
தோற்கும் என்று தெரிந்தும்
சில போர்களைத் தொடங்குவோம்…
ஆனால் ஜெயிக்கப் போவது காதலா? மோதலா?
அதைக் காலம்தான் தீர்மானிக்கும்!
ஒவ்வொரு கேண்டிடேட்டையும் அழைத்து எடையும் உயரமும் சரிபார்த்தனர்.
“என்ன மௌனி… வெய்ட் எல்லாம் செக் பண்றானுங்க?” வினயன் கேட்டதில்,
“ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெய்ட் இருக்கணும்ல… அதான்…” மௌனியும் கடுப்பாகவே பதில் அளித்தாள்.
சட்டென்று ஒரு சுவாரஸ்யம் அகன்ற நிலை.
“அப்போ நம்ம தேற மாட்டோம். போய் மறைச்சு வச்ச காரை எடுத்துட்டு பேசாம ஃபாரின் போய்டலாம்…” ஜனனி திட்டம் கூறும்போதே, படிக்கட்டில் இருந்து கம்பீரம் குறையாது இறங்கி வந்தனர் அர்னவ் தேவும், ருஹானா ஜியாவும்.
சந்திரசேகர் அவர்களை ஒரு முறை வியப்பாகப் பார்த்தார். நேர்முகத்தேர்விற்கு எல்லாம் வர முடியாது என்று விட்டுத் திடீரென அவர்கள் வந்ததில் சிறு ஆச்சரியம்.
“டாட்… இன்டர்வியூவை நாங்க பார்த்துக்குறோம்!” அர்னவ் தேவ் ஜனனியைத் தவிர்த்து மற்றவர்களைப் பார்க்க முற்பட்டாலும் கண்கள் அவளது குருவிக் கூடு தலையிலேயே நிலைத்தது.
“சீரியஸ்லி?” சந்திரசேகர் கேட்டதில், “எங்களுக்குத் தேவையான பெர்சனல் செக்கரட்டரிக்கு எப்படி இன்டர்வியூ வைக்கிறதுன்னு நாங்கதான் டிசைட் பண்ணுவோம் பெரியப்பா!” ருஹானா ஜியா அதிகாரக் குரலில் கூற, “ம்ம்… ஓகே… கேரி ஆன்!” என சந்திரசேகர் அங்கிருந்து வெளியில் புறப்பட்டார்.
வினயன் தான், ருஹானாவை ‘ஆ’வென பார்த்திருந்தான்.
“ஹே ஜன்னி… நம்ம சிஇஓவா இருக்கும்போதெல்லாம் இப்படிப்பட்ட பொண்ணு கண்ணுல படாம போய்ட்டாளே… வாட் அ பியூட்டிடி!” என ஜொள்ளு விடத் தொடங்க,
“அடப்பாவி… சுண்டுனா ரத்தம் வர்ற அளவுக்கு நம்ம ஆபீஸ்லயே பல பொண்ணுங்க ஒர்க் பண்றாங்க. இவள் ஆவரேஜ் கலர்தானே!” ஜனனியும் முணுமுணுத்தாள்.
“சுண்டி விட்டு ரத்தம் வர வச்சு ரத்தத்தைக் குடிக்க நான் என்ன வேம்பயராடி?” வினயன் ஓரக்கண்ணில் திரும்பி அவளை முறைத்து விட்டு, “தட் அடர்ந்த புருவம் அழகா இருக்குல்ல…” என்றான் விழி விரித்து.
இரு பெண்களும் அவனைத் திரும்பி முறைத்தனர்.
அவனோ, “நீ மட்டும் சைட் அடிக்க வரலாம்… நான் அடிக்கக் கூடாதா?” என மௌனியிடம் நியாயம் கேட்க,
“சரி, என்ஜாய் பண்ணித் தொலை. நம்ம பிளான்தான் ஊத்திக்கிச்சு…” எனப் புலம்பிக் கொண்டாள்.
