Loading

மது !” என பதறி தன் குரலை உயர்த்தினான் துருவன்.

“சாரி துருவ் ! என்னால ஈசியா நீங்க சொன்னது போல மனச மாத்திக்க முடியாது.  உங்களை காலம் முழுக்க நினைச்சிட்டு இருக்க தயார் நான். மறக்க சொன்னா முடியவே முடியாது. நீங்க என்னை ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம் துருவ். உங்களை மறக்க சொல்றது உங்களுக்கு உரிமை இல்லை…”என கோபம் கொண்டு செல்ல இருந்தவளை தடுத்தது அவனது குரல்.

“அப்போ எனக்காக வெயிட் பண்ணுவீயா மது  எத்தனை வருஷமானாலும்…?”

 மலர்ந்த முகத்துடன் அவனை திரும்பி பார்த்தாள், கண்களும் லேசாக கலங்கின.

“என் மனச மாத்திட்டு எல்லாம் மறந்துட்டு புது மனுசனா வந்தா நீ என்னை ஏத்துப்பீயா?”என அவளை பாராமல் கேட்க, அவளால் அழுகையை அடக்க முடியவில்லை…

“சாரி மது உன்னை ஹர்ட் பண்ணிருந்தா ! ஜெஸி இல்லேனதும் இவனுக்கு என் நியாபகம்  வந்திருக்குனு நினைச்சிடாத, உன் காதல் ஜெஸிய பார்க்கும் முன்ன தெரிஞ்சிருந்தா, கண்டிப்பா உன்னை லவ் பண்ணிருப்பேன். பட் யூ டூ லேட்! என்னால் இப்போ வரைக்கும் ஜெஸிய மறக்க முடியல மது ! ஆனா ஒரு நாள் நான் மாறிடுவேன். அப்ப நீ எதிர்பார்க்கும் காதல்ல  உனக்கு கொடுக்க முயற்சிப்பேன்…  ஐ நீட்டைம் மது !”என்று கெஞ்சலாக,

“எவ்வளவு  வருஷம் வேணா எடுத்துக்கங்க… நான் காத்திட்டு இருப்பேன்.

முழு காதலோட நான் உங்களுக்காக காத்திட்டு இருப்பேன் துருவ்! ஆனா நீங்க எனக்காக ஒரு உதவி செய்யணும்…!”என்றாள்

“என்ன உதவி மது?”

“நீங்க தினமும் ஒரு மணி நேரமாவது என் கிட்ட  கால் பண்ணி பேசணும் ப்ளீஸ் !”என முகத்தை சுருக்கி கேட்க, அவளது காதணியும் இசைந்து குழைந்து கேட்டது போல அவளுடன் ஆட, அதை ரசித்தவன்” கண்டிப்பா ! நான் அங்க போனதும் போன் நம்பர் அனுப்புறேன். பேசறேன் நாம பேசலாம்…!”எனவும் அவள் வேகமாக தலையை ஆட்டி விட்டு மானை போல துள்ளிக் குதித்து ஓடினாள்.

அவனுக்கு அவளது சிறு பிள்ளை குணம் கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தது. ஆனாலும் ஓரத்தில் ஜெஸியை மறந்து அவள் இடத்தை நிரப்பிட, வேறொரு பொண்ணை  பார்க்க ஆரம்பித்து விட்டாயா? என உள்ளுக்குள் ஒரு கேள்வி அவனை அரிக்க, அதற்காகவே அவன் வெளி நாடு செல்கிறான். ஜெஸியின் மேல் உண்டான காதலை மறந்து புது மனிதனாக வேண்டும் என்றே அங்கே செல்கிறான்.

அவன் வெளிநாடு செல்ல ஏற்பாடுகள் எல்லாம் நடந்தது. ராதா அவனிடம் பல முறை கெஞ்சினார் இங்கே இருந்திடச் சொல்லி, ஆனால் அவன் தான் அவரை சரி கட்டி எப்படியோ சம்மதிக்க வைத்து விட்டான். ஜெயிலில் சென்று வீரமதியை பார்த்து பேசி மன்னிப்பு கோரி மனசு விட்டு பேசியவன் வெளி நாடு செல்ல அனுமதி வாங்கிக் கொண்டு வந்தான்.

அவன் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. ஜெஸி வந்து அறிவுரை சொன்னதோடு சரி அடுத்து அவளை பார்க்கவும் இல்லை பேசவுமில்லை. அதற்கு முயற்சி செய்யவுமில்லை. ஆனால் அவளை பற்றி நினைக்காத நாளே இல்லை… அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று விட்டுவிட்டான்.

