Loading

அத்தியாயம் 39

அடிவானிலிருந்த செஞ்சூரியன் மெல்ல மேலெழுந்து செல்லும் காலை பொழுது அது..

அங்கே, அந்த வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் இளம் சூரியனின் கதிர்களா? இல்லை விடாமல் கத்திக் கொண்டிருக்கும் பறவைகளின் கீச்சிடும் சத்தமா? இல்லை காற்றில் மிதந்து வரும் அவளது வாசமா? ஏதோ ஒன்று அபியின் தூக்கத்தை மொத்தமாய் கலைத்திருந்தது. 

முகத்தை அழுத்தித் தேய்த்து கொண்டே எழுந்தமர்ந்தவனின் கண்களில் தலையைப் பிடித்தப்படி புலம்பிக் கொண்டிருந்த ஆனந்தி தான் விழுந்தாள்.

அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு மொத்தத் தூக்கமும் பறந்தோடியிருந்தது அவனுக்கு. “ஹேய் முட்டக்கோஸ் என்னாச்சு”

எனக் கரகரத்தக் குரலில் கேட்டான். 

அந்த கேள்வி முற்றும் முழுதாக அவளை சென்று சேரும் முன், இவனது மனம் அத்தனைத் தவித்து போனது. “ரொம்ப ஃபோர்ஸ்ஸா நடந்துட்டனோ? பெயினா இருக்கோ? பிடிக்கலையோ?’ இப்படியான பலக் கேள்விகள் அவனது மனதைக் ஆக்கிரமித்தது.

 அதே நேரம், இவனது கேள்வியில் வெகுண்டெழுந்தவள் “என்னாச்சா? என் பட்டுப் புடவை முழுக்க எண்ணெய்யாச்சு” என்றாள் கடுப்பாக.

முதலில் அவள் கூறியது துளியும் புரியவில்லை அவனுக்கு. அது புரிந்ததும் சத்தமிட்டு சிரித்தான். இத்தனை நேரம் அவனை சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகி நின்றது. மனம் லேசானதைப் போல் உணர்ந்தவன் அப்பொழுது தான் ஆனந்தியை 

கவனித்தான்… 

புத்தம் புது மலராய் அமர்ந்திருந்தாள் பெண்.. பிறை நெற்றியை முத்தமிட்டுக் கொண்டிருந்த ஈரக் கேசமும், குங்குமமாய் சிவந்திருந்த செவ்விதழ்களும், அதற்கு போட்டியாக சிவந்திருந்த கன்னங்களும் இவனது உணர்வுகளை சோதிப்பதாய் இருந்தது.

கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்ன இத்தனை அழகா இருக்கா இந்த முட்டைகோஸ்” முனகிக் கொண்டே எழுந்தவன் அவளை நோக்கி நடந்தான்.

அதே நேரம், ஆடவனின் பார்வையில் வெட்கம் பிடுங்கித் தின்றது இவளுக்கு. பெருவிரலால் நிலத்தை அழுத்தி ஊன்றியபடி நிமிர்ந்து அபியை முறைத்தாள். 

அவளது முறைப்பை கண்டுகொள்ளாமல் “துவைச்சா போயிட போகுது… இதுக்கா இத்தனை அலப்பறை?” எனக் கேட்டுக் கொண்டே பாவையின் கையிலிருந்த புடவையை வாங்கினான். 

 அங்காங்கே திட்டுத் திட்டாக எண்ணெய் பசைகள் தெரிய, நெற்றியை நீவி கொண்டே சன்ன சிரிப்புடன் “வெளிய போனயா என்ன?”எனக் கேட்டான். 

