Loading

அத்தியாயம் 9

சாவகாசமாகக் காபி குடித்தபடி பேசிக் கொண்டிருந்த நிவேதனையும், கண்மணியையும் நெற்றிக் கண்ணால் எரித்த சிந்தாமணி, “ஒரு பச்சை மண்ணை விட்டுட்டு வந்துருக்கோம்ன்ற பொறுப்பு இருக்கா உங்களுக்கு?” என்றாள் பரிதாபமாக.

நிவேதன் அட்டகாசச் சிரிப்புடன், “நீ தான் ஏதோ திருவிழா பார்க்குற மாதிரி போய் உக்காந்துட்ட. சரி, சைனீஸ் டிராமா மாதிரி சீரியஸா பார்க்குற போலன்னு வந்துட்டோம்.” என்றதில் சிந்தாமணி முறைத்தாள்.

கதிரவனும் தாயைச் சமாதானம் செய்து விட்டு மாடியேறி வர, சிந்தாமணி அவன் முகத்தைக் கூடப் பார்த்தாளில்லை.

அதில் அவன் மனம் தான் வெகுவாய் துடித்துப் போனது. வேண்டுமென்றே அவளைப் பிரித்து வைக்க எண்ணியவனுக்கு, அவள் தன்னை ஏளனமாய் எண்ணுவது அத்தனை வலி கொடுக்குமென இப்போது தான் புரிகிறது.

“என்னடா, ஒரு வழியா சமாதானம் ஆகிடுச்சா உன் அம்மா!” நிவேதன் கேட்டதற்குக் கவனமின்றி ஏதோ ஒரு பதிலைக் கூறியவன், “கிளம்பலாமா?” எனக் கேட்டதும், நால்வருமே யாஷ் பிரஜிதனின் பங்களாவிற்குச் சென்றனர்.

அங்கோ, தன்னை அணைத்திருந்த மனையாளைத் தானும் இறுக்கி அணைத்திருந்த யாஷ் பிரஜிதன், “ஆர் யூ ஓகே மின்னல்…” எனக் கேட்க,

“ம்ம்” எனத் தலையாட்டியவள் மெல்ல விலகினாள்.

“யாஷ் ஒரு ஐடியா?” சட்டென நிமிர்ந்து கேட்டவளை என்னவெனப் பார்த்தான்.

“நிவேக்கும் ஃபைட் பண்ணவும், துப்பாக்கியால சுடவும் கத்துக் குடுத்துட்டா என்ன? உன்னை மாதிரி…”

“உன் தொடை நடுங்கி பிரதர், துப்பாக்கியைப் பார்த்தாலே தூர ஓடிடுவான்டி!” யாஷ் கிண்டலாய் சிரித்தான்.

“ம்ம்ஹும், கலாய்க்காத அரக்கா… முதல்ல எல்லாம் ஆபிஸ்க்கு வரணும்னா கூட தான் பயந்து ஓடுவான். இப்ப இன்ட்ரஸ்டா வர்றான்ல… அதே மாதிரி இதுவும் கத்துப்பான்.”

“ம்ம், பட் குட் ஐடியா தான். செல்ஃப் டிஃபன்ஸ், அவன் மட்டும் இல்ல… எல்லாருமே கத்துக்குறது பெஸ்ட். உங்க எல்லாருக்குமே இந்த ஐடியாவை ப்ராசஸ் பண்றேன்.” என்றதில் அவனை முறைத்தாள் நிதர்ஷனா.

“நான் எவனையாவது தப்பா சுட்டுக் கொலை கேஸ்ல உள்ள போகவா… ஆளை விடு சாமி!” என்று கையெடுத்துக் கும்பிட்டவளைக் கண்டு வாய் விட்டுச் சிரித்தான் அவன்.

அந்தச் சிரிப்பே கூறியது, தான் எண்ணியதை நிறைவேற்றப் போவதை.

“கெரகம்… நம்ம வாயும் சொம்மா கெடக்க மாட்டுது!” எனத் தலையில் அடித்துக் கொண்டவள், மறுநாள் மற்ற நால்வரின் முறைப்பையும் தாங்கியபடி துப்பாக்கி சுடும் இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.

