
காதல் -77
அனந்தியின் சூழ்ச்சியால் அஸ்வதி விபத்துக்குள்ளாகி ஒரு வாரம் கோமா நிலையில் இருந்து தன் காதலனால் மீண்டு இப்பொழுது திருமண நாள் வரை வந்தாள்……
அன்று அந்த பெரிய திருமண மண்டபமே உறவினர்களாலும் நண்பர்களாலும் நிரம்பி இருந்தது நம்முடைய கதையின் ஏழு ஜோடிகளுக்கும் அன்று திருமணம்……
அஸ்வதி
💕வெட்ஸ்💕
விஹான்
துவாரகா
❤️வெட்ஸ் ❤️
துருவன்
அர்ச்சனா
🧡வெட்ஸ்🧡
ஹர்ஷத் கான்
வள்ளியம்மை
💛வெட்ஸ்💛
மதன் குமார்
சந்தியா
💚வெட்ஸ்💚
சூர்யா
மற்றும் இன்னும் ஏழாவது ஜோடியாக
விஹான்னா
💙வெட்ஸ்💙
விக்ரமாதித்தன்
என்று நமது அனைத்து நாயகன் நாயகிகளுக்கும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது…….
மணமகன்கள் ஏழு பேரும் அக்னி முன்பு அமர்ந்து கொண்டு ஐயர் கூறும் மந்திரங்களை கர்ம சிரத்தையோடு கூறி கொண்டு இருந்தார்கள்…..
பிறகு ஐயர் மணப்பெண்களை அழைத்து வர கூறவும் மணப்பெண்கள் அனைவரும் கண்ணைக் கவரும் மயிலாக ஒயிலாக நடந்து வந்து தங்களின் காதலன் அருகே அமர்ந்தனர்……..
ஐயர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று கூறவும் மணமகன்கள் அனைவரும் தங்களை நீண்ட நாள் காதலியை தங்களின் சரிப்பாதியாக தாலி கட்டி தங்களின் மனைவியாக மாற்றிக் கொண்டனர்…….
பிறகு ஆயிரமாயிரம் சத்தியங்களோடும் ஆயிரமாயிரம் கனவுகளோடும் மூன்று முறை அக்னியை வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தங்களின் மனையாளின் கால்களில் மணமகன்கள் மெட்டி போட்டு விட்டனர் ………….
பிறகு போட்டோ சூட் அனைத்தும் முடிந்து இரவில் ரிசப்ஷனில் அனைத்து ஜோடிகளும் தத்தம் இணைகளோடு சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டிருந்தனர்……..
இரவு நேரம் வந்தது அனைத்து ஜோடிகளும் முதலிரவுக்கு தயாராகி தங்களின் அறைக்குள் சென்றனர்…….
விஹான் அஸ்வதி அறைக்குள் வரவும் அவன் கதவை தாழிட்டு அவள் கையில் வைத்திருந்த பால் சொம்பை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு அஸ்வதியின் கால்களில் விஹான் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான்…..
என்னங்க என்ன பண்ணுறீங்க?அய்யோ எழுந்தரிங்க, என்னோட காலுல ஏன் விழறீங்க ?
என்னோட பொண்டாட்டி காலுல நா விழாம வேற யாரு விழுவா?
‘என்னை உன் வாழ்வில் இணைததற்கு நன்றி , ஆயுள் முழுவதும் நின் காலடியில் நான்” என்று அவன் அவளின் கால்களில் முத்தமிட்டான்…..
பிறகு அவன் எழுந்து நின்ற போது அஸ்வதி அவன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்……
“என்னுடைய வாழ்வை வன்னமயமாக்கிய என்னுடைய மண்ணவனுக்கு நன்றி, இறுதி மூச்சு உள்ளவரை நின் காதலுக்கு நான் அடிமை” என்று அவளும் அவனின் கால்களில் முத்தமிட்டாள்……
அவள் இவ்வாறு கூறியதும் விஹான் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்………
பிறகு அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பார்வையால் பரிபாஷனைகள் செய்து கொண்டிருந்தனர்….
அதில் ஆயிரம் வலிகள்,சோகங்கள் , கண்ணீர்கள் என்று இந்த நாளை அடைய அவர்கள் போராடிய நாட்கள் அவர்களுக்கு நினைவு வந்தது….
இருவரும் நீண்ட நேரம் இறுக அணைத்து கொண்டார்கள்….
