
பெங்களூருவை அடைந்ததும் ஒரு உணவகத்தின் அருகில் காரை நிறுத்தி நெட்டி முறித்தாள் மௌனி ஆதிரா.
ஜனனி தனது சுருட்டை முடியை தூக்கி போனிடெயிலில் அடக்கி விட்டு, “இப்ப அடுத்த பிளான் என்ன மௌனி?” என வினவினாள் காரின் மீது சாய்ந்து கொண்டு.
வாட்டர்பாட்டிலில் இருந்த நீரால் முகம் கழுவிய மௌனி, “நேரா இன்டர்வியூ தான். அதுக்கு முன்னாடி இந்த காரை எங்கயாவது புதைச்சு வைக்கணும்…” எனும்போதே வெஜ் ரோலுடன் அவர்கள் அருகில் வந்தான் வினயன்.
“காரை மறைச்சு வச்சா நம்ம எப்படி டிராவல் பண்றது?” வினயன் அதிமுக்கிய கேள்வியைக் கேட்க, மௌனி முறைத்தாள்.
ஜனனியும், “அதான் நம்ம வர்ற வழில நம்பர் பிளேட்ல இருந்து கலர் வரை எல்லாமே மாத்தியாச்சே மௌனி அப்பறம் ஏன்?” என்றதும்,
“உடனே இல்லைன்னாலும் இதை வச்சு பாலோ பண்ணிட்டு வர சான்ஸ் இருக்கு. நான் பெங்களூர் வந்ததை கண்டுபிடிக்கிறது கஷ்டம் இல்லல…” என்றாள் யோசனையாக.
மூவரும் உண்டு விட்டு காரை ஒரு மறைவான பகுதியில் நிறுத்தி விட்டு, பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தனர் கையில் பையுடன்.
“என்னடி நடுத்தெருவுல நிக்கிற மாதிரியே ஒரு ஃபீலா இருக்கு” ஜனனி மிரட்சியாகக் கேட்க,
“மாதிரிலாம் இல்ல… நடுத்தெருவுல தான் நிக்கிறோம்… நம்ம பழக்க வழக்கம் அப்டி” என மௌனியை முறைத்தான் வினயன்.
“இது நீங்களா தேடிக்கிட்ட விதி. ஒருவழி பாதை தமையா. திரும்பி போனா போறது உயிர் மட்டும் தான்” என்று ஆழ்ந்த குரலில் தலைவா பட வசனத்தைக் கூறியவளை கொலைவெறியுடன் நோக்கினான்.
“உயிர் போனா போகட்டும் தங்கையே. அதுக்கு முதல்ல நம்ம ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு ரெஸ்ட் எடுக்கலாமா?”
“ஏன்டா… சிசிடிவி வச்சு ஹோட்டலுக்கு போனா கண்டுபிடிச்சுடுவானுங்கன்னு தான் நானே ரோட்டுல நின்னு ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டேன். இதுல இவருக்கு ரூம் போடணுமாம். நம்ம இன்டெர்வியூ போறோம்ல. அங்க வேலை கிடைச்சுட்டா, என் கியூட் பாய் திங்க தங்கலாம் இடம் தருவான் பார்த்துக்கலாம்…” என தோள் குலுக்கினாள்.
“இரு இரு ‘நம்ம’ இன்டெர்வியூ போறோமா? வாட் டூ யூ மீன்…”
“ஐ மீன்… இப்ப நம்ம ஆட்டோ பிடிக்க போறோம்” என ஒரு ஆட்டோவை நிறுத்த, “வாட்? ஆட்டோ? மீ?” வினயன் விழி தெறிக்க நின்றான்.
“யூ மட்டும் இல்லடா தமையா. வீ… நம்ம எல்லாரும் சேர்ந்து தான் ஆட்டோல போக போறோம்…” எனப் போலி புன்னகை புரிந்து கிண்டல் செய்தாள்.
ஜனனியோ, “இதுல போனா தலை சுத்தி வாமிட் வரும் மௌனி. நம்ம வேணும்னா ஒன்னு பண்ணலாமா? மறைச்சு வச்ச காரை எடுத்துட்டு இன்டெர்வியூ போய்டலாம். அப்பறம் கொண்டு வந்து இங்கயே மறைச்சுடலாம் ஓகே வா” என்று வேகமாக தலையாட்ட,
“அப்போ மறைச்சு வச்சுட்டு திரும்ப எதுல போவ?” எனப் பல்லைக்கடித்த மௌனியை பரிதாபமாகப் பார்த்தாள்.
