Loading

காதல் -72

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தை நேரில் பார்த்த துவாரகா மற்றும் அஸ்வதி ஓடி சென்று துருவை காப்பாற்றி ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்றனர்……..

 

மருத்துவமனைக்கு சென்றதும் அவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து விட்டு துவாரகாவும் அஸ்வதியும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் அமர்ந்து கொண்டு இருந்தனர்……..

 

அப்பொழுது ஒரு செவிலியர் வெளியே வந்து இப்ப அட்மிட் பண்ண ஆக்சிடென்ட் கேஸ் கூட வந்திருக்கிற ஆளு யாரு?

 

நாங்க தான் சிஸ்டர்……

 

இந்த பேஷண்டுக்கு நிறைய பிளட் லாஸ் ஆயிருக்கு அதனால பி நெகடிவ் பிளட் மூணு யூனிட் அவசரமா தேவைப்படுது , இங்க ஹாஸ்பிடல்ல ஸ்டாக் இல்ல உங்க யாருக்காவது தெரிஞ்சவங்க இருந்தா சீக்கிரம் ரெடி பண்ணி கொண்டு வாங்க அவருக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆயிட்டு இருக்குது என்று அந்த செவிலியர் கூறிவிட்டு உள்ளே சென்றார்…….

 

துவா இப்ப என்ன பண்றது ? எனக்கு பயமா இருக்கு , துருவ் சாருக்கு எதுவும் ஆயிடுமா? என்று அஸ்வதி பயத்திலும் பதட்டத்திலும் பேசிக் கொண்டிருந்தாள்……

 

அஸ்வா இங்க பாரு , என்ன பாரு அவனுக்கு ஒன்னும் ஆகாது எனக்கும் பி நெகடிவ் பிளட் குரூப் தான் நா அவனுக்கு பிளட் கொடுக்குறேன் நீ அதுவரை தைரியமாக இங்க உட்கார்ந்து இருக்கணும் புரியுதா?  அழுக கூடாது என்று துவாரகா அஸ்வதிக்கு பல அறிவுரைகள் கூறிவிட்டு துருவை அட்மிட் செய்திருக்கும் அறைக்கு அவள் சென்றாள்……..

 

துருவ் அட்மிட் செய்திருக்கும் அவசர சிகிச்சை அறைக்குள் துவாரகா சென்றாள் அங்கு நிறைய நிறைய மெஷின்கள் ஓடிக் கொண்டிருந்தது, அந்த மெஷினில் துருவின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது……

 

துவாரகா துருவிற்காக ரத்தம் கொடுத்தாள் , துவாரகா திரும்பி துருவின் முகத்தை பார்த்தாள் அவனின் முகத்தில் எப்பொழுதும் ஒரு கம்பீரம் இருக்கும் , அவன் கண்களில்  சொல்ல முடியாத சோகம் அப்பியிருக்கும் அவ்வாறு இருப்பவன் இன்று இப்படி பேச்சு மூச்சுற்று கிடப்பதை பார்த்து அவளுக்கு மனது வலித்தது……..

 

அஸ்வதி வெளியில் தனியாக அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்,  அவளை தேடி அங்கு வந்த விஹான்  அவளை அழைத்தான்……

 

அவனைப் பார்த்ததும் ஓடி சென்று அவனை கட்டி அணைத்துக் கொண்டு அஸ்வதி அழுதாள்……

 

என்னாச்சு அஸ்வதி?

 

அஸ்வதி அங்கு நடந்த அனைத்தையும் அவனிடம் ஒன்று விடாமல் கூறினாள்……

 

அஸ்வதி ஹாஸ்பிடல் பில் கட்டிட்டியா?

 

ஆமா விஹான் என் கையில போட்டு இருந்த ரெண்டு தங்க வளையல வித்துட்டேன் அந்த காசுல தான் ஹாஸ்பிடல் பில் கட்டினேன் என்று அவள் கூறவும் தனக்கு கெடுதல் நினைத்தவருக்கும் அவள் நன்மையை செய்வதை பார்த்த விஹான் அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்……..