“ம்ம் இல்லை…உங்களோட போகலாம்னு வெயிட் பண்ணேன்” என்றதும் “ஓகே ஓகே வெயிட் பண்ணு. குளிச்சிட்டு வந்துடறேன்” என்றவன் குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

அவன் குளியலறைக்குள் நுழைந்ததும் பெட் கவரை மாற்ற எண்ணியவள் படுக்கையை நெருங்க,தலைமாட்டில் உடைந்து கிடந்த வளையல்களும்,படுக்கை முழுக்க சிதறிக் கிடந்த வாடிய மல்லிகையும் இவர்களது உறவை சொல்லாமல் சொல்ல, கீழ் இதழ்களை அழுத்திக் கடித்துக் கொண்டே தலையை தட்டியவள் பெட் கவரை வாசிங் மெஷினில் போட்டு விட்டு வேறு பெட் கவரை மாற்றினாள்…  

படுக்கையை சரி செய்துவிட்டு நிமிர, அங்கு கைகளை கட்டியபடி இவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அபி… 

“அச்சோ…” மனம் பதற, அவனைப் பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தவள் “போலாமா சார்?” எனக் கேட்டாள்.

“ம்ம்…” பெரிதாக தலையாட்டியவன் ஈரக் கேசத்தை உலர்த்திக் கொண்டே முன்னால் செல்ல, அவன் பின்னாலயே வால் பிடித்தப்படி சென்றாள் ஆனந்தி… 

இவர்களை கண்டதும் வில்லிலெய்த அம்பாக பிள்ளைகள் இருவரும் இவர்களை நோக்கி ஓடி வர… அதற்கு பின் அவர்களது நேரத்தைப் பற்றி சொல்லவா வேண்டும். இறக்கை இல்லாமல் பறந்தது… 

அபி தொழில் விஷயங்களை கவனித்துக் கொண்டிருக்க, ஆனந்தி பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருந்தாள். 

 அக்கணம் அவளருகே வந்தமர்ந்தார் நேற்று தேங்காய் எண்ணெயை கொடுத்துவிட்ட பாட்டி… 

அவளிடம் எதுவும் பேசாமல் ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அமர்ந்தவர் ஏதோ கணித்தவராய், ஷோபாவில் அமர்ந்திருந்த சீதாவிடம் “ம்ம்” என்பதைப் போல் கண்ணைக் காட்டினார். 

புரிந்தது போல சீதா சிரித்துவிட்டு செல்ல, பாட்டியோ ரகசிய குரலில் “அந்த தேங்காய் எண்ணெய் எதுக்குன்னு தெரிஞ்சுதா?” எனக் கேட்க

 “இல்லை பாட்டி அது” என்ற ஆனந்தியின் குரலைத் தாண்டி “பூவுக்குள்ள வண்டு போறதுக்கு எதுக்கு ஆயுதமெல்லாம். ம்ம்? அதெல்லாம் ஈசியா போயிடும்…” என்ற அபியின் குரல் கேட்டது. 

அபியின் பேச்சின் உள்ளிருந்த அர்த்தத்தை புரிந்த பாட்டி வெட்கப்பட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட, இவனைப் புரியாமல் பார்த்தாள் பெண். 

போன் என்பதைப் போல் சைகை செய்து விட்டு சென்றவனிடம் சரியென்பதைப் போல் தலையாட்டியவளுக்கு அவனது பூவும்,வண்டுமென்ற உவமை ஏதோ புரிவதாய் இருந்தது.சட்டென கண்களை அகல விரித்து அபியை பார்த்தாள். 

“நீ நினைத்தது சரிதான் என்பது போல” கண்களை சிமிட்டி விட்டு பாட்டியின் பின்னாலயே சென்றான். 

 அங்கே “அச்சோ எனக்கு வெட்கம் வெட்கமா வருதே” என்ற தோரணையில் நின்ற பாட்டியின் அருகில் சென்றவன் “ஆதி காலத்துலயே அழிஞ்சு போன டெக்னிக்கை கொண்டு வந்து என்கிட்ட டெஸ்ட் பண்றையா டா பாடி சோடா” நக்கல் தொனிக்க கேட்டவனை திரும்பியும் பார்க்காமல் ஒரே ஓட்டமாக சீதாவின் அருகில் சென்று நின்று கொண்டார் பெரியவர். 