“டேய்… உசுருக்கு பயந்து ஓடி வந்துருக்கேன். நீங்களே ஆதாரம் கிரியேட் பண்ணி என்னை போட்டுக் குடுத்துடாதீங்க. முதல்ல ஆட்டோல ஏறுங்க” என்றதும், வினயன் இரு விரல்களால் கண்ணின் மீது கை வைத்து நின்றான்.
“இப்ப என்னடா?” மௌனி காட்டமாகக் கேட்க,
“எவ்ளோ பெரிய சாம்ராஜ்யம் நம்மளோடது… இப்ப இப்படி ஆட்டோல” என வெகு வருத்தமாகப் பேசும்போதே, “சாம்ராஜ்யமா? ராம்ராஜ்ல கர்சீப் வாங்க கூட காசில்லடா. மூடிட்டு ஏறு…” என்றதில், ‘எவ்ளோ ட்ராமா பண்ணாலும் அசர மாட்டுறாளே…’ என நொந்து போனவன் அவளுடன் ஆட்டோவில் பயணித்தான்.
ஜனனிக்கு முதல் முறை ஆட்டோவில் செல்வதே கிலி பிடித்தது.
“மௌனி மௌனி” என ஹஸ்கி குரலில் அவள் காதை கடிக்க, “உனக்கு என்னடி வேணும்?” என்றாள் கடுப்பாக.
“நம்ம கார்ல போகும்போது எதிரிங்க பாலோ பண்ணி வந்தா ஸ்பீடா ஓட்டி எஸ்கேப் ஆக முடியும். ஆனா ஆட்டோல போகும்போது கண்டுபிடிச்சு வந்துட்டா, ஆட்டோ எப்பிடிடி ஸ்பீடா போகும்…” எனும்போதே தமக்கையின் விழிகளில் நெருப்பு வழிவதைக் கண்டவள்,
“நோ ஐசியூஸ், நம்ம இறங்கி ஓடிடலாம். ஸ்ஸீ பிலிம்ல கூட காரை விட ஹீரோ ஹீரோயின் வேகமா ஓடுவாங்களே…” எனச் சிரித்து வைக்க,
தலையில் கை வைத்து அமர்ந்தாள் மௌனி.
“ஹையோ” என புலம்ப ஆரம்பிக்கும்போதே, மறுபுறம் அமர்ந்திருந்த வினயன், “மௌனி எனக்கும் ஒரு டவுட்டு… ஆட்டோல டேஷுபோர்ட் இல்லையா? அதுல கால் நீட்டி உக்காந்தா தான் அந்த டிராவல் சாடிஸ்பேக்ஷன் கிடைக்கும்…” என்றதில் அவனைக் குனிய வைத்து கும்மினாள்.
“இவர் பெரிய டிராவல் வ்லாகர், பெங்களூருவை சுத்திப் பார்க்க வந்துருக்காரு. மவனே… உன் டேடி மேல இருக்குற கோபத்துக்கு உன்னை பொளந்துருவேன்” என அடித்ததில், ஜனனி கப்சிப் என ஆகி விட்டாள்.
“ஐயோ விடுடி…” வினயனின் சத்தத்துடன் ஆட்டோ கீறிச்சுட்டு ஒரு பங்களாவின் வெளிப்பக்க வாசலில் நின்றது.
ஆட்டோவில் இருந்து இறங்கியதும், வினயன் “வாவ்!” எனக் கூவினான்.
“எனக்குத் தெரியும் நீ எங்களை நடுத்தெருவுல விட மாட்டன்னு. ஹோட்டல் கேட்டேன். ஒரு பாலஸ்க்கே கூட்டிட்டு வந்துருக்கியே தங்கையே…”
“இந்த பாலஸ்ல தான் நமக்கு மூணு வாகண்ட் இருக்கு. நீங்க ஒழுங்கா கோ ஆபரேட் பண்ணுனா, ஒண்ணாவே என் கியூட் பாய் கூட ஒர்க் பண்ணலாம். இந்த பாலஸ்குள்ள வந்து நம்மளை யாருமே அட்டாக் பண்ண முடியாது” என அகன்ற விழிகளை அகட்டி திட்டம் கூறியவளை ‘பே’ வென பார்த்தான் வினயன்.
