
வீரமதி, ஆரோனை கட்டையால் தாக்கியதும் அவன் மயங்கி விழுந்தான். அவனை, வீரமதியும் வாசனும் முதலில் சுட்டுக் கொல்ல தான் நினைத்தார்கள். ஆனால் நண்பனை காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சிய நிவாஸை சரி கட்டவே இவர்களுக்கு போதும் என்று ஆகி விட்டது.
அவனிடம்’ ஆரோனை கொல்ல வேண்டும் ‘ என்று இருவரும் நிலமையை எடுத்துச் சொல்ல, அவனோ மறுத்தான். அங்கே மூவருக்கும் வாக்குவாதம் நீண்டது.
அதே நேரத்தில் கடவுளாக வந்தார் கண்ணப்பா. அந்த ஹெஸ்ட்ஹவுசில் வேலையும் மணியின் நண்பன். அவரை பார்க்க வழக்கம் போல இவர் வீட்டுக்குள்ளே வந்துவிட்டார். அன்றைய நிலமை தெரியாமல்.
உள்ளே வந்தவர், கீழே கிடந்த இரு சடலத்தை கண்டு அதிர்ந்து போனவர். மூன்றாவதாக் உயிருக்கு போராட்டிட்டு இருக்கும் ஆரோனை. கண்டார். அவனிடம் முனங்கல் சத்தம் கேட்க, அவனை திருப்பி போட்டு ‘மூச்சு இருக்கிறதா?’ என்று பார்த்தார்.
நன்றாக அவன் சுவாசிக்க, அவன் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. மேலும் உள்ளே இருவரும் அவனை கொல்ல வேண்டும் என்ற வாக்குவாதம் அவர் காதில் விழ ,சத்தமில்லாமல் அவனை தூக்கி கொண்டு முன் வாசல் வழியாக வந்தவர் , கொஞ்சம் தூரம் அவனை தூக்கி ஓடினார். அவனது கனத்தை தாங்க முடியாமல் தடுமாற, மக்கள் நடமாட்டத்தை வேறு உணர்ந்தவர் அவனை ஒரு லாரியில் போட்டு விட்டு ஓடியே போய் விட்டார். அந்த லாரியும், அவனை ஊட்டிக்கு அழைத்து சென்றது.
வீரமதி வாசனும் பிரச்சனை செய்யும் நிவாஸ் சமாளிப்பதில் எதையும் கவனிக்காது அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர் பின் வாசன் தான் உள்ளே சென்று கேஸ்வெடிக்க வைப்பது போல செய்து விட்டு தங்களது வேலையை முடித்துக் கொண்டு போய்விட்டனர்.
அந்து வீடு வெடித்து சிதறவும் அதில் ஆரோனும் இறந்ததாக நம்பினார்கள். அவன் கீழே விழுந்த நேரத்தில் அவனது டாலரும் கீழே விழுந்தது. அதுவே அவனது இறப்புக்கு வழுவான ஆதாரமும் ஆனது.
ஆனால் ஆரோன் கிடந்த லாரி சரியாக, கிருஸ்டியன் கான்வென்ட்டிற்குள் நுழைந்தது. அங்கு அவனை கண்டதும் பதறியவர்கள். மயக்க நிலையில் அவனை கண்டதும், அவனை அவர்களது மருத்துவமனையிலே அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
அவன் கண்விழித்த போது அவனை விசாரிக்க அவனுக்கே அவனை நியாபகம் இல்லை… தலையில் அடிப்பட்டதால் அனைத்தையும் மறந்து போயிருந்தான். அவனிடமிருந்து சரியான தகவல் தெரியவில்லை என்பதால் சர்ச்சியிலே அவனுக்கு வேலை கொடுத்து பார்த்துக் கொண்டனர். ஆறு மாசம் சென்ற நிலையில் தான்.
மினிஸ்டர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியில், ஆரோனின் புகைப்படத்தையும் ஜெஸியின் புகைப்படத்தையும் திரையில் பார்த்து விட்டு, அவனுக்கும் உதவி செய்யும் பொருட்டு , அவர் சென்னையிலுள்ள ஃபாதர் ஜார்ஜை தொடர்பு கொள்ள அவரும் ஊட்டிக்கு விரைந்து, உயிருடன் இருக்கும் ஆரோனை கையோடு அழைத்து வந்து விட்டார்.
