
காதல் – 71
அஸ்வதி மற்றும் அவளின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையில் இருக்கும் தங்களின் கடைசி நண்பனான சூர்யாவை காண சென்றனர்……..
அங்கு சென்று அவனின் காதலையும் வெற்றி பெற செய்தனர்…….
இதற்கிடையில் அஸ்வதிக்கும் விஹானுக்கும் சர்ப்ரைஸ் செய்வதாக எண்ணி யாருக்கும் எதுவும் கூறாமல் விஹானா அங்கு வந்து நின்றாள் அவளைப் பார்த்து திருடி என்று தவறாக எண்ணி விக்ரம் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான் பிறகு உண்மை தெரிந்த பிறகு அவன் அசடு வழிய நின்றான்…….
என்னங்க ரொம்ப சாரிங்க நீங்க பர்தா வேற போட்டு இருந்தீங்களா அதான் தப்பா நினைச்சுக்காதீங்க சாரி…..
பரவாயில்லை விக்ரம் சார் வீட்ட கொஞ்சம் தொறக்கறீங்களா ரெஸ்ட் ரூம் போனும் என்று அவள் கூறவும் விக்ரம் ஓடி சென்று அஸ்வதியின் வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு வந்து வீட்டை திறந்து விட்டான் வீட்டை திறந்ததும் விஹானா பாத்ரூமுக்கு ஓடி சென்றாள்……..
அவளின் ட்ராலி இரண்டயும் வெளியில் போட்டு விட்டே ஓடி விட்டாள் அதை விக்ரம் எடுத்து கொண்டு வந்து உள்ளே வைத்தான்…….
பிறகு விஹானா முகம் கை கால் கழுவி விட்டு வந்தாள்…..
விக்ரம் தவறு செய்து விட்டோம் என்று தன் தலையில் தட்டிக் கொண்டே தனியாக பேசிக் கொண்டிருந்தான்…..
அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே விஹானா வந்தாள்…….
என்ன போலீஸ் சார் தனியா உக்காந்து பேசிட்டு இருக்கீங்க?
ரொம்ப சாரிங்க நா தெரியாம பண்ணிட்டேன்……
அட விடுங்க சார், நா ஒன்னும் தப்பா நினைக்கல உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டா பண்ணுவீங்களா ?
சொல்லுங்க என்ன உதவி செய்யணும்?
ரொம்ப பசிக்குது இங்க சாப்பிட ஏதாவது இருக்குதா?
அஞ்சே நிமிஷம் இருங்க என்று விக்ரம் கிச்சனுக்கு ஓடி சென்று , சுட சுட சப்பாத்தி மற்றும் தொட்டுக்கொள்ள ஜாம் எடுத்து வந்து கொடுத்தான்……
எப்படி சார் அதுக்குள்ள சப்பாத்தி போட்டீங்க?
அஸ்வதி மாவு பிசைஞ்சு பிரிட்ஜில வச்சிருக்கா அதுல சப்பாத்தி போட்டு எடுத்துட்டு வந்தேன் அப்புறம் தொட்டுக்க எதுவுமே இல்ல அததான் ஜாம் கொண்டு வந்தேன் உங்களுக்கு ஜாம் ஓகேவா?இல்லன்னா சொல்லுங்க வேற ஏதாவது செஞ்சு தரேன்……
ஜாம் ஓகே சார்……
சரி நீங்க சாப்பிட்டுட்டு இருங்க இன்னும் உங்களுக்கு சப்பாத்தி போட்டு எடுத்துட்டு வரேன் என்று விக்ரம் கிச்சனுக்குள் சென்று விஹானாவிற்கு சுட சுட சப்பாத்தி போட்டு கொடுத்தான் விஹானா இருந்த பசிக்கு பதினொரு சப்பாத்திகள் சாப்பிட்டு விட்டாள்…….
அவள் சாப்பிட சாப்பிட விக்ரம் சப்பாத்தி எடுத்து கொண்டு வந்து கொண்டே இருந்தான் …….
