
“அவ சொன்னது உண்மை தான் மேடம்”என ஜெஸி சொன்னதைக் கேட்டு துருவனுக்கும் வீரமதிக்கும் அதிர்ச்சி தான்.
‘ நேரம் பார்த்து தன்னை பழி வாங்குகிறாளா?! ‘ என்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றியது.
“ஜெஸி !”என நம்பாமல் அவர் அழைக்க, அவரை புன்னகையுடன் ஏறிட்டவள்,
அவரிடம்”அன்னைக்கி துருவன் இவளுக்கு முத்தம் கொடுத்தது உண்மை தான். ஆனா அவ மேலே உள்ள அசிங்கமான எண்ணத்துல இல்ல, என்னை பழி வாங்கனும்ன்ற எண்ணத்துல அவளுக்கு முத்தம் கொடுத்தான்”என அன்று நடந்ததை முழுவதுமாக எடுத்துச் சொன்னாள்.
“ஹோட்டல்ல ரெஸ்ட் ரூம்ல தப்பா நடந்துக்கிட்டது, துருவன் இல்லை… இவ தான்…!”என்றவள் அன்று நடந்ததையும் கூட ஒன்றுவிடாமல் கூறியிருந்தாள்.
அவனது கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.
வீரமதிக்கு மகன் தவறு செய்யவில்லை என்ற பெருமிதம் தோன்றியது.
“என்ன பொய் சொல்லி உன் பாஸ் மேலே எந்த தப்பும் இல்லைன்னு நிரூபிக்கிறீயா ? உன்னை பழிவாங்க எனக்கு ஏன் முத்தம் கொடுக்கணும்?ரெஸ்ட் ரூம்ல என்ன நடந்தது உனக்கு தெரியுமா? நீ அங்க இருந்தீயா? இதுக்கும் மேலே இதோ கோவால உங்க பாஸ் ஒரு பொண்ணோட எப்படி இருந்திருக்கான் பார் ! இவன் நல்லவனா?!”என்று தன் மீது மிலாலுக்கு சந்தேகம் வரக் கூடாது. என்று சிரத்தை எடுத்து கவனமாக இருப்பவளுக்கு தெரியவில்லை அவள் சாயம் வெளுக்கப் போகிறது என்று.
“உனக்கு முத்தம் கொடுக்க காரணம், கிளப்ல வந்த முக்கியமான வி.ஐ.பியோட ஒயிப்ன்றதால தான். உன்னை தொட்டால் பிரச்சனை வரும் நான் அதுல மாட்டிக்கணும் எண்ணத்துல தான் துருவன் அப்படி செஞ்சான். துருவன் ரெஸ்ட் ரூம்ல உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டான் சொன்னியே அவன் லேடிஸ் டாய்லெட்ல அத்து மீறி நுழைஞ்சு உன் கிட்ட தப்பா நடந்துக் கிட்டானா? இல்லை ஜென்ஸ் டாய்லெட்டு தெரிஞ்சே, நுழைஞ்ச உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டானா? ஜென்ஸ் டாய்லெட் தெரிஞ்சும் அங்கே ஏன் போன ரிஷிகா ?” என கேட்டு அவளை தத்தளிக்க வைத்தாள்.
“அது… நான்…”என மென்று முழுங்க, அவளை மிலால் சந்தேகமாக பார்த்தார்.
“ம்ம்… சொல்லு நீ…!”என்று அவளை விடாது கேள்வியால் பிடித்துக் கொண்டாள் ஜெஸி.
“நான் தான் ஜென்ஸ் டாய்லெட்டுக்குள்ள போனேன். அவனை பார்த்ததும் அன்னைக்கு அப்படி ஏன் நடந்துக்கிட்டனு திட்டலாம் ஒரு கோவத்துல அவனோட ஜென்ஸ் டாய்லெட்டுக்குள்ள போயிட்டேன். அப்படி போன என் கிட்ட அவன் தப்பா நடந்துக்க பார்த்தான்…”என்று கதைக் கட்டி சமாளிக்க,
“அவன் டாய்லெட்ட விட்டு வெளிய வர மாட்டானா என்ன? உள்ளயே இருக்கணும் அவசியம் அவனுக்கு என்ன? உன் கோபத்தை வெளிய வச்சுக் காட்டி இருக்கலாம்… அப்படி என்ன உள்ள போய் அவனை திட்ட வேண்டிய அவசியம் இருக்கு…?”என் கேட்க திணறினாள்.