ஆனால் அவளை கடைசியாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்க, அவளை ஏர்போர்ட்டிற்கு வரவழைக்க  முடிவெடுத்திருந்தான். அவளுக்கு தயக்குத்துடன் அழைக்கவும் செய்தான்.

அழைப்பு எடுக்கப் பட்டது. அவனும் பதற்றதுடன், “ஜெ… ஜெஸி !”என்றான் சிறு பயத்துடன்.

“சொல்லு துருவா !”என்றாள் சாதரணமாக, அவளது வழக்கமான அழைப்பே அவனுக்கு இதத்தை தந்தது. உள்ளே ஓர் நிம்மதி பரவியது.

‘ எதற்கு அழைத்தாய்? என்ன வேண்டும்? ஏன் அழைத்தாய்?”என்று முகத்தில் அடித்தது போல கேள்வி கேட்டு வைத்து விடுவாளோ என்று பயந்தான். ஆனால் அப்படி எல்லாம்  இல்லாமல் அவள் அவனிடம் சாதாரணமாக பேசுவது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

“தொந்தரவு பண்ணிட்டேனா ஜெஸி?” என்ற பேச்சு அவளுக்கு சலிப்பாக இருந்தது.

“ஆமான்னு சொன்னா வச்சிடுவீயா துருவா?!”என்றதும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

“ஜெஸி “என்றான் தழுதழுத்த குரலில்..

“துருவா! இப்பவும் நான் உன்னை என் நண்பனா தான் பார்க்கிறேன். இப்ப மட்டும் இல்லை எப்பவும் நீ எனக்கு நண்பன் மட்டும் தான். இடையில ஏதோ கசப்பா நடந்திருக்கலாம் அதை எல்லாம் மறந்து, நம்ம நட்ப, நாம எப்பவும் தொடரலாம் துருவா ! எனக்கு நீ நண்பனா இருப்ப தான?!”எனக் கேட்டதும், அவனுக்கு வார்த்தையே வரவில்லை… அழுது விட்டான்.

“சாரி ஜெஸி ! உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். கிடைச்ச நல்ல பிரண்டை ! மிஸ் பண்ணிருப்பேன். என் புத்தியால என்னை பத்தி மட்டுமே யோசித்து  செல்ஃப்பிஸ இருந்துட்டேன். என்னை மன்னிச்சி  இன்னமும் பிரண்டா நினைக்கிற ! உன் மனசு யாருக்கும் வராது ஜெஸி ! ஐ ம் பிளஸ்டு டூ ஹாவ் யூர் பிரண்ட்ஷிப் ஜெஸி ! “என்றான்.

“ஹான் போதும் போதும் டா ! ரொம்ப  பில்ட்ப்லாம் வேணாம். சொல்லு எப்படி இருக்க? ஹவ் டூ யூ பீல் நவ்?”என்று நலம் விசாரித்தாள்.

“மச் பெட்டர் ஜெஸி ! இப்போ உன் கிட்ட பேசினதும் இன்னும் பெட்டரா இருக்கேன்… பட் ஸ்டில் உன் நினைப்பும் என் காதலை மட்டும் மறக்க முடியல ஜெஸி !”என்றதும் அவள் அமைதியாக இருந்தாள்.

தன்னை அறியாமல் விட்ட வார்த்தையை உணர்ந்தவன்”சாரி ஜெஸி எதையோ சொல்ல வந்து உளறிட்டு இருக்கேன்… ஜெஸி நான் அமெரிக்கா போலாம் முடிவு பண்ணிருக்கேன்… எல்லாம் ரெடி பண்ணிட்டேன் நாளைக்கு பிளைட் ! “என்றான்.

“என்ன திடீர்னு  இங்க நிறைய வேலைய வச்சிட்டு அங்க ஏன் போற? எதுவும் பிஸ்னஸ் விஷயமாவா?”என்றாள்.

“இல்ல ஜெஸி எனக்காக போறேன். சில விஷயங்களை மறக்க, ஒரு மாற்றத்துக்காக போறேன். இங்க வேலைய பசங்க பார்த்துப்பாங்க… அப்படி எதுவும் உதவினா, அங்க இருந்து எல்லாம் பாத்துக்கலாம் முடிவு பண்ணி பேசிட்டு தான் போறேன்… நான் இங்க இல்லைனாலும் எல்லாம் நார்மலா இருக்கும் ஜெஸி !”கடைசி வாக்கியத்தை அழுத்தி சொல்ல, அவளுக்கும் அவனது நிலமை புரிந்தது.

