Loading

 

அன்றைய மாதம் முழுவதும் திருமணம் வேலையில் ஈடுப்பட்டதில் ரேயன் தன்னவளுடன் சரியாக நாட்களை செலவிட முடியாமல் போனது, ஆனாலும் அவளின் குழப்பத்தை ஆடவன் கவனிக்கவும் தவறவில்லை.

 

அடுத்த இரு ஜோடிகளின் திருமணம் நாளும் வந்து விட, இரு ஆடவர்களும் தங்களின் இணையின் கழுத்தில் மூன்று முடிச்சியிட்டதில், மங்கைகள் இருவரின் கண்களும் ஆனந்தமாய் கண்ணீர் சிந்தியது.

 

அதன் பின் இரவு இரு ஜோடிகளுக்கும் முதலிரவு அறை ரேயன் வீட்டியில் செய்த ஏற்பாடு சிறப்பாக முடிய, ஜோடியாக அவர்களின் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள்.

 

தேவியிடம் பால் செம்பை நீட்டிய தியாவின் அமைதியை கண்டு, கையில் பால் செம்பை வாங்கிய சித்திரா “உனக்கு தங்கச்சி தம்பி சொந்தமா இருக்கும் போது இடைல வந்த நான் பெருசு இல்ல தான” என்றவளை இழுத்து அணைத்த தியாவிற்கு கண்கள் கலங்கி விட “சாரி சித்து.. உன்ன அவாய்ட் பண்ணவே இல்லடி.. உன்னோட கஷ்டம் தெரியாம நான் வேற ரொம்ப ஹர்ஷா பேசிட்டேன் அதான் உன்ன பாக்க கில்ட்டா இருக்குடி”

 

“அக்கா” என்று நிறுத்தியவள் “அக்கா கூப்பிடலாம் தான” என்று வார, அதில் மண்டையில் தட்டிய தியா “நீ அக்கான்னு கூப்பிடலன்னா என் நண்பன் உன்ன டிவோர்ஸ் பண்ணிடுவான்” என்றதில் புன்னகைத்த சித்திரா “இங்க பாரு அக்கா.. நீ மட்டும் வரலைன்னா இன்னைக்கு இந்த சித்திரா இருந்துருக்க மாட்டேன்.. சோ உனக்கு ஈர வெங்காயமும் வேண்டாம் அண்டர்ஸ்டண்ட்”

 

“சரி மொக்க போடாம.. ஏற்கனவே என் நண்பன் உனக்காக வெயிட் பண்ணிட்டான்.. சோ சீக்கிரம் என்ன பெரிமா புரொமோஷன் கொடு”

 

“அவ்வளவு தான அடுத்த மாசம் வாந்தி எடுக்குறேன்.. அப்புறம் எப்படி எங்க லவ் மேட்டர் தெரியும்” என்றதை கேட்டு சிரித்த தியா “ஒன்ஸ் மச்சிக்கு நீ கால் பண்ணும் போது நான் தான் அட்டென்ட் பண்ணினேன்.. நீ என்ன ஏதுன்னு கேட்காம மாமா மாமான்னு பொறிஞ்சி தளிட்ட.. அப்போ தெரியும்” என்றதை கேட்டு அசடுவழிந்தவளை செல்லமாக முறைத்தவள் தங்கையின் நெற்றியில் இதழ் பதித்து அனுப்பி வைத்தாள்.

 

ருத்ரன் – தேவி 

 

பட்டு வேஷ்டி சட்டையில் கையை தேய்த்தப்படி எதிர்பார்ப்பு மற்றும் பதற்றம் போட்டி போட அமர்ந்திருந்தான் ருத்ரன்.

