
வானவில்லாய் வந்து போயின நாட்களும் வாரங்களும்..
மது துருவனிடம் வேலைக்கு சேர்ந்து கிட்ட தட்ட அறை மாதங்களாகின… அவளும் ஓரளவு வேலையை கத்துக் கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தாள்.
மதுவிடம் கரந்த விஷயங்களை வைத்து, வீரமதியை பற்றியும் வாசனை பற்றியும் தெரிந்துக் கொள்ள, அவர்களது சொந்த ஊரான மதுரையிலுள்ள **** கிராமத்துக்கு ஆட்களை அனுப்பி வைத்தனர் ஜெஸியும் எட்வர்டும்…
மது வந்த முதல் நாளிலே, ஜெஸி தன்யாவிடம் ‘அவளிடம் பேச்சு கொடுத்தவாறு, அவள் யார் எங்கிருந்து வருகிறாள்? வீரமதி அவளுக்கு என்ன வேண்டும் என்று இயல்பாக பேச்சுக் கொடுத்து அவளை பற்றிய விவரத்தை கேள்’ என்று சொல்லிருந்தாள்.
உணவு வேளையில் இடம் போதாமல், ஜெஸி, அவளது டீம் அமரும் இடத்திற்கு வந்தவள் தயங்கி நிற்க , அவர்களும் அவளுக்கு இடம் தந்து அமரச் சொன்னார்கள், நன்றியுடன் அமர்ந்து அவளும் அவர்களுடன் உண்ண ஆரம்பித்தாள்.
ஜெஸி தன்யாவிடம் கண்ணைக் காட்ட அவளும் தலையை ஆட்டிவிட்டு அவளிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.
“நீங்க துருவன் சார் வீட்ல இருந்து வர்றீங்களே! அவங்க சொந்தமா நீங்க?”
“ஆமா ! துருவன் சார் அம்மா எனக்கு அத்தை “என்றாள். உடனே தன்யா ஜெஸியை பார்க்க மேலும் பேசுமாறு கண்ணைக் காட்டினாள்.
அவளும் சாப்பிட்டுக் கொண்டே “உங்க அப்பாவோட கூடப் பிறந்தவங்களா?”
மதுவும் வீரமதி சொல்லச் சொன்ன பொய்யை மறந்து “ஆமாம்”என்றவள், பின் நியாபகம் வந்தவளாக நாக்கை கடித்து விட்டு”இல்ல.. இல்ல… தூரத்து சொந்தம் “என்று சமாளித்தாள்.
“ஓ… நீங்க எந்த ஊரு?”
“நான் தேனில இருந்து வர்றேன்”என்றாள்.
“அது தான் உங்க சொந்த ஊரா?”
“இல்ல இல்ல அப்பா பிறந்த ஊர் மதுரையில சின்ன கிராமம்…”என்று ஊர் பேரையும் சேர்த்து சொன்னாள்.
“இப்போ அங்க யாரும் இருக்காங்களா?” இந்த முறை ஜெஸி கேட்டாள்.
“பச் யாருமில்லை… சொந்த ஊர்ன்னு தான் சொல்வார். ஆனா கூட்டிட்டே போக மாட்டார்… அந்த ஊருக்கும் நமக்கும் சம்பந்தமில்லை அதனாலே அங்க போகணும் அவசியம் இல்லை மறுத்துடுவார்”என்றாள் வருத்தமாக..
“உங்க அப்பாக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இருக்காங்களா?”
“ம்ம்… ரெண்டு அக்கா ! ஒரு அத்தை இறந்துட்டாங்க, நான் அவங்களை பார்த்தது இல்லை… இன்னொரு அத்தை இருக்காங்க… அவங்க தான்…”என்று வாய் வரை வந்ததை விழுங்கியவள்”அவங்களும் ஊருல இருக்காங்க”என்று இந்த முறையும் சமாளித்தாள்.
“ஆமா என்னை பத்தி கேட்டுடே இருக்கீங்க, உங்களை பத்தி சொல்லுங்க”என்றாள்.
தன்யாவும் அவளை பற்றியும் மற்றவர்களை பற்றியும் கூற கதைப் போல கேட்டுக் கொண்டிருந்தாள்.
“பாடிகார்ட்ன்னு சொல்றீங்க உங்க கையில் துப்பாக்கியே இல்லையே எப்படி?”
“ஏன் இல்ல இருக்கே !”என்று ஜெஸி துப்பாக்கியை எடுத்து அவள் முன்னே வைத்தாள்.
துப்பாக்கியை பார்த்ததும் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று கவ்வி பிடித்தது. எச்சிலை விழுங்கிய படி ஜெஸியையும் துப்பாக்கியையும் மாறி மாறி பார்த்தாள்.
“ப்ளீஸ் அதை எடுத்து வச்சிடுங்க ! பார்க்கவே பயமா இருக்கு ” என்றாள் . கொஞ்ச நேரத்தில் அவளுக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டது. அவர்களும் அவளது பயத்தை கண்டு சிரித்தபடி இருந்தனர். ஜெஸி நமட்டுச் சிரிப்புடன் எடுத்து உள்ளே வைத்தாள்.
