Loading

அத்தியாயம் 36

 

அடுத்த நாள், அழகிய காலை பொழுது. பார்கவி கண்விழித்தது என்னவோ, அவளவனின் ஆண்மை வாசமும் அவன் நெருக்கமும் நித்ராதேவியை விரட்டி விட்டதால் தான்.

 

அஸ்வந் தூக்கம் கலைந்து கண்விழித்த போது, அத்தனை நெருக்கத்தில் அவன் மனைவி,

 

எத்தனை முறை சுவைத்தாலும் திகட்டாத தேனாக, அவளை பார்க்க, பார்க்க காதல் தித்தித்தது அடி நெஞ்சில்.

 

மேலும் அவளை மெதுவாக நெருங்கி, அவளது வதனத்தை ஆழ்ந்து பார்த்தான்.

 

மாசுமருவற்ற பால் வண்ண முகம். 24 வயது குமரி. ஆனால் தூக்கத்தில் குழந்தையாய் மீன் குஞ்சு போல் வாயை பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

அவள் முகத்தில் முடிகள் சரிந்து விழ, நிலாமகளின் முகத்தை மேகம் மறைப்பது போல், அவன் மதியின் முகத்தை மறைத்த முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கிவிட்டவன், கூந்தலை தடவி விட அப்போதுதான் பார்கவி கண் விழித்தது.

 

இதயம் எக்குதப்பாக எகிறி குதிக்க, “எ..என்ன” என்றாள் மெல்லிய குரலில்

 

“அது.. முடி.. ஒதுக்கி…” என்று அவன் வார்த்தை கோர்க்க

 

“இவ்ளவு நெருக்கத்துல வந்துதான் முடிய ஒதுக்கி விடுவியா…?” என்று அவள் கேட்க

 

அசடு வழிய சிரித்தவன் விலகிக் கொள்ள, அவள் அவன் கையை பார்த்துவிட்டு, முறைத்துப் பார்க்க,

 

அவள் முறைக்கும் போது தான் காரணம் புரிந்தது, வலிக்குது, வலிக்குது என்று இரவு முழுவதும் அவன் ஊரைக் கூட்டிய, கட்டுப்போட்ட கையினால் தான் அவள் தலை முடியை ஒதுக்கி விட்டிருந்தான்.

 

“இப்ப மட்டும் கை வலிக்கலல…” என்று அவள் ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க,

 

“அது என்னவோ நீ பக்கத்துல இருந்தா வலி தெரியல…” என்று அவன் சொன்ன வார்த்தையில், அவள் இமை குடைகள் கீழ் நோக்கி சரிந்தது.

 

அவன் சாதாரணமாக சொல்ல வில்லையே, காதலும், காமமும் சேர்ந்த வசிகர பார்வையை அவள் மீது பாய விட்டு சொன்னான்.

 

“கவி!” அவள் பெயருக்கு வலிக்குமோ என்று அழைத்தான்.

 

விழி உயர்த்தி அவள் பார்க்க “இன்னைக்கு ஸ்கூல் போகணுமா?.. லீவு போடலாமே…” என்று கேட்க

 

“எதுக்கு…” என்றாள் ஏன் என்று தெரிந்து கொண்டே

 

“இதோ, இந்த வளையல் உன் கையில எதுக்கு வந்ததோ.. இப்படி நீ நம்ம படுக்கையில எதனால் உக்காந்து இருக்கியோ.. அதுக்கான அடுத்த கட்ட அழகிய பிணைப்பு வேணாமா?…” என்று மாய குரலில் அவன் கேட்க

 

அவளுக்கு புரிந்தாலும், வெட்கத்தை மறைத்துக் கொண்டு “என்ன வேணாமா?.. எனக்கு எதுவும் வேணாம்.. இன்னைக்கு கண்டிப்பா ஸ்கூல் போகணும்.. கண்மணி வரச் சொல்லி இருக்காள்…” என்று சொல்ல

 

“நான் எவ்ளவு முக்கியமான விஷயத்துக்கு அடி போடுறேன்.. நீ என்னடான்னா அவள சந்திக்கிறது தான் முக்கியம்னு சொல்ற…” என்று அவன் கேட்க