“சரி துருவா !  எல்லாம் சரியாகிடும்… நாளைக்கு நான் ஏர்போட்டுக்கு வந்திட்றேன்…”

“தேங்க்ஸ் ஜெஸி ! நீ மட்டும் வர்றாத, டெனியையும் ஆரோனையும் கூட்டிட்டுவா ! அவனை பாரக்கணும்”என்றான்.

“சரி துருவா ! நாங்க வர்றோம்…”

“ஓகே ஜெஸி டேக் கேர் குட் நைட் !”என்றவன் வைத்து விட, அவளோ  முறுவலுடன் இருந்து கொள்ள, இவனுக்கு கண்ணீர் வழிந்தது. அவள் ‘எனக்கானவள் இல்லை’  என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னமும் அவனுக்கு வந்திருக்க வில்லை.. ஓரத்தில் காளானாய் முளைத்தது சிறு ஆதங்கம்… சட்டென தலையை உலுக்கி கொண்டு அதனை முளையிலே பிடிங்கி போட்டான். அப்படியே மெத்தையில் சாய்ந்தான்.

இங்கே இரவில் மெத்தையில் மூவரும் தலையணை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆப்ரஹாமின் குடும்பத்துக்குள் ஒன்றாகிப் போனான் ஆரோன். நியாபகத்தில் இல்லை என்பதால் அவர்களது உறவு உண்மையில்லை என்பதாகி விடுமா? மனம் முழுக்க அன்பை வைத்துக் கொண்டு அதை கொட்டி கொட்டிக் காட்டும் உறவுகளிடம் தள்ளி நின்று அவர்களை கஷ்டப்படுத்தை விட, பழைய உறவுகளை  புதுப்பித்துக் கொள்ளுதல் போல அவர்களுடன் பழக ஆரம்பத்து விட்டான்.

தாய், தந்தை , மகன் என மூவருடம் எளிதில் ஒன்றி விட்டான். மனைவியிடம் தோழனாக நெருங்கியவன் கணவனாக மட்டும் அவளுடன் கலக்க முடியவில்லை…  முதலில் உள்ளத்தால் அவளுடன் இணைய நினைத்தான். உடலளவில் அவளுடன் தள்ளி இருந்தாலும் உள்ளத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினான்.

முதலில் அவள் மீது நன்மதிப்பும் மரியாதையும் வந்தது… இப்போது கொஞ்சம் ஈர்ப்பும் அதனுடன் கலந்து கொண்டது அது காதலாக மாறும் தருணமும்  வெகு விரைவில் உள்ளது.

மூவரும் விளையாடி களைத்து, கதை பேசி, டெனியை தூங்க வைத்து விட்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவன் நெஞ்சில் இருவரது விரல்களும் உரச அவனுக்கு தட்டிக் கொடுத்தனர்.

டெனி உறக்கத்தின் ஆழத்தை தழுவியதும், ஜெஸி ஆரோனிடம் “ஆரோ ! தூக்கம் வருதா? உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”என்றாள்.

“இல்ல ஜெஸி தூக்கம் வரல வா பேசலாம்” என்று எழுந்து கொண்டு பால்கனிக்கு செல்ல, இவள் டெனி மீது போர்வை போர்த்தி விட்டு பால்கனிக்கு சென்றாள்.

அங்கே இருந்த ஊஞ்சலில் இருவரும் கால்கள் உரச அமர்ந்தனர்.

“சொல்லு ஜெஸி என்ன பேசணும்?”என்றான்.

“அது இன்னைக்கி துருவன் கால் பண்ணிருந்தான்!”என்று அவர்கள் பேசிக் கொண்டதை அவனிடம் பகிர்ந்தாள். அவனும் யோசனையுடன் அவளை பார்த்திருந்தான்.

“நாளைக்கு ஏர்போர்டுக்கு போய் அவனை சென்ட் ஆஃப் பண்ணலாமா ஆரோ?!”

“ம்ம்… போலாம் டா !”என்றான், இருளுக்கு போட்டியாக இருக்கு சோடியம் வெளிச்சத்திலிருக்கும் தெருவை வெறித்தபடி… ஆனால் ஜெஸிக்கோ உள்ளுக்குள் சிறு படபடப்பு.

அவன் பழைய ஆரோனாக இருந்தால்,  இதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். ஆனால் எல்லாம் மறந்து போயிருக்கும் இந்த ஆரோன் தன்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு புலப்படவில்லை… ஆனாலும் அவனிடம் எல்லாத்தையும் சொல்லிட வேண்டும் மனசு துடிக்க, அதை அவனிடம் பகிர ஆரம்பித்தாள்.

“எனக்கு துருவனுக்கும் உள்ள உறவை உன் கிட்ட சொல்லணும் நினைக்கறேன் ஆரோ !”என்றாள்.

