
பூகம்பம் – 32
“அக்கா உன் விருப்பம் என்னமோ அதை சொல்லு..” என்று விடாமல் அசோக் கூற, யாரையும் பார்க்காமல் “பிடிச்சுருக்கு” என்ற சுமதியின் வார்த்தையை நம்ப முடியாமல் “உண்மையாவா.? இல்ல எனக்காக சொல்றீயா.?” என்று கேட்டான் அழுத்தமாக.
நிமிர்ந்து அவனை பார்த்த சுமதி “எனக்கு பிடிச்சதுல தான் சொல்றேன் அசோக்.. எனக்கு பிடிக்கலனா நான் ஏன் பெரிய அக்கா அப்படி பேசிட்டு போனதும் அழுக போறேன்.? எனக்கு அவரை பிடிச்சுருக்குடா..” என்றாள் குரல் கம்ம.
“அப்ப மேற்கொண்டு பேசலாமா.?”
“ம்ம்ம்ம்”
“உனக்கு ஓக்கே தானே.?”
“ம்ம்ம்ம்..”
“உன் முடிவுல எந்த மாற்றமும் இல்ல தானே.?”
“ஹூம் நான் உறுதியா சொல்றேன் எனக்கு அவரை பிடிச்சுருக்குடா..” என்று தன் முடிவை சுமதி கூறிட, பெருமூச்சுடன் தாயை பார்த்தவன் “நான் அவங்ககிட்ட பேச தான் போறேன்.. உன் பெரிய பொண்ணு ஏதாவது பிரச்சனை பண்ணுனா நான் சும்மா இருக்க மாட்டேன்.. இப்பவே சொல்லிட்டேன்..” என்று எச்சரிக்கையும் விடுத்தான்.
அவரின் மேலிருந்த கோவத்தில் வேறு எதுவும் பேசாமல் அசோக் சென்றிட, கலங்கி நின்ற அவரிடம் “அத்தை எத்தனை நாளைக்கு தான் பெரிய அண்ணி பேசறதை கேட்டுட்டு இருக்க முடியும்.? புள்ளைக அடிச்சுக்கிட்டா என்ன பண்றதுனு யோசிக்கற நீங்க இவங்களோட மனநிலை என்னனு யோசிச்சுருக்கீங்களா.?
எல்லா உறவுலயும் சண்டை வர தான் செய்யும்.. சண்டையில்லாத உறவு இருக்கா என்ன.? பெரிய அண்ணிக்கு விட்டு குடுத்து விட்டு குடுத்து இவங்க வாழ்க்கையை தொலைச்சுட்டு நிற்கணுமா என்ன.? நீங்களே யோசிங்க..” என்று அவரின் மனது புண்படாதவாறு கூறினாள் காவ்யா.
இவர்கள் பேச தொடங்கிய போதே சமையலறைக்குள் சென்றிருந்த ரூபன் காஃபி கோப்பையுடன் வெளியில் வர, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சுமதி பதறி எழுந்து “என்னப்பா இப்படி.?” என்றிட, இதுல என்னக்கா இருக்கு.? என் அக்காக்கு ஒரு காஃபி போட்டு குடுத்தா என் தலைல இருக்கற கிரீடம் கீழறங்கிருமா.? நீங்க எதுவுமே சாப்பிடாம இருக்கீங்க.. முதல்ல இந்த காஃபியை குடிங்க” என்றபடி அவளிடம் குடுத்தான்.
“நல்லா இல்லனாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.. ப்ளீஸ்..” என்று கண்ணை சுருக்கி கெஞ்சலை விடுவித்தவனை கனிவுடன் சுமதி பார்த்திட, “அண்ணா எங்களுக்கு எல்லாம் காஃபி இல்லயா.?” என்று இடையில் நுழைந்தாள் காவ்யா.
“எல்லாருக்கும் சேர்த்து தான்மா காஃபி போட்டேன்.. இரு எடுத்துட்டு வர்றேன்..” என்று நகர போனவனை தடுத்த காவ்யா அவளே சென்று அனைவருக்கும் எடுத்து வந்தாள். தனியாக நின்றிருந்த அவளவனையும் விடாமல் இழுத்து வந்து அவர்களுடன் அமர வைத்தாள்.
பிள்ளைகளின் பேச்சை ஓரமாக அமர்ந்திருந்த அசோக்கின் அன்னை பார்த்திருந்தார்.. தன் மகளின் வருத்தங்கள் சிறிது சிறிதாக மறைந்து முகத்தில் புன்னகை தவழ்வதை கண்டவருக்கு மகிழ்ச்சியே. இது தான் தாயின் அன்பும் கூட.!!
