
காதல் -68
அஸ்வதி மற்றும் விஹானின் காதல் பொழுதுகள் கரை கானா வெள்ளம் போல கரை புரண்டு ஒடி கொண்டு இருந்தது……
அஸ்வதி விஹானை மதன் கண்காணித்து கொண்டே வந்தான் ஆனால் அவன் கண்ணில் மன்னை தூவி விட்டு இரு காதல் புறாக்களும் மாடியில் ஜோடியாக ஆடி கொண்டு இருந்தார்கள்……
ஆடி களைத்த பின்பு இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்……
ஆனால் அஸ்வதி அவன் பின்னாலேயே விஹான்னின் அறைக்கு சென்றாள்…..
ஏய் அஸ்வதி , என்னடி உன்ன இப்ப தானே உன்னோட ரூம்ல விட்டுட்டு வந்தேன் ?திரும்ப வந்துட்ட?
விஹான் உங்களுக்கு நா இல்லாம தூக்கம் வாரதுன்னு எனக்கு தெரியும் என்று அவள் அவனின் தலையை மெதுவாக தன் மடியில் வைத்து கொண்டு அவனின் கேசத்தை மெதுவாக கோதி விட்டுக் கொண்டே இருந்தாள் அந்த சுகத்தில் விஹான் நன்றாக உறங்கி விட்டான்……
விஹான் உறங்கிய பிறகு அவனின் தலையை மெதுவாக தலகானியில் வைத்து விட்டு , அவனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு அவள் அறைக்கு சென்று உறங்கினாள்…..
பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து கல்லூரிக்கு சென்றனர்……
கல்லூரியில் அஸ்வதியின் வகுப்பு மாணவர்கள் , விஹான் அந்த கல்லூரிக்கு முதல்வராக இருக்கிறான் என்ற செய்தியை அறிந்து கொண்டு அவனை பார்க்க அவனின் அறைக்கு சென்றனர்……
விஹான்னும் அவர்களோடு இணைந்து சந்தோஷமாக சிரித்து பேசி அவர்களுக்கு அவர்களின் இறுதி ஆண்டு சர்டிபிகேட்களில் கையெழுத்துப் போட்டு அனுப்பினான்……..
வீட்டில் என்னதான் மதன் , அஸ்வதி விஹானின் காதல் காட்சிகளுக்கு தடை சொல்லி ரொம்ப கராராக இருந்தாலும்,விஹான் மதனின் பேச்சைக் கேட்பது போல பாவா செய்துவிட்டு கல்லூரியில் யாரும் அறியாமல் அஸ்வதியிடம் செல்ல சில்மிஷங்கள் செய்து கொண்டிருப்பான் இப்படியே ஐந்து நாட்கள் சென்றது………
விஹான், அஸ்வதி, துவாரகா மூவரும் எப்பொழுதும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிடுவார்கள்…….
அன்று ஒரு நாள் அவர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது…..
ஹே துவாரகா எப்போதும் ஏன் கடை சாப்பாடே கொண்டு வார?உங்க வீட்டுல உன்னோட அம்மா அப்பா சாப்பாடு செஞ்சு தர மாட்டாங்களா?
இருந்தாங்கன்னா கேட்டு சொல்றேன் என்று துவாரகா சிரித்தாள்…..
என்ன சொல்ற?
எனக்கு அப்பா அம்மா கிடையாது இங்க பக்கத்துல உள்ள ஆசிரமத்துல தான் நா வளர்ந்தேன் ஸ்காலர்ஷிப்ல வெளிய வந்து படிச்சு இப்போ இந்த வேலையில் இருக்கிறேன் நான் இப்பொழுது தானே இந்த காலேஜ்ல சேர்ந்து இருக்கேன் நாளைல இருந்து தான் எனக்கு கேன்டீன் சாப்பாடு ஆக்சஸ் உண்டு அதான் அது வரை கடை சாப்பாடு என்று துவாரகா சாப்படு பார்சலை பிரித்து உண்ண ஆரம்பித்தாள்…….