அவன் எதுவும் பேசாது அமைதியாக அவளை ஏறிட்டு இருந்தான். ஆரம்பம் தொட்டு அனைத்தையும் சொன்னாள் சில விஷயங்களை மட்டும் மறைத்தாள்…

அனைத்தும் சொல்லி முடித்தவள் அவனை ஏறிட்டு பார்க்க, அவன் முகத்தில் எந்த உணர்வையும் அவளால் படிக்க முடியவில்லை…

ஆனால் அவளது தவிப்பை அவன் உணர்ந்து கொண்டான்.

மெல்ல அவளை நெருங்கியவன்” ஜெஸி ! இப்போ நீ இதெல்லாம் சொல்லக் காரணம். உன்னை நான் தப்பா நினைச்சிடக் கூடாதுன்றனால தான ?!”அவள் மனதை படித்தது போல சொல்ல, அவனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ முறுவலுடன் அவளது கையை பற்றி, “என்னை விடு நான் எல்லாத்தையும் மறந்தவன் தான். ஆனா என் மனசு உன்னை மறக்கல நினைக்கறேன்… உன்னை பத்தி சின்னதா ஒரு சலனம் கூட என் மனசு சொன்னது இல்ல ஜெஸி ! உன்னை பார்த்த நொடியில இருந்து இப்ப வரைக்கும் அது உன்னை தவறா காட்டினதும் இல்ல பேசினதும் இல்ல. உன் மேலே  சந்தேகப்படனும்ன்ற எண்ணமே எனக்கு வரல…! நீ எனக்காக  , என் இறப்புக்கு நியாயம் கிடைக்க, போராடின, உன்னை நான் தவறா நினைச்சா, நான் மிருகத்தை விட மோசமான ஒரு உயிரா இருக்கேன் தான் அர்த்தம்… நான் மனுசன் ஜெஸி ! இப்பவும் உன் மேலே எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. முழுமையா உன்னை நம்புறேன் ! நீ எதையும் போட்டு குழப்பிக்காத !”என்று அவள் கண்ணீரை துடைக்க, அவள் வேகமாக அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

அவனும் அவளை தயக்கமில்லாமல் அணைத்துக் கொண்டான்.

“அப்புறம் இன்னொரு விஷயம் !”

“என்ன?!”என்பது போல அவன் நெஞ்சில் சாய்ந்தபடி அவன்  முகத்தை பார்க்க, அவனோ, கன்னத்து மேடையை நாவால் உயர்த்தி, “இவ்வளவு கம்பீரமா , அழகான பொண்ணை பக்கத்துல வச்சிட்டு காதலிக்கலேனா அவன் ஆம்பளையே இல்ல ஜெஸி… துருவனோட பீலிங்ஸ என்னால புரிஞ்சுக்க முடியுது”என நக்கலாக சொன்னாலும் அதில் உண்மை இருக்க  தான் செய்தது.

“ஓ…!”என எழுந்தவள், “அப்போ சார் கூட தான் சதா காலமும் இருக்கேன். சாருக்கு என் மேலே லவ் வந்திடுச்சா?!”எனக் கேட்கவும் அவன், தடுமாறி போனான் .

“அது… அது… ஜெஸி “என இளித்து கொண்டு சமாளிக்க அவளோ உதட்டை சுருக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள். அவனோ புன்னகையுடன் அவள் தாடையை பற்றி திருப்பி தன் முகத்தை பார்க்க வைத்தான்.

“உன் மேலே கொள்ள காதல் என் இதயத்துக்குள்ள கொட்டிக் கிடக்கு ஜெஸி   உன்னை அவ்வளவு காதலிச்சு இருக்கான் இந்த ஆரோன். அது மட்டுமில்ல, நம்ம காதலித்த நினைவுகள் கூடி கழித்த பொழுதுகள் எல்லாத்தையும் மூளையில சேகரிச்சி வச்சிருக்கான் இந்த ஆரோன்.  ஆனா அதை எல்லாம் உள்ளுக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டவன் சாவிய தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருக்கான்… சீக்கிரமா அதை கண்டு பிடிச்சி, மறுபடியும் கொள்ளை கொள்ளை காதலை  கொட்டி உன் காதலை அள்ளி உள்ளுக்குள்ள வச்சிப்பான்  உன்னோட சேர்ந்திருக்க போற பொக்கிஷ நாட்கள மீண்டும் சேகரிக்க ஆரம்பிப்பான். அதுவரைக்கும் பொறுத்துக்கோ என் செல்லம் !”என தாடையை பற்றி கெஞ்ச,

அவனது இந்தப் பேச்சை எதிர்பாராதவள் அதிர்ந்து பார்க்க, “என்னாச்சி ஏன் இந்தப் பார்வை?!” என்றான்.