 

அவனை காண பால் செம்புடன் உள்ளே வந்த சித்திரா, அவனின் நிலையில் தலையில் அடித்து கொண்டு “யோவ் மாமா என்னயா இது.. நான் பண்ண வேண்டியத எல்லாம் நீ பண்ணிட்டு இருக்க.. அடச்சீ என்ன பாரு* என்றவளின் பார்வையில் ஆடவனுக்கு வெட்கம் வேறு வந்து விட

 

“ஏற்கனவே டென்ஷனா இருக்கு.. இப்படி பாத்து வைக்காதடி” என்றதும் தலையாட்டி சிரித்துவிட்டு, அவனுடன் உரசி அமர்ந்தவள் “யோவ் உன் வெட்கம் கூட அழகு மாமா” என்று அவனின் தோலில் சாய்ந்து “லவ் யூ மாமா”

 

“லவ் யூடி சிட்டு” என்று அவள் தலையை தடவி கொடுக்க, தொடர்ந்து தடைவியதில் தூக்கம் வருவதை போல் உணர்ந்த சித்திரா வெடுக்கென்று அவனிடமிருந்து தலை நிமிர்த்தி முறைத்தாள்.

 

“ஏன்டி மாமாவ ஆசையா பாக்குற”

 

“யோவ் மாமா எதாவது வண்ணமா பேசிட போறேன்.. இன்னைக்கு என்னன்னு விவரம் தெரியுமா இல்லையா தட்டி கொடுத்து தூங்க வைக்கிற எரும.. உண்மைய சொல்லு உனக்கு இன்னைக்கு என்ன நடக்கும் தெரியுமா”

 

“தெரியாதே” என்று இதழ் பிதுக்கி கூறி பெண்ணவளை ஆழம் பார்க்க,

 

அதில் நொந்து நிமிர்ந்தவள், அவன் கண்கள் பேசும் கதையில் மூச்சு வாங்க, இதழ் கடித்து தலையை கவிழ்த்து விட்டாள்.

 

அவளின் நாடியை நிமிர்த்தி “சிட்டு நீயே ஸ்டார்ட் பண்ணேன்” என்றவனுக்கு மோகம் நிரம்பி வழிய,

 

‘எது நானா’ என்று முழித்தவள் தயங்கி தயங்கி ஆடவனின் இதழை சிறை செய்ய, அதன் பின் செயலை தனதாக்கி கொண்ட ருத்ரன், பெண்ணவளை தூங்கவே விடாமல் படுத்திவிட்டான்.

****

 

ஆர்யன் – யாழிசை

 

தன்னை பார்வையால் வருடி கொண்டிருந்த ஆடவனின் முன் வந்த யாழிசைக்கு கூச்சம் வெட்கம் வேறு வந்து இம்சிக்க,

 

வெளியே காட்டிக்கொள்ளாமல் அவனின் அருகில் அமர்ந்த பெண்ணவள் “சொல்லுங்க ஆரி” என்க,

 

அதை கேட்டு புரியாமல் மண்டையை சொரிந்த ஆர்யன் “என்னடி சொல்லணும்.. செய்ய தான செய்யணும்” என்க,

 

அதில் வெட்கித்து செல்லமாக முறைத்தவள் “எப்போ பாரு இதை நினைப்பு தானா..”

 

“இன்னைக்கு அதே நினைக்காம நடக்காம விட்டா தான்டி தப்பு” என்றதில் மேலும் பெண்ணவள் முறைக்கவும் “என்ன மேட்டர் சொல்லு”

 

“நீங்க தான ஃபர்ஸ்ட் நைட் அப்போ அன்னைக்கு நடந்தது சொல்லுறேன் சொன்னிங்க.. நான் ஒரு மாசமா மண்ட காஞ்சி போய் இருக்கேன்.. இதுல சித்துவையும் சொல்ல விடாமல் பண்ணிட்டீங்க” என்று பொரிந்து தள்ளி மூஞ்சை தூக்கி வைத்து கொண்டாள்.

