Loading

காதல் -75

 

துவாரகா மற்றும் துருவ் இருவரும் தங்களை தங்களின் மனதில் பூட்டி வைத்து இருந்த காதலை இருவரும் இருவருடனும் பகிர்ந்து கொண்டனர்…….

 

துருவ் தன்னுடைய வாழ்வில் நடந்த மிகவும் மோசமான சம்பவத்தை தன்னுடைய காதலியுமான மனைவியுமான துவாரகாவிடம் கூறிக் கொண்டிருந்தான் அதைக் கேட்டு துவாரகா அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்……

 

துவாரகா அன்னைக்கி நா  புல் போதையில அஸ்வதிகிட்ட அப்படி நடந்துக்கிட்டது ரொம்ப தப்பு , என்னோட அம்மாவ அவங்க அப்படித்தான் பண்ணாங்க அதான் நா கிருக்குத்தனமா அவகிட்ட அப்படி நடந்துகிட்டேன் , அத நினைச்சா இன்னும் எனக்கே என்ன நெனச்சி கேவலமா இருக்கு…..

 

அதான் அஸ்வதி உன்னய மன்னிச்சுட்டாளே, என்னோட விஹான் அன்னாத்தயும் உன்னை மன்னிச்சிட்டாங்கல்ல? அப்புறம் என்ன?என்ன கேட்டா விஹான் அன்னாத்த உன்ன ரெண்டு அடி அடிச்சிருக்கணும் அவரோட குல சாமி,  உயிர் காதலி  அஸ்வதிய இப்படி பண்ணதுக்கு அவரு உன்ன அடிக்காம விட்டுருக்காரு அத நினைச்சு சந்தோஷப்படு…….

 

அஸ்வதி கிட்ட நா அப்படி நடந்துக்கிட்டதுக்கு விஹான் என்னைய அடிக்காம விட்டுருப்பாருன்னு நினைக்கிற?

 

அப்போ விஹான் அன்னாத்த உன்ன அடிச்சிட்டாரா?

 

ஆமாடி அததானே சொல்லிட்டு இருக்கேன்……..

 

இப்போ எனக்கு சந்தோஷம் நீ செஞ்ச தப்புக்கு தண்டனை வாங்கிட்ட சோ இனிமே அத நினைச்சு பீல் பண்ணாத உன்னோட பழைய கசப்பான ஞாபகங்கள் எல்லாம் இங்க மணாலிலேயே புதைச்சுட்டு வா தமிழ்நாட்டுக்கு வரும்போது என்னோட காதல்  கணவனா , காதலனா என்னோட எல்லாமா வந்தா போதும் சரியா என்று துவாரகா அவனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தாள்…….

 

ஆமா நேத்து அதென்ன சொன்ன?இப்படி இருந்தா உனக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு டிஷர்ட்ட கழட்டி போட்டுட்டு என்கிட்ட வர, எனக்கு அப்படி இருந்தா பிடிக்கும்னு நா உன்கிட்ட சொன்னேனா?

 

நா என்ன சொன்னேன்?

 

நேத்து நீ ஃபுல் போதையில உன்னோட டிஷர்டை கழட்டி போட்டுட்டு என் மேல அப்படியே சாஞ்சுட்டு , என்கிட்ட வந்து உன்ன நீயே ரேப் பண்ண சொல்லுற என்று அவன் அவளை பார்த்து கோபமாக முறைத்தான்……

 

சாரிடா கரடி நான் ஏதோ போதையில் உளறி இருக்கேன், மனசுல எதுவும் வச்சிக்காத சாரி என்று துவாரகா துருவின் கன்னத்தைப் பிடித்து செல்லமாக கிள்ளினாள்……

 

நேத்து என்னோட காதலியா மட்டும் தான் நீ இருந்த ஆனா இப்போ என்னோட பொண்டாட்டியாயிட்ட அதனால இப்போ உன்னைய ரேப் பன்னலாம்ல்ல என்று அவன் அவளின் இதழ் அருகே சென்று அவளின் இதழை சிறை செய்தான்……

 

ஒற்றை இதழ்  முத்தத்திற்கே துவாரகா துருவின் மேல் சாய்ந்து விட்டாள்……

 

பிறகு துருவ் அவளை தன் இருக்கைகளில் ஏந்தி கொண்டு  பெட்டுக்கு சென்று அவளை தன் நெஞ்சினில் சாய்த்துக் கொண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்றாக உறங்கினான் , துவாரகாவிற்கும் அவன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டு  உறங்கியது நல்ல தூக்கத்தை கொடுத்தது………..

 

எவ்வாறு நான்கு ஜோடிகளும் தங்களின் காதல் விடுமுறையை மணாலியில் கழித்து விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்…….

 

வள்ளி தஞ்சாவூரில் மதன் இல்லாமல் தனியாக தவித்துக் கொண்டிருந்தாள் அவனின் அருகாமையை அவளின் மனம் தேடியது……

 

மதனுக்கும் வள்ளி இல்லாமல் , தனியே இருக்க மனம் ஒரு மாதிரி இருந்தது அவனுக்கும் அவளின் அருகாமையில் இல்லாமல் அவன் தவித்து போய் இருந்தான்……….

 

எனவே வள்ளி தஞ்சாவூரில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ட்யூட்டியை சீக்கிரம் முடித்துவிட்டு சென்னை திரும்பி கொண்டு இருந்தாள்……

 

மதனும் இங்கிருக்கும் வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு வள்ளி இருக்கும் தஞ்சாவூருக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தான்……..

 

வள்ளி மற்றும்  மதன் இருவரும் ஹைவேயில் சந்தித்துக் கொண்டனர், மதனின் காரைப் தூரத்திலிருந்தே பார்த்த வள்ளி அவள் காரில் இருந்து இறங்கி மதனின் காருக்கு அருகில் ஓடி சென்று கொண்டிருந்தாள்……

 

வள்ளி ஓடி வருவதை பார்த்த மதன் அவனும் காரில் இருந்து இறங்கி அவள் அருகே ஓடி சென்றான் இருவருக்கும் வேகமாக ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது பிறகு மதன் வள்ளியை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான், வள்ளியும் மதனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்…….

 

மதன் நீ இல்லாம எனக்கு ஏதோ மாதிரி இருக்கு என்ன விட்டு நீ எங்கேயும் போகாத உன்ன விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் என்று வள்ளி மதனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்……

 

வள்ளி என நீ கல்யாணம் பண்ணிக்கிறியா? என்னால இனி உன்ன விட்டுட்டு இருக்க முடியாது என்ற மதன் முட்டி போட்டு ஒரு மோதிர டப்பாவை திறந்து அதில் இருந்து ஒரு சிறிய மோதிரத்தை எடுத்து அவள் முன் நீட்டினான் வள்ளியும் சந்தோஷத்தோடு அவனுக்கு அவளின்  மனதோடு சேர்த்து விரலையும் கொடுத்தாள் மதன் சந்தோஷத்தோடு அவள் கைகளில் மோதிரத்தை போட்டு விட்டான்……..

 

அப்பொழுது அவர்கள் இருவரின் பின்னால் யாரோ கைத்தட்டுவது போல் என்று சத்தம் கேட்டது இருவரும் திரும்பி பார்த்தனர் அங்கு அஸ்வதி,  விஹான்,  துருவ் மற்றும்  துவாரகா நின்று கைதட்டிக் கொண்டிருந்தனர்……

 

என்னடா எங்க யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம வள்ளியே கல்யாணம் பண்ணிப்பியோ?

 

அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்டி அஸ்வதி, நீங்கதான் எங்க கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தி வைக்கணும்…….

 

அடடா இந்த ஐஸ் வைக்கிறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…..

 

ஐஸ் இல்லடி நெஜமாதான் எங்க ரெண்டு பேருக்கும் உங்கள விட்ட வேற யாரு இருக்கா???

 

சரிடா சரிடா செண்டிமெண்ட்ட எடுக்காத , சரி வாங்க எல்லாரும் சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்பலாம்…….

 

அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்…..

 

வீட்டிற்கு சென்று பார்த்தாள் அங்கு சித்திக் அப்பா  பீவி அம்மா, ஹர்ஷா, அர்ச்சனா மற்றும் ஹர்ஷாவின் பெற்றோர்கள் அமர்ந்து கொண்டு இருந்தார்கள்…..

 

அவர்கள் அனைவரையும் பார்த்து சந்தோஷமான அஸ்வதி அவர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்துக் கொண்டு குதித்தாள்……..

 

அம்மா , அப்பா , ஹர்ஷா, அச்சு எல்லாரும் எப்ப  வந்தீங்க? சொல்லவே இல்ல?

 

சர்ப்ரைஸ் டா கண்ணா…..