“இல்ல எல்லாத்தையும் மறந்த  நீங்க, எங்களை விட்டு ஒதுங்கி போவீங்க நினைச்சேன்… ஆனா நீங்க அப்படி இல்லாம எங்களோட பழைய ஆரோன் போல பழகறீங்க அது எனக்கு ஆச்சர்யமா இருக்கு ஆரோ !”

“முதல் ஒதுங்க நான் நினைச்சேன் ஜெஸி. ஆனா உங்க எல்லாரோட தூய அன்பு என்னை ஒதுங்க விடலை ! டெனியோட அப்பான்ற அழைப்பும் பாசமும்  வேணும் மனசு ஏங்கும் போது ஒதுங்க தோணலை… எப்போ வேணா எனக்கு நினைவு வரட்டும் ! ஆனா இந்த அன்பை இழக்க மாட்டேன் ஜெஸி !”என்றதும் மேலும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் நாடியை பதித்தவன், இப்போது அத்தெருவை ரசனையுடன் பார்த்தான்.

சென்னை விமான நிலையம், பயணிகள் வருவதும் போவதுமாக இருந்தனர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

ராதா, மதுவை தவிர அனைவரும் துருவனை சந்தோஷமாக வழி அனுப்பி வைக்க அவனுடன் கலகலவென பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் மட்டும் ஓரமாக நின்று முகத்தை’உம்’ என்று வைத்துக் கொண்டு இருந்ததை நோட்டம் விட்ட ருத்ரன், துருவனிடம்…

“ஏன் டா ராதாம்மா அழறதுல நியாயம் இருக்கு. மகனை பிரியப் போற சோகத்துல அழறாங்க. மது ஏன்டா அழனும்?”

“அது அவ லவ்வர் ஊருக்கு போறானேன்னு அழறா அண்ணா !”என்றான் நக்கலோடு.

“யாரு அவ லவ்வர்?”

“வேற யாரு நான் தான் !”என்றதும் ருத்ரன் நெஞ்சை பிடித்துக் கொண்டான்.

“எது நீயா? இப்போ தானே டா ஜெஸிய விரும்பறேன் தற்கொலை முயற்சி எல்லாம் பண்ண அதுக்குள்ள மது உனக்கு காதலி ஆகிட்டாளா? நீ அவளுக்கு லவ்வராகிட்டீயா?”என அதிர்ச்சியுடன் கேட்டவனை கொல வெறியில் முறைத்தவன்,

“என்ன பார்த்தா, திர்ஷா இல்லேனா நயன்தாரானு போறவன்னு நினைச்சியா? அவ லவ்வர் தான் சொன்னேன் என் லவ்வர் சொல்லல புரியுதா?”

“ஓ… மேடம் உன்னை லவ் பண்றாங்க. ஆனா சார் நீங்க லவ் பண்ணல ரைட்?”

“எஸ்… ஆனா அவ லவ்வ பார்த்து நான் இம்ப்ரெஸ் ஆயிட்டேன்”என்றான்.

“அடப்பாவி!! அப்படி என்ன டா அவ காதல்…?! இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது, அதுக்குள்ள லவ்வா?! அதுல நீ என்ன இம்பிர்ஸான?!”என சந்தேகமாக கேட்டான்

“நானும் அவ இங்க வந்து தான் காதலிக்க ஆரம்பிச்சதா நினைச்சேன்… ஆனா அதான் இல்ல !”என்று அவன் அனைத்தையும் கூற, “இதென்னடா ஓர வஞ்சனையா இருக்கு? அம்மா ஏன் என்னை பத்தி சொல்லல?! நானும் அவங்க பையன் தானே அதுவும் மூத்த வாரிசு வேற…! என்னை பத்தி ஏன்டா சொல்லல…?! சொல்லிருந்தால் அவ என்னை தான லவ் பண்ணிருப்பா ! நாங்களும் லவ் பண்ணி சந்தோசமா இருந்திருப்போம்ல…” என அவன் போலியாக வருத்தப்பட,

“அப்ப, இப்போ நீ சந்தோசமா இல்ல ! இரு அண்ணி கிட்ட என்ன பிரச்சனை கேட்கறேன்? அண்இ…!!”என்றதும் அவன் வாயை பொத்தினான்.