அதே நேரம், அபியின் பேச்சைக் கண்டும் காணாமல் நின்றிருந்த சீதாவிற்கு அத்தனை சிரிப்பு வந்தது. 

நேற்றே ‘இதெல்லாம் எனக்கே குடுத்து விடலை அத்தை… இவளுக்கு வேண்டாம்’ என்று கூறினார். 

 ‘இதெல்லாம் சாங்கியம், நீ சும்மா இரு’ என்று விட்டு ஆனந்தியிடம் பாலையும், எண்ணெயையும் கொடுத்து விட விட்டார். இதோ அதற்கு பேரனிடம் மறைமுகமாக கேலியும் வாங்கி கட்டிக் கொண்டார். 

நாசியை துடைத்து, சிரிப்பை அடக்கியப்படி “அவன் ஏதோ கிண்டல் பண்றான் அத்தை… நீங்க பெருசா எடுத்துக்காதீங்க” என்க, சரியென்று தலையாட்டிய பெரியவருக்கு இன்னும் வெட்கம் விட்டப்பாடில்லை… 

அதே நேரம், தாயின் பின்னால் நின்றிருந்த பெரிய கிழவியை நமட்டு சிரிப்போடு பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அபி. 

கணவனின் அலப்பறையில் இதழ்களில் புன்னகை பூக்க, பிள்ளைகளோடு ஒன்றினாள் ஆனந்தி….

புதுமண தம்பதிகளுக்கான இரவைத் தவிர, மற்ற நாட்கள் அவர்களுக்கு எப்பொழுதும் போல தான் சென்றது…

*****

காலையில் பூக்கும் மலர்கள் அனைத்தும் முழுமையாக வாடத் தொடங்கிய நேரமது… 

அங்கே, அந்த தார் சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது அபியின் நான்கு சக்கர வாகனம்… 

கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே வாகனத்தை இயக்கி கொண்டிருந்தவனை நிமிடத்திற்கு ஒரு முறை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே வந்தாள் ஆனந்தி…

“என்னடி… ஏதாவது கேட்கணுமா?” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டவனிடம் 

“ம்ம்…” என்றவள் அதற்கு நேர் மாறாக இல்லையென்று தலையாடினாள். 

பாவையின் செய்கையில் மெல்ல சிரித்தவன் “என்னவாம் குளோரிக்கு” மெல்லிய புன்னகையோடு கேட்டான். 

“இல்லை, அனிதா அக்காவோட திங்க்ஸ், இம்போர்டன்ட் ஃபைல்ஸ் எல்லாத்தையும் இங்க வைக்காம, ஏன் பழைய வீட்டுலயே வைச்சு இருக்கீங்க?”முதல்முறையாக அனிதாவை பற்றி விசாரிப்பதால் உண்டான தயத்தோடு கேட்டாள். 

“பெருசா காரணம் ஒன்னுமில்லை… அம்முவோட திங்க்ஸ் எல்லாமே அவ மூச்சுக் காத்து பட்ட இடத்திலேயே இருக்கட்டும்னு நினைச்சேன். அவ்வளவு தான்” என்றான் ஆழ்ந்த குரலில்… 

அவனது குரலில் தெரிந்த பேதத்தில் அவனையே இமைக்காமல் பார்த்தவள் “ரொம்ப மிஸ் பண்றீங்களா?” எனக் கேட்க, ஆமென்பதை தலையாட்டினான். 

பின் நீண்ட நெடிய பெருமூச்சுடன் “என்னோட வாழ்க்கையில அவளோட அத்தியாயம் முடிஞ்சு போச்சு தான்… ஆனால் அவளுக்கான காதல் என்கிட்ட அப்படியே தான் இருக்கு. அந்த காதல் யாருக்காகவும் மாறாது…” ஆழ்ந்து கூறியவனை ரசித்து பார்த்தாள்.

அவளது ரசனையான பார்வையை உள்வாங்கி கொண்டே “என்னவாம்?” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான்.