 

அதில் பெண்ணவள் இடையில் அழுத்திய ஆர்யன் *ஃபர்ஸ்ட் நைட் அப்போ சொல்லுறேன் சொன்னேன் தான் .. ஆனா ஒன் ரவுண்ட் முடிச்சிட்டு சொல்லுறேன் சொன்னேன் தான சோ..” என்று அவள் அடுத்து பேசாமல் வாயை அடைத்து மஞ்சத்தில் சரிய,

 

அவனின் சில்மிஷங்களில் கிறங்கி உருகி முணங்கியவள் ஆடவனின் சிகையை அழுத்தி, அவனுக்கு இசைந்து கொடுத்து முத்து குளிக்க அனுமதி கொடுக்க, அவனும் ஆழமாக மூழ்கி முத்தைதில் குளித்து விட்டே  விலகியிருந்தான்.

 

அவன் விலகியதும் வெட்கத்தில் அவனை பார்க்க முடியாமல் பார்வையை திருப்பியவளின் கண்கள், தங்களின் கீழ்யிருந்த விரிப்பிலுள்ள தான் கன்னி கழிந்த அடையாளைத்தில் பதிந்தது.

அதை கண்டு கண்கள் கலங்கி மூச்சு வாங்கிய யாழிசையின் சிந்தை ஏதோ ஏதோ சிந்தித்தது.

 

பின் பெண்ணவளை தன் மார்போடு போட்டு தட்டி கொடுக்க, தன்னவன் கூறிய பரிசு இதுதான் என்பதை புரிந்த கொண்ட யாழிசை “நிஜ..மா அன்..னைக்கு என்..ன எனக்..கு” என்று பாதியாக பேசியவளை தடுத்து,

 

அன்று நிகழ்ந்த நிகழ்வை கூறி முடித்தவன் “இது கூட தெரியாம இருந்திருக்கன்னு ஃபீல் பண்ண கூடாதுடி.. ஏன்னா உன்ன நம்ப வைக்க எல்லாம் பண்ணி இம்ஜெக்சன் போட்டு உங்கள டோட்டலா குழப்பிருக்கான்.. இனி பழசு மறந்து புதுசா வாழ்வோம்” என்று முடிப்பதற்குள் புதிதான வாழ்விற்கான ஆட்டத்தை அவளே தொடங்கி விட, அவனும் தன்னவளிடம் சுகமாக தொலைந்தான்.

****

 

வாகினி – ஜோஸப் 

 

நிஷாவை மார்பில் தட்டி கொண்டிருந்த ஜோஸப்பின் மேல் தலை சாய்த்தவள் அவனையே விழிகள் அகலாது பார்த்திருந்தாள்.

 

அவள் விழி மொழியில் திணறியவன் அவளை விழக கூறி எழும்பி சென்று குழந்தையை ருத்ரன் அன்னை தந்தையிடம் விட்டு மின்னல் வேகத்தில் வந்து கதவை அடைத்து மெத்தையில் பொத்தென்று விழுந்து அவளை இழுத்தான்.

 

அதனை தடுத்தவள் “என்ன பண்ற.. கல்யாணம் வேலை வேற செம டையட் தூங்க போறேன்” என்றதில் வடை போச்சே என்று இதழ் பிதுக்கியவன் “அப்புறம் எதுக்குடி முழுங்குற பார்வை பார்த்த”

 

“என் பார்வை அப்படி தான்” என்று அவனை தள்ளிவிட்டு முதுகு காட்டி படுத்துவிட, ஆடவன் சிணுங்கி விட்டு தலையணை கட்டியணைத்து உருண்டான்.

 

அவனின் செயலில் பெண்ணவள் சிரிக்க, “சிரிக்கவா செய்ற” என்று கடியானவன் பெண்ணவளின் மேல் படர்ந்து மொத்தமாக கொள்ளையிட, அவளும் தன்னவனின் ஆளுமையில் கிறங்கி தொலைந்து போனாள்.

****

 

ரேயன் – தியா 

 

இருவரும் அறைக்குள் வந்ததும் தங்களின் இடத்தில் படுத்துக்கொண்டார்கள்.