“வெளிநாடு போறவன் என் குடும்பத்துல கொழுத்தி போட்டு தான் போகணுமா?! உன்னை போல வீட்டுக்குள்ள என்னை வானவாசம் போக வச்சிடாத ! விளையாட்டுக்கு தான்டா சொன்னேன்… நான் உங்க அண்ணியோட ரொம்ப சந்தோசமா இருக்கேன்…. சரியா !”என்றான் அவன் நெஞ்சை தட்டி அடக்கியபடி.

“அது…!”என்றவன் மதுவை நோக்கி போனான்.அவளும் அவன் அருகில் வந்ததும் கண்களை துடைத்துக் கொண்டான்.

“இப்போ மேடம் எதுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க?”

“உங்களுக்கு என்ன தெரியும் என் கஷ்டம்?”என அவள் முறுக்கி கொள்ள,

“சொல்லு கேட்போம்…”அவனும் அவளுடன் சாதரணமாக பேச ஆரம்பித்தான்.

“உங்க கூடவே இருக்கணும்… உங்களுக்கு என் மேலே காதல் வர வைக்கணும் ரெண்டு பேரும் காதலிக்கணும் கல்யாணம் பண்ணனும் சேர்ந்து வாழனும் குழந்தை பெத்துக்கணும் அதை சேர்ந்து வளக்கணும்… இன்னும் நிறைய ஆசைகளோடு வந்தேன். வந்த முதல் நாளே உங்களுக்கு என்னை பிடிக்கல! இருந்தாலும் உங்களுக்கு என்னை பிடிக்கறது  போல நடந்துக்கனும் நினைச்சேன்… ஆனா அதுக்குள்ள ஜெஸி அக்காவ நீங்க விரும்பிட்டீங்க… என் காதல் உங்களுக்கு தெரியல… அந்த பிரச்சனைக்கு அப்புறம் என் லவ்வ புரிஞ்சுக்கிட்டீங்க… ஆனா ஃபோரின் போறேன் நிக்கறீங்க… அழாம என்ன பண்ண சொல்றீங்க? ஒரு பக்கம் என் காதல் இன்னொரு உங்க பிரிவு ! காதலிக்கலனாலும் பார்த்துட்டாவது இருந்திருப்பேன்… இப்போ அதுவும் இல்ல வலிக்குது அழுகையா வருது” என சிறு பிள்ளை போல பேசி அவன் உள்ளத்தை கவர்ந்தாள்.

“மது ! நான் இங்க இருந்தா , கண்டிப்பா உன்னை உன் காதலைப் பத்தி யோசிக்கவே மாட்டேன். என்னை பத்தி மட்டுமே யோசித்து செல்ஃப்பிஸ் இருப்பேன்… அது உனக்கு மேலும் கஷ்டம்… என் மனசு மாறனும் ப்ளீஸ் அண்டர்ஸ்டன்ட் மது !” எனக் குரலை தளர்த்தி சொன்னான்.

அவளும் தலையை ஆட்டி, மேலும் அவனிடம்” நான் கேட்ட உதவியை செய்வீங்க தான ?!”எனவும் அவனும் “கண்டிப்பா செய்றேன்” என்று தலையை அசைத்தான். அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.

அவனது நண்பர்களும் வந்துவிட, அவர்களை கட்டி அணைத்தான்.

“நீ போய் தான் ஆகணுமா? எங்க கூடவே இர்றேன். நீ ஆரம்பிச்சி வச்ச கம்பெனி ! பாதிலே விட்டுடு போறீயே டா “என்று தவிப்பாக கேட்டான் வித்யாசாகர்.

“பாதிலே போனாலும் உங்க கிட்ட ஒப்படைச்சிட்டு தான் போறேன்… எனக்கு உங்க மேலே ஹண்டர் பெர்செண்டேஜ் நம்பிக்கை இருக்கு… ஸ்கூல் புராஜக்ட்  நல்ல படியா செய்ங்க ! இன்னும் நிறைய ஆடர சேர்த்து கம்பெனி டெவலப் பண்ணுங்க… நான் சீக்கிரமா வந்து ஜாயின் பண்ணக்கிறேன்”

“என் மேரேஜ் வரைக்குமாவது இருந்துட்டு போகலாம்ல துருவ் !”என ரிஷி கேட்க,

“அது வரைக்கும் நான் உயிரோட இருக்கணுமே டா !”என்றதும் மூவரும் பதறினார்கள்.