போலீஸ் கேஸ் என்று பயந்த கண்ணப்பா வெளியே எதையும் சொல்லிக் கொள்ளாமல் உள்ளுக்குள் மறைத்து வைத்து வெளியூர் சென்று வேலை பார்த்தவர். ஆறுமாதம் கழித்து தான் சென்னை வந்து மீண்டும் கொத்தனார் வேலையை செய்தார். அதுவும் துருவனி டமே வேலை செய்ய அவனுடன் ஜெஸியை பார்த்ததும், அவருக்கு அந்த செய்தி நியாபகத்திற்கு வர, ஆரோன் உயிரோடு இருக்கும் விஷயத்தை சொல்ல நினைத்து அவளை பார்த்துக் கொண்டே இருந்தவர் , துருவன் கேட்டதும் உண்மையை சொல்லி விட்டார்.
ஆரோன் உயிரோடு இருக்கும் விஷயம் தெரிந்ததும் ஜெஸி கிடைக்காமல். போய்விடுவாளோ என்று பதறி அவளை மிரட்டி ஆரோன் வருவதற்குள் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து அவளை வதைக்க, ஆனால் கடவுளின் திட்டமே அங்கு பழித்து விட்டது.
ஆரோனை கண்டதும் ஆரோக்யாவும், ஆப்ரஹாமிற்கு பேச்சே இல்லை. அவனை கட்டிக் கொண்டு முழு மூச்சாக அழுது தீர்க்க, அவனுக்கு தான் அவர்களை சமாதானம் செய்ய தெரியவில்லை.. தன்னை பெற்றவர்கள் என்று தெரிந்துக் கொண்டாலும், எதுவும் நியாபகம் இல்லாமல் பச்சை பிள்ளை முழிப்பது போல முழித்தான்.
ஃபாதர் தான் அவனது நிலையை விலகி, அவனது சிகிச்சை ரிப்போர்ட்டையும் கொடுத்தார்.
“மா, ஆரோன் உங்க புள்ளை தான். இனி உங்க கூட தான் இருக்க போறான். சீக்கிரம் ஆரோனுக்கு எல்லாம் நியாபகம் வந்திடும்… நீங்க அவனோட உங்க குடும்பத்தோடவும் சந்தோசமா இருப்பீங்க.. உங்க குடும்பத்தை கர்த்தர் ஆசிர்வதிச்சிட்டு
தான் இருக்கார். ஆரோன பத்திரமா பார்த்துக்கங்க !”என்று அவர் சென்று விட, எட்வர்டும் ரெக்ஸ்லினும் வந்தனர்.
நண்பனைக் கண்டதும் கலங்கிய கண்களுடன் தாவி அணைத்துக் கொண்டான்.
“ஆரு !”அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். ஆரோனும் அவன் யாரென அறியும் முன் அவனது அன்பை அணைப்பின் உணர்ந்தான்.
“எதுவும் நம்மலை பிரிக்காது கர்வமா இருந்தேன் ஆரு ! ஆனா இந்த விதி, சாவால முடியும் காட்டிடுச்சு டா ! அதே சமயம் நம்ம நட்பை பத்தி தெரிஞ்சு. உன்னை என் கிட்டயே கொடுத்துடுச்சி டா ! இனி உன்னை விட மாட்டேனா எப்பவும் தனியா விட மாட்டேன் டா “என்று கண்ணீருடன் மீண்டும் இறுக அணைத்துக் கொண்டான்.
அனைவரும் இவர்களது நட்பை கனிவோடு கண்டனர்.
ரெக்ஸ்லினும் ஜெஸி வேகமாக அணைத்துக் கொண்டாள். “உன் வாழ்க்கையை நினைச்சி நான் கவலை படாத நாளே இல்லைடி ! இன்னைக்கி அதுக்கு விடிவுகாலம் பொறந்திருக்கு ஜெஸி !”என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்தாள்.
“எப்படி கண்டு பிடிச்சீங்க ஆரோன?”ஆரோனை கண்டு கேட்டாள்.