விக்ரம் சார் வயிறு ஃபுல்லா ஆயிடுச்சு போதும் சார் ரொம்ப தேங்க்ஸ் சார்…..
அட இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்வீங்களா?தட்ட குடுங்க நீங்க போய் கை கழுவிட்டு வாங்க…….
இல்ல பரவால்ல விக்ரம் சார் என்னோட தட்ட நானே கழுவிக்கிறேன்……
அட கொடுங்க என்று விக்ரம் விஹானாவின் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்துவிட்டு ஹாலுக்கு வந்தான் அங்கு விஹானா அமர்ந்து கொண்டிருந்தாள்…….
உங்களுக்கு வேற எதுவும் வேணுமா விஹானா?
நீங்க செஞ்சு கொடுத்த சப்பாத்தி சாப்பிட்டு எனக்கு வயிறு ஃபுல்லா ஆயிடுச்சு இனிமே எதுவும் சாப்பிட வயிறுல இடம் இல்ல……
நீங்க விஹானோட தங்கச்சியா?
ஆமா சார்…..
சார் எல்லாம் வேணாம் விக்ரம்ன்னே கூப்பிடுங்க, அஸ்வதிக்கு நா அண்ணன் முறை வேனும்…..
உங்களுக்கு அஸ்வதிய சின்ன வயசுல இருந்தே தெரியுமா?
தெரியுமே விஹானா ஏன் கேக்குறீங்க ?
அப்புறம் ஏன் நீங்க அந்த கொடூர பொம்பள சுலோச்சனா கிட்ட இருந்து எங்களோட அஸ்வதிய காப்பாத்தல?
நா நிறைய தடவை அவள காப்பாத்த ட்ரை பண்ணி இருக்கேன் ஆனா அவள வீட்டுக்குள்ள என்ன பன்னுனாங்கன்னு எனக்கு தெரியாது விஹானா அப்படி தெரிஞ்சிருந்தா அஸ்வதிக்கு அப்படி நடக்காம பார்த்துருப்பேன் ,அப்புறம் உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
என்னது?
அஸ்வதி என்ன பாத்தாலே ரொம்ப பயப்படுவா , இப்போ கொஞ்ச நாளா தான் உங்க அண்ணாவால என்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்கா ……
விஹான் என்ன சொன்னாலும் அவ கேப்பா……
அது உண்மைதான் ரெண்டு பேரும் அவ்வளோ காதலிக்குறாங்க என்று விக்ரம் சிரித்தான்……
பிறகு நீண்ட நேரம் இருவரும் நிறைய நிறைய விஷயங்கள் பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்…….
இரவு ஒன்பது மணி போல அஸ்வதி மற்றும் அவளின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர்…….
விஹானா அஸ்வதியை பார்த்ததும் ஓடி சென்று அவளை கட்டி பிடித்துக் கொண்டாள்……
ஹே விஹானா ரொம்ப சாரிடி , உன்ன ரொம்ப நேரம் காக்க வச்சிட்டோமோ?
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல உன்னோட அண்ணன் என்கிட்ட ரொம்ப நல்லா பேசிட்டு இருந்தாங்க அதான் நேரம் போறதே தெரியல என்று அவள் விக்ரமை பார்த்து அழகாக சிரித்தாள்……
அந்த ஆளை மயக்கும் சிரிப்பில் விக்ரம் விழுந்து விட்டான்……
பிறகு அங்கு நடந்தவற்றை விஹானாவிடம் அஸ்வதி கூறிக் கொண்டிருந்தாள்……
ஆமா அஸ்வா அந்த லாயருக்கு நீ என்ன உதவி செஞ்ச?உயிரை காப்பாத்தினன்னு சொல்றாரு?
அது ஒரு பெரிய கதைடா விக்ரம் அண்ணா…….
பெரிய கதையா சொல்லு கேட்போம்…..