“அன்னைக்கு நான் டாய்லெட் குள்ள இல்ல மேம்… ஆனா ஶ்ரீய துருவனுக்கு துணைக்கு அனுப்பினேன். அவனுக்கு நடந்தது எல்லாம் தெரியும். ஶ்ரீ..!”என்று அழைக்க,
அவனும் அங்கு நடந்ததை ஒன்னுவிடாமல்
சொன்னான். அவன் சொல்லியதும் மிலாலின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கோபமாக மாறுவதை கண்டாள்.
“பேபி ! அவங்க பொய் சொல்றாங்க… எனக்கு எதிரே உங்களை திருப்ப சதி பண்றாங்க… உண்மையிலேயே அவன் என் கிட்ட டாய்லெட்லே தவறா நடந்துக் கிட்டான்… “என்று அவரிடம் அவளை நம்ப வைக்க கெஞ்ச,
“அவன் டாய்லெட்ல தவறா நடந்து கிட்டத அன்னைக்கு நீ ஏன் என்கிட்ட வந்து சொல்லல…! அன்னைக்கே அவனை கொன்று இருப்பேன்ல… இப்போ வந்து அப்படி நடந்துக்கிட்டான் சொல்ற, என்ன டிராமா போடுறீயா ?”என பல்லைக் கடித்துக் கொண்டு சீற அவளுக்கு தான் நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து போனது போலானது…
“எங்க ஶ்ரீக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு.. சுவாரஸ்யமா என்ன நடந்தாலும் அதை வீடியோ எடுத்து வச்சுப்பான்… நான் அப்படி பண்ணாத பல முறை சொல்லிருக்கேன் அவன் கேட்டதில்லை… ஆனா இப்போ அது தான் நமக்கு உதவியா இருக்கு “என்று ஶ்ரீயை பார்க்க, அவனும் இரண்டு வீடியோக்களை அனைவரும் முன் ஓட விட்டான்.
அன்று டாய்லெட்டில் நடந்ததையும் கோவாவில் நடந்ததையும் வீடியோவாக பதிவு செய்ததை அனைவரும் முன் காட்ட, அவளது இரத்தம் உறைய வெளிறி போனாள் ரிஷிகா.
“உங்க பையனுக்கு பெண்கள் மேலே தவறான எண்ணம் எல்லாம் இல்லை… மாறா பெண்கள் எல்லாம் ஆண்களுக்கு சரி சமம் இல்லை… தனக்கு கீழ தான்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. ஆனா அதுவும் இப்ப மாறிடுச்சி! ஒரு பொண்ணு நமக்கு பாடிகார்டா இருக்கறதா எந்த பையனும் ஏத்துக்க அவங்க ஈகோ கண்டிப்பா தடுக்கும் தான். அது அவங்க இயல்பு. அது தான் அவன் கிட்ட இருந்த குறையே தவிர பெண்கள் மேலே எந்த தவறான பார்வை போனது இல்லை… இதை நான் கோவால கண்கூடாக பார்த்து தான் சொல்றேன். நான் மட்டுமில்லை என் டீம் பார்த்தாங்க…
நான் இங்க பேசக் காரணம். நீங்க எனக்கு முதலாளினும் உங்க கிட்ட வேலை பார்க்கற எண்ணம் இல்ல… ஒரு நல்லவன நய வஞ்சகத்தால பாதிக்கப் படக் கூடாதுன்னு தான் நான் பேசினேன் மேம்…”என்று முடித்துக் கொண்டாள்.
வீரமதி கண்களில் உடைப்பெடுத்து நீர் வெளியே வந்தது அவளை நன்றியாக பார்த்தன.
“இல்ல பேபி இதெல்லாம் பொய்! அவங்க எல்லாரும் டிராமா போடுறாங்க…”என்றவளை யாரும் துரும்பாக கூட மதிக்க வில்லை என்று அவர்கள் பார்த்த பார்வையிலே விளங்கியது அவளுக்கு.
“இதுக்கு மேலே நீ பேசறத கேட்டு இருக்க நான் ஒன்னும் மிலால் இல்ல… வெளிய போடி!”என்றார் வீரமதி.