ஆனால் மகனை பார்த்ததும் மீண்டும் கவலைகள் அவரை சூழ்ந்து கொண்டது.. இன்னும் அவனின் முகம் கடுமையாகவே இருக்க, மற்றவர்கள் பேசுவதை கேட்டானொழிய இவன் எதுவும் பேசவில்லை.
மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்மதம் என்று விட்டான்.. அவர்களும் மற்ற வேலைகளை பார்க்கலாம் என்றிட, இது அவனின் பெரிய அக்காளையும் சென்றடைந்தது. உடனே கிளம்பி வந்து சண்டையை ஆரம்பிக்க, “உன் பையனுக்கு தாய்மாமன் வேணும்னு பேசாம இரு.. இல்ல நான் இப்படிதான் கத்திட்டு இருப்பேனா தம்பி ஒருத்தன் இருக்கான்றதை இப்பவே மறந்துரு..” என்று விட்டான் அசோக் காட்டத்துடன்.
அவனிடம் வாயை மூடினாலும் “என்னமா உன் புள்ள இப்படி பேசறான்.? நீயும் அமைதியா இருக்கா.? அப்ப யாருக்கும் நான் வேணாமா.?” என்று அழுக, வேலையை கவனித்தபடியே “அவன் சொல்றது எனக்கு தப்பா தெரில.. உனக்கு தம்பியா.. உன் பையனுக்கு தாய்மாமனா செய்ய வேண்டியதை அவன் சரியா செஞ்சுட்டான்..
இப்ப உன் தங்கச்சிக்கு செய்ய வேண்டிய கடமையையும் செய்யறான்.. இன்னும் எத்தனை நாளைக்கு அவன் உங்களுக்கே சம்பாரிச்சு கொட்ட முடியும்.? அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு.. அதைய அவன் பார்க்க வேணாமா.?” என்று கேட்டு மகளின் வாயை மூடினார்.
அவரை முறைத்து “நீயும் அவனுக்கு சப்போர்ட்டு பண்றீயல்ல.? இப்ப நான் யாருக்கும் வேண்டாதவளா ஆகிட்டேன்.. இந்த வீட்டுலயும் எனக்கு உரிமையில்லை.. ம்ம்ம் பரவால்ல..” என்றிட, “இங்க பாரு நீ இங்க வா.. எத்தனை நாளைக்கு வேணாலும் இரு.. ஆனா அதுதான் பண்ணனும் இதுதான் பண்ணனும்னு அதிகாரம் மட்டும் பண்ணாத..
இத்தனை நாளா நான் அமைதியா இருந்து உன்னைய ஏத்தி விட்டது தான் என் தப்பு.. இதனால தான் எல்லாரும் என்னைய காறி துப்பிட்டு போறாங்க.. இங்க வந்தா ஏதாவது பிரச்சனை பண்ணாம கிளம்பி இருக்கீயா.? நீ கத்தற கத்து தெரு முனை வரைக்கும் கேட்குது..” என்று தலையிலடித்து கொண்டார்.
பின்பு “அவன் சொன்னது தான் நானும் சொல்றேன்.. உனக்கு நாங்க வேணும்னா அமைதியா இரு.. யாரும் வேணாம்னு கிளம்பிரு.. இப்பதான் சுமதி வாழ்க்கைல ஒரு நல்லது நடக்க போகுது.. அதைய கெடுத்து விட்டராத..” என்றதில் முகம் கறுத்து போய் வெளியேறி இருந்தாள்.
சிவாவின் தந்தையின் அழைப்பை எதிர்பார்க்காத ரூபன் “பெரிப்பா சொல்லுங்க.. ஏதாவது பிரச்சனையா.?” என்று பதற்றமடைய, “ஏலேய் பதட்டப்படாதயா.. போன் போடணும்னு நினைச்சுப்புட்டே இருந்தேன்.. அப்பறம் மறந்துப்புடறேன்.. தூங்கிட்டியா.?” என்று கேட்டு சிரித்தார்.
“இல்லங்க பெரிப்பா.. திடீர்னு நீங்க இந்த நேரத்துல போன் பண்ணுனதுல தான் பயந்துட்டேன்..” என்றிட, “சரி சரியா.. நில பத்தரத்தையே என்றகிட்டயே குடுத்துப்புட்டு போய்ட்டீயே.? மொதல்ல அதைய வந்து வாங்கிட்டு போயா..” என்று அவர் கூறிட, “உங்ககிட்டயே இருக்கட்டும் பெரிப்பா.. எனக்கு தேவையான நேரத்துல வாங்கிக்கறேன்..” என்றான் மறுப்பாக.
