
இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே நிலவ, அமைதியை கலைத்த ஆடவன் “சோ என்ன அவாய்ட் பண்ற ரைட்.. பட் என்ன காரணம் தெரிஞ்சிக்கலாம் ஒருவேளை உன் கழுத்துல தாலி கட்டினதுல தான் இந்த ஒதுக்கமா.. பதில் சொல்லுடி” என்று பொறுமையாக தொடங்கியவன், அவளின் ஒதுக்கத்தால் இறுதியில் கோவத்தில் சிவந்திருந்தான்.
அவனின் கோவம் புரிந்தும் பெண்ணவள் தலை கவிழ்த்து “வேண்டாம் ரே.. இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.. அதாவது நீ தாலி கட்டினது உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியாது தான சோ இப்போவே கழட்டி தரேன்.. அதுக்கு அப்புறம் தாராளமா பழைய மாதிரி பேசிக்கலாம்” என்றதும் தான் தாமதம் பெண்ணவள் கன்னத்தில் அவனின் கை இடியாக இறங்கியது.
ஆம் அடித்து விட்டான் எந்த உறவை அவளிடம் நிலைக்க வைக்க தாலி கட்டினானோ, அதை அல்லவா பெண்ணவள் களைக்க பார்க்கிறாள். மனமெங்கும் அவளின் வார்த்தையால் ரணமாக எரிந்தது.
அவன் அடித்ததில் வலியாலும் தான் அவனை காயப்படுத்தி விட்டோம் என்றதில் பெண்ணவள் கண் கலங்கி “ரே” என்று மென்மையாக அழைக்க,
அவளின் கண்ணீரில் கோவத்தை அடக்கியவன், அடுத்த கணமே அவளின் இதழை ஆழமாக கவ்வி கொண்டான்.
அவனின் எதிர்பாரா தாக்குதலில் பாவையின் விழிகள் அதிர்ந்து விரிய, பின் தன்னால் முடிந்த மட்டும் அவனை தள்ள முயற்சித்து ஆடவன் இடும்பு பிடியில் தோற்றவள், ஒரு கட்டத்தில் அவளின் உணர்வுகள் வெளியே வந்து ஆடவன் முத்தத்தில் தன்னையே தொலைத்து நின்றாள்.
அதில் மெல்ல அவளின் இதழுக்கு விடுதலை அளித்த ரேயன், அவளின் முகம் பார்த்து “எல்லாத்தையும் முடிச்சிக்கலாமா” என்று சர்வ சாதாரணமாக கேட்க, இப்போது அதிர்வது தியாழினியின் முறையாகி போனது.
அதை கண்டு கொள்ளாமல் பெண்ணவளின் தாலியின் கை வைத்தவன் “நான் தானே கட்டினேன்.. சோ நானே எடுத்துக்குறேன்” என்றதில் அவன் கையை தட்டிவிட்டு,
அவன் மார்பில் விடாமல் அடித்த தியா “ஏன்டா என் கழுத்துல தாலி கட்டின.. சொல்லு.. என்ன எதுக்கு சித்திரவதை பண்ற” என்று அடித்து ஒயந்தவள், அவன் மார்பிலே தஞ்சம் புகுந்து “முடியல ரே.. இந்த உறவு நம்மள பிரிச்சிடுமோன்னு பயமா இருக்கு.. எனக்கு நீ வேணும் ஆனா இந்த உறவு வேண்டாம்.. பயமாயிருக்கு ரே” என்றவள் அவனுள் இறுக புதைந்தாள்.
அவளை தன்னை பார்க்கும் படி நிமிர்த்தியவன் “நீ என்னடி நினைச்ச.. நானும் என் மாமன போல உன்ன தல முழுகிடுவேன் நினைச்சியா” என்றதில் அதிர்ந்தவள் “ரே” என்று அழைக்க,
அதை கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்தவன் “ஒருவேளை நானும் அந்த ஆளோட குடும்பம்ன்னு.. அந்த ஆள் மாதிரியான கீழ்தனமான ரத்தம் எனக்கும் ஓடும்ல..” என்றதில் ஆழமாக இதழை கவ்வுவது அவளின் முறையாகி போனது.