தன்னை அசிங்கப்படுத்தி மிலாலையும் சேர்ந்து அவமானப்பட வைத்து விட்டாள் ரிஷிகா. தன்னை அவமானப்படுத்திய கோபத்தில் அவளை இழுத்துக் கொண்டு போனார் மிலால். அதை யாரும் அங்கே பொருட்படுத்த வில்லை.
ஜெஸியின் அருகே வந்த வீரமதி! அவளை உச்சி முகர்ந்தார்.
“அவன் உயிரை காப்பாத்த தான் உன்னை அவனுக்கு காவலுக்கு வச்சேன். நீ அவன் உயிரை மட்டுமில்லை மானத்தையும் காப்பாத்திருக்க ஜெஸி ! எனக்கு என்ன சொல்றது தெரியல… அவன் என்ன பண்ணினாலும் பொறுத்துக்கிட்டு அவனை நீ காப்பத்திருக்க, ரியலி ஐ பிரவுட் ஆப் யூ மா…! பெண்ணால பொறுத்து போகவும் முடியும் பொங்கி எழவும் முடியும் சொல்லாம சொல்லிட்ட ஜெஸி ! உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது !”என்றார் அவள் கைகளை பற்றி.
“ஐயோ மேடம் அதெல்லாம் எதுக்கு? என் கடமையில ஒன்னா ஒரு நல்லவன காப்பாத்திருக்கேன்… எப்படியோ போகட்டும் விட மனசாட்சி உள்ளவர்களால எப்படி முடியும்?”எனக் கேட்டு அவரை வார்த்தைகளால் வேண்டும் என்றே குத்தியிருக்க, அவருக்கும் அது சுருக்கென்று தான் இருந்தது. அவர் கண்களில் அந்த வலியை அவளும் நன்றாகவே காணச் செய்தாள்.
துருவ் அன்னையிடம் வந்து”ஐ ஆம் சாரிம்மா! இனி இது போல நடந்துக்க மாட்டேன்… உங்களுக்கோ உங்க பெயருக்கோ களங்கம் வர விடமாட்டேன்.ஜெஸி மட்டும் அன்னைக்கும் இன்னைக்கும் இல்லேனா நான் ஒண்ணுமில்லாம போயிருப்பேன் மா…! முதல்ல அவளை எதிரியா பார்த்தது உண்மைதான் இப்போ என் பார்வை மாறிடுச்சி ! எதிரிக்கும் நல்லது நினைக்க குணம் யாருக்கும் வரும் மா சொல்லுங்க… தேங்க்ஸ் மா ஜெஸி எனக்கு கொடுத்ததுக்கு” வெளிப்படையாகச் சொல்ல யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
“ரெண்டு பேரும் தேங்க்ஸ் சொன்னது போதும் போய் செலிபிரேட் பண்ணுங்க இது உங்க ஃபங்ஷன்…!”என்றாள் அதே சமயம் அவளுக்கு அலைப்பேசிக்கு அழைப்பு வர அவர்களிடமே சொல்லிக் கொண்டு நாசூக்காக வெளியே வந்தாள்.
யாருமில்லாத இடத்திற்கு வந்தவள் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.”சொல்லு என்ன விஷயம்?”
அங்கிருந்து என்ன சொல்ல பட்டதோ !”குட், யாருக்கும் எந்த சந்தேகமும் வராதுல… அவங்களை பத்திரமா சொன்ன இடத்துக்கு கொண்டு போயிடுங்க… அங்க போனதும் எனக்கு கால் பண்ணுங்க…”என்றாள்.
மீண்டும் என்ன சொல்லப்பட்டத்தோ “எந்த தடயத்தையும் மிஸ் பண்ணிடலியே! அங்க இருந்தவங்களை என்ன பண்ணிங்க?”அவள் கேட்டதும் அவர்கள் அங்கே பதில் சொல்லிட, “ஓகே கேரி ஆன்”என்று போனை வைத்து விட்டு திரும்பியதும் அவளுக்கு பக்கென்றானது.
துருவன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.
‘ எல்லாத்தையும் கேட்டுருப்பானா? ‘ என அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளை பாய்ந்து அணைத்துக் கொண்டான்.