அவளை பிரமிப்பாக பார்த்தாள் மதுமதி…
“என்ன?”அவள் புருவம் உயர்த்த, ‘ஒன்றுமில்லை’ என்று உணவை விழுங்கி விட்டு அங்கிருந்து ஓடியே போய் விட்டாள்.
மதுமதியிடமிருந்து கிடைத்த தகவலை எட்வர்ட்டிடம் சொல்ல, அவனும் ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஆட்களை தேனியிலும் மதுரையிலுள்ள அவள் சொன்ன அந்தச் சின்ன கிராமத்திற்கும் அனுப்பி வைத்தான்.
இது போதாது என்று வீரமதி அறையில் வைத்திருந்த அந்த மினி மைக் மூலமாக, அவர் யாருடன் என்ன பேசுகிறார் என்று அனைத்தையும் கேட்டுக் கொண்டே வந்தனர்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் பேசவில்லை… அவரது தம்பியிடம் கூட பேசிக் கொள்ளவில்லை… இப்படியே இரண்டு நாட்கள் சென்ற நிலையில்..
வீரமதிக்கு ஒரு அழைப்பு வந்தது… அவரும் அறையிலிருந்த படியே எடுத்து பேசினார்..
அங்கு செல்ல பட்டதோ, “அவனை கண்டு பிடிச்சிட்டீங்களா?” என்றவரிடம் குரலில் அத்துணை ஆர்வம்…
“என் புள்ளைய அடிச்சது என் இன்னொரு புள்ளைய கடத்தினது யாருன்னு எனக்கு தெரியனும்… அவனை உயிரோட கூட்டிட்டு வாங்க… இல்லை நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க…!”,என்று மிரட்டி விட்டு அலைப்பேசியை வைத்தார்.
அதை கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் குழப்பமாக இருந்தது.
“என்ன சொல்ல வர்றாங்க இவங்க? என் புள்ளைய அடிச்சவன, என் இன்னொரு புள்ளைய கடத்தினவ யார்னு தெரிஞ்சுக்கணும் அவனை உயிரோட கூட்டிட்டு வாங்கன்னா, ரெண்டு ஒரே ஆளுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமா? இந்த இரண்டு விஷயத்துக்கும் ஒரே குரூப்பை தான நாம அனுப்பி வச்சோம் ஒரு வேள கண்டு பிடிச்சுருப்பாங்களா எட்வர்டு?”
“அதுக்கு வாய்ப்பு குறைவு தான் ஜெஸி… எப்படி முடியும்? தடயம் எதுவும் இல்லாம இதை பண்ணிருக்கோம் தெரிய வாய்ப்பு இல்லை… நம்ம மக்கள் யாரும் இங்க இல்லை… கோவையில் பத்திரமா இருக்காங்க கண்டு பிடிக்க வாய்ப்பு இல்லை…”என்றான்.
“இல்ல எட்வர்டு ! அப்படி சொல்ல முடியாது வீரமதி மேம் குரல்ல தெரிஞ்ச ஆர்வத்தை பார்த்தால் ஏதோ கண்டு பிடிச்சிருக்காங்கன்னு தோணுது… எதுக்கும் நீ நம்ம குரூப்புக்கு போன் பண்ணி எல்லாரும் சேஃப்பா இருக்காங்களா கேளு “என்றாள்.
அவனும் தனது அலைபேசியை எடுத்து அவர்களுக்கு அழைத்தான். அங்கே ஒருவன் எடுத்தான்.
எட்வர்டு விசாரிக்க, ” எல்லாரும் இங்க தான் இருக்கோம்… ஆனா…?!”அவன் இழுக்க,
“என்ன ஆனா…?! ஏன் இழுக்கிறீங்க?”
“நம்ம டீம்ல கருப்பு மட்டும் சென்னைக்கு போயிருக்கான் சார். அவன் பையனுக்கு முடியலன்னு பொண்டாட்டி ஒரே அழுகை இவனுக்கு இங்க இருக்க மனசே இல்ல… அங்க போயிருக்கான் சார் போயிட்டு ரெண்டு நாளுல வந்துடுவேன் சொல்லிருக்கான் சார்”என்றான் கொஞ்சம் பயத்துடன்.
“ஏன் என் கிட்ட சொல்லல நீங்க?”
“சொன்னா நீங்க போக விடமாட்டீங்க… நானே போய் பார்க்கிறேன் சொல்வீங்க.. அதான் உங்களுக்கு தெரியறதுக்குள்ள வந்துடுவேன் சொல்லிட்டு போயிருக்கான் சார்”
“ஓ… ஷிட் ! சரி நீங்க வீரமதி வீட்டுக்கு போனதை யாரும் பார்த்தாங்களா?”
“இல்ல சார் யாரும் பார்க்கல முகமூடி அணிந்து தான் போனோம்… யாராலையும் எங்க முகத்த பார்த்திருக்க முடியாது சார்”என்றான் நம்பிக்கையுடன்.