அதில் பெண்ணவளை சோஃபாவில் தள்ளிவிட்டவன் “எந்த உறவு வேணாம்ன்னு நினைச்சியோ.. உன் ஆசைப்படி எப்போவோ அந்த உறவு முடிஞ்சி போச்சு.. ஆனா அதுக்காக உன்னவிட்டுலாம் போக மாட்டேன் எப்போவும் உனக்காக இருப்பேன் உன் நிழல கூட தொடாம” என்றவன் வேற ஒரு அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்தினான்.
உறவு முடிந்தது என்று சம்பந்தப்பட்டவன் வாய் வார்த்தையாக கேட்டதில் மன வலிக்க, இப்படி தானே அவனுக்கும் வலித்திருக்கும் என்ற நிதர்சனம் புரிந்து வேதனையுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அடுத்த கணமே வெளியே வந்தவன் சோஃபாவில் கண்கள் மூடி படுத்து விட்டான்.
****
அதன் பின் ஒரு வாரம் அவனின் பாரா முகத்தில் பாவையவள் வாடி வதங்கி விட்டாள்.
அவளிடம் வம்படியாக ஆடவன் பாரா முகம் காட்டினாலும் பெண்ணவள் வேதனை அடைவதை கண்டு தனக்குள் அட காத்துக்கொள்ள துடிக்கும் அவனின் மனதை அடக்கியவன், இதற்கு அவளே வழி செய்வாள் என்று காத்திருந்தான்.
அவன் காத்திருப்பு ஆண்டவன் ஏற்று கொண்டாரோ என்னவோ பெண்ணவள் அதிரடியாக முடிவெடுத்து விட்டாள்.
வழக்கமாக அவனுடன் வருபவள் முன்னே வந்து அவனுக்காக சமைத்து வைத்து “வெளிய சாப்பிடாத” என்று ஆடவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு,
குளித்து புடவையை அணிந்து கொண்டவள், அவன் கட்டிய தாலியை வெளியே தொங்க விட்டு நெற்றி உச்சில் குங்குமமிட்டு ரெண்டு பக்கமும் முடியை எடுத்து குத்தி தலையை விரிக்கவிட்டிருந்தாள்.
அதற்கு அழகு சேர்க்கும் விதமாக மனமனக்கும் மல்லியை சூடி கொண்டு, முகத்திற்கு அழகு சேர்க்க சில ரசாயன பவுடரையும் பூசி முடித்தவள் “கிறங்கடிக்கிற அழகு யாழி குட்டி நீ” என்று கண்ணாடியில் தனக்கு தானே முத்தமிட்டு கொண்டிருக்கும் போதே, அவனின் வண்டி சத்தம் கேட்டு வாசலை நோக்கி வேகமாக வந்தவள்,
அவளின் அவன் மேலே மோதி தடுமாறி விட, அவளின் இடுப்பை ஆடவன் வளைத்து பிடித்து பெண்ணவளை கீழே விழாமல் தற்காத்து கொண்டான்.
அவனின் அணைப்பில் உடல் சிலிர்த்த பாவை, தன்னவனை இமைக்க மறந்து காதலாக நோக்க, அதில் ஒரு நொடி தடுமாறியவன் தடம் மாறும் மனதை அடக்கிவிட்டு,
அவளை தள்ளி நிறுத்திய ரேயன் “அறிவில்ல இப்படி தான் மோதுவியா பாத்து வர மாட்ட” என்றுவிட்டு ‘ச்ச ஒரு நிமிஷத்துல தடம் மாற வச்சிட்டா ராட்சசி’ என்று உள்ளுக்குள் தன்னவளை அர்ச்சித்து, அவளை கடந்து சென்றான்.