கொஞ்சமும் அதை எதிர்பாராதவள் தடுமாறி போனாள்.
“சாரி ஜெஸி அண்ட் தேங்க்ஸ் ஜெஸி ! ரியலி சாரி ஜெஸி ! வெரி வெரி தேங்க்ஸ் ஜெஸி ! நான் உனக்கு அவ்வளவு செய்தும் என்னை நீ எப்படியோ போன்னு விடாம காப்பாத்திட்ட ! அதுக்கு தேங்க்ஸ் எவ்வளவு சொன்னாலும் பத்தாது. தேங்க்ஸ் தேங்க்ஸ்…”என கண்ணீர் வடித்து கழுத்தை நினைத்தான்.
அவன் அணைப்பில் அவஸ்தையாக உணர்ந்தவள் “துருவ்” என அழைக்க, அப்போது தான் அவளிடமிருந்து பிரிந்தான்.
“சாரி கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன்…”என்று கட்டி அணைத்ததற்கு விளக்கம் கொடுத்தான்.
அவனை புன்னகையுடன் பார்த்தவள், “பரவாயில்லை… முன்ன சொன்னது போல ஒரு நல்லவன, முக்கியமா என் பிரண்ட் காப்பாத்திருக்கேன் தேட்ஸ் ஆல். பீலிங் சீன் எல்லாம் வேணாம்.சொல்லு நீ என்ன முதல்ல பழி வாங்க போறேன் தான நினைச்சா?”
என்றதும் “ஆமாம்”. என்றவன் மீண்டும் கண்ணீருடன் அணைத்தான். அவளுக்கு அவனது அணைப்பு குழந்தை தன் தாயை அணைப்பது போல தான் இருந்தது. அவளும் அவ்வாறு தான் எண்ணினாள்.
இருவரும் அணைப்பில் இருக்க அந்த வீட்டின் பின் பக்கமாக யாரோ பதுங்கி செல்வது இவளுக்கு நன்றாக தெரிந்தது… உடனே இவள் சுதாரித்துக் கொண்டு” துருவ் ” என அவனை விலக்க, அவனும் கேள்வியாக அவளை பார்த்தான்.
“முக்கியமா ஒருத்தருக்கு போன் பண்ணனும்… உன்னை உள்ள எல்லாரும் தேடுவாங்க நீ உள்ள போ ! நான் வந்திட்றேன்”என்று அவனை அனுப்பி வைக்க முனைய, அவனும்”சரி சீக்கிரம் வா !” என தவிப்புடன் உள்ளே சென்றுவிட்டான்.
அவன் சென்றதை உறுதி செய்து விட்டு பின்பக்கமாக சென்றவள் எட்வர்ட்டை அலைப்பேசி வழியாக அழைத்தாள்.
அவனும் அழைப்பை ஏற்று அவள் சொன்ன இடத்துக்கு வந்தான்.
இங்கோ அந்த உருவம் அந்த வீட்டிற்கு பின் இருந்த அறையில் நுழைந்தது. இவளும் மறைவாக நின்று பார்த்தாள்.
அங்கே சுற்றி சுற்றி பார்த்தாள் கேமிரா இருந்தும் செயலில் இல்லை என்பதை அவளும் உணர்ந்தாள்.
எட்வர்டும் அங்கே வர, அவள் அந்த உருவத்தை காட்டினாள். உள்ளே சென்ற உருவம் அறையில் சிறு வெளிச்சத்தோடு இருந்து விட்டதனால் முகம் சரியாக தெரியவில்லை.
இருவரும் மறைவாக நின்று கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென அந்த அறையில் பிரகாசம் ஏற்பட்டது, யாரென பார்க்க முயல, உள்ளே வந்தது என்னவோ வீரமதி. அறையில் ஏற்பட்ட வெளிச்சத்தில் அந்த உருவம் இவர்களுக்கு நன்றாக தெரிந்தது.
ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு ஆண் நின்றிருந்தார். உள்ளே வந்த வீரமதி வேகமாக ‘ வாசா ! ‘ என்று அணைத்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் அதிர்ச்சி, உடனே தனது செல்லில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள் இவள்.