 

ஹலோ இது ஹாஸ்பிடல் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றீங்களா? என்று துவாரகா ஊசி குத்திய கைகளை பஞ்சை வைத்து  துடைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள்…..

 

துவாரகா துருவ் சாருக்கு இப்போ எப்படி இருக்கு?

 

அவன் இன்னும் கண்ணு முழிக்கல…….

 

துவாரகா மற்றும் அஸ்வதி ஹாஸ்பிடலில் அமர்ந்து இருக்க விஹான் அவர்கள் அனைவருக்கும் இரவு உணவு வாங்கி வந்தான் பிறகு அவர்கள் மூவரும் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டனர்……

 

இரவு ஒரு பதினொரு மணி போல மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவு விட்டு வெளியே வந்தனர்……

 

இந்த ஆக்சிடென்ட் ஆன பேஷண்ட்டுக்கு ஆக்சிடென்ட்ல முகம் ரொம்ப எரிஞ்சு போயிருச்சு அதனால நாங்க பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணலாம்னு இருக்குறோம் அதுக்கு உங்க கிட்ட சைன் வாங்கணும் என்று அந்த மருத்துவர் கேட்க அவர்கள் மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர் அப்பொழுது துவாரகா அந்த படிவத்தில் சைன் செய்து கொடுத்தாள்…..

 

மருத்துவர்களும் அவனுக்கு முகத்தில் சிகிச்சை அளிக்க சென்றனர்……

 

ஹே துவாரகா என்னடி நீ பாட்டுக்கு சைன் பண்ணி கொடுத்துட்ட?அவரோட அப்பா வந்து கேட்டு என்ன சொல்ல?

 

உங்க மகனுக்கு இப்போ சர்ஜரி பண்ணலேன்னா காலம் முழுக்க எரிஞ்சு போன முகத்தோட தான் இருக்கணும் அதான் சைன் பண்ணி கொடுத்தேன்னு சொல்வேன்…….

 

மூன்று மணி நேரத்துக்கு பிறகு மருத்துவர்கள் வெளியே வந்தனர்…..

 

இந்த பேஷண்டுக்கு நாங்க பெஸ்ட் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இருக்கோம் இன்னும் ஒரு அரை மணி நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க நீங்க போய் பார்க்கலாம் என்று அந்த மருத்துவர் கூறிவிட்டு சென்றார்……

 

ஒரு மணி நேரம் கழித்து அவன் கண்விழித்து விட்டான் , அவன் கண்விழித்தவுடன் அவன் முதலில் பார்த்த முகம் துவாரகாவின் முகம் தான்  அவள் தலையில் கை வைத்தப்படியே அமர்ந்து கொண்டே உறங்கிக் கொண்டிருந்தாள்…….

 

துருவ் எழ முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் , அப்பொழுது சத்தம் கேட்கவும் துவாரகா கண்விழித்து பார்த்தாள்……

 

என்னடா கரஸ்பாண்டன்ட் கரடி கண்ணு முழிச்சிட்டியா ?இப்ப வலி எப்படி இருக்கு?

 

வலி இப்போ கொஞ்சம் பரவாயில்ல , தேங்க்ஸ் என்னோட உயிரை காப்பாத்துனதுக்கு……

 

தேங்க்ஸ் எல்லாம் வேணாம் எனக்கு நா கேக்குற சமயத்துல எல்லாம் நா கேக்குற சாப்பாடு எனக்கு நீ வாங்கி தரணும் டீலா?

 

டீல் என்று அவன் திரும்பினான் , அந்த கண்ணாடி அறையில் உள்ள கண்ணாடியில் அவன் உருவத்தை பார்த்து அவன் அதிர்ந்து போய் அலறி விட்டான்…….

 

ஹே துவாரகா இது யாரோட முகம்?இது என்னோட முகம் இல்லை என்னோட முகம் எங்க ? என்று அவன் கத்த ஆரம்பித்தான்…….