ரூபனின் சித்தப்பா நிலத்திற்கான பத்திரத்தை அவனிடம் குடுத்ததும் முதலில் என்ன செய்வது என்று புரியாமல் முழித்தவன் பின்பு வீரச்சாமியிடமே குடுத்து விட்டு வந்திருந்தான் வலுக்கட்டாயமாக. இப்போது அவர் அழைத்ததற்கான காரணமே வேறு.!
“ராசா நா சொல்லணும்னு நினைக்கறதை சொல்லிப்புடறேன்யா.. அந்த வயலு சும்மாவே கிடந்தா ஒனத்துக்கும் ஆகாம போய்ரும்யா.. உன்ற சித்தப்பன் அந்த நிலத்தை அப்படியே விட்டுப்புட்டு இருந்தான்.. நானும் எம்புட்டு தடவை அவன்கிட்ட சொல்லி பாத்துட்டேன்.. கேட்கற மாதிரி தெரில.. இப்ப நீயாவது ஏதாவது பண்ணுயா” என்று தான் நினைத்ததை கூறினார்.
“நானும் ஏதாவது ஒரு வழியை பண்ணனும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் பெரிப்பா.. நீங்களும் கேட்டுட்டீங்க..” என்ற ரூபனிடம் “ராசா நானே குத்தகைக்கு எடுத்துக்கறேன்யா.. எனத்துக்கு வெளில வுட்டுப்புட்டு.? நம்ம வயலும் பக்கத்துல தான் இருக்கு..
அதோட சேர்த்து இதையும் பாத்துப்புட்டு போறனே.? குத்தகைக்கு வுட்டா பணமும் வந்த மாதிரி இருக்கும்.. வயலும் உழுத மாதிரியாகிருச்சு.. நீ என்னயா சொல்ற.?” என்று கேட்டார்.
ரூபனுக்கும் அவர் சொல்வதும் சரியெனவே பட, “எனக்கு சம்மதம் தான் பெரிப்பா.. யாரோகிட்ட குடுக்கறதுக்கு நீங்களே எடுத்துக்கங்க..” என்று தன் சம்மதத்தை உரைத்திட, “உன்ற ஆத்தாகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுப்புட்டு சொல்லுயா.. சிவாகிட்ட சொல்லி குத்தகை பணத்தை பேங்குல போட்டு விட சொல்றேன்யா..” என்று மற்ற விவரங்களையும் தெளிவாக கூறினார்.
“பெரிப்பா பணத்துக்கு இப்ப என்ன அவசரம்.? அதைய பத்தி அப்பறம் பேசிக்கலாம்.. அந்த வயலு மறுபடியும் பசுமையா மாறுனா அதுவே எனக்கு ரொம்ப சந்தோசம்..” என்றான்.
“சொந்தக்காரனா இருந்தாலும் பணத்துல கவனமா இருக்கணும்யா.. இந்த உலகத்துல எல்லாமே முக்கியம் தான்.. உன்ற ஆத்தாகிட்ட கேட்டுட்டு பதிலை சொல்லுயா.. அப்பறம் மத்ததை பேசிக்கலாம்..” என்றவரிடம் வாதம் புரிய மனமில்லாமல் “ம்ம்ம் சரிங்க பெரிப்பா” என்றதோடு அப்பேச்சை முடித்து விட்டான்.
“கிளம்பியே ஆகணுமா.?” என்று விடாமல் ரூபனின் கையை ஆதிரா பிடித்து வைத்திருக்க, “ஆமா ஆதி.. வேலை இருக்கு.. அதுவுமில்லாம அம்மா வேற தனியா இருக்காங்க..” என்றிட, “அடுத்த தடவை வரும் போது அத்தையையும் கூட்டிட்டு வா அபி..” என்றாள் பெண்ணவள்.
சின்ன சிரிப்புடனே “மாமியார் வீட்டு விருந்துக்கு வர்றப்ப கூட்டிட்டு வந்துக்கலாம்.. இப்ப என்ன அவசரம்.?” என்றிட, “ஆஹான்.. இப்ப கூட்டிட்டு வந்தாலும் என் மாமியாருக்கு விருந்து போட நான் தயார் தான்..” என்று கண்சிமிட்டினாள்.
