விழியால் தொட்ட அழகே – 22

Loading

அத்தியாயம் – 22

 

இரு நாட்கள் கடந்த நிலையில் அன்று செந்தூரம் மகளின் புகுந்த வீட்டிற்கு வந்திருந்தார் மகனுடன், வருணேஷிற்கு நல்ல வரன் ஒன்று வந்திருப்பதாக கூறி செவ்வந்தி தர்மதுரையிடமும் ஆலோசனை கேட்டு நின்றார், அவருக்கு தாய் தந்தை சொந்த பந்தம் என்று எவரும் இல்லாதால் தன் மகள் மூலம் கிடைத்த உறவுகளை சொந்தமாய் நினைத்து அவர்களிடம் வந்து நின்றார், ரிஷியிடமும் விஷயத்தை பகிர்ந்து கொள்ள, நண்பனுக்கு கல்யாணம் என்றவுடனே அவனும் மிகுந்த சந்தோசம் கொண்டான், நண்பனை கலாய்த்து தள்ளினான், நித்யாவிற்கும் மகிழ்ச்சி தாளவில்லை, தனக்கு அண்ணி வர போகிறார், தன் அண்ணனிற்கு கல்யாணம் நடக்க போகிறது என சந்தோசத்தில் துள்ளி குதித்தாள்,…

நல்ல நாள் ஒன்றில் பெண் பார்க்கும் படலத்திற்க்காக சென்றனர் மொத்த குடும்பமும், வருணேஷின் வருங்கால மனைவியான திவ்யபாரதியை வருணேஷ் உட்பட அனைவருக்கும் மிகவும் பிடித்து போனது, நிறத்தில் குறைவாக இருந்தாலும் அவள் மனது எவ்வளவு வெள்ளை என காட்டிவிட்ட்டாள் பெண் பார்க்கும் தருணத்தின் போதே, மாப்பிளையையும் பெண்ணையும் தனியாக பேச அனுப்பி வைத்தனர், இருவருக்கும் சம்மதம் என்றவுடன் மேற்கொண்டு பேச வேண்டிய அனைத்தையும் பேசி முடித்தனர், தர்மதுரையும் செவ்வந்தியும் தான் முன் நின்று கல்யாண விஷயங்களை பேசி முடிவெடுத்தனர், செந்தூரத்திற்கு இதனால் அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது,…

மூன்று பெண்பிள்ளைகளுடன் பிறந்தவள் திவ்யஸ்ரீ, அவள் தான் மூத்தவள் என்பதால் அவளுக்கு பக்குவம் நிறையவே இருந்தது, ஒருவரிடம் எப்படி பேச வேண்டும் என்ன பேச கூடாது என்பதை அழகாகவே கற்றுவைத்துக் கொண்டிருந்தாள், அவளது சிரிப்பு மாறாத முகமே அவளின் நற்குணத்தை பறைசாற்றியது, கொஞ்ச நேரத்திலேயே நித்யா தன் வருங்கால அண்ணியுடன் ராசியாகிவிட்டாள், திவ்யாவிற்கும் தன் நாத்தனாரான நித்யாவை மிகவும் பிடித்து போனது, திவ்யா நித்யாவை விட மூன்று வயது பெரியவள் என்றாலும் இருவரும் தோழிகளை போல் சகஜமாக உரையாட ஆரம்பித்து விட்டனர், ரிஷியும் தன் பங்கிற்கு திவ்யாவுடன் சாதாரணமாக உரையாட ஆரம்பிக்க, கொஞ்ச நேரத்திலேயே அண்ணா என்று உரிமையாக அழைத்து அவன் மனதிலும் இடம்பிடித்து விட்டாள் திவ்யா,…

அவர்கள் குடும்பத்தின் குலதெய்வ கோயிலில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசி முடித்தனர், பத்து நாட்களில் திருமணம் என்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்து சுமை இல்லாமல் பார்த்துக் கொண்டனர், திருமணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பே நித்யா தாய் வீடு வந்து சேர்ந்து விட்டாள் தாய் மற்றும் தமையனின் அன்பு கட்டளையின் பெயரில்,….