“இன்னும் ஃபங்ஷன் முடியல முடிந்ததும் உன்னை வந்து பார்க்கிறேன். அதுவரைக்கும் லைட் ஆப் பண்ணிட்டு இந்த ரூம்ல இரு !”என்க அவரும் தலையை ஆட்டினார்.
வீரமதி அங்கிருந்து சென்று விட, மீண்டும் அறை முழுதும் இருள் தான் பரவியது.
இருவரும் புருவம் சுருங்க யோசனையுடன் உள்ளே வந்தனர். பின் அனைவருக்கும் உணவு பரிமாற சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். ஜெஸியும் கிளம்பிட , தான் அழைத்து போவதாக துருவன் முன்னே வர, அவளோ மறுத்து எட்வர்டுடன் காரில் ஏறிக் கொண்டாள். டெனி கையை அசைக்க மனமின்றி அனுப்பி வைத்தான்.
வெகு நேரம் உறங்காமல் பேசிக் கொண்டிருந்தவர்கள், உறங்க செல்ல எப்போது டா எனக் காத்திருந்தவர் உணவை எடுத்துக் கொண்டு பின்புறமாக சென்று அங்கிருந்தவருக்கு கொடுக்க, அவரும் பசியில் வாங்கி உண்டார்.
அவர் உண்பதை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அலைப்பேசி அடிக்க எடுத்துக் காதில் வைத்தவருக்கு பேரதிர்ச்சி..’ வாட்? ‘ என அதிர்ந்தார்.
****
எட்வர்டு, ஜெஸியின் திட்டப்படி இங்கே பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் நேரத்தில் கொடைக்கானலில் வீரமதியின் எஸ்டேட்டில் மர்ம நபர்களை போல ஜெஸியின் ஆட்கள் உள்ளே நுழைந்தனர்.
அறையில் அவர்கள் வருகைக்காக காத்திருந்தாள் ஷர்மி… ஒருவாரம் முந்தியே ஜெஸி அவளது திட்டத்தை கூறி விட, அதற்கு ஏற்றது போல தன் மகள் , மகன் பயிலும் பள்ளியில், அவர்களுக்கு டிசியை வாங்கி வைத்துக் கொண்டாள்.
‘ தன் கணவரின் உடல் நிலை சரியில்லாததால் அவருக்கு ட்ரீட்மென்ட் பார்க்க வேற ஊருக்கு செல்வதாக ‘குறிப்பிட்டு இருந்தாள். நல்ல வேளையாக அவ்விடயம் வீரமதி காதிற்கு செல்லாது பார்த்துக் கொண்டாள். வீரமதி பெயரை உபயோகித்து தான் இந்த வேலையை செய்தாள் அதுவும் ஜெஸியின் திட்டம் தான்..
தங்களுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்து மறைத்து வைத்துக் கொண்டாள். நந்தனா , நந்து விடம் சொல்லி புரிய வைத்திருக்க, அவர்களும் அமைதியாக இருந்துக் கொண்டனர்.
தன் கணவனை பார்த்து கண்ணீர் விட்டப்படி இருந்தாள் ஷர்மி…
” நிவா, உன்னை இப்படி பார்க்க முடியல டா ! உன் அம்மாவோட சேர்ந்து என்ன தப்பு செஞ்ச ? நீயும் ஆரோனோட இறப்புக்கு ஒரு காரணமா? அன்னைக்கு என்னடா நடந்தது அங்கே…?நீ இப்படி இருக்க காரணம் தான் என்ன? எப்போடா என் பழைய நிவாஸா மாறுவ!”அவனை. குலுக்கிக் கொண்டு அழுக, அவனோ “இல்ல நான் அவனை கொலை பண்ணல ஆரோன நான் கொல்லல…”என ஜெபம் போல சொன்னவனை கண்டு மேலும் அழுதாள்.
அவள் கண்ணீரை நந்தனா துடைக்க அவளை அணைத்துக் கொண்டு நிவாஸை காண செய்தாள்.
“உன் ஆசை மகளை பார்த்தாவது, உனக்கு நினைவு வருதாடா ! ஏன் டா என்னை கொல்ற?”
