Loading

காதல் -67

 

அஸ்வதியிடம் தவறாக நடக்க முயற்சித்த கரெஸ்பாண்டென்ட் துருவை துவராகா அடித்து திட்டி அவனை ஒரு வழியாக்கி விட்டாள்…..

 

ஹே துவாரகா ஏன்டி அவர அடிச்ச? அவரு இந்த காலேஜோட கரெஸ்பாண்டன்ட்டி, உன்ன அவரு வேலைய விட்டு தூக்கிட்டா என்னடி பண்ணுவ?

 

வேலைய விட்டு தூக்கிருவானோ அவன் அப்படி தூக்கனும்ன்னு நினைச்சா நா இப்ப உன்கூட பேசிட்டு இருக்க மாட்டேன் அஸ்வதி என்று அவள் சிரித்தாள்…….

 

துவாரகா எதுக்கும் ஜாக்கிரதையா இருடி…….

 

மிஸ் துவாரகா நீங்க அந்த கரஸ்பாண்ட்ட கரெக்ட்டா அடிச்சீங்க அப்படி தான் தைரியமா இருக்கணும் என்று அவன் அஸ்வதியை பார்த்தான்……

 

தேங்க்யூ சார் என்று அவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தங்களின் வேலைகளை பார்க்க சென்றனர்……

 

சாயங்காலம் அஸ்வதியும் விஹானும் அஸ்வதியின் வீட்டிற்கு வந்தனர்…..

 

அங்கு அவர்களுக்கு முன்பே மதன் மற்றும் வள்ளி அவர்களின் உடைமைகளோடு அங்கு நின்று கொண்டிருந்தனர்…….

 

டேய்  மதனே என்னடா பொட்டி படுக்க எல்லாம் கம்மியா இருக்கு??

 

இப்போதைக்கு இவ்வளவுதான் சரி அஸ்வதி வீட்ட தொற என்று மதன் கூறவும் அஸ்வதி வீட்டை திறந்து மதனையும் வள்ளியையும் வீட்டிற்கு அழைத்து சென்றாள்…….

 

அஸ்வதி உன்னோட ரூம் எது?

 

ரைட்ல தெரியுதுல்ல அது தான்  என்னோட ரூம் மதன்…….

 

விஹான் அஸ்வதியையே பார்த்துக் கொண்டிருந்தான்…….

 

டேய் டேய் விஹான்  என்னைய பாருடா எப்ப பார்த்தாலும் என்னோட பாப்பாவையே பாத்துட்டு இருக்குற???

 

பாப்பாவா ?????                                      என்னடா என்னோட அஸ்வதிய பாத்து பாப்பான்னு சொல்ற???

 

ஹலோ மிஸ்டர் பேராசிரியரே உங்களுக்கு முன்னாலே எங்களுக்கு அஸ்வதிய ரொம்ப நல்லா தெரியும் , ஆஷ்ரமத்துல எங்க எல்லாரையும் விட சின்ன பொண்ணு அஸ்வதி தான் அதனால நாங்க எல்லாரும் அவள பாப்பா பாப்பான்னு கூப்பிடுவோம் ……

 

ஓஹோ அப்படியா ??

 

ஆமாடா டால்டா, அஸ்வா , துவாயி உன்னோட ஒரு வயசு மூத்தவ என்ன?

 

ஆமா மதன்…..

 

சரி விஹானோட ரூம் எது அஸ்வதி?

 

என்னோட ரூமுக்கு பக்கத்து ரூம் விஹானோட ரூம்……

 

அப்போ உங்க ரெண்டு பேர் ரூமுக்கு எதுத்தாப்புல இருக்குற ரெண்டு ரூம் யாருக்கு?

 

அந்த ரெண்டு ரூம்லயும் கெஸ்ட் வந்தா தங்குவாங்க……

 

அப்போ இனி அந்த ரெண்டு ரூம் எங்க ரூம் என்று மதன் ஒரு அறையிலும் வள்ளி ஒரு அறையிலும் தங்கிக் கொண்டனர்……

 

மதன் மற்றும் வள்ளி அந்த வீட்டிற்கு வந்ததும் அந்த வீடு கலகலவென்று சந்தோஷமாக மாறியது எப்போதும் சிரித்த முகமாக வலம் வரும் மதனும் அஸ்வதி என்ன கேட்டாலும் அதை செய்து தரும் வள்ளியும் அவளுக்கு காதலை திகட்ட தரும் அவளின் மன்னவனும் அவளின் உற்ற தோழியாக மாறிப்போன துவாரகாவும் அவளின் நாட்களை சந்தோஷமாக்கினார்கள்……

 

ஆனால் மதன் அஸ்வதியையும் விஹானையும் கண்காணித்துக் கொண்டே வந்தான் இருவரையும் கைப்பிடித்தலை தாண்டி முன்னேற விடமாட்டான் கல்யாணம் முடிந்த பிறகு தான் அனைத்தும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கரராக சட்டம் போட்டு விட்டான்……….

 

மதனும் வள்ளியும் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறையில் உறங்க சென்றார்கள்……

 

சிறுவயதில் இருந்தே வள்ளியும்  மதனும் ஒன்றாக ஒரே அறையில் தங்கி பழக்கப்பட்டவர்கள் அதனால் அவர்கள் இருவரும் தனித்தனி  அறையில் உறங்க சென்றதால் இருவருக்கும் உறக்கம் வரவில்லை…….

 

மதன் முதன்முதலாக வள்ளி அவன் அருகில் இல்லாமல் அவளை மனம் தேடியது அவளை இதற்கு முன்பு இவ்வாறு மனம் தேடியதில்லை என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க படாரென்று அவன் அறை கதவு திறக்கும் ஓசை கேட்டது……

 

வள்ளி தான் கையில் தலகாணியோடு வந்து அவன் அருகில் அவனின் கைகளை பிடித்துக் கொண்டு உறங்கினாள்…….

 

அவளின் அந்த செய்கையைப் பார்த்து மதனுக்குள் புதுவிதமான உணர்வுகள் எழுந்தது மதனும் அவளின் முகத்தைப் பார்த்தவாறு உறங்கிப் போனான்……

 

விஹான் அவன் அறையில் தூக்கம் வராமல் சுழலும் மின்விசிறியை பார்த்துக் கொண்டிருந்தான் அப்பொழுது அவனின் பால்கனி கதவு தட்டும் சத்தம் கேட்டது……..

 

இந்நேரத்தில் பால்கனிக்கு யார் வருவாங்க என்று அவன் எச்சரிக்கையோடு பல்கனிக் கதவை திறந்தான் அங்கு சிரித்த முகமாக அவன் உயிர் காதலி அஸ்வதி நின்று கொண்டிருந்தாள் பால்கனி கதவை திறந்ததும் அஸ்வதி விஹானை கழுத்தோடு கட்டிக் கொண்டாள்……..

 

ஏய் இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?அஸ்வதி பால்கனியில் இருந்து எப்படி வர?  இப்படிதான் என்று அவனின் அறை பால்கனியிலிருந்து அவள் அறை பால்கனிக்கு தாவி குதித்து சென்றாள் …….

 

ஏய் பாத்து கீழ விழுந்துட போற…….

 

அதெல்லாம் விழ மாட்டேன் என்று அஸ்வதி அவள் அறை பால்கனியில் இருந்து விஹானின் அறை பால்கனிக்கு குதித்து வந்தாள்……

 

ஏண்டி கதவு வழியா வரலாம்ல ஏன் பால்கண்ணியில் தாவி குதிச்சு வர?

 

அங்க அந்த மதன் குரங்கு பாத்ரூம் எந்திரிச்சு போனான் அதான் அவன் கண்ணுல சிக்கிட்டா சோலி முடிஞ்சு அதான் உங்கள பாக்க இப்படி ஒரு பிளான் என்று அவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள்…….

 

அஸ்வி……

 

சொல்லுங்க செல்லம்…..

 

நம்ம ரெண்டு பேரும் டெரஸ்க்கு போகலாமா??

 

போகலாமே……

 

ஆனா எப்படி போறது படி வெளியலா இருக்கு…….

 

இங்க பாருங்க ஒரு ஏணி தெரியுதா??

 

ஆமா தெரியுது ….

 

இது வழியா இறங்கி கீழ போய் மாடி படி ஏறி மாடிக்கு போயிடலாம்………..

 

ஆமா இந்த இடத்தில் எப்படி ஏணி வந்துச்சு?

 

அது இங்க தோட்ட வேலை பாக்குற கணேசன் அண்ணா எனக்கு ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் அவர்கிட்ட நா சொல்லி வச்சிருக்கேன் சாயங்காலம் வந்த உடனே என்னோட ரூமுக்கு நேரா இந்த ஏனிய வைக்க சொல்லி இருக்கேன் சுலோச்சனா சாப்பாடு தராம ரூம்ல என்ன வச்சி பூட்டிட்டு போயிருவா அதான் நா இப்படி  ஏணி வழியா இறங்கி கீழே போய் ஏதாவது சாப்பிட்டு வந்துருவேன் அப்புறம் கணேசன் அண்ணா காலையில வந்து இந்த ஏணிய எடுத்துட்டு வேற இடத்துல வச்சுடுவாங்க பிராப்ளம் ஓவர் என்று அவள் சிரித்தாள்……..

 

கேடி  பொண்ணு கேடி பொண்ணு என்று அவன் அவளை கொஞ்சி விட்டு இருவரும் மெதுவாக ஏணி வழியாக கீழே இறங்கி மாடிப்படி வழியாக டெரசிற்கு சென்றனர்………

 

விஹான் இந்த வீட்டிலேயே எனக்கு ரொம்ப புடிச்ச ரென்டாவது இடம் இந்த டெரஸ் ஏன்னா இங்க அடிக்கிற காத்து என்னோட சோகத்தை எல்லாம் சேர்த்து அடிச்சிட்டு போயிடும் அதான் இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அங்க பாருங்க தென்னை மரம் தெரியுதா???

 

ஆமா தெரியுது…..

 

அங்க தூரத்துல கொய்யா மரம் சீதாப்பழம் மரம், கருவேப்பிலை மரம், வேப்பமரம் தெரியுதா?

 

தெரியுதுடி இதெல்லாம் நீதான் நட்டு வச்சியா???

 

நா இல்ல அப்பாதான் எல்லா செடியும் நட்டு வச்சாங்க அது பெருசா வளர்ந்துருச்சு……    உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? இந்த மரம் எல்லாம்  என்னுடைய பிரண்ட்ஸ் தெரியுமா?

 

இந்த மரம் உன்னோட பிரண்டா??

 

ஆமா விஹான் நா சோகத்துல டெரஸ் வந்தா இந்த காத்து மியூசிக் போட இந்த மரம் எல்லாம் டான்ஸ் ஆடி என்ன சிரிக்க வைக்கும் தெரியுமா??

 

அஸ்வதி அவ்வாறு கூறவும் அவளின் வர்ணனையை நினைத்து அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்…….

 

விஹான் இந்த மதன் ரொம்ப மோசம்ல நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சி விட்டுட்டே இருக்குறான்…….

 

அப்படி இல்லடா கண்ணம்மா மதன் உன்ன பத்திரமா பாத்துக்குறான், அவனோட செல்ல குட்டி பாப்பா நீ, உன்ன யாரும் தப்பா பேசிட கூடாதுன்னு அவன் நினைக்கிறான் அதான் அவன் உனக்காக இவ்வளவு பண்றான் என்று விஹான் தன் நண்பனுக்காக பரிந்து பேசவும் அஸ்வதி அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்……

 

அஸ்வி நம்ம ரெண்டு பேரும் எதாவது பாட்டுக்கு டான்ஸ் ஆடலாமா?

 

ஆடலாமே…..

 

அவள் அவ்வாறு இசைவு கொடுக்கவும்  அவன் ஃபோனில் ஒரு பாட்டு போட்டு விட்டு அவன் அவளின் இடையில் கை வைத்து அவளின் கை பிடித்து ஆட ஆரம்பித்தான்…..

 

“அஸ்வா செல்லம் அஸ்வா செல்லம் 

கண்ணை விட்டு இமைகள் நீங்காதே”……

 

விஹான் இந்த பாட்டு இப்படி வராதே??

 

இப்போ இது ஜிவி பிரகாஷ் பாடினது இல்ல , உன்னோட விஹான்  பாடுறது என்று அவன் அவளை கை பிடித்து பாடி கொண்டே ஆடினான்……

 

உலகமே சுழல்வதேன்

உதிரியாய் உடைவதேன்

ஏதோ நூலொன்றில் வரைந்த

குறிப்பு போலே தொலைந்தேனே”…..

 

“அஸ்வா செல்லம் அஸ்வா செல்லம் என்ன விட்டு நீ தான் நீங்காதே”………..

 

“வாளை குமரி பெண்ணே

வந்தான் குமரன் பொண்ணே

சோலை பூக்களின் முன்னே

ஒலை விடு தூது கண்ணே

நெஞ்சம் அது என்ன கல்லோ

மஞ்சம் இனி ஆகும் முள்ளோ

வஞ்சம் செய்வாளோ பாவை

தஞ்சம் அது உந்தன் பாதை”……….

 

“அடியே நீயும் நலமா?

கடிதம் சொல்லி விடுமா?

மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை

என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே”.…

 

“உன் பிரிவில் நகல் நோகுதே

என் பருவம் மடல் ஏறுதே

பெண் உருவம் நிழலானதே

மெய் சேர…. மானே”……

 

“அஸ்வா செல்லம் அஸ்வா செல்லம் கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே”…..

 

“அழகே இதழ் ஓரம்

மெலிதாய் முறுவல் கூடும்

கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல

அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல”…….

“விரல் இடுக்கின் பேனா முனை

இடம் மாற்று நீயும் அதை…

உன் மேனி தீண்டிடும்

வைர மடல்தாலும் நானே”……..

 

“அஸ்வா செல்லம் அஸ்வா செல்லம்

என்னை விட்டு நீ தான் நீங்காதே

அஸ்வா செல்லம் அஸ்வா செல்லம்

கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே”……..

 

“உலகமே சுழல்வதேன்

உதிரியாய் உடைவதேன்

ஏதோ நூலொன்றில் வரைந்த

குறிப்பு போலே தொலைந்தேனே”……

அவனின் இனிய குரலிலும் அவனின் கை அவளின் இடை மீட்டலிலும் அவள் உருகி அவன் மேலே சாய்ந்து கொண்டாள்……..

 

அவன் அவளை இறுக்கமாக அனைத்து கொண்டான்…….

 

இருவரும் நீண்ட நேரம் அங்கேயே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு இருந்தார்கள்……

 

பிறகு பணி அதிகமாக பெய்யவும் தன்னவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விடும் என்று அவன் அவளை அழைத்துக் கொண்டு அவளின் அறையில் விட்டுவிட்டு வந்தான் ,அவன் பின்னாலே அஸ்வதியும் வந்தாள்………

 

தொடரும் ……..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்