 

துருவ், இங்க பாரு துருவ் நா சொல்றதை கேளு என்று அவள் அவனின் முகத்தை மெதுவாக பிடித்து அவனின் நெற்றி முட்டி அவனிடம் நடந்தவற்றை கூறினாள்……

 

என்னோட முகம் போச்சு என்று அவன் துவாரகாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்……..

 

பிறகு நீண்ட நேரம் துருவ் துவாரகாவை கட்டு பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தான்……

 

சிறிது நேரத்திற்கு பிறகு  அவனின் அழுகை நின்றது……..

 

அப்பொழுது அவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு அஸ்வதியும் விஹானும் வந்தனர்……

 

துருவ் இப்போ உடம்பு எப்படி இருக்கு?

 

பரவாயில்ல விஹான்……

 

விஹானின் பின்னால் அஸ்வதி ஒளிந்து கொண்டே பயத்தோடு துருவை பார்த்துக் கொண்டிருந்தாள்…….

 

இப்ப பரவாயில்லையா சார்? என்று அஸ்வதி பயந்து கொண்டே அவனிடம் கேட்டாள்……..

 

பரவாயில்லை அஸ்வதி , என்னோட உயிரை காப்பாத்தினதுக்கு உங்க மூணு பேருக்கும் ரொம்ப தேங்க்ஸ்……..

 

பரவாயில்லடா துருவே என்று துவாரகா கூறவும் அனைவரும் சிரித்து விட்டனர்……..

 

பிறகு துருவின் அப்பா வந்ததும் அவர்கள் மூவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்…….

 

அதன் பிறகு வந்த நாட்களில் துவாரகா அஸ்வதி, விஹான் மூவரும் அடிக்கடி துருவின் வீட்டிற்கு சென்று அவனை கவனித்துக் கொண்டனர்……..

 

துவாரகா அஸ்வதியின் வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்கி விட்டு துருவை கவனித்துக் கொள்வதற்காக அவள் மீண்டும் ஸ்டாப் குவாட்டர்ஸ்கே வந்தாள்…….

 

அதிலும் துவாரகாவிற்கு அவன் வீட்டிற்கு அருகில் ஸ்டாப் குவாட்டர்ஸ்  இருப்பதால் அடிக்கடி துருவை அவன் வீட்டிற்கு சென்று கவனித்துக் கொள்வாள்……

 

அன்று ஒரு நாள் அவள் அவனின் அறைக்கு முதன் முதலாக சென்றாள்…..

 

அங்கு அவன் எழ முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தான் அதை பார்த்த துவாரகா அவனை நேராக அமர வைத்தாள்…….

 

என்ன கரஸ்பாண்டன்ட் கரடி இதுதான் உன்னோட ரூமா ரொம்ப அழுக்கா இருக்கு உங்க வீட்ல வேலை பாக்குற வேலைக்காரங்க இதெல்லாம் பாக்க மாட்டாங்களா?  என்று துவாரகா அவனின் அறையை சுத்தமாக துடைத்து , அவனின் , துணிகளை மடித்து  அவனின் அறையை அழகாக மாற்றினாள்……..

 

இப்போதான் ரூம் ரூம் ரூம் மாதிரி இருக்குது சரி வா சாப்பிட போலாம் ……

 

சாப்பாடு சாப்பிடுறதுக்கு நா வெளியே போக மாட்டேன் சாப்பாடு எடுத்துட்டு இங்க  வருவாங்க,நா இங்கதான் சாப்பிடுவேன்…..

 

எவ்வளவு நாள் வீட்டுலயே அடைஞ்சி இருப்ப?  வெளியே வா உன்ன நா கூட்டிட்டு போறேன் என்று ஒரு வீல்சேரில் அவனை அமர வைத்து துவாரகா அவனை வெளியில் அழைத்து சென்றாள்……..

 

நீண்ட நாட்களுக்கு பிறகு சுத்தமான தூய்மையான  காற்றை சுவாசித்த துருவிற்கு அது மிகவும் பிடித்திருந்தது……..

