
காதல் – 78
நம் கதையின் ஏழு ஜோடிகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தாகிவிட்டது அவர்களின் இனிமையான திருமண வாழ்வை சற்று பார்ப்போமா……
ஒவ்வொரு ஜோடியும் தங்களின் இணைகளோடு காதலாக கதைத்துக் கொண்டிருந்தனர்…….
மதன் மற்றும் வள்ளிக்கு இதே போல் அவர்களின் அறையில் காதல் காட்சிகள் ஓடி கொண்டு இருந்தது…..
வள்ளி ……
என்னடா…..
எனக்குன்னு அம்மா அப்பா இல்லன்னு நா ஒரு நாள் கூட ஃபீல் பண்ணதே இல்ல தெரியுமா?அதுக்கு நீ தான் காரணம் என்று அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்……..
மதன் உனக்காக நான் ஒரு பாட்டு வச்சிருக்கேன் பாடட்டா?
நீ பாடுடி செல்லம் என்று அவன் அவளை கட்டி அணைத்து கொண்டான்…….
வள்ளி அவன் முகத்தை பார்த்து கொண்டே பாடினாள்……
“உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா
என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்
கேட்கின்ற இசை எல்லாம் நீதானடா
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடா
அட நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்ட காதல் அழியாதடா”
வள்ளி அவ்வாறு காதலாக பாடவும் மதன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்……
………..
சூர்யா மற்றும் சந்தியா தங்களின் காதல் பொழுதுகளில் கரைந்து கொண்டு இருந்தார்கள்…….
சூர்யா சந்தியாவின் முகத்தை தன் இருக்கைகளாலும் ஏந்தி கொண்டு அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்து விட்டு அவள் கண்களை பார்த்துக்கொண்டு பாடினான்……..
“வெண்ணிலவே
தரையில் உதித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில்
உதித்தாய் ஒரு சிரிப்பில்
இதயம் பறித்தாய் நீ எனது
கனவில் வரவே எழாமல்
இருக்கிறேன் உன் சுவாசம்
உயிரை தொடவே விடாமல்
பிடிக்கிறேன்”…….
சூர்யா அவ்வாறு காதலாக பாடவும் சந்தியா அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்………
……………
விஹானா மற்றும் விக்ரம் தங்களின் அறையில் அமர்ந்து கொண்டு காதலாக பேசி கொண்டு இருந்தார்கள்……..
விஹா செல்லம்….
சொல்லுங்க விக்ரம்…..
உனக்காக நா ஒரு பாட்டு பாட போறேன்,ரொம்ப கேவலமா இருந்தா சொல்லிரு என்று அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே பாடினான்…..
“விரலுக்கும் இதழுக்கும்
பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென
முதல் எது முடிவெது
எதுவரை இருப்போம்
அதுவரை பிறப்போம்
யார் நீ யார் நான்
வான் நீ நீ நான்
உலகின் கதவை
தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய்
மகிழ்ந்திருப்போம்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்”……..
அவனும் பாடலை கேட்டு அவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள்……..
அனைத்து காதல் ஜோடிகளும் இவ்வாறு தங்களின் காதல் உலகில் சந்தோஷமாக இருக்க அவர்கள் பெற்ற வான்டுகள் வீட்டை இராண்டாக்கி கொண்டு இருந்ததன…….
தேவா தாத்தா இந்த டிவிக்குள்ள எப்படி போகனும் என்று அஸ்வதி மற்றும் விஹானின் இரட்டை குழந்தைகளான அஸ்விஹா மற்றும் அஸ்ஹான் டிவியை கீழ தள்ளி விட்டு அதன் மேல் ஏறி ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள்……
டேய் குழந்தைங்களா தள்ளி வாங்க உடஞ்ச டிவி கண்ணாடி துண்டு கால்ல குத்திட போகுது என்று அவர் அந்த இரண்டு வான்டுகளையும் தூக்கிக் கொண்டு பெட்ரூம் சென்றார்…….