அர்னவ் செக்யூரிட்டியிடமும் அங்கேயே உதவிக்கு நின்றிருந்த மேனேஜரிடமும் ஏதோ கிசுகிசுக்க, அவர்களோ கேண்டிடேட்ஸ்-ஐ எங்கோ அழைத்துச் சென்றனர்.
ஜனனி அமைதியாக இராமல், “ஆமா நீங்க யாரு? இப்ப எங்க போறோம்?” என அர்னவிடமே கேட்டுவிட, செக்யூரிட்டி கார்டு எல்லாம் ஒரு கணம் நின்று விட்டனர். அவன் அவர்களைச் செல்லும்படி கண்ணைக் காட்டிட,
ருஹானா தான், “ஐ ஆம் ருஹானா ஜியா. ஹீ இஸ் அர்னவ் தேவ். சித்தாந்தன் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் எம்.டி’ஸ்!” என்றாள் அழுத்தமாக.
“ஓ… எம்.டி’யா…” ஜனனியின் குரலில் சிறு அலட்சியம். அதில் அர்னவ் அவளைத் தீயாக முறைக்க,
மௌனிதான் அவள் காலை மிதித்தாள். “எம்.டியும் பெரிய போஸ்டிங்டி…” எனப் பல்லைக் கடித்துக் கிசுகிசுக்க,
அதில் சுதாரித்தவள், “ஓ… எம்.டி’யா?” என அதிர்ச்சி அடைவது போல நடித்தாள்.
“உனக்கு காது கேட்கும் தான? இல்ல உன் நூடுல்ஸ் முடி காதை அடைச்சுடுமா?” அர்னவ் தேவ் அமர்த்தலாகக் கேட்டதில், அவளுக்குச் சுறுசுறுவென கோபம் எழுந்தது.
“எனக்கு காது நல்லாவே கேட்கும் மிஸ்டர் அர்னவ் தேவ். பை தி வே… என் ஹேரை கிண்டல் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க…” என நேர்முகத்தேர்விற்கு வந்ததையே மறந்துவிட்டு அவனைப் பெயர் சொல்லி அழைக்க, அவனோ ஒரு கணம் திகைத்துப் பின் அவளைப் பார்வையாலேயே அளந்தான்.
“ஹே! மைண்ட் யுவர் வொர்ட்ஸ்…” ருஹானா விரல் நீட்டி மிரட்ட, அர்னவ் ருஹானாவை அடங்குவதற்குள் ஜனனியே, “நான் என்ன தப்பா சொல்லிட்டேன்… அவர் பேர் அதானே மிஸ் ருஹானா ஜியா? வேலை கிடைச்சு நீங்க எனக்கு முதலாளி ஆனாதான் சார், மோர் எல்லாம் வரும். அதுவரை நீங்க எனக்கு ஒரு ஹியூமன் பீயிங் தான்!” எனக் கொந்தளித்து விட்டு மற்றவர்கள் சென்ற திசையை நோக்கிச் சென்றாள்.
அவளுக்குத் தனது முடியை யாரேனும் கிண்டல் செய்தால் கண்மூடித்தனமாகக் கோபம் வந்துவிடும். இப்போதும் கோபப்பட்டு விட்டு, ‘அய்யயோ… மௌனி என்னை சாவடிக்கப் போறா’ என்ற பயத்தில் ஓடியே விட்டாள்.
‘இவள் வேற ஹெவியா பெர்ஃபார்மன்ஸ் பண்றா…’ மௌனி தலையைக் கோதியபடி முணுமுணுத்திட, வினயனோ நடக்கும் கலவரத்தை எல்லாம் கண்டுகொள்ளாது வெகு தீவிரமாக சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
“மிஸ் ருஹானா ஜியா… நீங்க எங்க த்ரெடிங் பண்ணுவீங்க?” என அதிமுக்கிய கேள்வியைக் கேட்டதில் அவள் சற்றே விழித்து விட்டுப் பின், “வாட்?” எனப் புருவம் சுருக்கினாள்.