அழுகையினாலே அன்று முழுக்க கரைந்தாள். ஜெஸி கொடுத்த ஆறுதலால் கொஞ்சம் மாறி தேறி இருந்தாள். அதன்பின் நாட்கள் படையெடுக்க, வீரமதியின் பிறந்த நாளும் வர, அவர் இங்கே விழாவில் இருக்க , ஆட்களை அனுப்பி அவர்களை அழைத்து கேரளாவிற்கு சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்க, அதன் படியே எஸ்டேட்டில் நுழைந்தவர்கள், காவலுக்கு இருந்தவர்களை எல்லாம் மயக்க மடைய வைத்து, உள்ளே சென்றனர்
அங்கே அவர்களது விசுவாசி தம்பதியர்களையும் அவ்வாறே செய்து குடும்ப மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு விரைந்து விட்டனர்.
வந்தவர்கள் அனைவரும் முக மூடி அணிவித்து இருந்தனர். கண்ணுக்கு தெரிந்த எல்லா கேமிராவையும் உடைத்து போட்டனர். அவர்களை மிரட்டி அழைத்து செல்வது போல வீட்டை விட்டு அழைத்து வந்து ஜெஸி சொன்னபடியே கேரளாவிற்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் அனைவரும் ஜெஸி ஆட்கள் என்பதால் அச்சமின்றி அவர்களுடன் பயணித்தாள் ஷர்மி. அவர்கள் சென்ற மூன்று மணி நேரத்திற்கு பிறகு கண் விழித்த வீரமதியின் ஆட்கள் அவர்கள் இல்லாது போனதும் வீரமதிக்கு அழைத்தனர்.
பிறந்த நாள் விழா கொண்டாட்ட அலுப்பில் அனைவரும் உறங்கிப் போக, உணவு தட்டுடன் அந்த அறைக்குள் நுழைந்தார் வீரமதி.
விளக்கை போட, வாசன் நிமிர்ந்தார். அவர் முன்னே வந்து தட்டை நீட்ட வாங்கிக் கொண்டார்.
“வாசா ! சாப்பிடு “என்றார் வீரமதி. அவரும் உண்ண ஆரம்பித்தார்.
“வீட்டிலே எல்லாரும் எப்படி இருக்காங்க…? சுமதி எப்படி இருக்கா? பசங்க எப்படி இருக்காங்க?”என்று விசாரிக்க, “உன் தயவுல எல்லாரும் நல்லா இருக்காங்க அக்கா ! என்ன இன்னைக்கு உன்னை இங்க பாக்கனும் ஆசைப் பட்டாங்க… ஆனா இங்க தான் என்னாலயோ அவங்களாலையோ உரிமையா வர முடியாதே கா !” என்று வருத்துடன் சொல்ல,
“எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லைன்னு சொல்றியா வாசா ! நீ , சுமதி, மது, மதுரன் எல்லாம் இங்க உரிமையா வரணும் சந்தோசமா குடும்பமா வாழனும் ஆசை இருக்கு… ஆனாலும் கொஞ்சம் பயமும் இருக்கு…!”என்றார் கண்ணீருடன்.
“அதான்! மாமாவ கொன்னுட்டோமேக்கா ! இன்னும் யாருக்காக நம்ம உறவை மறைச்சு வைக்கணும்…? விஸ்வேஸ்வரனை நினைச்சா பயப்படற? “என்று வினவ,
“விஸ்வேஸ்வரனை நினைச்சு எனக்கு பயம் இல்ல தான்! ஆனா அவனும் இந்த ஜெகதீஸ்வரனோட வாரிசு தான டா ! நம்ம குடும்பத்து மேலே இருக்க பகைய நினைச்சிட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் எதுவும் பண்ணிட்டா? அதான் பயமா இருக்கு வாசா !”
“அதுக்காக அவன் இறக்கற வரைக்கும் பொறுமையாக இருக்க சொல்றியா? இல்லை அவனையும் கொல்லலாம் சொல்றியா?”