இங்க பாருங்க அஸ்விஹா , அஸ்ஹான் நா இப்போ உங்களோட ஃப்ரெண்ட்ஸ கூட்டிட்டு வர போறேன் அதுவரை நீங்க ரெண்டு பேரும் அமைதியா இங்க உக்காந்துட்டு இருந்தா உங்க ரெண்டு பேருக்கும் புடிச்ச சாக்லேட் மில்க் ஷேக் வாங்கி தருவேன் அப்படி நீங்க அமைதியா இல்லனா நீங்க பண்ண சேட்டையெல்லாம் உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லிடுவேன் சரியா?
சரி தாத்தா நாங்க அமைதியா இருக்குறோம் எங்க பிரெண்ட்ஸ் கூட்டிட்டு வாங்க போங்க…..
தேவா அப்பா வெளியில் வந்து பார்த்தார் அங்கு மூடி வைத்திருந்த கிணறை மற்ற குழந்தைகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது……..
துருஷா கேட்ட தாண்டி வெளில ஓடாத செக்யூரிட்டி அவள பிடிங்க என்று கத்திகொண்டே பீவி அம்மா துவாரகா மற்றும் துருவின் செல்ல மகளான துருஷிகா பின்னால் ஓடினார்…..
பிறகு ஹர்ஷா அர்ச்சனாவின் செல்ல மகளான ஹர்ஷனா ஒரு கிணற்றின் அருகில் சென்று எட்டி பார்த்து கொண்டு இருந்தான்….
ஹர்ஷு கினத்த எட்டி பாக்காதடா…
ஃபாத்திமா நானி யாரு இவ்வளோ தண்ணிய இந்த கிணத்துல கோரி ஊத்துனது?
ஏதே கோரி ஊத்துனாங்களா?
பின்ன எப்படி இவ்வளோ தண்ணி இங்க வந்திருக்கும்?
அது நிலத்தடி வழியா வருது…
நிலத்தடில யாரு போய் ஊத்துவா?
அங்க எதுக்கு போய் தண்ணி ஊத்தனும்?
அட லூசு நானி இப்போ நம்ம மோட்டார் போட்டா டேங்க் நிறயுதுல அதே மாதிரி இந்த நிலத்தடிக்கு யாரு போய் தண்ணி ஊத்துவா??
டேய் உங்கொப்பனுக்கு கூட இம்புட்டு மூளை இல்லடா, கேள்விக்கு பொறந்தவளே எவ்வளோ கேள்விடா கேப்ப?
போ நானி உனக்கு தெரியல அதான் இப்படி சொல்லுற..
ஆமாடா எனக்கு தெரியல நீ வீட்டுக்குள்ள வா என்று அவளை தூக்கி கொண்டு வீட்டினுள் சென்றார் அங்கே வீடே புகை மண்டலமாக காட்சியளித்தது…
என்னடா ஒரே புக மண்டலமா இருக்கு???
ஒரு வேளை சித்திக் தாத்தா வீட்ட கொளுத்தி விட்டுருப்பாங்களோ?
அவரு ஏன்டா வீட்ட கொளுத்த போறா உன்கூட அலயும்ல மூனு அதான் எதோ பண்ணிருக்கு வா போய் பாப்போம் என்று இருவரும் வீட்டில் உள்ள அனைத்து கதவு ஜனல்களையும் திறந்து விட்டனர் புகை வெளியில் சென்று விட்டது…
சமயலறையில் கோதுமை மாவு கொட்டி சமயலறையே பரிதாபமாக காட்சியளித்தது….
சித்திக் நீங்க என்ன இப்படி பேய் மாதிரி நிக்குறீங்க??
அப்பொழுது அங்கு பீவி அம்மாவும் துருஷிக்காவை தூக்கி கொண்டு வந்தார்…..
பீவி நானி நீ எப்படி சித்திக் தாத்தாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன?
ஏன்டா இந்த நேரத்துல இப்படி ஒரு டவுட் உனக்கு??
பின்ன மாவ எப்படி கொட்டி வச்சிருக்காங்க பாரு என்று வள்ளி மதனின் அருமை மகனான வர்ஷன், சந்தியா சூர்யாவின் ஆசை மகளான சானியா மற்றும் விக்ரம் விஹான்னாவின் அன்பு மகளான விக்ரஹானா சிரித்தனர்…..
நா மாவ கொட்டினேனா?
இல்ல சித்திக் தாத்தா , நாங்க கொஞ்சம் கொட்டினோம் நீங்களும் கொஞ்சம் கொட்டினீங்க என்று அந்த மூன்று வாண்டுகளும் சிரித்தனர்…
டேய் நீங்க மட்டும் மேல நல்லா ஒன்னா இருக்கீங்க, நா இங்க நீங்க பெத்ததுகிட்ட மாட்டிகிட்டு முழிக்குறேன் என்று புலம்பியவாறே அவர்கள் அனைவரும் வீட்டை சுத்தம் செய்து விட்டு ஏழு வாண்டுகளுக்கும் உணவு கொடுத்து தூங்க வைத்தனர்…….
தான் உயிருக்கு உயிராக காதலித்த விக்ரம் மாமா தன்னிடம் அவ்வாறு கடுமையாக பேசவும் மனம் உடைந்த அனந்தி ஜெயிலில் உள்ள கரண்ட் பாக்ஸை பிடித்து ஷாக் அடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாள்……..
சுலோச்சனாவிற்கு தீராத நோய்கள் தீராமல் வந்து கொண்டே இருந்தன அதனால் அவரும் சீக்கிரமாக இறைவனடி சேர்ந்து விட்டார்……
அஸ்வதியின் வீட்டில் அஸ்வதி விஹான் மற்றும் அவளின் நண்பர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்தனர்……
அவர்களின் வீட்டில் சந்தோஷத்திற்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருந்தது……
அவர்களின் பிள்ளைகள் அனைவரும் வளர்ந்து பெரிய ஆளாகி அவர்கள் தங்களின் பெற்றோர்களை சந்தோஷமாக பார்த்து கொண்டனர்……
அஸ்வதி மற்றும் விஹான் தங்களின் ரிட்டயர்மென்ட்க்கு பிறகு காஷ்மீருக்கு சென்று தங்களின் டூரிஸ்ட் பிசினசை கவனித்துக் கொண்டனர்……
துவாரகா மற்றும் துருவ் அவர்களது கல்லூரியை செம்மையாக பார்த்துக் கொண்டனர்……
ஹர்ஷா மற்றும் அர்ச்சனா ஒரு உணவகம் திறந்து அந்த உணவகத்தை பார்த்துக் கொண்டனர்……
மதன் மற்றும் வள்ளி இளம் போலீசார்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருந்தனர்……
சூர்யா மற்றும் சந்தியா தங்களின் சூப்பர் மார்க்கெட் தொழிலை கவனித்துக் கொண்டனர்……
விஹான்னா மற்றும் விக்ரம் சில தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தனர்……
இவ்வாறு அவர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் முன்னேறி , நல்லபடியாக குடும்பத்தை பார்த்துக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு தங்களின் கனவு வேலையையும் கை விடாமல் சந்தோஷமாக இணைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்……
அன்று நம் கதாநாயகி மற்றும் கதநாயகர்களுக்கு என்பது வயதான கணவன்-மனைவி இருவரும் உயிருடன் இருக்கும் போது நடத்தப்படும் வாழ்த்து விழாவான சதாபிஷேகம் நடைபெற்று கொண்டு இருந்தது…….
வேத மந்திரங்கள் ஓதி, தம்பதிகள் அனைவரும் மீண்டும் மாலை மாற்றி,புனித நீரால் அபிஷேகம் போல ஆசீர்வாதம் செய்து அவர்களின் சதாபிஷேக விழா நல்லபடியாக சீரும் சிறப்புமாக முடிந்தது பிறகு அவர்கள் அனைவரின் பிள்ளைகள், பேரன் – பேத்திகள் எல்லாரும் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்……
வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ்ந்ததற்கான கொண்டாட்டத்தை புகைப்படமாக மாற்ற அனைவரும் வந்தனர்…….