விஹான் அஸ்வதியின் கழுத்தை பார்த்தான் அதில் மாலை போட்ட தடம் ஏறி சிவந்து போய் இருந்தது , அவளின் ஹேர்ஸ்டைல் அவளின் முடிகளை இறுக்கமாக இழுத்து வைத்திருந்தது, அவளின் கனமான லெஹங்கா அவளது உடலில் வலியை ஏற்படுத்துவது போல அங்கங்கு சிகப்பு கோடுகள் இருந்தது , நீண்ட நேரம் ஹீல்ஸ் அணிந்திருந்தனால் அவளது கால்கள் வீக்கம் கண்டிருந்தது இதை கவனித்த விஹான் அவளை கட்டிலில் அமரவைத்து அவளது முடியை முதலில் சரி செய்தான் , பிறகு அவளின் நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி வைக்க உதவினான் , பிறகு அவளது பையை தேடினான் அது அங்கு இல்லை அதனால் அவனுடைய ஒரு சட்டையும் , ஷார்ட்ஸ்சும் மாற்றுடையாக கொடுத்தான் அவளும் மாற்றிவிட்டு வந்தாள், பின்னர் அவளது காலை உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் வைத்தான் பின்பு அவள் கழுத்தில் சூடான நீரில் ஒரு துணியை நனைத்து அதை வைத்து ஒத்தடம் கொடுத்தான் ….
அவனது தூய அன்பிலும் அக்கறையிலும், அவள் சர்க்கரை கரைசலாகத்தான் உருகி போனாள்….
பின்பு அவன் ஒத்தடம் கொடுத்து முடித்து விட்டு அவளை தனது நெஞ்சாங்கூட்டில் வைத்து உறங்க செய்தான் ….
அப்பொழுது….
விஹான்……..
சொல்லும்மா …..
அவ்வளோதானா??
இன்னும் கால் வலிக்குதா?
ஒத்தடம் குடுக்கவா??
ம்ம்ம்ம்… இல்ல… இல்ல…
அது …….
இன்னைக்கு அவ்வளோதானா??
அவளது கேள்வியில் முதலில் விழித்தவன் பிறகு புரிந்து கொண்டு அவளுக்கு உடம்பு முழுவதும் உள்ள வலியை இவன் போக்க ஆரம்பித்தான்…
அங்கே நல்லதொரு இல்லறம் இனிதே ஆரம்பித்தது…….
இவ்வாறு ஒவ்வொரு ஜோடியும் தங்களின் வாழ்வை ஆரம்பித்தனர்……
எபிலாக்…….
ஐந்து வருடங்களுக்கு பிறகு…….
இருபத்தி ஆறுகளின் தொடக்கமது…
மழை பெய்யா மாலை வேலையிலே தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் விஹான் மற்றும் அவனின் காதல் மனைவியான அஸ்வி ரம்மியமான ரகசிய இரவில் காதல் ரகசியங்களை பேசி கொண்டு இருந்தார்கள்…
அஸ்வி …
சொல்லுங்க விஹான்……..
என்னோட வாழ்க்கை எப்படி எப்படியோ போயிருக்க வேண்டியது அத நீ ஒரு அழகான பூந்தோட்டம் ஆக்கிவிட்டுட்ட………
வர்தா புயல் மாதிரி என் வாழ்க்கைக்குள்ள வந்த அப்புறம் வறண்டு போய் இருந்த என் வாழ்க்கையில ஒரு குட்டி வண்ணத்து பூச்சியா வந்து என் வறண்ட பாலைவனத்த வானவில் நிரம்பின பூந்தோட்டம் ஆக்கினதுக்கு நன்றி என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்…
விஹான் ஜில்லுன்னு காத்து அடிக்குது , இதுக்கு ஏத்த மாதிரி ஒரு பாட்டு பாடேன்………
பாடிட்டா போச்சி என்று அவன் பாட ஆரம்பித்தான்……..
“இனி இரவே
இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும்
எனக்கு இசை
உன்னை காணும்
வரையில் எனது வாழ்க்கை
வெள்ளை காகிதம் கண்ணால்
நீயும் அதிலே எழுதி போனாய்
நல்ல ஓவியம் சிறு பாா்வையில்
ஒரு வார்த்தையில் தோன்றுதே
நூறு கோடி வானவில்
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்”………
அவன் அவ்வாறு அவளை பார்த்து காதலாக பாடவும் அவள் அவனின் காதலில் அவன் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டாள்……..
……….
அங்கே துவாரகா மற்றும் துருவ் இருவரும் தங்களின் அறை பால்கனியில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு காதலாக கதைத்து கொண்டிருந்தனர்……..