ரிஷி தான் அவள் இல்லாத ஒவ்வொரு நாளையும் வெறுமையுடன் கடத்தினான், காலையில் எப்படியும் மனைவியை பார்க்க வந்துவிடுவான், ஆனாலும் தன் வீட்டில் இருப்பது போல் அவள் வீட்டில் அவளுடன் கூடி கழித்தெல்லாம் இருக்க முடியவில்லை, ஒரு முத்தம் கொடுப்பதற்குள்ளாகவே யாரும் வந்து விடுவார்களோ என பயந்து ஒளிந்து தான் கொடுக்க வேண்டிய நிலையாகி இருந்தது கல்யாண வீடு என்பதால் சுற்றி ஆட்கள் திரிந்து கொண்டே இருந்தமையால், நித்யாவிற்கு தான் கணவனின் நிலைமை சிரிப்பை உண்டாக்கும் பல சமயம், ஆனால் அவளாலும் எதுவும் செய்ய முடியாததால் கணவனின் நிலையை எண்ணி வருத்தப்படுவதோடு சேர்த்து ரசிக்கவும் செய்தாள்,…

அப்படி இப்படியென்று வருணேஷ் திவ்யபாரதியின் கல்யாண நாளும் வந்தது, அருமையான முகூர்த்த நேரத்தில் திவ்யாவின் கழுத்தில் மங்களநாணை பூட்டி அவளை தன் சரிபாதியாக்கி கொண்டான் வருண், திருமண முடிந்த மாத்திரத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர், நித்யாவின் தாய் வீடு சொந்த பந்தங்களால் சூழ்ந்து சிரிப்பு சத்தத்துடன் ஜொலித்தது, வருணேஷ் மற்றும் ரிஷியின் பள்ளி நண்பர்கள் இருவர் வந்திருந்தனர், ரிஷிக்கு அவர்களுடன் நேரம் கழிய, நித்யாவிற்கு தன் தோழி மூவருடன் சேர்ந்து தன் அண்ணியையும் உடன் சேர்த்துக் கொண்டு அவர்களுடன் நேரத்தை கழித்தாள்,…

தோழிகளுடன் சிரிப்பும் கும்மாளமுமாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்த மனைவியை நண்பர்களுடன் உரையாடி கொண்டிருந்தாலும் நொடிக்கு ஒருமுறை பார்வையால் தழுவி கொண்டிருந்தான் ரிஷி மித்ரன்,….

“ஏய் ஸ்ரீ இப்போ எப்படிடி இருக்க, சந்தோசமா தானே இருக்க” என்றாள் சவிதா மென்குரலில், திவ்யா முகூர்த்த புடவையை மாற்றுவதற்காக அவள் தோழிகளுடன் சென்று விட, தன் தோழியை தனியாக பிடித்துக் கொண்டனர் இவளின் தோழிகள்….

“எனக்கென்ன நான் சந்தோசமா தான் இருக்கேன்” என்றாள் நித்யா ‘எதற்காக இவள் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறாள்’ என குழப்பமாக அவளை ஏறிட்டு….

“நான் இப்படி கேட்கிறேன்னு தப்பா நினைக்காதடி, உன் கல்யாண நாள் அன்னைக்கு நாங்க உங்க கூட தான் இருந்தோம், உன் கழுத்துல தாலி ஏறுற வரைக்குமே இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதாவது ஐடியா கொடுங்கடினு எங்க கிட்ட கண்ணீர் விட்டு புலம்புன, அதனால தான் சவி அப்படி கேட்டா” என்றாள் வாசுகி, நித்யாவிற்கு இப்போது தான் புரிந்தது அவள் ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டாளென்று,…