நடுவில் அஸ்வதிவிஹான் அமர்ந்திருக்க , அவர்களுக்கு வலது பக்கமாக அவர்களின் அருகில் துவாரகாதுருவ் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அருகில் அர்ச்சனாஹர்ஷத் கான் அமர்ந்திருக்க , அஸ்வதிவிஹான் அருகில் இடது பக்கமாக அவர்களுக்கு அருகில் சந்தியாசூர்யா அமர்ந்திருக்க அவர்களுக்கு அருகில் வள்ளிமதன் அமர்ந்திருக்க அவர்களுக்கு அருகில் விஹான்னாவிக்ரம் அமர்ந்திருக்க அவர்களுக்கு பின்னால் அஸ்வதிவிஹானின் மகளும் மகனுமான அஸ்விஹா மற்றும் அவளின் கணவனான ஆர்யன் , அஸ்ஹானின் மனைவியான அஹல்யா அவர்களின் குழந்தைகளோடு நிற்க அவர்களுக்கு அருகில் துவாரகாதுருவின் ஆசை மகளான துருஷிக்கா மற்றும் அவளின் கணவனான துவராஜ் மற்றும் அவர்களின் குழந்தைகளோடு நிற்க அவர்களுக்கு அருகில் அர்ச்சனாஹர்ஷத்தின் மகள் ஹர்ஷனாவின் கணவனான ஹரீஷ் அவர்களின் குழந்தைகளோடு நிற்க அவர்களுக்கு அருகில் சந்தியாசூர்யாவின் மகளான சானியா மற்றும் அவளின் கணவனான ஷான்விக் அவர்களின் குழந்தைகளோடு நிற்க அவர்களுக்கு வள்ளிமதனின் மகனான வருஷன் மற்றும் அவனின் மனைவியான வன்ஷிகா அவர்களின் குழந்தைகளோடு நிற்க அவர்களுக்கு அருகில் விஹான்னாவிக்ரமின் மகளான விக்ரஹானா மற்றும் அவளின் கணவனான விக்ராந்த் அவர்களின் குழந்தைகளோடு நிற்க அந்த அழகிய தருணத்தை போட்டோகிராபர் அழகாக படம் பிடித்துக் கொண்டார்…..
அஸ்வதி சிறுவயதில் பாசத்திற்காக ஏங்கினாள் , ஆனால் இப்பொழுது விஹானின் பாச மழையிலும் காதல் மழையிலும் திக்கு முக்காடி போகிறாள் அவள்…..
அஸ்வதி ஆகட்டும் விஹான் ஆகட்டும் இருவருக்கும் இருவரும் எப்பொழுதுமே துணையாக இருந்தனர்……
அவர்களின் வாழ்வில் வந்த சொந்தங்களான துவாரகா துருவ், அர்ச்சனா ஹர்ஷா ,வள்ளி மதன் , சந்தியா சூர்யா, விஹான்னா விக்ரம் , பீவி அம்மா, சித்திக் அப்பா , தேவா அப்பா, என்று அவர்களின் வாழ்வில் வந்த சொந்தங்களால் அவர்களுக்கு சந்தோஷத்திற்கு பஞ்சம் இல்லாமல் போனது……
அவர்களின் வாழ்வில் கிடைத்த காதல், அன்பு, சொந்தம் , நண்பர்கள் என்று அனைத்தும் வாசகர்களாகிய உங்களின் வாழ்விலும் கிடைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்….
இந்த கதைய நா தூரிகை old is gold competition காக எழுத டிசம்பர் பதினஞ்சு அன்னைக்கு எழுத ஆரம்பிச்சேன் என்னோட எழுத்து பயனத்துலயே இந்த கதை தான் நா தொடர்ச்சியாக ஒரு நாள் விடாம போட்டது ,என்னோட கதை எப்படடி இருக்குன்னு எனக்கு தெரியல ஆனா இப்போ வரை என்னோட கதைய பொறுமையா படிக்கிற எல்லா வாசகர்களுக்கும் என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள் ……
நா இதுவரை எழுதின கதையிலே அதிகமான எபிசோட் உள்ள ரெண்டாவது கதை இது , எனக்கே ஆச்சரியமா இருக்கு….😂
இது நானா என்று…..🤭
சரி “அஸ்விஹாவின் காதல்”கதைய முடிச்சிட்டு கிளம்பிடுவோமா?
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
இன்னுமொரு அற்புதமான கதைக்களத்தில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது
✍🏻உங்களின் அனுஷி…..📝
முற்றும்………..
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

