            Loading

            அத்தியாயம் – 13 : ருத்ர தாண்டவம்!

            அக்னி கீழே இருந்த ஆயுத அறையிலிருந்து மேலே ஏறி வந்ததும், அவளைப் பார்த்துக் கொண்டே கண்களில் அனல் வீச அவளை நோக்கி விரைந்து வந்த ருத்ரன், தடதடவெனப் படிகளில் இறங்கி அந்த ஆயுத அறையை நோக்கிச் சென்றான்.

            அவன் தன்னை நோக்கிக் கோபமாக வரவும் முதலில் அக்னி சற்று மிரண்டு தான் போனாள். இத்தனை பேர் முன்னிலையில் ஏதேனும் செய்துவிடுவானோ என்று உள்ளுக்குள் கொஞ்சம் அச்சமும் கூடத் தான்.

            ஆனால் தன்னை முறைத்தபடியே அவன் கீழிறங்கிச் செல்லவும் சட்டென ஓர் ஆசுவாசம் பிறந்தது அவளுக்கு.

            கூடவே அதே வேகத்தில் அவன் திரும்ப மேலே வரவும், அதுவும் கையில் ராக்கெட் லாஞ்சருடன் வரவும், திகைத்து.. கண்களிரண்டும் சாசர் போல விரிய நின்றாள் பெண்ணவள்.

            ‘இப்போ எதுக்கு ராக்கெட் லாஞ்சர் எடுத்துட்டு வரான்? என்ன நடக்குது இங்க?’ என்று சுற்றும் முற்றும் அவள் பார்க்க.. அங்கே தூரத்தில் இரு கப்பல்கள் நின்று கொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது.

            “அந்த யாரோட கப்பல் ருத்ரன்.. நீங்க எதுக்கு இப்போ ராக்கெட் லாஞ்சரை எடுத்துட்டு வந்துருக்கீங்க..” என்று அவள் கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்த ருத்ரனின் கண்களிலோ ஏளனச் சிரிப்பு!

            “நான் இங்க என்ன செய்ய வந்தேன்னு உளவு பார்க்கத் தானே வந்த? அப்படி ஓரமா போய் உட்கார்ந்து உளவு பாரு..” என்று அவளிடம் கூறிவிட்டு, கப்பலின் முனை நோக்கி நடந்தான்.

            தோளில் ராக்கெட் லாஞ்சரை வைத்துக் கொண்டு கண்களிரண்டும் சிவந்திருக்க, ஒரு ராட்சனைப் போல நடந்து சென்றவனைப் பார்த்து மிரண்டு போனாள் அக்னி!

            இதுவரை ருத்ரனைக் கோபமாய், ரௌத்திரமாய் பார்த்திருக்கிறாள் தான் அவள். ஆனால் இப்படி வேட்டைக்குச் செல்லும் அரிமாவைப் போலப் பிடரி சிலிர்க்க நின்றவன் அவளுக்குப் புதியதோர் அவதாரமான தெரிந்தான்.

            அதிலும், நரசிம்ம அவதாரமாய்!

            அவனிடம் வேறெதுவும் கேட்கத் தைரியமின்றி அதிர்ந்து போய் அவள் பார்த்திருக்க, அங்குக் கூடியிருந்த அத்தனைப் பேரின் கண்களும் அவனையே கூர்நோக்காய் நோக்கிக் கொண்டிருக்க, அடுத்த பத்தாவது நொடி, அவனது தோளில் சாய்ந்திருந்த ராக்கெட் லாஞ்சர் இயக்கப்பட்டு அதிலிருந்து, “வார் ஹெட்” என்று அழைக்கப்படும் கிரானைட் நிரப்பிய முனை அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்தது.

            ருத்ரன் அந்த லாஞ்சரை தோளில் தூக்கி வைத்தது மட்டும் தான் அக்னியின் கண்களுக்குப் புலப்பட்டது. அடுத்து, அந்த லாஞ்சர் எதிரிலிருந்த கப்பலைத் தாக்கவும் தான் அந்த அதிர்வில் காதைப் பொத்திக் கொண்டு அதிர்வுடன் திரும்பிக் கொண்டவளின் இதயம் பலமாக அடித்துக் கொண்டது!

            அவள் இந்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பான ராவில் இணைந்து பணியாற்றத் துடித்தவள் தான்!

            ரஷ்யாவுக்கே சென்று மூன்றாண்டுகள் மிகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டவள் தான்!

            நூற்றுக்கணக்கான போர் நிகழும் இடங்களுக்கெல்லாம் சென்று அதையெல்லாம் நேரில் கண்டு மக்களின் வலியையும், வேதனையும், போர்வீரர்களின் அந்த அசுரத்தனமான சண்டைகளையும் நேரிலேயே பார்த்தவள் தான்.

            ஆனால்.. இப்படி ஒரு தனி மனிதன்.. கண்களில் வெறி கொண்டு ஒற்றையாளாய் வேட்டையாடுவதை அவள் என்றுமே கண்டதில்லை!

            இன்று அவள் கற்பனைக்கும் எட்டாத காரியங்கள் யாவும் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்க, அதையெல்லாம் நம்பக் கூட முடியாத அதிசயத்தில் பிரம்மை பிடித்து நின்றிருந்தாள் பேதையவள்.

            ருத்ரனால் தாக்கப்பட்ட கப்பலானது, வெடி பொருட்கள் சுமந்து வந்த கப்பல்! ருத்ரன் நேரடியாக அதையே தாக்கிவிடவும், எதிர்க் கப்பலில் இருந்த கபீரோ அதிர்ந்து போனான்!

            அவர்கள் இருந்த கடல் பகுதியானது, இந்தியாவுக்கும் அண்டை நாடான பங்களாதேஷுக்கும் இடைப்பட்ட கடற்பகுதி. எனவே இப்படி அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது பங்களாதேஷ் கடற்படை என்று அவன் தவறாக நினைத்திருந்தான்.

            “டேய்.. எப்படிடா இங்க பங்களாதேஷி போலீஸ் வந்தாங்க.. அவங்களுக்கு எப்படி விஷயம் லீக் ஆச்சு?

            அதுவுமில்லாம இப்போ இவனுங்க அட்டாக் பண்ணிட்டு இருக்கறது வெப்பன்ஸ் இருக்கற கப்பலை. கொஞ்சம் மிஸ் ஆனா, அந்த வெப்பனெல்லாம் வெடிச்சு, இந்தக் கடலைத் தாண்டி ரெண்டு நாட்டோட எல்லைப்புற ஊரே இல்லாம போய்டும்..” என்று அவனது ஆட்களிடம் கூறிக் கொண்டிருந்தவன், எதிரில் இருக்கும் கப்பலைக் கூர்ந்து பாக்க முயல, அங்கே கப்பலின் முனையில் நின்றிருந்தவனைப் பார்த்துப் பயத்தில் இரண்டெட்டு பின்னே சென்றான் கபீர்.

            அவனது பயத்தைக் கண்டு அவனது ஆட்களின் முகமுமே வெளிறிப் போக..

            “ஜி.. என்ன ஆச்சு? ஏன் இப்படி பயந்து போயிருக்கீங்க?” என்று அவன் கேட்க, கபீரோ வைத்த விழி எடுக்காமல் ருத்ரனின் கப்பலை நோக்கிக் கை காட்டினான்!

            அங்கே அந்தக் கப்பலில் பறந்து கொண்டிருந்த ரத்தச் சிவப்பு நிறக் கொடியோடு மிளிர்ந்திருந்த வங்கப் புலியைப் பார்த்த அவர்களின் நாக்கும் உலர்ந்து போனது!

            “ஜி.. ஜி.. அது.. அது..” என்று ஒருவன் தயங்க.. கபீரோ..

            “அது.. கோஸ்ட்!” என்கவும் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரின் நெற்றியிலும் வியர்வை துளிர்த்தது!

            “இது.. இது எப்படி சாத்தியம்? எப்படி இவனுக்கு நியூஸ் கசிஞ்சது?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, ராக்கெட் லாஞ்சரின் அடுத்த தாக்குதல் அவர்களது கப்பலை நோக்கி வந்தது.

            அதில் கப்பலின் எஞ்சின் பகுதியில் சேதாரமாகிவிட, அவர்களது கப்பல் நிலைகொள்ளாமல் தள்ளாடத் துவங்கியது.

            அதைக் கண்டவர்கள்.. “ஜி.. இப்போ நாம யோசிக்க நேரமில்லை. அவனைப் பதில் தாக்குதல் செய்யணும்.

            கூடவே நம்ம சப்போர்டுக்காக நாம எடுத்துட்டு வந்த இந்த மோட்டார் போட்ல எல்லாரும் இறங்கி தப்பிச்சாகனும்.

            ஆனா.. இந்தக் கப்பல்ல இருந்தே நாம தாக்க முடியாது. முதல்ல அந்தக் கப்பல்ல இருந்து நாம வெப்பனைக் காப்பாத்தணும்!” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, ருத்ரன் தன் வசமிருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியை எடுத்து அந்த ஆயுதக் கப்பலில் இருந்தவர்களை சரமாரியாகத் தாக்கத் துவங்கிவிட்டான்.

            அந்தக் கப்பலில் இருந்தவர்கள் எல்லாம் அலறிப்புடைத்துக் கொண்டு பதுங்குவதற்கான வழியைத் தேட, ருத்ரனுடன் இருந்தவர்களெல்லாம் ஏதோ கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போலப் பெரும் குதூகலத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

            அதைக் கண்ட அக்னிக்கு பெரும் வியப்பாக இருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? காட்டில் ஒரு சிங்கம், வேட்டையாடுவதை வீட்டுத் தொலைக்காட்சியில் பார்ப்பது போல, பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே?

            எதிரில் இவர்களால் வேட்டையாடப்படுபவன் ஒரு மனிதன் என்ற உணர்வு அற்றுப் போய்விட்டதா இவர்களிடம்?’ என்று தோன்றியது அவளுக்கு.

            அதை வெறுமனே வேடிக்கை பார்க்கவும் முடியாது.. அங்கு நடக்கும் களேபரத்தைத் தடுக்கவும் முடியாது.. அதே சமயம் மற்றவர்களைப் போல ருத்ரனின் இந்தத் தாண்டவத்தைப் பார்த்துப் பரவசப்படவும் முடியாது திகைத்துப் போயிருந்தாள் அவள்!

            அதே சமயத்தில் கபீர் இருந்த கப்பலிலோ, அவன் ஆட்களிடம் தோன்றிய பய உணர்வைப் பார்த்து அவனே அதிர்ந்து போயிருந்தான்.

            தன்னுடைய ஆள்.. கபீரின் கூட்டத்தில் அங்கம் கொண்டிருப்பவன் என்ற ஒன்றே அவர்களுக்கெல்லாம் கர்வமளிக்க கூடியதாய்.. எவ்வித அக்கிரமத்தையும் செய்ய வலு கொடுப்பதாய் இருந்து வந்தது.

            ஆனால் இப்பொழுது அவனே உடன் இருந்தும், எதிரில் இருக்கும் ஒற்றை மனிதனைக் கண்டு இப்படி அலறுகிறார்கள் என்ற எண்ணம் அவன் நெஞ்சில் வெறியேற்றியது.

            அவனது கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடுவதையும் பொருட்படுத்தாது தன்னிடத்தில் இருக்கும் ஏ.கே. 47 துப்பாக்கியை எடுத்து அவனும் ருத்ரனின் கப்பலைச் சரமாரியாகச் சுட ஆரம்பித்தான்.

            ஆனால் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது ருத்ரனின் கப்பல் கபீரின் கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது.

            அதே சமயத்தில் கபீரின் கப்பலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தீப்பிடிக்கவும் ஆரம்பித்திருந்தது.

            கூடவே இந்த இரு இளம்புலிகளின் நேருக்கு நேர் மோதலால் வங்கக்கடலும் கூடச் சற்று பீதி கொண்டது போல மெல்ல மெல்ல அதன் சீற்றம் அதிகரிக்கத் துவங்கியது.

            பௌர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தன. ஆனால் அந்தச் சீற்றம் என்னவோ பௌர்ணமி நாளின் தாக்கத்தை விட அதிகமாக இருந்தது.

            ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருந்த கபீரின் கப்பல், கடலின் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் தாங்க முடியாது இப்படியும் அப்படியுமாகக் குதிக்கத் துவங்கியது.

            ஏற்கனவே பீதியில் ஆழ்ந்திருந்த கபீரின் ஆட்களோ, இன்னமும் இந்தக் கப்பலில் இருப்பது தற்கொலைக்குச் சமம் என்று கருதினார்கள். ஆனால் இன்னமும் கபீர் எதற்காக வீண் முயற்சியாக அந்த கோஸ்டின் கப்பலைத் தாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதும் அவர்களுக்குப் புரியாது போகவே, கபீரின் முக்கிய அடியாட்களில் ஒருவன் ஓரிடத்தில் நிற்க முடியாது இப்படியும், அப்படியும் ஆடிக் கொண்டிருந்த கப்பலில் சிரமத்துடன் கபீரிடம் வந்து..