ஜெஸியும் நடந்ததை சொன்னாள். அதைக் கேட்டு அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அதை கலைக்கும் விதமாக ஆரோக்ய தான். “ஆரோன் குளிச்சிட்டு வரட்டும்மா ! நீ அவனுக்கு உதவி பண்ணு ஜெஸி” என்றார்.
அவளும் “சரிங்க அத்தை “என்று ஆரோனின் கையை பற்ற வர, கோபம் கொண்ட எட்வர்டு வேகமாக ஆரோனின் கையை பற்றி,” நான் அவனுக்கு ஹெல்ப் பண்றேன் “என்றான்.
ஜெஸியும் அங்கிருந்த அனைவரும் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.
ஜெஸியை திருமணம் செய்யும் வரை எட்வர்டு அவனது அறைக்குள் கொத்தமடித்த நாட்கள் எல்லாம் உண்டு. ஆனால் திருமணமான பின் அறைக்குள் அனுமதியுடன் தான் வருவான்… அதுவும் ஆரோன் மட்டும் தனியாக இருக்கும் போது தான் அறைக்குள் செல்வான்.
அவனது கண்ணியம் ஜெஸிக்கு பிடிக்கும்… அவனை உடன் பிறவாத சகோதரனை போல தான் இதனால் வரையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் எட்வர்டிற்கு அவள் மீது வைத்திருந்த நல்லெண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவளை சந்தேகப்பட ஆரம்பித்து விட்டான் அதன் விளைவு தான் இது. ஆரோனை ஏமாற்றவதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறான். அந்த கோபத்தில் அவள் அவன் மனைவி என்று அறிந்தும் அவனே குளிக்க அழைத்துப் போவதாக சொன்னான்.
“என்னாச்சி எட்வர்டு உனக்கு? ஆரோன் உன் ஃப்ரெண்ட் தான். அதுக்காக அவங்க பிரைவசியில நீ ஏன் தலையிட்ற? அவ அவனை பார்த்துப்பா ! உன்னை போல அவளுக்கும் ஆரோன பிரிஞ்ச வலி இருக்கும் அதுவும் உன்னை விட அதிகமாகவே இருக்கும். அவங்களுக்குள்ள பேச வேண்டியது இருக்கும்… நீ அமைதியா நில்லு எட்வர்டு ஜெஸி நீ ஆரோன கூட்டிட்டு போ !”என்றாள் ரெக்ஸ்லின்.
“விடு ரெக்ஸ்லின் அவன் கூட்டிட்டு போறதா இருந்தா போகட்டும்”என்று எட்வர்டடிற்காக சொல்ல, அதிலும் அவளை சந்தேகப்பட்டான் எட்வர்டு.
“இல்ல நீயே கூட்டிட்டு போ ஜெஸி !” என்றான் கடுப்புடன்.. அவனது முகமாற்றத்தை குறித்து கொண்டவள் ஆரோனின் கையை பிடித்துக் கொண்டு அறைக்குள் அழைத்து சென்றாள்.
அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றது என்னவோ அவனும் ஜெஸியும் காதலோடு இருக்கும் புகைப்படங்கள் தான் சுற்றி சுற்றி பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்தான். வாயை கொஞ்சம் பிளந்து ஆவென அப்புகைபடங்களை பார்த்தான்.
“ஆரோ ! இது வெறும் ரூம் மட்டும் இல்லை நமக்கு… கொள்ளை கொள்ளையா கொட்டி கிடைக்கற உன் காதலையும் என் காதலையும் பாதுக்காக்கற பொக்கிஷம் அறை ! நம்ம காதலை கொண்டாடின அறை ! நீ இல்லாத நேரத்துல உன் இருப்பை தக்கவச்சிட்டு இருந்த நினைவு அறை
நிறைய சொல்லலாம்… சண்டையிலருந்து சரசம் வரைக்கும் இங்க தான். இது குட்டி தாஜ் மஹால் நமக்கு…
நீ இல்லாமல் தனியா அழும் போது துணைக்கு இருந்தது இந்த அறை தான். இனி என் சந்தோசத்தை பார்க்க போற அறையும் இது தான் “என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு சொன்னாள்.
