Loading

காதல் -74

 

அஸ்வதி மற்றும் விஹான் அவர்களுக்கு கிடைத்த நண்பர்களான துருவ் மற்றும் துவாரகாவோடு மனாலி சென்று சந்தோஷமாக அவர்களின் செமஸ்டர் விடுமுறையை கழித்தனர்…..

 

அன்று இரவு ஒரு உணவு விடுதியில் அஸ்வதி, விஹான் ,துருவ் மூவரும் கல்லூரியை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் இருந்தனர் அந்த சமயம் துவாரகா தெரியாமல் பியர் குடித்து விட்டாள் பீர் குடித்ததால் அவள் மனதில் உள்ள அவளின் காதலை துருவிடம் கூறிவிட்டாள் அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் இரவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை , துவாரகா அழுது கொண்டே அவளின் அறையை வேகமாக சாத்தினாள்…..

 

துவாரகா அவள் அறைக்குள் வந்த பொழுது அவள் முதலில் பார்த்தது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் துருவின் முகம் தான் அவள் அழுது கொண்டே துருவின் அருகே சென்று அமர்ந்து கொண்டு அவனின் தலையை மெதுவாக கோதிவிட்டாள்……

 

துருவ் எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் ஏன்னு தெரியாது ஆனா உன்ன பாத்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கும் அப்படியே உன் கூடவே இருந்துடனும்ன்னு தோணும் ஆனா நா ஒரு அனாதை பொண்ணு உங்க வீட்ல யாருக்குமே என்ன மாதிரி பொன்ன புடிக்காது நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னையும் அவங்களுக்கு பிடிக்காது , அப்புறம் நேத்து நைட்டு நமக்குள்ள நடந்தது உங்க வீட்டில தெரிஞ்ருச்சுன்னா நா உன்னோட சொத்துக்காக தான் உன் கூட அப்படி இருந்தேன்னு சொல்லுவாங்க அதனால எனக்கு அந்த பழி சொல் வேணாம் எனக்கு உன்னோட காதல் போதும் அது உன்னோட கண்ணுல நா பாத்துட்டேன் இந்த ஜென்மத்துக்கு எனக்கு அது போதும், அப்படியே உன்ன எனக்கு பாக்கணும்னு தோணுச்சுன்னா நம்ம குழந்தையோட முக ஜாடைல உன்ன நான் பார்த்துப்பேன் நீ சந்தோஷமா இருக்கணும் நல்லா இருக்கணும் என்று துவாரகா அழுது கொண்டே,  உறங்கிக் கொண்டிருக்கும் துருவின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்று பதித்துவிட்டு தன்னுடைய துணிகளை எல்லாம் பேக் செய்துவிட்டு அந்த ரூமை விட்டு கிளம்ப பார்த்தாள் ஆனால் அவள் கிளம்ப போகும் சமயம் அவளின் கைகளை யாரோ பின்னால் இருந்து பிடித்து இழுத்தார் அவ்வாறு வேகமாக இழுக்கவும் துவாரகா அவளின் கையை பிடித்து இழுத்தவன் மேலே விழுந்து விட்டாள்……

 

துவாரகா திரும்பி பார்த்தாள் துருவ் நின்று கொண்டிருந்தான்…..

 

துவாரகாவின் கைகளை பிடித்து இழுத்து அவளை தன் நெஞ்சோடு இறுக்கமாக கட்டிக்கொண்டு அவளின் முகத்தை  தன் முகத்தோடு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு மிகவும் மெதுவான குரலில் மென்மையாக அவன் பேசினான்……

 

என்ன விட்டுட்டு நீ அவ்ளோ சீக்கிரத்துல போயிருவியா? இல்ல நா தான் உன்னை போக விட்டுடுவேனா?என்னோட உயிர்டி நீ, உன்ன விட்டுட்டு நான் எப்படி இருப்பேன்?எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நூறு வருஷம் இல்லனாலும் ஒரு தொண்ணுத்தி ஒன்பது வருஷமாவது ஒன்னா உன் கூட சேர்ந்து வாழனும்டி என்று அவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……

 

அந்த முதல் முத்தத்தில் அவள் கிறங்கி அவன் மேலே சாய்ந்து கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்…….