“உனக்கு அறிவிருக்கா நிதா… உன் புருஷனாண்ட இன்னாத்துக்கு வாய விட்ட?” நிவேதன் பொங்கி விட,

“நீ தானடா ஒன் ஆஃப் தி சேர்மன் ஆகப்போற. அதான் ஒனக்குக் கத்துத் தரச் சொன்னேன்… என்னையும் இழுத்தாந்து வுடுவான்னு நான் கனவா கண்டேன், சரி சரி ஒன்னியும் பிரச்சினை இல்ல. த்தோ அந்தக் குறியப் பார்த்து ஒரே ஒருக்கா சுட்டுட்டா நம்மள வுட்டுடுவாங்க. கம் லெட்ஸ் டூ இட்!” என்று காற்றிலேயே வார்ம் அப் செய்து கொண்டவள், துப்பாக்கியில் குறி பார்த்துச் சுட அதுவோ குறியற்று எங்கோ சென்று விழுந்தது.

“இன்னாடா, குண்ட காணோம்?” என்று தலையைச் சொறிந்தவளைக் கொலை வெறியுடன் பார்த்திருந்த நால்வர் குழுவும் அவளை ஒன்றாய் தாக்க வர, அவள் தப்பித்து ஓடியே விட்டாள்.

தன்னவளின் குறும்பை எல்லாம் சிசிடிவியில் பார்த்திருந்த யாஷ் பிரஜிதனின் அதரங்களில் நிலை கொள்ளாப் புன்னகை பரவி இருந்தது.

“சேட்டை பிடிச்சவ…” தலையாட்டிக் கொஞ்சிக் கொண்டான்.

அலுவலக வேலையோடு, தற்போது தற்காப்புக் கலைகளும் சேர்ந்து கொண்டதில் நிவேதன் திணறிப் போனான்.

“பேசாமல் கடத்தி வச்ச எடத்துல கஞ்சாவைக் குடிச்சுட்டு உசுரு வாழ்ந்துருப்பேன். தங்கச்சி புருஷனுக்குச் சீதனமா, என்னைக் குடுத்து டார்ச்சர் பண்றானுங்களே!” என்று வயதான கிழவியின் தோரணையில் தரையில் அமர்ந்து புலம்பித் தள்ளுவான்.

கண்மணிக்குச் சிரிப்பை அடக்குவதே பெரும்பாடாக இருக்கும்.

“இன்னைக்கு நீங்க இன்னும் நாப்பது புஷ் அப்ஸ் எடுக்கணும் நிவே… எந்திரிங்க எந்திரிங்க…” என்று அவனை விரட்டிய கண்மணியை, “துரோகி” என்று போலியாய் முறைப்பான்.

கதிரவனோ அவனுக்கும் மேல். “ஏசி ரூம்ல பாலிசா வேல பார்க்கலாம்னு பார்த்தேன். என்ன, நாலு மணிக்கு எந்திரிச்சி ஜாக்கிங் போவச் சொல்றாங்க மச்சி…” என்று கண்ணீர் மழையைப் பொழிந்தான்.

நிதர்ஷனாவோ, யாஷ் ஆர்டர் செய்திருந்த சிக்கன் நக்கெட்ஸைக் கடித்தபடி, “ஆம்பளப் பசங்க அழப்படாதுடா… நாளைக்கே எங்களை யார்னா அட்டாக் பண்ணுனா, எங்களைக் காப்பாத்த ஆள் வேணாம்…” என அசட்டையாய் கூற,

கதிரவன், “அடியேய்! அப்போ நீயும், உன் புருசனும் எலைட் கம்பெனிக்கு சேர்மன் ரெடி பண்ணல. உங்களுக்கு பாடிகார்டா எங்களை ரெடி பண்ணிட்டு இருக்கீங்க அப்படித் தான?” எனப் பரிதாபமாகக் கேட்டான்.

“இதையே நீங்க இப்ப தான் கண்டு பிடிக்கிறீங்களா அண்ணா?” என்று கண்மணி வாரியதில் நிதர்ஷனா அவளுக்கு ஹைஃபை கொடுத்துக் கொண்டாள்.

சிந்தாமணி கதிரிடம் எதுவும் பேசவில்லை என்றாலும், தனது சைட் அடிக்கும் பணியை நிறுத்தியது போலத் தெரியவில்லை.

கேலி கிண்டலுடன் நாள்களும் அழகாகவே நகர்ந்தது. அவ்வப்பொழுது ஆதிசக்தியும் இளவேந்தனும் இவர்களைச் சந்தித்து விட்டுச் செல்வர்.

தன்மீது கோபமாக இருந்த இளவேந்தனைப் பேசிக் கரைத்துச் சமாதானம் செய்திருந்தார் ஆதிசக்தி.