 

பிறகு வந்த நாட்களில் அஸ்வதி மற்றும் விஹான் துருவை பார்க்க அடிக்கடி வருவார்கள் , துவாரகா துருவின் வீட்டில்  ஒருவளாகி போனாள்……

 

துருவை துவாரகா நன்றாக கவனித்து கொண்டாள், அவளின் அந்த எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அவளின் அன்பான கவனிப்பில் அவன் சீக்கிரமாக எழுந்து நடக்க ஆரம்பித்தான்…….

 

துருவிற்கு துவாரகாவை மிகவும் பிடித்து போய்விட்டது……..

 

அவன் ஃபோனில் அவளின் புகைப்படத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் அப்பொழுது அங்கு வந்த அவனின் சித்தி , அவளின் புகைப்படத்தை பார்த்து…….

 

இந்த பொன்னையா நீ விரும்புற?பாக்கவே கருப்பா இருக்கா,

 

சித்தி விண்வெளியோட அழகு வெறும் கண்ணுக்கு தெரியாது அதே மாதிரி என்னோட துவாரகாவோட அழகு உங்க கண்ணுக்கு தெரியாது , என்னோட கண்ணு வழியா பாருங்க அவ அவ்ளோ அழகு என்று அவன் மியூசிக் ப்ளேயரை ஆன் செய்தால் அதில் அவன் மனதிற்கு ஏற்ப பாடல் ஒலித்தது……..

 

அவள் அப்படி

ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும்

இணையில்லை அவள்

அப்படி ஒன்றும் கலரில்லை

ஆனால் அது ஒரு குறையில்லை 

அவள் பெரிதாய்

ஒன்றும் படிக்கவில்லை

அவளைப் படித்தேன்

முடிக்கவில்லை அவள்

உடுத்தும் உடைகள்

பிடிக்கவில்லை இருந்தும்

கவனிக்க மறக்கவில்லை”………

 

இவ்வாறு தினமும் துருவை துவாரகா, அஸ்வதி, விஹான் என்று மூவரும் பார்த்து கொண்டதால் அவர்கள் நால்வரும் நல்ல நண்பர்களாகிப் போனார்கள்…….

 

துருவிற்கு துவரகாவிடம் தன்னுடய காதலை கூற பயம் , அவனின் காதலை அவளிடம் கூற பயந்து கொண்டு இருந்தான்…….

 

துருவின் கால்கள் மற்றும் அவனின் முகம் நன்றாக குணமாகி விட்டது……

 

அவன் வழக்கம் போல கல்லூரிக்கு வர ஆரம்பித்தான்……

 

அஸ்வதியும் துருவை பார்த்து பயப்படுவதை நிறுத்தி விட்டாள்,அவளும் அவனுக்கு நல்ல தோழியாகி போனாள்……

 

விஹானிடம் துருவ் நன்கு பழகி அவனுடைய நெருங்கிய தோழன் ஆகி போனான்………

 

செமஸ்டர் விடுமுறை வந்தது…..

 

துருவ் அவர்கள் நால்வரும் சேர்ந்து டூர் செல்ல மனாலி போக பிளான் செய்தான்……

 

அதை அவர்கள் மூவரிடமும் கூறினான் அவர்களும் ஒப்புக்கொள்ள அவர்கள் அனைவரும் சேர்ந்து மனாலிக்கு சென்றனர்……..

 

அஸ்வதி மற்றும் விஹான் டூர் சென்று விட வீட்டில் மதன் மற்றும் வள்ளி மட்டுமே இருந்தனர்……

 

வள்ளிக்கு தஞ்சாவூரில் ஒரு கேஸ் வந்து விட அவள் தஞ்சாவூருக்கு சென்று விட்டாள்…….

 

வள்ளி அருகில் இல்லாத தேரம் மதனுக்கு எதோ போல் இருந்தது……

 

வள்ளிக்கும் மதன் அருகில் இல்லாமல் அவளின் உலகமே நின்று விட்ட உணர்வு……..

 

இரு தனி தனி உணர்வுகளும் எப்பொழுது சங்கமிக்கும்?

 

பொறுத்திருந்து பார்ப்போம்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

தொடரும்……

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்