அன்னைக்கு ஒரு நாள் நைட் சுலோச்சனா என்னைய சாப்பாடு கொடுக்காம ரூம்ல வச்சு பூட்டிட்டா நான் ஏணிப்படி வழியா கீழே இறங்கி வெளியே போய் நல்லா சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன் அப்போ சுந்தர் அப்பா ரோட்ல நெஞ்சு வலில விழுந்து கிடந்தாரு எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அந்த இடத்துல யாருமே இல்ல அப்புறம் நானே அவர பிளாட்டா படுக்க வச்சு சி பி ஆர் பண்ணினேன் கொஞ்ச நேரத்துல அவர் கண்ணு முழிச்சுட்டாரு , அப்புறம் அவருக்கு தண்ணி கொடுத்து அவரோட வீட்டுக்கு அனுப்பி வச்சேன்…….
இதான் அன்னைக்கு நடந்த பெரிய ஸ்டோரி……..
அஸ்வதி உனக்கு ரொம்ப தைரியம்டி, அந்த ராத்திரியில தனியா ஒரு மனுஷனோட உயிரை காப்பாத்திருக்க……
என் மூஞ்சிக்கு முன்னாடி புகழாதீங்க எனக்கு பிடிக்காது என்று அவள் சிரித்துக் கொண்டே கூறினாள்…..
இப்பொழுது அஸ்வதி, விஹான் விஹானா ,மதன், வள்ளி மற்றும் அவர்களோடு விக்ரமும் ஒரு சில நாட்கள் அவர்களோடு ஒரே வீட்டில் சந்தோஷமாக இருந்தனர்……
ஹர்ஷா காஷ்மீருக்கு கிளம்பி விட்டான்……
வார இறுதி விடுமுறை சனி மற்றும் ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை கல்லூரிக்கு கிளம்பி அஸ்வதி வீட்டுக்கு வெளியில் வந்தாள், அங்கு விஹான் கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டு ஒரு புது காரின் மேல் சாய்ந்து கொண்டு ஸ்டைலாக நின்றான்……
விஹான் இது யாரு காரு?
முன்னால போய் பாரு என்று அவன் கூறவும் அஸ்வதி காருக்கு முன் சென்று பார்த்தாள் அதில் அஸ்வதிவிஹான் என்று எழுதியிருந்தது…….
விஹான் இது நம்ம காரா ?ரொம்ப அழகா இருக்குது, எப்ப வாங்கினீங்க ? என்கிட்ட சொல்லவே இல்ல??
சர்ப்ரைஸ் செல்லம், வெள்ளிக்கிழமை பஸ்ல அவ்வளவு கூட்டம் , உனக்கு நிக்கவே முடியல அதான் நம்ம ரெண்டு பேரும் காலேஜ் போறதுக்கு கார் வாங்கினேன் உனக்கு புடிச்சிருக்கா?
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு காலேஜ் கிளம்பலாமா?
கிளம்புவோம் என்று அஸ்வதியும் விஹானும் காரில் கல்லூரிக்கு சென்றனர்…….
பின்பு வழக்கம் போல அவரவர் வேலைகளில் மூம்முரமாக இருந்தனர்….
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அஸ்வதிக்கு ஒரு வகுப்பு தான் இருந்தது அதுவும் முடிந்து ஸ்டாப் ரூமில் அமர்ந்து கொண்டிருந்தாள் அப்பொழுது அங்கு துருவ் வந்தான் அவனைப் பார்த்து அஸ்வதி பயந்துவிட்டாள்……
அஸ்வதி நா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ப்ளீஸ் கொஞ்சம் என்னை பாரேன்…..
வேணாம் சார் தயவு செய்து இங்கிருந்து போயிடுங்க எல்லாரும் உங்களையும் என்னயும் ரொம்ப தப்பா பேசுறாங்க அது எனக்கு பிடிக்கவே இல்லை ப்ளீஸ் இங்கருந்து போயிருங்க என்று அஸ்வதி கண்களை மூடிக்கொண்டும் காதை பொத்திக்கொண்டும் அழுக ஆரம்பித்தாள்……..