———

அன்றும் பால் கிளாஸை எடுத்து வந்த யாஷ் பிரஜிதனிடம், “எனக்கு இன்னைக்குப் பால் வேணாம்.” என்றாள் நிதர்ஷனா.

“ஏன்?” அவன் புருவம் சுருக்கிப் பார்க்க,

“ம்ம்ம்ம்… இப்ப தான் நான் தெம்பாகிட்டேன்ல!” என நாக்கைத் துருத்தியதில், “பார்த்தா அப்படித் தெரியலையே மின்னல். நேத்து நைட்டு, ‘ஐயோ விட்டுடு’ன்னு யாரோ கத்துன மாதிரி இருந்துச்சே…” என்று நள்ளிரவின் கூடல் பொழுதுகளை நினைவு படுத்தியதில் தவித்துப் போனாள்.

“யோவ் அரக்கா…”

“ஃபர்ஸ்ட் மில்க்!” அவனோ தனது பிடியில் நிலையாக நிற்க, அவனை முறைத்தபடியே அதனைக் குடித்தவளின் இதழ்களைத் துடைத்து விட்டவன், “குட்… நான் ஒர்க்கவுட் முடிச்சுட்டு வரேன்.” என்று கண் சிமிட்டி நகர முற்பட்டான்.

அவனைப் பழிவாங்க எத்தனித்த நிதர்ஷனா, “எப்பப் பாரு உன் வெயிட்ட நான் தாங்க மாட்டேன்னு கலாய்க்கிறியே. இன்னைக்குப் பாப்போமா, நீ என் வெயிட்டைத் தாங்குறியானு…” என்று தலையாட்டிக் கேட்க, அவன் விழிகளில் கூடுதல் சுவாரஸ்யம்.

“ஐ ஆம் ரெடி ஆலம்பனா!” கிறக்கத்துடன் டிஷர்ட்டைக் கழற்றி எறிந்ததில் குழம்பியவள், “இன்னாயா பண்ற?” என்றாள்.

“உன் வெயிட்டை நான் தாங்குறதுக்கு என்னை ரெடி பண்ணிக்கிறேன்.” என்று கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முன்னே குனிந்ததில், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் ஒரு அபாயமணி அடித்ததில்,

“அதுக்கு ஏன் பக்கத்துல வர்ற… நான் நான்… நீ எக்சர்சைஸ் பண்றப்ப உன் மேல படுத்துக்குறேன். என்னைத் தூக்கிட்டு எக்ஸர்சைஸ் பண்ணுன்னு சொல்ல வந்தேன்.” என்று வேகமாய் உளறியதில், அவனுக்குச் சப்பென ஆனது.

“ஃப்பூ! அவ்ளோ தானா?”

“அவ்ளோ தானாவா? ஆமா நீ என்ன நெனச்ச?” சந்தேகமாய் அவள் கேட்டதில்,

“என்னன்னவோ நெனச்சேன். சொன்னா புரியாது. ஒர்கவுட் முடிச்சுட்டு டெமோ காட்டுறேன்.” என்றான் சில்மிஷமாய்.

அவள் குழம்பும் போதே அவளைக் கையில் அள்ளியவன், நேராய் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றான்.

“ஹய்ய, இப்படி எல்லாம் நீ ஈஸியா தூக்கிடுவ கலப்படக் கண்ணுக்காரா… நீ புஷ்- அப்ஸ் எடுக்கும்போது நான் உன்மேல படுத்துப்பேன். நீ 100 புஷ் அப்ஸ் எடுக்கணும்…” என்று கண்ணை உருட்ட,

“டீல்! என்ன பெட்?” என்றான் அவள் மூக்கோடு மூக்கை உரசி.

“பெட் என்ன வைக்கலாம்? ஹான்… இனி பால் குடுத்தா கேள்வி கேட்காம குடிப்பேன்.”

“இதெல்லாம் ஒரு பெட்டாடி. இன்னைக்கு நைட்டு எல்லாம் என் விஷ்!” என அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

வெட்கிச் சிவந்தவள், “எல்லா நாளும் உன் விஷ் தான அரக்கா…” அவளும் குழைந்தாள்.

“ம்ம், மத்த நாள்ல எல்லாம் நீ எங்க எங்க ‘நோ’ சொல்றியோ அங்க அங்க நான் ஸ்டாப் பண்ணிடுவேன் தானடி. இன்னைக்கு அந்த ‘நோ’ எல்லாத்துக்கும் ஒரு பிக் ‘நோ’. இந்த டீல் ஓகே வா மின்னல்!” என்றான் சூடான மூச்சு செவியறையில் மோத.