 

“நீ அடி போடுற விஷயத்த விட.. எனக்கு அவள சந்திக்கிறது முக்கியம்தான்…” என்று சொன்னவள்

 

கட்டிலில் இருந்து எழுந்து, கலைந்து கிடந்த தலை முடியை அள்ளி கொண்டை போட,

 

அவளின் பின்னிருந்து எட்டிப் பார்த்த சூரியனும், அந்த வெளிச்சத்தில் அவள் சேலையினோடு தெரிந்த வளைவு, நெளிவு கட்டுடலும், லேசாக தெரிந்த இடை வனப்பும் அவனை போதை ஏற்ற,

 

‘உசுப்பேத்தியே கொல்றாளே!…’ என்று மனதில் புலம்பியவன்

 

“நான் ஏன் லீவு போட சொல்றேன்னு தெரிஞ்சும் முடியாதுன்னு சொல்ற இல்ல.. ராத்திரி பாத்துக்கிறேன்டி…” என்று அவன் சொல்ல

 

“என்னத்த பாத்துக்க போற…”

 

“ஹா, ராத்திரிக்கு தெரியும்.. நீ என்னத்த காட்ட போற, நான் என்னத்த பாக்க போறேன்னு…” என்றவன் பார்வை அவள் உடலை மேய,

 

அதுக்கு மேல அங்கே நின்றால், காளை கட்டவிழந்து விடும் என்பதால், வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

அவள் தப்பியோடுவதை பார்த்து சிரித்துக் கொண்டவன், அவளை அடுத்த கட்டம் வைத்து செய்வதற்காக காத்திருந்தான்.

 

அவளும் குளித்துவிட்டு வெளியே வர, “மேடம் குளிச்சிட்டிங்க போல…” என்று கேட்க

 

“ம்ம்…” என்க

 

“நான் எப்படி குளிக்கிறது…”

 

“ஏன் எல்லாரும் குளிக்கிற மாதிரி தான்…”

 

“என்ன நக்கலா…”

 

“இப்ப என்ன வேணும்…”

 

“கையில காயம்.. இதோட சோப்பு போட்டு குளிக்க முடியாது.. அதனால நீ தான் என்ன குளிப்பாட்டி விடனும்…”

 

“முடியாதுன்னு சொன்னா…”

 

“முடியாதுன்னு சொன்னா…” என்றவன் அவளை மையலாக பார்த்துக் கொண்டே நெருங்க,

 

அவள் பின் சாய, அறைச்சுவரு அவளை பிடித்துக் கொடுத்தது அவனிடம்.

 

அவள் தோளில் கிடந்த டவலை உருவி எடுத்து, தன் தோளில் போட்டுக் கொண்டவன், முகத்தை பக்க வாட்டாக திருப்பி, அதில் உள்ள அவள் வாசனையை உள்ளெடுத்தான்.

 

அவ்வளவுதான் உள்ளங்கால் இருந்து உச்சந் தலைவரை நாணச் சிவப்பை பூசிக்கொண்டது பார்கவியின் உடல்.

 

“நேரா என் அம்மா கிட்ட போய்.. என் காயத்த காட்டுவேன்.. உன் மருமகளால தான் எனக்கு இந்த காயம்னு சொல்லுவேன்.. இப்ப சொல்லு என்ன குளிப்பாட்டி விட போறியா.. இல்ல உன் மாமியார் முன்னாடி குற்றவாளியா நிக்க போறியா…” என்று அவள் முகத்தருகே குனிந்து அவன் கேட்க

 

செவ்வந்தியை சமாளிப்பது ஒன்றும் அவளுக்கு பெரிய காரியம் இல்லை.

ஏன் இந்த காயத்தை பார்த்தாள் அவரே அவனை காரி துப்ப கூடும்.

 

ஆனாலும் அந்த கள்ளனின் குறும்புகள் பிடிக்கத்தான் செய்தது. சுகமாக சிறைப்பட்டு போனாள் அவனிடம்.

 

“சரி வா…” என்றவாறு அவள் குளியல் அறைக்குச் செல்ல, அவள் பின்னே விசில் அடித்தபடி இவனும் சென்றான்.