ரேயன் தன் மார்பில் தட்டி கொடுத்து உறங்க வைத்த வினியை அருகிலிருந்த தொட்டிலில் போட்டு விட்டத்தை பார்த்தப்படி கண்கள் மூடியவன், சற்று நேரத்தில் பெண்ணவளின் திசையில் கேட்ட, விம்மல் சத்தத்தில் பதறி அவளை இழுத்து தன் மார்பில் புதைத்து “என்னடி யாழி”

 

“தெரியல ரே.. எனக்கு ரொம்ப கில்ட்டாயிருக்கு என்னால எல்லாருக்கும் கஷ்டம்..” என்றவளின் இதழை வன்மையாக கவ்வி விடுவித்தவன் “யாழி ஒருத்தர் மேல காதல் இல்லன்னா ஃபோர்ஸ் பண்றது தப்பு.. நீ அவன ஜோஸப் போல தான் பாத்த.. அதோட அவனுக்கு வந்து பிராப்ளம்னால தான் சைக்கோ ஆயிட்டான்.. அதுக்கும் உனக்கும் சம்பதம் இல்ல.. உனக்கு பிரேகணன்ஸி மூட் ஸ்விங்ஸ் நினைக்கேன்.. அதான் உன் மூளை கண்டாத யோசிக்க வைக்க..

 

இனி யோசிக்க வைக்காம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு” என்று நெருங்கியவளின் செயல் புரிந்து தள்ளிவிட்டவள் “சரி எப்படி கண்டுபிடிச்ச அவனுங்க டிவின்ஸ் அப்படின்னும்.. எனக்கு நடந்ததுக்கு அவங்க தான் காரணம்ன்னு எப்படி கண்டு பிடிச்ச”

 

“ஏன் குழந்தை பிறந்ததும் கேளேன்” என்றவனின் மூக்கை செல்லமாக கடித்து வைத்து “செல்ல புருஷன்ல சொல்லு”

 

“நம்ம தர்மாஜ் வீட்டுக்கு போயிருந்தப்போ அவன் எக்ஸர்சைஸ் பண்ணிட்டு வந்தான்.. அவசரத்துல அவன் முகத்துல மாஸ்க் சரியா ஓட்டிட்டு வரல.. கழுத்து பக்கத்துல ஒரு மாதிரி அது காட்டி கொடுத்திருச்சு..

 

அப்புறம் தான் அவன் தர்மராஜ் இல்ல அவனுக்குள்ள ஒருத்தன் தெரிஞ்சிது.. அண்ட் டிவி பக்கத்துல சீல்ட்யிருந்துச்சு அதுல ராகவேந்திரன் கெமிக்கல் ரீச்சர்ச்சர் நேம் இருந்துச்சு.. சோ ரெண்டு பேரும் வேற வேற கன்பார்ம் ஆயிடுச்சு.. அப்புறம் தான் ராகவ் பத்தி விசாரிக்கும் போது சர்வா பிரதர் தெரிஞ்சிது.. எப்படியும் ரெண்டு பேருக்கும் கனெக்சன் இருக்க வாய்ப்பு இருக்குன்னு தோணுச்சு”

 

“ஓ.. அது ஓகே எனக்கு நடந்ததுக்கு அவனுங்க காரணம் எப்படி கண்டுபிடிச்ச”

 

“அது மெயில் கண்டுபிடிக்கும் போது நீ அதுல 23/ 08 இத கேட்டு ரொம்ப ஷாக்கான அண்ட் ஃபர்ஸ்ட் டே சார் பாக்கும் போது கூட இந்த டேட் காலண்டர் பாத்து ஷிவரான.. சோ சர்வா ஃபிளாஷ்பேக் எல்லாம் சேத்து உனக்கு நடந்தத அவனுங்க காரணம் தோணுச்சு.. சோ அவனுங்ககிட்ட கேட்டேன்” என்றவன் தன்னை இமைக்காமல் காணும் தன்னவளிடம் “சாரி யாழி நான் உன்கிட்ட சொல்லியிருக்கணும் வாகி யாருன்னும் ரெண்டு பேருக்கும் நடந்த நிச்சயம் பத்தி சொல்லிருக்கணும் என் தப்பு தான்.. ஆனாலும் உண்மை தெரிஞ்சி நீ என்ன விட்டு போயிட கூடாதுன்னு தான் சொல்லல ஆனா ஒரு பொய் எல்லாரையும் பாதிச்சிருக்கு.. நீ டெலிவரி பட்ட கஷ்டத்த கேட்டு செத்துட்டன்.. உன்கூட நான் இல்லன்னு குற்றயுணர்வு என்னையும் கொல்லுதுடி” என்றவனை “போதும்” என்று தடுத்தவள்