அவளது அழுகை ஏனோ நெஞ்சில் பாரம் கூடியது போல இருக்க, நெஞ்சை தொட்டு ஏதோ உணர்ந்தவன் சட்டென அவளிடம் “நீங்க அழாதீங்க, ப்ளீஸ் என்னால தாங்கிக்க முடியலை. புதுசா ஒரு மாதிரி வலிக்குது இங்க இப்படி பீல் பண்ணதில்ல இப்போ தான் பீல் பண்றேன். எப்படி தெரியல… ஆனா எனக்கு சீக்கிரமா நினைவு திரும்பிடும். நாம கணவன் மனைவியா சந்தோசமா இருக்கலாம்”என்றான் அவளை சமாதானம் செய்யும் எண்ணத்துடன்.
“ஏன் நினைவு திரும்பினதும் தான் நாம கணவன் மனைவியா வாழனுமா? இப்போ இல்லையா?”என கேட்கவும் அவன் தடுமாறினான்.
அவன் தடுமாற்றத்தை கண்டு முறுவலுடம் துண்டை கொடுத்தவள், அவன் மேற் சட்டையை கழட்ட அருகே போக, அவனோ அவனை தொட விடாமல் பின் வாங்கினான். அவளுக்கு சுருக்கென்று வலித்தது.
அவளும் கையை எடுத்து விட்டாள். துண்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல இவளை புகைப்படத்தின் முன் நின்று கண்ணீர் வடித்தாள்.
“இங்க நீயும் நானும் இருக்கும் போது இவ்வளவு டிஸ்டன்ஸ் இருக்குமா ஆரோ ! நீ இருந்தும் இந்த இடைவெளி வாட்டுது டா என்னை.
உன்னை அணைச்சு நிறைய முத்தம் கொடுக்கணும் மூச்சு முட்ட காதல் பண்ணி கட்டில் விளையாட்டு விளையாடும் உன்னை அணைச்சு தூங்கணும் ஆனா இதெல்லாம் நடக்காது போல டா ! உன் விலகல் வதைக்குது டா ? உன் மௌனம் என்னை கொல்லுதுடா ? உனக்கு எப்பட நியாபகத்துக்கு வரும்… ? இதெல்லாம் எப்போ நடக்கும்?”என்று அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டே சொல்ல, அவள் புலம்பலை கேட்டு மனம் வருந்தினான்.
தலையில் நீர் வடிய இடையில் துண்டை கட்டிக் கொண்டு வந்தான். அவன் வந்ததும் வேகமாக அவனை அமர வைத்து தலையை துவட்ட அவனோ நெளிந்தான்.
“கொடுங்க நானே பண்றேன்”வாங்க கையை தூக்கினான், அவளோ தட்டி விட்டு” இது என் கடமை…இதை நீ செய்தே ஆகனும் நீங்க தான் பிராமிஸ் வாங்கி இருக்கீங்க நான் பண்ணுவேன்”என்றாள். மறுபடியும் சங்கட்டமாக உணர்ந்தான். அவள் அவனிடம் ஆடையை கொடுக்க, அவனும் போட்டுக் கொண்டு வந்தான்
அவனைக் கண்டதும் என்ன நினைத்தாளோ, வேகமாக பெரு விரலில் எம்பி அவனை உதட்டில் முத்தம் வைத்தாள் . அவனோ அதிர்ந்து போனான்.
“இதுவும் என் கடமை தான்”என்று அவனை வெளியே அழைத்து போனாள். அவன் அவள் முத்தத்தில் ஆடி போய் அவளுக்கு அடங்கி அமைதியாக போனான்.
புயல் அடித்து ஓய்ந்தது போல ஆர்ப்பாட்டம் செய்து அறையில் அத்தனை பொருளையும் உடைத்து போட்டு வெறியுடன் கத்தி தீர்த்தவனை அடக்க வழியறியாது ருத்ரன் ஜெஸியை அழைக்க, அவளுக்கோ நண்பனை நினைத்து உள்ளம் பதற்றம் கொண்டது…
கணவன் வந்த கணத்தில் அவள் துருவனை மறந்து போயிருந்தாள். .
அவள் சர்ச்சிற்கு வந்த காரணம் கூட அவனிடம் முடிவை சொல்லத்தான்.
ஆனால் அங்கு நடந்ததோ சற்றும் எதிர்பாராத நிகழ்வாகிப் போக, வந்த நோக்கம் அவளுக்கு மறந்து போனது.
