Loading

கையில் பிறந்த நாள் விழாவின் அழைப்பிதழையும் , அங்கே வர இருக்கும் வி . ஐ . பி களின் பெயர் பட்டியலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெஸி.

அவள் கையில் பெயர் பட்டியலை கொடுத்து விட்டுச் சற்று தள்ளி கையை கட்டி நின்று கொண்டிருந்தான்  எட்வர்டு..

அவன் தான் வீரமதியின் முதன்மை மெய்காவலன், பாதுகாப்பு என்ற பெயரில்  அவன் தான் இந்தப் பெயர் பட்டியலை எடுத்து கொடுக்கச் சொன்னான். வீரமதியின் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொள்ளும் வி. ஐ. பியின் பெயர்களில் ஆரோன்  சொன்ன பெயர் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ளவே ஜெஸி தான் கேட்டிருந்தாள். அதற்காக தான் அவனும் எடுத்து வந்து கொடுத்திருந்தான்.

அதில் ஆரோன் சொன்ன வாசன் என்ற பெயர் இடம் பிடித்திருக்க, அதை வட்டமிட்டவள்,

“எட்வர்டிடம்” இந்த வாசன் யார்? என்ன பண்றார்? வீரமதிக்கு என்ன உறவுன்னு விசாரிக்கனும் எட்வர்டு. ஆரோன் சொன்ன வாசன் இவரா ஏன் இருக்க கூடாது?”

“நான் விசாரிக்க சொல்றேன்  ஜெஸி ! “என்றான்.

“ஏன் இன்னும் வீரமதி மேமோட டீடெய்ல்ஸ் எதுவும்  கிடைக்கல? நான் கேட்டு ரொம்ப நாளாச்சே எட்வர்ட்?!”

“பிஃபோர் மேரேஜ் அவங்கள பத்தின எந்த விவரமும் கிடைக்கல ஜெஸி  ஒரே மிஸ்ட்ரியா இருக்கு. நான் சொன்ன ஆளு, கொஞ்சம் கொஞ்சமா அவங்களை பத்தி விசாரிச்சிட்டு தான் இருக்கான். அவரை பத்தின முழு விவரம் இன்னும் கிடைக்கல… சீக்கிரமா கண்டு பிடிச்சிட்டு சொல்றேன் சொல்லிருக்கான் பார்க்கலாம் ஜெஸி !”

“அவங்க பாஸ்ட் நமக்கு வேணும் எட்வர்டு..!  தன் புருஷன திட்டம் போட்டு கொலை பண்ற அளவுக்கு போக என்ன காரணம்? அவங்களுக்கு அரசியல் மேல விருப்பம் இல்லை, பணத்து மேல ஆசை இல்லை… அப்போ வேற என்ன?  வாசன் யாரு? நிவாஸ் எப்படி அவங்க புள்ளையானா?  ஆசிரமத்துல  வளர்ந்த அவனை எப்படி தான் மகன்னு கண்டு பிடிச்சாங்க… ஒரே குழப்பமா இருக்கு எட்வர்டு !”

“நிவாஸ ஆசிரமத்துல  சேர்த்தது யாருனு  ஃபாதர் கிட்ட கேட்டேன்… யாரோ *** கட்சி பிரமுகர் தான் சேர்த்திருக்கார். அந்த கட்சி பிரமுகர் இப்போ உயிரோட இல்லை… ஆனா அவர் பிரகதீஸ்வரனோட கட்சியில பிரமுகரா தான் இருந்திருக்கார்…

நிவாஸ் சைட்லையும் குழப்பம் அதிகமா இருக்கு ஜெஸி…”

“வீரமதி மேம் சைட் ல இருந்து  மட்டும் யோசிக்க கூடாது எட்வர்டு, அவங்க புருஷன் பிரகதீஸ்வரர் பக்கமும் யோசிக்கணும்.. அவர் கட்சி பிரமுகர் தான் நிவாஸை சேர்த்திருக்கார். அவன் வந்து சேர்ந்த  வருஷம் **** அப்போ வயசு பத்து பதினொன்னு இருக்கும்… வீரமதிக்கும் பிரகதீ்ஸ்வரருக்கும் அந்த வருசத்துல இருந்து  ஐந்து வருஷத்துக்கு முன்னாடி தான்  கல்யாணம் நடந்திருக்கு அப்போ எப்படி பத்து வயசுல  அவருக்கு

மகன் இருக்கும். நிவாஸ் வீரமதிக்கு மட்டும் பிள்ளையா இருந்தால், அவனோட அப்பா யாரா இருக்கும்…? அந்த வாசன் யாரு?” என்று யோசிக்க தலையே தெறித்து விடும்  அளவுக்கு இருந்தது.