அப்பொழுது அங்கு துவாரகா வந்தாள் அவள் துருவை பார்த்ததும் அவன் அஸ்வதியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான் என்று எண்ணி கோபத்தில் அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்………
சத்தம் கேட்டு அஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள் துருவ் கன்னத்தில் கைவைத்தபடி நின்று கொண்டிருந்தான்……
அஸ்வதி உங்கிட்ட இப்ப இவன் என்ன வம்பு பண்ணுனான்?
வம்பு ஒன்னும் பண்ணல துவாரகா, என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாங்க எனக்கு பேச பயமா இருந்தது அதான் வெளியே போங்கன்னு சொன்னேன்…..
அய்யயோ நா இவர அடிச்சிட்டேனே…..
எதுக்குடி அடிச்ச?
சார் சாரி சார் துவாரகா விஷயம் தெரியாம உங்கள அடிச்சுட்டா, என் சார்பா அவள கொஞ்சம் மன்னிச்சிடுங்க……
பரவாயில்ல அஸ்வதி இப்போ உங்க கூட உங்க பிரண்டு தான் இருக்காங்கல்ல கொஞ்சம் நா பேசுறதை கேளுங்களேன்…….
அஸ்வா நீ தைரியமா இரு நான் தான் உன் கூட இருக்கிறேன்ல்ல இவன் என்ன சொல்லுறான்னு கேப்போம் நீ சொல்லு என்று துவாரகா கைகளை கட்டிக்கொண்டு அவனைக் கூர்மையாக பார்த்தாள்………
அஸ்வதி அன்னைக்கு அப்பா ரூம்ல உன்கிட்ட நா நடந்துகிட்ட விதம் ரொம்ப தப்பு , அதுக்காக நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அத நா ஏத்துக்குறேன், அப்புறம் அன்னைக்கு ஸ்டாப் ரூம்ல உன்கிட்ட பேசினதும் ரொம்ப தப்பு அதுக்கும் என்னை மன்னிச்சிரு என்று அவன் அவளின் கால்களில் விழுந்து விட்டான்……
அவன் அவ்வாறு அவள் காலில் திடீரென்று விழவும் அவள் பதறிப்போய் பின்னால் நகர்ந்து நின்றாள் அப்பொழுது அவள் யார் மீதோ மோதி நின்றாள் திரும்பி பார்த்தால் விஹான் நின்று கொண்டிருந்தான்……
அஸ்வதி பயத்தில் அவனை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டாள்……
சரிடா கரடி எந்திரி எப்ப நீ உன்னோட தப்ப உணர்ந்தயோ அப்பவே நீ திருந்திட்ட சோ உனக்கு தண்டணை என்னன்னா எனக்கு டெய்லி நல்ல சாப்பாடு வாங்கி தரனும் புரியுதா ? என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்……..
அவளின் சிரித்த முகம் அவன் மணக்கன்னில் ஆழமாக பதிந்து விட்டது…….
பிறகு அனைவரும் அவரவர் வேளைகளில் பிசி ஆகினர்…..
அஸ்வதி துவாரகாவை தன் வீட்டிற்க்கு அழைத்தாள் ஒன்றாக இருக்கலாம் என்று அவளும் நாளை தன்னுடைய பொருட்கள் எல்லாம் எடுத்து வருகிறேன் என்று கூறினாள்……
சாயங்காலம் விஹான்னுக்கு கொஞ்சம் வேலை இருந்தது அதனால் அவன் அஸ்வதியை சிறிது நேரம் துவாரகாவோடு வெளியில் காத்திருக்குமாறு கூறினான் அவன் கூறியது போல அஸ்வதியும் துவாரகாவும் கல்லூரிக்கு வெளியில் உள்ள பானிபூரி கடையில் பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அப்பொழுது கல்லூரிக்குள் இருந்து வந்த துருவின் கார் எதிரே வந்த லாரியில் இடித்து அவனின் கார் தூக்கி தூர வீசப்பட்டது…….
தொடரும் …….
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

