Loading

ஹலோ உறவுப்பூக்களே! இதோ அடுத்த வார வாசகர் போட்டியின் அறிவிப்புடன் வந்துவிட்டோம். என்ஜாய் ரீடிங் அண்ட் ஹேவ் ஃபன்.

வாரந்தோறும் நடைபெறும் எழுத்தாளர் – வாசகர் போட்டி சிறந்த முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இதோ மீண்டும் ஒரு கலக்கலான வாசகர் போட்டி தொடங்கவுள்ளது.

வியாழன் முதல் திங்கள் வரை (16/12/2021 முதல் 20/12/2021 வரை) நடைபெறவுள்ள போட்டியின் தலைப்பு,

பன்னு! ஒரே ஃபன்னு!

என்னடா டாபிக்கே ஒரு மார்க்கமா இருக்கேன்னு பாக்குறீங்களா வாசகர்களே… இது தான் உங்களுக்கான தலைப்பு.

பட்டாசு போட்டிக்கு இதுவரை வந்திருக்கும் அத்தியாயங்களைப் படித்து, அதனைப் பற்றி ஒரே வரியில் ‘ட்வீட்‘ செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, “அப்பள கட்ட காணோம்னு அழுகல… என் தமிழ காணோம்ன்னு அழுகுறேன்…”

இதே போல், ஜாலியாக, அதே நேரம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் உங்களின் ட்வீட்.

உங்களின் ட்வீட்டை, தளத்தில் கமெண்ட் செக்ஷனில் மட்டுமே பதிய வேண்டும். ஆனால், நீங்கள் பதிந்த ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்டை, முகப்புத்தகத்தில் பதிந்து, அதனுடைய அத்தியாயத்தின் திரியையும் பதிய வேண்டும்.

இம்முறை, மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் அனைவர்க்கும் சேர்த்தே இப்போட்டி அறிவிக்கப்படுகிறது. எனவே, மொத்தமாக ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த வாரத்தின் ‘ஸ்வீட் ட்வீட்டராக‘ பெயர் சூட்டப்படுவார். (உங்களின் பங்களிப்பைப் பொறுத்து வெற்றியாளர்களின் எண்ணிக்கை உயரவும் வாய்ப்பு உண்டு).

முகப்புத்தகத்தில், நீங்கள் கொடுக்கும் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் மீம்ஸ் அனைத்தும், #funtweet என்ற ஹாஷ்டாக் – இன் கீழ் வரவேண்டும்.

ஸ்டார்ட் யுவர் ஃபன் ட்வீட் ரைட் நொவ்…

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. 😍😍😍😍 apo ore fun than intha week