குறும்புடனே “அப்போ விருந்து எனக்கில்லயா.?” என்று ரூபன் வினவிட, “நீ தான் உன் தங்கச்சிக்கு மட்டும் ஸ்பெஷலா காஃபி எல்லாம் போட்டு குடுத்துருக்க.. அவளே உனக்கு விருந்து மருந்து எல்லாம் குடுப்பா..” என்று செல்லக்கோவத்துடன் உதட்டை சுழித்தாள்.
“அடிப்பாவி.. இன்னும் அதைய நீ விடலயா.?”
“நீ பண்ணுனது தப்புதான் அபி..”
“ஒரு காஃபி போட்டு குடுத்தது குத்தமா.? என்னமா இப்படி பண்றீங்களேமா..”
“அவ இதைய சொல்லி சொல்லி என்னைய எப்படி எல்லாம் கிண்டல் பண்ணுனானு உனக்கு தெரியுமா.?”
“முருகா.!!” என்று நொந்து “வாழ்நாள் முழுவதும் உன் கூட தான் ஆதி நான் இருக்க போறேன்.. ஒரு காஃபிக்கு இப்படியா.?” என்றதுமே அவளின் முகம் புன்னகையில் மலர துடித்திட, “இப்படி ஏதாவது பேசி என்னைய மயக்கி பேச முடியாம பண்ணிற அபி..” என்றாள் சிணுங்கலுடன்.!
நீ என்னவள்
என்பதாலோ
நீ செய்திடும்
அனைத்தும்
அழகாகவே
தெரிகிறதடி
கண்ணே.!!
விழிகளில் சிரிப்புடனே இருவரும் பார்த்து நின்றிருக்க, தூ
ரத்தில் நின்றிருந்த இரு விழிகள் இவர்களை கடுமையாக முறைத்தவாறு அவர்களை நோக்கி வந்தது.
காட்டத்துடன் அவர்களை முறைத்து கொண்டு வந்தது வேறு யாருமில்லை காவ்யா தான்.. “என் லவ்வு அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு.. நீ மட்டும் ஜாலியா லவ் பண்ணிட்டு இருக்கீயாடி.?” என்று ஆதிராவிடம் கடுப்புடன் வினவ, திடீரென்று அருகில் கேட்ட சத்தத்தில் பயந்தவளோ அது காவ்யா என்றுணர்ந்ததும் நெஞ்சை நீவி கொண்டாள்.
“அதுக்கு இப்படி தான் பின்னாடி நின்னு கத்தி பயப்படுத்துவீயா.? மூஞ்சிக்கு முன்னாடி வந்து கேட்டா என்னவாமா.?”
“முன்னாடியோ பின்னாடியோ அதெல்லாம் எனக்கு கவலையில்லை.. நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லு..”
“உன் லவ்வு தூக்குல தொங்குனாலும் நான் ஜாலியா தான்டி லவ் பண்ணுவேன்.. அதுக்கு என்ன இப்ப.?”
“யூ மீன்.. யூ மீன்.. உன் லவ்வு தான் உனக்கு முக்கியம்னு சொல்றீயா.?” என்று வராத கண்ணீரை துடைத்து விட்டு கேட்க, “ஆமா என் லவ்வு தான் எனக்கு சோறு போடும்.. நீயா போட போற.?” என்றதும் ரூபன் தான் ஙேவென்று விழித்தான்.
“தங்கச்சி லவ்வுக்கு ஹெல்ப் பண்ணாத அண்ணன் இங்க இருக்கறதை விட கிளம்பறதே மேல்.. முதல்ல நீங்க கிளம்புங்க.. ப்ச் அவளை என்ன பார்க்கறீங்க.? வாங்க முதல்ல..” என்றவள் ரூபனின் கையை பிடித்து இழுத்து சென்றாள்.
“பொறாமை பிடிச்சவ.. எனக்குனு வந்து சேர்ந்துருக்கு பாரு..” என்று காவ்யாவை திட்டியபடி ஆதிராவும் வர, கிளம்பறேன் என்று விழியால் உரைத்து தலையசைத்த ரூபனின் கூற்றை இவளும் ஏற்று கொண்டு கையசைத்தாள் புன்னகையுடன்.!!
ஹஸ்கி குரலில் “அண்ணா இந்த தங்கச்சியை மறந்தராதீங்க ப்ளீஸ்.. என் லவ்வுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் அண்ணா..” என்று கெஞ்சலுடன் கூறியவளின் பாவனையில் சிரிப்பை சிதற விட்டவன் நான் பேசறேன்மா என்று கூறி அவளின் முகத்திலும் புன்னகையை பரவ வி
ட்டிருந்தான்.