மிஸ் துவாரகா ஆசிரமம் பக்கத்துலன்னா, அன்னை தெரசா சைல்ட் ஹோமா?அங்கயா நீங்க வளந்தீங்க?
ஆமா சார் , அங்கதான் நா என்னோட அஞ்சு பிரெண்ட்ஸ்சும் வளந்தோம்……
அஸ்வதிக்கும் விஹான்னுக்கும் புரிந்து விட்டது மிஸ் துவாரகா யாரென்று…..
அஸ்வதிக்கு தன் உயிர் தோழியை கண்டதில் மகிழ்ச்சி தாளாமல் அவள் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது, அவளால் பேச முடியவில்லை…….
விஹான்தான் மேலும் பேசினான்……..
மிஸ் துவாரகா இந்த ஃபோட்டோவுல இருக்குறவங்க உங்களுக்கு தெரியுதான்னு பாத்து சொல்லுங்க என்று அவன் அஸ்வதி சிறு வயதில் அவளது ஆசிரம நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவளிடம் காட்டினான்…….
இந்த ஃபோட்டோ உங்ககிட்ட எப்படி??என்கூட மதன், சூர்யா, ஹர்ஷான்னு மூனு பசங்கதான் வளந்தாங்க, விஹான்னு யாரும் எனக்கு நியாபகம் இல்லையே…….
இந்த குட்டி பாப்பா அஸ்வதி நியாபகம் இருக்கா??
இவ என்னோட பெஸ்ட் பிரண்ட் சார் , இவள நா தேடாத இடமே இல்ல …..
ஏன் தேடுறீங்க இங்க உங்க பக்கத்துல தான உக்காந்துட்டு இருக்கா என்று விஹான் சிரித்து கொண்டே கூறவும்….
துவாரகா அஸ்வதியை பார்த்தாள் , அஸ்வதி ஆம் என்பது போல தலை அசைத்தாள் , துவாரகா அஸ்வதியை கட்டி அணைத்து கொண்டாள்…..
துவாயி அந்த சுலோச்சனா பொம்பளையும் அவ அம்மாவும் என்ன எவ்வளோ கொடுமை படுத்துனாங்க தெரியுமா என்று அஸ்வதி துவாயியை பிரிந்து சென்ற நாட்களில் இருந்து அவளுக்கு நேர்ந்த இன்னல்களை தன் நெருங்கிய தோழியிடம் கூறி கொண்டு இருந்தாள்…….
நீண்ட நேரம் இருவரும் நிறைய நிறைய விஷயங்களைபகிர்ந்து கொண்டனர்……
அப்புறம் துவாயி இது விஹான்……
தெரியுமே நம்ம பிரின்சிபால் சார், உன்னோட கிரஷ் அய்யயோ சாரி சாரி….
அவள் அவ்வாறு கூறவும் விஹான் சிரித்து விட்டான்……
லூசு விஹானும் நானும் காதலிக்கிறோம் என்று அவளின் காஷ்மீர் முதல் சென்னை வரை வளர்ந்த காதல் கதையை அவளிடம் கூறி கொண்டு இருந்தாள்……
அடியே கள்ளி அதான் அன்னைக்கு நா அப்படி சொன்ன உடனே அப்படி சொன்னியா??
ஆமா ……
துவாயி நா உன்ன ஹர்ஷாவ, மதன, வள்ளிய பாத்துட்டேன் இன்னும் சூர்யா தான் மிச்சம் ……
எங்க இவங்களயெல்லாம் பாத்த??
ஹர்ஷா,மதன் , வள்ளி மூனு பேரும் விஹான் பிரெண்ட்ஸ் அப்படி மீட் பண்ணேன் அண்ட் மதன் வள்ளி இப்போ என்னோட வீட்டுல தான் இருக்காங்க……
சூப்பர் , சூர்யா இருக்குற இடம் எனக்கு தெரியும் நம்ம எல்லாரும் சேர்ந்து அவனை பாக்க போகலாம் …..
சூரியா இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான்??
அவனோட லட்சியமான சூப்பர் மார்க்கெட் ஒப்பன் பண்ணி தொழிலதிபரா இருக்கான்…..
எங்க??