“பாலஸ்கு ராஜாவா கூட்டிட்டுப் போவன்னு பார்த்தா இப்படி வேலைக்காரனா கூட்டிட்டு வந்துருக்க. ஏதோ ஆபிஸ் ஒர்க்னா கூட பரவாயில்ல. இங்க என்ன வேலை?” எனக் குமுறினான்.
“எதுவும் ப்ரிப்பேர் கூட பண்ணலையே” ஜனனி வேறு படபடக்க, “நீங்க ப்ரிப்பேர் பண்ணலாம் தேவை இல்ல. ஆல்ரெடி தெரிஞ்ச குவெஸ்ட்டீன்ஸ் தான்” என்ற மௌனியை இடைமறித்த வினயன், “இங்க வேலைக்கு சேர்ந்தா நம்மளை பத்தி இவங்களுக்கு தெரிஞ்சுடும் தான? நம்மளை பத்தி தெரிஞ்சா, சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்குற அளவு வி.ஐ.பி வேற…” எனக் காலரைத் தூக்கி விட்டான்.
“அந்தக் கருமம் வெளில தெரியக்கூடாதுன்னு தான்… உங்க மெயிலுக்கு போலி ஆதார் கார்டும் பேன் கார்டும் அனுப்பி இருக்கேன். இந்த வேலைக்கு படிப்பு இருக்கணும்னு அவசியம் இல்ல. பேக் கிரவுண்ட் செக்கப் மட்டும் தான். அதுவும் நம்ம ஆளுங்களை வச்சு சிறப்பா செட் பண்ணிருக்கேன். நைட்டு நீங்களும் என் கூட வந்ததுனால உங்களுக்கு அவசரமா ஐடிஸ் ரெடி பண்ணியாச்சு” என்று வெகு தீவிரமாகப் பேசியவளை இருவரும் நொந்து பார்த்தனர்.
“படிப்பே தேவை இல்லன்னா என்ன தான்டி வேலை. பாத்திரம் கழுவனுமா?” எச்சிலை விழுங்கியபடி கேட்டாள் ஜனனி.
“உங்களுக்கு தெரிஞ்ச வேலை தான்னு சொல்லிட்டேன்ல. உங்க ஐடிஸ் மட்டும் கவனமா காட்டுங்க. உங்களை பத்தி விசாரிச்சு யார் போன் பண்ணாலும் நம்ம டீம் பதில் சொல்லிப்பாங்க.”
“அந்த டீம் மூலமாவே உன்னை பிடிச்சுட போறானுங்க மௌனி…” வினயனுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.
“டோன்ட் வொரி… இப்ப எனக்குன்னு மறைவா வேலை பார்க்குறவங்க என்னோட விசுவாசிங்க… கண்டிப்பா அவங்களால என்னை பத்தின விவரம் வராது. இந்த பாலஸ் தான் நம்ம கீ கார்ட். அடக்கமா போய் இதுக்குள்ள அடக்கமாகிட்டோம்னா, என்னைத் தேடிட்டு இருக்குற எதிரிங்க கொஞ்சம் அடங்குனதும், செய்ய வேண்டியதை சிறப்பா செஞ்சுடுவேன்.”
“சரி தான்… நீ எதையும் யோசிக்காம செய்ய மாட்டதான். ஆனா, யோசிச்சு பாரு. நம்மளே எத்தனை பேரை வேலைக்கு எடுத்துருக்கோம். இப்ப வேலை தேடி ஒரு இடத்துல நிக்கிறது… என்ன தான் எஸ்கேப் ஆகி வந்தாலும் நீ அங்கேயே நின்னு எல்லாரையும் போட்டு தள்ளிருக்கணும் மௌனி” என்ற வினயனிடம் அதிக வருத்தம் தெரிந்தது.
அவன் வேதனை புரிந்தாலும், “எதே போட்டுத் தள்ளணுமா? நான் என்ன டானாடா? நம்மளை பெத்த ராசாக்கள் செய்ற ரவுடிசமே போதுமே. நம்ம ஜெனெரேஷனும் அதுக்குள்ள போக வேணாம். முடிஞ்ச அளவு சுமூகமா முடிக்கலாம்.” என்றாள் பெருமூச்சுடன்.
ஜனனி தான், “எதிரிகளை சுமூகமா சரி பண்ணலாம். துரோகிங்களை?” கேட்கும்போதே கண்கள் குளம் கட்ட தயாராக இருந்தது அவளுக்கு.