 

அஸ்வந்தோ மொத்த உடையையும் அவள் முன்பே கலைந்து விட்டு, போனால் போகுது என்று இடையில் துண்டுடன் நிற்க,

 

பார்கவிக்கு அவளை நெட்டி தள்ளும் கூச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அவனை இயல்பாகப் பார்ப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

 

‘பாவி வேணும்னே படுத்துறானே…’ என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.

 

“அடியே சுவரையா குளிப்பாட்ட போற.. இந்த பக்கம் திரும்புடி…” என்று அஸ்வந் சொல்ல

 

தயக்கமாகவும் வெட்கமாகவும் மெது மெதுவாக பார்வையை அவன் பக்கம் திருப்பினாள்.

 

தன் திடகாத்திரமான மேனி அழகை, திருமதி அவளின் கண்களுக்கு விருந்தாக்கி கொண்டிருந்தான் ஆணழகன்.

 

என்னமோ பார்கவியால் முகத்தை திருப்ப முடியவில்லை. கண்கள் அவன் கட்டுடலை ஒரு முறை நன்கு ஆசையாக தழுவி நின்றது.

 

தன் உணவுகளை மறைத்தவள் “சோப் போட்டுவிட்டா போதும்தானே.. சவருக்கு கீழ நின்னு உடம்ப நனைச்சுக்க…” என்று சொல்ல

 

“ஹஹ்ஹா.. அப்படி இல்ல.. காயத்துல தண்ணி பட்டுச்சுன்னா எப்படி காயம் ஆரும்.. அதனால இந்த பழைய படத்துல எல்லாம் புருஷன உக்கார வச்சு, தண்ணி ஊத்தி, உடம்ப தேச்சு குளிக்க வைப்பாங்கல.. அந்த மாதிரி குளிக்க வை…” என்றவன் ஒரு ஸ்டூலில் அமர,

 

அவனை முறைத்தவள், புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு, வேண்டா வெறுப்பாக செய்வது போல், அவன் மீது தண்ணீரை அள்ளி ஊற்றினாள்.

 

அவனோ சும்மா இருக்காமல், கையை அப்படி தூக்குவதும், இப்படி தூக்குவதும் என்று அவள் இடையை உரசி கொண்டிருக்க,

 

இன்ப அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் மீது செல்ல கோபமும் வந்தது, தலையிலேயே நங்கென்று ஒரு கொட்டு வைத்தவள்

 

“கையில தண்ணி பட்டக்கூடாதுன்னு தானே குளிக்க வைக்க சொன்ன.. கைய சும்மா வெச்சிட்டு இருக்க மாட்ட…” என்று திட்ட

 

“ஆஆ” முகத்தை பாவமாக சுருக்கியவன், “எவ்ளவு நேரத்துக்குனு நானும் பாக்கிறேன் டி.. இரவாகட்டும் இருக்கு உனக்கு…” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து.

 

இது என்னடா இம்சை என்று இருந்தது அவளுக்கு. இரவாகட்டும் என்று சொல்லி சொல்லியே அவளுள் தாப தீயை பற்ற வைத்துக் கொண்டிருந்தான்.

 

பார்கவி சோப்பை எடுத்து, நாணத்துடன் அவன் தோளிலிருந்து மார்பு என்று போட்டுக் கொண்டு வர,

 

குளித்தால் உடல் சூடு குறைய வேண்டுமே, ஆனால் அஸ்வந்திற்கு கூடியது.

 

அவள் கைகளில் சிறு நடுக்கம்.

அவன் உடலில் சிலிர்ப்பு.

 

முழுதாக அவனுடன் ஒன்றி வாழ்ந்தவள் என்றால் பரவாயில்லை, முதல் தொடுகை, அதுவும் அவன் மொத்த மேனியையும் தழுவ வைத்தான் அந்த காதல் அசுரன்.

 

இருவரின் உணர்வுகளும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து, பின்னிக் கொண்டது.

 

ஆனால் இருவருக்குமே பிணைந்து கொள்ள முடியாத நிலை. முதல் கூடல் அவசரமாக இல்லாமல், ஆழ்ந்து அனுபவித்து, சுகத்தில் திளைத்திருக்க வேண்டும்.