 

சிறிது நேரம் கழித்து அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை துருவை தள்ளி விட்டு விட்டு அவள் ஓட பார்த்தாள் ஆனால் அதற்குள் அவன் அவளை பின்னால் இருந்து இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொண்டான்…….

 

எங்கடி என்ன விட்டுட்டு போற? என்னோட அம்மா தான் என்ன விட்டுட்டு சீக்கிரமா போயிட்டாங்க……..                                நீயும் என்ன விட்டுட்டு போறியா?      நானும் உன்ன மாதிரி அனாத தான் ஆனா எனக்கு அப்பான்னு ஒருத்தவங்க பேருக்காவது இருக்காங்க ஆனா , உனக்குன்னு என்ன விட்டா யாரு இருக்கா??நாதான உனக்கு எல்லாம் ஏன் என்ன விட்டு தூரமா போற?

 

துருவ் உனக்கு ஒன்னு தெரியுமா?அஸ்வதியோட அம்மா என்னயும் அவளையும் சேர்த்து தத்து எடுக்கிறதா தான் பிளான் ஆனா என்ன பார்த்த உடனே இந்த கருப்பு பொண்ணு எனக்கு வேணாம்ன்னு சொல்லிட்டு அஸ்வதியை மட்டும் தத்து எடுத்துட்டு போனாங்க , நா கருப்பா இருக்குறத பாத்து என்னைய வளர்க்குறதுக்கே அவங்க ரொம்ப அசிங்கப்பட்டாங்க , அருவருப்புப்பட்டாங்க ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ ரொம்ப கஷ்டப்படுவ அதான் நீ சந்தோஷமா இரு , நல்ல அழகான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ நா இப்படியே போய்டுறேன் என்று துவாரகா அவன் நெஞ்சினில் சாய்ந்து  கொண்டு அழுதாள்…….

 

துவாரகா உன்னோட அழகு என்னன்னு உனக்கு தெரியனும்னா என்னோட கண்ணு வழியா பாரு நீ அவ்வளவு அழகு, உன்ன விட்டா எனக்கு யாருமே என்னோட லைஃப்ப அழகாக்க முடியாது சோ என்ன கல்யாணம் பண்ணிக்கோ நா உன்ன ரொம்ப பத்திரமா பாத்துக்குறேன் நீயும் என்ன ரொம்ப பத்திரமா பாத்துப்பியா?  என்று துருவ் அவள் கழுத்தில் ஒரு தங்க செயின் போட்டு விட்டான் அப்பொழுது திடீரென்று அந்த அறையில் உள்ள அனைத்து விளக்குகளும் ஒளிர்ந்தன அஸ்வதி மற்றும் விஹான் அவர்கள் இருவர் மீதும் ரோஜா பூக்களை தூவினார்கள் துவாரகாவிற்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை……

 

வாழ்த்துக்கள் மிஸ்ஸஸ் துருவ் என்று அஸ்வதி துவாரகாவை கட்டி அணைத்துக் கொண்டாள்…….

 

என்னடி சொல்லுற?

இங்க என்ன நடக்குது?

நா எப்படி மிஸ்ஸஸ் துருவ் ஆக முடியும்?

 

முடியுமே…..

 

அதான் எப்படி அஸ்வதி?

 

உன்னோட கழுத்துல பாருடி என்று அஸ்வதி  கூறவும் துவாரகா குனிந்து தன் கழுத்தை பார்த்தாள் அதில் தாலி செயின் இருந்தது…..

 

அஸ்வதி இது எப்படி?

 

உன்னோட காதலன் கிட்ட கேளு அவரு சொல்லுவாரு என்று அஸ்வதியும் விஹானும் அந்த அறையை விட்டு வெளியே சென்றனர்……..

 

துருவ் என்ன நடக்குது இங்க?என்னோட கழுத்துலை ஏன் தாலி கட்டுனீங்க?

 

என்னோட பொண்டாட்டி நீ தானே அப்போ உன்னோட கழுத்துல கட்டாம வேற யாரு கழுத்துல கட்டுவேன் என்று அவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்…….