“ஏய் லூசு… நீயும் இவனும் எனக்காக நிக்கிற வரை, எனக்கு எதிர்ல இருக்குற எல்லாருமே எதிரி தான். உங்களைத் தவிர நான் யாரையுமே நம்பாதப்ப, என்னை பெத்தவரை கூட நான் துரோகி லிஸ்ட்ல சேர்க்க விரும்பல” என அழுத்தம் திருத்தமாகக் கூறியதில் மற்ற இருவரிடமும் கனத்த மௌனம் பரவியது.
“என் ஆளை பார்க்க வந்துருக்கேன்டா. என்னை டயலாக் பேச வச்சு டயர்ட் ஆக்காதீங்க. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்… இப்ப இருந்து நீ எனக்கு அண்ணன் கிடையாது. நீ எனக்கு தங்கச்சி கிடையாது. தனி தனியா பெர்பார்ம் பண்ணனும் ஓகேவா?” என்றதில், “என்னமோ பண்ணித் தொலை!” எனத் தலையில் அடித்து விட்டு உள்ளே சென்றான் வினயன்.
ஜனனியோ, “மௌனி… வேலை செய்யும்போது ஏசி இருக்கும் தான?” எனக் கிசுகிசுப்பாகக் கேட்க,
“பாத்ரூம் கூட ஏசி தானாம்” என முறைத்ததில், “அப்ப சரி!” என உள்ளே சென்றவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்தபடி அவளும் உள்ளே சென்றாள்.
பல அரண்மனைகளை பார்த்தவள் தான். ஆகினும் தன்முன்னே வீற்றிருந்த நவீன அரண்மனையின் வெளிப்புற வேலைப்பாடுகள் ரசனையைக் கொடுத்தது.
வெளியில் செக்கியூரிட்டியே பத்து பேர் இருந்தனர். ஏற்கனவே நேர்முகத்தேர்விற்கு பலர் வந்திருந்தனர். அனைவரும் ஆண்கள். மசில்ஸ் தெரியும்படி சட்டை அணிந்திருந்த அனைவருமே ஒரு வகையில் பயமுறுத்தினர்.
“என்னடா இன்டர்வியூ வந்த யாருக்கும் ட்ரெஸிங் சென்ஸே இல்ல…” ஜனனி வினயன் காதைக் கடிக்க,
“அதான… இன்டெர்வியூக்கு வந்துருக்கானுங்களா இல்ல… அடியாளா வந்துருக்கானுங்களா?” என்று முடிக்கும்போதே வினயனுக்கு எதுவோ புரிவது போல இருக்க, ஜனனியைத் திகைத்துப் பார்த்தான்.
அவளும் புரிந்து அதிர்ந்து நிற்க, இருவரும் ஒருசேர திரும்பி மௌனி ஆதிராவைப் பார்த்தனர்.
அவளோ இவர்களை கண்டுகொள்ளாது தன்னை ஒரு மார்க்கமாகப் பார்த்த செக்கியூரிட்டியிடம் தனது ஐடி கார்டுகளை காட்டினாள்.
“என்னமா இந்த வேலைக்கு பொண்ணுங்க வந்துருக்கீங்க?” ஜனனி மீதும் செக்கியூரிட்டிகளின் உறுத்தல் பார்வை விழுக,
“பெர்சனல் செகரட்டரிக்கு, சண்டை செய்ய தெரிஞ்ச ஆள் வேணும்னு தான கேட்டீங்க? பசங்க தான் வேணும்னு கேட்கலையே அங்கிள்…: என்றவளின் அழைப்பைக் கண்டு திருதிருவென விழித்த செக்கியூரிட்டி மூவரின் அடிப்படை சோதனைகளை முடித்து உள்ளே அனுப்பினார்.
அவர்களும் நேர்முகத் தேர்விற்கு வந்திருந்த ஆள்களுடன் கலந்து கொள்ள, மூவரையும் விசித்திரமாக பார்த்தனர் அனைவரும்.
“உனக்கு நான் என்னடி பாவம் பண்ணேன்… இப்படி வயலன்ஸ் வேணாம் வயலன்ஸ் வேணாம்னு சொல்லிட்டு இப்படி அடியாளா நிறுத்தி இருக்கியேடி” தன்னருகில் நின்றிருந்த மௌனி ஆதிராவிடம் காந்தினான் வினயன்.