“இல்ல எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. நீங்க எந்த பியூட்டி பார்லருக்கு போய் த்ரெடிங் பண்ணீங்கன்னு தெரிஞ்சா நானும் அவளுக்கு சஜஸ்ட் பண்ணுவேன்…” என்றதில், மௌனி ஆதிரா, “கம்பளிப்பூச்சியை ஒட்ட வச்ச மாதிரி இருக்கே… இது மாதிரி நானும் வச்சுக்கவாடா?” என அவன் புறம் சரிந்து பல்லைக் கடித்தாள்.
“மிஸ்டர்… நீங்க லிமிட் க்ராஸ் பண்றீங்க…” அர்னவ் அதட்டும்போதே ருஹானா, “நீ எந்த பார்லர் போனாலும் வேஸ்ட் தான். இது நேச்சுரல்!” என கண்ணைச் சுருக்கிக் கூறினாள்.
“இஸ் இட்… நைஸ் ஐப்ரோஸ்!” அவன் வழிவதை நிறுத்தாது போக,
“நீ உண்மையாவே இன்டர்வியூக்குதான் வந்துருக்கியா? பார்த்தா அப்படி தெரியல…” என்றாள் அவனை மேலும் கீழுமாகப் பார்த்து.
“இதென்ன சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாபா மிஸ் ருஹானா ஜியா? பெர்சனல் செக்கரட்டரி தான… இதுக்கு இதுவே ஜாஸ்திதான்…” என்றவனின் அசட்டையில் இருவரும் அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தனர்.
பின் வினயனே, “ஏதோ மூணு பேருக்குன்னு மிஸ்டர் சந்திரசேகர் சொன்னாரே… அதுல நீங்களும் ஒரு ஆளா மிஸ் ஜியா?” என ஆர்வமாகக் கேட்டான்.
நேரம் செல்ல செல்ல பெயரும் சுருங்கியது.
“ம்ம்…” அவனைக் கை கட்டிப் பார்த்தபடி அவள் உறும, அதில் அவன் விழிகள் விரிந்தது.
“வாவ்… அப்போ கண்டிப்பா நான் செலக்ட் ஆகிடுறேன்!” எனத் திடுதிடுவென நேர்முகத்தேர்வு நடக்கும் இடத்திற்கு ஓட, அவனைப் பைத்தியம் போலவே பார்த்தனர் அண்ணனும் தங்கையும்.
மௌனி ஆதிராவோ வேறொரு யோசனையில் நின்றிருந்தாள்.
“அப்போ அந்த மூணு பேர்ல உங்க ரெண்டு பேருக்குதான் பெர்சனல் செக்கரட்டரி செலக்ட் பண்றீங்களா?” என அவர்களைக் கேள்வி கேட்க, இருவரும் சந்தேகத்துடன் தலையாட்டினர்.
“அப்போ மீதி ஒரு ஆள் யாரு?” என ஒரு மார்க்கமாகக் கேட்டவளை எரிச்சலுடன் பார்த்த அர்னவ், “அது உனக்கு தேவையில்லாத கேள்வி!” என்றான்.
“தேவை இருக்கு மிஸ்டர் அர்னவ் தேவ். யாருக்காக உழைக்கப் போறோம்னு தெரிஞ்சுக்க வேணாமா?” அவளது பேச்சில் அர்னவ், “முதல்ல இவங்க மூணு பேரையும் க்ராஸ் செக் பண்ணணும் ருஹா… சம்திங் ஃபிஷி!” என்றான் கடுகடுப்புடன்.
“அதெல்லாம் உங்க பிரச்சினை. மீதி ஒரு ஆள் யாருன்னு சொன்னா, நான் போய் என் இன்டர்வியூவை பார்ப்பேன்…” அவளோ அழுத்தமாக அங்கேயே நிற்க, ருஹானாவோ, “சரியான அரை பைத்தியமா இருப்பாங்க போல ப்ரோ… எப்படியும் தேறாதுங்க… டோன்ட் வொரி!” என்று விட்டு, “சூர்ய சித்தாந்தன்… எனி ப்ராப்ளம்?” என வினவினாள் கூர்மையாக.