 

அதற்கு ஒரு இரவே போதாது. இதில் பகல் பொழுது கண்டிப்பாக சரி வராது என்ற எண்ணம் தான் இருவருக்கும்.

 

எனவே வேகமாக அவன் உடல் எங்கும் சோப்பை போட்டு முடித்தவள், தண்ணீரை எடுத்து ஊற்ற போக, அவள் கையை தடுத்து பிடித்தவன்,

 

“முக்கியமான இடத்துக்கு சோப்பு போடலையே…” என்றான் கொடுப்புக்குள் நாகை சுழற்றி,

 

அவளுக்கு எதுவென்று தெரியுமே. “ரொம்ப பண்றடா.. அதெல்லாம் என்னால முடியாது.. நீயே போட்டுக்க…” என்று சோப்பை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டு திரும்பி நின்று கொண்டாள்.

 

“போனா போகுதுன்னு இன்னைக்கு விடுறேன்டி.. நாளைக்கு நீ தான் போட்டு விடனும்.. போட்டு விட வைப்பேன்…” என்றான்.

 

அவனுக்கு என்ன குமரியின் கைகள் மேனியில் கொஞ்சி விளையாட, குஜாலாக குளித்து முடித்து, வெளியே வந்து விட்டான்.

 

இவனை குளிக்க வைத்தது, அவள் மீண்டும் தொப்பலாக நனைத்ததில், உடை மாற்ற வேண்டி இருந்தது.

 

அதைக் கூட அவளை நிம்மதியாக செய்ய விடாமல் “கவி!.. கவி…” என்று அவன் கத்த

 

“என்னடா.. என்ன பிரச்சனை உனக்கு இப்ப…” என்று அவள் வந்து நிற்க

 

“கை வலிக்குதுடி, டரெஸ் போடணும்…” என்று அவன் இழுக்க

 

“என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குது.. அடி வெளுத்துடுவேன் உன்ன…” என்று அவள் மிரட்ட

 

“ஏய்.. மொத்தமா எல்லாமே போட்டு விட வேணாம்.. சின்ன ஹெல்ப் தான்.. என் டரெஸ்ஸ எடுத்து கொடுக்கிறது…” என்று அவன் சொல்ல

 

இரண்டு பக்கமும் தலையாட்டி இனிமையாக சலித்துக் கொண்டவள்,

 

அலமாரியில் தேடி அவனுக்காக உடை எடுத்துக் கொடுக்க, அவனது ஜட்டியை தூக்கி போட்டவன் “இந்த கலர் வேணாம்.. ப்ளூ கலர்ல ஒன்னு இருக்கும் பாரு.. அத தேடி கொடு…” என்று சொல்ல

 

“அடேய் கலர்ல என்னடா இருக்குது.. இத போட்டு தொலைய வேண்டியது தானே…” என்று அவள் கேட்க

 

“அதெல்லாம் முடியாது.. இன்னைக்கு ப்ளூ கலர் போடுறதா முடிவு பண்ணிட்டேன்.. ப்ளூ கலர்ல போட்டா தான் கவர்ச்சியா இருக்கும்…” என்று அவன் சொல்ல

 

“இப்போ யாரு உன் பேண்ட கழட்டி கவர்ச்சி போஸ் பாக்க போறா…?”

 

“அது கரெக்ட்டு தான்.. கவர்ச்சி போஸ்ஸ காட்ட போறது உனக்கு தானே.. இனிமேல் பிங் கலர்ல ஜட்டி தேடி வாங்கணும் போலயே..உனக்கு பிங் தானே பிடிக்கும்…” என்று அவன் கேட்க

 

“ச்சீ.. உன் கூட சேர்ந்து நானும் என்னெல்லாம் பேசிட்டு இருக்கேன்…” என்று தலையில் அடித்தவள்

 

அவன் கேட்டதை தேடி எடுத்து கொடுத்தாள். அவளுக்கே அவளை நினைத்து ஆச்சரியம் தான். அவனிடம் கூச்சத்தை துறந்து இயல்பாக பேசிக் கொண்டிருக்கின்றாளே.