“நீங்க டெசிக்னேஷனை தப்பா புருஞ்சுக்கிட்டீங்க மிஸ்டர் வினயன்…” என வெளியில் சிரித்தவாறு பேசியவள்,
“அடியாள் இல்ல. தற்காப்பு கலைகள் தெரிந்த பெர்சனல் செக்கரட்டரி! அதான் ஜாப். 24 ஹவர்ஸும் நம்ம வேலைல அலர்ட்டா இருக்கணும். பாலஸ் விட்டா ஆபிஸ் ஆபிஸ் விட்டா பாலஸ்னு நம்ம கியூட் பாய் எங்க எல்லாம் போறாரோ அங்க எல்லாம் நம்மளும் போகணும். இதுல அவரை யாரும் அட்டாக் பண்ண வந்தா, நம்ம நம்மளோட திறமையைக் காட்டணும். அவ்ளோதான்” என எளிமையாகக் கூறியவளை ஜனனி பார்வையாலேயே எரித்தாள்.
“இதை ஏன்டி அப்பவே சொல்லல…”
“சொன்னா நீங்க ஓடிடுவீங்களே மிஸ் ஜனனி” என தனது கதாபாத்திரத்தை மெயின்டெய்ன் செய்தவளை முறைக்கவும் முடியாமல் இங்கிருந்து வெளியில் போகவும் முடியாமல் தவித்து நின்றது இருவரும் தான்.
“உன் ஆளு என்ன அவ்ளோ வீக்கா அவனுக்கு மூணு பாடிகார்ட் ஐ மீன் மூணு செக்கரட்டரி வேணுமாக்கும்” என நொடித்ததில்,
“அவன் அழகை பாதுகாக்கவே அஞ்சாறு செக்கரட்டரி வேணுமாக்கும்…” அவனைப் போலவே நொடிக்கும் போதே சந்திரசேகர் அங்கு வந்தார்.
அவரும் மௌனி ஆதிராவையும் ஜனனியையும் விசித்திரமாகப் பார்த்துவிட்டு, வேலையைப் பற்றி விளக்கினார்.
எல்லாம் மௌனி கூறியது தான். ஆனால், மூன்று முதலாளிக்கும் ஒவ்வொரு செக்கரட்டரி என மூன்று பேரைத் தேர்வு செய்ய வேண்டி இருக்கும் என்றதில், மௌனி ஆதிரா விழித்தாள்.
“அய்யயோ… என்னடா இந்தாளு டிவிஸ்ட் வைக்கிறாரு. நம்ம டீமை பத்தி இப்ப தான் பெருமையா பேசுனேன். ஒழுங்கா விசாரிக்காம என்னையும் கோர்த்து விட்டுட்டானுங்கடாவ்” எனக் கதறும்போதே, ஜனனியும் வினயனும் சிரிப்பை அடக்கினர்.
‘கொய்யால எங்களையா மாட்டி விட்ட…’ என்ற மகிழ்வு அவர்களுக்கு.
அர்னவ் தேவும், ருஹானா ஜியாவும் அதே அரண்மனையில் ஒரு அறையில் எரிச்சலுடன் அமர்ந்திருந்தனர்.
“நமக்கு எதுக்கு பெர்சனல் செக்கரட்டரி. அதுவும் 24 மணி நேரமும் கூடவே இருக்கணுமாம். புல்ஷிட். இவன் ஒழுங்கா எதிரிகளை ஹேண்டில் பண்ணிருந்தா, நமக்கு எதுக்கு இந்த வீண்வேலை? இந்த டாட் தான் எந்தக் கேள்வியும் கேட்க கூடாதுன்னு முட்டுக்கட்டைப் போட்டுட்டாரு ச்சே!” அர்னவ் குமுறினான்.
“ஐ நீட் பிரைவசி ப்ரோ. எப்ப பாரு என் கூட ஆள் இருக்குறதுலாம் எனக்கு சுத்தமா செட் ஆகாது. அண்ட் மோர் ஓவர், எனக்கும் கராத்தே பைட்டிங் எல்லாம் தெரியும். வர்றவனை நானே அடிச்சு போட்டுடுவேன். நீ கன் ஷாட்ல எக்ஸ்பெர்ட். இதெல்லாம் ரொம்ப சில்லியா இருக்கு. உன் ஸ்டெப் பிரதர்க்கு ஒண்ணுமே தெரியாதா அப்போ” என்ற ருஹானா ஜியாவின் இதழ்கள் ஏளனமாய் வளைந்தது.