அதில் தான் அவள் முகம் பிரகாசமுற, “ச்ச்சே ச்சே… எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. பை தி வே… ஒரே ஒரு டவுட் மிஸ் ருஹானா. இப்ப நான் இதுல செலக்ட் ஆகிட்டா, நான் யாருக்கு பெர்சனல் செக்கரட்டரியா இருக்கலாம்னு நானே சூஸ் பண்ணிக்கலாம் தான?” என அமர்த்தலாகக் கேட்க, “முதல்ல செலக்ட் ஆகுங்க மிஸ்…” என இழுத்ததில், “மௌனி ஆதிரா…” எனக் கை கொடுத்தாள்.
அவளுக்குத் திரும்பி கை கொடுக்காத ருஹானா, “வெல்… நாங்க வைக்கிற டெஸ்ட்ல ஃபர்ஸ்ட் கலந்துக்கோங்க. அப்பறம் செலக்ட் ஆகுறதைப் பத்தி பார்க்கலாம் மிஸ் மௌனி ஆதிரா. ஆல் தி பெஸ்ட்!” என ஏளனத்துடன் பேசி விட்டுச் செல்ல, அர்னவ் அவர்களைக் க்ராஸ் வெரிஃபிிகேஷன் செய்யும் பொருட்டு அலைபேசியில் குறுஞ்செய்தியிலேயே தனது பணியாட்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.
தன்னுடன் கைகுலுக்காமல் சென்ற ருஹானாவைத் தோள்குலுக்கலுடன் அசட்டை செய்து விட்டு, மற்றவர்களுடன் கலந்து கொண்டாள்.
அங்கோ, துப்பாக்கி சுடுதல், வில் அம்பு எறிதல், பாக்சிங் பஞ்ச் என பல வகைகள் இருந்தது.
‘என்னடா… போலீஸ் ட்ரெயினிங்கு ஆள் எடுக்குறாங்களா?’ மௌனி அதிர்ந்து நின்றிருந்த மற்றவர்களைப் பார்த்து கேட்கும்போதே அவர்களை எகத்தாளத்துடன் பார்த்தபடி வந்தனர் அர்னவும் ருஹானாவும்.
அர்னவ் கனத்த குரலில், “இங்க இருக்குற டெஸ்ட்ல பாஸ் ஆகுறவங்களைத்தான் இப்ப நாங்க செலக்ட் பண்ணப் போறோம். நீங்க கண்மூடித்தனமா சண்டை போடுறதை விட, சில நேரங்கள்ல எதிரிகளை ஸ்மார்ட்டா டீல் பண்ணனும். அந்த ஸ்மார்ட்னஸ் யாருக்கு இருக்குன்னு தான் நாங்க பார்க்க போறோம்.” என்றிட, ருஹானா தொடர்ந்தாள்:
“உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சு இருக்கணும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு நல்லா தெரிஞ்ச மூணு விஷயத்துல மட்டும் கான்செண்ட்ரேட் செஞ்சு அதுல பெர்ஃபெக்ட்டா பண்ணலாம். உதாரணத்துக்கு, உங்களுக்கு குதிரை ஏற்றம் தெரியும்னா அதை செய்யலாம். வாள் வச்சு சண்டை போட தெரியும்னா அதையும் செய்யலாம். இதெல்லாம் நீங்க தனி தனியாவே உங்க திறமையைக் காட்டலாம். பட், ஒரு மூணு பேரை தவிர…” என்றதும் மௌனி ஆதிரா அவளைக் கூரிய விழிகளுடன் ஆராய்ந்தாள்.
“தட் த்ரீ ஆஃப் யூ… நீங்க குறைஞ்சது அஞ்சு விஷயத்துலயாவது உங்க திறமையைக் காட்டணும். அதுல ஒரு சின்ன ஹிண்டரன்ஸ் கூட இருக்கும்…” என அடர்ந்த புருவத்தில் ஒன்றை நெளித்தாள்.
“குக் வித் கோமாளியா நடத்துறீங்க? சொல்லவே இல்ல…” வினயன் கடுப்பாகக் கேட்டான்.