மதுரைல…..
விஹான் நம்ம எல்லாரும் சேர்ந்து சூர்யாவ பாக்க நாளைக்கு போவோம்,நாளைக்கு சனி கிழமைதான காலேஜ் லீவ் வேற போயிட்டு வருவோம்….
நீ சொல்லிட்டல்ல , போயிட்டு வந்துதுருவோம்……
விஹான் சார் என்னோட அஸ்வதி பாப்பாவ பத்திரமா பாத்துக்கோங்க இத்தனை நாள் அந்த கொடூர பொம்பளைங்க கிட்ட அஸ்வதி ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இனிமே வரக்கூடிய காலங்கள்ல அஸ்வதிய நீங்க ரொம்ப சந்தோஷமா பாத்துக்கணும் சரியா?
நீங்க சொன்னாலும் சொல்லணாலும் நான் அஸ்வதிய ரொம்ப பத்திரமா பாத்துப்பேன் , அவ என்னோடே உயிர்…..
அய்யோ ரொமான்ஸ் அள்ளுதே என்று அவர்கள் மூவரும் சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டே சாப்பிட்டு முடித்தனர்………
சாயங்காலம் மதன் அஸ்வதிக்கு கால் செய்தான்……
ஹே அஸ்வதி இன்னிக்கி சாயங்காலம் நீயும் விஹானும் பஸ்ல போக வேணாம் அந்த வழியா எனக்கு ஒரு வேலை இருக்கு நானே உங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் சரியா??
சரிடா சாயங்காலம் நீ வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு……..
என்ன சர்ப்ரைஸ் அது??
சர்ப்ரைஸ் எப்படிடா சொல்லுவாங்க எரும மாடு……
ஓஹோ சரி நா சாயங்காலம் வந்து பாத்துக்குறேன் பாய்…..
பாய்டா…..
என்னாச்சு அஸ்வா? யாரு போன்ல??
மிஸ்டர் மதன்குமார் தான் போன் பண்ணாங்க சாயங்காலம் என்னையும் விஹானையும் பிக்கப் பண்ணிக்க வரானாம் அதான் உன்ன அவனுக்கு காமிச்சு அவன சர்ப்ரைஸ் பண்ணுவோம்……
ஓகே சூப்பர் பிளான் ….
சாயங்காலம் ஆனது கல்லூரி முடிந்து அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர் …….
கல்லூரிக்கு வெளியில் ஆறடியில், சந்தன நிறத்தில் மலையாள நடிகர் போல கண்களில் கூலர்ஸ் சகிதம் மதன் ஸ்டைலாக போலீஸ் ஜீப் மீது சாய்ந்து கொண்டு நின்றான்……..
அஸ்வதியும் விஹானும் கல்லூரி முடிந்து வெளியில் வந்தனர்……
என்னடா அழகு அழகான பொம்பள புள்ளைங்க போற இடத்துல இப்படி ஸ்டைலா கூலிங் கிளாஸ் மாட்டிட்டு ஸ்டைலா நின்னா எல்லாரும் உன்ன சைட் அடிப்பாங்கன்னு நினைப்போ??
எஸ் எஸ் அப் கோர்ஸ் அஸ்வா…….
நினைப்புதான் ,சரி உனக்கு நா ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்னு சொன்னேன்ல்ல அத பாக்க ஆர்வமா இல்லையா ??
ஆர்வமா இருக்கு , என்ன சர்ப்ரைஸ் அது?
விஹான் மதனின் கண்களை தன் இரு கைகளால் மூடினான்……
பிறகு மதன் அவன் கண்களை திறந்து பார்த்தபோது அவன் முன்னால் துவாரகா நின்றாள்……
ஹே மதன் இது யாருன்னு தெரியுதா??
துவாயி என்று அவன் அவளை அப்படியே அனைத்து கொண்டான்…..
எப்படி இருக்க துவா…..
நா நல்லா இருக்கேன்டா அவளும் அவனை பார்த்து அழுக ஆரம்பித்தாள்……
அஸ்வதியும் அவர்கள் இருவரை சேர்த்து அனைத்து கொண்டாள் …..