“போதும் வாசா ! இனியும் கொலை செய்ய தெம்பு இல்ல… நம்ம யுத்தத்தில அநியாயமா ஒரு உயிர் போயிருச்சி அதுவே இன்ன வரைக்கும் குற்றவுணர்வா இருக்கு மேலும் இன்னொரு நல்லவனை கொலை செய்ய விரும்பல… விஸ்வேஸ்வரன் ரொம்ப நல்லவன்,
அவங்க குடும்பத்துல அரசியல் வாசனை பிடிக்காம பிறந்தவன் அவன் தான், அவனை நான் அரசியல் போக சொன்னதுக்கு காரணம் மக்களுக்கு அவன் மூலமா நல்லது நடக்கணும் தான்… அவனும் என் பேச்சை தட்டாம நடப்பான். இருந்தாலும் புலிய பக்கத்துல வளர்த்தாலும் அதோட பிறவு குணம் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலும் நம்ம உயிருக்கு ரொம்ப ஆபத்து வாசா பொறுமை ரொம்ப அவசியம்..”என்றார்.
அவரும் அதை அமோதித்து விட்டு யோசனையுடன் இருக்க வீரமதியின் அலைப்பேசிக்கு அழைப்பு வர, எடுத்து பேசியவர் அதிர்ந்து போனார்.
“வாட்? நிவாஸ் அவனோட குடும்பத்தையும் கடத்திட்டு போயிட்டாங்களா? அவங்க கடத்திட்டு போற வரைக்கும் நீங்க என்னடா பண்ணுங்க…?”
அங்கு என்ன சொல்லப்பட்டதோ “நான் வரேன் வைங்க…”என்று வைத்து விட்டார்.
“எப்படிக்கா உன் பாதுக்காப்பையும் மீறி பண்ணிருக்க முடியும்? ஏன் அவங்களை கடத்தனும் அவங்க அங்க இருக்காங்க எப்படி தெரியும்? என்னக்கா நடக்குது இங்க?”என்று வாசனும் குழம்ப ,
“எனக்கு ஒண்ணுமே புரியல வாசா ! உடனே அங்க போகலாம்… வா”என்று ஏழ, “இந்த நேரத்துல நீ போனாலும் உன்னால கண்டு பிடிக்க முடியாதுக்கா, காலையில சீக்கிரமா போலாம் நீ உட்காரு!”என்றார்.
“எப்டி டா ! என் இடத்துக்கு வந்து என் மகனை தூக்க தைரியம் வரும்…? அது யாரா இருந்தாலும் என் கையில தான் அவனுக்கு சாவு என் பிள்ளையே தூக்கி இருக்கான் எவ்வளவு தைரியம் இருக்கும்?”என புலம்பி தள்ளியவருக்கு இருப்பு கொள்ளவில்லை மகனை கடத்திக் கொண்டு போனதை கேட்டதும்…
இரவும் முழுக்க பயணத்தில் இருந்தவர்கள் அதிகாலை தான் கேரளம் வந்து சேர்ந்தனர்.
அங்கே ஏற்கெனவே பேசி விட்டதால் அவர்களுக்கு ஏத்தது போல தனியாக இருந்தது வீடு, அவர்களை உள்ளே தங்க வைத்து விட்டு காவலுக்கு செல்ல அவர்களை உறங்க அனுப்பி வைத்தாள் ஜெஸி.
ஷர்மியும் நிம்மதியாக கண்ணை மூடினாள்…
அதிகாலை நேரமாக வீரமதியும், வாசனும் காசியை அழைத்துக் கொண்டு எஸ்டேட் சென்றனர். அங்கே இருந்த நிலையையும் காவலுக்கு இருந்த ஆட்களும் புலம்ப கேட்டு தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.
“அக்கா கேமிரா மூலமா எடுத்து பாரேன்”எனவும் பதட்டத்தில் அதை சுத்தமாக மறைந்து போனார் அவர் சொன்னதும் எடுத்து பார்க்க ஆரம்பித்தார். உடன் காசியும் அந்த வீடியோ பார்த்தவருக்கு பேரதிர்ச்சி..
“அம்மா இவன் தான்மா இவன் தான் தம்பி கிட்ட சண்டை போட்டு தம்பிய அடிச்சது !”என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்ல அவரது சந்தேகம் இன்னும் வலுவானாது…
“யாரோ நம்மலை வாட்ச் பண்றாங்க தோணுதுக்கா !”வாசன் சொல்ல யோசனையில் ஆழ்ந்தார்.
***
“நிவாஸ்…”என அவன் கைகளை பற்றிக் கதறிக் கொண்டிருந்தாள் ஜெஸி. இருவரும் சிறு வயது தோழர்கள் அல்லவா அவனது நிலையை கண்டு கலங்கி அழுதாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1