‘அவன் வந்தானா? என்ன ஆனான்?’ என்பதை கூட அவள் நினைக்கவில்லை ருத்ரனிடம் அழைப்பு வரும் வரைக்கும்..
ஆரோக்யா மகனை அமர்த்தி அவனுக்காக அவனுக்கு பிடித்த இனிப்பை செய்து கொடுத்தார். அதை அனைவரும் சாப்பிட்டனர். அவனும் உண்டான்.
நடுக்கூடலில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க, இவள் ஆரோக்யாவையும் ஆப்ரஹாமை அழைத்து உண்மையை சொல்லி ‘என்ன செய்ய ?’என்று கேட்டாள்.
“ஆரோனை போல துருவன் எங்க பிள்ளை போல தான் மா ! ஏற்கனவே நாங்க ஆரோனை இழந்து எவ்வளவு கஷ்டப்பட்டோம் அந்த வலி இன்னொரு தாய்க்கு வேணாம் டா நீ போ ! “என்றார் அந்த மென்மையான தாய்.
ஆப்ரஹாமும் யோசிக்க, “மாமா நீங்க என்ன சொல்றீங்க?”
“இதுல சொல்றதுக்கு என்னமா இருக்கு… நீ போயிட்டு வா ! அந்தப் தம்பிக்கு நீ புரிய வச்சுட்டு வா ! இப்பவும் சொல்றோம் எங்களுக்கு உன் மேலே பூர்ண நம்பிக்கை இருக்கு ! நீ போயிட்டு வா டா !”என்று தலையை வருடிக் கொடுக்க
“தேங்க்ஸ் அத்தை , மாமா !”என கண் கலங்கியவள் வேகமாக கிளம்பினாள்.
அவள் செல்வதை கூடத்தில் அமர்ந்திருந்த அனைவரும் பார்க்க, ஆரோக்கியா ‘முக்கியமான வேலை ‘ என்று சமாளிக்க, புருவ முடிச்சுடன் ஆரோனும் எட்வர்டும் போகும் அவளை பார்த்தனர்.
எட்வர்டு வேகமாக எழுந்து ஆபிரஹாமிடம் வந்து “எதுக்கு மாமா அவ போறா? எங்க போறா?”
அவரும் விஷயத்தை சொன்னார்.”இப்போ அது முக்கியமா? ஆரோன் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கான். இங்க இல்லாம இவ அங்க போகணுமா?”
“என்னாச்சி எட்வர்டு ஏன் இப்படி பேசற? சாக துடிக்கற உயிரை காப்பாத்த போறா அது தப்பா ! அந்த தம்பி தான் புரியாம ஏதோ பண்ணுது ! அந்த தம்பி கிட்ட பேசி மாத்தற பொறுப்பு ஜெஸி கிட்ட இருக்கு. ஜெஸியால தான் முடியும்னா போறது தப்பில்லபா அதான் அனுப்பி வச்சோம்…புரிய வச்சிட்டு வரட்டுமா? அதுவும் ஒரு உயிர் தான !”என்று அவர் நகன்று விட, இவனோ பல்லை அரைத்தான்.
‘ இவ சொல்றதுக்கு எல்லாம் இவங்களும் தலையாட்டாறாங்க ! இவ புரிய வைக்க போறாளா ! இல்ல உறவ முடிச்சிக்கலாம் சொல்ல போறாளா? என் நண்பன் ஏமாந்துட்டு இருக்கான். அவ வழி மாறிட்டா எப்படி இவங்களுக்கு புரிய வைப்பேன்… ரெண்டு பேருக்கும் உள்ள உறவை எப்படி இவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவேன். எப்படி என் நண்பன் இதை தாங்குவான்? ‘ பல விதமாக தவறாக யோசித்தான். அவனது அலைபேசி அலற எடுத்து பேச சென்றான்.
ஆரோன் அவள் வேகமாக வெளியே சென்றதை கண்டு தாயிடம் என்ன வென்று கேட்க அவரோ உண்மையை அனைத்தும் சொன்னார்.
