
நட்சத்திரம் 3
அவளின் முகத்தில் தெரிந்த அந்தப் படபடப்பு அதை ரசித்தபடி சுழல் நாற்காலியில் அமர்திருந்த பிரகதீரன்.
“சொல்லுங்க ஆர்ஜே மகிழினி, கனவில் வந்த கணவனே” இது தான் நீங்க அடுத்து பேச வேண்டிய டாபிக்” எனச் சொன்னவனின் விழிகளில் மேசை மேல் நடுங்கி கொண்டிருந்த கைகளைப் பார்த்து இவன் கரம் கொண்டு அவள் கைப்பற்றிய நொடியில் பதற்றம் விலக அவளின் கருவிழிகள் இவனின் விழிகளை ஆழந்து நோக்க அவள் கண் முன் வந்து சென்றது நீல நிற நயணங்கள் கொண்ட பெண்ணின் முகம்.
ஒரு நிமிட மாயஜாலம் நிகழ்த்தியவனின் விழிகளில் தொலைந்து போனவள் மீண்டு வர முயற்சி செய்ய அவனின் காந்த பார்வையில் ஈர்க்கபட்டு இருவரின் விழிகளின் நடுவில் நடந்த மாயஜாலம் என்னவோ ஆனால் எந்த ஆணின் பார்வையிலும் இப்படி ஈர்க்க பட்டதில்லை மகிழினி அவன் கைதட்டலில் நினைவு கலைந்தவள்,
“சூப்பரா சொன்னீங்க மகிழினி, உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதில் எதிர்பார்க்கல அழகாவும் அதே சமயம் கவிதையாவும் சொல்லிட்டிங்க அண்ட் நீங்க செலக்ட் ஆகிட்டீங்க இனி ஒன் மன்த் ட்ரெயினிங் ப்ரீயட் உங்க் பேட்ச் வெள்ளிக்கிழமை ஸ்டார்ட் ஆகுது, உங்க கூட அஞ்சு பேர் ட்ரெயினிங் வருவாங்க” என அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே,
“வெயிட் தீரன் நான் அந்த டாபிக் பேசினேனா..? இஸ் தெட் ட்ரு” என அவனைப் பார்தவளின் விழிகள் தான் தொலைத்த எதோ ஒன்றை அவன் விழிகளில் தேடிக்கொண்டிருந்தது.
“யா..! நீங்க அழகா திருமணப் பந்தத்தைப் பற்றியும் கனவில் வந்த கணவன் பத்தியும் சொன்னீங்க” அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை ஆனாலும் அதற்குமேல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
“ஒகே மஹி, வீ வில் சென்ட் தி இன்டிமேசன் த்ரு மெயில், உங்க அப்பாயிண்மெண்ட் ஆர்டர் ” என அவள் கையில் கொடுக்க,
அவளின் எண்ண ஓட்டம் இன்று மிகவும் வித்தியாசமாக இருந்தது அவளால் எப்படி அந்த விசயத்தை மட்டும் மறந்தாள், இது வரை அவள் தன்னிலை மறந்ததில்லையே இவன் மாயாஜாலம் நிகழ்த்தி விட்டானா? என யோசித்து யோசித்துக் குழம்பிப் போனவள்,
தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவளின் மனதிற்கு இப்பொழுது தேவை அமைதி, தேடி தன் பயணத்தைத் தொடங்கினாள் மகிழினி.
******
சென்னை மாநகரத்தின் கிழக்கு கடற்கரை சாலை வாகனங்கள் நெரிசல் குறைவான பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தவள் இடதுபுறம் திரும்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் அவளது வாகனம் செல்ல வலது புறம் இருந்த அந்தக் கோவிலுக்குள் நுழைந்தாள் இப்படி ஒரு அமைதியை தேடித்தான் அவள் இங்கு வந்தாள் பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தியவள் காலணியை வண்டியின் அருகே கழட்டிவிட்டு அங்கிருந்த குழாயில் தன் கை கால்களைக் கழுவியவள் ‘என் குழப்பத்துக்கு ஒரு தீர்வு என் கண்ணுக்கு காட்டுவன்னு நம்பி தான் வந்திருக்கேன் என்ன ஏமாத்திராத’ என நினைத்தபடி அங்கிருந்த கடையில் செவ்வந்தி பூச்சரங்களை வாங்கியவள் சிவப்பு நிற ரோஜக்களையும் வாங்கினாள்.
பிரகாரத்தில் இருந்த தெய்வங்களை வழிபட்டவள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு ரோஜாக்களை வைத்துவிட்டு ஆலய மணியை ஒலிக்கச் செய்தாள் அவள் ஒலிக்கச் செய்த நேரம் மறுபுறமிருந்த இன்னொரு ஆலய மணியை அவன் ஒலிக்கச் செய்தான் அந்த அவன் பிரகதீரன்.
அவனைப் பாரத்தவளின் எண்ண ஓட்டங்கள் மறுபடியும் அவள் கண்ட கனவிற்குச் சென்று விடக் கையில் வைத்திருந்த செவ்வந்தி சரங்களுடன் மயங்கி சரிந்தாள் மகிழினி.
“ஹே மஹி” எனக் குரல் கொடுத்தபடி அவளைத் தாங்கி பிடித்தவன் அவளைத் தூக்க அவன் நெற்றியில் இருந்த குங்குமம் பெண்ணவளின் நெற்றி வகிட்டில் சங்கமிக்க, மயக்கத்திலிருந்தவளை கைகளில் ஏந்திய படி பிரகாரத்தைச் சுற்றி வந்து தியான மண்டபத்தை நோக்கி நடந்தவன் அங்கிருந்த குருக்களைப் பார்த்து “மயங்கிட்டாங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க” எனக் கேட்டான்.
“இந்தாங்க தம்பி சாமிக்கு பூஜை செய்த பால் இத கொடுங்க” என அந்தக் குருக்கள் சொல்ல,
அதை வாங்கி உடனே அவள் முகத்தில் தெளிக்க, அவளின் கருவிழிகளின் அசைவை பார்த்து நிம்மதி அடைந்தவன், மெல்ல விழி திறந்து பார்த்துவள் பட்டென எழந்து நின்றாள்.
அவனிடம் எதுவும் பேசாமல் செவ்வந்தி பூச்சரங்களைக் கொடுத்து “சாமி பேர்க்கு அர்ச்சனை” எனச் சொல்லி கொடுக்கக் குருக்கள் ஆராத்தி காட்டி பின் தீர்த்ததைக் கொடுக்க அவளருகே நின்றிருந்த பிரகதீரனும் வாங்கிப் பருகினான்.
சாமியின் கழுத்தில் இருந்த பெரிய மாலையை எடுத்து வந்து இருவர் கழுத்திலும் ஒன்றாகப் போட்டு விட்டார் குருக்கள்.
அவளால் அதைத் தடுக்கவும் முடியவில்லை பிரகதீரன் மேல் கோபம் மட்டுமே! இவை அனைத்தும் அவனின் ஏற்பாடாகத் தான் இருக்கும் எனத் தவறாக எண்ணிவிட்டாள், ஆனால் குருக்கள் அவள் நெற்றி குங்குமத்தையும் அவன் ஏந்தி வந்ததையும் பார்த்து கணவன் மனைவி என எண்ணிக்கொண்டார்.
விறு விறுவென வெளியே அவள் கோபத்தில் வர தீரனும் அவள் பின்னே சென்றான்.
“மஹி ஜஸ்ட் வெயிட், என்ன நடந்துச்சுன்னு எக்ஸ்ப்ளைன் பண்ணுறேன்“ என அவன் பின்னே செல்ல,
“இவ்ளோ சீப்பா நடந்துபீங்கன்னு எதிர்பார்க்கல, என்ன ஃபாலோ பண்ணி கோவில் வரைக்கும் வந்ததும் இல்லாம, பெரிய ட்ராமாவையே செட் பண்ணி வச்சிருக்கிங்க” என வார்த்தைகளை நெருப்பாய் கக்கினாள் மகிழினி,
அவள் பேசிய படி பார்க்கிங் ஏரியாவுக்கு வந்துவிட அவன் சொல்வதை இவள் கேட்கும் நிலையில் இல்லை என நினைத்தவன்,
தன் காரை எடுத்துக்கொண்டு அவள் முன் வந்து நின்றவன் அவளைப் பாராது கார் கண்ணாடியை மெல்ல மூடிவிட்டான், அந்தக் கண்ணாடியில் அவளின் பிம்பம் பிரதிபலிக்க அதன் பின்னே உணர்ந்தாள் அவள். நெற்றியில் குங்குமம் இருப்பதைத் தன் கைகளை நெற்றியில் வைத்து பார்த்தவளுக்குத் தன் மீதிருக்கும் தவறு புரிந்தது.