“பிரகதீ்ஸ்வரனை பத்தியும் விசாரிப்போம் ஜெஸி. அதுக்கு முன்ன நிவாஸையும் ஷர்மியையும் வீரமதி மேம் கிட்ட இருந்து காப்பாத்தனும்… அதுக்கு என்ன பண்ணலாம்?”

“நம்ம ஆட்களை தயாரா இருக்க சொல்லு எட்வர்டு, வீரமதி  மேம் பிறந்த நாள் நைட், அவங்க ரொம்ப பிசியா இருப்பாங்க… அந்த நேரத்துல தான் நிவாஸையும் ஷர்மி அவங்க பேமிலியை நம்ம கஷ்டடியில வைக்கணும்… நிவாஸ்க்கு ட்ரீட்மென்ட் கொடுக்கணும்… கேரளால வச்சி ட்ரீட்மென்ட்  கொடுக்கலாம். குழந்தைங்களையும் ஷர்மியையும்  அவன் கூட இருக்க வைக்கணும்  அவங்க படிப்பும் கெடக் கூடாது ஸ்கூலுக்கு போகட்டும் உனக்கு தான் அங்க தெரிஞ்சவங்க   இருக்காங்களே ! சேஃப்பா அவங்களை வச்சிடு எட்வர்டு !”என்றாள்.

“நானும் அதை நான் யோசிச்சேன் நீயே சொல்லிட்ட ! நான் அதுக்கான வேலைய பாக்கறேன் ஜெஸி. நீ ஷர்மி கிட்ட நம்ம திட்டத்தை சொல்லிடு ! கொஞ்சம் தயாரா இருப்பா !”என்றான்.

“ம்ம்… “என்றவள் ஷர்மிக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, ‘ சரி ‘ என்று சொன்னவளுக்கும் ஒரு பெருத்த நிம்மதி.

மூவரும் வீரமதியின் பிறந்த நாள் விழாவிற்காக காத்திருந்தனர்.

***

அதே நேரம் வீரமதியின் பிறந்த நாள் விழாவிற்கான அழைப்பிதழை வெறித்துக் கொண்டிருந்தார் மிலால்.

வீரமதி அன்று பேசிய பேச்சும் அதனால் ஏற்பட்ட அவமானமும் மறக்க கூடியதா?இல்லை அந்த நாள் தான் அவர் வாழ்நாளிலிருந்து மறைந்து தான் போகுமா? தன் வாழ்நாளில் யாரும் கொடுத்திடாத அவமானத்தை  அல்லவா வீரமதி கொடுத்திருக்கார். அதை இவரும் வட்டியோட கொடுக்க காத்திருக்கிறார். ஆனால் எப்படி என்று தான்  அவரால் யோசிக்க முடியவில்லை… அந்த அழைப்பிதழை பார்க்க பார்க்க, கோபமும் அவரை எதுவும் செய்ய முடியாத கழிவிரக்கமும் அவரது பிபியை ஏற்ற அழைப்பிதழை கசக்கி தூக்கி எறிந்தார்.

அது சரியாக ரிஷிகாவின்  காலில் வந்து விழுந்தது. அதை பிரித்து பார்த்து, ‘என்ன இது?’ என்பது மிலாலை பார்த்தாள்.

அவள் கேள்வியாக பார்ப்பதை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டவர் பதில் மட்டும் தந்தார்.

” வீ பிராண்ட் ஓனர் , அந்த திமிரு பிடிச்ச வீரமதியோட பெர்த் டே பங்சனுக்கு நம்மலை இன்வைட் பண்ணிருக்காங்க… அதோட இன்விடேசன் தான் இது… எவ்வளவு தைரியம் இருந்தால், நம்மல அவமான படுத்திட்டு பிறந்த நாள் விழாக்கு  இன்வைட் வேற பண்ணிருப்பா? அவளை சும்மா விடவே கூடாது ஏதாவது பண்ணனும் என்னை அவமான படுத்தியவளை ஏதாவது பண்ணனும் ஏதாவது பண்ணனும்…!”என கத்திக் கொண்டே பேசியவருக்கு பி. பி எகிற, வேகமாக  அவரை தாங்கி பிடித்த ரிஷிகா , மெத்தையில் அவரை அமர வைத்தாள்.

“சில் பேபி ! கோபப்படாதீங்க… ! நீங்க கோபப்பட்டால் உங்களுக்கு தான் ஏதாவது வந்திடும் அமைதியாக இருங்க !”என்று நெஞ்சை நீவி விட்டாள்.