“சரி போனை வைங்க…”என்று சலிப்புடன் வைத்தவன், ஜெஸியிடம் விஷயத்தை சொல்ல, தலையில் கை வைத்தாள்.
“எனக்கு என்னமோ ரொம்ப டவுட்டா இருக்கு எட்வர்டு ! அவன் சிக்குனா நம்ப பிளான் எல்லாம் சொதப்பிடும்…”
“ம்ம்… நான் வீரமதி மேம் கிட்ட, மெதுவா கேட்டு பார்க்கிறேன்… என்னால விஷயத்தை கறக்க முடியுதா பார்போம்… நீ அவன் வீட்டு நிலமை என்ன பார்த்து முடிஞ்ச அளவுக்கு பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணு “என்றான்.
அவளும்’ சரி ‘ என்றாள்.
மறுநாள் அவன் வீரமதி அருகே செல்ல, அவர் தான் அலைபேசியை பார்த்துக் கொண்டே இருந்தார்.
“என்னாச்சி மேம் ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க?”
“எட்வர்டு ! நம்ம துருவன அடிச்ச ஒருவனை கண்டுபிடிச்சாச்சு… அவன் கை தொடும் தூரம் தான் இருக்கான். இன்னைக்கி நம்ம பசங்க அவனை பிடிச்சிட்டு வருவானுங்க… யாரவன் எதுக்கு இப்படி பண்ணினான் விஷயம் தெரிஞ்சிடும்…”என்றார்.
“எப்படி மேடம்?”
“நம்ம காசி அண்ணன் தான அவன பார்த்திருக்கார். அவர் மூலமா தான் கண்டு பிடிச்சோம்”என்று பாதி உண்மையை மறைத்து கூற, அவனோ அங்கிருந்து நழுவி காசியிடம் விசாரித்தான்.
அவரோ நம்ம எஸ்டேட்ல திருட வந்திருக்கான் கேமிரா ல கண்டு பிடிச்சோம்”என்றார்.
அவனோ தலையில் அடித்துக் கொண்டான். அதை ஜெஸியிடம் சொல்ல அவனோ வேறொரு ஆளை வைத்து விசாரிக்க அனுப்பி வைத்தாள்.
அவனோ”அவனை தேடி கும்பல் வந்ததாகவும் தப்பி விட்டதாகவும் அவனை தேடிக் கொண்டிருப்பதாக தகவல்” தந்தான்.
ஒரு பக்கம் அவனை வீரமதியின் கும்பல் தேட, மறுபக்கமோ ஜெஸியும் எட்வர்டும் தேட, அவன் சிக்கியது என்னவோ துருவனிடம் தான்.
அன்று சண்டே என்பதால் ஜெஸிக்கும் அவளது டீமுக்கும் விடுமுறை கொடுத்திருந்தான் துருவன். ஆனால் அவனோ நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தான்.
அவன் சென்று கொண்டிருந்த வழியாக கருப்பு ஓடி வர அவனை துரத்திக் கொண்டிருப்பவர்களிடம் தப்பித்து விட்டு ஓடிவரும் போது தான் துருவன் காரின் முன் விழுந்தான் கருப்பு.
காரை ஓட்டி வந்த துருவன், வேகமாக இறங்கி அவனுக்கு என்ன ஆனது என்று பார்க்க, அவனோ ஓடி வந்த கிரக்கத்தில் மயங்கி இருந்தான்.
நண்பர்களும் அவனை சூழ்ந்தனர்.
முதலில் தட்டி எழுப்பி பார்த்தவன், அவன் முகத்தை உற்று பார்த்தான்.
“ரிஷி இவனை தூக்கு… இவனை நம்ம ஆபிஸிக்கு கொண்டு போவோம்”
“எதுக்கு டா !”
“சொன்னது செய் !”என்றான். அவர்களும் தூக்கி காரில் போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு சென்றனர்.
அவனை அங்கே அறையில் படுக்க வைத்தனர். “இவன் எங்கேயும் போக கூடாது. போக விடக் கூடாது.இவன் கண் முழிச்சதும் இவனுக்கு இருக்கு”என்று அவர்களிடம் உண்மையை சொல்ல அவர்களும் அவன் கண் விழிப்பதற்காக காத்திருந்தனர்.
வீரமதியிடம் அவன் தப்பித்த செய்தியை சொல்ல, அந்தக் கும்பலை அவர் சரமாரியாக திட்ட, அந்த ரோசத்தில் அவர்களும் வெறித்தனமாக தேடிக் கொண்டிருந்தனர்.
அவன் மெதுவாக கண் திறந்தான்… எல்லாம் மங்கலாக தெரிந்தது. தன்னை ஒருவாறு சரி செய்துக் கொண்டு பார்க்க, துருவன் தெரிந்தான்.
அவன் தப்பிக்க முயல, அவனை பிடித்தவன் அடிக்க தொடங்கினான்…சரமாரியாக அடி விழுந்ததும் உடம்பில் வீக்கம் , ரத்தம்… என ஆங்காங்கே அடையாளங்களாக இருந்தன.
“சொல்லு எதுக்கு என்ன அடிச்ச? நீ தான் அடிச்சேன் எனக்கு நல்லா தெரியும்… உன் முகத்தை எப்பவும் மறக்க மாட்டேன்… சொல்லு ஏன் அடிச்ச?”என்று விசாரி்க்க,
அடி வாங்க தெம்பு இல்லாதவன் உண்மையை சொல்லி விட்டான்.”எ… எனக்கு பணம் கொடுத்தாங்க சார் ! அதான் அடிச்சேன்”என்றான்.
“யார் கொடுத்தா?”
“ஜெ… ஜெஸி மேடம்”என்றதும் அவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.”என்ன சொல்ற ஜெஸியா? பொய் சொல்லாத அவ எதுக்கு என்னை அடிக்க உனக்கு பணம் தரனும்…?”
“எனக்கு காரணம் தெரியாது சார், அவங்க சொல்லி தான் உங்களை அடிச்சேன். அவங்க சொல்லி தான் கொடைக்கானல் எஸ்டேட்ல இருந்த வீரமதி மேடம் பையனையும் அவர் குடும்பத்தை கேரளாவுல கொண்டு போய் வச்சோம்.. அவங்க சொன்னதை செஞ்சேன் அவளோ தான் சார் தெரியும்” என்றான் வலியில்.
அவனுக்கு எதுவும் புரியவில்லை.. ஆனா இதற்கு காரணம் ஜெஸி என்றதும். கோபத்தில் அவளுக்கு அழைத்து விட்டான்.
“என்ன துருவா , எதுவும் பிரச்சனையா?”
“ஆமா ஜெஸி ! உடனே ஆபீஸ்க்கு வா !”என்றான் காட்டமாக, அவன் குரலில் தெரிந்த காட்டத்தை உணர்ந்தவள், “நான் குழந்தையோட இருக்கேன்… வேணும்ன்னா ரவியை அனுப்பி வைக்க வா !”
“ரொம்ப பெரிய பிரச்சினை நீ இங்க இருக்கணும் ஜெஸி… இப்போ நீ வந்தே ஆகனும் ஜெஸி “என்றான் சன்னமாக, அவளும் வருவதாக சொல்லி அலைபேசியை வைத்தவள், வீட்டில் சொல்லி கிளம்பி அலுவலகத்திற்கு வந்தாள்.
“என்ன துருவா என்ன பிரச்சனை ?”எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவள் அங்கிருக்கும் கருப்பையும் கண்டதும் அமைதியானாள்.
“என்னால முடியல மேடம் அடி தாங்க முடியல… அதான் உண்மையை சொல்லிட்டேன்”என்றான் அழுது கொண்டே.
“துருவா ! நாம பேசலாம். அதுக்கு முன்ன அவனுக்கு சாப்பாடு வாங்கி கொடு “
“என்ன அடிச்சவனுக்கு நான் தீனி போடணுமா? சாவட்டும் எனக்கு என்ன வந்துச்சி?”என்றான் பழைய துருவனாக,
“அதானே !! உன் குடும்பத்துல யாரு தான் அடுத்தவங்க உயிர பத்தி கவலைப்படறாங்க, நீ கவலை பட ?”என நக்கலாக பேச, “ஜெஸி “என்று அழுத்தமாக அழைத்தான்.
“சாப்பாடு வாங்கி கொடு நாம பேசலாம்”என்றாள். அவனும் ரிஷியிடம் சொல்ல அவனை அழைத்துக் கொண்டு போனான்.
அவனை அமர்த்தி சாப்பிட வைத்த பின் தான் இவள் பேசவே ஆரம்பித்தாள்.
“இப்ப சொல்லு என்ன பேசணும்?”என்றாள் தெனாவெட்டாக, அவனுக்கோ அவள் செயலை கண்டு கடுப்பாக இருந்தது. கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லை.. மன்னிப்பு இல்ல… எப்படி திமிராக இருக்கிறாள் பார்…’ என்பது போல எண்ணிக் கொண்டு பல்லை கடித்தான்.
“ஏன் ஜெஸி இப்படி பண்ண? என்ன அடிக்க ஏன் ஆள் அனுப்பின? எதுக்கு எனக்கு பாடிகார்ட்டா வந்த? ஏன் ஜெஸி?!”என குரல் உடைந்து தழுதழுக்க கேட்டான். அது அவளை பாதித்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு, பேச ஆரம்பித்தாள்
“உன் வீட்டுக்குள்ள நுழைய எனக்கு அதான் சரியான வழின்னு தோணுச்சு…”
“எதுக்கு என் வீட்டுக்குள்ள நீ நுழையனும்?”
“உண்மை தெரிய? என் புருசன, எதுக்கு உன் அம்மா கொன்னாங்கன்ற காரணத்தை தெரிஞ்சுக்க , உன்னை பயன்படுத்தி உள்ள வந்தேன்…”என்றாள்
“வாட்? என் அம்மா ஆரோன கொன்னாங்களா? என்ன உளர்ற நீ?
“நான் உளர்றல , உண்மைய தான் சொல்றேன். என் புருஷனை மட்டும் இல்லை… உன் அப்பாவையும் கொன்னது அவங்க தான்”என்றாள் அடுத்த இடியாக,
“வாட் ரப்பிஸ் ! என் அம்மா எப்படி என் அப்பாவை கொல்ல முடியும்? அதுக்கு வாய்ப்பே இல்லை. நீ ஏதோ தப்பா புரிஞ்சுருக்க?”
“இல்ல நீ தான் உன் அம்மாவை பத்தி தப்பா புரிஞ்சு வச்சிருக்க… உன் அம்மா ஒரு கொலைகாரி. இரண்டு கொலை பண்ணவங்க… அதை வாயாலே சொல்ல வைக்கட்டுமா?”என அவள் சன்னமாக கேட்கவும் அவனுக்குள்ளே சின்ன தடுமாற்றம் ஏற்பட்டது. தாய் மீது வைத்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.
“அவங்க கொல பண்ணலே தெரிஞ்சா என்ன பண்ணுவ?”
“என்ன பண்ண சொல்றீயோ பண்றேன். ஆனா அவங்க தான் கொலை பண்ணினாங்க ஒத்துக்கிட்டா, நீ என்ன பண்ணுவ?”
“போலீஸ் ல நானே ஒப்படைக்கிறேன் “என்றான்.
“நம்பலாமா?”
“என்னை நம்பலாம்” என்றான் தீர்க்கமாக, “அப்போ நான் சொல்ற படி செய்”என்றவள் திட்டத்தை சொல்ல சரி என்றான்.
அவளும் கிளம்பிச் செல்ல, “ஜெஸி “என்றான். அவளும் திரும்பி பார்க்க, “அப்போ இத்தனை நாள் என் கிட்ட பழகினது எல்லாம் வெறும் நடிப்பு தானா ஜெஸி?”
அவளுக்கோ தொண்டை அடைத்தது ஏனோ உள்ளுக்குள் பலவீனமாவது போல இருந்தது. வெளியே காட்டிக் கொள்ளாது தன்னை நிலைப்படுத்தியவள், அவனை பாராது கண்ணாடி அணிந்துக் கொண்டு “ஆமாம்” என்று விறுவிறுவென சென்று விட்டாள்.
இவன் காதல் மனது சுக்கு நூறாக உடைந்து போனது.
****
இரத்த வெள்ளித்தில் கிடந்த துருவனை மடியில் ஏந்திக் கதறிக் கொண்டிருந்தாள் ஜெஸி, அவள் கண்ணீர் தனக்காக எனும் போது அவன் முகத்தில் ஓர் வெற்றிப் புன்னகை.. “நீ.. என் கிட்ட பொய் தான சொன்ன ஜெஸி”என்றான் வலியிலும்..
தூக்கம் இல்லாத இரவாகிப் போனது துருவனுக்கு. ஒரு பக்கம் அம்மா கொலை செய்ததாக சொன்ன கூற்று. மறுபக்கம் ஜெஸியின் நடிப்பு. இரண்டுமே பொய்யாக இருக்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டாலும்…
‘ உண்மை தான் ‘ என்று நம்பி தொலைக்கிற இந்த மூளையை என்னவென்று சொல்வது?
உண்ண கூட பிடிக்காமல் இரவு முழுக்க அறையை தான் அளந்துக் கொண்டிருந்தான்.
கேட்க கூடாதவகளை கேட்டு விட்டு, மனம் , மூளை இருவரது வாக்குவாதங்களுக்குள் இடையில் மாட்டிக் கொண்டு மத்தளம் போல இடிபடுகிறான் … அவனது சொச்சம் நிம்மதியும் அவளால் மொத்தமாக பறிப்போனது.
நாளைக்கு உண்மை தெரிந்திடும் இன்று எதற்கு யோசித்துக் கொண்டு என்று அவனால் அலட்சியம் செய்ய முடியவில்லை… உள்ளுக்குள் அவனை போட்டு குடைந்துக் கொண்டிருக்கிறது அனைத்தும்.
‘அறைக்குள்ளே இருந்ததால் நிச்சயம் பைத்தியக்கார பட்டம் கிடைத்தது விடும்… வெளியே போகலாம் ‘என்று வெளியே வந்தான். உறவு மக்கள் அனைவரும் உறங்குச் சென்று வீட்டின் ஆரவாரம் அடங்கி அமைதியாக இருந்தது.
அவன் தன் தாயின் அறையைப் பார்த்தான். விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. வேகமாக அவரது அறைக்குச் சென்றான். ஆனால் உள்ளே செல்ல முடியவில்லை தயக்கமிருந்தது.
‘அவரை வீட்டில் வைத்தே உண்மையை சொல்ல வைக்கிறேன்’ என்று ஜெஸி சொல்ல, அதற்கு மறுப்பு சொன்ன துருவன்,’ தனியாக அழைத்து விசாரிக்கலாம்’ என்றான்.
அவளும்’ ஹோட்டலுக்கு அழைத்து வந்து விடு அவரது வாயாலே உண்மையை சொல்ல வைக்கிறேன்’ என்றாள். அவள் கண்களில் தெரிந்த தீவிரமும், உறுதியும் இவனை ஆட்டம் கொள்ள வைத்தது.
தயக்கத்தை உள்ளே ஒதுக்கியவன், கதவை தட்ட, அது திறந்து தான் இருந்தது. “எஸ் கம்மின் “என்றார் உள்ளிருந்த வீரமதி. உள்ளே நுழைந்தவனை அவர் அங்கே எதிர்பார்க்க வில்லை…
அலுவலக அறையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அடியாட்கள் மூலம் கருப்பு தப்பித்து விட்டான் என்ற செய்தி அவரது பி. பியை எகிற வைத்திருந்தது.
எதிர்பார்த்தது நடவாமல் போனது அவரால ஜீரணிக்க முடியவில்லை… ஏதோ தனக்கு எதிராக ஏதோ நடக்க போகிறது என்று உள் மனம் உரைக்க, என்ன வென்று அவரால் யூகிக்க முடியவில்லை… ஆனால் அது மகன் வழி வரப் போகிறது என்று அறியாது போனார் அந்தத் தாய்.
மகனை கண்டதும் மத்ததை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தார்.
“என்ன துருவ்?”எனக் கேட்டபடி அவர் மெத்தையில் அமர்ந்து அவனையும் பக்கத்தில் அமர்த்தினார்.
“என்ன துருவ் தூங்கலியா ? இவ்வளவு நேரம் நீ முழிச்சிருக்க மாட்டியே என்னப்பா?”என்று வாஞ்சையாக கேட்டு தலையை தடவிக் கொடுத்தார்.
அவர் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு “மாம், நாளைக்கு நீங்க ஃப்ரீயா? எனக்காக உங்க ஒரு மணி நேரத்தை ஒதுக்க முடியுமா?”என்று தயங்கிக் கேட்டான்.
“ஏன் முடியாது? என் செல்ல மகனுக்காக அந்த நாளையே என்னால ஒதுக்க முடியும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க முடியாதா? நாளைக்கு உனக்காக எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடறேன் ஓகேவா !”என்றார்.
“தேங்க்ஸ் மாம் “என்றவனின் சிரிப்பில் உயிர்ப்பில்லை… “என்னாச்சி துருவ் உனக்கு? உன் சிரிப்புல ஏதோ மிஸ்ஸிங்? இன்னைக்கும் எதுவும் சாப்பிடவும் இல்ல என்ன பிரச்சினை?”என்றார்.
“பிரச்சனை எல்லாம் இல்ல மாம்… பிரண்ட்ஸோட வெளியே சாப்பிட்டு வந்துட்டேன். வர்க் அதிகம் அதான் கொஞ்சம் ட்யர்டா இருக்கு மாம்.. வேற எதுவும் இல்லை”என்றான் புன்னகையுடன்
” அப்ப போய் ரெஸ்ட் எடு துருவ்!”என்றார்
“போறேன் மாம்… நாளைக்கு ஃபாரின்ல என் பிரண்டும் அவன் பேமிலியும் இந்திய வராங்க.. அவங்க **** ஹோட்டல் புக் பண்ணிருக்காங்க… என் பிரண்டோட தாத்தா உங்களை பார்க்கனும் சொன்னார் மாம். நான் அவன் பேமிலிய வீட்டுக்கு கூப்பிட்டேன் உடம்பு சரியில்லாதவர், கொஞ்சம் அவருக்கு ரெஸ்ட் வேணும் ரூம் கம்ஃபோர்ட்டபில் இருக்கும் சொல்லிட்டாங்க… ஆனாலும் அவர் உங்களை பார்க்கனும் ஆசைப்படறார் போய் பார்த்துட்டு வரலாமா மாம்…?” வாய்க்கு வந்த பொய்யை சொன்னான்.
அவரும் அதை நம்பியவர் “ம்.. போலாம் துருவ்”என்றார் புன்னகையுடன். அவனும் “தேங்க்ஸ் மாம்”என்று கட்டி அணைத்தான்.
அவன் கன்னத்தில் இதழ் பதித்து”என் செல்லம்”என்று கொஞ்ச, அவனுக்கு தான் உள்ளுக்குள் சுருக்கென்று இருந்தது.
“மாம்… உங்க கிட்ட ஒன்னு கேட்டுமா ?”
“கேளுடா!”
“அப்பா வை நீங்க இன்னமும் மிஸ் பண்றீங்களா..?”என்று அவன் கேட்டதும் அவர் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து முகம் இறுகி போனது. அதை அவன் குறித்துக் கொண்டான். மகன் அருகில் இருப்பதால் தன்னை மாற்றிக் கொண்டு,
“ஆமாம் ப்பா ரொம்ப மிஸ் பண்றேன்… நீ பிஸ்னஸ் ஆரம்பிச்சி இருப்பதை நினைச்சு இந்நேரம் சந்தோஷப்பட்டு இருப்பார். என் பிறந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாடி இருப்பார் . அவர் சீக்கிரம் நம்மலை விட்டுப் போவார் நினைச்சி கூட பார்க்கல”என்றார் நிர்மலமான முகத்துடன். அவனால் அவர் முகத்தில் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை…
“நீங்க அவரை எவ்வளவு நேசிச்சீங்க மாம்?”
“ரொம்ப ப்பா ! என் உயிரே அவர் தான் ஜெபம் போல சொல்லிட்டு இருப்பேன் அந்த அளவு நேசிச்சேன்… ஆனா அவர் அதுக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லை” என்றார் அவரை அறியாமல்…
“மாம்…!”என்றதும் கூறிய வார்த்தையை உணர்ந்தவர் அதை மாற்றும் பொருட்டு ” என்னை விட்டு அதுக்குள்ள போயிட்டாரே துருவ் அதை தான் அப்படி சொன்னேன்…” துளி கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
இதுக்கு மேல் எதையும் கேட்க வேண்டாம் என்று எண்ணியவன், “சாரி மாம்… உங்களை டிஸ்டர்ப் பண்ணி ! அப்பாவை கேட்டு அழ வச்சுட்டேன்”என்று மெய்யாய் வருத்தம் கொள்ள, “பச், என்ன துருவ் அதெல்லாம் எதுவுமில்லை… நீ ரொம்ப டயர்டா தெரியற போய் தூங்கு “என்று அனுப்ப, அவரை அணைத்து முத்தமிட்டு வெளியே செல்ல, மகனை பார்த்திருந்தவர், தன் கணவனின் புகைப்படத்தை பார்த்தார்.
” கடைசி வரைக்கும் உங்க பிள்ளைங்களுக்கு நீ நல்லவரா இருக்க, நான் தான் பாடுபடறேன். ஆனா இதெல்லாம் எதுவரைக்கும் எனக்கு தெரியல… உங்க குட்டு ஒரு நாள் வெளிய வரத்தான் போகுது.. ஆனாலும் பிரோஜனம் இல்லை… நீங்க பண்ணினதுக்கு நான் உங்களுக்கு தண்டனை கொடுத்தேன்… என் மனசு சாந்தி அடைந்தாலும் , போற போக்குல நிம்மதியை வாங்கிட்டு போயிட்டீங்கள உங்களை நினைச்சி வருந்தக் கூடாது நினைச்சாலும் ஆரோன் கண் முன்னாடி வந்து கொல்றான். அவன் கிட்ட இருந்து எனக்கு விடிவு காலம் எப்போ எனக்கு தெரியல… என்னை மன்னிச்சிடு ஆரோன்”என்று கண்களில் நீர் வர அழுதார்.
அன்றைய இரவு முடிந்து பகல் தொடங்க… ருத்ரனை அலுவலகத்தில் அனைத்தையும் பார்த்துக்க சொல்லி அனுப்பி விட்டு இவர் துருவ்வுடன் சென்று விட்டார்.
“இன்னைக்கி எட்வர்டு தான் லீவுனு பார்த்தா ஜெஸியும் லீவா ? ஏன் நீ மத்தவங்களையும் வர வேணா சொன்ன…?”என்று காரை ஒட்டிக் கொண்டிருந்த துருவ்விடம் கேட்டார்.
“உங்க கூட தனியாக போக ஆசைப்பட்டேன் மாம்…!”என்றான். அவரும் நெகிழந்து போனார்.
ஹோட்டலும் வந்தது. உள்ளே அவனுக்கு படபடப்பாக இருந்தது அதை மறைத்துக் கொண்டு அவருடன் நுழைந்தான்.
ஏற்கெனவே ரூம் புக் பண்ணிருந்ததால் சாவியை வாங்கிக் கொண்டு லிஃப்ட்டில் ஏறினார்கள். லிஃப்ட் நிற்கவும் இருவரும் வெளியே வந்தனர்.
வீரமதி வீர நடையுடன் முன்னே செல்ல, அதை ரசித்தவன் கண்ணில் மீண்டும் சோகம் வந்து குடியேறியது.
‘ போகும் போதும் இதே போல கெத்தா நீங்க போகணும் மாம்’என்று எண்ணிக் கொண்டவன், அவருக்காக பிராத்திக்க, பிராத்தனை பலனின்றி மாறாக நடக்க போகிறது என்று அறியாமல் போனான்.
“வா துருவ் “என இவர் திரும்பி பார்த்து அழைக்க, அவனும் வேக நடையுடன் அவர் பின்னே சென்றான். அறையும் வர திறந்து உள்ளே வந்தனர்.
“மாம்… இங்க இருக்க சொன்னாங்க… கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க…”என்றான் ஆனாலும் உள்ளே எழுந்த படபடப்பு அதிகமாக்கிக் கொண்டே இருந்தது. ஏசியிலும் அவனுக்கு வியர்க்க, அவனை ஆச்சர்யமாக பார்த்தார்.
“என்ன துருவ் ஏன் ஏசியிலும் உனக்கு இப்படி வேர்க்குது?” என்று கேட்டு துடைத்து விட்டார். அவனுக்கோ கண்கள் கலங்கிப் போக மறைக்க பாடுபட்டான். அழைப்பு மணி அடிக்க, இவன் தான் போய் கதவை திறந்தான்.
ஜெஸியும் எட்வர்டும் வந்துவிட்டனர். அவர்களை உள்ளே அழைத்தான். இவர் ஆர்வமாக யாரென பார்க்க, வந்தவர்களை கண்டு புருவம் சுருக்கினார்.
“என்ன ரெண்டு பேரும் இங்க வந்திருக்கீங்க? என்ன விஷயம்?”
“உண்மையை தெரிஞ்சுக்க வந்திருக்கோம் மேடம்…”என்று அழுத்திச் சொன்னான்.
“என்ன உண்மை எட்வர்டு?”
“எதுக்கு என் புருசன கொன்னீங்கன்ற உண்மைய தெரிஞ்சுக்க வந்திருக்கோம் மேம்..”என்றதும் அவருக்கு தூக்கி வாரிப் போட்டது. இப்போது அவர் முகத்தில் வியர்வை வழிந்தது. உள்ளே எழுந்த படபடப்பை மறைக்க போராடினார்.
“நான் யாரையும் கொல்லல… உன் புருசன நான் ஏன் கொல்லணும்? எனக்கு என்ன அவசியம் இருக்கு அதுல?”
“உங்க புருஷன நீங்க கொன்ன உண்மையை தெரிஞ்ச ஒரே ஆளு ஆரோன். அதனால தானே அவனையும் சேர்த்து கொன்னீங்க” என்றுதும் அவருக்கு இதயம் துடிக்க வில்லை… நின்று போனது போல இருந்தது
“இல்ல கொல்லல நான் கொல்லல… துருவ் என்ன இது?”
“மாம்.. நீங்க சொல்லுங்க உண்மைய சொல்லுங்க… நீங்க கொல்லல இது ஆக்சிடென்ட்ன்ற உண்மையை சொல்லுங்க…”என கேட்டான்.
“நீ சொல்றது தான் உண்மை நான் யாரையும் கொல்லல… இங்க இருந்து போலாம் துருவ் “என்று அவன் கைப்பிடித்து நடக்க, அவரை தடுத்த எட்வர்டு “என் பிரெண்ட ஏன் கொன்னீங்க சொல்லிட்டு போங்க மேடம்?”என்று அவரை மறித்து கையை கட்டிக் கொண்டு கேட்டான்
“நான் கொல்லல கொல்லல கொல்லல… நான் யாரையும் கொல்லல”என்று கத்தினார்.
” நீங்க தான் கொன்னீங்க அதுக்கு ஆதாரம் இருக்கு என் கிட்ட?”என்றாள் ஜெஸி.
“என்ன ஆதாரம் இருக்கு உன்கிட்ட?”
“உங்க புள்ளை. நிவாஸ் என் கிட்ட தான் இருக்கான்… அவனுக்கு எல்லா உண்மை தெரியும்ல… அந்த ஆதாரம் போதாதா?”என்றாள்
“நீ தான் அவனை கடத்தினீயா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
“ஆமாம் அது மட்டுமில்லை.. உங்க புள்ளைய அடிக்க ஆள் அனுப்பினதும் கூட நாங்க தான். உங்க புள்ள மூலமா உள்ள வந்ததே, நீங்க என் புருஷனை கொன்னதுக்கான காரணத்தை தெரிஞ்சிக்க தான். ஆனா உங்க வாய் மூலமா அந்த உண்மை தெரிஞ்சிப்பேன் நான் நினைக்கல சொல்லுங்க… என் புருஷனை எப்படி கொன்னீங்க எதுக்கு கொன்னீங்கன்ற உண்மை உங்க வாயால சொல்லிடுங்க… இல்ல உங்க புள்ளையோட மூளை சிதறிடும் “என்று அருகே துருவனின் தலையில் துப்பாக்கியை வைக்க, அதிர்ந்தனர் இருவரும்..
“ஜெஸி !”என அவளை நம்பாமல் வாய்க்குள் முனங்க, அதைக் கண்டு கொள்ளாது வந்த நோக்கத்திற்கு முக்கியத்துவம் தந்தாள் அவள்.
மகனின் தலையில் துப்பாக்கியை கண்டதும் பதறியவர் உண்மையை ஒத்துக்கொண்டார்.
துருவன் அதிர்ந்தான்.
வீரமதி கொலை செய்ததற்கான உண்மையான காரணத்தை சொல்ல ஆரம்பித்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