“நாங்க கூட நீ இல்லாதனால ஜெஸி இரண்டாவது திருமணம் செய்ய சொல்லிக் கேட்டோம். எங்களுக்கு அப்புறம் அவளை பார்த்துக்க யாருப்பா இருப்பா ! அவளுக்கும் ஒரு வாழக்கை இருக்கேனு கேட்டோம். ஆனா அவ உன்னை தவிர கடைசி வரைக்கும் யாரையும் காதலிக்க மாட்டேன். கல்யாணம் செய்துக்க மாட்டேன். ஆரோனும் அவனோட நினைவுகள் போதும் டெனியை வளர்த்துட்டு வாழ்ந்திடுவேன் திட்டவட்டமா சொல்லிட்டா ப்பா ! உனக்கு அவ கிடைக்க நீ என்ன புண்ணியம் பண்ணிருக்கியோ ! நாங்க பார்த்த கூட இப்படி ஒரு மருமகளை பார்த்திருக்க மாட்டோம் ப்பா ! “என்று அவளை புகழ, அவனோ ஜெஸி எண்ணி நெகிழ்ந்தான்.
சலனமற்ற அவன் இதயத்தை புதிதாய் நுழைந்தது போல நுழைந்தாள் ஜெஸி… அவள் ஆண்டு வந்த இதயத்தில் மீண்டும் ஒரு புதிய ஆட்சியை அவனுக்குள் தொடங்கியிருந்தாள். இன்னும் அவன் அதை உணரவில்லை… முதல் நிலையில் அவனுக்குள் அவள் தங்கி விட்டாள்.
****
அறையின் வாசலில் நின்றவாறே துருவனின் எண்ணி பதற்றம் கொண்டிருந்தனர் அவனது குடும்பத்தார்கள்… ராதா புலம்பிய படியே இருந்தார். மது அழுத படி நின்றிருந்தாள். அவளது கையில் கட்டுப் போட்டிருந்தனர். ருத்ரனின் கையில் சிறு கீறல்களும் உண்டு
ஜெஸி ஆரோனின் நெஞ்சில் சாய்ந்து அழுததை கண்டு தாளாமுடியாமல் மீண்டும் காரில் ஏறியவனை வீட்டில் வந்து சேர்த்தார் காசி. உள்ளே வேகமாக வந்தவன் அறையிலிருந்த பொருளை துவம்சம் செய்ய, சத்தம் கேட்டு அனைவரும் விரைந்தனர்
“ஆஆஆ…”என அலறி அத்தனை பொருளை அனைத்தையும் போட்டு உடைத்தான். ருத்ரன் அருகே வந்து “என்ன ?”என்று கேட்க, அவனை தள்ளி விட்டவன், “இங்க இருந்து போ அண்ணா ! என்னை நெருங்காத நான் சாக போறேன். நான் நினைச்சது எனக்கு கிடைக்கல, எனக்கு உயிரோட இருக்க பிடிக்கல நான் போறேன். நான் லைப்ல தோத்துட்டேன் இனி உயிரோட இருக்க மாட்டேன்”என்று கண்ணாடி பொருளை கையில் எடுத்து கழுத்தில் வைத்து கிழிக்க சென்றவனை மதுவும் ருத்ரனும் பிடித்து கொண்டு அந்த கண்ணாடி துண்டை பிடுங்க முயல, அது முதலில் மதுவின் கையை பதம் பார்த்து இரத்தம் வந்தது. உடனே ருத்ரன் அவளை அனுப்பி விட்டு இவனுடன் போராட இவனுக்கு சில பல கீறல்கள். இருந்தும் அவன் சாகும் எண்ணத்திலே இருக்க, அவனை ஓங்கி ஒரு அறை விட்டான்.
அவனோ தடுமாறி மெத்தையில் விழுந்தான்.”என்னடா பிரச்சனை இப்படி சைக்கோ மாதிரி பண்ணிட்டு இருக்க? என்னடா ஆச்சு? என்ன நடந்துச்சு?”என கேட்க அவனும் அழுது கொண்டே அனைத்தும் சொன்னான்.
“ஆரோன் உயிரோட இருக்கானா???!”அதிர்ச்சியில் கேட்டான். அவனது எண்ணம் அம்மாவிடம் சென்றது. இதை அவரிடம் சொன்னால் குற்ற வுணர்வின்றி இருப்பார் என்று எண்ணினான்.