“உங்க விருப்பப்படி எல்லார் முன்னாடியும் அந்த வீரமதியை அவமானப் படுத்தினால், நீங்க ஹாப்பியா  இருப்பீங்களா பேபி ?”எனக் கேட்டவளை குழப்பமாக பார்த்தார்.

“என்ன சொல்ற நீ?”என அவர் கேட்கவும் தனது போனை எடுத்து

அதில் துருவனின் மடியில் ஒரு பெண் அமர்ந்திருப்பது போலவும் அவளது இடையை வளைத்து இருப்பது போலவும் இருந்த போட்டோவை அவளிடம் காட்டினாள்.

“இவன்…!”என யோசித்தவர், “இவன் உன்னை கிஸ் பண்ணினவன் தான? இவனும் இந்த பொண்ணும் யாரு? எதுக்கு நீ இவனை போட்டோ எடுத்து வச்சிருக்க…!”என்று புரியாமல் கேட்டவரிடம்,

அவன் வீரமதியின் மகனிலிருந்து கோவாவில் நடந்தவற்றை எல்லாம் சொல்லி முடிக்க, அவர் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“நீ ஏன் அவனை பத்தி விசாரிச்ச?” என கேட்டவரால் அவள் இவ்வளவு செய்தும் அவளை சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை.

இத்தனை செய்தும் தன் மீதே சந்தேகம் கொள்ளும் கிழவனை உள்ளுக்குள் அர்ச்சித்து விட்டு சிரித்துக் கொண்டே” என்னையே கிஸ் பண்ணுவான், என் நெத்தில துப்பாகிய வைச்சி தப்பிச்சு போவான் அவனை சும்மா விட சொல்றீங்களா பேபி? ஒரு நாள் ஹோட்டல்ல இவனை பார்த்தேன். அப்போ என் பிரண்டு என் கூட இருந்தாள். அவ மூலமா தான் அவனை பத்தின விவரமும் தெரிஞ்சுக்கிட்டேன்…

கோவாவுக்கு போன போது தான் என் பிரண்டு அவனை பத்தி தெரிஞ்சு என் கிட்ட விஷயத்தை சொன்னா. அதை தான் உங்க கிட்ட சொன்னேன்… என்னை எப்பவும் சந்தேகப்பட்டுடே இருக்கீங்க பேபி ! எல்லாமே உங்களுக்காக தான் பண்றேன். அவன் வீரமதி புள்ளைனு தெரிந்ததும், எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தது தெரியுமா?”என்றதும் மீண்டும் புருவம் சுருங்க அவளை பார்த்தார்.

“ஒழுக்கம் தான் முக்கியம் சொல்லி நம்ம ரிலேசன் ஷிப் அவமானப்படுத்தினவளோட புள்ளை மட்டும் ஒழுங்கா வா இருக்கான். வேற ஒருத்தனோட பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்கறான்.  கோவால ஒரு பொண்ணோட கூத்தடிக்கிறான். இதை காரணமா காட்டிக் அவங்களை அவமான படித்தனும் நினைச்சேன் பேபி. உங்களை அவமானப்படுத்தினவ சந்தோசமா இருக்கலாமா பேபி ! அதான் இந்த விஷயத்தை கேள்வி பட்டதும் நான் சந்தோச பட்டேன் சொன்னேன். அது மட்டுமில்லை அவளை அவமானப்படுத்த டைம் எதிர்பார்த்திட்டு இருந்தேன். ஆனா அது சரியா அமைஞ்சது பார்த்தீங்களா? கண்டிப்பா அவரையும் அவளோட புள்ளையும் அவமான படுத்தாம விடக் கூடாது பேபி !”என்றவளின் மேல் அவருக்கு  நம்பிக்கையும் மோகமும் கூடிப்போனது .

ஆனா அதெல்லாம் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் வரையில் தான் என்று அவள் அறியாது போனாள்.

நம்பிக்கை என்ற ஆயுதம் அவளுக்கு சாதகமாக, மோகம் கொண்ட கிழவனின் ஆசை அறிந்து இணங்கினாள் வேண்டா வெறுப்பாக, ஆனாலும் அவளுக்குள் அடக்கி வைத்த வன்மம் மேலும் வெடிக்க போகும் நாளுக்காக காத்திருந்தாள்.

அவளது காத்திருப்புக்கான பலனாக அந்த நாளும் விரைந்து வந்து விட்டது.

வீரமதியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இனிதாக தொடங்கியது .. வரவேற்ற அனைவரும் வந்திருந்தனர்.