அர்னவ், “கோமாளிகளை வச்சு இப்படித்தான் வித்தை காட்ட முடியும் மிஸ்டர்!” என பதிலடி கொடுக்க, மௌனி ஆதிராவிற்கு முகம் சிவந்தது.
“இந்தக் கோமாளிகளை நம்பிதான் உங்க பாதுகாப்பை விடலாம்னு இன்டர்வியூக்கு வர சொல்லிருக்கீங்க மிஸ்டர் அர்னவ்!” சுருக்கென பேசியதில், “செலக்ட் பண்றவங்க கோமாளிகளா இருக்கக் கூடாதே மிஸ்!” என அவனும் குத்தினான்.
வார்த்தைப் போர் வந்துவிடும் அரவம் புரிய, “மௌனி… இங்க எதுக்கு வந்துருக்கோம்னே மறந்துட்டு நீ அவன்கூட சண்டை போட்டுட்டு இருக்க. உன் கியூட் பாய பார்க்க வேணாமா?” என இடித்ததில், மௌனி, “இவனுக்கு நீயே செக்கரட்டரியா வந்து இவனை எதிரி கையால தர்ம அடி வாங்க வைடி…” என்று வஞ்சித்தாள்.
“ம்ம்க்கும்… இவன் கூட வேலை பாக்குறதுக்கு நானே எதிரிகிட்ட அடி வாங்கிட்டுப் போய்டுவேன்!” எனும்போதே போட்டி நடக்கத் தொடங்கியது.
முதலில் சிலர் மும்முரமாக தங்களுக்கு தெரிந்தவற்றை சரியாகச் செய்தனர்.
அனைவரையும் பார்வையிட்ட அர்னவ், “என்ன கேர்ள்ஸ்… இங்க வேடிக்கை பார்க்கத்தான் வந்தீங்களா? சரி ஓரமா நில்லுங்க, குண்டு எதுவும் பட்டுடப்போகுது…” என இளக்காரமாகக் கூற,
ருஹானாவோ, “ஆமா… நீங்களும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க மிஸ்டர் வினயன். பாக்சர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. பஞ்ச் பேக் மூஞ்சில அடிச்சுட போகுது…” என்றாள் கிண்டலாக.
சொன்னது போன்றே அவன் பஞ்ச் பேக் பக்கத்தில் நிற்க, ஒரு கேண்டிடேட் மறுபுறம் இருந்து ஓங்கி அடித்ததில் அவனை நோக்கி பாய்ந்து வந்தது.
அதனைக் கவனித்து விட்ட வினயன், ஒரே குத்தில்தனைத் தன் மீது படாமல் நிறுத்தி விட, ஒரு கணம் அங்கு பேரமைதி நிலவியது.
அந்த பேக் வந்த வேகம் அவனை நிச்சயம் தாக்கி இருக்கும். ஆனால் எப்படி அதனை நிறுத்தினான்? என்ற அதிர்வு ருஹானாவின் முகத்திலும் தென்பட, அதில் பெருமையாக காலரைத் தூக்கி விட முயன்றவனுக்கு கையில் உண்டியல் சத்தம் கேட்டது.
‘ஹையோ… உள்ள எது எது உடைஞ்சுதோ தெரியலையே…’ என வலியை அடக்கிக்கொண்டு வெளியில் கெத்தாக சிரித்தான்.
அர்னவும் சற்றே வியப்பு பரவினாலும், “சும்மா பிலிம் காட்டாம போய் ப்ராப்பரா பண்ணுங்க மிஸ்டர்!” என்றதில், அதே பஞ்ச் பேகை ஓங்கி குத்தினான் வினயன். அது எதிரில் நின்றிருந்த கேண்டிடேட்டின் முகத்தில் இடிக்கப் போக, அவன் நிறுத்த முற்பட்ட போதும் முடியாமல் தள்ளி விழுந்தான்.
“ஒரு டெஸ்ட் கம்ப்ளீட்டட்!” எனக் கண் சிமிட்டிச் சிரித்த வினயனை முறைக்க முயன்றாள் ருஹானா.