“அவனை இன்னொரு தடவை ஸ்டெப் பிரதர்னு சொல்லாத ருஹா. இரிடேட் ஆகுது” அவன் எரிச்சலுற,
“ஓகே ஓகே ஈஸி ப்ரோ… அவனை எப்ப்டியாச்சு இங்க இருந்து துரத்திடலாம். டன்” எனக் கட்டை விரலைக் காட்டியதில் அர்னவ் சோர்வுடன் சிரித்தான்.
“டன்! பட் சீரியஸ்லி எந்த பிரைவேட் பாடிகார்டும் வேணாம்னு கத்தனும் போல இருக்கு சிஸ்ஸி. ஆல்ரெடி இருக்குற பாடிகார்ட்ஸ் எல்லாம் பத்தாதா?” அவனது சிஸ்ஸி என்ற அழைப்பே அவளுக்கு உணர்த்தியது.
மனதளவில் அதிகமாக போராடுகிறான் என்று!
அவன் அருகில் அமர்ந்து கையைப் பிடித்தவள், “டோன்ட் வொரி ப்ரோ. நம்ம போய் ஆட்டத்தை கலைச்சு விட்டுடலாமா?” எனக் கேட்டாள் குறும்பு மீள.
“எப்படி?” அர்னவ் புரியாது பார்த்ததில், “ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்… பர்ஸ்ட் நம்ம கேண்டிடேட்ஸ பார்க்கலாம்…” என சிசிடிவியில் ஆராய்ந்தாள்.
“என்னடா இந்த ஜாப்கு பொண்ணுங்க எல்லாம் வந்துருக்காங்க. அவ்ளோ இன்டரஸ்டிங் ஜாபா என்ன?” ருஹானா இதழ் மடித்து சிரித்தாள்.
அதில் சுவாரஸ்யமின்றி அர்னவின் பார்வை ஜனனியின் மீது விழுந்தது.
நேர்முகத்தேர்விற்கு வந்தவள், காற்று பற்றவில்லை என செக்கியூரிட்டியிடம் பேசி ஏசியை அதிகம் வைப்பதிலும், அவளது கட்ஷூவை சரி செய்வதிலும் கவனமாக இருந்தாள்.
அவ்வப்பொழுது அவளது சுருண்ட முடியை அவிழ்த்து விடுவதும், பின் மீண்டும் போனிடெயிலில் அடக்குவதுமாக இருந்தவள், அருகில் இருந்த வினயனிடம் குசுகுசுவென பேசுவதுமாக இருந்தாள்.
மௌனி எச்சரித்ததற்கு இணங்க, அதிக இணக்கமின்றி அப்போது தான் பார்த்துப் பேசிக் கொள்பவர்கள் போல முக பாவனைகளை மட்டும் ஒதுக்கத்துடன் காட்டிக் கொண்டனர். மற்றபடி அவர்களுக்குள் அடித்துக் கொள்ளும் லூட்டி மற்றவர்கள் அறிய வாய்ப்பில்லை.
“யாரு சிஸ்ஸி இந்த நூடில்ஸ் மண்ட. இவள் முடியை அடக்குறதே அவளுக்கு பெரிய டாஸ்கா இருக்கும்போல. இதுல நம்மள அட்டாக் பண்ண வர்ற எதிரியை அடக்க போட்டிக்கு வந்துருக்கா” என நக்கலாகச் சிரிக்க,
ருஹானாவோ “அவளை விடு ப்ரோ. அவள் பக்கத்துல ஒருத்தன் இருக்கான் பாரேன். ஊசிக்கு கம்பளி சட்டை போட்டவன் மாதிரி. அடிச்சாலே கீழ விழுந்து உடைஞ்சுடுவான். அப்படி ஒரு வீக் பாடியை வச்சுட்டு இவ்ளோ ஜிம் பாடிஸ்கு மத்தியில எப்படி இவன் இவ்ளோ கான்பிடெண்டா நிக்கிறான்…” என வாயைப் பொத்தி நகைத்தாள்.