அவனின் கடுமையில் முகம் வாடியவள், செல்ல போனவனிடம் “ஃப்ரெஷ் ஆயிட்டு வா சாப்பிடலாம்.. உனக்காக தான் வெயிட் பண்றேன்”
“நான் வரும் போதே வெளிய சாப்பிட்டேன்.. நீ சாப்பிட்டு தூங்கு”
“உன்ன சாப்பிடாம வர சொன்னேன் தான” என்றதை கேட்டு ஆடவன் ‘நீ சொன்னா.. நான் கேட்கணுமா’ என்பது போல் பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.
அவனின் விலகலில் வேதனையடைந்தவள், அவனுக்காக அலங்கரித்த தன்னை விரகத்தியாக குனிந்து பார்த்துவிட்டு சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு கண்களில் நீர் நிற்காமல் வடிந்தது.
****
சில மணி நேரம் கழித்து வெளியே வந்தவன் வாடிய கொடியாக சோபாவை சாய்ந்திருந்தவளை பார்த்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று, அங்கிருந்த தனக்கு பிடித்தமான உணவை கண்டவனின் இதழ்கள் மனைவியை நினைத்து விரிந்தது.
பின் அவள் சமைத்ததை தட்டில் போட்டு எடுத்து வந்து அவள் அருகில் அமர்ந்தவன் பெண்ணவளின் கண்களில் வடியும் அவளின் கண்ணீரை துடைத்து விட, அதில் மெல்ல இமை திறந்து தன்னை சலனமற்று பார்ப்பவளின் வாயருகே உணவை கொண்டு சென்றான்.
அவன் கையிலிருந்த உணவையும் அவனையும் மாறி மாறி பார்த்த தியா முகத்தை சுழித்து திருப்பி கொள்ள, அதில் இதழ் கடித்து புன்னகைத்தவன் “நான் சாப்பிட்டேன் பொய் சொன்னேன்.. எனக்கு இப்போ செமயா பசிக்குது.. நீ சாப்பிடாம சாப்பிட மாட்டேன்” என்றதில் முகம் மலர்ந்த பாவை, அவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்துவிட்டு வாயை திறந்து கொண்டாள்.
பின் கடமையாக ஊட்டி விட்டவன் “பசிக்குதுன்னு சொன்னேன்.. எனக்கும் ஊட்டி விடலாம்ல” என்றதை கேட்டு எழுந்தவளிடம் “எங்கடி போற”
“ஊட்டி விடணும்ல அதான் ஹேன்ட் வாஷ் பண்ண போறேன்” என்றவளை இழுத்து அமர வைத்த ரேயன் “ஊட்டி விட ஹேன்ட் மட்டும் தான் யூஸ் பண்ணனும்ன்னு அவசியம் இல்ல” என்றவனின் பார்வை மங்கையின் இதழை வட்டமிட,
அதில் கூச்சி சிவந்த தியாவோ தயங்கி தலை குனிந்து விட, அவளின் தயக்கத்தை விரட்ட ஆடவனே பெண்ணவளை இழுத்து அவள் இதழ் வழியே உணவை எடுத்து பசி தீர்த்து கொண்டான்.
இப்படியே இருவரும் சாப்பிட்டு முடிய, பெண்ணவளோ தன்னவனின் இதழ் தீண்டலில் சிவந்து அமர்ந்திருக்க, அதை ஆசை தீரா ரசித்த ஆடவன் வெளியே காட்டிக்கொள்ளாமல் “சரி நீ போய் தூங்கு” என்க,
அவனின் வார்த்தையில் பே பேவென்று முழித்த தியா தன்னை குனிந்து பார்த்து நொந்தவள் ‘நம்மாளுக்கு இந்த விஷயத்துல விவரம் கம்மி தான் போல’ என்று எண்ணிவிட்டு குரலை செருமிய தியா “தனியா படுக்க பயமா இருக்கு” என்க,
இத்தனை நாட்கள் தனியாக படுக்கும் போது பயம் இல்லையா என்று ஆடவன் அவளை ஒரு மாதிரி பார்த்து வைக்க,
அதில் தடுமாறிய பாவை “அது அது நேத்து ஒரு கெட்ட கனவு கண்டன் அதான் இனி தனியா படுக்க பயம்” என்று அடித்து விட,
அவளின் தடுமாற்றம் வெட்கத்தோடு பெண்ணவளின் அழகை உச்சி முதல் பாதம் வரை கண்களில் படம் பிடித்தவனின் மனசாட்சியோ ‘ரேயா.. இன்னைக்கு ஒரே கிலு கிலுப்பு தான் போல’ என்று தன் எண்ணம் போன போக்கில் சிரிப்பை இதழுக்குள் மறைத்து இரு பக்கமும் தலையாட்டி கொண்டவன், எதுவும் பேசாது அவளின் அறைக்குள் சென்று விட, அவன் சென்றதை உணர்ந்து சில நிமிடம் கழித்து பெண்ணவளும் உள்ளே சென்றாள்.