சற்று தள்ளி குதிரை ஏற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கேண்டிடேட் ஒருவன் குதிரையின் முரட்டு வேகத்தில் கீழே விழுந்து விட, அதன்பிறகு யாருக்கும் அடங்காமல் அங்கும் இங்கும் சுற்றியது.
ருஹானா, “ஓ நோ… உன் தோஸ்த் கண்ட்ரோல் இழந்துட்டான் அர்னு…” எனக் குதிரையைக் கை காட்டி கூற, “அவனுக்கு என்னைத் தவிர யாருமே அவனைத் தொடக்கூடாது…” என சலித்த அர்னவ், “செக்யூரிட்டி… தீனை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க?” என்று அதட்டும்போதே, அவனால் தீன் என அழைக்கப்பட்ட குதிரையைப் பிடித்து இழுத்து அதன்மீது ஏறி அமர்ந்தாள் ஜனனி.
தீனோ அவளைக் கீழே தள்ளி விட முயன்று உடலைக் குலுக்கி கத்த, அவளோ, “ச்சோ… நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன் தீன். நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டா, உன் தோஸ்துக்கு தெரியாம உனக்கு எக்ஸ்ட்ரா ஸ்நாக்ஸ் தர்றேன். டீலா?” என அதனிடம் குனிந்து டீல் பேசினாள்.
குதிரையோ கனைக்க, அதனை அழகாய் கையாண்டவள் சற்றும் பிசகாமல் அவ்விடத்தை ஒரு சுற்று சுற்றும்போதே தீனும் அவளது அண்மை பிடித்து அமைதியாக சவாரியைத் தொடர்ந்தது.
ருஹானா தான், “என்ன ப்ரோ… உன் தோஸ்த் இப்படி மானத்தை வாங்கிட்டான்…” என சிரிக்க,
அவனுக்கோ பெரும் அதிர்வு.
தன்னைத் தவிர யாரையும் அருகில் சேர்க்காத தீனை மடக்கி விட்டாளே… குதிரை ஏற்றமெல்லாம் அவளுக்கு கைவந்த கலை என்று இதிலேயே புரிந்தது.
அவளோ ஜாலியாக தீனுடன் சுற்ற, “போதும் போதும்! என் தீனுக்கும் உன்ன மாதிரி நூடுல்ஸ் மண்ட வளர்ந்துட போகுது… இறங்கு…” என கெத்தைக் குறைக்காமல் நிறுத்தினான் அர்னவ்.
குதிரையில் இருந்து குதித்தவள், “ஒரு நாள் இவனுக்கும் உங்களுக்கும் கர்லிங் பண்ணி விடுறேன்…” என சிலுப்பிக் கொண்டதில், “பெஸ்ட் ஆஃப் லக் மிஸ் நூடுல்ஸ்!” என்றான் நக்கல் நகையுடன்.
‘ஓவரா பண்றான்…’ மனதினுள் அவனை வறுத்தெடுக்கும்போதே, ருஹானா மௌனி மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்டு சற்றே சிந்தித்தாள்.
கண்டிப்பா தேர்வாகி விடுவது போல அவள் பேசியது அவளது ஈகோவைத் தீண்டியது.
அதனாலேயே, “மிஸ் மௌனி ஆதிரா… நீங்க ஏன் சைலண்ட்டா இருக்கீங்க? வெல்… உங்களுக்கு ஒரு ஹிண்டரன்ஸ் குடுத்துடலாமா?” எனக் குதர்க்கமாகக் கேட்க, மௌனி ஒரு பில்லரின் மீது சாய்ந்து சாவகாசமாக நின்றாள்.
“என்ன ஹிண்டரன்ஸ்?”
அவளது அசட்டைக் கேள்வி என்னவோ அவளுக்குப் பிடிக்கவில்லை.
அதனாலேயே அவர்களது ஆள்களிலேயே நன்றாக கத்தி சண்டை போடத் தெரிந்தவனை அழைத்து, அவனுடன் கத்தி சண்டை போடச் சொன்னாள்.