அதில் ரிஷிக்காவும் மிலாலும் அடக்கம். அவரது வருகையை கண்டது முகம் சுழித்த வீரமதி அவர்களிடம் காட்டாது, அவர்கள் உள்ளே சென்றதும் அவர்களுக்கும் அழைப்பிதழை கொடுத்த தொழிலாளர்களை திட்டி தீர்த்தார்.

விழாவும் ஆரம்பித்தது, பேரனையும் பிள்ளைகளையும் முன்னிருத்தி  பலரின் கைதட்டல்கள் மத்தியில் கட்டிகையை வெட்டினார்.

வந்தவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு கட்டிக்கையும் பழச்சாறும் பரிமாறப்பட்டன.

பேசிக் கொண்டிருந்த வீரமதியின் அருகே வந்து ” ஹாய் ஆன்டி !”என்றாள் ரிஷிகா. அவளை பார்த்ததும் முகம் சுழித்தார்.

அதில் அவளது முகம் வெளுத்து போனது. இருந்தும் தன் முகத்தை மாற்றிக் கொண்டு சிரித்தப்படி துருவனை பத்தி பேச, இவரோ அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.

ஒரு நிமிடம் அனைத்துமே அங்கே ஸ்தம்பித்து நின்றன.

கன்னத்தில் கை வைத்தவாறு ரிஷிகா, அவரை முறைத்துக் கொண்டிருக்க, அவரோ காளியாக நின்றிருந்தார் அவள் முன்.

“உன்னை போல என் துருவனும் அப்படி தான் நினைச்சியா? உனக்கு அவன் முத்தம் கொடுத்தானா? நீ யாருன்னு எனக்கு தெரியாதா? உனக்கு அந்த வயசானவன் போதாதுன்னு என் மகனையும்  வளைச்சு போடணும் நினைக்கற. உன்னை கொன்னு பொலிப் போட்டுடுவேன்… இனியும் நீ இங்க நின்ன உன்னை என்ன செய்வேன் எனக்கு தெரியாது வெளிய போ !” எனக் கத்தியே விட்டார்.

“போறேன் ! ஆனா நான் சொன்னது பொய்ன்னு உங்க மகன உங்க முன்ன வந்து  சொல்ல சொல்லுங்க பார்ப்போம்… கிளப் வச்சி இன்னொருத்தர் மனைவின்னு தெரிந்தும் கிஸ் பண்ணலன்னு சொல்ல சொல்லுங்க.

அது மட்டுமில்ல உங்க பையன் கோவாக்கு போய் கூத்து அடிச்சது எல்லாத்தையும் பாருங்க !”என்று அவர் முன் புகைப்படத்தை வீச அதில் ஒரு பெண்ணின் வயிற்றை அணைத்து  அவளை மோகமாக பார்ப்பது போல்  இருந்த புகைப்படத்தை கண்டு அதிர்ந்து போனார். அந்த மகனை பெற்ற தாய். ரிஷிகாவின் இதழில் ஒரு வெற்றி களிப்பு, அன்னையின் முன் தலை குனிந்து நின்றான் துருவ் செய்த தவறுக்காக மட்டுமே.

வீடெங்கும் வண்ண விளக்குகள் ஜொலிக்க, அதனுடன் மெல்லிய இசையும் ஒலித்தது. பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று அமர வைத்துக் கொண்டிருந்தனர் அங்கு பணிபுரியும் வேலை ஆட்கள்.

தன் அறையிலிருந்து தனியாக அமர்ந்திருந்த வீரமதி தன்னை  அலங்கரிக்க வந்த பெரிய பெரிய மேக்கப் ஆர்டிஸ்ட்டை எல்லாம்  வேண்டாம் என்று மறுத்து விட்டு, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக  தன்னை தானே அலங்கரித்து கொண்டிருந்தார்.

மெல்லிய எடையுள்ள புடவையும் அதற்கேற்ற எடைக்குறையுள்ள ஆபரங்களை அணிந்தவர், நெற்றியில் குங்குமம் வைத்தார். கணவன் இறந்த நாளன்று தாலியை மட்டுமே கழட்டிவிட , பூவும் போட்டு என்றும் அவருடன் தான் இருக்கின்றன.

அதை கணவருடன் சேர்த்து களைய வில்லை… தாய் வீட்டு சீதனமாக தன்னுடன் வைத்துக் கொண்டார்.

எப்போது எளிமையாக தன்னை அலங்கரித்துக் கொள்பவர், இன்றும் அவ்வாறே அலங்கரித்தார்.