 

அவன் திருவன், சேட்டை செய்தே அவனுக்கேற்றது போல அவளை வளைத்துக் கொண்டிருக்கின்றான்.

 

கண்ணாடி முன்பு நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள் பார்கவி “கவி!…” என்று அவன் அழைக்க

 

“இப்ப என்ன…” என்றாள் அழுது விடுவவள் போல்

 

“ஷர்ட் பட்டன் போட முடியல…” என்று அவன் உதட்டை பிதுக்க, அந்த உதட்டை கடித்து வைக்க வேண்டும் போல் செல்ல கோபம் வந்தது. அவன் சேட்டையை பார்க்கும் போது சிரிப்பும் வந்தது.

 

எவ்வளவு முயன்றும் மறைக்க முடியாமல், மெல்லிய புன்னகையுடன் அவனை நெருங்கி, அவன் ஷர்ட் பட்டன்களை போட்டு விட்டாள்.

 

உடனே எங்கிருந்தோ தேடி கண்டுபிடித்து, ஒரு டையை அவள் முன்பு நீட்டியவன், “இதையும் கட்டி விடு…” என்றான்.

 

“நீ டை கட்ட மாட்டேயே.. இப்ப என்ன புதுசா…”

 

“அது இன்னைக்கு வெளியில ஒரு மீட்டிங்.. சோ ப்ரொஃபெஷனல போகணும் இல்ல…” என்று அவன் அடித்து விட

 

அவன் சொல்வது பொய் என்று தெரிந்தாலும், சற்று எம்பி, அவன் கழுத்தில் டையை சுற்றி, கட்டி விட ஆரம்பிக்க, அவனோ அவள் இடையை இரண்டு கையினால் அழுத்தி பிடித்தான்.

 

அவன் தொடுகையில் உடல் தூக்கி வாரி போட, “எ..என்ன.. பண்ற…” என்றாள் ஈனஸ்வரத்தில்

 

“எம்பி நிக்கிற இல்ல.. தடுமாறி விழுந்துடாம இருக்க புடிச்சிருக்கேன்…” என்று அவன் சொல்ல

 

“நான் கால ஊண்டி தான் நிக்கிறேன்.. கை எடு…”

 

“முடியாதுடி…”

 

“ஐயோ! கைய எடுடா…” என்று அவள் நெளிய அவள் இடையில் மேலும் அழுத்தத்தை கொடுத்து சிவக்க வைத்தவன், போனால் போகுது என்று விட்டுவிட்டான்.

 

அவளோ அவன் பிடித்த பிடியில் சிவந்த இடையை தடவிக் கொண்டே, முகத்தை சுருக்கி கொண்டாள் .

 

அவள் முகத்திற்கு அருகே குனிந்து “ரொம்ப வலிக்குதா…” என்று அவன் கேட்க

 

“போடா…” என்று அவன் நெஞ்சில் கையை வைத்து தள்ளிவிட்டு, அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

 

அவளை அழைத்துக் கொண்டு அலுவலகம் வந்தான். வரும் வழியில் கூட சும்மா இருக்கவில்லை.

 

(நிலவை கொண்டு வா.. கட்டிலில் கட்டி வை!… தொடங்கி கட்டிப்பிடி கட்டிப்பிடிடா…) என்று காம நெடி வீசும் பாடல்களை ஒலிக்க விட்டு அவளை ஒருவழி செய்திருந்தான்.

 

******

பார்கவி பாடசாலையில் கண்மணியை சந்தித்தாள். முழுதாக குணமாகி இருந்தாள்.

 

“என்னடி இன்னைக்கு உன்ன கண்டிப்பா பாக்கணும் வான்னு சொன்ன…” என்று பார்க்கவி கேட்க

 

உனக்கு ஃபர்ஸ்ட் பீரியட் ஃப்ரீ தானே வா கேண்டீல போய் பேசலாம்…”என்க இருவரும் கேண்டீன் வந்தனர்.

 

இருவரும் பெஞ்சில் அமர, தன் பையினுள் இருந்து ஒரு கார்டை எடுத்து நீட்டினாள் கண்மணி.