“இல்லடா இங்க இருந்தா எதையும் மறக்க மாட்டேன். ஜெஸியோட நினைப்பாவே இருக்கும்…  வீட்ல ஓவ்வொரு இடத்துலயும் அவ நினைப்பு தான் இருக்கும்… என்னை கொல்லும் வேண்டாம் டா ! நான் நிரந்திரமாவா இருக்க போறேன். ரெண்டு மூணு வருஷம் தான். அப்புறம் என் கம் பேக் வேற லெவல்ல இருக்கும்… உன் கல்யாணத்துக்கு வர முடியலனு ஃபீலிங்க் இருந்தாலும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.  என் நண்பனோட காதல் சக்சஸ் ஆனதுல. அந்த சந்தோசமே போதும் கூகுல் மீட்ல லிங்க் அனுப்பு நான் வீடியோல மேரேஜ் பாத்துக்கிறேன்… ஹாப்பி மேரிட் லைப் டா !”என்று தோளை தட்டிக் கொடுத்தான்.

“போடா ! இதை அன்னைக்கு சொல்லுவேன்  எதிர்பார்த்தேன்”என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொல்ல, அவனோ அமைதியாக நின்றான்.. பின் துருவனே வேலை விஷயமாக அவர்களது கவனத்தை திசை திருப்பினான். துருவன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை என்னவோ வாயிலைத் தழுவி தான் இருந்தது.

அவன் எதிர்பார்த்தது போல ஜெஸியும் ஆரோனும் டெனியைப் தூக்கி கொண்டு வந்தனர்.

துருவனுக்கு புதிதாக , அழகாக தெரிந்தாள் ஜெஸி ! சேலை தான் கட்டி இருந்தாள் அதுவும் டிசைனர் சேரியில்…

துருவனை கண்டதும் டெனி அவனிடம் தாவ, அவனும் தூக்கி கொண்டு முத்தங்கள் வைத்தான்.

“என்னை விட்டு எங்க போற துருவ்?”என முகத்தை பார்த்து கேட்டான்.

“நானா?? உன்னை விட்டா எங்க போறேன்?!”

“அப்போ எதுக்கு நீ ஏர்போட்டுக்கு வந்திருக்க?!”சரியாக கேட்க, மாட்டிக் கொண்டதை கண்டு நாக்கை கடித்தான்..

“ம்ம்… மை இன்டல்லேஜன்ட் பிரண்ட், எனக்கு ஒரு பெரிய வொர்க் இருக்கு. அந்த வொர்க்கை கம்பிளிட் பண்ண போறேன்…!”

“ஓகே எப்போ வருவ?!”

“சீக்கிரமா ! “

“ஓகே உனக்காக நான் வெயிட் பண்றேன்.  உன்னோட வொர்க் சக்சஸா முடியும்…!ஆல் தி பெஸ்ட் ! “என்று கன்னத்தில் முத்தம் வைக்க, கலங்கி போனான் துருவன்.

“டெனி ! இங்க வா?” என்று ஆரோன் அழைக்க அவனுடன் தாவிக் கொண்டான். கண்களை துடைத்துக் கொண்டான்.

ஜெஸி அவனை தான் பார்த்திருந்தாள். “என்ன ஜெஸி?”என்றான்.

“இல்ல, நீ வளர்ந்த டெனி போல தெரியற எனக்கு !”என்றதும் அவன் சிரித்து விட்டான். அவன் கையை பற்றி

“துருவா ! மனசில இருக்க வேண்டாததை தூக்கி போட்டுடு. புது துருவனா நீ கம் பேக் கொடுக்கணும்… உன் ஃப்ரெண்ட் ஜெஸி எப்பவும் உனக்கு துணையா இருப்பா. டேக் கேர் !”என்று அவன் கையை அழுத்திட, அவனும் அவள் கையை பற்றி”தேங்க்ஸ் ஜெஸி ! அண்ட் சாரி ! “

“பச் ! இட்ஸ் லீவ் இட் “என்று கண்ணை சிமிட்டினாள். பக்கத்தில் இதை எல்லாம் புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்த ஆரோனிடமும் மன்னிப்பு கேட்டான். அவனும் புன்னகையுடன் தலை அசைத்து ஏற்றுக் கொண்டான்.

“மனசுல இருந்து சொல்றேன் ஆரோன். யூர் ஆர் ரியலி லக்கி பெர்சன் ! எவ்வளவு லவ் உங்க மேலே இவளுக்கு. வார்த்தைக்கு வார்த்தை ஆரோன் ஆரோன் ஆரோன்… நான் நிறையவே பொறாமை பட்டிருக்கேன். இப்படி ஒரு காதல் எனக்கு கிடைக்கலனு ! நான் எவ்வளவு டார்ச்சர் கொடுத்தாலும் அவளோட காதல்ல உறுதியா நின்னு, சாவித்திரி ஜி போல உங்களை கொண்டு வந்துட்டாளே! சான்சே இல்ல இப்படி ஒரு பொண்ணு உங்களுக்கு ஒயிப் கிடைக்க !