            “ஜி.. என்ன செய்யறீங்க? இப்போ நாம இங்கிருந்து தப்பிக்கறது முக்கியம். வாங்க ஜி.. இங்கிருந்து போய்டலாம்..

            நாம இந்த நேவி ஆபிசர்ஸ ஏமாத்த எடுத்துட்டு வந்த மோட்டார் போட்ல தான் தப்பிச்சுப் போகணும். இப்போ இவன் கூடச் சண்டை போடறதுல எந்த உபயோகமும் இல்ல.. கப்பல் வேற தீப்பிடிகிச்சு..” என்று பதட்டமாகக் கூற.. அவனது நெஞ்சின் மீது கை வைத்து அவனைத் தள்ளிவிட்ட கபீரோ..

            “இவனுக்குப் பயந்து என்னை இங்கிருந்து ஓடச் சொல்லறீயா?” என்று சீறினான்.

            ஆத்திரத்திலும், கோபத்திலும் இருக்கும் இவனை எப்படி நிதானத்துக்கு கொண்டு வருவது என்று புரியாமல் நெற்றியைத் தடவினான் மற்றவன்.

            அப்போது அவனது உதவிக்கு மற்ற ஆட்களும் வந்து.. “ஜி.. இப்போ நாம இங்கிருந்து கிளம்பனும்னு சொல்லறது இந்த கோஸ்டுக்குப் பயந்து இல்ல.. இங்க பாருங்க நம்ம கப்பல்ல தீப்பிடிச்சுகிச்சு.

            அதே சமயம் கடலும் திடீருன்னு கொந்தளிக்க ஆரம்பிச்சுடுச்சு.. இப்போதைக்கு நமக்கு இந்த மோட்டார் போட்ல போற வாய்ப்பு ஒன்னு தான் இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் போச்சுன்னா அந்த வாய்ப்பும் இருக்காது.” என்று கூற, அவனை உறுத்து விழித்த கபீரோ..

            “எல்லாரும் ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க.. அந்தக் கப்பல்ல நம்ம சரக்கு இருக்கு.. அதை அப்படியே விட்டுட்டுப் போகச் சொல்லறீயா?” என்றான் தள்ளாடிக் கொண்டே.

            அதற்குள் மற்ற இருவர் அவனிடம் வந்து..

            “ஜி அதெல்லாம் சரி தான்.. ஆனா இப்ப நாம இருக்கற நிலைமைக்கு இந்த ஆபத்துல இருந்து தப்பிச்சுப் போகணும்.

            கப்பல்ல பிடிச்ச நெருப்பு நம்ம பக்கத்துலயே வந்துடுச்சு. அதே நேரம் கடலோட உக்கிரமும் அதிகமாகிடுச்சு..” என்று கூறியவன், கபீரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

            வேறு வழியில்லாத கபீரும் அவனுடன் நடந்து சென்றாலும், அவன் கண்களில் என்னவோ கொலைவெறி தாண்டவமாடியது.

            அப்பொழுது ருத்ரனின் கப்பலும் அவனுக்கருகே வந்துவிட, அவனோ மற்றுமொரு ராக்கெட் லாஞ்சரை கபீரின் கப்பலை நோக்கிச் செலுத்த, அந்தக் கப்பலின் ஒரு பாகமோ வெடித்துச் சிதறியது. அதே நேரத்தில் கபீர் அந்த மோட்டார் படகில் குதித்திருந்தான்.

            ருத்ரனின் கண்களும், கபீரின் கண்களும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டன.

            இன்னும் ஒரே ஒரு நொடி.. ருத்ரன், லாஞ்சரை அவர்களது படகின் புறம் திருப்பிவிட்டால் இவர்களது மொத்தக் கதையும் முடிந்துவிடும்.

            அவன் லாஞ்சரை இவர்கள் புறம் திருப்பிய வேளையில், அந்த ஆயுதம் ஏந்திய கப்பலில் இருந்து பெரும் புகை கசியத் துவங்கியது.

            அதாவது கபீரின் கப்பலிலிருந்த தீ, அந்தக் கப்பலுக்குப் பரவத் துவங்கியிருந்தது.

            இன்னும் சில மணித்துளிகளில் அந்தக் கப்பலிலும் முழு வேகத்தில் நெருப்பு பற்றத் துவங்கிவிடும்.

            அப்படி மட்டும் நடந்துவிட்டால், அதிலிருக்கும் அந்த வெடி பொருள் வெடித்துச் சிதறிவிடும்!

            அதனால் ஒட்டுமொத்த காளிக்ஷேத்ராவுமே சர்வ நாசமாகிவிடும்! என்று அஞ்சிய ருத்ரனோ, இப்போதைக்கு கபீரை கொல்லாமல், நேரே அந்தக் கப்பலில் குதித்தான்.

            அவனுக்குப் பிறகு இன்னும் சிலரும் குதித்தார்கள். இவர்கள் இருந்த கப்பலில் மாலுமியும், அக்னியும் மட்டுமே இருந்தார்கள்.

            தன் கண் முன்னே தன்னுடைய பொருளைத் தன்னிடமிருந்து பறித்து எடுத்துச் செல்லுபவனைப் பார்த்த கபீரின் கண்கள் நெருப்பைக் கக்கின.

            அதே சமயம் எதேச்சையாய் ருத்ரனின் கப்பலைப் பார்வையிட்ட அவனது விழிகள், அங்கே ஒரு பெண் கண்களில் பயத்துடனும், கவலையுடனும் ருத்ரனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவனது புருவங்கள், வியப்பில் நெற்றியின் உச்சியைத் தொட்டன!

            ‘இவன் கப்பல்ல.. இந்த நேரத்துல ஒரு பொண்ணா? அதுவும், அவ கண்ணுல ருத்ரன் மேல இத்தனை கவலை தெரியுதே..’ என்று எண்ணமிட்டவனது இதழ்கள் வஞ்சத்துடன் வளைந்து கொள்ள.. அவனது கைகளோ, அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்னைப்பரைத் தொட்டன.

            அந்த ஆயுதக் கப்பலிலிருந்து வெடி பொருள் சிறு சிறு பாகமாகப் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. அதை ருத்ரனின் ஆட்கள் ஒவ்வொருத்தராகத் தங்களது கப்பலில் இடம் மாற்றிக் கொண்டிருந்தனர்.

            அதே வேளையில் கடைசியாக வந்த ருத்ரன் தன் கையில் மிகப்பெரிதாக அந்த வெடி பொருளை வைத்திருக்க, அவனையே கண்களில் கனலுடன் பார்த்த கபீரோ, தனது ஸ்னைப்பரை எடுத்து அவனை நோக்கிக் குறி பார்த்தான்.

            அதில் ருத்ரனின் கண்கள் சட்டெனக் கூர்மையுற, அடுத்த நொடியே தனது குறியை அக்னியை நோக்கித் திருப்பிய கபீர், அவளது நெஞ்சை நோக்கிச் சுட்டிருந்தான்!

              The post அத்தியாயம் – 13 : ருத்ர தாண்டவம்! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>
              https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/feed/ 2 17635
              அத்தியாயம் – 12 : கடலாடும் காதலே! https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/#respond Fri, 05 Apr 2024 12:29:30 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/ கையில் ஒரு பிஸ்கெட் பொட்டலத்துடன் அந்த அறையை நோக்கிச் சென்றான் ருத்ரன். மெல்லக் கதவைத் திறந்தவன்.. மீண்டும் சுற்றும் முற்றும் பார்க்க எப்பொழுதும் போல அசாத்திய அமைதி தான் நிலவியது அங்கு. அந்த அமைதியில் நாக்கை உள்ளே மடக்கி கன்னத்தில் முட்டிக் கொண்டு சிரித்தவன், கையிலிருந்த பிஸ்கெட் பொட்டலத்தை அங்கேயே வைத்துவிட்டு மீண்டும் அறையைப் பூட்டிவிட்டுக் கிளம்பிவிட்டான். கப்பலின் மேல் தளத்துக்குச் சென்றவன், அங்கே இருந்த ஆட்களில் முக்கியமானவனான சமீரை

              The post அத்தியாயம் – 12 : கடலாடும் காதலே! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

              ]]>

              Loading

              கையில் ஒரு பிஸ்கெட் பொட்டலத்துடன் அந்த அறையை நோக்கிச் சென்றான் ருத்ரன். மெல்லக் கதவைத் திறந்தவன்.. மீண்டும் சுற்றும் முற்றும் பார்க்க எப்பொழுதும் போல அசாத்திய அமைதி தான் நிலவியது அங்கு.

              அந்த அமைதியில் நாக்கை உள்ளே மடக்கி கன்னத்தில் முட்டிக் கொண்டு சிரித்தவன், கையிலிருந்த பிஸ்கெட் பொட்டலத்தை அங்கேயே வைத்துவிட்டு மீண்டும் அறையைப் பூட்டிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

              கப்பலின் மேல் தளத்துக்குச் சென்றவன், அங்கே இருந்த ஆட்களில் முக்கியமானவனான சமீரை அழைத்து..

              “ஷிப்பை ஸ்டார்ட் செய்யலாம்..” என்றவுடன் சமீர் குழம்பினான்.

              “இன்னும் நேரம் இருக்கே ஜி?” என்று அவன் கேட்க, ருத்ரனோ, தன் சட்டைக்குள் கையை விட்டு நெஞ்சைத் தடவியபடி..

              “என் மனசுக்கு ஏனோ கொஞ்சம் தப்பாப்படுது. நாம கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினா நல்லதுன்னு தோணுது.

              அப்படியே கொஞ்ச நேரம் கடல்ல சுத்துவோம்.. அப்படியே நம்ம ஆளுங்களை எல்லாம் ரொம்ப கவனமா இருக்கச் சொல்லு.. நம்ம எல்லைப்பகுதில தான் இன்னைக்கு அந்தக் கடத்தல் நடக்கப் போகுது.

              இது நிச்சயம் நம்ம கண்ணுக்கு வராதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க..

              இப்போ இந்த விஷயம் நம்ம கண்ணுக்குப் பட்டுடுச்சு. நாமளும் அந்த இரை மேல குறி வச்சிருக்கோம்னு தெரிஞ்சா, அவங்க சும்மா இருக்கமாட்டாங்க.

              அதனால கவனம் நாலு பக்கமும் இருக்கட்டும்!

              ஹ்ம்ம்.. ஷிப்பை கிளப்பு.” என்று அதிகாரமாய் அவன் கூற, உடனடியாக நங்கூரம் எடுக்கப்பட, கப்பல் கிளம்பியது!

              தண்ணீரைக் கிழித்துக் கொண்டு கப்பல் கிளம்புவதை அதன் முனையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

              பிடிமானத்திற்கு ஏதுமின்றி அந்தக் கப்பலின் கூர்மையான முனையில் ஏறி, இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தவனின் சட்டை, காற்றில் படபடக்க.. அவனது அடர்ந்த சிகையை குளிர்காற்று தழுவி விளையாடிக் கொண்டிருந்தது.

              வானம் முழுக்கக் கறுத்து, கருநீல வைரமாய் ஜொலிக்க, அந்த வண்ணத்தில் தன்னைத் தொலைத்தவன், கீழே இறங்கி மீண்டும் அந்த ஆயுத அறைக்குச் சென்றான்.

              கதவைத் திறந்து பார்த்த பொழுது முன்னர் அவன் அங்கு வைத்துவிட்டுச் சென்றிருந்த அந்த பிஸ்கட் பொட்டலம் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

              அதைக் கையிலெடுத்தவன், “ஹ்ம்ம்.. ரொம்ப கஷ்டம் தான் போலிருக்கு..” என்றபடி மீண்டும் அந்த அறைக்குள் நடைபயின்றான்.

              அந்தச் சிறிய அறையில் மிகப்பெரும் துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பின்புறத்திற்குச் சென்றவன், சிறு திரை மறைவுக்குள் கையை விட்டு இழுக்க, அவன் கையோடு வந்தாள் அக்னி!

              மூச்சிரைக்க அவன் மார்போடு வந்து சாய்ந்தவள், பதறி விலக முற்பட, அவளை விலக்காது அப்படியே அணைத்திருந்தான் ருத்ரன்.

              “எப்போ கையைப் பிடிச்சு இழுத்தாலும் இப்படி என் நெஞ்சோட வந்து ஒட்டிக்கறியே? அவ்வளவு ஆசையா என் மேல?” என்று நக்கலாய் அவன் வினவ, அக்னிக்கோ ஆத்திரம் பொங்கியது.