“ஹா ஹா… திங்க் அபவுட் இட் ருஹா. அவன் தான் உனக்கு பெர்சனல் செகரெட்டியா வரணுமாம்…” எனக் கிண்டல் செய்ய,
“டேய் ப்ரோ… அவன் எனக்கு பாடிகார்டா இருக்க மாட்டான். அவனுக்கு தான் நான் பாடிகார்டா இருக்கணும்” என நாக்கைத் துருக்கியதில் சத்தமாக சிரித்தான் அர்னவ்.
பின், “அந்த நூடுல்ஸ் மண்ட உனக்கு வரணும்னு நான் பிரே பண்ணிக்கிறேன் ப்ரோ…” என வெகு தீவிரமாக கூறியதில்,
“எதுக்கு நான் போனிடெயில் போட்டு விடவா? அதுக்கே அவளுக்கு நேரம் போய்டும். பாரேன் இப்ப வரை பத்து தடவை அதை பண்ணிட்டா…” என்றவனை நக்கலாகப் பார்த்து,
“அப்ப இவ்ளோ நேரம் நீ எண்ணிருக்க… கேடி!” என அவன் கன்னத்தில் குத்தினாள்.
“அது பாய்ஸ் நேச்சர் சிஸ்ஸி… பொண்ணுன்னாலே பார்த்து படிக்க ஆரம்பிச்சுடுவோம்” எனக் கண் சிமிட்டியதில்,
“அப்போ இன்னொரு பொண்ணை கவனிக்கிறது…” என நக்கலடித்தாள்.
“அவளை எங்க கவனிக்க. இவள் தான் நூடில்ஸ் மண்டையை வச்சு மறைச்சுடுறாளே” என்றதில் அவளும் இணைந்து நகைத்தாள்.
“சரி வா… இவங்களை வச்சு இன்னைக்கு ஃபன் பண்ணலாம்” என அவனை இழுத்துக்கொண்டு கீழே சென்றாள்.
இங்கோ மௌனி தான் தீவிர சிந்தனையில் இருந்தாள்.
சித்தாந்தன் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்கு ஒரே சேர்மன் அதுவும் சூர்யா சித்தாந்தன் தான். மீதி ரெண்டு பேர் யாருன்னு தெரியலையே! என தனக்குள் யோசிக்கும்போதே அவளது விழிகள் அரண்மனைக்குள் துழாவியது.
‘என்ன இந்த சேர்மன்… கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்காரு. இன்டெர்வியூ எடுக்கும்போது இங்க வராம எதை சிரைச்சுட்டு இருக்காராம்…’ எனக் கடுகடுக்க, அவள் சொன்னது போன்றே குளியலறைக் கண்ணாடி முன் நின்று, தனது தாடியை ட்ரிம் செய்து கொண்டிருந்தான் சூர்ய சித்தாந்தன்.
சிசிடிவி வழியே வந்திருந்த கேண்டிடேட்களை கவனித்துக் கொண்டிருந்தவன் இரு பெண்களும் வந்திருப்பதை சிறு புருவ உயர்த்தலுடன் பார்த்தான்.
அதிலும் ஒருவளின் தோரணையே வித்தியாசமாக இருந்தது.
வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற பதற்றம் இல்லை. கண்களில் ஒரு அசட்டுத் துணிச்சல். சந்திரசேகர் தன்னை சி. ஈ. ஓ என அறிமுகம் செய்தும் அவளிடம் கருணைக்கு கூட மரியாதையோ பயமோ பணிவோ இல்லை.
நிமிர்வாய் நின்றிருந்தாள். என்னவோ அந்த நேர்முகத்தேர்வையே அவள் தான் நடத்தப்போவது போலொரு கம்பீரம்! சாதாரணமாய் வந்துவிடுவதில்லை அந்த அதிகாரத் தோரணை.
அருகில் நின்றிருந்த இருவரிடம் மட்டும் அவ்வப்பொழுது அவள் பேசிக்கொள்வதை கவனித்தான்.
ஒல்லியாக ஒருவனும், சுருட்டை முடியுடன் ஒரு பெண்ணுமாக இருவருமே பூங்காவில் பூக்கள் பறிக்க வருவது போல சாவகாசமாக நின்றிருந்தனர்.
தாடியை ட்ரிம் செய்யும் சில நொடிகளிலேயே அனைவரையும் உள்வாங்கி விட்டான். அதிகம் உள்வாங்கி நினைவில் நின்றது மௌனி தான்.
நினைவில் நின்றவள், நிழலாக நிற்பாளா?
ரசித்திட வருவான் (ள்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
+1