“சரியா சொல்ல தெரியல…ஆனால் உங்களோட இந்த காதல் மேல எனக்கு காதல் வருது” என்றதும் பதில் பேசாமல் சிரித்தான்…

அடுத்த சில நிமிடங்களில் அபியின் பழைய வீட்டை அடைந்திருந்தனர் இருவரும்… எப்பொழுதும் போல கண்களை சூழ்ந்த கண்ணீரோடு வீட்டினுள் நுழைந்தவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அவளது கையில் ஆவி பறக்க, தேநீர் இருந்தது நேராக அபியின் அறைக்கு சென்றாள்..

அங்கே அவன் இல்லாமல் இருக்க “எங்க இவரை காணோம்” என கண்களால் தேடியவள், அறையின் ஜன்னல் வழியே கார்டனை எட்டிப் பார்த்தாள். 

அங்கே தான் நின்றிருந்தான் அபி… மெல்லிய புன்னகையோடு அவனைப் பார்த்தவள் திரும்ப, அவளது கண்களுக்குள் அனிதாவின் டைரி விழுந்தது… 

அன்றைய தினம் அபியின் அறையில் இந்த டைரியை பார்த்த ஞாபகம்…மீண்டும் அதனை இங்கே பார்க்கவும் இது அனிதாவின் டைரி என்பது சொல்லாமலேயே புரிந்தது… 

மெல்லிய புன்னகையோடு அந்த டைரியை வருடிவிட்டு திரும்ப, அங்கே அபி நின்றிருந்தான். 

புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க “ஒன்னுமில்லை” என்பதை போல் கண்களை மூடித் திறந்தவள் அவனிடம் தேநீரை நீட்டினாள். 

“கஷ்டமா இருக்கா?” எனக் கேட்டுக் கொண்டே, மனைவியின் கையிலிருந்த தேநீரை வாங்கினான்.. 

“எதுக்கு?” என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி பார்க்க,

“இல்லை நீ இருக்கும் போதே அம்முவை நினைச்சு பில் பண்றேன்ல அதான் உனக்கு கஷ்டமா இருக்கான்னு கேட்டேன்” 

“எந்த காலத்துல இருக்கீங்க?” எனக் கேட்டவள் நீண்ட நெடிய பெருமூச்சுடன் 

“அனிதா மேல உங்களுக்கு இருக்கிற காதல் வேற, என் மேல உங்களுக்கு இருக்கிற உணர்வுகள் வேறன்னு எனக்கு புரியும்…அதை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை..” இதழ்களை சுழித்து கூறியவளை ரசனையோடு பார்த்தவன்

“இப்ப இந்த நிமிசம் உன்னை எனக்கு கிஸ் பண்ண வேணும்னு தோணுது. இறுக்கமா கட்டிக்க தோணுது… இது காதலான்னு தெரியல ஆனால் காமம் இல்லை” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் பெண்.

“அப்ப,இப்ப வரைக்கும் என் மேல என்ன இருக்குன்னே உங்களுக்கு தெரியல இல்லையா?” எனக் கேட்க, நமட்டு சிரிப்போடு ஆமென்பதை போல் தலையாட்டினான். 

“கொப்பன் மவனே…” வாயில் வந்த வார்த்தைகளை கூறிவிட்டு “அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுட்டு அப்பறம் என் பக்கம் வரீங்க… அதுக்கு முன்னாடி என் பக்கம் வந்தீங்க… பிச்சுடுவேன்” ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவள் 

“தப்பு பண்ணிட்ட டி ஆனந்தி… ஃபர்ஸ்ட் நைட்லேயே என் மேல உனக்கு என்ன ஃபீலிங் இருக்குன்னு கேட்டுட்டு நெருங்க விட்டு இருக்கணும். தப்பு பண்ணிட்ட.. காதலும் இல்லையாம் காமமும் இல்லையாம்.. கேடி பைய தேங்காய் எண்ணெயை பத்தி பேசி பேசியே மயக்கிட்டான்…” முனகி கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தவளை மெல்லிய புன்னகையோடு பார்த்தான் அபி.. 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 55

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
52
+1
4
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்