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவரின் கண்ணில் பட்டது அவரும் அவரது கணவரும் சேர்ந்திருந்த புகைப்படம்… அதை திரும்பி பார்த்து அதன் அருகே சென்றார்.

கல்யாணமான புதியதில்  எடுத்த புகைப்படம். இருவரும் காதலோடும் நிறைந்த புன்னகையுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது.

” அப்ப உங்க இந்தக் கள்ள கபடமில்லாத சிரிப்புல உண்மை மட்டும் தான் இருக்கும் நம்பினேன். ஆனா அதெல்லாம் தப்பு, நான் எப்பவும்  அரசியல்வாதி தான்  சொல்லாம சொல்லிட்டீங்க  பிரகதீஸ்… காதல்ன்ற திரைய வச்சி, என் கண்ணை மறைச்சி என் குடும்பத்தை சின்னா பின்னாமா ஆக்கினது கூட தெரியாம உங்க காதலும் நீங்களும் போதும் வாழ்ந்த எனக்கு வெறும் ஏமாற்றத்தை கொடுத்து காதலை வச்சும் அரசியல் பண்ணலாம் நிரூபிச்சிட்டீங்க. உண்மை  தெரிஞ்ச நான் எவ்வளவு உடைஞ்சு போனேன் தெரியுமா?? எனக்கு உங்க அரசியல் காத்து அடிச்சது போல… உங்க கிட்டயே நான் ஒரு அரசியல்வாதி பொண்டாட்டியா  நடந்துப்பேன்னு நான் நினைக்கல… உங்களை கொன்னது மத்தவங்களுக்கு வேணா தப்பா இருக்கலாம். ஆனா என்ன பொறுத்தவரைக்கும் சரி தான்… உங்களை இழந்ததுக்காக நான் எப்பவுமே அழ மாட்டேன்… மாறா நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்… உங்களை கொன்னது எனக்கு எந்த  உறுத்தலும் இல்ல… ஆனா உங்களை காவு கொடுத்த நேரத்தில , ஒரு நல்ல உயிரையும் காவு கொடுத்தது தான் வேதனையா இருக்கு… உங்களுக்கு விசுவாசமா இருந்து உயிர போக்கி கிட்டான் அவன். அந்த பாவத்தை என்னை சுமக்க  விட்டீங்கள… என் புள்ள புத்தி பேதலச்சி கிடக்கான்… இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் செத்தும் எங்க குடும்பத்தை நிம்மதியா விடமாட்டீங்களா?” எனக் புகைப்படத்திலுள்ள அவரது பிம்பத்தை பார்த்து மனதோடு கேட்டுக் கொண்டிருக்க கதவை தட்டும் ஓசை கேட்க, “உள்ள வா !”என்றான்.

நிதின் , ருத்ரன்,  நித்திகா  மூவரும் உள்ளே வந்தனர்.  விழாவிற்கு தயாராகி நின்ற தாயை வாஞ்சையுடன் பார்த்தவன், அவர் கண்களில் கண்ணீர் கோத்து இருப்பதை கண்டு பதறி அவரது அருகே சென்றான்.

“ஏன் மா அழுதீங்க? அப்பா நியாபகம் வந்திடுச்சா?”என அவரது கண்ணீரை துடைத்தப்படி கேட்டான்.

“ஆமாப்பா ! போன பிறந்த நாள் விழாவிற்கு எவ்வளவு முக்கியமான மீட்டிங்க்கையும் கேன்சல் பண்ணிட்டு எனக்காக என் கூடவே இருந்து பிறந்த நாள் விழா கொண்டாட வச்சார். ஆனா இந்த  இப்போ அவரால அப்படி வர முடியாதுல ருத்ரா !”என மகன் முன் கண்ணை கசக்கி தன் நாடகத்தை போட, தாயை அணைத்துக் கொண்டவன்”அம்மா ! அப்பாவால இனி வரவே முடியாது மா ! உங்களுக்கு தெரியாதா? ஏத்துக் கிட்டு தான்  ஆகனும் மா ! அவரோட இழப்பை  நாம ஏத்திக்கிட்டு தான் ஆகனும் மா ! ப்ளீஸ் அழாதீங்க…!”