அவளோட   அழகான கண்கள்ல எப்பவும் . உயிர்ப்பில்லாம இருக்கும்…  உண்மை தெரியாதவரைக்கும் என்ன ரீசன் என் மூளைய குடைவேன். உண்மை தெரிஞ்சதும், அதோட உயிர்ப்பையும் சந்தோசத்தையும் குடுக்கணும் நினைப்பேன். என்னால கடைசி வரைக்கும் முடியல…! ஆனா  இன்னைக்கி அவ  கண்கள் உயிர்ப்போடும் அழகாவும் இருக்க காரணம் நீங்க மட்டும் தான். உங்க காதலை பார்த்து ஐ ஆம் ஜஸ்ட் அட்மைரட் !

இனி உங்க வாழ்க்கையில நோ வோரிஸ் எல்லாம் ஹாப்பிஸ் மட்டும் தான் இருக்கும்… நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன்”என்றான்.

“தேங்க்ஸ் துருவன் ! அதே நேரம் நீங்களும் என்னை போல பழசை மறந்துட்டு புது மனுசனா வரணும். உங்களை நேசிக்கற உள்ளங்கள் இங்க இருக்கும் நீங்க போறது சரியில்ல தான். ஆனா சில நெருக்கமாக உறவுகளிடம் இருந்து கொஞ்சம் பிரிவு அவசியம் தான். அதுக்காக மொத்தமா பிரிய சொல்லல…! அவங்க அன்பு உங்களை பிரியவும் விடாது !”அவன் ஜெஸியை காதலாக பார்த்து சொல்ல அவளும் அவனை காதலாக பார்த்தாள்.

உள்ளே   வலி கொணர்ந்தாலும், அதை மறைத்து சிரித்தான்.

“சோ ! உங்க கம் பேக் எல்லாரும் ஹாப்பிய தான் கொடுக்கும்.. ஹவ ஆ கிரேட் ஜர்னி”என்று அவனை அணைத்து விடுவித்தான்.

“மது கிட்ட பேசினியா துருவா?”என்று  மதுவை பார்த்ததும் நியாபகம் வந்தது போல கேட்டாள்.

“ம்ம்… பேசினேன்”என்று நடந்ததை சொல்ல, அகல விரிந்தது ஜெஸியின் கண்கள்.” வாவ் ! நீயும் லக்கி தான். அவளை விட்றாத. நீ அடுத்து இந்தியா வந்ததும் உனக்கு மேரேஜ் தான் !புரியுதா? “என்றதும்  அவனும் தலையை ஆட்டி வைத்தான்.

 விமானத்தின் அறிவிப்பு வர அனைவரிடமும்  சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டான். பாதி தூரம் சென்ற பின் ஜெஸியைப் பார்க்க, அவளும் புன்னகையுடன் கை அசைத்து வழியனுப்பினாள். அவனும் சென்று விட்டான்.

விழியோரம் துளிர்த்த கண்ணீரை துடைத்து விட்டு அவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர்.

அவன் காரில் ஏறிக் கொள்ள, இவள் அதை இயக்கினாள்.

“ஏன் இந்த ஆரோன் மேலே அவ்வளவு காதல் ஜெஸி?!”அவன் கேட்க  சாலையில் பதிருந்த கண்களை அவன் புறம் திரும்பி அவனை பார்த்து  விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டன.

“உனக்கு அப்பா , அம்மா சொந்தக்காராங்க, ஃப்ரெண்ட்ஸ் அவங்க பேமிலி உன் மேலே அன்பு காட்ட இவங்க எல்லாம் இருக்காங்க… ஆனா எனக்கு உன்னை பார்க்கற வரைக்கும் அப்படி யாரும் இல்லை. உன் காதலை ஏத்துக்கற வரைக்கும் நான் ஒரு அனாதை.

உன் காதலை அக்சபட் பண்ணினதும்  இந்த உறவுகளோட மொத்த  அன்பும் அவன் மூலம் எனக்கு கிடைச்சது. தாயிலிருந்து மகன் வரைக்குமான அன்பு பாசத்தை எல்லாம் ஒத்தாளா காட்றவன இவ்வளவும் காதலுக்கலேனா எப்படி? என புருவம் உயர்த்தி கேட்க, அவனோ தன்னை மறந்து அவளிடம் “ஐ லவ் யூ ஜெஸி !”என்றான்.

அவளும் அதிர்ச்சியில் பிரேக் அழுத்தி வண்டியை நிறுத்தியவள் அவனை பார்க்க, அவளுக்கோ அவன் பழைய ஆரோனாக தெரிந்தான்.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்