“முட்டாள், ஜெஸி இல்லேனா நீ சாவியா? இத்தனை வருஷமா அவ தான் கூட இருந்தாளா? இப்போ வந்தவளுக்காக எங்களை விட்டுடு போகணும் நினைக்கிறலே நீ ! சரி சாகனும்னா சாகு ! அவளுக்காக நஷ்டம் எங்களுக்கு தானே! சாவு “என்று வெளியே வந்து விட, மீண்டும் கோபத்தில் ஆக்ரோசமாக மீத இருந்த பொருளை உடைக்க அவன் ஜெஸியை அழைத்திருந்தான். அவளும் வந்து விட்டாள்.
உள்ளே அவன் தலை கவிழ அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.
“இன்னும் நீ சாகலையா துருவா ! நீ செத்திருப்ப வந்து பார்த்து போயிடலாம் நினைச்சேன்… நீ என்ன இன்னும் சாகாம உட்கார்ந்து இருக்க? சாகலியா? பயமா இருக்கா நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா? ” என்றதும் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நீ கிடைக்கலனா நான் செத்துடுவேன், தற்கொலை பண்ணிப்பேன் சொன்ன, பண்ணிக்கலியா நீ?
இப்பவும் எப்பவும் இந்த ஜெஸி உனக்கு இல்லை… அதனால் நீ தற்கொலை பண்ணிக்க துருவா ! ம்ம் போ துருவா பண்ணிக்க !”என்றாள் சன்னமாக, ஆனால் அவனிடம் எந்த பதிலும் இல்லை.
“என்ன பொறுத்த வரைக்கும், உன் காதல் உன் வீம்பிக்குள்ள மாட்டிகிட்டு சின்னாபின்னமா போச்சு. கிடைக்காதத கேட்டு அடம்பிடிக்கற பெரிய குழந்தை நீ. நீ பண்றதும் அப்படி தான் இருக்கு. என்னை கல்யாணப் பண்ணிக்கலைனா நான் செத்திடுவேன் சொல்றது சின்னப்பிள்ளை தனமா இல்லையா டா. நீ மிரட்டி என்னை கல்யாணம் பண்ணினாலும் என்னால ஆரோன் மறக்க முடியாது. என் மனசும் உடம்பும் அவளை ஜெபிச்சிட்டு இருக்கும் போது உன்னை எப்படி அக்சப்ட் பண்ணிக்கும் அது? ஒரு தாலி எல்லாத்தையும் மாத்திடுமா? நீ தொட்டாலும் மறத்து போன உடம்பு இது உணர்வ பிரதிபலிக்காது
கல்யாணம் பண்ணி ஒரு பொம்மையா உன் கூட நான் இருக்கணும் நினைச்சா வா கல்யாணம் பண்ணிக்கலாம்… எப்டி கொஞ்ச நாள் இவ மனச மாத்திடலாம் நினைக்காத, ஆரோன் தான் உடம்பெல்லாம் பச்சை குத்தினது போல அவன் பெயர் தான் உடம்புல இருக்க எல்லா செல்லும் சொல்லும் அவனை தான் என் ஒவ்வொரு செல்லும் கேட்கும்… அவனை தவிர யாரையும் என் மனசும் உடம்பும் எப்பவும் அக்சபட் பண்ணிக்காது. உனக்கும் எனக்கும் மேரேஜ் நடந்தாலும் வேஸ்ட்… நீ தான் கஷ்டப்பட்டு இதே போல தான் திரிவ அதுக்கு நீ சாகறதே மேல் !”என்றதும் அவளை முறைத்தான்.
“மனச மாத்திடலாம் நீ திடமா நினைக்கும் போது. மாறாதுனு நான் கண்ஃபிடென்ட் இருக்கேன் எப்படி மாறும்?
காதலை கேட்டு பெறாத துருவா ! அது தானா வர விஷயம் ! தானா வர காதலை அக்ஸ்ப்ட் பண்ணினா தான் நீ நல்லா இருப்ப ! உனக்கு உரிய காதல் நான் இல்ல ! மது. அவ உன்னை ரொம்ப நேசிக்கற அவ காதல் அத்தனையும் உனக்கு மட்டும் தான் . இப்படி வெறித்தனமா நடந்துக்கற நீ சாதிக்க போறது ஒண்ணுமே இல்ல ! என் ஆரோன் கிடைச்சிட்டான். இனி அவன் கூட வாழனும் நினைப்பேனே தவிர உன்னை பத்தி நினைக்க மாட்டேன். நீயும் அப்படியே இரு ! நமக்குள்ள இருக்க பிரண்ட் ஷிப் தொடரும்..