“ஆமா ! மாமாவோட உடல் மட்டும் தான் நம்மல  விட்டு போயிருக்கு… உயிர் உங்களோடும் இந்தக் குடும்பத்தோடவும் தான் இருக்கு. அவர் நம்ம கூட தான் இருக்கார் அத்தை பீல் பண்ணாதீங்க… இன்னைக்கி நீங்க சிரிக்கணும் தான் அவர் நினைப்பார்… ப்ளீஸ் அத்தை சிரிங்க”என்க

“சரிம்மா ! “என கண்ணை துடைத்துக் கொண்டு. புன்னகைக்க முயல,

கீழே அவரது சேலையை பிடித்து இழுத்தான் நிதின். அப்போது தான் தன் பேரனை கவனித்தவர், சட்டென தூக்கி கொண்டார். “என்ன நிதின் குட்டி?”என கேட்கவும், அவர் கண்ணீரை துடைத்து விட்டு”நீ அழக் கூடாது எத்தனை முறை உன் கிட்ட சொல்லிருக்கேன் மதி. திரும்ப திரும்ப ஏன் அழற ?” என  தாத்தாவை போல அவன் பேசிக் காட்ட, மூவர் முகத்திலும் ஆச்சர்யம் தான்… அவர் கன்னத்தில் அழுத்தி முத்தம் வைத்தவர், “இனி அழ மாட்டேங்க !”என்றிட, “ஹாப்பி பர்தடே மதி”என்று அவர் கன்னத்தை எச்சில் பண்ணினான். தன் பேரனை வாஞ்சையுடன் பார்த்தார்.

“நேரமாச்சு வாங்கமா கீழ போலாம்”என்ற அழைக்க அவர்களுடன் கீழே வந்தார்.

அவர்கள் வந்ததும் வந்த விருந்திருந்தினர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகள் சொல்லி பரிசுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

“அம்மா ! ஹாப்பி பரத்டே டூ யூ !”என்று அவரை கட்டிக் கொண்டான் நைதுருவன்.

“லவ் யூ துருவா !”என்று முத்தம் வைக்க, “லவ் யூ டூ மா !” என்றவன் அவர் காலிலும் விழுந்து எழ, “அடுத்த பிறந்த நாள் விழாவிற்கு உன்னோட சேர்ந்து உன் பொண்டாட்டியும் கூட உன் புள்ளையும் சேர்ந்து விழனும்…!”

“விழுந்திட்டா போச்சி, மூனா இல்லை நாளா கூட விழறோம் என்ன மா !”என குறும்புடன் சொல்ல, அவனை செல்லமாக  அடித்தார். அவனோ தொடர்ந்து லோகிதா, லோகித் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு காலில் விழ, அவர்களையும் ஆசிர்வதித்து அணைத்து முத்தமிட்டார். அவர்களை ராதாம்மாவும் வந்து காலில் விழ போக, தடுத்தவர்”பச் என்ன ராதா ! நீ போய் என் காலுல விழுந்து”என செல்லமாக கடிந்துக் கொண்டவர் அவரது வாழ்த்துகளை ஏற்று அணைத்துக் கொண்டார்.

குடும்பமாக கூடியிருக்க, எட்வர்டும் ரெக்ஸ்லினும் வந்து பரிசை கொடுத்து வாழ்த்துகள் சொல்ல அவர்களை அன்போடு வரவேற்றார்.

உள்ளே அவர்கள் பேசிக் கொண்டிருக்க, துருவன் தான் குட்டிப் போட்ட பூனையை போல அங்குமிங்கும் நடந்தபடி வாசலை  ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனை கவனித்த ருத்ரன் தம்பியின் அருகே வந்து அவன் தோள் மீது கை வைத்தவன் “எந்த வி. ஐ. பி வர போறாங்கன்னு நீ  இப்படியும் அப்படியுமா நடந்துட்டு இருக்க?”

” என் வாழ்க்கையில் வர போற வி .வி . ஐ . பி ! அவங்க என் வாழ்க்கைக்குள்ள வர தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”என தனக்குள்ளே முனங்கிக் கொண்டான் .

அவனை உலுக்கிய ருத்ரன்”டேய் துருவா ! கேட்டதுக்கு பதில் சொல்டா !”

“ஆங் ! என்ன அண்ணா ?”என விழிக்க, “சுத்தம்…! ஒன்னுல்ல ராசா யூ கண்டின்யூ!”என்று சொல்லி விட்டு நகர, அதையெல்லாம் பொருட் படுத்தாது, வாசலை எதிர்நோக்கிய இருக்க, அவனை ஏமாத்தாது தன் மகனை கையில் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ஜெஸி.

பால் பிங்க் நிறத்தில் டிசைனர் சேலையை மிக நேர்த்தியாக  உடுத்தி, கையில் பொக்கேவுடனும் சிறு பரிசு பொருளுடனும் உள்ளே நுழைய வேகமாக அவளை வரவேற்க ஓடினான். தம்பியின் வேகத்தை கண்டு யாரென பார்த்து அதிர்ந்தான்.