தன்னவனுடன் ஒரே அறை என்ற குதுக்கலத்துடன் உள்ளே சென்றவள் படுக்கையில் உறங்கியவனை கண்டு பெண்ணவளின் முகம் தான் சப்பென்று மாறியது.
பின் அவன் வேண்டுமென்றே தன்னை தவிக்க வைக்கிறான் என்பது புரிய ‘எல்லாம் என் நேரம் நானே வழிய வழிய போறேன்ல.. இந்த அசிங்கம் தேவை தான்’ என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்தவளுக்கு தூக்கம் வர மறுக்க, அவனையே திரும்பி திரும்பி ஏக்கமாக பார்த்து வைத்தாள்.
சில நிமிடம் கழிந்தும் தூக்கம் வர மறுக்க ‘இந்த தூக்கம் வேற நேரம் கெட்ட நேரத்துல வாரி விடுதே பேசாம வெளிய சோபால படுத்துருவோம்’ என்று திரும்பி எழும்ப முயற்சித்தவள், ஆடவனை மிக அருகில் கண்டதில் பாவை அவளுக்கு மூச்சுவிட சிரமமாகிவிட,
அதை புரிந்து தன் இதழ் வழியில் பெண்ணவளுக்கு தன் மூச்சை கடன் கொடுத்தவன், அவள் மூச்சு சீராகவும் தன்னுடைய சிகிச்சையை கைவிட்டு சிவந்திருந்த மங்கையின் முகத்தை நிமிர்த்தி “எனக்காக ரெடியான எதையும் வேஸ்ட் பண்ணி எனக்கு பழக்கம் இல்ல.. சோ டேஸ்ட் பண்ணலாமா” என்றவன் இம்முறை உணர்வுகளை முகத்தில் அப்பட்டமாக காட்டிருக்க,
அவனது பார்வையிலே சிலிர்த்த தியாவோ முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்க எண்ணி, தன்னை நெருங்கியவனின் மார்பில் கைவைத்து தடுத்தவள் “என்மேல கோவம் போயிடுச்சா” என்று கேட்டவளுக்கு அன்று தன்னவனை காயப்படுத்திவிட்டோம் என்ற வீரியத்தில் கண்களும் கலங்கி விட,
அவன் அமைதியில் மேலும் வேதனையடைந்த தியா “ஐ அம் சாரி ரே.. அன்னைக்கு உன் மாமாவோட கம்பர் பண்ணி பேசல.. சத்தியமா அந்த ஆள் குடும்பமும்ன்னு நீயும் அப்படி தான் இருப்பேன் நினைக்கல.. ஆனா உன்ன ஏத்துக்கிட்டு உன் வீட்டுல வந்து அந்த ஆள் முகத்த பாத்துகிட்டு வாழ எனக்கு பிடிக்கல.. என் சுய நலத்துக்காக உன்னையும் அத்ததையும் பிரிக்கிறது எந்த விதத்துல ஞாயம் ரே..