அவள் உணர்ந்து பேச வருவாள் என்பதை அறிந்தது போல் காரினுள் காத்திருந்தான் கனவுக் கள்வன்.
அதே போல் கார் கண்ணாடியை வந்து தட்டினாள் மகிழினி, அவன் கார் கண்ணாடியை இறக்கி விட்டு “வரீங்களா? பீச்க்கு ஒரு சின்ன வாக் போகலாம் “ என அவனழைக்க அவள் மேல் தவறு இருப்பதால் சம்மதித்தாள் மகிழினி.
காரை அங்கேயே நிறுத்திவிட்டு மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள் இருவரும் அந்தச் சாலையின் முடிவில் கடற்கரை இருப்பதை உணர்த்தும் விதமாய் அலையோசை காதுகளை எட்ட குளிர் காற்றும் இருவரையும் தீண்டியது.
கடற்கரை வரையில் இருவரும் மௌனம் சாதிக்க அலையோசையும் அங்கு வீசிய தென்றலும் மனதை லேசாக்க இருவரும் கடற்கரையில் அமர்ந்தார்கள்,
“ஐ யெம் சாரி தீரன்” என்றாள் அவள் கடலை பார்த்தபடி,
“மஹி, இதுல சாரி சொல்றதுக்கு எதுவும் இல்லை, அப்பறம் நான் உங்களைப் ஃபாலோ பண்ணிட்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த கோவிலுக்கு வருவேன் அது மாதிரி தான் இன்னைக்கும்” என அவனும் அலைகளைப் பார்த்தபடி பேசினாலும் அவன் மனம் காயபட்டிருப்பதை அவள் உணர்ந்தே தான் இருந்தாள்.
மகிழினியால் அவன் முகத்தைப் பார்த்து பேச முடியவில்லை தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் இவள் மனதையும் தாக்கி இருந்தது.
“இதுக்கு முன்ன என்னைப் பாத்திருங்கிங்களா தீரன்” என அவள் கேட்டாள் இந்த முறையும் அவன் முகத்தைப் பாரமேலே கேள்வியை அவன் திசையில் திருப்பியிருந்தவளின் கைகள் கடற்கரை மணலில் கோலம் போட,
“இல்லையே உங்கள இன்னக்கி தான் முதல் முறை பாக்குறேன், ஏன் கேக்குறிங்க” என்றவனின் குரலில் இருந்த பதட்டத்தைக் கவனிக்கத் தவறினாள் பெண்ணவள்,
ஆனால் அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவளும் இல்லை அடுத்தக் கேள்வியைத் தொடுத்தாள் நங்கை “ உங்களுக்குக் கனவுகள் வருமா அது மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா தீரன்” இந்த முறை அவன் முகத்தைப் பார்த்து அவன் முகப் பாவனைகளை ஆராய்ந்தபடி கேட்டாள்.
அவளின் கருவிழிகள் இவனைப் பார்த்திருப்பதை உணர்ந்தவன் “நம்பிக்கை இருக்கு, எங்க பாட்டி சொல்லுவாங்க ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் இருக்குன்னு சொல்லுவாங்க” என அவன் சொல்ல,
“நிஜமாவா என் கனவுக்கு உங்க பாட்டிகிட்ட அர்த்தம் கேட்டு சொல்ல முடியமா” என அவள் கேட்க,
“கண்டிப்பா கேட்டு சொல்றேன் ஆனா அதுக்குக் கொஞ்சம் செலவு ஆகுமே” என அவன் சொல்ல,
“எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை எனக்கு அந்தக் கனவுக்கு அர்த்தம் தெரிஞ்சே ஆகணும்” அவள் யோசிக்காமல் சொல்ல,
“அதுக்கு நீங்க எங்க வீட்டுக்கு வரணுமே ஒரு நாள் அம்மாவ கூட்டிட்டு வாங்களேன் பாட்டிய பார்த்து பேசி முடிச்சரலாம்” எனப் பிரகதீரன் சொல்ல
“எவ்ளோ செலவு ஆகும் சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்” என அவள் சொல்ல,
“அதுக்கு உங்க கன்னத்துல குழி விழணுமே அதான் அதுக்கான விலை” என அவன் சொல்ல
புரியாமல் விழித்தவளை பார்த்து “அட சிரிங்க இன்னும் சிரியஸாவே இருக்கிங்க” என அவன் சொல்ல கன்னத்தில் குழி விழ சிரித்தாள் அந்தக் குழியில் அவன் என்றோ விழுந்துவிட்டான்.
“சரி டைம் ஆகுது அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க தீரன், மறுபடியும் சாரி” என அவள் அவன் கைகளைக் குழுக்க வர இரண்டடி பின்னே நகர்ந்தான் அவன்.
“கையைத் தானே கொடுத்தேன் ஏன் பின்னாடி போறீங்க” என அவள் கேட்க,
“இல்ல பப்ளிக் ப்ளேஸ் அதான்” என அவன் மழுப்பினாலும்,
அவனின் செயல் தெளிந்தவளின் மனதை இன்னும் குழப்ப அவள் முக மாற்றத்தை கண்டு அவனே தானாய் முன் வந்து கைகொடுக்க அந்த நொடியில் அவன் விழியில் நுழைந்து தன்னை மறந்து போனாள் , மறுபடியும் மாயாஜாலம் செய்தவனின் விழிகளில் எவ்வளவு தூரம் பயணம் செய்தாளோ தெரியவில்லை.
“மஹி..! மஹி..! என்றவனின் குரலில் சிந்தை களைந்தவள் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையாய் நின்றருந்தாள் முகம் சோர்ந்து போயிருந்தது.
“மஹி! நான் ட்ராப் பண்ணவா” என அவளின் சோர்ந்த போயிருந்த முகத்தைப் பார்த்து கேட்க,
“இல்லை நானே பாத்துக்குறேன் “ எனச் சொல்லிவிட்டு கிளம்பினாள் ஆனால் அவனுக்கோ மனமில்லை அவளின் சோர்வுக்கு இவன் தானே காரணம் அந்தக் குற்ற உணர்வு பிரகதீரனின் மனதை வதைக்கதான் செய்தது.
அவள் நடந்து செல்ல அங்கிருந்த சிலர் இவளை வித்தியாசமாகப் பார்க்க அவர்களின் பார்வையின் அர்த்தம் புரியாதவளாய் சோர்ந்து நடந்து போனாள் மகிழினி.
“பீச் பீச் மாதிரியா இருக்கு, ப்ப்ளிக் ப்ளேஸ்னு கொஞ்சமாவது கூச்ச நாச்சம் இருக்கா” என ஒரு பெரியவர் சொல்ல கடற்கரையைத் திரும்பி பார்த்தவள் அங்கு இளம் ஜோடிகள் இதழ் முத்தம் பரிமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் கண்டும் காணாதது போல் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளைப் பின்தொடர்ந்து தீரன் செல்ல அவளின் பைக் வரை வந்தவள் சாவியை எடுத்துக் கையில் வைத்தபடி அங்கேயே மறுபடியும் மயங்கி சரிந்தாள்.
பதறிய தீரன் உடனே கைகளில் அவளைப் பூப்போல் ஏந்தி தன் காரின் பின்னிருக்கையில் அவளைப் படுக்க வைத்தவன், யாருக்கோ கால் செய்து அவளின் வண்டியை எடுத்து வர சொல்லி கட்டளையிட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு அவள் வீடு பயணமானான், தன்னவள் சோர்ந்து இருப்பதை உணர்ந்ததால் அவளை எழுப்ப தீரன் முயற்சிக்கவில்லை.
‘இனி எதையும் தாமதம் செய்யக்கூடாது தாமதம் செய்யச் செய்ய மஹிக்கு தான் ஆபத்து’ என மனதில் நினைத்துக்கொண்டான் பிரகதீரன்.