“ஃபைன்…” தோளைக் குலுக்கிக் கொண்டு கத்தியை வாங்கிக்கொள்ள,
“மிஸ் மௌனி, சேஃப்ட்டி டிரஸ் போட்டுக்கோங்க…” எனக் கேலியாகப் பார்த்தான் அர்னவ்.
“அதை உங்க ஆளுக்கு போட சொல்லுங்க மிஸ்டர்!” என்றவள் சண்டைக்குத் தயாராகும்போதே எதிரில் நின்றவன் கத்தியால் அவள் வயிற்றைக் கிழிக்க வர, சட்டென்று நகர்ந்தவள், “வாட் ப்ரோ… வெரி ராங் ப்ரோ!” எனும்போதே மீண்டும் தாக்க முயல, இம்முறை தனது கத்தியை அவன் கத்தியுடன் மோத விட்டாள்.
அவன் கண்ணிமைக்கும் நேரம் கத்தியின் பொசிஷனை மாற்றிட, அவளோ அவனை விட அதிவேகமாக அவனைக் கணித்து கத்தியினை சுழல விட்டாள்.
அவளை விழி அசைக்காமல் பார்த்தது அர்னவ், ருஹானா மட்டுமல்ல… குளித்து உடை மாற்றிக் கொண்டிருந்த சூர்ய சித்தாந்தனும் தான்.
அவள் கத்தியை கன நேரத்தில் மாற்றி எதிராளியை வீழ்த்தும் அழகிலும் விவேகத்திலும் கவரப்பட்டான்.
‘இன்டர்ஸ்டிங்!’ அவனது அழுத்த இதழ்கள் இகழ்வாய் விரிந்தது.
இறுதியில் எதிராளிக்கு இரண்டு மூன்று கீறல்களை பரிசாகக் கொடுத்து விட்டு, அவன் தரையில் விழுந்ததும் அவன் கழுத்தில் கத்தியை சொருக வந்தவள், சரியாக அவனுக்கு அருகில் சொருகினாள்.
பயந்து போன அந்த எதிராளி தான் அங்கிருந்து ஓட வேண்டியதாகப் போயிற்று.
“என்ன மிஸ் ருஹானா… உங்க ஆள் இவ்ளோ வீக்கா இருக்கான்…” என நக்கலாக சிரித்தவள், வில் அம்பு விட முயன்ற ஒரு கேண்டிடேட்டிடம் இருந்து வாங்கி சரியாக நடுப்பகுதியில் அம்பை எய்தாள்.
அது மட்டுமல்ல, கன் ஷூட், கயிற்றில் ஏறி இலக்கை அடைதல் என பல்வேறு விஷயங்களில் தனது திறமைகளை காட்டினர்.
ஒரே போட்டியிலேயே மூவரும் கலந்து கொள்ளாமல் கவனமாக தனித் தனியாக தங்களை வலுப்பெற்றவர்களாகக் காட்டிக்கொண்டனர்.
“என்ன ப்ரோ… போற போக்கை பார்த்தா அந்த நூடுல்ஸ் மண்டை கூட தான் நீ பொழப்ப நடத்தணும் போலயே!” ருஹானா விழிக்க,
“அங்க மட்டும் என்ன வாழுதாம்… அந்த வினயனும் நல்லா பெர்ஃபார்ம் பண்றான்…” என்றதில், “அதுக்கு? அவனை எல்லாம் என்னால செலக்ட் பண்ண முடியாது. வேணும்னா நீ வச்சுக்கோ…” என்று ஈகோ காட்டினாள்.
‘தட் கேர்ள், மௌனி… ஷீ இஸ் சம்திங் ஃபையர்ல…’ அவர்கள் முன்னே பாராட்டா விட்டாலும் தனியாக அவர்களது திறமைகளை உள்வாங்கி மனமார பாராட்டினான் அர்னவ் தேவ்.