“அப்போ நான் இருந்த நிலமை அப்படிடி, ஆனா இப்போ மாறிடுச்சி, நான் சந்தோசமா தான் இருக்கேன்” அவள் கூறியதும் மூன்று தோழிகளின் முகத்தில் ஒரு நிம்மதியை பார்க்க முடிந்தது, கல்யாண நாளின் போது அவள் புலம்பிய புலம்பல்களையும் அழுத அழுகையையும் அவர்களும் பார்க்க தானே செய்தார்கள், அவர்கள் பங்கிற்கு வருணேஷிடம் தோழிக்காக பேசி பார்த்து வாங்கியும் கட்டிக் கொண்டார்கள், அப்போது அந்நிலைமையில் பிடிக்காமல் கல்யாணம் செய்து கொண்டவள், தற்போது சந்தோஷமாக இருக்கிறாள் என்று அவள் வாய்மொழியாகவே கேட்ட பிறகு இத்தனை நாட்கள் மனதிலிருந்த நெருடலும் நீங்கி மனம் சந்தோசம் கொண்டது,….

“இவ்ளோ ஹேண்ட்சமா கதாநாயகன் மாதிரி புருஷன் கிடைச்சா யார் தான் ஏத்துக்க மாட்டா, என்ன இருந்தாலும் அண்ணா செம அழகு, அவர் சிரிச்சா எனக்கே பார்த்துட்டு இருக்கணும் போல இருக்கு, அதான் நம்ம ஸ்ரீ விழுந்துட்டா போல” கேலியாக தான் சொன்னாள் ரோஜா தங்களுக்கு சற்று தொலைவில் நின்று தோழர்மார்களிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த ரிஷியை பார்த்து,…

நித்யாவிற்கு உள்ளுக்குள் புகைந்தது, ‘இவ எப்படி என் புருஷனை பார்த்துட்டே இருக்கலாம்னு சொல்லலாம், அவர் அழகுன்னு எங்களுக்கு தெரியாதா? வந்துட்டா ஒருத்தர் பார்க்கிறதுக்கு அம்சமா இருந்தா போதும் உடனே வந்துடுவாளுங்க சைட் அடிக்க’ என உள்ளுக்குள் கருவியவள், அவள் திரும்பி ரிஷியை மீண்டும் மீண்டும் பார்ப்பதை கண்டு பொறுக்க முடியாமல்,…”ஏய் போதும் டி, அவர் என் புருஷன், ஹேண்ட்சமா இருக்காரு, பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்குனு என்கிட்டயே சொன்னதும் இல்லாம, என் முன்னாடியே அவரை சைட் வேற அடிக்கிறியா” என எகிறினாள் நித்யா,…

“ரொம்ப பண்ணாத ஸ்ரீ, நான் சும்மா தான் பார்த்தேன், அவரை அண்ணனா தான் பார்க்கிறேன், சும்மா சாதாரணமா உன் புருஷனை பார்த்ததுக்கே உனக்கு இம்புட்டு கோபம் வருதா, அப்படி பார்த்தா நீ இன்னொருத்தனை லவ் பண்ணுறேன்னு உன் புருஷன்கிட்டயே சொல்லிருக்கியே அது எவ்வளவு பெரிய தப்பு, அதனால அவர் மனசு எவ்வளவு வருத்தபட்டிருக்கும்” என்றவள்,… “என்ன அப்படி பார்க்கிற, வாசுகி என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா” என்றாள்,… திருமணமான மூன்றாவது நாள் வாசுகி நித்யாவிற்கு போன் செய்திருந்தாள், தோழி என்ன செய்கிறாள்?, நலமாக இருக்கிறாளா? கல்யாண நாளின் போது அப்படி அழுதுபுலம்பினாளே? என்ற வருத்தத்தில் உழன்று கொண்டிருந்தவள், நித்யாவிடம் போனில் அழைத்து பேசினாள்,…

அந்த சமயம் முழுக்க முழுக்க கருணாவுடன் போய்விட வேண்டும் என்ற முடிவில் இருந்த நித்யா, தோழி அக்கறையாக அழைத்து விசாரிக்கவும், நடந்ததை அனைத்தையும் கூறிவிட்டாள், வாசுகியால் அவளது முடிவை கொஞ்சமும் ஏற்க முடியவில்லை, தன் பக்கமிருந்து அவளுக்கு அறிவுரை கூறினாள், உனக்கு திருமணமாகிவிட்டது, இனி உன் கணவனுடன் தான் உன் வாழ்க்கை என புரிய வைத்தாள், ஆனால் அப்போது இருந்த மனநிலையில் நித்யா அவள் சொல்வதை காதில் வாங்கவில்லை, வாசுகி மற்ற இரு தோழிகளிடமும் இதை சொல்லி புலம்பியதால் அவர்களும் நித்யாவின் மீது செம கோபத்தில் இருந்தனர், தற்போது அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அவர்களுக்கும் நிம்மதியை கொடுத்திருந்தது, தோழி இவ்வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு விட்டாள் என்பது புரிந்தது, ரோஜாவும் நித்யாவின் மனதை நோகடிக்கணுமென்று இதை சொல்லி குத்தி காட்ட வில்லை, அவளுக்கு புரிய வேண்டும் என்று தான் சொல்லிக் காட்டினாள்,… நித்யாவிற்க்கும் புரிந்தது, லேசாக ஒருவள் தன் கணவனை பார்த்தததற்கே தனக்கு அவ்வளவு கோபம் வருகிறதே, தானோ நேரடியாகவே கணவனிடம் இன்னொருவனை காதலிக்கிறேன், அவனுடனே என்னை அனுப்பி விடுங்கள் என அன்று அவன் முன்பு நின்று கேட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிய வந்தது, அவன் மனம் எவ்வளவு வேதனை கொண்டிருக்கும் இதனால்? நினைக்க நினைக்க மனம் வலித்தது, அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் விழி அகலாமல், அவள் தன்னை பார்ப்பதை அவனும் கண்டுகொண்டவன்,.. ‘என்ன’ என்று பார்வையால் வினவ,… ‘ஒன்னுமில்ல’ என்பது போல் சின்னதாக தலையசைத்தாளே தவிர அவனை பார்ப்பதை நிறுத்தவில்லை,…

நித்யா ரிஷியை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை அங்கிருந்த சில பேர் கூட கண்டுகொண்டு, சிரித்துவிட்டு சென்றனர், ரிஷியின் நண்பர்கள் இருவரும் கூட கண்டுகொண்டு,… “மச்சான்,… உன் ஃவைப்க்கு உன் நியாபகம் வந்துடுச்சு போல, உன்னை எப்படி பார்க்குது பாரேன்” என்றான் ஒருவன் சிரித்துக் கொண்டு,…

“என்ன இருந்தாலும் கல்யாண வீட்ல இப்படி பச்சையா சைட் அடிக்கிற பொண்ணை இப்போ தான்டா நான் பார்க்கிறேன்” என்றான் இன்னொருவன்,….

“புருஷன் மேல அளவுகதிகமா லவ் இருந்தா சுற்றி உள்ள இடமெல்லாம் மறந்து தான் போகும், கண்ணுக்கு புருஷன் மட்டும் தான் தெரிவான்” முதலாமானவன் கூற, இங்கு ரிஷிக்கு தான் வெட்கம் வந்து விட்டது அவளது பார்வையும் நண்பர்களின் கேலி பேச்சுக்களையும் கேட்டு, இதில் அவர்களை கடந்து போய் வருபவர்கள் வேறு நித்யாவையும் ரிஷியையும் பார்த்து சிரித்து விட்டு செல்வது அவனுக்கு ஒரு மாதிரி இருக்க, அதற்கு மேலும் முடியாமல் விரைந்து விட்டான் மனைவியிடம்….