மகிழினியின் வீடு இருக்கும் தெருவை அவன் நெருங்கியபோது மயக்கம் தெளிந்தவள் “எனக்கு என்னாச்சு தீரன்..? நான் எதுக்காக உங்க கார்ல இருக்கேன், எங்க வீடு எப்படி உங்களுக்குத் தெரியும்” எனக் கேள்விகளை அவள் இடைவிடாமல் கேட்க,
“நீங்க இன்டர்வீயூ லெட்ஜர்ல உங்க அட்ரஸ் மென்ஷன் பண்ணிருந்திங்க மஹி” மழுப்பலாய் அவன் சொல்ல அதற்குள் அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும்,
வாசலிலே காத்திருந்தார் விஜயலட்சுமி அந்தி பொழுதை நெருங்கியிருந்தால் சற்று பயத்திலே இருந்தார்
இவர்கள் இருவரும் சேர்ந்து வருவதையும் மகிழினியின் நெற்றியிலிருந்த குங்குமத்தையும் பார்த்தவர்,
“வாங்க மாப்பிளை, வாங்க கொஞ்சம் பொறுங்க இதோ வந்தறேன்”என உள்ளே செல்ல,
“அம்மா நீ நினைக்குற மாதிரி ஒண்ணுமில்லை” என மகிழினி கத்த,
“அடி போடி, நீ சின்னப் புள்ள உனக்கு எதுவும் தெரியாது” என ஆராத்தி தட்டை எடுத்து வந்தார் விஜயலட்சுமி,
“அய்யோ விஜிமா, இவர் என்ன டிராப் பண்ண வந்திருக்காரு லூசா நீ” என மகிழினி மறுபடியும் கத்தினாள்.
“நீ தான் டி கிறுக்குதனமா பேசுற, நெத்தி நிறையக் குங்குமத்தை வச்சிட்டுக் கல்யாணம் ஆகலைனு சொல்ற” என முதல் மறை விஜயலட்சுமி கோபம் கொள்ள,
அவளின் உச்சந்தலை வகிட்டை தொட்டு பார்தவள் அய்யோ ‘இது இன்னும் போகலையா ‘ எனத் தனக்குள் கேள்வி எழுப்பியவள் வேகமாக அதை அழித்தாள்.
“அம்மா இது எதோ தெரியாம நடந்தது மா நம்பு,” என அவள் சொல்ல,
“ஆமா ஆண்ட்டி நீங்க நினைக்குற மாதிரி எதுவுமில்லை அது கோவில்ல தெரியாம பட்டது” எனப் பிரகதீரனும் சொல்ல, ‘மகள் பொய் சொல்ல மாட்டாள்’ என அறிந்தவர் உடனே சமாதானம் ஆகினார்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே அவளின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஒருவன் வந்து நின்றான் வண்டியின் சாவியைத் தீரனிடம் கொடுக்க மகிழினியிடம் கொடுக்கச் சென்றவனின் மனம் தடை செய்யச் சாவியை விஜயலட்சுமியிடம் கொடுத்தான்.
“சரிங்க ஆண்டி நான் கிளம்புறேன், மஹிய கொஞ்சம் பார்த்துக்கோங்க மயங்கி விழுந்துட்டாங்க” என அவன் சொல்ல,
“காபி குடிச்சுட்டு போ பா” என விஜயலட்சுமி கேட்க,
“இல்லை வேண்டாம்” என்றான்,
“ஓகே மஹி பாய்” எனச் சொல்லியபடி காருக்குள் சென்றான்.
அவன் கிளம்பிய பிறகு “என்னடி மகிழ் இவன் தான் அவனா” எனக் கேட்க,
“ஆமா மா அதான் போன்ல சொன்னேன்ல, எனக்கு டையர்ட்டா இருக்கு நான் தூங்க போறேன்” எனத் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.
காரில் சென்றுக்கொண்டிருந்தவனின் மனதில் நங்கை பல மாற்றங்களைச் செய்திருந்தாள்.
“சாரி மஹி சீக்கிரம் இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் “ என நினைத்தபடி அவன் கைகளைப் பார்த்தான். அவன் கரங்களில் பிம்பமாய், அவன் மனதில் பல காலம் குடிக்கொண்டவளாய் இதழ் வளைத்து சிரித்தாள் தீரனின் மஹி.
கனவில் கண்ட காதல்..!
கரம்பிடித்து நடக்கத் துடிக்கும்
ஆணவனின் மனம்..!
தன்னைத் தொலைத்து அவனுள்
தொலைந்து போகும் மாயத்தை
அறியாதவளாய் மகிழினி..!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கை தீண்டியது ஏன் உணர்வு தவறு கிறது..
அடுத்து வருகின்ற அத்தியாயங்களில் தெரிய வரும் கலைமா🙂 மிக்க நன்றி ❤️⭐️