 

அவன் திடீரென்று அவள் கன்னத்தில் முத்தமிடவும் அவள் அதிர்ந்து போய் அவள் கன்னத்தில் கைவைத்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…..

 

துவாரகா இப்போ மணி சரியா மூனு ஆயிடுச்சு நா பிரம்ம முகூர்த்தத்துல உன்னோட கழுத்துல தாலி கட்டி இருக்கேன் அதனால இனி ஏழேழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு பொண்டாட்டி நா தான் உனக்கு புருஷன் அது வேற யாராலயும் மாத்த முடியாது புரியுதா என்று அவன் அவளின் தோள்களில் கை போட்டவாறு அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்து அவளின் கண்களுக்குள் இறங்கி அவனின் காதலை அவன்  விழி வழியே அவளுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தான்……..

 

ஆனா துருவ், உன்னோட வீட்டுல???

 

என்னோட வீட்டுல அப்பாவ நா சமாளிச்சுக்கிறேன் அப்பாவுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அதனால அவர் மறுப்பு சொல்லவே மாட்டாரு  நீ எத நினைச்சும் கவலைப்படாதே , உனக்காக எப்பவுமே எல்லா சமயத்திலும் நா இருப்பேன் புரியுதா? என்று அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான் துவாரகாவும்  அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்……..

 

அப்புறம் துருவ், நேத்து நைட்டு உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு ரொம்ப சாரி, என்னால தான் கல்யாணத்துக்கு முன்னாலயே நமக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு என்று துவாரகா சோகமாக கூறினாள்……

 

எங்க நீ நடக்க விட்ட ?அதான் பெட்ல சாஞ்ச உடனே அசந்து தூங்கிட்டியே வேற என்ன பண்றது உன்ன??

 

என்னது தூங்கிட்டனா ?நீயும் நேத்து நைட்டு என்கூட குடிச்சிருந்தியா?

 

ஆமா குடிச்சேன் ஆனா உன்ன மாதிரி உலகம் மறந்து போய் டான்ஸ் ஆட மாட்டேன் ஸ்டெடியா இருப்பேன் ……

 

என்ன சொல்லுற ?எனக்கு ஒண்ணுமே புரியல நேத்து நைட்டு நமக்குள் எல்லாம் முடிஞ்சிடுச்சுல்ல???

 

இல்லடா தங்கம் நமக்குள்ள ஒன்னுமே நடக்கல……

 

ஆனா நா எந்திரிச்சு பார்க்கும்போது என் மேல டிரஸ் இல்ல உன் மேலயும் டிரெஸ் இல்ல , அது எப்படி?

 

அதாவது நேத்து என்ன நடந்துச்சுன்னா……

 

நீ ஃபுல்லா குடிச்சிட்டு உன் கூட வாழனும் உன் கூட வாழனும்ன்னு சொல்லிட்டு உன்னுடைய டிஷர்ட் கழட்டிட்டு என்மேல் அப்படியே சாஞ்சி பெட்ல விழுந்து என் நெஞ்சு மேல சாஞ்சுகிட்டே  தூங்கிட்ட , அப்புறமா அஸ்வதி வந்து என்ன வெளியே போக சொல்லிட்டு உன்னோட டிரஸ் எல்லாம் கழட்ட வச்சிட்டு , உன்மேல ஒரு பெரிய பெட்ஷீட் போத்தி விட்டு உன்ன அந்த பெட்ஷீட்குள்ள சுருட்டி நல்லா கவர் பண்ணிட்டு என்ன ரூமுக்குள்ள கூப்பிட்டு என்ன தள்ளி படுக்க வச்சிட்டு அஸ்வதி போனா ஆனா நீ என் மேல சாஞ்சிகிட்டு என்ன கட்டிப் பிடிச்சுட்டு தூங்கிட்டே …….

 

அஸ்வதி ஏன் இப்படி பண்ணனும்?