துருவனோ ஜெஸியை வரவேற்று அவளுடனும் குழந்தையும் பேசுவதை கண்டு இவனுக்கு நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. விளக்கேற்றி வைத்ததுக்கே உள்ளே கேள்விகள் அரித்துக் கொண்டிருக்க, மேலும் அதனோடு இதுவும் சேர, ருத்ரனுக்கு தம்பியின் போக்கு பயத்தை தந்தது.

அழகாய் மாலையில் பூத்த மலராக வந்து நின்றவள் விழியகற்றாது பார்த்தபடி அவர்கள் அருகே வந்து நின்றான். “ஹாய் ஜெஸி ! ஹாய் சாம்ப் !”என தூக்கி கொள்ள, “ஹாய் துருவ்!”என்றான்.

“வாவ் ! என்னை மறக்காம இருக்கீயே ! என்னை மறந்திருப்ப நினைச்சேன் !”என்றான்.

“ம்கூம்… உன்னையும் மறக்கல, நீ அடுத்த முறை பார்க்கும் பொது பெரிசா சப்ரைஸ் பண்றேன் சொன்னதையும் மறக்கல “என்று அவன் மறந்ததை நியாபகப் படுத்தினான்.

துருவனோ வாயில் கை வைத்து ஆச்சர்யம் கொள்ள, “டெனி…!”என இவள் மகனை அதட்ட, “பச் ஜெஸி ! என்னை அதட்டி உருட்டினது போல  இங்கயும் பண்ண கூடாது… என்ன சாம்ப் !”அவனோ ஆமாம் என்பது போல எச்சரிக்க, அவளோ உதட்டை சுழித்தாள்.

இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவர்களை எதிர்கொண்டார் வீரமதி.

“ஹாப்பி பேர்த்டே மேடம்” என்று பொக்கேவை  நீட்டினாள்.

“ஹாப்பி பர்தடே மேடம்”என்று சின்னக் குரலில் சொன்னான்  டெனி!

அவனை தூக்கி கொண்டவர் “தேங்கி யூ !”என முத்தம் வைத்தார். அவனும் அவர் கன்னத்தில் முத்தம் வைத்து” உங்களுக்கும் தேங்கி யூ “என்றான்.

 

“எதுக்கு?”

“என் பெர்த்டேக்கு பெரிய கிப்ட் கொடுத்தீங்கள அதுக்கு தான் மேடம் தேங்கி யூ”என்றான் விளக்கமாக,

“அச்சோ உனக்கு நான் மேடம் இல்ல. மதி மா கூப்பிடு என்ன?”எனவும் தலையை ஆட்டினான்.

“அப்படியே அவன் அப்பாவ போல  இருக்கான்” என்று அவரையும்  மீறி வார்த்தைகளை விட, அவளுக்கு தான் நெஞ்சை அடைத்தது. பொங்கி வந்த துக்கத்தை விழுங்கிய படி நிற்க, தன் வார்த்தையை உணர்ந்தவர் அவளிடம் மன்னிப்பு கோரினார்.

“இட்ஸ் ஓகே மேம்”என்று சமாளித்தாள்… துருவனுக்கும் முக மாறிட, அந்த சூழ் நிலையை சமாளிக்கும் பொருட்டு “அம்மா வாங்க கேக் கட் பண்ணலாம்… நீங்களும் வாங்க ஜெஸி !” என்று  அழைத்துக் கொண்டு போனான்.

அவருக்காக  பெரிய கட்டிக்கை ஸ்பெஷலாக தயாரித்து இருந்திருந்தனர். பிறந்த நாள் பாட்டு பாட, அவர் தான் குழந்தைகளை சூழ தன் பேரனுடன் கட்டிகையை வெட்டினார். அவர்களது மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு என்பது போல அங்கே வந்தனர் மிலாலும் அவரது மனைவி ரிஷிகாவும் வந்தனர்.

அவர்களை கண்டதும் வீரமதி முகம் சுழிக்க, மாறாக துருவனின் முகமோ கோபத்தில் இறுகியது… ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு நின்றான்.

“பிறந்த நாள் வாழ்த்துகள் வீரமதி மேடம்”என்று பரிசை கொடுக்க,  வர வழைக்கப்பட்ட சிரிப்புடன் வாங்கிக் கொண்டார்.

“உங்க குடும்பத்தோட எப்பவும் சந்தோசமா இருங்க !”என என்றவரின் குரலில் ஒருவித நக்கலிருக்க, அதை முதலில் அறியாது போனார் வீரமதி.

“கண்டிப்பா ! எப்பவும் என் குடும்பத்தோட சந்தோசமாவும் கர்வத்தோடும் இருப்பேன்…”என்றார் பதிலுக்கு.

இருவரும் சிரித்துக் கொண்டாலும் உள்ளே வன்மம் கொப்பளித்தது. அனைவருக்கும் கட்டிக்கை ஜூஸ் பகிரப்பட்டது. அனைவரும் ஆங்காங்கே நின்ற பருகிக் கொண்டிருந்தனர்.

வீரமதி அருகே வந்த ரிஷிகா, “உங்க குடும்பத்தை இன்றோ பண்ணி வைக்க மாட்டீங்களா? ஆன்டி!”, எனவும் கொதித்து போனார்.

“கால் மீ மேடம் !”

“ஏன் நான் உங்களை ஆன்டி கூப்பிட கூடாதா?”

“என்னை ஆன்டி கூப்பிட கூட ஒரு தகுதி வேணும், அது உனக்கு இல்லை…”என்றார்.

அவள் முகம் இறுக்கியது, கையில் இருந்த கிளாஸை இறுக்கப் பிடித்து கோபத்தை அடக்கிக் கொண்டாள்.

“அப்படி என்ன தகுதி இல்ல உங்களை ஆன்டி கூப்பிட?”

“எனக்கு எப்பவும் ஒழுக்கம் தான் முக்கியம் அது உன் கிட்ட இல்ல… அதுனால நீ என்னை ஆன்டி கூப்பிட தகுதியும்  உனக்கு இல்லை”என்றார்.

“ஓ… உங்க புள்ளைக்கு மட்டும் ஒழுக்கம் இருக்கா, கல்யாணமான பொண்ண கிஸ் பண்றதும், பாத்ரூம்ல வச்சி, அசிங்கமா நடந்துக்கிறதும் தான் ஒழுக்கமா?”

“என்ன சொல்ற நீ! என் புள்ளையா? யார சொல்ற நீ?”

“உங்க ரெண்டாவது புள்ளைய தான்… உங்க புள்ளை என்ன பண்ணினார் தெரியுமா?”என்று உண்மை  பொய்யென கலந்து  சொல்லிருந்தாள். அதை கேட்டதும் கோபத்தில் அவளை அறைந்திருந்தார் வீரமதி.

“என் புள்ளைய அடைய நீ வேணா இப்படி ஒரு காரியம் செஞ்சிருக்கலாம்  ஆனா, என் புள்ளை ஒரு காலும் அப்படி செய்ய மாட்டான்…”என்று அழுத்தமாக சொன்னார்.

கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

“வீரமதி… என்னை  அவமானப் படுத்தினது இல்லாம என் பொண்டாட்டிய கை நீட்டி அடிச்சுட்டேல உன்னை சும்மா விட மாட்டேன்”என்று  சீறிக் கொண்டு வந்தார் மிலால்.

“ச்சீ நிறுத்து, இவளை எல்லாம் பொண்டாட்டி சொல்லிக்காத,  உனக்கு தான் கேவலம்… உன்னை கல்யாணம் பண்ணிட்டு என் பையன் மேல ஆசைப்பட்றா இவ எல்லாம் பொண்ணு தானா ச்ச..!”என்று முகம் சுழிக்க, ரிஷிகாவிற்கு உள்ளுக்குள் சுருக்கென்று இருந்தது.

“நான் உங்க பையன் மேல ஆசைப்பட்றேனா !  உங்க பையன் தான் இன்னொருத்தர் பொண்டாட்டி தெரிஞ்சும் என்னை கட்டி பிடிச்சி முத்தம்  குடுத்தான்.  எங்க இல்லைன்னு சொல்ல சொல்லுங்க” என்றவளின் குரலில் இருந்த உறுதியை கண்டு ஆடிப் போனவர் மகன் மீது இருந்த நம்பிக்கையில் இருக்காது என்ற நப்பாசையில் துருவனை பார்க்க, அவனோ தலை  குனிந்து நின்றான்.

அவரோ அதிர்ந்தவர், மகனிடம் கேட்காது ஜெஸியிடம் வந்து கேட்க, அவளோ” ஆமாம், அந்த பொண்ணு சொல்றது உண்மை “என்றாள்.

விழுகென நிமிர்ந்த துருவ் ஜெஸியை நம்பாமல் பார்த்தான். வீரமதி நெஞ்சில் கை வைத்து நின்றார்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்