“நித்து என்ன ஆச்சு, நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்றான் மெல்லிய குரலில்,…

“மித்து நான்” என ஏதோ சொல்ல வந்தவள், தன் அருகில் கேட்ட சிரிப்பு சத்தத்தில் நிதானத்திற்கு வந்தவளாய்,…”மித்து நாம நம்ம வீட்டுக்கு போலாமா?” என்றாள் ஏக்கமான பார்வையில்…

“இப்போவா?” என விழிகளை விரித்தவன்,…. “நைட் போலாம், இப்போ போறது நல்லா இருக்காது நித்து, உன் அண்ணன்காரனுக்கு இது தெரிஞ்சா காதுல ரத்தம் வர அளவுக்கு திட்டுவான்” என்றான்,…

“நான்… நான் உங்க கிட்ட பேசணும்” அவள் ஒரு மாதிரி தவிப்புடன் கூற,… “இவ்வளவு தானே, சரி வா” என்றவன் அவளை அவளது அறைக்கே அழைத்துச் சென்றான், கதவை தான் பூட்ட இயலவில்லை, பல சாமான்களை வைத்து நிறைத்து வைத்திருந்தனர், அத்தனையையும் தள்ளி விட்டு கதவை சாத்தவே நிமிட நேரமாகும் என்பதால், பேச தானே போகிறோம் என்று அவளை கதவின் அருகில் அழைத்து வந்தான், அங்கு நின்றாள் வெளியே இருந்து பார்த்தாலும் தெரியாதல்லவா அதனால்,…

“சொல்லு நித்து, என்ன விஷயம், என்னை ஏன்டி அப்படி பார்த்த, எனக்கு எவ்வளவு ஷையா இருந்தது தெரியுமா” என அவன் கேட்டது தான் தாமதம்,… “மித்து” என்ற அழைப்புடன் அவனது முகமெங்கிலும் முத்தத்தை வழங்கினாள் வேகவேகமாக,…

ஏதோ பேச தான் போகிறாள் என்பதாக நினைத்து வந்தவன், அவள் இவ்வளவு வேகமாக முத்தங்களை தரவும் திணறி போய்விட்டான், அவன் ஏதோ பேச வர, அதற்கு கூட அவள் வாய்ப்பு தரவில்லை, அவனது இதழை சிறைபிடித்து ஆழமாக முத்தமிட்டாள், இத்தனை நாட்கள் கணவன் நடத்தைய முத்த பாடத்தை சரியாக கற்றுக் கொண்டு, உனக்கு நான் சளைத்தள் இல்லை என்பது போல மிகவும் ஆழமாக அவனது உயிரை வாய்வழியாக குடிக்கும் அளவிற்கு அவனையே மூச்சு வாங்க வைத்து விட்டாள், அவன் மனைவி அவளாகவே தரும் முதல் இதழ்முத்தம், அவன் ஹார்மோன்களை தூண்டி எழுப்ப, புடவை மறைக்க படாத அவளது இடையை அழுத்தமாக பற்றி அவள் தந்த இதழ்முத்தத்தை இதமாக ஆண்டு அனுபவித்தான்,….

ஓரிரு நிமிடங்களில் அவனை மூச்சடைக்க வைத்து விட்டு, அவளும் பலமாக மூச்சு வாங்க அவன் இதழ் விட்டு பிரிந்தவள் அவனது மார்பில் தஞ்சம் கொண்டு, “மித்து… நான்…. என்னை என்னை மன்னிச்சிடுங்க” என்று விசும்பினாள்,….

இவ்வளவு நேரம் இனிக்க இனிக்க முத்தத்தை தந்துவிட்டு இப்போது மன்னிப்பு வேறு கேட்டு விட்டு ஏன் அழுகிறாள் என்பது புரியாத ரிஷி, அவளது தாடையை பற்றி அவளது முகத்தை நிமிர்த்தி,… “எதுக்கு மன்னிப்பு” என்றான்,…

“உங்களை நான் நிறைய நிறைய கஷ்டப்படுத்திட்டேன் அதுக்கு தான்” என்றவள், மீண்டும் அவனது மார்பில் முகத்தை புதைத்து குலுங்கி அழுதாள்,….

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்