கொஞ்சம் நிதானாம யோசி புரியும் துருவா உனக்கு. உன் பேமிலி தான் உனக்கு முதலாம் பட்சம் அவங்களை விட நான் முக்கியமா? இது காதல்னு எனக்கு தோணலை ! காதல் வெறிப்பிடிச்சது இல்லை… ரொம்ப சாப்டான உணர்வு. அது எனக்கு ஒருத்தர் மேலே தான் வந்திருக்கு, ஆணித்தரமா என் நெஞ்சுல பதிஞ்சிருச்சு அதை புடுங்கி வேற ஒரு காதலை ஏத்துக்க முடியாது. காயம் எனக்கு தான்… வற்புறுத்தி அடையனும் நினைக்கிறது எல்லாம் நிரத்தரம் இல்ல துருவா ! உன் பக்கத்துல இருந்தாலும் இப்போ என் நினைப்பு முழுக்க ஆரோன் தான். ஐ லவ் ஹிம்
லாட்! இனி புது ஒரு வாழ்க்கை நானும் அவனும் வாழப் போறோம் ப்ளீஸ் அதுக்கு தடையா இருக்காத, நீயும் எல்லாத்தையும் மறைந்துட்டு புது மனுசனா வாழலாம் ப்ளீஸ் உன் கிட்ட ப்ரெண்ட்டா கேக்குறது அது ஒன்னு தான் செய்வீயா?” எனவும்
மழுங்கிய மூளையும் தெளிவடைந்தது. பிரகாச முகத்துடன் அவளை ஏறிட்டான்.
“என்ன சொல்ற?”
“நான் உனக்கு தொந்தரவா இருக்க மாட்டேன் ஜெஸி. நீ உன் ஆரோனோட உன் இஷ்டப்படி வாழு. நான் ஒரு காலும் உன் வாழ்க்கையில இடைஞ்சலாக இருக்க மாட்டேன். நானும் என் லைஃப் பார்க்கிறேன். ஆனா ஒன்னு அடுத்த ஜென்மம் என்னை தான் நீ மேரேஜ் பண்ணிக்கனும் !”என்றான்.
“மகூம் “என இருபக்கமும் தலை ஆட்டியவள்” எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெஸி ஆரோனுக்கு தான். மாற்றம் இல்ல !”என்றதும் அவன் முகம் கோணிக் கொண்டது
“அப்போ அடுத்த முறை நான் ஜெஸியா பொறந்து ஆரோனா உன்னை பின்னாடி அலைய விட்றேன் “என்றான். அவளும் சத்தமாக சிரித்தாள்.
“இனி ஒழுங்கா இருப்பீயா நான் போட்டுமா?”
“இனி உன் வாழ்க்கையில எனக்கு ஒரு இடமில்லை… ஆனா என் வாழ்க்கையில் முக்கியமான பெர்சன் நீ ! அது மாறாது ! காதலன்ற பேருல உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் சாரி ஜெஸி… கண் மூடித்தனமா நீ கிடைக்கணும் நடந்துட்டேன் சாரி ! என்னை பத்தி கவலை படாத நான் மாறிடுவேன். நீ போலாம்… கடைசியாக பிரண்ட்டா ஒரு ஹக் கொடுத்துட்டு போ ! ப்ளீஸ் “என்றான் அவளும் அவனை நட்பாக அணைத்து விடுவித்தாள்.
அவள் விடைபெற, உள்ளே அனைவரும் நுழைய அவர்களிடம் மன்னிப்பை யாசித்தான் . மதுவிடமும் மன்னிப்பு கோர, ருத்ரன் அவனை இறுக அணைத்து விடுவித்தான்.
***
இங்கோ “என்ன ஜெஸி ஆரோன் வந்துட்டான் இனி உன் குட்டு உடைஞ்சுடும் புது உறவை சரிகட்டிட்டு வர்றியா !”என எட்வர்டு கேட்டதும் அவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