 

“ரே.. என்னால உனக்கு கஷ்டம்.. என்ன தேடி அலஞ்சு நான் இருக்கிற இடம் தெரிஞ்சி எல்லாரைக்கும் ஸ்கிரிப்ட் கொடுத்து எனக்காக இவ்வளவு விஷயம் செஞ்சிருக்க.. ஆனா நான் தான் உன்ன ஹர்ட் பண்ணிட்டேன் அன்னைக்கு.. சத்தியமா அன்னைக்கு ஸ்ட்ரெஸ்காக உன்ன எடுத்துக்கல” என்று முடிப்பதற்குள்

 

இடை புகுந்த ஆடவன் “தெரியும் அன்னைக்கு என்கூட இருந்துட்டு அப்புறம் என்னவிட்டு போகலாம் நினைச்சி தான அப்படி நடந்துக்கிட்ட” என்றதில் “ரே” என்று பெண்ணவள் திகைக்க,

 

“யாழி உன்ன இஞ்செக்சன் போட்டு குழப்பியிருந்தான் அந்த சைக்கோ.. அதுனால தான் நீ பேசினது கூட பெருசா எடுத்துக்கலனாலும் வலிச்சுது” என்றவனின் துயரில் பதறி ஆடவனின் இதழை கவ்வி விடுவித்த தியா “லவ் யூ ரே.. அப்போவும் சரி இப்போவும் சரி உன்னோட காதல்ல என்ன ஈர்க்குற” என்றவளின் நெற்றியில் செல்லமாக முட்டிய ரேயன் “லவ் யூ டூ யாழி.. நாலு வருஷம் பிரிவுலயும் உனக்கு என்மேல ஆல்மனசுல மறைச்சு வச்சிருந்த உன் காதல் என்னையும் ஈர்த்துச்சு..” என்றான்.

 

அவனின் மார்பில் இதழ் பதித்து தொடங்க, ஆடவனும் பெண்ணவளின் வயிற்றில் இருக்கும் உயிடுக்கு முத்தமிட,

 

அதில் அவனின் காதை திருகியவள் “இங்க பாரு உள்ள இருக்கிறது நமக்கு பிள்ளையா இருந்தாலும் எனக்கு அப்புறம் எல்லாரும் புரியுதா.. இப்போவே கழட்டி விடுற” என்று முகத்தை சுழித்து திருப்பி கொள்ள,

 

அவளின் பாவனையில் ஈர்த்து சுழித்த இதழை வன்மையாக கவ்வி, அவ்வன்மையில் பெண்ணவளை ஈர்க்க, இப்படியே இருவரும் ஒருவருக்குள் ஒருவர் கொடுக்கும் ஈர்ப்பு இனி வரும் காலங்களில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டி கதையை நிறைவு செய்கிறேன்.

முற்றும்😍

கதை மொத்தமும் என்னுடைய கற்பனை, படித்து பார்த்து மறக்காமல் கமென்ட் review கொடுத்துடுங்க.. இதுவரை தொடர்ந்து அளித்த வாசிப்பு கமென்ட் கொடுத்தவருக்கு என்னுடைய அன்பான நன்றி

 

உங்கள் ஆதரவே என்னுடைய பலம்

 

இப்படிக்கு,

– ஆனந்த மீரா 😍😍

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்