              “ஆசையும் இல்ல.. தோசையும் இல்ல.. விடுங்க என்ன..” என்று அவள் விலக முற்பட, தன் வலிய கரங்களால் அவளை வளைத்துப் பிடித்திருந்தவன் அப்படியே நின்றான்.

              கையை இப்படியும், அப்படியும் ஆட்டி அவள் விளக்க முயன்றும் முடியாது போகவே.. “விடு என்ன..” என்றாள் கடித்த பற்களுடன்!

              அதைக் கேட்டு இதழுக்குள் சிரித்தவன்..

              “உன்னை விட்டுப் பத்து நிமிஷம் ஆச்சு.. அது கூடத் தெரியாம இருக்க.” என்று கூற, குப்பென முகம் செஞ்சாந்தாய் சிவந்து போனது.

              அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாது, அவள் தலை குனிந்து சட்டென ஓரெட்டு பின்னால் செல்ல, அவனோ உடனே ஓரடி முன்னே வந்து அந்த இடைவெளியை நிரப்பினான்.

              “எதுக்கு இங்க வந்து ஒளிஞ்சுட்டு இருக்க?” என்று அவன் கேட்ட பொழுது இப்பொழுது அவன் முகம் மிகவும் தீவிரமாக இருந்தது.

              அதற்கும் அவள் பதில் கூறாது அமைதி காக்க, தன் ஒற்றை ஆட்காட்டி விரல் கொண்டு அவளது தாடையை உயர்த்தி தலையை நிமிர்த்தியவன், “கேட்கறேனில்ல? சொல்லு.. எதுக்கு இங்க வந்து ஒளிஞ்சுட்டு இருக்க?” என்றான் இப்பொழுது இன்னமும் கடினமான குரலில்.

              அந்தக் குரலில் அவனை நேராகப் பார்த்தவள்..

              “நீங்க ஏதோ சதி வேலைல ஈடுபட்டிருக்கீங்கனு தெரிஞ்சுது. அது என்னனு கண்டுபிடிக்கத் தான் நான் இங்க வந்தேன்.” என்று சற்றும் தயங்காமல் கூற, அசந்துவிட்டான் ருத்ரன்.

              “இத்தனை நடந்ததுக்கு அப்பறமும் கொஞ்சம் கூட அடங்க மாட்டியா நீ?” என்று அவன் சிறு சிரிப்புடன் கேட்க, அவனை ஊன்றிப் பார்த்த பெண்ணவளோ..

              “உங்க கண்ணுல என் மேல அளவு கடந்த காதல் தெரியுது ருத்ரன். ஒரு பேச்சுக்கு நானும் உங்களைக் காதலிக்கிறேன்னு வச்சுப்போம்.. ஆனா, நீங்க இந்தக் காளிக்ஷேத்ராவை விட்டுட்டு வந்தா தான் நம்ம கல்யாணம் நடக்கும்னு சொன்னா.. நீங்க என்ன செய்வீங்க ருத்ரன்?” என்று அவள் கேட்க, ருத்ரனின் கண்கள் இடுங்கியது.

              “காதலுக்கு எந்தவொரு நிபந்தனையும் தேவையில்லை அக்னி!

              நீ அக்னி.. நான் ருத்ரன்.. இந்தப் பொருத்தம் மட்டுமே போதும் நம்ம காதலுக்கு!

              எனக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் உனக்கும் பிடிக்கணும். எனக்கு எதெல்லாம் பிடிக்காதோ, அதெல்லாம் உனக்கும் பிடிக்கக் கூடாதுனு நான் ஆசைப்பட்டா.. நான் ஒரு தனிமனுஷியை காதலிக்க முடியாது.

              நான் காதலிக்கறது என்னோட நகலாத் தான் இருக்கும்.

              எனக்கு நகல் வேண்டாம் அக்னி! எனக்கு இதே காரமான, கோபமான.. சூடான அக்னி தான் வேணும்.

              அது உனக்கும் தெரியும்.. ஆனா நீ சொல்ல வந்தது.. நீ என்னைக் காதலிச்சாலும் கூட உன்னோட நாட்டு மேல இருக்க பற்றை உன்னால மாத்திக்க முடியாதுனு சொல்லற.. இல்லையா?” என்று அவன் நேரடியாகக் கேட்க, உள்ளுக்குள் வியர்த்தது அவளுக்கு.

              ‘எப்படி பால் போட்டாலும் கண்டுபிடிச்சுடறானே..” என்று உள்ளுக்குள் பதறியவள்..

              “இல்ல இல்ல.. அப்படியெல்லாம் இல்ல..” என்றாள் உடனடியாக.

              அந்தத் தடுமாற்றத்திலேயே அவளது மனம் அவனுக்கு நன்றாய் புரிந்து போய்விட, மீண்டும் இதழ் முட்டும் சிரிப்பு வந்தது அவனுக்கு.

              இப்படியே அவளுக்கு அருகேயே.. அவளது சுவாசத்ஹதுக்குள்ளே உறைந்து போய் நின்றிக்க வேண்டும் என்று உள்ளுக்குள் பேராசை கிளம்பியது அவனுக்கு.

              ஆனாலும் இங்கு அவளுக்கு அதிக ஆபத்து என்று உணர்ந்தவன், “நீ இங்க என்னை உளவு பார்க்க வரல அக்னி.. ஆபத்தைத் தேடி வந்திருக்க.

              அதனால நாம் திரும்ப ஊர் போய்ச் சேரும் வரைக்கும் நீ இந்த இடத்தை விட்டு வெளில வந்துடாத. திரும்பக் கரைல கப்பல் நின்ன பிறகு தான நீ இந்த ரூமை விட்டு வெளில வரணும்.

              கண்டிப்பா இந்தக் கப்பலைப் பத்திரமா கரைக்கு கொண்டு போய்டுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா.. நீ வெளில வந்தா என்னோட கவனமெல்லாம் உன் மேல குவிஞ்சுடும். அப்பறம் என் வேலைல நான் கவனமா இருக்க முடியாது. சரியா?” என்று அவன் தன்மையாகவே கேட்க, அவளோ அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.

              அதைக் கண்டும் தனக்குள்ளாவே சிரித்தவன்.. “சரி, கொண்டு வந்த சாப்புட்டுல மீதி இருந்ததுன்னா, அதையே நைட்டுக்கும் வச்சுக்கோ..” என்று அவன் கூற, மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தவள்..

              “நான் என்ன பிக்னிக்கா வந்துருக்கேன்.. சாப்பாடெல்லாம் கட்டி கொண்டுட்டு வர?” என்று கேலியாய் கேட்க, அதற்குச் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தவன், மீண்டுமாய் அந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து அவளுக்குக் காண்பித்து ஆட்டிவிட்டுச் சென்றான்.

              அவன் அங்கிருந்து சென்றதும் அதுவரை பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றினாள் அக்னி.

              ‘இவனுக்கு நான் இங்க வந்து ஒளிஞ்சுருக்கறது கரைல இருக்கும் போதே தெரிஞ்சுடுச்சு.. ஆனா ஏன் இவன் அப்போவே இவனோட ஆளுங்ககிட்ட என்னைப் பிடிச்சு கொடுக்கல?

              அப்படி செய்திருந்தா அப்போவே என்னை மறுபடியும் ஜெயில்ல போட்டிருப்பங்களே? இப்போ எதுக்கு கூடக் கூட்டிட்டு வந்திருக்கான்? என்று குழம்பியவள், அவன் கூறியதையும் மீறிக் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றாள்.

              அங்கே கப்பலின் கட்டுப்பாட்டு விசையை இயக்கிக் கொண்டிருந்தான் ருத்ரன். அவனைச் சுற்றி அவனது ஆட்கள் அனைவரும் தேனீ போலச் சுறுசுறுப்புடன் வேலை செய்து கொண்டிருந்தனர்.

              அதே சமயத்தில் எதேச்சையாக அந்தப் பக்கம் திரும்பிய சமீர், அந்த அடித்தளத்திலிருந்து அக்னி வருவதைக் காணவும் திகைத்துப் போனான்.

              அவனது பார்வை சென்ற திசையைத் திரும்பிப் அபார்த்த ருத்ரனோ தலையில் பலமாக அறைந்து கொண்டான்.

              ‘இவளை நான் கீழேயே தான இருக்கச் சொன்னேன்? யாரைக் கேட்டு இவ மேல வந்தா?

              நான் மாமாவையும், அர்ஜுனையும் திருப்பி அனுப்பிட்டு இவளைக் கூட்டிட்டு வந்திருக்கேன்னு நினைக்க மாட்டாங்களா?’ என்று மனதுக்குள் புகைந்தவன், கப்பலின் கட்டுப்பாட்டு விசையை அருகிலிருப்பவனிடம் கொடுத்துவிட்டு இவளிடம் செல்ல ருத்ரன் திரும்பிய சமயம், அவனுக்கு அருகே இருந்த மற்றொரு ஆள், “ஜி.. அங்க பாருங்க..” என்று கூவினான்.

              ருத்ரன் விறுக்கென்று திரும்பிப் பார்க்க, அங்கே இவர்களைப் போல இரு சிறு கப்பல்களும், ஒரு மோட்டார் போட்டும் தூரத்தில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

              அதைப் பார்த்த ருத்ரனின் கண்களிலோ மகிழ்ச்சிப் புன்னகை.

              “அதோ.. நமக்கு வலது பக்கத்துல வந்துட்டு இருக்கற கப்பல்ல தான் நாம எதிர்பார்க்கற பொருள் இருக்கு.

              இந்த ரெண்டாவது கப்பல்ல கபீரும், அவனோட ஆட்களும் இருக்காங்க.” என்று கூறினான் ருத்ரன்.

              அதே வேளையில் தனது கப்பலில் கபீரோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

              “என்ன ஜி யோசிக்கறீங்க?” என்று அவனது அடியாள் ஒருவன் கேட்கவும், அவனை நிமிர்ந்து பார்த்தவனோ..

              “இந்த எல்லைல நாம கடைசியா வியாபாரம் செஞ்சு பதினஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு.

              இதோ இப்போ கோஸ்ட்டுன்னு சொல்லறாங்களே அந்தத் துக்கடாப் பையன் காளிக்ஷேத்ராவுக்கு அரசனானதுக்கு அப்பறம் நம்மளால இங்க எந்த வியாபாரமும் செய்ய முடியல.

              நம்ம சி. எம். மிதுன் இருக்கானே.. அவனோட அப்பா தன இந்தக் காளிக்ஷேத்ராவுக்கு தலைவனா இருந்தவன். அவனைக் கொன்னுட்டு தான் இந்த கோஸ்ட் தலைவனானான்.

              அந்தச் சமயத்துல மிதுன் மும்பைல படிச்சுட்டுட்டு இருந்ததால அவன் தப்பிச்சுட்டான்.

              இத்தனை நாளா அந்த ஊருக்குள்ள அவனாலேயே போக முடியல. ஏன்.. சி. எம் ஆனதுக்கு அப்பறம் கூட அந்த கோஸ்ட்டை அழிக்க அவன் எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருக்கான்.. ஆனா, அவனோட முயற்சிகளால் அந்த கோஸ்டோட பவரும், அவன் மேல இருக்கற பயமும் அதிகமாச்சே தவிர, குறையல.

              அதனால இப்போ நம்ம காலைப் பிடிச்சுருக்கான். இத்தனை வருஷமா தடைபட்டுப் போயிருந்த கடத்தலை மறுபடியும் ஆரம்பிக்க நினைச்சிருக்கான். இன்னைக்கு மட்டும் நாம சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டோம், இனி இந்த வங்கக்கடல் நம்ம பக்கம் தான்!” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போது அவனது அடியாட்களில் ஒருவன் முன்னே வந்து,

              “ஜி.. அதோ அவங்க கப்பல் வந்துடுச்சு..” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, அந்த எதிரே வந்த கப்பலின் மாலுமியை நோக்கி ஒரு ராக்கெட் லாஞ்சர் பாய்ந்து வந்து அவனை மட்டுமல்லாது, அந்தக் கப்பலின் இயக்கு விசையையும் தகர்த்து தூக்கி எரிந்தது.

              அந்தச் சத்தத்தின் அதிர்வில் கபீரே ஒரு கணம் உடல் விதிர்த்து, காதுகளைப் பொத்திக் கொண்டு கீழே அமர்ந்துவிட்டான்.

              மெல்ல மேலே எழுந்து பார்த்தால், அவர்களது கப்பலுக்குப் பக்கவாட்டாக இன்னுமொரு கப்பல் நின்றிருந்தது. அதின் மேற்புறத்தில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, அங்கே தோளில் ராக்கெட் லாஞ்சரை வைத்துக் கொண்டு நின்றிருந்தான் அவன் – ருத்ரன்!

                The post அத்தியாயம் – 12 : கடலாடும் காதலே! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>
                https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/feed/ 0 17587
                அத்தியாயம் – 11 : ஆயுத அறை மர்மம்! https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae/#respond Thu, 04 Apr 2024 02:18:22 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae/ மறுநாள் பொழுது அந்த ஊரின் அனலைத் தாங்கியபடியே வெம்மையாகவே விடிந்தது. தனது வீட்டிலிருந்து வெளியே வந்தான் அர்ஜுன். அப்பொழுது சில பல பெண்கள் புடைசூழ அவனைக் கடந்து சென்றாள் அக்னி. அவள் முகத்திலும் சரி, அவளைச் சுற்றி இருக்கும் பெண்களின் முகத்திலும் சரி.. அப்படியொரு மகிழ்ச்சி! நட்புணர்வு! அவள் ஒரே இரவில் அவ்வளவு சுதந்திரமாக இந்த மக்களுடன் கலந்துவிட்டதைப் பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தான் அவன். இந்த ருத்ரன் ஏன் இப்படி

                The post அத்தியாயம் – 11 : ஆயுத அறை மர்மம்! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                ]]>

                Loading

                மறுநாள் பொழுது அந்த ஊரின் அனலைத் தாங்கியபடியே வெம்மையாகவே விடிந்தது.

                தனது வீட்டிலிருந்து வெளியே வந்தான் அர்ஜுன். அப்பொழுது சில பல பெண்கள் புடைசூழ அவனைக் கடந்து சென்றாள் அக்னி.

                அவள் முகத்திலும் சரி, அவளைச் சுற்றி இருக்கும் பெண்களின் முகத்திலும் சரி.. அப்படியொரு மகிழ்ச்சி! நட்புணர்வு!

                அவள் ஒரே இரவில் அவ்வளவு சுதந்திரமாக இந்த மக்களுடன் கலந்துவிட்டதைப் பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தான் அவன்.

                இந்த ருத்ரன் ஏன் இப்படி செய்கிறான் என்று அவனுக்கும் ஒன்றுமே புரியவில்லை.

                இத்தனை நாட்களாக ருத்ரனின் எந்தவொரு செய்கையிலும் யாருக்கும் மறு அபிப்பிராயமே இருந்ததில்லை.

                அந்தப் பிராந்தியத்தின் பெரும் தலைவனாக அவனை ஏற்றுக்கொண்டனர் அந்த மக்கள். அதிலும் அர்ஜுனுக்கு, தன்னையும்.. இந்த மக்களையும் ரட்சிக்க வந்த ரட்சகன் அவன் என்ற பிரம்மை தான்.

                ஆனால் இப்பொழுது அமரேந்தரே, அக்னியின் தொடர்பாக ருத்ரன் எடுக்கும் முடிவுகளை வரவேற்பதை போலத் தோன்றவில்லையே.

                இவனுக்கும் மனத்தோரஞ் சிறு சுணக்கம் தான்!

                இத்தனை நாட்கள் அரசு உளவாளிகள் என்று இந்த ஊருக்கு வந்த அத்தனை ஆண்களும் இங்குச் செய்த கொடுமைகளை இந்தப் பெண் செய்யவில்லை தான்.

                ஆனால்.. இவளும் உளவாளி தானே?

                அவளைச் சிறையில் அடைத்ததை எண்ணி வருந்துவதா அன்றி சந்தோசம் கொள்வதா என்று அர்ஜுன் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், ஜுவாலாமுகியின் வார்த்தைக்காக அவளை விடுதலை செய்து இந்த ஊருக்குள்ளேயே சுதந்திரமாக அலையவிட்டிருக்கிறான்.

                அவளை இங்கிருந்து மொத்தமாக விடுதலை செய்து, அவளை அவள் வீட்டுக்கே அனுப்பியிருந்தாலும் இவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை தான்.

                என்ன? மிஞ்சி மிஞ்சிப் போனால்.. அக்னி கூறும் அடையாளத்தை வைத்து அவர்களது உருவங்கள் வேண்டுமானால் வரைபடங்களாகத் தயாராகலாம்!

                ஆனால் அதை வைத்து இந்த அரசாங்கம் எதையும் செய்துவிட இயலாது. அதிலும் இன்று அவர்கள் திட்டமிட்டிருக்கும் காரியம் மட்டும் வெற்றிகரமாக நடந்தேறிவிட்டால், இந்திய அரசாங்கமே நடுநடுங்கித் தான் போகும்.

                வெறும் இந்தத் திட்டத்தினைப் பற்றி அறையும் குறையுமாக அறிந்து கொண்டதற்கே அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

                அப்படி இருக்கையில் அக்னியை இன்னமும் இங்கேயே ருத்ரன் உலவவிட்டிருப்பதன் காரணம் தான் அர்ஜூனுக்குப் புரியவில்லை.

                சரி.. ருத்ரனுக்குக் காதல் தான் பெரிது.. அந்தக் காதலால் தான் அவளை விடுதலை செய்திருக்கிறான் என்றால், திருமணமாவது செய்துகொள்வானா என்று பார்த்தால், அப்படியும் தெரியவில்லை.

                தன் வாழ்க்கையில் திருமணம் என்ற உறவுக்கு இடமே இல்லை என்று இப்பொழுதும் கூறிக் கொண்டு தான் இருக்கிறான்.

                ஆனால்.. இவளிடம் எப்படி, என்ன காரணத்திற்காகக் காதல் வந்தது என்று எண்ணிய அர்ஜுனுக்கு தலை தான் வலித்தது!

                பாவம்.. காதல், எந்தக் காரணத்தையும் உடனழைப்பதில்லை என்று அவனுக்குப் புரியவில்லையே!

                இதிலேயே உழன்று கொண்டிருந்தால் இன்றைய வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று சற்று நேரத்திலேயே தெளிவு கொண்ட அர்ஜுன், ருத்ரனை நோக்கி அவனது பேலசுக்குத் தான் சென்றான்.

                இந்த பேலஸ், ருத்ரனைப் பொருத்தமட்டில் ஒரு அழியாச் சின்னம்!

                அவன் அன்புக்குரியவர்களின் கல்லறை!

                மற்றவர்களுக்கோ இது அடக்குமுறையின் சின்னம். அதைக் கண்கொண்டு பார்ப்பது கூடப் பாவமென்று அவர்கள் விலக்கி.. ஒதுக்கிவைத்திருக்கும் இடம்.

                ஆனால் அதில் தான் நான் குடியிருப்பேன் என்று ஒற்றை ஆளாக அதில் குடியேறினான் ருத்ரன்.

                அவனது பதினைந்தாவது வயது தொட்டு இந்த பேலஸில் தான் தன்னந்தனியாக வசிக்கிறான்.

                உதவிக்கு வேலையாட்கள் ஒரு படைபோல அந்த பேலஸில் சுற்றி வந்து கொண்டிருப்பார்கள்!

                ஏதாவது தேவையென்றால் மட்டுமே அர்ஜுன் அங்குச் செல்வதுண்டு.

                அமரேந்தரோ.. அதுவும் கூட இல்லை!

                இப்பொழுது இன்றைய இரவின் வேலைகளுக்காக ருத்ரனை சந்திக்கச் சென்றான் அர்ஜுன்.

                ருத்ரனின் காதல் விவகாரம் மட்டுமே அர்ஜுனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. மற்ற விதத்தில் அவன், ருத்ரனின் கண்ணசைவைக் கொண்டே காரியம் முடிப்பவனாகத் தான் இன்னமும் இருக்கிறான்.

                ருத்ரனைத் தேடி அவனது அறைக்குச் சென்ற பொழுது, அவனது அறை திறந்திருந்தது.

                அதற்குள்ளாக எழுந்து தயாராகி வெளியே கிளம்பிவிட்டானா? என்று எண்ணியபடியே அங்கிருந்த வேலையாள் ஒருவனை அழைத்துக் கேட்க, அவன் காலையிலிருந்தே அங்கு ருத்ரனைப் பார்க்கவே இல்லை என்று கூறவும் திகைத்தான் அர்ஜுன்.

                ஆறு தளங்கள் கொண்ட அந்த பேலஸ் முழுக்க சுற்றி சுற்றி வந்துத் தேடினான். எங்கேயும் ருத்ரனைக் காணவேயில்லை.

                அப்பொழுது தான் அவன் மூளையில் பொறி ஒன்று தட்டிட, இதுவரை அவன் செல்லாத அந்தப் பகுதிக்குச் சென்றான்.

                ருத்ரனே இதுவரையில் அந்தப் பகுதிக்குக் சென்றதில்லையே.. அதனால் தானே அவன் இவ்வளவு நேரம் அந்தப் பகுதியைத் தவிர்த்து பேலஸின் மற்ற பகுதிகளைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது.

                அந்த இடம்.. முந்தைய நாள் ருத்ரன் நின்றிருந்த பால்கனி தான். ருத்ரன், தன் தாயைத் தவிர்ப்பதற்காகவே அந்தப் பகுதிக்கு இத்தனை நாட்கள் சென்றதே இல்லையே? எனவே தான் இப்பொழுதும் அங்கே சென்று தேட அர்ஜுன் முதலில் நினைக்கவில்லை.

                ஆனால்.. இப்பொழுது அவன் ஆழ்மனம் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தது, ருத்ரன் அங்கே தான் இருப்பான் என்று.

                அஜுன் மெல்ல அந்த பால்கனியை அடைந்து அங்குச் சென்று பார்த்தால்.. அவனது ஆழ்மனதின் கூற்றுப்படி ருத்ரன் அங்கே தான் வெறும் தரையில், மேல் சட்டையைக் கூட அணியாமல் ஆதரவற்ற குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தான்.

                அவனைப் பார்த்ததும் அர்ஜுனின் மனதுக்குள் சுரீரென்ற ஒரு வலி!

                இவன் ஏன் இத்தனை நல்லவனாய் இருக்கிறான்? இவன் ஏன் அப்பொழுதே சுயநலமாய் ஒரு முடிவை எடுக்கவில்லை? இவனுக்கு ஏன் இந்தக் காளிக்ஷேத்ராவின் மீது இத்தனை அக்கறை வந்தது?

                இப்பொழுது கூட இவன் நினைத்தால் இங்கிருந்து விலகிச் சென்றிட முடியும்!

                இந்த ஊரிலிருந்து இவன் விலகிப் போனால்.. நூற்றில் ஒரு வாய்ப்பாக அக்னி இவன்மீது காதல்வயப்பட்டாலும் அதிசயப்படுவதற்கில்லை!

                ஆம்.. ருத்ரனைப் போல ஒருவனைக் கணவனாக அடைய எந்த ஒரு பெண்ணும் பதினாலு ஜென்மங்களில் தவமிருந்து புண்ணியம் கட்டிக்கொண்டிருக்க வேண்டுமல்லவா?

                ஆனால்.. இப்போது வரைக்கும் வாய்ப்பிருந்தும் இந்த ருத்ரன் ஏன் மற்ற எல்லாவற்றையும் விட இந்தக் காளிக்ஷேத்ராவையே தேர்ந்தெடுக்கிறான்?

                இத்தனை பெரிய மாளிகையில், அணைத்துத் தேற்றக் கூட ஆளின்றி வெற்றுத் தரையில் படுத்துக்க கிடக்கும் அவனைப் பார்த்து விழியோரம் சிறிதாய் நீர் கசிந்தது தான் அர்ஜுனுக்கு.

                ஆனால்.. அழுகை, ருத்ரனுக்குப் பிடிக்காத ஒன்று!

                “கண்ணீருல தான் உன்னோட முழு பலமும் இருக்கு. உன்னோட வலி, இந்தக் கண்ணீர் மூலமா வெளில வந்துடுச்சுன்னா, உன்னோட ரத்தத்துல இந்த வெறி இருக்காது!

                கண்ணீரை அடக்கு! அப்போ தான் உன் ரத்தத்தோட சூடு தனியாம, உன்னை உன் இலக்கை நோக்கி எந்தப் பயமும் இல்லாம ஓட வைக்கும்!” என்பான் அவன்.

                இப்பொழுதும் அவன் கூற்றுப்படியே முயன்று ருத்ரனுக்கான தன் சோகத்தை மனதுக்குள் அடக்கியவன், ஒரு பெருமூச்சுடன் ருத்ரனை அணுகி, அவனை எழுப்பினான்.

                அர்ஜுனின் ஒரே குரலில் சட்டெனக் கண் விழித்துவிட்டான் ருத்ரன்.

                தான் இங்கே பால்கனியில், தரையில் படுத்திருப்பதைக் கண்ட அர்ஜுன் ஏதாவது சொல்வானோ என்று ஒரு கணம் அவனுக்கு அவகாசம் கொடுத்தவன், அவன் அப்படி எதுவும் கூறாததால் சாதாரணமாகிவிட்டான்.

                “அஞ்சு நிமிஷம்.. சீக்கிரம் ரெடியாகி வந்துடறேன்..” என்று நடந்து கொண்டே கூறியவனின் வேகத்துக்கு இணையாக நடக்க முடியாமல், எப்பொழுதும் போல ஓடத் தான் முடிந்தது அர்ஜூனால்.

                சொன்னது போலவே அர்ஜுனை தனது அறையில் காத்திருக்க வைத்துவிட்டு, குளியலறைக்குள் புகுந்தவன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஈரத்தலையை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான்.

                அர்ஜூனுடன் கீழே சென்றவன், உணவை மறுத்துவிட்டு வெளியே செல்லக் கிளம்ப, அர்ஜுனோ..

                “அவசரம் ஒண்ணுமில்ல.. நீங்க சாப்டுட்டே வாங்க ஜி..” என்று சாதாரணமாகத் தான் கூறினான். ஆனால்.. அவனை ஒரு கணம் நின்று நிதானித்துப் பார்த்த ருத்ரனோ,

                “இந்த வீட்டுல நீ சாப்பிடுவியா அர்ஜுன்?” என்று அவனை நேராய்ப் பார்த்துக் கேட்க, இதயத்தட்டுக்குள் மீண்டுமாய் சுரீரென்ற வலி அவனிடத்தில்!

                நொடியில் பாறையாய் இறுகிய முகத்துடன்.. வார்த்தை பேசாது, தன் மறுப்பை தலையசைப்பில் மட்டுமே அவன் காட்ட, ருத்ரனின் கண்களிலோ இகழ்ச்சி!

                “விருந்தாளியைப் பார்க்க வச்சுட்டு சாப்பிடறது இந்த இந்திய மரபிலே இல்லையேப்பா! நான் மட்டும் எப்படி உன்னைப் பார்க்க வச்சுட்டு சாப்பிடறது?” என்று அவன் ஏளனமாய் கேட்க, இப்பொழுதும் கண்கள் கரித்தன அர்ஜுனுக்கு.

                அதை ருத்ரனிடம் காட்டப் பிரியப்படாதவன்..

                “நான் வெளில ஜீப்புல வெயிட் பண்றேன் ஜி.. நீங்க தயவுசெஞ்சு சாப்பிட்டுட்டு வாங்க..” என்று கூறிவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் வெளியே சென்று வாசலிலிருந்து அந்த நீண்ட படிகளில் தடதடவென இறங்க ஆரம்பித்துவிட்டான்.

                ஒரு கணம் அவன் செல்வதையே வெறித்துப் பார்த்த ருத்ரனோ, மறுகணம் அந்த பேலஸை கண்களில் வலியுடன் சுற்றி பார்த்தான்.

                பிறகு கண்களின் வெறி இன்னமும் கூட, “துர்காம்மா..” என்று அந்த அரண்மனையே அதிரும்படி அழைத்தவன்.. அவர் வேகவேகமாக அவன் முன்பாக வரவும்..

                “சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லுங்க..” என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

                அடுத்த பத்தாவது நிமிடத்தில் வெளியே வந்தவனை ஜீப்பில் ஏற்றிவிட்டு அர்ஜுன் அமரேந்தரின் வீட்டை அடைய, அவரும் அப்பொழுது தான் தனது பைக்கைக் கிளப்பிக் கொண்டு நின்றிருந்தார்.

                மூவரும் மீண்டும் சென்றது கடற்கரைக்கே. முந்தைய நாள் அங்குக் கூடியிருந்த அந்தப் பதினைந்து பேரும் இப்பொழுதும் அங்கே தான் இருந்தார்கள்.

                எல்லோருடனும் அவன் அந்தக் கப்பலில் ஏற.. ஒவ்வொருத்தருக்காக அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக் காண்பித்தது, மீண்டும் அனைத்தும் சரியாய் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

                அந்தச் சிறு கப்பலில் வெளிபபார்வைக்குத் தெரியாதபடிக்கு, கப்பலின் அடிப்பாகத்தில் சிறிதாய் இருந்த மறைவு அறைக்குள் தான் சில பல முக்கிய ஆயுதங்கள் இருந்தன.

                கடலுக்குள் இறங்கியதும் அந்த ஆயுதங்களைத் தயாராய் வெளியே எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதுவரையில் இவையெல்லாம் பாதுகாப்பாய் அங்கேயே இருக்கட்டும் என்று எண்ணி அங்கே பதுக்கி வைத்திருந்தனர்.

                இப்பொழுது ருத்ரன் அந்த அறைக்குள் தான் தனியாக நின்று அனைத்தையும் தானே சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

                அப்பொழுது தான் அங்கே தன்னைத் தவிர வேறு யாரோ இருப்பது போல ஒரு பிரம்மை தோன்றவும், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தது, அந்த அறையில் சிறு நடைபயின்றான்.

                பின்பு தனது இதழுக்குள் தோன்றிய மர்மச்சிரிப்புடன் அந்த அறையைப் பூட்டிவிட்டு மீண்டும் மேலே சென்றான்.

                அந்த ஆயுத அறையின் மர்மம் தனக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தால் போதும் என்று நினைத்தானோ என்னவோ?

                மேலே வந்தவன், மீண்டும் அனைவரும் ஒன்றாய் அழைத்தான். அனைவரும் அங்குக் கூடியதும், அமரேந்திரடம்..

                “மாமா.. இன்னைக்கு வேட்டைக்கு நீங்களும், அர்ஜுனும் வர வேண்டாம்.” என்று கூறவும், அங்கிருந்த அத்தனை பேரும் ஒரு சேர அதிர்ந்தர்கள்.

                “என்ன பிரதாப் சொல்லற? இன்னைக்கு நடக்கப் போற விஷயம் எவ்வளவு பெருசுன்னு தெரியுமில்ல? அதுவும் எவ்வளவு ஆபத்தானதுன்னு தெரியுமில்ல?

                அப்படியிருக்கப்போ நாங்க உன் கூட வரவேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று அவர் சற்று படபடப்பாகக் கேட்க, ருத்ரனோ..

                “இந்தக் காரியம் ரொம்ப ஆபத்தானதுன்னு தெரிஞ்சு தான் மாமா உங்களை வரவேண்டாம்னு சொல்லறேன்.” என்று கூறவும் மற்றவர்களுக்குக் குழப்பமே மிஞ்சயது.

                “சொன்னா புரிஞ்சுக்கோங்க மாமா.. இந்த வேட்டை, ரொம்ப ஆபத்தானது. இதுல எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா, காளிக்ஷேத்ராவுக்கான அடுத்த தலைவனா அர்ஜுன் இருக்கணும்.

                அவனுக்கு வழிகாட்ட நீங்க இருக்கணும்.

                அதுவுமில்லாம, முன்னாடி நான் கொஞ்சம் இலகுவா இருந்தேன். உங்களைப் பாதுகாப்பேன்ற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு.

                இப்போ என்னோட கணம் கூடிட்ட மாதிரி எனக்குத் தோணுது. அதனால உங்களை அங்க கூட்டிட்டுப் போய், உங்களையும் ஆபத்துக்குள்ளாக்க நான் விரும்பல.” என்று கூற, அவனது பேச்சு முழுதாகப் புரியாவிட்டாலும், அவனது கூற்றிலிருந்த நியாயம் இருவருக்குமே புரிந்தது.

                அதனால் இருவரும் அவனை மறுத்து எதுவும் பேசாவிட்டாலும், சிறு தயக்கத்துடன் தான் அங்கிருந்து சென்றார்கள்.

                அவனை மறுத்துப் பேசியும் அவர்களுக்குப் பழக்கமில்லையே? ருத்ரன் என்ன செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தமிருக்கும் அன்று அவனை அத்தனையாய் நம்புபவர்களல்லவா அவர்கள்?!

                அன்று பகல் முழுதும் ஒருவகையான இறுக்கமான மனநிலையில் தான் இருந்தான் ருத்ரன்.

                தான் செய்வது சரியா பிழையா என்று அவன் சிறிதும் யோசிக்கவில்லை. அந்த நிலையையெல்லாம் அவன் எப்பொழுதோ தாண்டிவிட்டான். ஆனால்.. இன்றைய அத்தியாயம் தனது வாழ்வின் புதிய தொடக்கம் என்பதில் மட்டும் அவனுக்கு ஐயமே இல்லை!

                வானின் கதிரோன் கடல் மடியில் விழுந்து இளைப்பாறத் துவங்கிய நேரம், உதட்டில் சிறு மர்மச்சிரிப்புடன் அந்த ஆயுத அறையை நோக்கிக் சென்றான் ருத்ரன்!

                  The post அத்தியாயம் – 11 : ஆயுத அறை மர்மம்! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>
                  https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae/feed/ 0 17574
                  அத்தியாயம் – 10 : அடிமையின் காதல்! https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/#respond Tue, 02 Apr 2024 21:24:38 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/ அடிமையின் காதல்! சிறைக்காவலர்கள் புடைசூழ ஜுவாலாமுகியுடன் வேறு வழியின்றி சென்றாள் அக்னி. செல்லும் பொழுது பார்வையால் ருத்ரனை அவள் எரித்துப் பார்க்க, அவனது பார்வையோ எப்பொழுதும் போல எந்த உணர்வும் காட்டாது அவள் கண்களுக்குள் ஊடுருவியது. ‘இந்தப் பார்வைக்கு என்ன தான் அர்த்தம்? ஏன் இப்படி பார்க்கறான் என்னை? என் மேல இவனுக்கு இருக்கறது கோபமா? வெறுப்பா? இல்ல.. வேற ஏதாவதுமா?’ என்று பத்தாயிரமாவது முறையாகக் குழப்பம் வந்தது அவளுக்கு. அவள்

                  The post அத்தியாயம் – 10 : அடிமையின் காதல்! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                  ]]>

                  Loading

                  அடிமையின் காதல்!

                  சிறைக்காவலர்கள் புடைசூழ ஜுவாலாமுகியுடன் வேறு வழியின்றி சென்றாள் அக்னி. செல்லும் பொழுது பார்வையால் ருத்ரனை அவள் எரித்துப் பார்க்க, அவனது பார்வையோ எப்பொழுதும் போல எந்த உணர்வும் காட்டாது அவள் கண்களுக்குள் ஊடுருவியது.

                  ‘இந்தப் பார்வைக்கு என்ன தான் அர்த்தம்? ஏன் இப்படி பார்க்கறான் என்னை? என் மேல இவனுக்கு இருக்கறது கோபமா? வெறுப்பா? இல்ல.. வேற ஏதாவதுமா?’ என்று பத்தாயிரமாவது முறையாகக் குழப்பம் வந்தது அவளுக்கு.

                  அவள் அங்கிருந்து கிளம்பிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார் அமரேந்தர்.

                  நடந்ததை எல்லாம் மற்ற காவலாளிகள் மூலமாக அறிந்து கொண்டு தான் அங்கு வந்து சேர்ந்திருந்தார் அவர்.

                  வந்ததுமே.. “பிரதாப்.. நீ உன் மனசுல என்ன திட்டத்தோட இருக்கேன்னு எனக்குக் கொஞ்சம் கூடப் புரியல..

                  நம்மள உளவு பார்க்க வந்தவளை நீ ஜெயில்ல போட்ட. நம்ம வழக்கத்துல ஒரு பொண்ணை ஜெயில்ல அடைக்கறதுன்ற ஒரு விஷயமே இல்ல. ஆனா நம்ம எதிரி ஆணோ, பெண்ணோ சரிசமமா தான் தண்டனை கொடுக்கணும்னு நீ சொன்னது எனக்கும் சரின்னு பட்டுச்சு.

                  ஆனா இப்போ அவளை ஏன் அக்கா கூட அனுப்பி வச்சிருக்க? அவளை எப்படி நம்ம ஊருக்குள்ள சுதந்திரமா நடமாட விட முடியும்?” என்று அவர் படபடத்துக் கேட்க, மென்மையாகத் தனக்குள்ளே சிரித்தான் ருத்ரன்.

                  “மாமா! என் அம்மா என்கூட பேசிப் பதினஞ்சு வருஷமாச்சு!

                  அவங்க இத்தனை வருஷத்துக்கு அப்பறம் என்கிட்டே கேட்ட ஒரே விஷயம்.. அக்னியோட விடுதலை!

                  அவங்க இது அக்னியோட பாதுகாப்பபுக்காகன்னு சொல்லறாங்க.. ஆனா, தன் பையனோட மனசு, ஒரு அம்மாவுக்குத் தான் மாமா புரியும்!

                  அவளால.. அவ மேல எனக்குள்ள முளைச்சுருக்கற இந்த ராட்சச உணர்வால எனக்குப் பாதிப்பு வரும்னு அவங்க உள்ளுணர்வு சொல்லியிருக்கு.

                  அதனால தான் அவளை என்கிட்டே இருந்து பிரிக்க நினைச்சிருக்காங்க.

                  இந்தச் சிறை.. எனக்கும் அவளுக்கமான நெருக்கத்தை அதிகப்படுத்திடும்னு அவங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கு!

                  அதனால தான் அவளை இங்க இருந்து விடுவிச்சு, எனக்குத் தண்டனை கொடுத்திருக்காங்க..” என்று அவன் கூறக் கூற, அமரேந்தரின் கண்கள் விரிந்தன!

                  அதைக் கண்டு மெல்லச் சிரித்தவன், “என்ன மாமா? ஆச்சர்யமா இருக்கா?” என்று கேட்க, அவரது தலையோ ஆமோதிப்பாய் மேலும் கீழுமாய் அசைந்தது!

                  “என் மேல அவங்களுக்கு அக்கறை இல்லைன்னு சொல்லறது அபத்தம் மாமா.. அவங்களுக்கு என் மேல அக்கறை இருக்கு.. பாசம் இருக்கு..

                  ஆனா அது எல்லாத்தையும் விட அவங்க பேச்சைக் கேட்காம நான் இப்படி ஆகிட்டேனேன்ற கோபம் இருக்கு.

                  அவங்களோட கோபத்தாலேயாவது நான் இதையெல்லாம் விட்டுட மாட்டேன்னான்ற ஆதங்கம் அவங்களுக்கு!

                  ஆனா நான் என் முடிவுல உறுதியா இருக்கவும், அவங்களால அதுக்கு மேல என்கூட போராட முடியாம அப்படியே விலகிட்டாங்க.

                  ஆனா இப்போ, என்னோட மனசு அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சுருக்கு.

                  அதே சமயம், அக்னியைப் பத்தியும் எல்லாருக்கும் தெரியும். நான் இதே ஊர்ல இருக்கற வேற யாரையாவது காதலிச்சிருந்தா அவங்களுக்கு சந்தோஷமா இருந்துருக்கும் மாமா!

                  ஆனா நான் காதலிக்கறது என்னைக் கொல்ல வந்தவளை..” என்று கூறி அவனே கேலியாய் நகைத்துக் கொண்டான்.

                  ஆனால் அவன் கூற்றில் இருக்கும் முரண் அவனுக்குப் புரிகிறதா இல்லையா? தன்னைக் கொல்ல வந்த ஒரு துரோகியைக் காதலிப்பதாக அவ்வளவு தைரியமாகச் சொல்கிறான். அவன் மனத்தில் என்ன தான் திட்டமிட்டிருக்கிறான் என்றே புரியாதவர், அதை அவனிடமே..

                  “ஆனா பிரதாப்.. இந்தக் காதலுக்கு எதிர்காலம் இருக்கா? நீ அக்னியைக் கல்யாணம் செய்துக்க முடியுமா? அவளை எப்படிப்பா நம்பி நம்ம வீட்டுக்குள்ள விடறது?

                  உனக்குப் பொண்டாட்டின்னா அவ இந்த சமஸ்தானத்தோட மகாராணி!

                  ஆனா இந்த அக்னியை நாங்க எப்படிப்பா மகாராணியா கொண்டாட முடியும்?” என்று அவர் சிறு ஆதங்கத்துடன் கேட்க, ருத்ரனோ அவரை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே..

                  “இந்தக் காளிக்ஷேத்ராவுக்கு ராஜான்னு யாரும் கிடையாது மாமா. அதே மாதிரி என்னோட பொண்டாட்டி இங்க யாருக்கும் மகாராணியும் கிடையாது. அவ எனக்கு மட்டுமே மகாராணி.

                  ஆனா நான்.. இந்தக் காளிக்ஷேத்ராவோட அடிமை!

                  என்னைத் தவிர இந்தக் காளிக்ஷேத்ரால யாரும் அடிமையா இருக்கக் கூடாதுன்னு நினைக்கற அடிமை!” என்றவன் தனக்குள்ளாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு..

                  “ஆனா, அடிமைக்குள்ளும் காதல் துளிர்க்கத் தானே செய்யுது? என்ன செய்ய?” என்றான் விரக்தியாய்!

                  ஆனால் உடனேயே ஓர் ஆழ்ந்த மூச்சை விடுவித்துக் கொண்டு தன்னை மீட்டுக் கொண்டவன்..

                  “அதை விடுங்க மாமா.. நமக்கு நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு. அதுல கவனம் செலுத்துவோம்.” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அர்ஜுனும் அங்கு வந்துவிட, அவர்களைத் தங்களது கடற்கரையை நோக்கிச் சென்றனர்.

                  அங்கே கூடியிருந்த சிறு குழுவைப் பார்த்த ருத்ரன்..

                  “நாளைக்கு நம்ம வாழ்க்கைல ரொம்ப முக்கியமான நாள். இத்தனை நாளா நாம, நம்மள நோக்கி வந்த தாக்குதலுக்குத் தான பதில் தாக்குதல் நடத்திட்டு இருந்தோம். ஆனா இப்போ இந்த மிஷன்ல மட்டும் நாம ஜெயிச்சுட்டோம்னா, நம்மளை அடக்கணும்னு நினைக்கறவங்க, நம்மளைக் கண்டு பயந்து ஓடற மாதிரி செய்துடலாம்.

                  ஆனா.. அதுக்கு நம்மகிட்ட இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் தைரியம்.” என்று அவன் கூற அவன் எதிரில் இருந்த அத்தனை பேருக்கும் உடலில் வீரம் சுரந்தது!

                  “நாளைக்கு சாயந்தரம் நாம இங்க தயாரா இருக்கணும். அவங்க கரையைக் கடந்துட்டா நம்மளால எதுவுமே செய்ய முடியாது. அவங்கள கடல்லயே வச்சு மடக்கணும்.

                  ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க.. நம்ம எதிரி ஏற்கனவே நம்ம மேல பயங்கரமான பழி வெறில இருக்கான். அதனால நம்மளோட எந்த மூவும் அவனுக்குத் தெரிஞ்சுடாக் கூடாது!” என்று கூறியவனிடம் சம்மதமாகத் தலையசைத்தவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

                  மற்றவர்கள் கிளம்பிய பிறகு அங்கிருந்த ஒரு சிறு கப்பலில் ஏறினார்கள் ருத்ரன், அமரேந்தர், அர்ஜுன் மூவரும்.

                  அந்தக் கப்பலில் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களெல்லாம் தயாராய் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டவர்கள், திருப்தியுடன் கீழிறங்கினார்கள்.

                  நாளை நடக்கப் போகும் சம்பவம் தான் தங்களது வாழ்க்கையில் நிகழும் மீக முக்கியமான வரலாற்றிச் சம்பவம் என அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே புரிந்திருந்தது!

                  அதே வேளையில் மும்பையின் ஒரு சொகுசுப் பங்களாவில் கண்களில் சீற்றத்துடன் அமர்ந்திருந்தான் கபீர்!

                  அந்த அமைச்சரைக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு அவனுக்கு நட்பாய் இருந்த பிற அரசியல்வாதிகளாலேயே அவனுக்குத் தொந்திரவுகள் அதிகமாயின!

                  இத்தனை வருடங்களாகத் தங்களுக்கு கீழே அடியாள் வேலை செய்து கொண்டிருந்தவன், இப்பொழுது தங்களுள் ஒருவனையே.. அதிலும் அரசு அதிகாரத்தில் இருக்கும் ஒருவனையே கொலை செய்திருந்தது அவர்களைப் பயம் கொள்ள வைத்திருந்தது!

                  அதனாலேயே அவனை அவர்கள் எல்லோரும் கூட்டாகச் சென்று எச்சரித்துவிட்டு வந்திருந்தனர்.

                  என்ன தான் இத்தனை நாட்களாகத் தனது உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டிருந்தாலும், இப்பொழுது இன்னொருவன் புதிதாய் முளைத்திருக்கும் இந்தத் தருணத்தில் இப்படி இவர்களும் தன்னை மிரட்டிவிட்டுப் போனது கபீருக்கு பெரும் சினத்தைத் தோற்றுவித்திருந்தது.

                  ஆனால் அவர்களிடம் அப்பொழுது எதையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாது அமைதி காத்தவன், தனக்கு இன்னமும் ஆதரவளித்து வரும் சில அரசியல்வாதிகளைக் கூட்டு சேர்த்துக் கொண்டான்.

                  அவர்களுடனான கூட்டில் அவன் கொண்ட லாபம் ஒன்றே ஒன்று மட்டும் தான்!

                  அது தான் அவன் விரும்பும், “மற்றவர்களின் பயம்!”

                  ஆம்.. அந்த அமைச்சரைக் கொன்ற பிறகு பிற அரசியல்வாதிகளுக்கு அவன் மீது பயம் வரும் என்று இவன் கணக்குப் போட்டிருக்க, அவர்களோ இவனை மிரட்டிவிட்டல்லவா சென்றிருக்கிறார்கள்?!

                  அதனால் ஏற்கனேவே வெறி பிடித்த மிருகமாய் மாறி, அடாத பாவங்களை எல்லாம் செய்துகொண்டிருப்பவனுக்கு இன்னும் ஆவேசம் முற்றிவிட்டது.

                  மற்றவர்களுக்காக ஆயிரக்கணக்கில் கொலை செய்திருப்பவன்.. தனக்காக ஒரு பெரிய வெடிகுண்டு சம்பவத்தையே அரங்கேற்றத் திட்டமிட்டிருந்த்தான்.

                  அதற்காக வெளிநாட்டிலிருந்து பல வெடிகுண்டுகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருந்தான்.

                  அதற்கு உதவி செய்தவன் தான் காளிக்ஷேத்ரா இருக்கும் மாநிலத்தின் முதலமைச்சர் மிதுன்!

                  மத்திம வயதுடைய மிதுனுக்கு இந்த ஒற்றை மாநிலத்தின் ஆட்சி மட்டும் போதவில்லை! அவனது அதிகாரம் இப்பொழுது ஒற்றை மாநிலத்துக்குள்ளாக மட்டும் சுருங்கியிருப்பதும் அவனுக்குப் போதவில்லை.

                  அவன் விரும்புவது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஏகபோக ஆட்சி அதிகாரம்!

                  அதற்கு அவனுக்குத் தேவை, பணம்!

                  அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல.. மலைமலையாய்.. குவியல் குவியலாய் பணம் தேவைப்பட்டது அவனுக்கு.

                  அதற்கு அவன் தேடியது குறுக்கு வழியை!

                  அவனது சட்டசபையிலிருக்கும் அமைச்சர்களுக்கெல்லாம் அது இதென்று ஆசை காட்டியும், அவர்களால் அவன் எண்ணிய அளவுக்குப் பணத்தைப் புரட்ட முடியவில்லை.

                  அதனால் அவன் இப்பொழுது இணைந்திருப்பது முன்னிலும் பயங்கரமான சதித்திட்டத்தில்!

                  தன்னிடம் இந்த நாடே பயந்து நடுங்குமளவு ஆயுதமிருந்தால், எல்லா அரசியல்வாதிகளும் முன்பு போல் தன்னைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள் என்று எண்ணித் திட்டம் போட்ட கபீருடன் சேர்ந்து கொண்டான் மிதுன்!

                  அப்படி கபீர் வாங்கியிருப்பது..‌அதி சக்தி வாய்ந்த ராக்கெட் ஏவுகணை!

                  அதைக்கொண்டு ஒரு பெரிய ஊரையே அழித்துவிடலாம்!

                  இப்பொழுது கபீர் வாங்கியிருக்கும் ஆயுதத்தைத் தனது மாநிலத்தின் கடற்கரை வழியாகக் கொண்டு வர அனுமதியளித்தால், அதற்குப் பெருமளவில் பணம் தருவதாக கபீர் வாக்களித்திருந்தான்.

                  ஏற்கனவே அவர்கள் பேசிய பணத்தில் பாதியை முன்பணமாகக் கொடுத்தும் இருந்தான்.

                  கூடவே வருங்காலத்தில் கபீரின் ஆதரவு முழு மொத்தமாக மிதுனுக்கு மட்டுமே இருக்கும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

                  எனவே தான் காளிக்ஷேத்ராவுக்கு அருகிலிருக்கும் கடற்கரை வழியாக அந்த வெடிபொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தனர் கபீரும், மிதுனும்!

                  இதைத் தனது உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட ருத்ரனின் இதழ்கள் வஞ்சகமாக நகைத்துக் கொண்டன.

                  அப்பொழுதே அந்த ராக்கெட் ஏவுகணை வெடிபொருட்களைத் தன் வசமாக்கிக் கொள்ளும் திட்டம் அவன் மனதுக்குள் உதித்துவிட்டிருந்தது!

                  அந்தத் திட்டத்தில் செயலாக்கம் தான் அடுத்த நாள் நடைபெறுவதாக இருந்தது.