“ம்ம்!” அவளிடம் இருந்து வெறும் காற்றே வெளிவர, “குட்! லெட்ஸ் ஸ்டார்ட்” என்றதில் விழித்தவள் “என்ன?” எனக் கேட்டதில், மந்தகாசப் புன்னகை சிந்தியவன் “இப்போ ஒர்க் அவுட்டி…” என்றான்.

‘ஹையோ’ என வெட்கம் தாளாது சிணுங்கியவளைத் தனது முதுகில் கட்டிக் கொண்டு புஷ் அப்ஸைத் தொடங்கினான் அவன்.

“ஒன்னு, ரெண்டு… இருபத்தஞ்சு, அம்பது, எழுபத்தஞ்சு, எண்பத்து மூணு” என்று எண்ணும் போதே அவளுக்குக் கிலி பிடித்தது. இவன் நூறைத் தொட்டு விடுவானோ என்ற பயத்தில், மீண்டும் எழுபத்தைந்து என்று எண்ண,

அது புரிந்து இகழ்ச்சி நகை புரிந்தவன், “நோ ப்ராப்ளம், தப்பான கவுன்டிங்க்கும் சேர்ந்து வசூல் பண்ணிடுவேன்!” என்றான் வட்டிக்காரனின் தோரணையில்.

“இல்ல இல்ல எண்பத்து நாலு…” வேகமாய் சரி செய்து கொண்டவளோ,

“உன்னால முடியலைன்னா விட்டுடு யாஷ்!” என்று அக்கறையாய் கூற, “கவுண்ட் பண்ணுடி!” என்றவனோ திடமாய் தான் இருந்தான்.

நெற்றியில் இருந்து வியர்வைத் துளிகள் அவனை விட அவளுக்கு அதிகம் வழிந்தது.

நூறைத் தொட்டதும் முதுகில் இருந்தவள், அவனது வித்தையில் அவனுக்குக் கீழே வந்திருந்தாள்.

“நான் எப்ப இங்க வந்தேன்?” என்ற ரீதியில் திருதிருவென விழித்தவளின், இதழ்களைச் சிறைப் பிடித்தவன், மூச்சு வாங்கினான்.

அவளது துப்பட்டாவைக் கொண்டு அவளே அவனது வியர்வைத் துளிகளை ஒற்றி எடுக்க, அவனோ துப்பட்டாவைத் தனியாய் உருவி இருந்தான்.

“யாஷ் நோ…” என்றவளின் வார்த்தைகள் அவனின் ஒற்றை விரலில் அடக்கம் கொண்டது.

“நோ, இஸ் நோ டுடே மின்னல்!” வெற்றி நகை மின்ன உரைத்தவனைக் கண்டு திணறிப் போனாள்.

மெத்தையில் அரங்கேற வேண்டிய கூடல் அன்று உடற்பயிற்சிக் கூடத்திலேயே அவனது ஆசைப்படி நிகழ்ந்திருக்க, திணறலும் தவிப்பும் தாபமுமாக அவன் செய்த அத்தனைக் குறும்புகளையும் தனக்குள் அடக்கி அணு அணுவாய் ரசித்திருந்தாள் நிதர்ஷனா.

—–

நிகழ்காலம்…

“ஸ்ஸ்ஸ்… வாயைக் கடிச்சு வச்சுட்டான் இந்த அரக்கன்!” என்று தனது உதட்டைத் துடைத்துக் கொண்ட நிதர்ஷனா, “இது வேலைக்கு ஆவாது. முத்தம் குடுத்து, முத்தம் குடுத்து என்னைக் கரைச்சுச் சாப்பிட்டாலும் சாப்பிடுவான் அவன். எப்படியாச்சும் இங்க இருந்து தப்பிக்கணும்…” என்ற யோசனையில் மறுநாளும் வந்திருக்க, அன்று உண்மையிலேயே யாஷ் வெளியில் சென்றிருந்தான்.

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு,

காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்துத் தப்பித்தவள், அந்த ஆளில்லா சாலையைச் சுற்றி முற்றிப் பார்த்தாள்.

‘இது தான் சரியான நேரம், ரெடி ஜூட்!’ என்று குடுகுடுவென ஓட ஆரம்பித்தாள் நிதர்ஷனா.

அந்தக் கடற்கரைச் சாலையின் முடிவுக்கு வந்த பிறகு திரும்பிப் பார்த்தாள்.