அம்மா பாசம்ன்னா என்னன்னு எனக்கு தெரியும் சோ நான் அந்த தப்ப பண்ண மாட்டேன்.. அதே சமயம் அந்த ஆளுக்கு நான் யாருங்குற விஷயம் தெரிஞ்சா என்ன கொல்ல கூட தயங்க மாட்டார் தேவையில்லாம எனக்காக நீ அந்த ஆள பகைச்சிட்டு கஷ்டப்பட வேண்டாம் நினைச்சி மனச கல்லாகிட்டு இப்படியொரு முடிவெடுத்தன்..
ஆனா, உனக்கு அந்த ஆள் தான் என் அப்பன் உண்மை தெரியும்ன்னு எனக்கு தெரியாது..” என்று இதழ் கடித்து அழுகையால் வரும் விம்மலை அடக்கியவள் “நான் சொன்னத விட.. நீ எல்லாம் முடிஞ்சி போச்சுன்னு சொன்னது ரொம்ப வலிச்சுது ரே.. இந்த ஒரு வாரமா உயிர் பிரிஞ்ச கூடு போல தான் இருந்தேன்.. ஐ அம் ரியலி சாரி” என்றவள் அவனை அணைத்து கதற,
சில நிமிடம் அழ விட்டு முதுகை தடவி கொடுத்து அவளிடமிருந்து தன் அணைப்பிற்கு விடுதலை கொடுத்தவன் “இப்படிலாம் மன்னிப்பு கேட்டா.. என் கோவம் போயிடும் நினைச்சியா.. உன்ன என் ஸ்டைல்ல பழி வாங்கி அழ வைக்கிறேன்” என்று அவளின் இதழை வன்மையாக கவ்வியவனின் கையோ பெண்ணவளின் ஆடைக்கு விடுதலை கொடுக்க,
ஆடவனின் ஆளுகையில் சோகம் விடுத்து முகத்தில் கூச்சத்தை தத்தேடுத்து கொண்ட பாவையின் இதழ்கள் “ரே” என்று முணங்கி காற்றிலே கரைந்து போனது.
ஆடவன் கூறியது போல் பெண்ணவளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தவன், தன் இதழ்களாலே துடைத்துவிட்டு “சொன்ன போலவே உன்ன அழ வச்சிட்டன் பாத்தியா” என்று கண்ணடித்து அவளை பார்வையால் வருட,
என்ன நிலமையில் என்ன பேசுகிறான் என்று தான் பெண்ணவளுக்கு தோன்றியது.
அதோடு அவனின் பார்வையில் மொத்தமாக மேனி சிவந்தவளுக்கு பூமிக்கு புதைந்து விடலாமா என்பது போல் தான் இருக்க, ஆடவனின் பார்வை வருடல் நீடித்ததில் பெண்ணவளுக்கோ உஷ்சன மூச்சுக்கள் வெளியேற, அதற்கு மேல் தாங்காது என்று அவனின் இதழை கொய்தவள் செயலை தனதாக்கி கொண்டாள்.
****
காலையில் முதலில் கண் விழித்த தியாவிற்கு தன்னவனின் மார்பை மஞ்சமாக்கியிருந்த தன்னை நினைத்து இந்நொடி உலகத்தை வென்ற உணர்வு,
அவன் தன்னவன் என்ற கர்வம் இனி யாருக்காகவும் அவனை விட்டு கொடுக்க வேண்டியதில்லை, அதோடு தன்னை பெத்தவரிடமே என் கணவன் உங்களை போல் அல்ல என்று பெருமையாக சொல்லுமளவு அவனின் மேல் அபார நம்பிக்கை,
இப்படி என்ன என்னவோ நினைத்து சிரித்து கொண்டிருந்தவள், உறங்கும் போது கூட தன் கண்களுக்கு அழகாக தெரியும் தன்னவனை கண்டவளுக்கு நேற்றைய இரவு நினைவில் வர, குங்கும்ம பூவாக சிவந்தவள் ஆடவனின் மார்பில் இதழ் பதித்தாள்.
அதில் முழித்து கொண்ட ஆடவன் “சும்மா இருடி காலைலயே டெம்ப்ட் பண்ணிட்டு.. செம டையடா இருக்கு” என்று அவளை இறுக்கி அணைத்து கொள்ள,
“டையடா இருக்கா.. உன் எனர்ஜி அவ்வளவு தானா” என்று சீண்ட,
மறுநொடி அவளின் மேல் படர்ந்து இதழை கவ்வி விடுவிக்க, பாவம் பெண்ணவளுக்கு மூச்சு வாங்கி விட்டது.
அதில் சிரித்து, அவகின் மூக்கை உரசியவன் “இப்போ யாருக்கு எனர்ஜி இல்ல” என்றவனின் பார்வையில் மோகம் வழிய,
“எனக்கு தான் இல்ல” என்று முறைத்து அவனை தள்ளிவிட்டவள், அவனின் மார்பில் தலைவைத்து தன் சந்தேகத்தை கேட்கும் நோக்கில் “ரே” என்று தயங்கி அழைக்க,
அதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட ரேயன் “உன் அம்மா இறந்து மறுநாள் யாருக்கும் தெரியாம வீட்டுக்கு பின் பக்கம் போய் உன் அப்பா ஃபோட்டோ எரிச்ச அப்போ தான் கன்பார்ம் ஆச்சு.. அதுக்கு முன்ன ஒன்ஸ் நம்ம கேஸ் விஷயமா வெளிய போயிருந்தப்போ
என் மாமாட்ட கால் வந்துச்சு நீ தான் ஃபர்ஸ்ட் பாத்த அப்போவே மூஞ்சு போன போக்க கவனிச்சேன்.. அதுக்கு அப்புறம் இருந்து தான் என்கிட்ட கொஞ்ச விலக ஆரம்பிச்ச சோ இத வச்சி டவுட் இருந்துச்சு.. நீ ஃபோட்டோ எரிச்சதுல அதான் உன் பிராப்ளம் புரிஞ்சிது.. அப்போவே எதுவுமே தெரியாத மாதிரி தாலிய கட்டி மொத்தமா அமுக்கிட்டன்” என்று தன்னை இமைக்காமல் பார்ப்பவளை பார்த்து கண்ணடிக்க,
தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் கண்டயறிந்தவனின் காதலில் மேலும் ஈர்க்கப்பட்டவள் “ஐ லவ் யூ ரே” என்று தன் காதலை உரைத்து விட,
அதில் சிறகு இல்லாமல் பறந்தவன் அவளிடம் மூழ்கி பெண்ணவளையும் பறக்க வைத்தான்.
இப்படியே ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில் ரேயனுடன் கோவிலுக்கு சென்றிருந்த தியாவிற்கு, வயதான முதியவர் ஒருவர் “மஞ்ச கயிரோட இருக்கிறது புருஷனுக்கு ஆகாதுமா.. சீக்கிரம் தாலி செயினா மாத்திக்க” என்று யாருக்கோ கூறி கொண்டிருந்த வார்த்தைகள் பெண்ணவளுக்கு தனக்கே கூறியது போலிருக்க,
அன்று முழுவதும் அதை யோசனையுடன் சுற்றியவளின் எண்ணம் புரிந்து மறுநாளே அவளுக்காக தங்கத்தில் சங்கிலி வாங்கி வந்து தானே தாலி கோர்த்து தன்னவளுக்கு அணிவித்து சந்தோசப்படுத்தி விட்டான்.
அவனின் ஒவ்வொரு செயலியிருந்த காதலில் ஈர்க்கப்பட்டவள் தன் காதலால் அவனை திணற வைக்கவும் தவறவில்லை.
ரேயன் தியாழினி மற்றும் ஜோஸப் வாகினி, இரு ஜோடிகளின் வாழ்வும் கொஞ்சல் காதல் தீண்டல் என்று அமோகமாகவே சென்று ஆறு மாதம் கடந்து விட, இவை அனைத்தும் பறிபோக வேண்டிய நாளும் நான் வந்துவிட்டேன் என்று அவர்களை பார்த்து பல் இளித்தது.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍

