Loading

அத்தியாயம் 38 

குளியலறையிலிருந்து வெளியே வந்தவள் இதழ்களில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்தவனை விசித்திரமாக பார்த்தப்படி “பாலை குடிச்சிட்டு… அந்த தேங்காய் எண்ணெயை தொப்புள்ளுக்கும், பெரு விரலுக்கு வைச்சிட்டு படுங்க” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் படுக்கையில் விழுந்தாள்… 

“தொப்புளுக்கும், பெரிய விரலுக்குமா? அது சரி” என்றவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது…

“எதுக்கு இப்படி சிரிச்சிட்டே இருக்கீங்க?” பின்னால் திரும்பி பார்த்தபடி கேட்டாள். 

“அதை விடு… இந்த தேங்காய் எண்ணெயை உங்கிட்ட குடுத்து விட்டது யாரு?” புருவத்தை பெருவிரலால் கிறீக் கொண்டே கேட்டவனின் முகம் சிவந்திருந்ததோ? 

“அதுவா… ஒரு பாட்டி கொடுத்துட்டு விட்டாங்க…” என்றாள்.

“என்னனு சொல்லி குடுத்தாங்க” அடுத்த கேள்வி அவனிடத்தில். 

“எதுவும் சொல்லலயே ஏன்?…” 

“ம்ம் ஒன்னுமில்லை…” என்றவன் அப்பொழுது தான் அவள் உடை மாற்றாமல் அமர்ந்திருப்பது தெரிந்தது. 

 “ஆமா நீ டிரஸ் சேஞ்ச் பண்ணலையா?” 

“அதை எதுக்கு பண்ணிக்கிட்டு…” அசட்டையாக கூறியவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் உடைமாற்றி வெளியில் வர, மெல்லிய குறட்டை சத்தத்தோடு உறங்கிக் கொண்டிருந்தாள் இவனது மனைவி… 

“புளிமூட்டை” என்று தலையாட்டி சிரித்தவன் சீதாவிற்கு அழைத்து பிள்ளைகள் உறங்கி விட்டனரா? என்று விசாரித்தான். இருவரும் உறங்கி விட்டனர் என்றதும் அழைப்பை துண்டித்தவன்

சொம்பிலிருந்த பாலைக் குடித்துவிட்டு மேசையில் வைத்தான். அதற்கு அருகில் சில்வர் டம்ளரிலிருந்த தேங்காய் எண்ணெய் இவனைப் பார்த்து சிரிக்க, நெற்றியை நீவி சன்னமாய் சிரித்தவன் ஆனந்தியின் அருகில் சென்று படுத்துக் கொண்டான்… அடுத்த சில நிமிடங்களில் உறங்கியும் போனான்…

அதிகாலையில் ஆரம்பித்த ஓட்டம் இரவு வரைக்குமே தொடர்ந்ததில் அதீத அலைச்சல் இருவருக்கும்… அதன்விளைவு படுக்கையில் விழுந்தவர்கள் உடனே உறங்கியும் போனார்கள். 

******

கதவு தாளிடும் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள் ஆனந்தி… அறையிலிருந்து இருட்டே இன்னும் விடியவில்லை என்பதை சொல்லாமல் சொல்ல கண்களை கசக்கி கொண்டே சுற்றிலும் பார்வையை சுழல விட்டவள் பக்கவாட்டில் மேசைக்கு அருகில் நின்றிருந்த உருவத்தை கண்டதும் “ஆவென்று” அலறினாள். 

“ஹேய் நான் தான் டி…” அவளது கத்தலில், சற்றே எரிச்சலாக வந்தது இவனது குரல்.

அவனது எரிச்சல் நிறைந்த குரலில் தன்னிலைக்கு வந்தவள் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்க்க, இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தான் அபிநயன்…

அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் “அச்சோ…” என்று மீண்டும் அலறி, விழிகளை இறுக மூடிக் கொள்ள 

“ப்ச்ச் இப்ப என்னடி?” 

“காலங்காத்துல ஏன் இப்படி நிக்கிறீங்க?” கடுப்பாக கேட்டவளை புரியாமல் பார்த்தவன்.

“எப்படி நிக்கிறேன்…” எனக் கேட்டான்

“குளிச்சிட்டு வந்து ட்ரஸ் கூட போடாம நிக்கறீங்க? கொஞ்ச கூட அறிவே இல்லை உங்களுக்கு…” பல்லைக் கடித்தபடி கூற 

“வாட்” என்று அதிர்ந்தான் அபி.. 

“என்ன வாட்? அப்படி தானே நின்னுட்டு இருக்கீங்க?” எனக் கேட்டவளை கோபமாக பார்த்தவன் “கண்ணைத் திறந்து நல்லா பாரு” என்றான் அழுத்தமாக.. அவனது குரலில் இருந்த அழுத்தத்தில் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். 

அவனைத் தலை முதல், பாதம் வரைக்கும் பார்த்துவிட்டு, நன்றாக கண்களை திறந்தவள் “அது…உங்க இடுப்பு துணி கொஞ்சம் கீழ இறங்கி இருக்கவும் பயந்துட்டேன் தலைவரே… வேற ஒன்னுமில்லை…” என்றாள் கேலியாக. 

“உன் மூஞ்சி” என்றவன் மீதி வார்த்தையை வாய்க்குள்ளேயே முனகி விட்டு பால்கனி பக்கம் திரும்ப

“என்ன உன் மூஞ்சி?… சொல்றதை முழுசா சொல்லிட்டு போங்க சார்… பாதியை முழுங்கிட்டு சொல்லாதீங்க” கரகரத்த குரலில் கத்தினாள்.

அவளது கத்தலில் அவசரமாக அவளை நெருங்கியவன் “ஷ், இப்ப எதுக்கு டி கத்தற…” மெதுவாக கேட்டான்.

“சரி கத்தலை… ஃபர்ஸ்ட் சொன்னதை முழுசா சொல்லுங்க” கைகளை கட்டியபடி கோபமாக கேட்டவளை நமட்டு சிரிப்போடு பார்த்தவன்

“உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வைக்கண்ணு சொன்னேன்” என்றவன் செயலிலும் செய்ய, 

“எருமை மாடே…” என பல்லைக் கடித்தவள் படுக்கையிலிருந்து எழ, துள்ளி குதித்து ஓடினான் அபி.

“நில்லுங்க… நில்லுங்கன்னு சொன்னேன்” கத்திக் கொண்டே அவன் பின்னால் ஓட, அவளது கைகளுக்கு அகப்படாமல் ஓடியவன் என்ன நினைத்தானோ சட்டென நின்றான்.. அவன் நிற்பான் என்று எதிர்ப்பாரதவள் அவன் மீதே மோதி நின்றாள்…

ஆடவனின் வெற்று மார்பில் மோதியதும் “அச்சோ என் மூக்கு” என முனகிக் கொண்டே விலகி நின்றவள் அபியை அண்ணார்ந்து பார்த்தாள். 

ஆடவன் விழிகள் சொன்ன பாஷை இவளது உள்ளங்காலை சில்லிட செய்தது… அக்கணம் அவளது மூச்சுக் காற்று தன்னாலேயே சூடாகி போக, விழிகள் தடுமாற்றத்தோடு கணவனைப் பார்த்தது. அவனது முகம் பல உணர்வுகளை வெளிக்காட்ட, குப்பென்று வியர்த்தது அவளுக்கு….

தன்னுள் எழும் இனம் புரியாத உணர்வுகளையும், தடுமாற்றத்தையும் அடக்கியப்படி “நீங்க எதுக்கு இந்த நேரத்துல குளிச்சு இருக்கீங்க” எனக் கேட்டு மணியைப் பார்த்தாள். 

அதிகாலை நான்கு மணியை தாண்டி சென்று கொண்டிருந்தது. விழிகளை அகல விரித்து “இப்ப தான் நாலு மணி ஆகுது. இந்த நேரத்துல எதுக்கு தலைக்கு குளிச்சு இருக்கீங்க?” எனக் கேட்டவள் அவசரமாக வார்ட்ரோப்பிலிருந்த டவலை எடுத்து வந்து அவனது ஈரக் கேசத்தை துடைத்தாள்.

“ஃபர்ஸ்ட் நைட்டு முடிஞ்சா பொண்ணு தானே நேரமா எழுந்து தலைக்கு குளிச்சுட்டு வெளிய போகும்… நீங்க என்ன உல்டாவா பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டவளை இடுப்பில் கை வைத்து முறைத்தான்.. 

“சும்மா சும்மா முறைக்காதீங்க சார்.. உண்மையை தானே சொல்றேன்… ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் பொண்ணு தான் தலைக்கு குளிக்கும்…” 

“அதுக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சு இருக்கணும்” என்றான் முணுமுணுப்பாக… 

“என்ன சார்?” 

“ஒன்னுமில்லை…” என்றவன் பார்வை முழுக்க அவள் கலைந்திருந்த பட்டு சேலையின் மீது தான் இருந்தது.

படுக்கையில் விழுந்தவனுக்கு அடுத்த நிமிடமே உறக்கம் வந்திருந்தது… அதிகாலை வரைக்குமே நன்றாக தான் உறங்கிக் கொண்டிருந்தான்…

தீடிரென்று ஆனந்தி அவன் மேல் காலைத் தூக்கிப் போடவும் உறக்கம் கலைய, விழிகளை திறந்தான்.

இவனது தோளில் தலை வைத்து படுத்திருந்தாள்.. அவளது முகத்தை நெருக்கத்தில் பார்த்ததும் மொத்த தூக்கமும் டாட்டாக் காட்டிவிட்டு சென்றது. அவளையே இமைக்காமல் பார்த்தான். 

முத்தம் வைக்கத் தோன்றும் கன்னங்களும், முகத்தை புதைத்துக் கொள்ள தோன்றும் கழுத்து வளைவும் அவனை பெரிதாய் இம்சை செய்தன. நொடிகள் கரைய கரைய மூச்சுக் காற்றின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே சென்றது ஆடவனுக்கு… 

இத்தனை நெருக்கத்தில் அவளைக் கண்டதும் அவனைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை… முன்பு எப்படியோ? இன்றைக்கு அவனது பார்வை மாறத் தொடங்கி இருந்தது. அக்கணம் இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த மொத்த உணர்வுகளும் வெளிவர ஆரம்பித்தன… 

மங்கையின் நெற்றி, கன்னம், இதழ்கள் என்று அனைத்திற்கும் குட்டி குட்டியாக முத்தம் வைத்தான்.நேரம் செல்ல செல்ல அவள் மொத்தாய் வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. 

அதே நேரம் உறங்கும் பெண்ணிடம் மேலும் அத்துமீற தோன்றவில்லை… ஒரு பக்கம் இவனது உணர்வுகள் வேறு பேயாட்டம் போட்டது… குளித்தால் நன்றாக இருக்குமோ? தன் உணர்வுகள் அடங்குமோ? என நினைத்தவன் குளித்து விட்டு வெளியில் வந்தான்…  

அப்பொழுது அடித்து சாத்தப்பட்ட பாத்ரூம் கதவின் சத்ததில் ஆனந்தி எழுந்து அலறியது. 

“சார், நைட்டு தேங்காய் எண்ணெயை கால் விரலுக்கும், தொப்புளுக்கும் வைச்சுட்டு படுத்தீங்களா?” ஆனந்தியின் கேள்வியில் தன்னிலைக்கு வந்தவன் “ஹான் இல்லை…” என்று தலையாட்டினான். 

“என்ன சார் நீங்க…” சலித்து கொண்டவள் கையிலிருந்த டவலை அருகிலிருந்த நாற்காலியில் போட்டுவிட்டு தேங்காய் எண்ணெயை எடுத்தாள்…

“ஹேய்… அது அதுக்காக இல்லை டி” என்றவன் அவசரமாக தேங்காய் எண்ணெயை அவளிடமிருந்து வாங்க முயல, அவளோ அதனை அவனிடம் தராமல் “வேறு எதுக்காம்” புருவத்தை உயர்த்தி கேட்டாள். 