 

போங்கப்பா நீங்க எல்லாரும் வரேன்னு சொல்லி இருந்தா நானே ஏர்போர்ட்டுக்கு வந்து பிக்கப் பண்ணி இருப்பேன்ல?

 

இருக்கட்டும் அஸ்வதி அதான் விஹானாவும் விக்ரமும் எங்கள பிக்கப் பண்ணிட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டுட்டாங்களே…….

 

சரி எல்லாரும்  சாப்டீங்களா?

 

ஆமாடா அஸ்வதி, உன்னோட   அண்ணா விக்ரம்  சூப்பரா கொத்து பரோட்டா போட்டு கொடுத்தாங்க செமையா இருந்துச்சு நல்லா வயிறு ஃபுல்லா சாப்பிட்டோம்…….

 

பிறகு அஸ்வதி தன்னுடைய நெருங்கிய தோழியான வள்ளி மற்றும் துவாரகாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் பிறகு தன்னுடைய நெருங்கிய தோழர்களாக மதன் மற்றும் துருவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்…….

 

அஸ்வதி விஹான் நாங்க எல்லாரும் சேந்து ஒரு முடிவு எடுத்துருக்கோம்……

 

என்ன முடிவுப்பா?

 

இப்போ அஸ்வதியோட அஞ்சு பிரண்ட்ஸும் கெடச்சிட்டாங்க உங்க எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீங்களே பார்த்து வச்ச பையனும் இருக்குறாங்க பொண்ணும் இருக்குறாங்க அதனால நாங்க நாலு பேரும்  உங்க ஆறு பேரு கல்யாணத்தையும் ஒன்னா ஒரே மேடையில வச்சு நடத்தணும்னு ஆசைப்படுறோம் நீங்க என்ன சொல்றீங்க??

 

இதுல யோசிக்க என்ன இருக்கு நா மட்டும் தான் தனியா கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன் ஆனா என் கூட என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கும் கல்யாணம் நடந்தா நல்லா இருக்கும் என்று அப்பொழுது அங்கு வந்த சூர்யா மற்றும் சந்தியா கூறினார்கள்……..

 

சரி ஒரு ஓட்டு கிடைச்சுருச்சு இன்னும் மீதி அஞ்சு ஓட்டு இருக்கே??

 

அம்மா எங்களுக்கு ஓகே என்று துருவ் மற்றும் துவாரகா கூறினார்கள் இவ்வாறு அனைவரும் ஒத்துக்கொள்ள அவர்கள் ஆறு நண்பர்களுக்கும் அவர்களின் மனம் கவர்ந்தவர்களோடு ஒரே நாளில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண நாளை குறித்தனர்……..

 

திருமணநாள் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைவரும் சேர்ந்து நிச்சய பட்டு ,  திருமணப்பட்டு போன்ற ஜவுளிகள் அனைத்தையும் வாங்கிவிட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகளை அனைவரும் மும்முரமாக செய்தனர்…….

 

அப்பொழுது திருமண வேலைகளுக்காக அடிக்கடி விஹானாவும் விக்ரமும் ஒன்றாக பயணிக்க நேர்ந்தது, அந்தப் பயணத்தில் இருவரும் தங்கள் இதயத்தை ஒருவர் ஒருவர் இடமாற்றிக் கொண்டனர்……..

 

இருவருக்குள்ளும் காதல்  துளிர்விட்டு செடியாக முளைத்து மொட்டாக அரும்ப ஆரம்பித்தது……..

 

நம்முடைய கதையின் ஆறு ஜோடிகளுக்கும் அன்று நிச்சயதார்த்தம்…….

 

அஸ்வதியின் வீடு வண்ண வண்ண விளக்குகளால் வண்ணமயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது…….

 

ஆறு மணப்பெண்களும் நிச்சய பட்டை உடுத்திக் கொண்டு சர்வ ராஜ அலங்காரத்தில் ராணியாக மிளிர்ந்து கொண்டிருந்தனர்……..

 

ராணிகளுக்கு சமமாக நம்முடைய  ராஜாக்களும் ராஜ கம்பீரத்தோடு பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலித்துக் கொண்டிருந்தனர்……..

 

சுட்டெரிக்கும் சூரியன் மெதுவாக மறைந்து தென்றல் வீசும் இனிமையான சாயங்கால வேளையில் ஆறு ஜோடிகளும் ஒன்றாக மணமேடையில் கைகளை கோர்த்துக்கொண்டு நின்றனர்…….