அப்பொழுது அங்கு வந்த வள்ளியும் விஹான் மூலம் உண்மை அறிந்து கொண்டு அவர்கள் மூவரை சேர்த்து அனைத்து கொண்டாள்…….
நால்வரும் நீண்ட நேரம் தங்களின் சிறு வயது வாழ்க்கை பற்றி பேசி சிரித்து கொண்டே இருந்தார்கள் அப்பொழுது விஹான் ஹர்ஷாவிற்கு வீடியோ கால் செய்து அவர்கள் நால்வரிடமும் பேச வைத்தாள்……….
நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்தோஷமாக இருப்பதை பார்த்த விஹான்னுக்கு நிம்மதியாக இருந்தது…..
அன்று தேவராஜ் சுலோச்சனா மற்றும் அனந்தியை பார்க்க ஜெயிலுக்கு சென்றார்…….
சுலோச்சனா தான் முதலில் வந்தார்…..
தேவராஜை அங்கு பார்த்ததும் அவரைப் பார்த்து ஏளனமாக என்ன எப்படி இருக்கீங்க? உங்களோட அனாதை பொண்ணு எப்படி இருக்கா?? உங்க பேர்ல உள்ள அவ்வளவு சொத்தையும் அவ பேருல எழுதி வச்சிட்டீங்களா?
ஆமா என்னோட பொண்ணு அஸ்வதி பேர்ல என்னோடே எல்லா சொத்தையும் எழுதி வச்சுட்டேன், சுலோச்சனா இன்னமும் நீ கொஞ்சம் கூட திருந்தவே இல்ல ரொம்ப நாள் கழிச்சு உன்ன பாக்க வந்தேன் முதல் வார்த்தையா சொத்தை பத்தி கேக்குற??
எனக்கு அதான் முக்கியம் ,ஆமா உங்களோட செல்ல பொண்ணுக்கு இப்போ எத்தனை மாசம் போயிட்டு இருக்கு???
என்ன உலருற?அஸ்வாவுக்கும் விஹான் தம்பிக்கும் இன்னும் கல்யாணம் ஆகல கல்யாணம் ஆன பிறகு தானே அஸ்வதி மாசமா இருப்பா? அறிவில்லாம பேசிட்டு இருக்காத என்று அவர் சுலோச்சனாவிடம் கோபமாக பேசினார்…..
சுலோச்சனாவிடம் மீண்டும் அதே ஏளன புன்னகை…….
என்னடி சிரிக்கிற??
என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல அந்த அஸ்வதியும் விஹான்னும் இருபத்தி நாலு மணி நேரமும் ஒன்னாவே தான் இருக்குறாங்க இந்நேரம் அஸ்வதிக்கு ஏழாவது மாசம் போயிட்டு இருக்குமே என்று சுலோச்சனா அஸ்வதியை பற்றி கேவலமாக பேசினார்…….
அஸ்வதி பத்தி தப்பா பேசாத….
ஓஹோ புரிஞ்சிருச்சு அந்த விஹான் உங்க பொண்ணு கூட கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துட்டு அவள நல்லா அனுபவிச்சிட்டு அவள கை கழுவி விட்டுட்டு போயிட்டானா??
சுலோச்சனா அவ்வாறு கூறியவுடன் தேவராஜ் கோவப்பட்டு தன்னை அடிப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்த சுலோச்சனாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் படி தேவராஜ் சுலோச்சனா கூறியதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்…….
அவரின் அந்த சிரிப்பை எதிர்பாராத சுலோச்சனா அவரை வியப்பாக பார்த்தார்…….
என்ன சுலோச்சனா எல்லாரும் உன்னோட முன்னால் காதலன் சேகர் கூட நீ இருந்த மாதிரியே ஆயிடுவாங்களா ? என்று தேவராஜ் விழுந்து விழுந்து சிரித்தார்…..
சேகர் என்ற பெயரை கேட்டதும் சுலோச்சனா ஆடிப் போய்விட்டார் தேவராஜை மிரட்சியோடு பார்த்தார்…….
தொடரும்……
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……….
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