 

அது அவளின் நிச்சயதார்த்ததிற்கான அழைப்பிதழ். அதைப் பார்த்த பார்கவி அவளை விழி விரித்து பார்த்து “என்னடி திடீர்னு கல்யாணம்.. நிச்சயத்துக்கு வானு கார்ட் குடுக்குற…” என்று கேட்க

 

“ஏன் நான் கல்யாணம் பண்ணிக்க கூடாதா…” என்று கண்மணி சிரிக்க

 

“ஹேய் அப்படி இல்ல.. அது.. நீ.. அஸ்வந்…”

 

“ஆமா, அஸ்வந்த லவ் பண்ணுனேன்.. ஆனா அவர் என்ன லவ் பண்ணல.. அதுக்காக நான் அவர் மேல கோவப்பட முடியுமா.. இல்ல அவர் கல்யாணம் பண்ணிக்கிட்ட உன் மேல கோபப்பட முடியுமா..

 

…இல்ல இது எனக்கு கிடைக்கலயேனு என் மேல கோபப்பட்டுக்க முடியுமா.. நம்ம நேசிக்கிறவங்க, நம்ம கூட இருந்தா தான், அவங்க மேல இருக்கிற நேசம் நிலையா இருக்கும்னா, அது உண்மையான நேசமே கிடையாது..

 

…நம்ம நேசிக்கிறவங்க எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும் அவங்க நல்லா இருக்கணும், சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறது தான் உண்மையான நேசம்..

 

…அதனால நீயும் அஸ்வந்தும் சேர்ந்து சந்தோஷமா வாழனும் என்கிறது தான் என்னோட ஆசை..

 

…நம்ம யோசிப்போம், ஏன் நம்ம ஆசைப்பட்டது கிடைக்கலனு ஆனா நமக்கான அதிகப்படியான அன்பும், காதலும் நம்ம பக்கத்திலேயே தான் இருக்கும்.. நம்ம கண்ணுக்கு தான் தெரிஞ்சிருக்காது…” என்று அவள் சிரிக்க

 

கண்மணியின் சிரிப்பில் வேறு அர்த்தமும் இருப்பது புரிய “என்ன சொல்ற…”என்று பார்கவி கேட்க

 

“பத்திகைய பாரு…”

 

“செந்தூரான், கண்மணி.. நம்ம மேக்ஸ் சாரா…!”

 

“அவர்தான்.. நான் அஸ்வந்த லவ் பண்ண முன்னாடி இருந்தே அவர் என்ன லவ் பண்ணிட்டு இருக்காரு.. ஆனா எனக்கு அஸ்வந்த பிடிக்கும் என்றது தெரியும் போல.. அமைதியா விலகி நின்னுட்டாரு.. நான் அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருந்ததும் துடிச்சுப் போய் என்ன பாக்க வந்தாரு..

 

…என்ன பாத்ததும் அதுக்கு மேல அவர் நேசத்த மறைச்சு வைக்க முடியாம என்கிட்ட அவரோட விருப்பத்த சொன்னாரு.. எனக்கு என்னவோ நம்ம நேசிக்கிறவங்கள விட, நம்மள நேசிக்கிறவங்க கிடைச்சா சந்தோஷமா இருக்க முடியும்னு தோணுச்சு.. அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்.. இப்போ கல்யாணம் பண்ணிக்க போறோம்…”

 

“கங்க்ராட்ஸ் கண்மணி.. உண்மையாவே உன்ன பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு…”

 

” கோ வித் த ஃப்ளோ கவி.. தேடி போய் அன்ப கொடுத்து ஏமாறுறத விட, நம்மள தேடி வார அன்ப அழகா அரவணைச்சுக்கிட்டு சந்தோஷமான வாழ்க்கைய வாழலாம்…” என்று கண்மணி சொல்ல, ஆமாம் என்று ஆமோதிபாக தலையை ஆட்டினாள் பார்கவி.

 

சில நேரங்களில் நாம் ஆசைப்படும் பரிசை விட,வாழ்க்கை நமக்கு அளிக்கும் பரிசுகள் விலைமதிப்பற்றதாக இருக்கும்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்