துவாம்மா நீ எப்பவும் அழகா புசுபுசுன்னு இருப்ப இப்போலாம் கொஞ்சம் ஓவர் சப்பியாவும் ரொம்ப அழகாவும் தெரியுறயே என்று அவளை பார்த்து காதலாக கூறினான் துருவ்…
அது டிரஸ் கொஞ்சம் லூசா இருக்கு அதான் நா அப்படி தெரியுறேன் என்று அவள் உடையை குறை கூறினாள்…
அவன் சிரித்து விட்டான்…
தினமும் அவளின் அங்க வளைவுகளை ரசித்து கொண்டு இருப்பவனுக்கு தெரியாதா அவளின் கூடிய வளைவுகளை அதையும் அவன் ரசிக்க தவறவில்லை……
துவா இங்க வா என்று அவளை அவனருகில் அமர வைத்தான்…அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டே அவளின் பஞ்சு விரல்களில் மென்மையாக சுளுக்கு எடுத்து விட்டு கொண்டே அவன் கேட்டான் ….
துவா நா உன்ன சந்தோஷமா பாத்துக்குறேனா?
இல்ல ரொம்ப மோசமா பாத்துக்குறீங்க …..
துவா ஒழுங்கா சொல்லுடா செல்லம்..
பின்ன இப்படி கேள்வி கேட்டா நா என்ன சொல்லனும்?உங்கள நா விரும்பினேன் நீங்க எனக்கு கிடைக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சப்போ எனக்கு உங்கள மறக்க முடியல….
ஆனா நீங்க எனக்குன்னு அந்த கடவுளே முடிவு பண்ணிருக்காங்க போல என்று அவன் கழுத்து வளைவில் கை கோர்த்து தன் மூக்கை கொண்டு அவன் மூக்கை உரசினாள்….
எனக்கு என்னோட அம்மா என் கண்ணு முன்னால செத்து போன பிறகு உலகமே இருண்டு போன ஃபீல் அப்போ……
அப்போ நா வந்து உன் வாழ்க்கையில டார்ச் அடிச்சேனா??
இல்ல இருளில் இருக்கும் சந்திரனாக இருந்த என்னை நீ ஒளியில் இருக்கும் சூரியனாக மாற்றி விட்டாய்…
அவன் அவ்வாறு கூறவும் துவாரகா சிரித்து விட்டாள்…
செரி இப்போ உனக்காக இந்த துருவன் ஒரு பாட்டு பாட போறேன் கேளு என்று அவன் பாட ஆரம்பித்தான்…
“நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாற கூடும்
நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்….”
வாவ் மிஸ்டர் துருவன் செம்மயா பாடுறீங்க என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் , அவளின் முத்ததில் சித்தம் மறந்து தத்தையவளின் மடியில் மயங்கி அவளை ரசித்தவாறே அந்த இரவை இரு விண்மீன்கள் ரசித்து கொண்டு இருந்தன……
……….
ஹர்ஷா அவன் அறையில் தன் காதல் மனைவியோடு காதலாக பேசி கொண்டு இருந்தான்…….
அச்சு ஹர்ஷாவை இங்கே கொஞ்சி கொண்டு இருந்தாள்…
என் பப்பாளி பழமே…
என் தக்காளி ரசமே….
என் கொத்தமல்லி தழையே…
என் கருவேப்பிலை கொழுந்தே…
என் செரியே .. என் ப்ளூபெரியே …
நீ என் வாழ்க்கைல எவ்ளோ பெசல் தெரியுமா??
தெரியுமே நா கட்டுன தாலிய உன் கழுத்துல ஏத்துக்கிட்டு, நம்ம புள்ளைய கருவா உன் வயித்துல சுமந்துகிட்டு என் வாழ்க்கைய சொர்கம் ஆக்குன என் தேவதயே நீ என் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப பெசல்…
அடடா எம்புட புருசர்க்கு இப்படியெல்லாம் பேச தெரியுமோ??
கொஞ்சம் கொஞ்சம் தெரியும்ங்கமினி…
பார்ரா கோயம்புத்தூரு ஸ்லாங் எல்லாம் வருது….
அதுவும் கொஞ்சம் கொஞ்சம் வரும்ங்கம்மினி….
அவள் சிரித்து விட்டாள் அவன் பேச்சை கேட்டு…
இதுக்கே சிரிச்சா எப்படி ?
உனக்கு ஒரு பாட்டு வச்சிருக்கேன் ..
பாடவா?
என்னடா அசிங்கமா கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு நீ பாடு நா கேக்குறேன் என்று அவன் பரந்த மார்பினில் பாந்தமாக சாய்ந்து கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்…
அவன் பாட ஆரம்பித்தான்…
” படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத
உன் விரல் புடிச்சு
நானும் கரை ஏறுவேன்
என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே…”
என்று அழகாக பாடினான்..
ஹர்ஷா நீ என் வாழ்க்கையில கிடைக்க நா குடுத்து வச்சிருகணும் ஐ லவ் யூ சோ மச்…
நானுந்தான்டி உன்ன ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன் என்று அவளை காற்று புக முடியாத அளவுக்கு இறுக அணைத்து கொண்டான்……..
தொடரும்…….
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……….
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