“எஸ் ப்ரோ. பட் மூணு பேருமே ரொம்ப ஆட்டிடியூட் காட்டுறாங்க…” ருஹானா எரிச்சலுற,
“நம்மகிட்ட வேலைக்கு சேர்ந்தா ஆட்டிடியூட்டை கட் பண்ணி தான ஆகணும்…” எனச் சிரித்தான், இதிலும் பல்ப் தான் வாங்கிப் போவது தெரியாமல்.
அனைத்தையும் சிறப்பாக முடித்து விட்டு கையைத் தூக்கி சோம்பல் முறித்த மௌனி ஆதிரா, “என்ன எம்டி’ஸ்… எப்படி எங்க பெர்ஃபார்மன்ஸ்? திறமைக்கு ஹிண்டரன்ஸ் எல்லாம் ஒரு விஷயமே இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா?” என உதட்டைச் சுளித்தாள்.
இன்னும் நேர்முகத்தேர்வு நடந்து கொண்டிருக்க, வில் அம்பு போட்டியில் கலந்திருந்த ஒரு கேண்டிடேட்டிற்கு இவர்கள் மீது எரிச்சல் படர்ந்தது.
இந்தப் பெண்கள் வந்து வேலையை வாங்கி விடுவார்களோ என்ற கோபத்தில், ருஹானாவிற்கு முன்னே நின்றிருந்த மௌனியின் மீது அம்பை செலுத்தி விட்டான்.
அது நேராக அவளை நோக்கி வர, அதனைக் கவனித்து விட்ட அர்னவ், “ஹே மௌனி… அம்பு…” எனக் கத்தும்போதே அவள் சுதாரிக்கும் முன்னே, ஒரு வலுவான கரம் அவளைப் பிடித்து இழுத்தது.
அவளுக்கு அடுத்து நின்றிருந்த ருஹானாவின் மீது அம்பு பாயும் அபாயம் இருக்க, ஒரு கரத்தால் பெண்ணின் இடையைப் பிடித்திருந்தாலும் மற்றொரு கரம் ருஹானாவை நெருங்கிய அம்பைச் சரியாகப் பிடித்தது.
அம்பைப் பிடித்த இறுகிய கரத்தை விழி தெறிக்க பார்த்தவளோ, தன் இடையில் ஊறிய கரத்தையும் உணர்ந்து விட்டு மெல்ல விழி நிமிர்த்திப் பார்த்தாள்.
யார் சொன்னது பெண்களை மட்டுமே பிரம்மன் செதுக்குவார் என்று!
அவனையும் அணு அணுவாய் ரசித்து செதுக்கி உள்ளார் போலும். மின்சாரத்தை டஜன் கணக்கில் வழங்கும் தீர்க்க விழிகள்! அகன்ற நெற்றியில் சில முடிகள் அங்கும் இங்கும் அலைந்தது. அப்போது தான் ட்ரிம் செய்து விட்டு வந்ததன் அடையாளமாக, தாடியின் ஷேப் மனத்தைக் கொள்ளையடித்தது.
அடர்த்தியான மீசை, அதன் அடியில் சிவந்து நின்ற தடித்த உதடுகள்… மொத்தத்தில் ஆண்மகனை கஸ்டமைஸ் செய்து கண்ணுக்கு குளிர்ச்சியாகக் காட்டியுள்ளது தெய்வம் என்று சிலாகித்தவள், அதன் பிறகே உணர்ந்தாள், அந்த மின்சாரக் கண்ணழகு அழுத்தமாய் அர்த்தமாய் தன் நயனங்களை விழுங்கி கொண்டிருந்ததை!
தன்னைப் பார்த்தபடி எப்படி அம்பைப் பிடித்திருக்க இயலும்? ஒருவேளை அம்பைப் பிடித்த பிறகுதான் தன்னைப் பார்த்திருப்பானோ? கேட்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் முதன்முறை ஒரு திணறலை அனுபவித்தாள் மௌனி ஆதிரா.
திணறல்கள் யாவும் திணறிப்போகும் மாயம் அறிவாளோ?
ரசித்திட வருவான்(ள்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
35
+1
3
+1