கடல் நீலம் கண்ணை விட்டு மறைந்தது.

‘எப்படியோ அந்த அரக்கனாண்ட இருந்து தப்பிச்சாச்சு!’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் ஆட்டோ கிடைக்குமா என நோட்டம் விட வலது புறம் திரும்ப, அங்குத் தனது கார் கதவின் மீது சாய்ந்தபடி அலைபேசியை உபயோகித்துக் கொண்டிருந்தான் யாஷ் பிரஜிதன்.

“எலிசா!” பார்வையை அவள் புறம் திருப்பாமல் ஒரு சொடுக்கிட, கார் கதவு தானாய் திறந்தது.

எச்சிலை விழுங்கிய நிதர்ஷனா, “ஹி ஹி” எனச் சம்பந்தமின்றிச் சிரித்து வைத்தாள்.

“எதுக்கு அரக்கா காருலாம்… நான் ஜாகிங்ல வந்தேன்… ஒரே ரூம்குள்ள இருந்து கை காலெல்லாம் ஒரே வலி” என்று நடுச்சாலையில் கையைக் காலை ஆட்டி உடற்பயிற்சி செய்வது போலப் பாவனை செய்தவள், சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து அவனைப் போலவே புஷ் அப்ஸ் எடுக்க ஆரம்பித்தாள்.

யாஷ் பிரஜிதனோ, அவளை நோக்கி ஒற்றைப் புருவம் உயர்த்தி விட்டு சூரியனைக் கண் காட்ட, அவனது விழி மொழி புரிந்து தொலைந்ததில் அவளுக்குள் கடுப்பு வேறு.

“இந்த மிட் டே ‘ல எக்ஸர்சைஸ்?” என்பது போல நக்கலாய் ஏறிட்டான்.

“அது வந்து அரக்கா, உச்சி வெயில்ல ஜாக்கிங் போனா உச்சந்தலை சூடாகாதுன்னு என் குரு சத்குரு சொல்லியிருக்காரு…” என இளித்து வைத்தாள்.

“அப்போ, நான் புஷ் அப்ஸ் எடுக்கும் போது என்மேல ஏறிப் படுத்துக்குற மாதிரி நானும்…” என அவன் ஓரடி எடுத்து வைக்கப் புயல் வேகத்தில் எழுந்து நின்றவள்,

“யோவ்… சொம்மா உன் இஷ்டத்துக்கு உருட்டாத! நான் எப்போ உன்மேல படுத்தேன்… அதெல்லாம் இல்லையே.”

“இல்லையா? நான் புஷ் அப்ஸ் எடுக்கும்போது நீ என் மேல படுத்து என் கழுத்துல கிஸ் பண்ணிட்டே இருந்தியே…” அவன் யோசனையாய் கூறியதும், “நான்… நான் எப்ப கிஸ் பண்ணேன்? சும்மா தான படுத்திருந்தேன்…” என்று விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“அப்போ ஞாபகம் வந்துடுச்சோ?” தாடையைத் தடவியவனின் கன்னங்கள் அந்த வெப்பத்தின் பிடியில் சிவந்திருந்தது.

அங்கு ஒரு குப்பை லாரி வேறு அவர்களைக் கடக்க ஆயத்தமாக, அதையும் அவனையும் பார்த்தவள், “நான் திரும்ப ஜாகிங்லேயே வூட்டாண்ட போறேன். நீ பொறுமையா வா” என அடக்கமாக நகர, அவனது பார்வைத் தீ அவள் உடலெங்கும் பரவியது.

“இன்னைக்கு சன் எக்ஸ்ட்ரா ஹாட்டா இருக்காரே!” என நின்று அவனைப் பார்க்க, அவனது கண்களில் நெருப்பு ஜூவாலை.

“ஆத்தாடி… நேத்தும் இப்படித் தான பார்த்து வச்சான். கடைசியா என் லிப்ஸ் டேமேஜ் ஆனது தான் மிச்சம். வெளிநாட்டுக்காரன் நம்ம நாட்டுக்காரன் மாறிக் கோபத்தைக் காட்ட

மாட்டான் போலருக்கு…” எனப் புலம்பியபடி பவ்யமாய் காரில் ஏறி அமர,

அவளுக்குத் தெரியவில்லை, இதற்கும் தக்க தண்டனை கிடைக்கப் போகிறதென!

அரக்கன் தொடரும்

மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 61

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
57
+1
2
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment