Loading

காதல் – 62

 

அஸ்வதி மற்றும் விஹான் இருவரும் அவர்கள் எஜூக்கேஷன் டூர் போன கல்லூரிக்கு நன்றி கூற சென்றனர் அங்கு அந்த கேவலபுத்தி கொண்ட மனீஷா வந்தாள்….

 

வார்த்தைகளால் விஹானை காயப்படுத்தி கொண்டிருந்த மனீஷாவுக்கு தன் கைகளாலும் வார்த்தைகளாலும் தக்க பதிலடி கொடுத்தாள் அஸ்வதி……..

 

அதனால் கடுப்படைந்த மனீஷா அந்த இடத்தை விட்டு சென்றாள்…..

 

அஸ்வதி, விஹான், ஹர்ஷா, அர்ச்சனா நால்வரும் ஒரே காரில் தங்களது வீடுகளுக்கு பயணித்து கொண்டிருந்தனர்…….

 

அஸ்வா எப்படி நீ அந்த நேரத்துல விஹான்க்கு அப்படி சப்போர்ட் பன்ன?அந்த மனீஷா அவ்ளோ கேவலமா விஹான் சார பத்தி சொல்லியும் நீ நம்பாம அவள திரும்ப அடிச்சிட்டு வந்துருக்க?

 

அச்சு நம்ம ஊருல உள்ள லேடிஸ்க்கு இதான் பெரிய பிராப்ளம் யாராவது நம்ம நேசிக்கிற பையன பத்தி தப்பா சொல்லிட்டா போதும் அத அப்படியே நம்பிட்டு அவங்க நேசிக்கிற பையன் சொல்லுறத காதுல கூட வாங்காம அவங்க வாழ்க்கைய அவங்களே கெடுத்துக்குவாங்க , ஆனா நா அப்படி இல்ல , என்னோட விஹான்ன பத்தி எனக்கு ரொம்ப ரொம்ப நல்லா தெரியும் சோ யாரு என்னோட ஆள பாத்து தப்பா சொன்னாலும் அவங்க வாய உடச்சி விட்டுருவேன்……

 

விஹான் அந்த மனீஷா உன்னோட வாழ்க்கையில அவ்வளோ பெரிய குண்ட தூக்கி போட்ட பிறகு உன்னோட வாழ்க்கை எப்படி ஆக  போகுதுன்னு நா டெய்லி நினைச்சி ஃபீல் பண்ணுவேன் ஆனா அஸ்வா உன்னோட வாழ்க்கையில வந்த பிறகு எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு…..

 

ஆமாடா ஹர்ஷா அஸ்வி என்னோட வாழ்க்கையில வந்த ஒளி என்று அவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……..

 

அப்பொழுது அவர்களின் காதலுக்கு ஏற்பப் பாடல் ஒலித்தது…..

 

“வானம் பார்த்து கிடந்தேனே

மழையாய் வந்து விழுந்தாயே

வழி துணையே

வழி துணையே நீயே

 

கண்டேன் கண்டேன் என்னுடையவளை

தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

கண்டேன் கண்டேன் என்னுடையவனை

தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

 

உற்று உன்னைப் பார்கையிலே

தொற்று கிடைத்த தனிமையினை

கற்று தந்த காதல் வலி

விட்டு போனதே

 

ஊர்கூடும் நல்ல நல்ல தளங்கல்லெல்லாம்

உன்னை கூட்டிக்கொண்டு கைக் கோர்த்து கொண்டு

இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்கள் எல்லாம்

வா தேடி தேடி போவோம்

 

இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே

விழி மூடி நீ இருக்கும் வேலையிலே

என்னென்ன வரம் வேண்டும் என்பதையே

நான் வேண்டி வேண்டி கேட்பேன்”……..

 

அஸ்வதி விஹான்னின் தோள்களில் சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்…….

 

அஸ்வா…..

 

என்னடா ஹர்ஷா….

 

நேத்து நைட்டு என் நண்பன பாத்து ஒரு பாட்டு பாடினியே அத பாடு…..

 

நேத்து நைட்டு நா பாடுனது உனக்கு எப்படி தெரியும்?

 

ஹர்ஷா சார்க்கு மட்டும் இல்ல  எனக்கும் நேத்து நீ நைட்டு பாட்டு பாடினது தெரியும்…..

 

அச்சு உனக்கு எப்படி தெரியும்?

என்ன நடக்குது இங்க?

விஹான் இவங்க ரெண்டு பேருக்கும் நா நேத்து குடிச்சிட்டு பாட்டு பாடினது எப்படி தெரியும்?

 

அஸ்வா செல்ல குட்டி இந்த வீடியோவுல இருக்குறது நீங்களான்னு பாத்து சொல்லுங்க என்று அர்ச்சனா ஒரு வீடியோவை காண்பித்தாள்……

 

அந்த வீடியோவை அஸ்வதி பார்த்தாள் அதில்……

 

அவள் விஹான் சட்டையை பிடித்து கொண்டு பாட்டு பாடி ஆடி கொண்டு இருந்தாள்…….

 

என்ன நா இப்படி ஆடிட்டு இருக்கேன்?

 

அஸ்வா செல்லம் இதுக்கே ஆடி போயிட்டா எப்படி?நெக்ஸ்ட் நீங்க ஆடுவீங்க பாரு ஒரு ஆட்டம் என்று ஹர்ஷா காரை நிறுத்திவிட்டு கூறினான் அதில்…..

 

கனா காண்கிறேன் கனா காண்கிறேன்

கண்ணாளனே

ஒரே பந்தலில் ஒரே மேடையில்

இருவருமே

மண்ணை தொட்டாடும்

சேலை சேலை கொண்டு

மார்பை தொட்டாடும்

தாலி தாலி கொண்டு

மடியை தொட்டாடும்

மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

தினம் தினமும்

வாசம் கொண்டாடும்

பூக்கள் பூக்கள் வைத்து

வாசல் கொள்ளாத

கோலம் கோலமிட்டு

காதல் கொண்டாடும்

கணவன் திருமடியில் மலர்வேன்”…….

 

என்று அஸ்வதி விஹாணை பிடித்து ஆடி கொண்டு இருந்தாள்…..

 

விஹான்னு நம்ம கல்யாணத்துல நா இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுவேன் சரியா??

 

தாராளமா ஆடு தங்கமே…..

 

என்கூட நீயும் அப்போ ஆடனும்…..

 

கண்டிப்பா ஆடுவேன் …..

 

அப்போ ஜாலி ஜாலி….விஹான் நெக்ஸ்ட் ஸ்டேன்சா நல்லா இருக்கும் இப்போ நா ஆடுறேன் என்று அவள் மீண்டும் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினாள்……

 

என் தோழிகளும் உன் தோழர்களும்

அய்யோ நம்மை கேலி செய்ய

என் சேலையும் உன் வேட்டியும் நாணும்

நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ

ஆகா அது இன்ப துன்பம்

நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட

தமிழ்நாடே வாழ்த்து சொல்ல

சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்

தென்னாட்டு நெய்யின் வாசம்

செட்டிநாட்டு சமையல் வாசம்

நியூயார்க்கை தாண்டி கூட

மூக்கை துளைக்கும்”……..

 

அஸ்வதி அந்த பாடலுக்கு ஆடி முடிக்க அந்த வீடியோவும் முடிந்தது…….

 

அஸ்வதி வெக்கத்தில் முகத்தை விஹான் சட்டையை வைத்து மறைத்து கொண்டாள்…..

 

என்ன அஸ்வா செல்லம் , வெக்கமா?

 

விஹான் ஏன் நீங்க இவங்களும் அங்க இருந்தாங்கன்னு சொல்லல?

 

நாங்கதான் சொல்ல வேண்டாம்னு அவன்கிட்ட சொன்னோம்…….

 

ஆமா நீங்க ரெண்டு பேரும் அந்த நேரத்தில அங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

 

அஸ்வதி அவ்வாறு பாயின்ட்டை பிடித்து கேட்கவும் ஹர்ஷா மற்றும் அர்ச்சனா திருதிருவென முழித்தனர்……

 

அது….

வந்து….

 

சொல்லுங்க மிஸ் அர்ச்சனா உங்களுக்கும் மிஸ்டர் ஹர்ஷவுக்கும் நடுவுல என்ன போகுது??

 

அது….

அது….

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல அஸ்வா…..

 

நீ ஒன்னுமில்லன்னு சொல்லுற ஆனா வேதியியல் பேராசிரியர் மிஸ் அர்ச்சனா கண்ணுல என்னமோ தெரியுதே??!!!

 

கண்ணுல கருவிழி தெரியும் ……

 

நைஸ் காமெடி நாளைக்கு சிரிக்குறேன், நீங்க ரெண்டு பேரும் நேத்து அந்த இடத்துக்கு எப்படி வந்தீங்க?உண்மைய சொல்லுங்க……

 

அஸ்வதி மீண்டும் மீண்டும் கேட்கவும் அர்ச்சனா கூறினாள்……

 

அஸ்வா எனக்கு ஹர்ஷா சார்கிட்ட தனியா பேச நெறய விஷயம் இருந்தது அத பேச அவர அங்க வர சொன்னேன்…..

 

அப்போ இலவச இணைப்பா நானும் விஹான்னும் அங்க இருந்தோம் அதான??

 

ஆமா……

 

அர்ச்சனா இது உன்னோட பெர்சனல் சோ இதுக்கு அப்புறம் நா கேக்க கூடாது சோ நீயே சொல்லிடு என்று அஸ்வதி கூறவும் அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்……..

 

அஸ்வதி எனக்கு ஹர்ஷா சார ரொம்ப புடிச்சிருக்கு அதை அவருகிட்ட சொல்லதான் நேத்து அவர அங்க வர சொன்னேன் ஆனா சொல்ல முடியாம போச்சு…….

 

அதான் இப்போ சொல்லிட்டியே, டேய் ஹர்ஷா அச்சு பொன்னு உன்ன லவ்ஸ் பன்னுதாம் நீ என்ன சொல்லுற???

 

அர்ச்சனா இவ்வாறு தடாலடியாக தன் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தவும் ஹர்ஷாபுக்கு பேச்சு வரவில்லை…….

 

என்னடா அமைதியா இருக்க??எதாவது பதில் சொல்லு…..

 

ஏய் டக்குன்னு இப்படி சொன்னா பதட்டமாக இருக்குல்ல???

 

ஏதே உனக்கு  பதட்டமா இருக்கா?நீ யாரு என்னன்னு எனக்கு நல்லா தெரியும், ஒழுங்கா யோசிச்சி அச்சுவுக்கு நல்ல முடிவா சொல்லு…..

 

அஸ்வா, உனக்கு உன் இஷ்டம் போல இருக்க சொல்லுற குடும்பம் கிடைச்சிருக்கு அதே மாதிரி எனக்கும் கிடைக்க வாய்ப்பில்லை ,என்ன பத்தின உண்மை தெரிய வந்தா அர்ச்சனா வீட்டுல என்ன ஏத்துக்க மாட்டாங்க…..

 

ஹர்ஷா எனக்கு உங்களை பத்தி எல்லாமே தெரியும் , உங்களை மாதிரிதான் நானும் எனக்கும் யாரும் கிடையாது நானும் ஒரு அனாதைதான் இங்க இருக்குற ஹோம்லதான் வளந்தேன் என்று அர்ச்சனா அவளின் கதையை கூறினாள்…..

 

என்ன சொல்ற அச்சு?உனக்கு அம்மா அப்பா கிடையாதா?

 

இது தான நா  அப்பவே சொன்னேன்?திரும்ப திரும்ப கேக்குறீங்க?

 

அய்யோ சாரி சாரி……

 

அடேய் அப்படி ஓரமா போய் சாரி வித்துட்டு வா உன்கிட்ட ஒரு பொண்ணு லவ் சொல்லி இருக்கா இப்படி குத்துகல்லு மாதிரி உக்காந்துட்டு இருக்கியே…….

 

வேணும்னா பாறாங்கல் மாதிரி உட்காரவா போயேன்டி…..எனக்கே என்ன பேசணும்னு தெரியல மண்டைய பிச்சிட்டு உக்காந்துட்டு இருக்கேன் இவ வேற…….

 

சரி டேய் ஹர்ஷா எங்க ஸ்டாப் வந்துருச்சு எங்கள இங்க இறக்கி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் ஒரு லாங் டிரைவ் போங்க , நிறைய பேசுங்க, ரென்டு பேர பத்தியும் நல்லா தெரிஞ்சுக்கோங்க புரியுதா?

 

புரியுது புரியுது போ டாட்டா என்று ஹர்ஷா , அஸ்வதியையும் விஹானையும் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு காரில் நீண்ட தூரம் எல்லைகள் இன்றி சென்று கொண்டிருந்தனர்……..

 

அஸ்வதி  கட்டியிருந்த புடவையை மாற்றி விட்டு சுடிதார் அணிந்து கொண்டு வந்தாள்……

 

விஹான் பெட்டில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தான்…….

 

விஹான் என்ன கிளம்பாம அப்படியே உக்காந்துட்டு இருக்கீங்க?முகல் கார்டன் போகணும் ஞாபகம் இருக்கா?சீக்கிரம் கிளம்புங்க கிளம்புங்க என்று அஸ்வதி அவன் அருகில் வந்து அமரவும்  விஹான் அஸ்வதியை கட்டியணைத்துக் கொண்டு அழுதான்…….

 

என்னங்க என்னாச்சு ஏன் இப்படி அழுகுறீங்க ?சொல்லுங்க ?என்ன ஆச்சு? ஐயோ கண்ணை தொடங்க என்னாச்சு? என்கிட்ட சொல்லுங்க அழுகாதீங்க ப்ளீஸ் என்று அஸ்வதி அவன் கண்களை துடைத்து விட்டாள்…..

 

அஸ்வி …….அந்த மனிஷா என்ன பத்தி அவ்வளவு தப்பா பேசினா போது அவகிட்ட எப்படி நீ அவ்வளவு தைரியமா சண்டைக்கு நின்ன?

 

எனக்கு உங்க மேல ரொம்ப நம்பிக்கை இருக்குது உங்கள பத்தி யாராவது தப்பா பேசினா அவங்க வாயை உடச்சி விட்டுருவேன்…….

 

விஹான் அந்த கேவலம் புடிச்ச பொண்ணு பேசினதுக்கா நீங்க அழுதுட்டு இருக்கீங்க ? அய்யோ கண்ண தொடங்க உங்களோட கண்ணீருக்கு எல்லாம் அவ தகுதியானவளே கிடையாது என்று அவள் அவனின் கண்களை துடைத்து விட்டு அவனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தாள்……..

 

என்னோட விஹான் யாருக்காகவும் அழுக கூடாது , என்னுடைய விஹான் எப்போதுமே கம்பீரமா  இருக்கணும் அதுதான் இந்த அஸ்வதிக்கு பிடிக்கும் புரியுதா ?இனிமே என்னோட விஹான்  அழமாட்டாங்க சரியா??அழக்கூடாது என்று அவள் அவனின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டாள்………

அப்பொழுது அவள் அவனுக்காக ஒரு கவிதை கூறினாள்……

“நீ விழுந்தால் உன் கை பிடிக்க

உனக்காக நான்  இருப்பேன்…

நீ மௌனமாய் நின்றாலும்

உன் இதயத்தின் ஓசை எனக்கு கேட்கும்

காற்று போல தோளில் வந்து

கவலை எல்லாம் துடைப்பேன்…

இருள் வந்தாலும் பயப்படாதே

உன் வெளிச்சமாய் நான் நிற்பேன்…

நீ தோற்க மாட்டாய் என்ற நம்பிக்கையை

உன் கண்களில் வசிப்பேன்…

இந்த வாழ்வின் எல்லா பாதையும்

உன்னோடு தான் நடப்பேன்…

எப்போதும்…

நான் உனக்காக இருப்பேன்…..

அவள் அவ்வாறு காதலாக கூறவும்….

அஸ்வதி நீ என்னோட வாழ்க்கையில வராம இருந்திருந்தா நா என்ன ஆகி இருப்பேன்?

 

இதே கேள்வியே நா உங்ககிட்ட கேட்ட நீங்க என்ன சொல்லுவீங்க?

 

அப்படியெல்லாம் இருக்க முடியாது உன்ன நா கண்டிப்பா பார்த்துருப்பேன் , கடவுள் நம்ம ரெண்டு பேரும் சீக்கிரமா சந்திக்க வச்சிருப்பாரு……

 

அதேதான்……………உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் அப்டின்னு கடவுள் போட்டு வச்ச செட்டிங் அதை யாராலும் மாத்த முடியாது புரியுதா இப்ப போய்  கிளம்புங்க போங்க……..

 

விஹான் கிளம்பி வர அவர்கள் அனைவரும் மாணவர்கள் அழைத்துக் கொண்டு முகல் கார்டனுக்கு சென்றனர்……..

 

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள முகலாய தோட்டங்கள் அவற்றின் பாரசீக கட்டிடக்கலை மற்றும் இயற்கை அழகுக்காக உலகப் புகழ்பெற்றவை. இவை தால் ஏரியின் கரையில் ஜபர்வான் மலைகளின் பின்னணியில் அமைந்துள்ளன………

 

அந்த அந்த இயற்கை அழகை மாணவர்கள் ரசித்துக் கொண்டே வந்தனர்……….

 

இவ்வாறு அந்த பதினைந்து நாட்களும் மிக சந்தோஷமாக அவர்களுக்கு சென்றது நிறைய சிரிப்புகள் , நிறைய இடங்கள் , நிறைய அனுபவங்கள் என மாணவர்களுக்கும் சரி, அஸ்வதிக்கும் சரி அனைவருக்ம் அந்த பதினைந்து நாட்களும் மிகவும் சந்தோஷமாக கழித்தனர் ஆனால் அவர்கள் அந்த விடுமுறை நாட்களை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு டாட்டா காட்டி விட்டு செலும் நேரமும் வந்தது ………

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்