 

அக்னஸ் சிஸ்டர் மற்றும் மரியா சிஸ்டர் ஜெபம் செய்துவிட்டு மணமக்கள் ஆறு பேரையும் ஆசீர்வாதம் செய்துவிட்டு வந்தனர்……….

 

விஜய் அப்பா மற்றும் மணமக்களின் பெற்றோர்கள் மணமக்கள் அனைவருக்கும் மோதிரத்தை எடுத்துக் கொடுக்க அவர்கள் அனைவரும் தங்களின் பெற்றோர் சாட்சியாக இறைவன் சாட்சியாக தங்களின் இனைகளுக்கு மோதிரம் மாற்றி தங்களின் பாதி திருமணத்தை அன்று முடித்தனர்………

 

அப்பொழுது அங்கிருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தி கொண்டிருந்தனர் அப்பொழுது அனைவரும் அதிர்ச்சியாககும்படி அங்கு சுலோச்சனா மற்றும் அனந்தி வந்தனர்…….

 

அவர்கள் இருவரையும் அங்கு எதிர்பாராத அனைவரும் அதிர்ச்சியில் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்……..

 

அனந்தி மேடைக்கு வரவில்லை அவள் கீழே அமர்ந்து விட்டாள், சுலோச்சனா மேடைக்கு சென்று அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் செய்து கொண்டிருந்தார் இறுதியில் அஸ்வதி விஹான் ஜோடிக்கு அருகே வந்து அஸ்வதியின் நெற்றியில் முத்தமிட்டு அவளை ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்றார் அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்……….

 

பிறகு சுலோச்சனா கீழே அமர்ந்து கொண்டு மேடையில் தங்கத் தாரகயாக ஜொலிக்கும் தன்னுடைய மகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்……..

 

இதைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தான் ஆனால் தேவராஜ் சந்தோஷமாக இருந்தார் ஏனெனில் அவர்தான் அவர்கள் இருவரையும் ஒரு வாரத்திற்கு பெயிலில்  தங்களின் குழந்தைகளின் கல்யாணத்துக்காக வெளியே அழைத்து வந்தார்…….

 

சுலோச்சனா அஸ்வதியிடம் சொந்தம் கொண்டாடுவதை பார்த்த அனந்திக்கு அஸ்வதி மேல் ஆத்திரமாக வந்தது அதற்கு மேலாக அவள் சிறுவயதில் இருந்தே ஒருதலையாக காதலித்த விக்ரம் இப்பொழுது விஹானாவின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பது பார்த்து அவளுக்கு அஸ்வதி மேலும் விஹானா மேலும் தீராத வெறுப்பு உண்டாகியது…….

 

அந்த வெறுப்பு அவளை கொலைகாரியாக மாற்றியது…….

 

நிச்சயதார்த்தத்திற்கு பிறகு விஹானும் அஸ்வதியும் இணை பிரியாத வாழ்க்கை வாழ போகிறோம் என்று சந்தோஷத்தில் இருந்தனர்……

 

நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு அவர்கள் அனைவரும் குடும்பத்தோடு மாமல்லபுரத்துக்கு சென்று பொழுதை சந்தோஷமாக கழித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர் அப்பொழுது அனைவரும் சாப்பிட ஒரு உணவகத்திற்கு சென்றனர்…..

 

விஹானா மற்றும் அஸ்வதி ஒரு காரில் இருக்கும் தங்களின் உடைமைகளை சரி பார்த்து கொண்டு இருந்தார்கள்…….

 

அப்பொழுது ஒரு லாரி வேகமாக அவர்கள் இருவரும் இருக்கும் காருக்கு அருகில் வந்தது ……..

 

அந்த லாரி தங்களை தான் இடிக்க வருகிறது என்று முதலில் அஸ்வதி தான் பார்த்தாள் , அதைப் பார்த்தவுடன் அவள் சற்றும் தாமதிக்காமல் விஹானாவை அருகில் இருந்த புல் தரையில் தள்ளிவிட்டு திரும்பவும் அந்த லாரி அவளை இடித்து  தூரமாக வீசிவிட்டு சென்றது…….

 

அந்தக் கோர விபத்தில் அஸ்வதி தூக்கி தூரமாக வீசப்பட்டாள், அவள் தலையில் இருந்து ரத்தம் வழிந்து அந்த ரோடு சிகப்பு நிறமாக மாறி இருந்தது…….

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்