 

உன்னோட மனசுல இருக்குறத வெளிய சொல்ல வைக்க தான் இந்த பிளான் அஸ்வதியோட பிளான் சக்ஸஸ் ஆயிடுச்சு நீயும் உன்னோட மனசுல இருக்குற அவ்ளோத்தையும் என்கிட்ட சொல்லிட்ட என்று துருவ் சிரித்தான்…..

 

அப்போ நமக்குள்ள ஒன்னுமே நடக்கலயா??

 

ஆமாடி , எனக்கு உன்ன என்னோட பொண்டாட்டியான பிறகு தான் இந்த ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் என்று அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்…..

 

டேய் உன்ன ….. உன்ன என்று அவள் கோபத்தில் அவனை அடிக்க கை  ஓங்கினாள் ஆனால் துருவ் அவளின் ஓங்கிய கைகளில் முத்தமிட்டான்…..

 

துவாரகா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இந்த விஷயத்தை நா யார்கிட்டயும் சொன்னது இல்ல இத்தனை வருஷமா என்னோட மனசுக்குள்ளேயே பூட்டி வைச்சிருந்த ஒரு பெரிய ரகசியம் , அத நா உன்கிட்ட சொல்லனும்னு நினைக்கிறேன் என்று அவன் அவளின் மடியில் படுத்து கொண்டு அவளின் அழகிய முகத்தை பார்த்து கொண்டே கூறினான்……

 

துவாரகா எனக்கு ஒரு ஏழு வயசு இருக்குறப்போ என்னோட அம்மா கூட நா ஷாப்பிங் போயிட்டு ரெண்டு பேரும் கார்ல வீட்டுக்கு வந்துட்டு இருந்தோம்  அப்போ ஒரு ஆட்டோவுல இருந்து நாலு பேர் இறங்கி வந்து எங்க கார வழி மறிச்சாங்க அப்போ திடீர்னு அவங்க எங்க கார் கதவை திறந்து எங்க அம்மாவை புடிச்சு வெளியே இழுத்துட்டு போய் எங்க அம்மாவோட சேலை எல்லாம் பிடிச்சு கிழிச்சுட்டு இருந்தாங்க எங்க அம்மா ரொம்ப சத்தம் போட்டு அலறிட்டு இருந்தாங்க நா எங்க அம்மா கிட்ட ஓடிப் போய் அழுதுட்டு இருந்தேன் அப்போ அந்த நாலு பேரும் மாறி மாறி எங்க அம்மா மேல என்னமோ பண்ணிட்டு இருந்தாங்க எனக்கு ஒண்ணுமே புரியல கொஞ்ச நேரத்துக்கு பிறகு அவங்க எல்லாரும் எங்க அம்மாவ டிரஸ் இல்லாம ரோட்ல போட்டுட்டு போயிட்டாங்க நா எங்க அம்மா கிட்ட போய் அழுதுட்டே இருந்தேன் அம்மா என்னோட கண்ணீரை துடைக்கவே இல்ல வானத்தை பார்த்துட்டே இருந்தாங்க அப்புறம் காலையில வர நான் அம்மா கூடயே தான் இருந்தேன் அப்புறமா குப்பை அள்ள வர்றவங்க எங்க ரெண்டு பேரையும் பாத்து எங்க அப்பா கிட்ட கூட்டிட்டு போனாங்க அப்புறம் அம்மாவுக்கு நல்ல புடவை கட்டி குளிக்க வச்சி திரும்ப நல்ல புடவை கட்டிவிட்டு அலங்காரம் எல்லாம் பண்ணி அவங்க நெத்தியில ஒரு ரூபாய் காசு வச்சு அம்மாவ ஐஸ் பாக்ஸில வைத்து எங்கேயோ கொண்டு போயிட்டாங்க அம்மா எப்ப திரும்ப வருவாங்க துவாரகா என்று ஒரு அவளின் முகத்தை பார்த்து கேட்டான்……

 

அவனின் அந்தக் கேள்வியை கேட்டு துவாரகா சத்தம் போட்டு கதறி அழுது விட்டாள்……

 

இப்பொழுது துரு துவாரகாவை தேற்றிக் கொண்டிருந்தான்……

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

தொடரும்……

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்