                  எல்லோரிடமும் பேசிவிட்டு தனது மாளிகைக்கு வந்தான் ருத்ரன். அவன் மாளிகையின் பின்புறம் தான் ஜுவாலாமுகி வசித்துவந்தார்.

                  இத்தனை நாட்கள் அவர் இருக்கும் இடத்தைக் கண்களால் பார்க்கக் கூட முயன்றதில்லை அவன்!

                  தன் மேல் அவர் கோபமாக இருக்கிறார் என்ற கோபத்தில் இருந்தவனோ அவரிடம் எந்தவித பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

                  ஆனால் இன்றோ, அவனது கால்கள் மெல்ல அவனது மாளிகையின் பின்புற பால்கனியை நோக்கிச் சென்றன.

                  அந்தப் பால்கனியே ஒரு பெரிய அறை போல இருக்கும்.

                  சுற்றிலும் செடிகள் வளர்ந்து ஓர் அழகிய நந்தவனம் போலிருக்கும் அந்தப் பகுதிக்கு இதுவரை அவன் சென்றதே இல்லை.

                  இன்றோ மெல்ல அவனது கால்கள் அந்த இடத்தினை நோக்கிச் சென்றன. அவன் மனத்திலோ ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு அவனைப் பிடித்து ஆட்ட.. அந்தச் சிறு நந்தவனத்திலிருந்து வந்த மகிழம்பூ செடியின் மணத்தில் கண்கள் சொருகியது அவனுக்கு.

                  கண்ணாடியால் போடப்பட்டிருந்த கதவைத் தாண்டி வெளியே சென்று அந்தப் பால்கனியின் கைப்படிச் சுவரைப் பற்றியபடி அவன் கீழே குனிந்து பார்க்க, அங்கே அவன் அம்மாவின் வீட்டின் முன்பு அந்த நேரத்திலும் பெருங்கூட்டம் கூடியிருந்தது.

                  ‘என்ன விஷயமாய் இருக்கும்?’ என்ற சந்தேகத்துடன் அவன் பார்த்துக் கொண்டிருக்க, சுற்றிலும் இருந்த நட்சத்திரக் கூட்டத்தில் திடீரென்று முளைத்த பால் நிலவாய் வெளியே வந்தாள் அக்னி!

                  அவளைப் பார்த்ததும் தனையும் அறியாது ஒரு பெருமூச்சு ருத்ரனிடத்தில்.

                  அதே வேளையில் அங்கே மெல்லிய காற்று வீச, அந்தக் குளிர்க்காற்றோ ருத்ரனின் மூச்சுக்காற்றையும் சுமந்து கொண்டு அக்னியின் பொன் மேனியைத் தழுவியது.

                  அந்தச் சில்லிப்பில் மெதுவாய் தேகம் சிலிர்த்தவள்.. வீசிய சிறு காற்றில் கலைந்த கூந்தலை ஒதுக்கிவிட்டபடி மெல்ல மேலே நிமிர்த்து பார்த்தாள்.

                  அங்கே ருத்ரன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கனவும், அதுவரை எடுத்துக் கொண்டிருந்த மூச்சு அடைத்துக்கொள்ள.. மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்த அவளது இதழ்கள் பாதி பேச்சில் அப்படியே நின்றுவிட, கூந்தல் கோதிய விரல்களும் அந்தரத்தில் உறைந்து போய்விட, அவளது மான்விழிகளும், ருத்ரனிடமே நிலைகுத்தின!

                  அவள் இப்படிப் பாதிப் பேச்சில் சிலையாய் நிற்பதைக் காணவும் சுற்றி இருந்த அத்தனைப் பெண்களின் விழிகளும், அக்னியின் விழிகள் சென்ற திசையை நோக்கின.

                  என்ன தான் மனதின் அடியாழம் வரை ருத்ரன் மேல ஜுவாலாமுகிக்கு கோபம் மண்டிக் கிடந்தாலும், தன் மகனது முகத்தினை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று எந்தத் தாய்க்குத் தான் ஆசை இருக்காது?

                  அதிலும் பக்கத்திலேயே வசிக்கும் மகனை, வீம்பினால் பார்க்கக் கூடாதென முடிவெடுத்தவர், அவன் எதேச்சையாகவாவது தன்னிடம் அவன் திருமுகத்தைக் காண்பிக்க மாட்டானா என்று ஏங்கித் தான் போயிருந்தார்.

                  ஆனால் மகனோ, அவரிருந்த பக்கம் தனது நிழலைக் கூடச் செல்ல விட்டதில்லை!

                  அப்படியிருந்த தன் மகன் இன்று இந்தப் பெண்ணுக்காகத் தானிருக்கும் இடம் தேடி வந்திருக்கிறான் என்ற எண்ணம் அவரது மனதுக்குள் சம்பட்டி அடியாய் வலியைக் கொடுத்தது.

                  கண்களில் வலியைத் தேக்கி அருகிலிருக்கும் அக்னியையும், மேலே அந்தப் பங்காளவிலிருக்கும் தன் மகனையும் பார்த்தவரோ, சிதறத் துடிக்கும் கண்ணீரை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டார்.

                  ஆனால் அக்னியும், ருத்ரனுமோ.. தங்களை மறந்து, கரைகடந்த காதலை கண் பார்வையிலேயே வெளிப்படுத்தித் தங்களது மனப்புண்ணைக் கீறிக் கீறி.. அதில் காதலெனும் ஒளஷதம் தடவி ஆற்றிக்கொண்டிருந்தனர்!

                    The post அத்தியாயம் – 10 : அடிமையின் காதல்! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>
                    https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 17566
                    அத்தியாயம் – 9 : சிறை மீளுமோ பட்டாம்பூச்சி? https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/#respond Mon, 01 Apr 2024 20:22:22 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/ சிறை மீளுமோ பட்டாம்பூச்சி? அந்தக் காவலாளியின் மனைவி கொண்டு வந்த விஷயத்தில் இதயம் படபடத்துப் போனது ஜுவாலாமுகிக்கு! அங்கிருந்து அப்பொழுதே புயல் வேகத்தில் கிளம்பினார் அவர். அவரருகே இருந்த அந்தப் பெண்ணோ.. “அம்மா.. இந்த நேரத்துல அங்க போக வேண்டாம் ம்மா.. ஏதாவது பிரச்சனையாகிடப் போகுது..” என்று கூற, திரும்பி நின்று அந்தப் பெண்ணைத் தீயாய் அவர் பார்க்க.. அவர் பார்வையில் சட்டென வாயை மூடிக் கொண்டு, தலைகுனிந்து அமைதியாகிவிட்டாள்

                    The post அத்தியாயம் – 9 : சிறை மீளுமோ பட்டாம்பூச்சி? appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                    ]]>

                    Loading

                    சிறை மீளுமோ பட்டாம்பூச்சி?

                    அந்தக் காவலாளியின் மனைவி கொண்டு வந்த விஷயத்தில் இதயம் படபடத்துப் போனது ஜுவாலாமுகிக்கு!

                    அங்கிருந்து அப்பொழுதே புயல் வேகத்தில் கிளம்பினார் அவர். அவரருகே இருந்த அந்தப் பெண்ணோ.. “அம்மா.. இந்த நேரத்துல அங்க போக வேண்டாம் ம்மா.. ஏதாவது பிரச்சனையாகிடப் போகுது..” என்று கூற, திரும்பி நின்று அந்தப் பெண்ணைத் தீயாய் அவர் பார்க்க.. அவர் பார்வையில் சட்டென வாயை மூடிக் கொண்டு, தலைகுனிந்து அமைதியாகிவிட்டாள் அவள்.

                    அவளை நோக்கி அந்த ஒற்றைப் பார்வையை வீசியவர், மீண்டும் திரும்பி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் அந்தப் பெண்ணும் ஓட்டமும் நடையுமாக அவரைப் பின்தொடர்ந்தாள்.

                    வேகமாகச் சென்ற ஜுவாலாமுகியின் கால்கள் மீண்டும் சிறைச்சாலையின் முன்பு தான் நின்றது.

                    அவர் அங்கு மீண்டும் வருவதைக் கண்ட சிறைப் பணியாளர்கள்.. மறுபடியும் என்ன பிரச்சனை நேருமோ என்று பயந்து போனார்கள்.

                    ஆனால் அவரிடம் கேள்வி கேட்கவோ அல்லது, அவரைத் தடுத்து நிறுத்தவோ அங்கு இருந்த யாருக்குமே தைரியம் தான் இருக்கவில்லை.

                    எனவே முன்பு போலவே அவர் செல்லும் பாதையெங்கும் அவசர அவசரமாகக் கதவுகள் திறக்கப்பட்டன.

                    முன்பு போலவே அவரது கால்கள் அக்னியின் அறைக்கு முன்பாக நிற்கவும், அடுத்து அவரது கட்டளை என்ன என்று அவர் முகம் பார்த்தே அங்கு நின்றிருந்தார்கள் அந்தக் காவலாளிகள்.

                    “இந்த செல்லோட பூட்டைத் திறந்து விடுங்க..” என்று அவர் அக்னியின் மீது நிலைகுத்திய பார்வையுடன் கேட்க, சுற்றி இருந்தவர்களுக்கோ, வான் தொட்டு, மரம் தீண்டிய மின்னலின் தடம் தங்கள் தலையிலேயே விழுந்ததைப் போல ஒரு பேரதிர்ச்சி.

                    “அம்மா..” என்று அனைவரும் அதிர்வுடன் கூற, அவரோ நெருப்பாய் அவர்களை உறுத்து விழித்தபடி..

                    “ஹ்ம்ம்.. இந்த செல்லோட பூட்டைத் திறந்து விடுங்கன்னு கேட்கறேனில்லை.. திறங்க முதல்ல..” என்று கர்ஜிக்க, அந்தப் பெரிய சிறையின் காவலாளி அவருக்கு முன்பாக வந்து நின்று..

                    “அம்மா.. என்னை மன்னிச்சுடுங்க.. இந்த ஒரு விஷயத்தை மட்டும் எங்களால செய்யவே முடியாது.” என்று கூற, அவரோ, அடுத்து காலியாக இருந்த ஒரு சிறைக்குள் விறுவிறுவென உள்ளே நுழைந்தார்.

                    அதைக் கண்டவர்களுக்கு அங்கமெங்கும் பதற..

                    “அம்மா.. என்ன செய்யறீங்க? இந்த விஷயம் மட்டும் ஜீக்கு தெரிஞ்சா அவர் எங்களைக் கொன்னே போட்டுடுவார். தயவுசெஞ்சு வெளில வாங்கம்மா..” என்று அவரிடம் கதற, அவரோ கூரான பார்வையுடன் அனைவரையும் நிமிர்ந்து பார்த்து..

                    “அந்தப் பொண்ணை இந்த ஜெயில்ல இருந்து விடுவிச்சா தான் நான் இங்க இருந்து வருவேன்.

                    இல்ல.. அந்தப் பொண்ணு இந்தச் சிறைல எவ்வளவு நாள் இருக்காளோ.. அவ்வளவு நாளும் நானும் இங்க தான் இருப்பேன்..” என்று சாவதானமாகக் கூறி அவரது சிறையின் கதவை அலட்சியமாய் சாத்திக்கொள்ள.. அந்தச் சிறைச்சாலைத் தலைவனின் கண்ணசைவில் இரண்டு பேர் தலைதெறிக்க ஓடினர்.

                    அதே வேளையில் அந்த மலைமுகட்டில் தன்னந்தனியாக இருளில் படுத்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

                    தேகம் சிலிர்க்கச் செய்யும் குளிர்காற்றில் கண்மூடிப் படுத்திருந்தான். அவன் விழிகளுக்குள் விளையாடிக் கொண்டிருந்ததோ, அவனவள் தான்!..

                    பிறந்ததிலிருந்து இந்தக் காளிக்ஷேத்ராவில் அவன் அத்தனை கொடுமைகள் கண்டிருந்தாலும், அவனுக்கு இந்தப் பிராந்தியம் அத்தனை இழப்புகள் கொடுத்திருந்தாலும், அவன் ஒரு நாள் கூடத் தன் வாழ்க்கை ஏன் இவ்வளவு கரடுமுரடாக இருக்கிறது? தனக்கு ஏன் மற்ற மனிதர்களைப் போல ஒரு சாதாரண வாழ்க்கை அமையவில்லை என்று வருத்தப்பட்டது கிடையாது.

                    தன் மக்களுக்கு ஒரு நியாயமான.. சாதாரணமான வாழ்க்கை பெற்றுத் தர வேண்டும்.. இந்தக் கடுமையான, அசாதாரணமான சூழலிருந்து அவர்கள் வெளிவந்து, மற்ற இந்திய மக்களுடன் கலக்க வேண்டும் என்பது தான் அவனது குறிக்கோளாக இருந்து வந்தது.

                    ஆனால் இன்றோ.. அவனையும் அறியாது அவன் மனம்..

                    “நான் ஏன் ஒரு சாதாரண மனுஷனா பிறக்கல?

                    நானும் மத்த பசங்க மாதிரி நல்லா படிச்சு.. ஐடி கம்பெனில வேலைக்குப் போய்.. அங்க அக்னியும் வேலைக்குச் சேர்ந்திருந்து, ரெண்டு பேரும் பார்த்ததும் காதலிச்சு.. கவிதை மாதிரி ஒரு வாழ்க்கை அமைச்சுன்னு ஏன் எனக்கு இந்த மாதிரி எதுவும் நடக்கல?

                    நான் ஏன் இந்த ஊர்ல பிறந்தேன்.. ஏன் என் ஊர் மக்கள் மட்டும் இவ்வளவு கொடுமைகளை அனுபவிச்சுட்டு இருக்காங்க?

                    ஏன் இது எதுவுமே புரியாம.. இல்ல தெரியாம அக்னி இங்க என்னை உளவு பார்க்க வந்தா?

                    ஏன் அவ கண்ணுல என் மேல அத்தனை காதல் இருந்தும், என்னைக் கொல்லணும்னு வெறிபிடிச்சு இருக்கா..

                    ஏன்.. ஏன்.. ஏன்..’ என்று கதறிக் கொண்டிருந்தது.

                    அந்தக் கதறலின் அழுத்தம் தாங்காமல் விருட்டென்று மேலே எழுந்துவிட்டான் ருத்ரன்.

                    காற்றில் அவன் சட்டை சடசடக்க, சட்டெனத் தனது சட்டையைக் கழற்றித் தூக்கி எறிந்தவன், வெற்று உடம்பில் மலையடிவாரத்தில் இருக்கும் ஊரைப் பார்வையிட்டான்!

                    தூரத்தில் தெரியும் சிறைச்சாலையை, அதில் இன்னமும் பளிச்சென்று எரியும் விளக்குகள் மூலம் தெரிந்து கொண்டவன், அதையே ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தான்.

                    தன் உயிர்கொல்லும் தன்னவளை, அங்கே தானே சிறை வைத்திருக்கும் கொடுமை அவனது உயிர் தின்றது!

                    ஆனாலும் அவன் மனதின் உறுதி அவனை எக்கிரும்பாய் உறையச் செய்தது.

                    அதே வேளையில் சிறைச்சாலையிலிருந்து ஒரு பைக் அதிவேகமாகக் கிளம்பி தானிருக்கும் மலைமுகட்டை நோக்கி வருவதைக் கண்ட ருத்ரனின் விழிகள் கூர்மை பெற்றன.

                    அடுத்த வினாடியே, தனது சட்டையைக் கூட அணியாமல்.. சட்டெனத் திரும்பித் தனது பைக்கைக் கிளப்பிக் கொண்டு அந்த மலைகரட்டிலிருந்து கீழே இறங்கினான் ருத்ரன்.

                    அடுத்த இரு நிமிடத்திலேயே இரண்டு பைக்குகளும் சந்தித்துக் கொள்ள, அவனிடம் விரைந்து வந்த காவலர்கள்..

                    “ஜி.. மறுபடியும் அம்மா வந்திருக்காங்க..” என்று கூறியதும் ருத்ரனின் உடல் ஒரு கணம் தூக்கிப்போட்டது.

                    “என்ன விஷயம்?” என்று அவன் கேட்க, தலையைக் குனிந்து கொண்ட இருவரும், அந்த விஷயத்தை எப்படிச் சொல்லுவது என்று தெரியாது திணறி நிற்க, அவர்களது தயக்கம் ருத்ரனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

                    “என்ன விஷயம்னு கேட்டேன்..” என்று அவனது குரல் உயர்ந்த விதத்தில் அந்தக் காவலர்களுக்கு உடல் வியர்த்துப் போனது.

                    ஆனாலும் மனதில் திடத்தை வருவித்துக் கொண்டு அவர்கள் அங்கு நடந்த விஷயத்தைக் கூற.. அவனது இதழ்களோ ஏளனமாக வளைந்தது.

                    “ஜுவாலாமுகி இப்போ அவங்க மகனைப் பத்தி யோசிச்சிருக்காங்களே.. ஆச்சர்யமா இருக்கே!” என்று எள்ளலாகக் கூறியவன், அவர்களிடம் எதுவும் கூறாது, அதே ஏளனச் சிரிப்புடன் பைக்கைக் கிளப்பினான்.

                    அவன் உதடுகள் தான் ஏளனத்தில் வளைந்திருந்தனவே தவிர, அவனது கண்கள் செங்கனியாய் சிவந்திருந்தது!

                    அவன் பைக்கைக் கிளப்பிய வேகத்திலேயே அவனுக்குள் எரிந்து கொண்டிருக்கும் ரௌத்திரம் அந்தக் காவலர்களுக்குப் புரிபட்டு விட, மனத்திற்குள் பெரும் பயத்துடனே அவனைச் சிரமத்துடன் பின் தொடர்ந்தனர்.

                    சிறைச்சாலையின் வாசலில் சறுக்கிக் கொண்டு நின்றது ருத்ரனின் இரும்புக் குதிரை.

                    அவன் அப்படி அங்கு வந்து நிற்கவும், ஏற்கனவே அங்கு நிலவியிருந்த பதட்டமான சூழலில் இன்னமும் புயல் சேர்ந்தது போலானது.

                    அவனைக் கண்டதும் வாசலிலிருந்த காவலர்களும் அவனைச் சூழ்ந்துகொள்ள, அவர்களைச் சிறிதும் மதியாது காற்றில் சீறும் நெருப்பின் ஜுவாலையைப் போல உள்ளே சென்றான் ருத்ரன்.

                    அவன் வேகத்துக்குப் பின் தொடர முடியாமல் ஓட்டமும் நடையுமாக அவர்கள் அனைவரும் உள்ளே செல்ல, அவனது கால்கள் அக்னியின் சிறையின் முன்பு சடுதியில் நின்றது.

                    உள்ளிருந்து அவனை இப்பொழுது அனல் காக்கும் கண்களால் பார்த்தபடி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அக்னி.

                    ‘இவன் அம்மாவுக்கு என் மேல என்ன இவ்வளவு கரிசனம்? எதுக்கு என்னை ரிலீஸ் பண்ணனும்னு சொல்லறாங்க?

                    ரிலீஸ்னா, அது இந்த ஜெயில்ல இருந்தா.. இல்ல இந்தக் காளிக்ஷேத்ரால இருந்தேவா?’ என்றெல்லாம் அவளது எண்ணங்கள் பயணப்பட்டுக் கொண்டிருந்த போது தான் எரிமலையிலிருந்து சீறிக் கிளம்பிய நெருப்புத் துண்டாய் அவள் முன்னால் அனல் பறக்க வந்து நின்றிருந்தான் ருத்ரன்.

                    ‘என்னை ரிலீஸ் பண்ணனும்னு சத்தியாகிரகம் இருக்கறது உன் அம்மா.. வேணும்னா அவங்களை முறையேண்டா.. அதைவிட்டுட்டு என்னை ஏன் இப்படி முறைச்சுட்டு இருக்க?’ என்று மனதுக்குள் நினைத்த அவள் முகத்தைச் சுளிக்க.. ருத்ரன் பேச ஆரம்பித்தான்.

                    “என்ன திடீருன்னு ஜுவாலாமுகிக்கு அவங்க பையன் மேல இத்தனைக் கருணை!?” என்ற கேள்வி அவன் தாயிடம் இருந்தாலும், பார்வை என்னவோ இன்னமும் அக்னியின் மீதே பதிந்திருந்தது!

                    அதைக் கவனித்த ஜுவாலாமுகியோ.. “எனக்குப் பையன்னு எந்த உறவும் இல்ல..” என்று வெறுப்பாய் மொழிய, ஒரு கணம் கண்களை இறுக்க மூடித் திறந்தான் ருத்ரன்.

                    ஏற்கனவே சிவந்திருந்த அவனது விழிகளில் இன்னமும் காரம் ஏறிப் போய் இருந்தது!

                    “அப்பறம் எதுக்கு இவளை ரிலீஸ் செய்யச் சொல்லி இந்த உள்ளிருப்பு போராட்டம்?” என்றான் உடனேயே தன்னை மீட்டுக் கொண்டு இப்பொழுது தெளிவான நக்கலில்!

                    “எனக்கு இந்த ஊர் ரொம்ப முக்கியம்..” என்று அடுத்ததாக வந்து விழுந்த அன்னையின் பதிலில் கடகடவென வாய்விட்டுச் சிரித்தபடி..

                    “என்னை உளவு பார்க்க வந்தவளை.. இந்த ஊரைத் திரும்பவும் அடிமையாக்க வந்தவளை நான் ரிலீஸ் பண்ணினா அது இந்த ஊருக்கு நல்லதாகிடுமா?” என்று அவன் கேலியாய் கேட்க, அவன் கண்களில் இருந்த பளபளப்பு தன்னை அவன் முழுதும் கண்டுவிட்டான் என்று ஜுவாலாமுகிக்கு உணர்த்தியது.

                    ஆனால் விட்டுக் கொடுக்காமல்..

                    “அவ இங்க இருக்கறது அவளுக்கும் பாதுகாப்பு இல்ல.. இந்த ஊருக்கும் பாதுகாப்பு இல்ல. அதனால தான் அவளை இங்கிருந்து ரிலீஸ் செய்யச் சொன்னேன்.” என்று இப்பொழுதும் தன் பிடியிலேயே நின்றார் அவர், அதுவும் விரைப்பாகவே!

                    சற்று யோசிப்பது போலப் பாவனை செய்தவன்.. “ஹ்ம்ம்.. அப்போ இவளை வேற எங்க வச்சா பாதுகாப்பா இருக்கும்?” என்று சத்தமாகத் தனக்குள்ளாக்கப் பேசுவது போலப் பேசிவிட்டு.. ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல,

                    “சரி.. அப்போ அக்னிமித்ரா இனி உங்க கூடவே.. உங்க வீட்டுலயே தங்கட்டும்..” என்று அவன் சாதாரணமாகக் கூறவும், ஜுவாலாமுகியும், அக்னியும் ஒரு சேர விறுக்கென நிமிர்ந்தார்கள்!

                    ‘என்ன சொல்றான் இவன்? நான் என்ன இவன் வீட்டுக்கு வந்த கெஸ்ட்டா? இவன் அம்மா கூட என்னைத் தங்கச் சொல்லறான்?’ என்று இவள் அதிர்ந்து போய்ப் பார்க்க, அதே வேளையில் ஜுவாலாமுகியின் கண்கள் இடுங்கியது!

                    அவனை நேராய் பார்த்த பார்வையை விலக்காது.. “சரி..” என்று அவர் பதிலுரைத்திருக்க, இங்கு அக்னிக்கோ தலைசுற்றியது!

                    அடுத்த நிமிடமே ருத்ரனின் விழியசைவில் ஒரு காவலாளி வந்து அக்னியின் சிறைக்கதவைத் திறக்க.. அவளோ, வெளியே வருவதற்கு சிறிதும் பிரயத்தனப்படவில்லை!

                    அவளையே விழியாகற்றாது ருத்ரன் பார்த்துக் கொண்டிருக்க, ஜுவாலாவோ..

                    “வெளில வா..” என்று அழைத்தார்.

                    அதற்கு அக்னியோ..

                    “நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா? நீங்க பாட்டுக்கு இங்க வா.. அங்க போன்னு ஆர்டர் போடறீங்க?” என்று அவள் சீறலாய் கேட்க, அதைத் துளியும் சட்டை செய்யாது.. நிதானமாய் உள்ளே சென்று அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்த ருத்ரனோ..

                    “திரும்பவும் உனக்கு ஞாபகப்படுத்தறேன் அக்னி.. இங்க நீ விருந்தாளி கிடையாது.

                    நீ.. என்னோட கைதி!

                    நான் என்ன சொல்லறேனோ, அதைச் செய்யறது தான் உன்னோட விதி!” என்றவன் அவளை ஜுவாலாமுகியிடம் தள்ளிவிட்டுவிட்டு..

                    “அவங்க வீட்டுல தங்க உனக்கு இஷ்டம் இல்லைனா, எனக்கு இஷ்டமான ஒரு இடத்துல நீ தங்கவைக்கப்படுவ..” என்று கூறி அவளைப் பார்த்துத் தனது ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி அவன் சிரிக்க, அதில் குப்பென்று அக்னியின் முகம் சிவந்தது!

                    அதற்குக் காரணம்.. கோபமா? அல்லது நாணமா?!

                      The post அத்தியாயம் – 9 : சிறை மீளுமோ பட்டாம்பூச்சி? appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

                      ]]>
                      https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/feed/ 0 17556