“வேற எதுக்கும் இல்லை…அதை என்கிட்ட குடு…” ஆனந்தியின் கையிலிருந்து வாங்க முயல, அவளோ போக்கு கட்டினாள்.  

அடுத்த சில நிமிடங்களுக்கு இதுவே தொடர, இருவரின் இடைவெளியும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது…

“எதுக்கு இப்படி பண்றீங்க சார்? உங்களுக்கு தேய்ச்சு விட தானே நினைக்கிறேன்.. அதை ஏன் தடுக்கிறீங்க?” எனக் கேட்டுக் கொண்டே பின்னால் நகர, அவனோ பதில் சொல்லாமல் முன்னால் நகர்ந்தான். 

“சார் அங்கேயே நில்லுங்க” சுவற்றில் சாய்ந்தபடி கூறியவளின் குரல் தேய்ந்து ஒலிக்க, அவனோ ஆனந்தியின் மிரட்டலை கண்டுக் கொள்ளாமல் மொத்தமாய் அவள் மீது மோதி நின்றான்… 

ஆடவனின் மொத்த தேகமும் தன்னை தீண்டியதில் பாவையின் விழிகள் அகலத்திற்கும் விரிந்தது… அவளது விழி விரிப்பை ஆழ்ந்து பார்த்தவன் இன்னும் இறுக்கத்தை கூட்டி அவளிடத்தில் நெருங்கினான்.. 

ஆடவனின் வெற்று உடலும், சூடான மூச்சுக் காற்றும்,பெண்ணவளின் மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பியது. உணர்ச்சியின் பிடியில் கண்களை இறுக மூடிக் கொண்ட நேரம்,அவளது இதழ்களை தன் பற்களால் மெல்ல கடித்து பின் இதழ்களுக்குள் அதக்கி கொண்டான். 

அபியின் அதிரடி முத்தத்தில் “ஹக்” என்று பெரிதாக அதிர்ந்தவள் கையிலிருந்த தேங்காய் எண்ணெயை அபியின் மீதே கொட்டியிருந்தாள்… 

 பூவிலிருந்து தேனெடுக்கும் வண்டாய் மெல்ல மெல்ல அவளது இதழ் தேனை அருந்தினான்… 

நீண்ட நெடிய முத்தம் அத்தனை ரசனையோடு கொடுத்தான்… 

இதழ்கள் அதன் வேலையை செய்ய, ஆடவனின் கைகள் பெண்ணின் இடையில் அழுத்தமாக பதிந்து மெல்ல மேலேறியது. அவனது மெல்லிய தீண்டலில் பெண்ணின் கால்கள் தளர “பிளீஸ்” என்றாள்.

“ம்ம் பிளீஸ் டி” என்றவன் கைகள் பெண்ணின் உடலில் அதன் எல்லையை மென்மேலும் தாண்ட, துவண்டு போனாள் பெண்..

புதுவித உணர்வுகள் அவளை மொத்தமாக தாக்க, உணர்வுகளின் பிடியில் கணவனின் தோளில் லேசாக கடித்து வைத்தாள்… 

“ஷ்” மெல்லிய முனகலோடு அவளை தன்னுள் இறுக்கினான். அவனோடு ஒன்றி அவனது மார்பில் குட்டி குட்டி முத்தங்கள் வைக்க, அவளை அப்படியே அள்ளிக் கொண்டவன் படுக்கையில் கிடத்தினான்.. 

பாவையின் முகமெங்கும் முத்தமிட்டு, பெண்ணின் கழுத்தில் முகம் புதைத்தவன் மெல்ல கீழ் இறங்க, முன்பு கைகள் செய்த வேலையை தற்பொழுது இதழ்கள் செய்தது… 

இருவரின் உணர்வுகளும் மொத்தமாய் கொழுந்துவிட்டு எரிய,

அடுத்தடுத்து நடந்த செயல்கள் அனைத்தும் இருவரின் கட்டுப்பாடுகளை தாண்டிய இயக்கங்கள் தான்… 

 

பனி விழும் இரவு நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது

வா வா வா

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
52
+1
3
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்